Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நாடுகளின் தலைவர்களை புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்துகின்றனர் – கிறிஸ் நோனீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில நாடுகளின் தலைவர்களை புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்துகின்றனர் – கிறிஸ் நோனீஸ்

17 நவம்பர் 2013


சில நாடுகளின் தலைவர்கள் புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்தி வருவதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டொக்டர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார். சில நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிடுவதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சில புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு யுத்த நிறைவிற்கு அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் நல்லவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகக் குறைந்தளவிலான புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதத்தை போஷித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்திற்காக பணத்தை செலவிட்ட சில புலம்பெயர் தமிழர்கள் தற்போது வேறும் பிரச்சார நோக்கங்களுக்காக பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சில வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை பொருட்படுத்த வேண்டியதில்லை எனவும், உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக இவ்வாறான கருத்துக்கள் வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தலைவர்கள் கருத்து வெளியிடும் போது, எப்போது தேர்தல் நடைபெறவுள்ளது என்பது பற்றி விசாரித்தால் அவர்களது நோக்கம் அம்பலமாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவின் செனல்4 ஊடக நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். செனல்4 ஊடகத்தின் தகவல்களை பெரும்பாலானவர்கள் கண்டு கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செனல்4 ஊடகம் பிரித்தானியாவில் பிரபல்யமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99120/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சில நாடுகளின் தலைவர்களை புலம்பெயர் தமிழர்கள் பிழையாக வழிநடத்துகின்றனர் – கிறிஸ் நோனீஸ்

17 நவம்பர் 2013

 எனினும், அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் நல்லவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

நான் 

நல்லவனா?

கெட்டவனா?..........

 

 

Edited by விசுகு

 

நான் 

நல்லவனா?

கெட்டவனா?..........

 

 

 

 

 "ஒரு சில புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு யுத்த நிறைவிற்கு அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் நல்லவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்."

 

நீங்கள் அவர்களுக்கு கெட்டவர். முரளி போன்ற தமிழர்கள் அவர்களுக்கு நல்லவர். இந்த தூதரின் வாதம் முன்னால் அமேரிக ஜனபதியின் ஏவாரு உலகை பார்த்தோரோ அதைப்போன்றது. ஆனால் சொல்பவருக்கு தெரியும் தான் முழுப்பூசணிக்காயை சோதுக்குள் புதைக்கிறார் என்று. ஒரு சில தமிழ்ரையும் மின்சி இன்று விசயம் எங்கோ போய்விடட்டது. ஆனால் அவரோ நன்றியுள்ள நாய். எசமானை விடமாட்டார்

கோத்தாவிடம் குட்டு வாங்க போகிறார்.

 

புலம் பெயர் என்றால் புலி.

 

அது சரி எந்த நாடு புலம்பெயருகளை தவறாக நடத்துகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தாவிடம் குட்டு வாங்க போகிறார்.

 

புலம் பெயர் என்றால் புலி.

 

அது சரி எந்த நாடு புலம்பெயருகளை தவறாக நடத்துகிறது?

 

வணக்கம் மல்லை! உங்களிடம் ஒரு கேள்வி!
 
புலம்பெயர்ந்தவர்கள் என்றால் யார் அவர்கள்?
 
வெளிநாட்டிற்கு படிக்க வந்தவர்கள்? 
வெளிநாட்டிற்கு அகதியாக வந்தவர்கள்? 
வெளிநாட்டிற்கு வேலை நிமித்தம் வந்தவர்கள்? 
 
முன்னர்  இதற்கான திரி இங்கு ஆரம்பித்திருந்தாலும் அதற்குரிய ஒழுங்கான விடைகள்  கிடைக்கவில்லை என நினைக்கின்றேன்.

புலம் பெயந்தவர்களை நாங்கள் "இருப்பிடத்தை கைவிட்டு போனவர்கள்" என்றுதான் கருத வேண்டும். சில சூழ்நிலைகள் நாட்டைக் கைவிட நிர்பந்தித்தது. இது அகதிகளைத்தான் சுட்டும். மற்றவர்கள் விட்டு போனவர்கள் அல்ல. ஆனால் மற்றவர்களில் சிலர் வெளியே அலுவலாகப் போய்,  போன இடத்தில் அலுவல் முடிந்த பின்னர் தற்காலிகமாக தங்கி பின்னர் நிரந்தரமாக இருக்கிறார்கள். இவர்களின் வீடு வாசல்கள் ஒழுங்காகவும் குடுமப்ங்கள ஒழுங்காவும் இருப்பதாக கருதுவதால் இவர்களை வீட்டை விட்டு போய்விட்டார்கள் என்று வருணிக்க முடியாது. 

 

மற்றவர்களில் ஒரு பகுதியினர் குடியேற்றவாசிகள். இவர்கள் புதிய இடத்திற்கு போக விரும்பி சென்றவர்கள். இவர்களின் மனநிலையில் நாடும், குடியேற்ற நாடும் சமனாக இருந்தாலும் வாழ்க்கையில் வந்த மாறுதல், குடியேற்ற நாட்டை வருங்கால வாழ்க்கைகாக தெரிவு செய்ய வைத்தது. புலம் பெயர்ந்தவர்களுக்கும், இவர்களும் இடையில் வித்தியாசம் தெளிவானது.(புலம் பெயர்ந்தவளின் குடும்பங்கள் அல்ல இவர்கள்).  புலம் பெயர்ந்தவர் நட்டை விட்டு போனார்களேயல்லாமல் எங்கு போவது என்றதை தம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலயில் இருப்பவ்ர்கள். குடியேற்றவாசிகள் புதிய நாட்டை தெரிந்து எடுத்து அங்கு சென்ற்வர்கள். 

 

எம்மை பொறுத்தளவில், குடியேற்றவாசிகளுக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்குமிடையிலான வித்தியாசம் அவர்கள் விட்டு வந்த நிலத்தில் இருந்த அரசியலால் சமமாக்கப்பட்டுவிட்டது. அதாவது குடியேற்றவாசிகள் நாட்டைவிட்டு வெளியேறியவர்களிலும் பார்க்க எந்த விதமான மேனமையான பிடியையும் தங்கள் நாட்டிடம் கொண்டிருக்கவில்லை. 

 

 


நான் இப்படித்தான் இதுவரை கருதி வந்ததுண்டு.

புலம் பெயந்தவர்களை நாங்கள் "இருப்பிடத்தை கைவிட்டு போனவர்கள்" என்றுதான் கருத வேண்டும். சில சூழ்நிலைகள் நாட்டைக் கைவிட நிர்பந்தித்தது. இது அகதிகளைத்தான் சுட்டும். மற்றவர்கள் விட்டு போனவர்கள் அல்ல. ஆனால் மற்றவர்களில் சிலர் வெளியே அலுவலாகப் போய்,  போன இடத்தில் அலுவல் முடிந்த பின்னர் தற்காலிகமாக தங்கி பின்னர் நிரந்தரமாக இருக்கிறார்கள். இவர்களின் வீடு வாசல்கள் ஒழுங்காகவும் குடுமப்ங்கள ஒழுங்காவும் இருப்பதாக கருதுவதால் இவர்களை வீட்டை விட்டு போய்விட்டார்கள் என்று வருணிக்க முடியாது. 

 

............................

மல்லை நான் உணர்ச்சியையும் ஒரு அளவுகோலாக பாவிக்கின்றேன். கஷ்டங்களின் மத்தியில் இடம்பெயர நிர்பந்திக்கப்படவர்கள், உடம்பால் புலம்பெயர்தாலும் மனதால் அங்கே தான் வாழ்கிறார்கள். எனது வாழ்க்கையில் இதுதான் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் 

நல்லவனா?

கெட்டவனா?..........

 

 

 

விசுகு நீர் கெட்டவர். புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக யாழில் கருத்து எழுதிவருகிறீர். சிறிலங்கா மாதாவை அவமதித்தும் கருத்து எழுதுவருகிறீர் - கிறிஸ் நோனீஸ்.

புலம்பெயர்ந்தவர்களால்  எந்த மாற்றமும் சர்வதேச அளவிலை வாறதில்லை என்கிறார்கள் அர்சுண் மற்றும் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்....  ஆனால் இலங்கை அதிகாரி புலம்பெயர்ந்தவர்களால் தான் தங்களுக்கு பிரச்சினை என்கிறார்... 

 

எது உண்மை....    ??? 

புலம்பெயர் தமிழர்கள் சில நாடுகளின் தலைவர்களை பிழையாக வழி நடத்துகிறார்களா? 

 

அல்லது 

 

சில நாடுகள் புலம்பெயர் தமிழர்களை பிழையாக வழி நடத்துகின்றனவா? 

 

ஒரே குழப்பமா இருக்கு.

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.