Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குரானில் காஃபிர்களை கண்டால் கொலை செய்யும்படி உள்ளதாக சொன்னார்களே.. :o (சும்மா ஒரு தகவலுக்காக கேட்கிறன்.) :unsure:

  • Replies 199
  • Views 22k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு நாள் ISIS தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழி மறைத்தனர்.

ISIS தீவிரவாதி - நீ எந்த மதம்?

அந்த மனிதர் - நாங்கள் முஸ்லிம் (அவர்கள் உண்மையில் கிருஸ்டின்)

ISIS தீவிரவாதி - அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்களாம்.

(காரில் இருந்தவரின் மனைவி நடுங்கிவிட்டாள்)

ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி பைபிளில் இருந்து சில வரிகளை கூறினார்.

ISIS தீவிரவாதி - சரியாக கூறினாய் நீ செல்லலாம்.

கார் சிறிது தூரம் நகர்ந்ததும் அவரின் மனைவி "எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள்,

ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?"

அவர் - அவர்களுக்கு குரான் தெரியாது.

மனைவி - அது எப்படி உங்களுக்கு தெரியும்.

அவர் சிரித்துக்கொண்டே "அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்"

எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை.

தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது.

 

 

 

எல்லா மதமும்

எல்லா மதவழிபாட்டுப்புத்தகங்களும்

ஒன்றைத்தான் சொல்கின்றன

எனவே நான் சொன்னது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்....

  • தொடங்கியவர்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் ...../முழுமையா படிச்சுட்டு ஷேர் பண்ணுங்க ,,, மற்றவருக்கு பயன் தரட்டும் ....

அவரே விவரித்த ஒரு சம்பவம் ....

"நான் சிறுவனாக இருக்கும் போது,என் தாய் எங்கள் வீட்டில் சமையல் செய்வார்....

ஒரு நாள் இரவு நேரம் இரவு சிற்றுண்டி வெகு நேர வேலைக்கு பின்னர் செய்யத்தொடங்கினார்,

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வார் ....

கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் என் தந்தைக்கு பரிமாறினார் ,ஆனால் என் தந்தையோ அதை பொருட்படுத்தாமல்சாப்பிட்டார்,என்னிடம் இன்றைய பொழுது பள்ளியில் எப்படி போனது என்று தந்தை என்னிடம் கேட்டார்.

நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ....

ஆனால் என் தாய் என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதர்க்கு வருத்தம் தெரிவித்தார் ,ஆனால் தந்தையோ 

"எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னது இன்றும் என்னால் மறக்க முடியாது ....

என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு ,அவரிடம் கேட்டேன் "உங்களுக்கு உண்மையாகவே கேருகிய ரொட்டி பிடிக்குமா என்று ??" அதற்க்கு அவர் என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டு சொன்னார்....

"உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு நமக்கும் பணிவிடை செய்கிறார் ,களைத்துப்போய் இருப்பார் ... ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்த போவதில்லை ... ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பா காயப்படுத்தும்....

உனக்கு தெரியுமா மகனே ..வாழ்க்கை முழுவதுமே நிறைவற்ற விசயங்களும் நிறைவற்ற மனிதர்களும் நிறைந்தவைகளே..."

நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் முயற்சிக்கிறேன்...

நான் பிறந்த நாட்களையும் முக்கியமான நாட்களையும் மறந்துவிட்டேன் மற்றவர்களைப்போல ,ஆனால் இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு அதை சந்தோசமான மனநிலைக்கு மாற்றுவதே .... "

வருத்ததுக்குள் வாழ்க்கை ரொம்ப குறுகியதே .... 

உன்னை கவனிக்கும் மக்களை நீ நேசி ... உன்னை கவனிக்கா விட்டாலும் அவரையும் நேசி ..... "

இவ்வாறாக அப்துல் கலாமிடம் அவர் தந்தை தெரிவித்துள்ளார் !!! கற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கையை .

 

  • தொடங்கியவர்

ஔவையாரும், கம்பரும்...

ஒரு நாள், சோழன் அவையில் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது சொற் குறும்பினைத் தொடங்கினார் கம்பர்.

ஆரைக் கீரை ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார்.

ஔவையாரை ஆரைக்கீரையோடு ஒப்பிட்டு, 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாகக் கூற, ஔவையார் கோபம் கொண்டார்.

கம்பரின் குறும்பினை புரிந்து கொண்டு அதே பாணியில் ஒரு பாடலைச் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.

எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே -- முட்டமேற்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னா யடா ?

தமிழில் 'அ' என்பது எண் 8 ஐக் குறிக்கும். 'வ' 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் 'அவ' என வரும். இந்த மாதிரி எழுத்தையும், எண்ணையும் தொடர்பு படுத்தி, வார்த்தை விளையாட்டுக் கவிதைகள் எராளம் உண்டு அக்காலத்தில்.

"அவலட்சணமே ! எமனின் வாகனமான எருமையே ! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே ! முழுவதும் மேற்கூரை இல்லாதுபோன வீடாகிய குட்டிச்சுவரே ! குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே ! அடே ! ஆரைக் கீரையைச் சொன்னாயடா !" என்று பொருள் பட பாடினார்.

 

  • தொடங்கியவர்

"நாக்கு வளைத்தல்" ...

"நாக்கு வளைத்தல்" என்பது ஈழத்துப் பேச்சு வழக்கில் இன்னொரு சொல்லாகப் புழங்குகின்றது.

ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக இன்னொருவர் பேசுவதைப் புறணி பேசுதல் என்போம். ஆனால் இங்கே நாக்கு வழைத்தல் என்பது புறணி பேசுவது என்பதற்கு சற்று வேறுபாடாக நக்கல் பண்ணுவார்கள் என்பதற்கு மிக நெருங்கிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது.

எனவே நாக்கு வளைத்தல் என்பது ஒருவரது குணாம்சம், நடை உடை பாவனையில் ஏதேனும் குறையைக் கண்டு பிடித்து இன்னொருவர் அல்லது ஊரார் எள்ளி நகையாடுவது என அமைந்திருக்கும்.

 

  • தொடங்கியவர்

இயற்கை மருத்துவம் :-

******************************

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்

""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த

""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும்

""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்

""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்

""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்

""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்

""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்

""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்

""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும்

"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர்

""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும்

"" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட

""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க

"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்

""துளசி.""

16) மார்பு சளி நீங்கும்

""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு

""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும்

""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்

""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும்

"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்

"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை

(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும்

""தூதுவளை""

25) முகம் அழகுபெற

""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும்

"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும்

“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்

“வாழைத்தண்டு”.

 

  • தொடங்கியவர்

வேற இண்டைக்கு என்ன புதினம்..
கொடும்பாவி எரிக்கினமாம்..
அதெல்லாம் எம்ஜிஆர் தமிழாராய்ச்சி மாநாட்டில் அமிர்தரை நக்கலா பேசியதற்காக அண்டைக்கே யாழ்ப்பாணத்தில் எரிச்சனாங்கள்..புதிசா வேற ....
சம்பந்தன் எதிர்கட்சி தலைவராகலாமாம்..அதெல்லாம் பார்த்தாச்சு..
ம் ம் வேற வேற..
மட்டக்களப்பு ஆட்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையாம்..
அதுவும் காசி ராசதுரை என்று பார்த்தாச்சு ம்ம் வேற வேற..
டெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறி அரசுடன் சேரப்போகுதாம்
பொத்துவில் கனகரத்தினம் ஞாபகத்திற்கு வாறார் ம் ம் வேற வேற..
அண்ணை இவ்வளவுந்தானண்ணை புதினம்..
இதெல்லாம் புதினம்..இதெல்லாம் 70 களிலேயே பார்த்தாச்சேடா....வேற வேற..
போங்கண்ணை..உங்களுக்கு ஒரு புதினமும் சொல்லேலாது
வயசாளியோட சினேகிதம் வச்சால் இப்படித்தான்..ரஹ்மான் நம்ம தினேஸ் பொடியனை வச்சு ஒரு பாட்டு அடிச்சிருக்கு கேட்டனியே.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்

1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?

[இல்லை தூக்குல தொங்கப்போறேன்

2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?

[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?

[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?

[ இல்லை கும்மி அடிச்சேன் ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?

[ இல்லை அமெரிக்கா போறேன் ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?

[ இல்லை புளியம்பழம் ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?

[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?

[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?

[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]

10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?

[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]

 

  • தொடங்கியவர்

குரு ,,,,,,,,,, என்ற ஸ்தானத்தில் உள்ளவர்க்கு 

ஏன் எப்பொழுதும் யாரிடத்திலும் இல்லாத 

பயமும் மரியாதையும் பெரும்பாலோருக்கு 

இருக்கிறது தெரியுமா உறவுகளே smile உணர்ச்சிலை

கு - என்றால் இருள் 

ரு - என்றால் சத்ரு (எதிரி)

அதாவது இருட்டினுடைய சத்ரு(எதிரி) ,,, 

அறியாமை என்னும் இருளை அகற்றி வாழ்வின் 

ஒளியேற்றும் திறன் கொண்டோர் என்றே 

குரு என அழைக்கப்பட்டனர் போதிப்போர் 

எல்லோரும் 

 

  • 2 months later...
  • தொடங்கியவர்

ராமாயணப் போரின் இறுதிக்கட்டம்.போர்களம் எங்கும் இரத்த ஆறு பெறுக்கடுத்து ஓடுகிறது.போரில் தோல்வி அடைந்த ராவணன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காக காத்திருக்கிறான்.

இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி லக்ஷ்மணனை கூப்பிடுகிறார். "என்ன வேலையாக கூப்பிட்டீர்கள் அண்ணா? தம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி, சிறந்த சிவ பக்தன், பாடகன், தங்களை நன்கு அறிந்தவன், நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர்பிரிவதற்குள் ஏதாவது நல்லதை கற்று கொண்டு வா! என்று சொல்லவும் தமையன் சொல் தவறாத தம்பியும் கிளம்பி சென்றான்.

ராவணன் தலைமாட்டுகருகில் நின்றான். காலடிஓசையை கேட்ட ராவணன விழிகளைத் திறந்து பார்த்தான் ஒன்றும் பேச வில்லை. ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்து காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.

"தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.

இந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை ஏமாற்ற வில்லை ராவணன். அந்த வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை. "தம்பி லக்குமணா..சிறிது என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்களைப்பற்றி கூறுகிறேன்."

1. Smart Phone வாங்காதே. Smart boy என்று பேர் வாங்கு.

2. Face Book-யை தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே. உன் எதிரில் இருக்கும் மனிதர்களின் face தான் சிறந்த book.

3. கடைசியும் முக்கியமான ரகசியம் என்னவென்றால்... Whats App Group-ல் சேர்ந்து time waste பண்ணாதே, Family and Children கூட பொழுதை கழித்தால்

நீ ஹேப்பி ?
உன் family ஹேப்பி?

வரலாற்றுச் சாதனை.........சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் ப்ளூட்டோவினைக் கடந்து சென்று வரலாற்றுச் சாதனை செய்துள்ளது இந்த விண்கலம். அப்போது இந்த விண்கலம் ப்ளூட்டோ மற்றும் அதன் நிலாக்களை ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தது.

நியூயார்க்: ப்ளூட்டோ கிரகத்தில் 11 ஆயிரம் அடி உயர பனிமலைகள் இருப்பது நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ப்ளூட்டோ கிரகமானது உறைநிலையில் உள்ள குட்டி கிரகமாகும். சூரியக் குடும்பத்திலிருந்து இது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கிரகங்களில் ஒன்றாக இருந்த இதை பின்னர் விஞ்ஞானிகள் தகுதி நீக்கம் செய்து விட்டனர். இந்த கிரகத்தைக் குறித்து ஆராய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த 2006ம் ஆண்டு நியூ ஹாரிஸான்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியது.

  • தொடங்கியவர்

காசேதான் கடவுளடா.
********** ***********
ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்

.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக,எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன், என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,

கஞ்சன் சொன்னான்,என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.

# நீதி
என்னதான் இருந்தாலும்... காசேதான் கடவுளடா...
(அப்பாடா.. இருநூறு ரூபாய் மிச்சம்)

  • 1 month later...
  • தொடங்கியவர்

புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்..

திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது..

அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்..

நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார். நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்..

ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது..

பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார்..

அடுத்த கனமே மனைவி கோபத்துடன் "எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள். ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன்" என்றாள்..

நீதி: கணவன் என்னதான் நல்லது செய்தாலும் தன் மனைவிக்கு தப்பா தான் தெரியும்..

  • தொடங்கியவர்

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.
அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்...
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்...
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது.
தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்.
?
?
?
?
?
?
?
?

அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்...

நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்.
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம்.
ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல், ஆழ யோசித்து கணியுங்கள்.
மனக்கணக்கு தவறலாம்...?!
மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது...!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.
அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்...
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்...
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது.
தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்.
?
?
?
?
?
?
?
?

அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்...

நீஙகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்.
அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம்.
ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும். நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல், ஆழ யோசித்து கணியுங்கள்.
மனக்கணக்கு தவறலாம்...?!
மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது...!!

சூப்பர் அஞ்சரன், அய் லைக் திஸ்!

  • தொடங்கியவர்

ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!''
கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``...இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார்.
``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு திரு நடராசன் மட்டுமின்றி...அவரது மனைவி டி.ஏ. மதுரமும் அசந்துவிட்டார்.!

  • தொடங்கியவர்

ஆண்களுக்கும் பிரச்சினைகள் இருக்குங்க
1. ஒரு ஆண் கடுமையா உழைச்சா… பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க
2 .பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டு வாங்க..
3 .அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி 
விடுவா ங்க.
4 .கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமு க்கி 
வைப் பாங்க.
5 .எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும் பாங்க..
6 .திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல் லாத அரக்கன்னு வாருவாங்க..
7 .பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்.. ன்னு பட்டம்.
8 .சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்.. ன்னு திட்டும்.
9 .ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா “என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?” அப்படின்னு ஒரு நக்கல்.
10 .ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா “ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே ..!” ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..
11 .ஒரு குறிக்கோளோடு உழைச்சா, ” வேலை யைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி ..?” ன்னு ஏசல்.
12 .சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போ னா, ” அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழை ச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?” ன்னு பூசல்..
13 .இதையெல்லாம் கேட்டு சகிப்பு தன்மை இழ ந்த, வாழ்க்கையே வெறுத்த அந்த‌ ஆண், என்ன‍டா வாழ்க்கை தற் கொலை செய்துக் கொள்ள‍லாம்ன்னு முடிவெடுத்தா, இத பாரு வாழ்வதற்கு பயந்து கொண்டு தற்கொலை செய்துகொண்டானே பயந்தாங் கொள்ளிப் பயல் என்று சொல்வாங்க•
14 .இதுபோன்ற பூசல்களை கேட்டும் கேட்காமல் தன் வழியில் ஓர் ஆண் நடந்து போனா அவனை, இதப் பாரு நாம பேசுற‌ பேச்சுக்கு இதே வேற எவனாவது இருந்தா தூக்குல தொங்குவா! இவன் ஒரு மானங்கெட்ட‍வனாச்சேன் னு சொல்வாங்க!
அன்பு நண்பர்களே ..
15. இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆண் ஆதிக்க உலகம் அப்படி ன்னு சொல்லுவாங்க.
இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.
பொதுவாக ஆண்களுக்கு பிரச்சினை இருந்து கொண்டே தான் இருக்கு!

  • தொடங்கியவர்

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான். 
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.

அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே 
அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.

அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்? 
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.

விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,
கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.

வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர் 
மனைவியின் பிரிவைத் தாளாமல் 
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் 
இந்தசம்பவத்தை மனதிற்குள்
அசைபோடுவார்களா..!!

  • தொடங்கியவர்

ஆங்கிலம்  கலக்காமல்  தமிழில்  எழுதினால்  எவ்வளவு  அழகு .

 

மகிழுந்தைத் தண்ணீர் கொட்டித் துடை துடையென்று துடைத்து முடித்து, மாப்பிள்ளைபோல் கிளம்பிச் சென்றால் பின்னாலிருந்து கொடகொட என்று சத்தம். பின்னுள்ள பொருளறைக் கதவை ஒழுங்காக மூடவில்லை. இனி வண்டியை நிறுத்தி இறங்கிச் சார்த்த வேண்டும். பார்த்தேன். எதிரில் வேகத்தடை மேடு. சற்றே முடுக்கிச் சென்று வேகத்தடையில் ஏற்றி இறக்கினேன். வண்டியின் பின்புறம் கவர்ச்சியாட்டக்காரியின் இடை அடவுபோல் ஏறி இறங்கியது. அந்தத் தூக்கியடிப்பில் திறந்திருந்த கதவு நச்சப் என்று தானாய்ச் சார்த்திக்கொண்டது. அதுதானே... யாரிடம் ? 

  • தொடங்கியவர்

‘அவரு காலங்கார்த்தாலயே கிளம்பிட்டாரே’
‘காலங்கார்த்தால என்ன யோசனை ?’
‘அவருகிட்ட சொன்னா போதும். காலங்கார்த்தால வந்து நிற்பார்’

பேசும்போது தினந்தோறும் நாம் தவறாமல் பயன்படுத்துகின்ற சொற்றொடர் ‘காலங்கார்த்தால.’ அதை இன்னும் சுருக்கி ‘காத்தாலயே’ என்போம். ‘காலங்கார்த்தால’ என்பதற்குக் ‘காலையிலேயே’ என்ற பொருளை அனிச்சையாகப் புரிந்து வைத்திருக்கிறோம். இது காலை என்பதோடு தொடர்புடையதா, அதிலிருந்து மருவியதா என்று ஆராய்ந்தால் அட்டகாசமான விடை கிடைக்கிறது.

காலை என்ற சொல்லோடு ‘காலங்கார்த்தால’ என்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. காலை என்பது வேறு சொல். காலங்கார்த்தால என்னும் தொடர் காலை என்ற சொல்லோடு பொருள் தொடர்புதான் கொண்டிருக்கிறதேயன்றி மருவல்/திரிதல் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. எப்படி என்று பார்ப்போம்.

காலங்கார்த்தால என்பதில் உள்ள வேர்ச்சொற்களை எப்படிப் பிரிக்கலாம் ? காலம் + கார்த்தல்.

இதில் காலம் என்பது ஒரு நாளுக்கு ஆகுபெயராக வந்திருக்கிறது. கார்த்தல் என்பதற்கு என்ன பொருள் என்று ஆராய்ந்தால் ‘அரும்புதல்’ என்ற பொருளைக் கொண்டிருக்கிறது.

காலம் அரும்புகின்றபோதே, காலம் தொடங்குகின்றபோதே, நாள் விடிகின்றபோதே, காலங் கார்த்தலிலே... என்று அத்தொடரின் பொருள் விரிகின்றது.

விடிந்து நிற்பதைக் கவித்துவமாய்ச் சுட்டும் ‘காலம் அரும்புகிற’ என்னும் தொடர்தான் பிராமணர்களின் பேச்சு வழக்கில் ‘காலம்பற’ என்று திரிந்திருக்கிறது.

ஆக, காலம் அரும்புகின்றபோதே’ என்னும் அழகிய பொருளில்தான் ‘காலங்கார்த்தால’ என்று பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கார்த்தாலை = கருக்கல் என்பது சரியாய் இருக்கும் .

காலை = கொஞ்சம் விடிய, வெள்ளன.

  • தொடங்கியவர்

காலங்கார்த்தாலை = கருக்கல் என்பது சரியாய் இருக்கும் .

காலை = கொஞ்சம் விடிய, வெள்ளன.

பூ பூக்கும் நேரம் அப்படியா  அண்ணே .

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது... சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி யானையிடம் கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது.... அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்...?" அப்பொழுது சிங்கம் சொன்னது... "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."

  • தொடங்கியவர்

நெஞ்சை உருக்கிய கதை.

? தலைப்பு:- இன்னும் சில நாட்கள்.....

? காலை நேரம்., அலுவலகத்திற்கு 
கிளம்பியாக வேண்டும் நான்.

? செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். 
அய்யோ....

? என்ன ஆயிற்று எனக்கு?

? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?

? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....

? நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

? காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? 
மணி பத்தாகிவிட்டது

? என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.

? அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.

? அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......

? என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். 
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

? நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.

? ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

? என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

? அய்யோ என்ன செய்வேன் நான்? 
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?

? நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?

? என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். 
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

? அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.

? ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.

? "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.

? "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!

? திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..

? என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

? இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......

? இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.

? ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!

  • தொடங்கியவர்

நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம் ..அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே தெரியும் ...!
புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார் தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார்
மிக நீண்ட தூர பயணம் .. இடம் நெருங்கி வந்த போது நியூட்டன் சாரதியிடம் சொன்னார் நான் கார் ஓடுகிறேன் நீ பின்னுக்கு இரு ..சாரதி தயங்கினாலும் இறுதியில் சம்மத்தித்து இருந்தார் பல்கலைக்கழகம் வந்தது ..
நியூட்டன் சாரதிக்கு சொன்னார் ஒன்றும் சத்தம் போடாமல் நடப்பதை எல்லாம் நீயே செய் என்றார் ..
விழாஒருங்க்கிணைப்பாளர் கார் கதவை திறந்து சாரதியை நியூட்டன் என கருதி ராஜ மரியாதை கொடுத்து மேடையில் அமரவைக்க ..நியூட்டன் மேடைமுன் உள்ள முதல் வரிசையில் பார்வையாளர் இருக்கையில் இருந்தார் ...
மேடையில் இருக்கும் நியூட்டனிடம் (சாரதி) விஞ்ஞான சந்தேக கேள்விகள் தொடங்கின முதலாவது வினாவை மாணவர் ஒருவர் கேட்டார் ....
அப்போது மேடையில் இருந்த நியூட்டன் (சாரதி) சொன்னார் இந்த சின்ன கேள்விக்கு எல்லாம் எனது -சாரதி பதில் சொல்வார் என்று கூறி மேடையை விட்டு இறங்க்கிச்சென்றார் -
பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதைதான் இதுவே .

  • தொடங்கியவர்
ஒரு தடவை ஓர் அமெரிக்க வீரர், ரஸ்ய வீரர் ஆகிய இருவர் மாத்திரம் ஓட்டப்பந்தயத்திலே ஓடினார்கள்.இப் போட்டியிலே அமெரிக்க வீரர் முதலாமிடமும் ரஸ்ய வீரர் இரண்டாமிடமும் பெற்றனர்.குறித்த போட்டி முடிவுகள் தொடர்பாக அமெரிக்கப் பத்திரிகைகள் அமெரிக்க வீரன் முதலிடம் என்றும் ரஸ்ய வீரர் கடைசிக்கு முதலிடம் என்றும் எழுதினர்.இதே செய்தியை ரஸ்யப் பத்திரிகைகள் ரஸ்ய வீரர் முதலிடம்,அமெரிக்க வீரர் கடைசிக்கு முதலிடம் என்றும் எழுதினர்.ஆகவே ஒரு விடயத்தை எடுத்துரைக்கும் பாணி எழுத்திலே முக்கியமானது.

இரவிந்திரநாத் தாகூர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிய நாட்டினை சேர்ந்தவர்..இந்தியா,பங்களாதேசம் ஆகிய இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை அவர் எழுதியிருக்கிறார்.அவருடைய இறுதிக் காலத்திலே மரணப் படுக்கையில் இருக்கும் போது அவரைப் பார்த்து ஒருவன் கேட்கிறான்.ஐயா,நீங்கள் ஆறாயிரம் கவிதைகளை எழுதியிருக்கிறீர்களே..!இதனையிட்டு நீங்கள் பெருமைப்பட வில்லையா?

மகிழ்ச்சியடையவில்லையா? என்று கேட்கும் போது இரவீந்திர நாத் தாகூர் கூறுகிறார்.”நான் ஏதோவொரு விடயத்தைக் கூற வந்து தோற்றுப் போனேன்,அதனால் தான்,நான் மீண்டும் மீண்டும் எழுதினேன்.எனவே ஆறாயிரம் கவிதைகள் என்பது வெற்றிகளல்ல ஆறாயிரம் தோல்விகள்”என்கிறார்.அத்துடன் நின்று விடாது அந்த உலக மகா கவிஞன் ‘நான் பாட வந்த பல்லவியைக் கூட இன்னும் பாடவில்லையே..!’என்று மிகவும் அடக்கமாகக் கூறுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.