Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடந்த இறுதி கட்டப் போரை நிறுத்த, மத்திய அரசு முழு முயற்சிகளும் எடுத்தது. காரணம் சொன்னார் சிதம்பரம்.

Featured Replies

சிதம்பரத்தை நம்பி நடக்க யாரும் தயாராக இல்லை.. ஆனால் இந்த அளவுக்கு சிதம்பரத்தைப் பேசவைத்த காரியத்தை செய்தவர்கள் தமிழகத்தின் போராட்டக்காரர்களே..

 

உண்மை.

ஆனால் இவர் கதைப்பதும் தேர்தல் வரைக்கும் தான்.

 

  • Replies 98
  • Views 5.2k
  • Created
  • Last Reply

530506_586798214709083_1136590222_n.jpg

நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே இந்தியாதான் – ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திருமுருகன்காந்தி

December 4, 2013

 

நிருபர் கேள்வி: இலங்கையில் இறுதிகட்ட போரின்போது போர் நிறுத்தம் கொண்டு வர இந்தியா முயற்சித்தது ஆனால் அதை தமிழகத்தில் உள்ள சிலர் தான் கெடுத்துவிட்டார்கள் என்று சிதம்பரம் அடிக்கடி கூறுகிறாரே.

 

மே 17 திருமுருகன் பதில்: ஒரு பச்சைபொய்யை இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.இதைபற்றி சற்று விரிவாக பார்தோமேயானால் உண்மை வெளிப்படும். 2009 மார்ச் மாதம் 9ம் தேதியிலிருந்து 12ம் தேதி என்பது போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம்.

 

இந்த கால கட்டத்தில் ஐநாவின் உயர்மட்டகுழு இலங்கைக்கு விஜயம் செய்து எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள் என்ற ஆவணத்தை பார்த்து அதிர்ந்து போய் உடனடியாக ஐ.நாவின் பாதுகாப்பு சபையை கூட்ட வேண்டும் என்று அநத குழுவின் தலைவரான நவநீதம்பிள்ளை மார்ச் 13 2009 கூறுகிறார். இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கவிருக்கிற நேரத்தில் முதல் நாள் இரவு ஒரு மின்னஞ்சல் வருகிறது.அதில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்க்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் விதமாக அது வருகிறது.இந்த மின்னஞ்சலை அனுப்பியது இந்தியாவிலிருந்து ஐநாவிற்க்கு அனுப்பப்பட்ட முன்னாள் துணைபாதுகாப்பு செயலாளர் விஜய் நம்பியார்.

 

இவர் தான் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்க்கு சொல்லக்கூடாது மற்றும் இலங்கை அரசை குற்றம்சொல்லாமல் விடுதலைப்புலிகளை குற்றம்சொல்லி அறிக்கை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார். இதன்படி பல செய்திகளை மறைத்து அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏன் முக்கியமென்றால் ஐநாவின் மிக அதிகாரம் கொண்ட மனித உரிமை அமைப்பானது அங்கு மனித குலத்திற்க்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது என்று அறிக்கை கொடுத்தால் உடனே பாதுகாப்பு சபையை கூட்டி போர் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

 

இதுதான் உலகத்தில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. குறிப்பாக சிரியா மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே போர்நிறுத்தம் வ்ந்தது. ஆனால் இந்த அறிக்கை அப்பொழுது வரமால் தடுத்தது இந்திய அரசாங்கம். குறிப்பாக அப்பொழுது பதவியிலிருந்த சிதம்பரம் அவர்களுக்கு இது தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இவர்கள் போரை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சர்வதேசம் இதில் தலையிட நினைத்து தனது ஆட்களை அனுப்புகிறது இதையும் இந்தியாதான் தடுக்கிறது. இதனையடுத்து அங்கு 15ம்தேதி ஐநாவின் இனப்படுகொலை தடுப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் வருகிறார்.

 

இவர் கொழும்புவிலிருந்த 5 நாட்களும் தனது அறையைவிட்டு வெளியே வரவில்லை. ஏன் என்று கேட்டால் வெளியில் climate தட்பவெட்பம் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார். இந்த சமயத்தில்தான் மே 19அன்று கிட்டத்தட்ட 40,000 தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் இது இந்தியாவின் ஒப்புதலோடு நடந்திருக்கிறது.இப்படி பொறுப்பற்ற அதிகாரியாக ஐநாவிலிருந்த இந்திய அதிகாரி விஜய் நம்பியாரின் அண்ணண் சதிஸ் நம்பியார்தான் இனப்படுகொலை செய்த இலங்கைக்கு இராணுவ பயிற்சி கொடுத்தவர்.

 

அண்ணண் இனப்படுகொலை செய்கிறவர் தம்பி அதனை வேடிக்கை பார்த்தவர் இவர்கள் இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்களை இந்த இடத்தில் கொண்டுவந்தது இந்தியாதான். இது எதுவும் பா.சிதம்பரத்திற்க்கு தெரியாமல் நடந்திருக்காது. இது ஏதோ மே17இயக்கத்தின் கருத்தோ அல்லது திருமுருகனின் கருத்தோ இல்லை எல்லாமே ஆவணமாக விக்கிலீஸ் மற்றும் ஐநாவின் உள்ளக ஆய்வறிக்கையிலேயே இருக்கிறது.ஆகவே இவர்கள் செய்த அனைத்தும் ஆவணமாகவே இருக்கிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்க்காகத்தான் அடுத்தவர்களின் மீது பழியை போடுகிறார்கள்.

 

மூன்றாவது நாடுகளின் முலம் முயற்சித்தோம் என்பதெல்லாம் சுத்த பொய் மற்ற நாடுகளின் தலையீட்டை தடுத்ததே இந்தியாதான்.இதை நாங்கள் ஆதாரபூர்வமாகவே சிதம்பரம் அவர்களுடன் விவாதிக்க தயாராக இருக்கின்றோம். ஆனால் அவர் இதற்க்கு தயாரா என்பதுதான் எங்கள் கேள்வி. எனவே இந்த போரை நடத்தி இத்தனை மக்களை கொன்று குவித்ததற்க்கு முழுகாரணமும் இந்தியாதான்.

 

http://tamizl.com/?p=52914

Edited by துளசி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிதம்பரத்தின் பேச்சை எனது நண்பர் ஒருவர் பார்த்திருக்கிறார். அவரது கருத்து இப்படி இருந்தது.

 

"நாங்கள் எமது பிரச்சினையை உணர்வுபூர்வமாக அணுகுவதால்த்தான் எமக்கு இந்த அழிவெல்லாம் நடந்தது. இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் நடேசன் அவர்கள் ஒரு வெளிநாட்டுத் தமிழர் மூலமாக இந்தியாவின் சிதம்பரத்துடன் தொடர்புகொண்டார். அதன்படி, புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுவிடுவதாக பிரகடனம் செய்து ஒரு சாசனத்தை வெளியிட்டால் அதை மைய்யமாக வைத்து சிங்கள அரசாங்கத்தை போர்நிறுத்தத்திற்கு பணியவைக்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று சிதம்பரம் வாக்குறுதி அளித்திருந்தார். இந்தத் தகவலை நடேசன் அவர்கள் தலைவர் பிரபாகரனிடம் கூறியபோது அனைத்து தளபதிகளையும் அழைத்த பிரபாகரன் இதுபற்றி அவர்களது கருத்தைக் கேட்டறிந்தார். இதன்போது தீபன் கூட இந்த திட்டத்தை ஒப்புக்கொண்டார்.பின்னர் தமிழ்நாட்டிலிருக்கும் ஈழ ஆதரவாளர்களான வைக்கோ நெடுமாறன் அவர்களிடம் இதுபற்றி கருத்தறிய பிரபாகரன் விரும்பியபோது, "இல்லை இல்லை, இதற்கு ஒருபோதுமே உடன்படாதீர்கள். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் விழுகிறது. ஆட்சி மாறும், உடனேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம். நீங்கள் தொடர்ந்து போராடுங்கள்" என்று அறிவுரை வந்தது. அதற்குப்பிறகு தலைவர் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டார். காங்கிரஸும் தோற்கவில்லை, மகிந்தவும் யுத்தத்தை தொடர்ந்து நடத்தி எல்லாவற்றையும் அழித்துவிட்டான்" என்று கூறினார்.

 

அனேகமாக சிதம்பரத்தின் பேச்சைக் கேட்ட அனைவருமே ஒரு இனம்புரியாத குழப்பத்தில் இருப்பதை உணர முடிகிறது. இது சிலவேளை இதுவரை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவர்களுக்குச் சார்பாகப் பேசாத சிதம்பரம் முதன்முறையாக இப்படியானதொரு பேச்சை நிகழ்த்தியிருப்பதனால் வந்த விளைவோ இதுவென்று எண்ணத் தோன்றுகிறது.

 

சிதம்பரம் என்ன சொல்கிறார் என்றால், இந்தியாவிலேயே தனிநாடு கோரிப் போராடும் பல இனங்கள் இருக்கின்றன. அவர்களின் போராட்டத்தை ஒருபோதுமே இந்தியா ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அப்படியிருக்க இறையாண்மையுள்ள நாடொன்றிற்குள் போராடும் இன்னொரு இனத்தின் தனிநாட்டுக் கோரிக்கையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதுளிது இவர் மட்டுமல்ல, பல இந்திய அரசியல்வாதிகளும், இந்திய வெளியுறவுத்துறையும் காலம் காலமாக கூறிவரும் ஒன்றுதான். சரி, அப்படியானால் இறையாண்மையுள்ள பாக்கிஸ்த்தானிற்குள் புகுந்து கிழக்குப் பாக்கிஸ்த்தானைப் பிரித்து பங்காளாதேசம் ஆக்கியபோதுமட்டும் ஏன் பாக்கிஸ்த்தான் ஒரு இறையாண்மை உள்ள நாடு என்று தெரியாமல்ப் போனது ? சரி, அதை விடுங்கள் 1986-87 களில் இலங்கை வான்பரப்பினுள்பாத்துமிற்றி தனது போர் விமானங்களையும், சரக்கு விமானங்களையும் அனுப்பி உணவுப் பொட்டலம் வீசினார்களே, அப்போது இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடென்று ஏன் தெரியாமல்ப் போனது ? 

 

சர்வதேச அரங்கொன்றில், இந்தியா சொல்வதைக் கேட்பதற்கு மற்றைய நாடுகளுக்கு இந்தியா சட்டாம்பிள்ளை கிடையாது, ஆகவேதான் இந்தியாவின் முயற்சி கைகூடவில்லை என்று சொல்கிறார். சரி, அப்படியானால் முதன் முதலாக ஐ. நா வில் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட தீமானத்தை இந்தியா தானே மின்னின்று எதிர்த்தது கூட ஈழத்தமிழர்க்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று காரணத்தினாலா??

 

நாடளுமன்றத்தில் தான் வரைந்த இலங்கைக்கெதிரான தீர்மானம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சி உடன்படவில்லை. இறையாண்மையுள்ள நாடொன்றிற்கெதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு தனது கட்சி உடன்படாதென்று சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக எதிர்ப்புத் தெரிவித்து விட்டார். அதனால்த்தான் தீர்மானம் முன்கொண்டு செல்லப்படவில்லை என்று கூறுகிறார். ஆக,  காங்கிரஸ் எப்போதுமே ஈழப்பிரச்சினைக்காக உண்மையாகச் செயற்பட்டது, பாரதீய ஜனதாக் கட்சியினால்த்தான் அதனது இறுதி முயற்சியும் தோற்கடிக்கப்பட்டதென்கிறார். தமிழகத்து பாரதீய ஜனதாக் கட்சியினரின் நிலைப்பாடு மத்திய கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று கூறும் சிதம்பரம் தனது நிலைப்பாடு மத்தியில் உள்ள சோனியா குழுவின் நிலைப்பாடுதான் என்பதை சொல்ல மறந்துவிடுகிறார். முடிவாக ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு தார்மீகப் பொறுப்பை தனது கட்சியிடமிருந்து விலக்கி  வலுக்கட்டாயமாக மற்றைய எல்லோரிடத்திலும் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார் சிதம்பரம்.

 

இதைவிடக் கொடுமை என்னவென்றால், இதுவரை ஈழத்தமிழர் பற்றிப் பேசாத பிரிட்டிஷ் பிரதமர் இப்போது பேசுவதுகூட இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றிதான் என்று உரிமை கொண்டாடுகிரார். அது எப்படியென்று அவரும் கூறவில்லை, கைதட்டியவர்களும் கேட்க விரும்பவில்லை.இலங்கைக்கு எதிராக மேற்குநாடுகள் கொண்டுவந்த தீர்மாங்களை ஒன்றில் முற்றாக எதிர்ப்பதையோ அல்லது தீர்மானங்களின் தீவிரத் தன்மையைக் குறைத்து இறுதியில் எந்தவித சரத்தும் இல்லாத வெற்றுத் தீர்மானமாக நீர்த்துப் போகச் செய்ததையோ தான் இந்திய வெளியுறவுத்துறை இதுவரை சர்வதேசத்தில் செய்துவருகிறது. அதனால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் பிரதமர் தானே நேரடியாக இதுபற்றிப் பேசலாம் என்கிற முடிவுடந்தான் தனது நடவடிக்கையை எடுத்திருக்கக் கூடும். ஆக தனது எதிமறையான செயற்பாடுகளால் விரக்தியடைந்திருக்கும் மேற்குலகின் இன்றைய போக்குக் கூட் தனது வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியென்று சொல்கிறார் போலும். 

 

சரி, மன்மோகன் இலங்கைக்குச் சென்று ஏன் கமரூன் போல நடந்துகொண்டிருக்கவில்லை என்று பலர் குற்றம் சொல்கிறார்களாம். சரி, முதலாவதாக, மன்மோகன் இலங்கைக்குச் செல்லாததற்கு முன்வைக்கப்பட்ட காரணம் என்ன?? இங்கே திருப்பித் திருப்பிச் சொல்லப்பட்ட ஒருவிடயம்தான், இந்தியாவின் பிராந்திய நலன் என்பது. எல்லாவற்றிற்கும் மேலக இந்தியாவின் பிராந்திய நலனும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும், அதன்பிறகே மீதியெல்லாம் என்று கூறப்பட்டது. ஆகவே மன்மோகன் இலங்கைக்குச் செல்ல மறுத்தது கூட ஈழத்தமிழருக்காக அல்ல, மாறாக இந்திய நலனுக்காக. ஆனால், அப்படி செல்ல மறுத்தமைக்காக இந்தியா ஒன்றும் சும்மாயிருக்கவில்லை, முழுப் பலத்துடன் சல்மான் குர்ஷித் தலமையில் ஒரு குழுவை அனுப்பி வைத்தது. அவர் அங்கே சென்று மகிந்தவின் காலில் விழாத குறையாக "ஐய்யோ எங்களை மன்னித்துவிடுங்கள், அவர் செய்தது உங்களை அவமானப்படுத்தவல்ல, மாறாக உள்நாட்டில் எழுந்துவரும் எதிர்ப்பைச் சமாளிக்கவே, இப்படி நடந்ததால் மட்டும் இந்தியாவுக்கும் இலங்கைகும் இடையிலிருக்கும் அந்நியோன்னியம் ஒருபோதும் குறைந்துவிடாது " என்று அழுது புரண்டிருக்கிறார்.ஈதுதான் இந்தியாவின் ராஜதந்திரமா என்று கூட்டத்தில் இருந்தவர்கள் சிதம்பரத்திடம் கேட்கவில்லை. 

 

மேலும், இந்தியா ஒரு அண்டை நாட்டிற்கு வங்கதேசப் போருக்குப் பிறகு வங்கதேசத்த்திற்கு உதவியதை விடவும் அதிகமாக உதவியிருக்கிறதென்றால் அது ஈழத்தமிழருக்குத்தான் என்று புழுகுகிரார். ஆகவே தொடர்ந்தும் இந்தியா ஈழத்தமிழருக்கு உதவ வேண்டுமென்றால் இலங்கையில் அதன் செல்வாக்கு இருக்கவேண்டுமாம்ணதனால்த்தான் இலங்கையுடன் அவர்கள் உரவாடுகிரார்களாம்.  சரி, வங்கதேசத்தில் என்ன நடந்தது? பலமாயிருந்த பாக்கிஸ்த்தானை உடைப்பதுதான் இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கத்திற்குச் சரியான பாதுகாப்பு என்று கருதி அங்கே ராணுவத்தை அனுப்பி கிழக்குப் பாக்கிஸ்த்தானிற்கு விடுதலைப் பெற்றுக் கொடுத்தது. கிழக்குப் பாக்கிஸ்த்தான் விடுதலை பெற்றுக்கொண்டாலும் கூட அதற்கு அது செலுத்திய விலை அளப்பரியது. இந்திய ராணுவம் அங்கே செய்த பாலியல் கொடுமைகளும், கொலைகளும் சரித்திரம். வங்கதேசத்தை உருவாக்கியதுடன் தனது கடமை முடிந்துவிட்டது என்று அவர்களைக் கைகழுவி விட்டது இந்திய ராஜதந்திரம். இன்றுமட்டும் வங்கதேசம் இந்தியாவுடன் நட்புப் பாராட்டாமல் (தனக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த பின்னரும் கூட) இருப்பதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். ஆக , இதைவிட ஈழத்தமிழருக்கு அதிகமாகச் செய்ததாம் இந்தியா?? எது, ஜே. ஆரை வழிக்குக் கொண்டுவர போராளிகளுக்கு உதவியது முதற்கொண்டு, இலங்கைக்கு சமாதானப்படை என்கிற பெயரில் படையனுப்பி வங்கதேசத்தில் நடந்த கொடுமைகளையெல்லம் விஞ்சுமளவிற்கு நரவேட்டையாடி, இறுதியில் 2009 இல தனிமனிதப் பழிவாங்களுக்காக ஒரு இனத்தின் அழிவிற்கே திட்டம்போட்டு காரியமாடியதைச் சொல்கிறாரா சிதம்பரம்?  

 

இறுதியாக, அவர் கூறிய மூன்று விடயங்கள்,  முதலாவதாக, 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தப்போவதாக அவர் கூறுகிறார். இணைந்த வடக்குக் கிழக்குடனான அதிகாரப் பகிர்வு என்று அவர் சொல்கிறார். வடக்கும் கிழக்கும் இந்தியாவின் அனுசரணையோடு இலங்கை நீதிமன்றம் ஒன்றினால் எப்போதோ பிரிக்கப்பட்டு விட்டதென்பதை அங்கிருந்தவர்கள் எவருமே அவருக்குச் சொல்லிக்கட்ட விரும்பவில்லை போலும். 13 ஆம் திருத்தம் என்று அடிக்கடி பீற்றும் இந்தியா அஹ்டி அமுல்ப்படுத்துங்கள் என்று வாயளவில் மட்டுமே இதுவரை சொல்லிவருகிறது. இலங்கையும் இதுவரை அதற்குச் செவிசாய்ப்பதாக இல்லை. இனிமேலும் அது செவிசாய்க்கப்போவதில்லை. அப்படியிருக்க இவர் என்னத்தைச் செய்யப்போகிறார்?

 

இரண்டாவது போர்க்குற்றங்கள். அங்கே நடந்தது இனக்கொலைதான் என்று இந்தியா இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச விசாரனை ஒன்று அவசியமில்லை என்றுதான் இதுவரை அது சொல்லி வருகிறது.அண்மையில் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கூட இதை உறுதிப்படுத்தியுருக்கிறார்.  இதற்காகவே பலமுறை தனே முன்னின்று இலங்கையை சர்வதேச அரங்கில் அது பாதுகாத்திருக்கிறது. அப்படியிருக்க இவர் உலக நாடுகள் ஏற்றுகொள்ளக்கூடிய விசாரணை என்று கூறுவது மத்தியில் சோனியா குழு எடுக்கும் முடிவிற்கும், இவர் தமிழகத்தில் பேசும் பேச்சுக்கும் தொடர்பில்ல என்பதைத்தான் காட்டுகிறது. 

 

மூன்றாவது, அபிவிருத்தி என்கிற பெயரில் உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாடு. ஈழத்தமிழருக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துவருகிறோம், தாம் ஆட்சியிலிருக்கும்வரை இதுநடக்கும், தேவைப்பட்டால் இன்னும் பத்து ஆண்டுகளாவது செய்வோம் என்று கூறிகிறார். போர் முடிந்து 4 அண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஈழத்தமிழரின் துயர் துடைக்கவோ அல்லது அவர்களுக்கு நீதி கிடைக்கவோ இந்தியா செய்த ஒன்றை கூறட்டும் பார்க்கலாம். வெறுமனே ரோட்டுப் போடுகிறோம், ரயில் விடுகிறோம், வீடு கட்டுகிறோம், வாழ்வாதாரம் தருகிறோம் என்றெல்லாம் கதை விடுகிறீர்களே?? இதெல்லாம் அவர்களுக்கு முன்னரும் இருந்ததே? அதைத்தானே நீங்கள் இருமுறை படையெடுத்து அழித்தீர்கள்?? நீங்கள் தலையிடாக் கொள்கையை அன்றே எடுத்திருந்தால் நாங்கள் அழிந்திருக்கத் தேவையில்லை அல்லவா?? இலங்கை இறையாண்மையுள்ள நாடென்பதை ஏன் போர் முடிந்தபின்னர் உணருகிறீர்கள்?? 

 

தேர்தலில் வாக்குப் பிச்சை கேட்டு வந்திருக்கும் சிதம்பரம் எனும் ஓநாயின் அழுகையை நம்மவர்கள் இன்னும் நம்புவது கவலையான விடயம். அதே நேரத்தில் வைக்கோ மற்றும் நெடுமாறன் போன்ரவர்களின் அவ்வப்போது வெளிவரும் உணர்ச்சிமேலீட்டால் வரும் பேச்சுக்களையும் நாம் தவிர்த்துக்கொள்வது எமக்கு நலம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி கட்ட போரின் போது சிதம்பரம் போரை நிறுத்த கடுமையாக முயன்றார் என்பது அனைவருக்கும் தெரியும் ஒருவர் செய்ய முயன்ற உதவியை கொச்சைபடுத்தகூடாது......இப்பிடி நாங்கள் நன்றிகள் மறந்து செயல்ப்பட்டதனால் தான் இன்று இங்கு வந்து நிக்கின்றோம்.......குறிப்பா யாரையும் நம்புவது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல், சிதம்பரம் என்ன செய்தார் என்பதை சொல்லலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுண்டல்,

 

இந்த செய்தி நான் முன்னரே கேள்விப்பட்டதுதான். இதில் கூறப்பட்டவை உண்மையா இல்லையா என்பதை மாண்டவர்கள் வந்து சொல்லப்போவதில்லை என்கிற துணிவில் எழுதுகிறார்கள். 

 

தான் அனுப்பிய திட்டம் இந்தியாவில் எவருக்கும் தெரியக்கூடாதென்று சிதம்பரம் சொல்லியிருந்தாரானால், பின்னர் எப்படி காங்கிரஸின் தலமையை தனது திட்டத்திற்கு இணங்கச் செய்திருப்பார் என்பதை இதை எழுதியவரே சொன்னால் நல்லது. மத்திய அரசு தலையாட்டாமல் சிதம்பரம் எதையுமே செய்ய முடியாது. அப்படியிருக்க ரகசியத் திட்டம் அது, இதுவென்று எழுதுகிறார்கள். மத்திய அர்சுக்குத் தெரியாமால் தானே எடுக்கும் ஒரு நடவடிக்கையினால் யுத்தத்தை எவ்வாறு நிறுத்தமுடியும் என்று சிதம்பரம் நம்பியிருந்தார்? 

 

புலிகள் தனி ஈழத் திட்டத்தைக் கைவிட்டால் உடனே யே யுத்தம் நிறுத்தப்படும் என்று ஏன் இந்தியாவால் வெளிப்படையாகவே கூறமுடியவில்லை?? எதற்கு ஒரு ரகசியத் திட்டம்? 

 

சரி, யுத்தத்தை விடுங்கள். இன்றுவரை தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பு நடந்துதான் வருகிறது. இந்தியா நினைத்தால் இதற்கு ஒரு முடிவு கட்டலாம், ஆனால் செய்யவில்லை. அப்படியிருக்க யுத்தத்தை இந்தியா தடுக்க நினைத்தது ஆனால் புலிகள்தான் குழப்பி விட்டார்கள் என்று சொல்வது வேடிக்கை.

அமெரிக்காவின் அதிபர், நெல்சன் மண்டலாவின் இறுதிச்சடங்கில் "மகிந்தா போன்றவர்கள் மண்டலாவின் பெயரை சொல்லி ஏமாற்றுகிறார்கள்" என்ற பின்னரும் அமெரிக்காதான் ஏமாற்றுகிறது என்று வாதாடும் அவர்களே ஒபாமா பதவுக்கு வந்து மூன்று மாதங்களுக்குள் அமெரிக்காவை நம்பி அதன் கப்பலில் ஏறவில்லை என்று எழுதுகிறார்கள். ஓபாமா பதவிக்கு தெரியப்பட்ட பின்னரும் பிளேக் அமெரிக்க கொள்கைகளில் மாற்றம் வராது என்று பலதடவைகள் பேசி இருந்தார்.  கண்ணால் கண்டவர்கள் இந்திய கப்பல்கள் முள்ளிவாய்க்காலில் நிண்டு செல் அடித்ததும் இரசாயன குண்டு போட்டதையும் பற்றிச சொன்னதை அறியாமல் சிதம்பரம் தான் செய்த உடன்படிக்கைகளில் கையெழுத்து போடவில்லை என்பது மிகப்பெரிய பகிடி. கருணாநிதி இருக்க போன உண்ணாவிதத்தில் அவர் மிரட்டி எழுப்பட்டார். கனி மொழி புலிகளை ஆதரித்து பேசியத்தால் ராஜபக்சாவிடம் வந்து மன்னிப்பு கேட்டார். பொய்யிக்கு 2G யில் இணைக்கப்பட்டதால் அந்த வழக்கு முன்னால் போக முடியவில்லை. அதே நேரம் தமிழகத்தின் பிரபல கேடியான அழகிரி மீது ஒன்றும் இல்லை. இவற்றை அறியாதவதரா சிதம்பரம். குறந்த படசம் இராசாயன குண்டுகளை தடுத்து மறித்திருக்கேலாதா? இந்திய உதவியை நிற்பாடுவதற்கு எதற்கு பிரபாகரன் இந்திய உடன் படிக்கையில் கையெழுத்து போட வேண்டும்? பிரபாகரன் இந்தியாவுடன் யுத்தத்தில் இருக்கவில்லை. இந்தியா தானாக வந்து குத்தித்து புலிகளுடன் யுத்தத்தை ந்டத்தியதுதிந்தியா இன்றும் சொல்லும் விளக்கம் சீனா கடனுக்கு ஆயுதம் கொடுத்ததால் தாம் இலவசமாக கொடுக்க வேண்டியிருந்தது என்று. அப்போது பிரபாகரன் சிதம்பரத்தின் ஒப்பந்ததில் கையெழுத்து போட்டிருந்தால் எப்படி சீனா கடனுக்கு ஆயுதம் கொடுப்பத்தை நிற்பாட்டியிருக்கும்.  இதில் தன்னை, காங்கிரசை தேர்தலில் காப்பாற்ற சிதம்பரம் சொல்லும் திருகுதாள்ங்களை யார் நமப வேண்டும்? குறைந்தபட்டசம் இப்ப சிதம்பரம் கோத்தா பிரபாபாகரனின் இறப்பு பற்றி என்ன சொன்னார் என்ற உண்மையை மத்திய அரசின் கோடு ஒன்றில் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யட்டும் பார்ப்பம்.

 

பிரபாகரனை சிதம்பரம் உயிரோடு பிடித்து கொடுத்திருந்தால் இன்று சர்வ்தேசம் நமக்கு செய்ய வருவது ஒன்றையும் UNHRC ல் செய்ய வந்திருக்காது. இலங்கை பிரபாகரனைபற்றி இல்லாதெல்லாவற்றையும் சொல்லி தூக்க ஆதரவு கொடுத்திருக்கும். போரின் பின்னர் சிதம்பரத்தின் காங்கிரஸ் சொன்ன மாதிரியே உலகம் முழுவதும் இலங்கை கொடுப்பதைதான் தமிழர் ஏற்க வேண்டும் என்றிருப்பார்கள். 

 

சிதம்பரம் தன்னுடைய தேர்தலை மட்டும் பற்றி கவலைப்படாமல், எப்படி சட்டசபையில் ஈழத்தமிழரின் விடையத்தில் கட்சிகள் ஒன்றாக நடந்து கொள்கின்றனவோ அதே மாதிரி லோகசபையும் தமிழ் நாட்டுக்கட்சிகளகொன்றாக நட்டக்க சிதம்பரம் தலைமை வகிக்க வேண்டும். வாசன் பதவி விலக போகிறேன் என்று மிரட்டிய பின்னர் கூட மன்மோகன் சிங் தான் தேர்தல் அலுவலால் இலங்கைக்கு வர முடியவில்லை என்று கடிதம் எழுதினவர். இதை தன்னும் சிதம்பரம் கண்டித்து அறிக்கைவிடவில்லை. இப்படியல்ல தெலுங்கனா விவகாரத்தில் காங்கிரஸ் மந்திரிகள்ம் பா.உ கள் நடந்து கொள்கிறார்கள். 

 

விறுவிறுப்பின் கட்டுரையில் ஒரு வரி உண்மையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் எவருக்கும் என்றது இது சம்மந்தப்பட்டவர்கள் தவிர வேறு எவருக்கும் தெரிய கூடாது என்று மற்றும்படி சிதம்பரம் தனது சக்த்திக்கு உர்ப்பட்டு முயற்ச்சித்தார் என்பது தான் நிதர்சனம்

சிதம்பரத்துக்கு கருணாநிதிமூலம் தொடர் எடுக்கப்பட்டது. அதன் படி அவர் மேலிடத்துக்கு தகவல்களை பரி மாறியிருக்கலாம். அது கட்சியில் உள்ள எவருக்கும் உள்ள பொறுப்பு. அது அவர் போர் நிறுத்தம் வர பாடுபட்டார் என்று முடிவை கொண்டுவராது.

 

தமிழ்க் கட்டிசிகளை இணைத்து செயலாற்றாமல் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது தனது சொல்லுக்கு மேலிடத்தில் மதிப்பில்லை என்றதலாக இருக்கலாம். ஆனல் எல்லோருக்கும் சொல்லி அவர்களை இணைத்து கோரிக்கை விட்டிருந்தால் இன்றிருப்பது போல காங்கிரஸ் தலைமை அன்றே ஈடாடியிருக்கலாம்றல்லது அவர் எது செய்த்தாலும் சோனியா முடிவை மாற்ற மாட்டார் என்றதாலாக இருக்கலாம்.

 

இன்று வாசன் தான் கட்சியைவிட்டு விடுவேன் என்று சொன்னது போலாவது சொல்லி இனாமக கொடுத்த ஆயுத்தை நிறுத்த முயன்றிருக்கலாம். ஆழும்கட்சிக் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது தானும் பக்கத்தில் வந்த்து அமர்ந்திருக்கலாம். 

 

சிதம்பரம் சோனியாவின் சொல்லைகேட்காவிட்டால் கனி மொழிக்கு நடதது மாதிரியே 2G ஒன்றே சோனியாவுக்கு சிதம்பரத்தை இருத்தி எழுப்ப போதுமாயிருந்த்திருக்கும்.ரௌண்மையில் 2G தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவர்களில் சிதம்பரம் ஒருவர். சோனியாவின் கால் கழுவுவத்தால் பாராளுமன்ற  விசாரணையில் எதுவும் செய்யவில்லை. சிதமபரம் பல பிரச்சனைகளினால் தான் பிரணாப்பிடம் நிதி மந்திரி பதவியை இழந்தவர் என்றதை அவ்ருக்கு ஞாபகமில்லை. எங்களுக்கு ஞாபகம். அதன் பின்னர் உள்நட்டு மந்திரியாகப்பட்டார். பொம்பேயில் நடந்த சூட்டுகளால் இன்னும் தடுமாறிவர். இவர் தான் சாமாதனம் கொண்டுவந்திருப்பேன் என்று தன்னைத் தான் தடுமாற்றட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் சக்தி எதுவரை என்பது எமக்குத் தெரியும் சுண்டல். அவர் விரும்பினால்க் கூட அவரால் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் உண்மை. சோனியா குழு மத்தியில் இருக்கும்வரை மற்றையவர்களின் சக்தியெல்லாம் எதுவுமே செய்யமுடியாது. இது எல்லாவற்றிற்கும் மேலாக ரோ இருக்கிறது. அது ஒருபோதுமே புலிகள் அழிவதைத் தடுத்திருக்காது. ஆகவே இந்தக் கற்பனைகள் கதைகள் எல்லாமே எவருமே திருப்பிக் கேட்கப்போவதில்லை என்கிற துணிவில் வருபவை. எவரும் எதையும் எழுதலாம் என்கிற நிலை இப்போதிருக்கிறது. தேவையானது ஒரு கணினியும் நேரமும் மட்டும்தான். வாசிப்பதற்கு நிறையப்பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தேவையானது இறுதியில் என்ன நடந்தது, ஏன் புலிகள் அழிந்தார்கள்,  இதற்கெல்லாம் யார் காரணம் என்பவைதான். இதுபற்றி யார் எதை எழுதினாலும் எடுபட்டு விடுகிறார்கள்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

சரி இப்பிடி எதுவுமே நடக்க வில்லை என்பதனை கூற உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. அதே நேரத்தில் இதில் குறிப்பிட்டவை நடந்தது என்று நம்பவும் முடியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் தலைமை ஏற்றதா இல்ல சிதம்பரத்துக்கு அது போக்கு காட்டியாதா என்பதெல்லாம் தெரியாது ஆனால் சிதம்பரம் முயற்சி செய்தார் என்பது மட்டும் நிஜம்.....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் போரை நிறுத்த முயன்றது சோனியா காந்தி அவர்கள்.. சிதம்பரம் அல்ல.. ஏன்யா சுண்டல் இந்தமாதிரி??!! :D

சிதம்பரம் ஒப்புக்கு முழங்கையில் பிடித்திருந்திருந்தால் கூட அதை அன்று சொல்லியிருந்தால் வேறு. இன்று சொல்வது ரகுநாதன் சொலவது போல் அதை தட்டிக்கேடக்க யாரும் இல்லை என்ற்தால் மட்டுமே. அவர் போர் நிறுத்தத்தை முயன்றிருந்தால் அதை ஒழித்திருந்திருக்க மாட்டார். அவர் தேர்தலில் நிற்பது தமிழ் நாட்டில். அரசியல் வாதியாக இருப்பத்தால், அவர் அப்படி செய்யும் போது  போர் நிறுத்தம் வராவிட்டாலும், தமிழாட்டில் தொகுதி ஒன்று தன்னும் அவருக்கு உறுதியாகிருக்கும். இவர் ஏன் தன் போர் நிறுத்த முயற்சியை ஒழித்து, தனக்கு போர் நிறுத்த கோரிக்கைக்கும் ஆதரவை தேடமால், தேர்தலில் வெல்லவும் வழி பண்ணமால் எல்லாவற்றையும் கெடுத்த்தார். இதில் இரண்டுதான் சாத்தியம், சிதமபரம், ராஜதந்திரம் உள்ள அரசியல் வாதியாக இல்லாமல் ஒரு முழு முட்டாள். அல்லது சிதம்ப்ரம் சொல்வதெல்லாம் சுத்தப்பொய். 

 

இந்தியா இலங்கையை பிடிக்க வந்தது. அதற்கு உதவியாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 13ம் திருத்ததை திணித்தது. 13ம் திருந்தம் இருந்தால் மட்டும் மே இந்தியா தாயாரகும் வரை நாடு ஒன்றாக இருக்கும். அதே நேரம் பிரச்சணையும் தீராது, இலங்கையில் இந்தியா தலையிடத்தக்க நடைமுறையும் தொடரும். இந்த அடிப்படையில் பிராபாகரனை சிறைப்பிடிக்க தக்கதாக கொண்டுவந்த உடன்பாடுகள் போர் நிறுத்ததிற்கானவை அல்ல. அவை இந்தியா இலவச ஆயுதம் கொடுத்து வீண் சிலவை தேடிக்கொண்டு புலிகளை அழிப்பதனிலும் பார்க்க, வலிய வந்து மாட்டும் போது செல்லவில்லாமல் புலி தலைமைகளை அள்ளிக்கொண்டு போக போட்ட திட்டமே. புலிகள் கேட்டது போர் நிறுத்தம். அது இரண்டு கன்னையும், தாங்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டு போரை தொடராமல் விடுவதே. சிதம்பரம் கேட்டது புலிகளை தோல்வியை ஒத்துக்கொண்டு அரசுக்குக்கும் இந்தியாவும் மேலதிக செல்வை வைக்காமல் சரணாகதி அடைவதே.

 

இனித் தன்னும் எதையாவது செய்து தன் நேர்மையை காட்ட சிதம்பரம் தயார் இல்லை. இந்த முறை கூட இந்தியா ஐ.நா.வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒருநிபந்தனை போடு அதைப்பற்றி பேசி, எழுத தாயார் இல்லை. இது வரையில் சிதம்பரம்  பொதுந்லவாயத்திலிருந்து இலங்கை வெளியேற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களுடன் இணையவில்லை. 

 

 உண்மையான சிதம்பரம் இன்று மத்தியை, 13ம் திருத்தத்தை கைவிட்டுவிட்டு ஐ.நா.வில் இனவழிப்பு குற்ற விசாரணை வேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்தால் இனவ்ழிப்பு நிறுவப்பட்ட பின்னர் தானாக தனி நாடு வரும். அதை செய்வாரா? தான் இன வழிப்பு நடந்ததாக சொல்லும் இலங்கையை கஸ்மீருடன் ஒப்பிடும் இவரின் கதையில் என்ன உண்மை இருக்கு. அதாவதி இந்தியா காஸ்மீரில் இனவழிப்பு செய்கிறது என்கிறாரா.

 

2009 ல் காங்கிரஸ் தேர்தல் முடியும் வ்ரை அடக்கி வாசித்துவிட்டு தேர்தல் முடிந்த உடனேயே போரை முடிக்கும்படி இலங்கையை கேட்டது என்றதுதான் பேச்சு. 2014 லிலும் அதையே தான் செய்ய சிதம்பரம் இப்போதே தயாராகிறார் என்பதுதான் இந்த பேச்சுக்கள்.  

 

சிந்தம்பரத்தின் பேச்சை புலிகள் அன்று நம்பவில்லை என்றதை வைத்து, நாம் இன்று நமப, சிதம்பரம் இந்த இடைவெளியில் அப்படி என்ன நல்ல தொன்றை செய்த்தார் என்ற கேள்வியை எம்மை கேடக வேண்டும்.

 

சிதம்பரத்தின் எமாற்றுக்களுக்காக அவருக்கு நாம் தோழ் கொடுக்க போவதில்லை. இந்த நேரத்தி சிதம்பரம் வந்த்து தன் நேர்மையை நம்புங்கள் என்று கேட்பது சுமந்திரன் எல்லாப் பிரச்சனைகளையும் கைவிட்டு விட்டு புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றியத்தை மட்டும் விவாதியுங்கள் என்பது போன்றதே. 

 

சிதம்பரத்தின் இந்த ஏமாற்றை கேட்டு ஏமாறாதீர்கள். மாவை தான் ஏன் அவுஸ்திரேலியா வந்தார் என்று விள்ங்க வைக்க கொடுத்த ஒரு பேட்டிய தமிழ் லீடர் விள்ங்கிக்கொள்ள முடியாமல் திசை திருப்பி கூட்டமைப்புக்கு எதிராக மாற்றி விட்டது. இன்றை நிலைமை கூட்டமைப்பை மேற்கு நாடுகள் கேட்க வேண்டுமாயின் கூட்டமைப்புடன் புலம் பெயர் மக்கள் இணைவார்களா என்ற கேள்வியை மேற்கு நாடுகள் கூட்டமைப்பை கேட்கிறார்கள். தெட்ட தெளிவாக, புலம் பெயர் தமிழர்கள் மீது 6 திருத்தம் இல்லாததால் அவர்கள் தாயக மக்களை 6ம் திருத்ததை காட்ட ஏமாற்ற முடியாது என்பத்தால் அவர்கள் கூட்டமைப்புஅன் இணைய மாட்டார்கல் என்ற செய்தியை அவுஸ்திரேலியர் கூட்டமைப்பு மாவை மூலம் சொல்லி அனுப்ப வேண்டும். அதாவது கூட்டமைப்பு மேற்கு நாடுகளிடம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு சாத்தியப்படாது என்ற உண்மையை சொல்ல வையுங்கள்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன தான் சுழன்று இடையால் புகுந்து தமிழால் விளையாடினாலும் சிதம்பரம் முயற்சி செய்தார் என்பது மட்டும் உண்மை ஆனாலும் என்ன ஓன்று காங்கிரஸ் தலைமை போக்கு காட்டி இருக்கலாம் இல்லது புலிகளுக்கு தவறான தகவல்கள் சொல்ல பட்டிருக்கலாம் ஆனால் சிதம்பரம் ஒரு தமிழ் உணர்வாளர்..... பிழை சரிகளை பேசுவதற்கு இது நேரமல்ல என்று கூறி கடைசி நேரத்தில் கடுமையாக முயன்றவர்

நாங்கள் புகுந்து விளையாடினதை டக்கெண்டு பிடிசிட்டியல். ஆனல் சிதமப்ரம் புகுந்து விளையாடுவதுதான் உங்களுக்கு சிக்கலாக இருக்கிறது. அதைத்தான் சொல்வார்கள் கெட்டிக்காறனின் பொய்யும் பிரட்டும் டக்குமுக்கு டிக்கு தாளம் என்று.

 

இந்த தமிழ் இன உணர்வாளன் பேசுவது தமிழா வட மொழியா என்பது இனிமேல்த்தான் கண்டுபிடிக்க வேண்டியதொன்று. அதே நேரத்தில் அவர் நெடுமாறனையும் வைகோவையும் தாட்டுக்குத்தாமல் தன்னை தமிழ் உணர்வாளன் என்று காட்ட முடியாமல் தவிக்கிறார். 2009 லிருந்து  இவ்வளவு காலமும் நெடுமாறனும் வைகோகோவும் சேர்ந்து காங்கிரசை தமிழ் நாட்டால் துரத்தி இருக்காவிட்டால் சிதம்பரம் தமிழ் உணர்வாளனாக மாற வேண்டிய தேவையே வந்திருக்காது. வசதியான இந்தி உணர்வாளக டெல்கி போய் வந்திருக்கலாம்.

 

சிதம்பரம் 2009 தேர்தலில் தான் எதுவோ செய்தாக 2014ன் தேர்தல் வரும் போது பிரஸ்தாபிக்கிறார். அருமையான தமிழ் உணர்வுதான். இது வரையும் நெடுமாறனும், வைகோவும் தெருவில் இறங்கி காங்கிரசை தமிழ் நாட்டிலிருந்து வேரோடு பிடிங்கி எடுத்த போது, தமிழ் உணர்வு வந்து தன்னை தான் காப்பற்ற வேண்டும் என்று தானும் தெருவில் இறங்கி  ஏடிக்கு போட்டியாக செயல் ப்ட மறந்து இருந்துவிட்ட் அப்பாவியாக இருக்கிறார். காவிரி மாதிரி இந்த வ்கையிலில் சிதம்பரத்தில் இருந்து பொங்கி பிரவாகித்து ஓடும் தமிழ் உணர்வை வைத்து இந்த முறை தமிழ் நாட்டு மக்கள் திரும்ப வாக்களிக்க போகிறார்கள். ஆனல் அதற்கு போன தேர்தல் நேரத்தில் தான் செய்தாக இந்த தேர்தல் நேரம் கூறி மக்களை திருப்ப முடியுமா? நம்புவார்களா? அதன் பின்னர் சிதம்பரம் டெல்கி போய் இந்தியில் பேசாமல் தமிழ் நாடில் இருந்து தனது உணர்வு மொழியான தமிழை பேசட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ நெடுமாறன் போன்றவர்களை பசி தாக்கவே இல்லையே

சிதம்பரம் , புலிகள் ஈழத்தைக் கைவிட வேண்டும் என்னும் இந்திய ஆட்சியாளர்களின் கோரிக்கையை முன் வைத்தார்.புலிகள் என்றுமே அதற்க்கு உடன்படப் போவதில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இதில் சிதம்பரம் ஒரு தரகரே தவிர, அவருக்கு எந்த வகையிலும் தமிழரின் நலன் முக்கியமாக இருக்கவில்லை.

 

வரும் தேர்தலில் தமிழக மக்கள் சிதம்பரத்துக்கும் மத்திய ஆளும் கும்பலுக்கும் தகுந்த பாடத்தை வழங்குவார்கள்.

 

உண்மையிலையே இந்தியாவோ அமெரிக்காவோ புலிகளைப் பாதுகாக்க நினைத்திருந்தால், ஒரு யுத்தக் கப்பலை முன் நிபந்தனைகள் எதுவும் இன்றி அனுப்பி இருக்க முடியும்.

 

புலிகளை அழிப்பது என்பதே திட்டமாக இருக்கும் போது அவர்கள் ஏன் புலிகளைக் காப்பாற்றி இருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே பசி இடையில் நின்றார் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள்

ஆகவே பசி இடையில் நின்றார் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள்

 

இந்திய மத்திய அரசு நடத்திய போர் என்பதை உணர்த்ததால் தான்  சென்னை சாஸ்திரிபவனுக்கு முன்னால்  முத்துக்குமாரான் தன்னை தானே மூட்டி கொண்டதனால் தமிழகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க  சிதம்பரம் முயண்றார்...   தேர்தல் காலம் என்பதால் காங்கிரசுக்கு அப்படி ஒரு தேவை இருந்தது... 

 

கலைஞர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது  உண்ணாவிரத பந்தலுக்கு வந்து போர் நிண்று விட்டது எண்று உரையாற்றி கருணாநிதி அவர்களின் உண்ணாவிரத்தத்தை முடித்து வைத்தார்...  

 

மறுநாளே கருணாநிதி  மழை நிண்றும் தூறல் விடவில்லை எண்று புலம்பும் அளவில் இருந்ததை நீங்கள் கேட்டுமா இப்படி ஒரு  நிலைப்பாடு...?? 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை தலை அண்ணா இடையில் நிறைய விடையங்கள் நடந்தது......ஆனால் நிச்சியம் பசி முயற்சி செய்தார் என்பதனை மட்டும் என்னால் கூற முடியும்.....நாரையணன் மெனங்கள் என்று அதை குழப்பி அடித்திருக்கலாம்

இப்படித்தான் பரக்க பரக்க பரபரப்பாய் பரபரப்பு பேப்பரில எழுதிப் போட்டு ரிசி என்டவர் 2009 மே க்கு பிறகு இந்தியாவில நிண்டவர்.

Edited by Donkey

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.