Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச்சில் பாப்பரசர் இலங்கை விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images(969).jpg
பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று உரோமிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் நாவலகே பேர்னாட் குரே தெரிவித்தார். 

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் புஷ்பா ராஜபக்ஷ ஆகிய இருவரும் இன்று (20) வத்திக்கானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். 

பாதுகாப்பு செயலாளரும் அவரது பாரியாரும் இன்றைய தினம் பாப்பரசரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன் அழைப்புக்கான வேண்டுகோளையும் விடுத்ததாக பேர்னாட் குரே மேலும் தெரிவித்தார். 

 
  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசர்  வரும் வரை ஒரு தேவாலயமும் தாக்கப்படாது எனில் கடந்த காலத்தில் நடந்த தாக்குதல்கள் அரசினால் நடாத்தப்பட்ட தாக்குதல்கல்களாக கொள்ளலாம்.

எல்லாம் நாடகமே.

பாரதப் போரில் கபடமாக கர்ணனை வென்ற அருச்சுனனுக்கு கிருஸ்ணபரமாத்மா துணையிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஜயத்தை தடுக்க வேண்டிய பொறுப்பு அல்லது சரியா என்று நீதி கேட்க வேண்டிய பொறுப்பு.. கொல்லப்பட்ட.. காணாமல் போகடிக்கப்பட்ட கிறிஸ்தவ மத குருமார்கள் சார்பில் ஆயர்களின் கடமை. இல்ல.. யாழ் ஆயர் போல.. கைலுக்க நல்ல சந்தர்ப்பம் அமையுது என்றிட்டு.. கம் என்று இருக்கப் போகினமா..??! பொறுத்திருந்து பார்ப்போம். அண்மையில் கூட கமரூனை சந்திக்க முயன்ற குருமார்களை நோக்கி சிங்கள காவற்படை ஒரு கண்ணியமும் இன்றி நடந்த காட்சிகளே மனதின் முன் வந்து போகிறது. அதனை ஏவிவிட்டவர் பாப்பரசரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் எல்லாம் சரியாகிடுமா..??! பாப்பரசரும் சராசரி மனிதனே. சக மனிதர்களின் வலியை உணராது வலியைக் கொடுத்தவனை மன்னிக்க அவருக்கு கடவுள் கூட அனுமதி அளிப்பாரோ தெரியவில்லை..??! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருட முற்பகுதியில் வரப்போகும் மேற்குலக நெருக்குவாரங்களில் தப்ப சிங்களத்தின் அடுத்த காய்நகர்த்தல் 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 90 களில் கார் லைசன்ஸ் இல்லாமல் ஓடுவோர் சிலுவை குறியிட்ட மாலையை கார் டாஸ்போட்டில் தொங்கவிட்டபடி ஓடுவினம் பிழையா ஓடினாலும் பொலிஸ் வர நம்மாள் சிலுவைகுறியிழுத்துக்கொண்டு இருப்பதை பார்த்து நல்லவிதமாய் மரியாதையாய் அறிவுரை கூறி அனுப்பிவிடுவார்கள் லைசன்ஸ்சை காட்டு என்று மருந்துக்கு கூட கேட்க்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசர் முதலில் இந்தப் பாவப்பட்ட மக்களுக்கு பதில் சொல்லிட்டு.. இனப்படுகொலையாளர்களின் போர்க்குற்றவாளிகளின் பாவத்தைக் கழுவ வரட்டும்.

 

1474420_516175591811342_216394429_n.jpg

 

மடுமாதா தேவாலயத்தில் 20.11.1999 அன்று சிறிலங்காப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவர்களின் உடல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் நூலிலிருந்து. 

 

கன்னியாஸ்திரியாக பணியாற்றியவர் இக்நோசியஸ். 

 

ஏனையவற்றிலிருந்து இவரிற்கு வேறொரு முக்கியமான சம்பவம் நடந்தது. திருச்சபையில் இருந்த சிங்களப் பாதிரியார்கள் அரசாங்கத்தை ஆதரித்த வேளை தமிழ் பாதிரியார்கள் போரை நிறுத்தும் படி கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த தமிழ் பாதிரியார்கள் சிங்கள பாதிரியார்களால் "பயங்கரவாத ஆயர்கள்" என்றும் அழைக்கப்பட்டார்கள். 

 

தலைநகரில் அவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இங்கே இவர்கள் யுத்த வலையத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். 

 

யுத்த வலயத்திற்குள் பாதிரியார்கள் காயம்பட்ட வேளையில் ஒரு சிங்கள பாதிரியார் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. 

 

 

இதையும் பாப்பு கவனத்தில் எடுத்துக்கொள்வாராக.

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசருக்கு 'ராகு காலம்'. எம கண்டம், இதுகள்ள நம்பிக்கை இல்லாவிட்டாலும், நம்ம ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்குமே?

 

ஆஸ்தான சோதிடர்கள் ஒருக்கா அவருக்கு விளங்கப் படுத்துங்கப்பா! :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆக்கிரமிப்பு..இராணுவ நடவடிக்கைக்குப் பயந்து மடு தேவாலயத்தில் தஞ்சம் அடைந்து தங்கி இருந்த தமிழ் மக்கள் மீது சந்திரிக்கா அரசின் மிலேச்சத்தனமான இனப்படுகொலை 20-11-1999 இல் நிகழ்ந்தது.

 

995561_516175851811316_351103376_n.jpg

 

1472810_516174571811444_1788910681_n.jpg

 

1463897_516176105144624_1713196097_n.jpg

 

1461181_516176618477906_1957461137_n.jpg

1470390_516177818477786_1651620929_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ecretary-Defense-calls-on-Pope-Francis.j

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.