Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம் – ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பகிரங்க கடிதம் – ஜெயபாலன்

*‘போர்க்குற்ற விசாரணை நடத்தாவிட்டால் பொறுமை இழக்க நேரிடும்’’ என இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

*இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் 
காட்டப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதுதான் நம்முடைய கோரிக்கை. தொடர்ந்து நாம் அந்த
கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.- நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

 

தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் பாலியல் வன்முறைகள் இனக்கொலைகள் தொடர்பாக உலகின் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. விசாரணைகளுக்குக்கூட இலங்கை அரசு இன்னும் தயாராக இல்லை. தமிழ் மாணவ மாணவிகள் போரின் மனவடுக்களில் இருந்து இலங்கை இராணுவத்தின் கொலை பாலியல் வல்லுறவுப் பயத்தில் இருந்து இன்னமும் மீழவில்லை. இந்த நிலையில்  இலங்கைப் பல்கலைக் களகங்களுக்குத் தெரிவாகும் தமிழ் மாணவ மாணவிகள் கட்டயமாக தமிழர் விரோத இனக்கொலை பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கை இராணுவ முகாம்களில்  தலைமைப் பயிற்ச்சி பெற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். தமிழ் மாணவர்களைப் போகவேண்டாம் என தடுத்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர் உலகத் தமிழர் மற்ரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் ஆதரவுடன் உலகளாவிய போராட்டத்தை தமிழர் தலைமை முன்னெடுத்திருக்கவேண்டும்.

 

2011ல் ஆரம்பமான இந்த கொடுகொன்மைக்கு எதிராக தமிழர் தலைமைகள் பெரும்பாலும் கண்டுகொள்ளவில்லை என்பது அதிற்ச்சி தருகிறது.

சிங்கள மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சிக்கு அளிப்பதையே மனித உரிமை மீறலென மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். இலங்கை இராணுவத்தின் தமிழ் இனக்கொலை பாலியல் வன்முறைகளால் மனவடுவுக்குள்ளாகிஆவதிப்படும் தமிழ் மாணவ மாணவிகளை 3 வாரங்களுக்கு போர்குற்றவாளிகள் நிறைந்த இலங்கை இராணுவ முகாம்களுக்கு அனுப்பு அல்லது பல்கலைக் களக அனுமதி இல்லையென மிரட்டுதல் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்மீது தொடுக்கப்படும் உளவியல் யுத்தமாகும். போர்க்குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தின் தயவில் தமிழ் மாணவ மாணவிகளின் பல்கலைக் களக கல்வியை கட்டாயமாக இராணுவமயப்படுத்தும் குற்றச்செயலை சர்வதேச சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

இதுதொடர்பாக தமிழர் கூட்டமைப்பு ஒத்துழையாமை போராட்ட்த்தை மேற்கொள்ளாதமையும் போதிய அளவுக்கு சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லாதமையும் அதிற்ச்சி தருகிறது.

 

முதல் தொகுதி (Batch) பயிற்சிக்கு போகாத மாணவ மாணவிகள் இரண்டாம் தொகுதி பயிற்ச்சிக்கு கட்டாயப் படுத்தி அழைக்கப்பட்டுள்ளார்கள். 2011ல் இருந்து தொடரும் இந்த உளவியல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நாமெல்லோரும் சேர்ந்து போராடவேண்டியது அவசியம்.  

என் களஆய்வின்போது மாணவ மாணவிகளின் கருத்தையும் அவர்களது அச்சத்தையும் நேரில் அறிந்தபின் கடந்த நவம்பர் மாதம் 18ம் திகதி மாகாணசபை அமைச்சர் ஐங்கரநேசனை அவரது வீட்டில் சந்தித்து இந்த விடயத்தை  முதலமைச்சரின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டுவரும்படி கோரினேன். தொலைபேசியிலும் தொடர்ந்து வலியுறுத்தினேன். இதுதொடர்பான எனது பத்திரிகை அறிக்கை வெளியிடப்படுமுன்னம்  நான் கைது செய்யப்பட்டுவிட்டேன்.

 

வடமாகான முதலமைச்சரும் சம்பந்தரும் தமிழ்பேசும் மாணவ மாணவிகளை போர்க்குற்ற இராணுவ முகாம் பயிற்ச்சிக்கு போகவேண்டாம் என தடுக்கவேண்டும். தமிழ் மாணவ மாணவிகளின் மனவடுவை அதிகரிக்கும் மேற்படி பயிற்ச்சிக்கு எதிராக சர்வதேச சமூகத்தைத் திரட்டிப் போராட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுவும் எனது கோரிக்கையாக இருந்த்து.

 

இரண்டாவது தொகுதி அழைக்கப்பட்டுள்ள நிலையில் முதல் அமைச்சர் விக்னேஸ்வரனும் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தரும் மாணவ மாணவிகள்  தமிழர்மீதான போர்க்குற்ற பாலியல் வன்முறைகளின் தலைமைப்பீடமாக செயல்ப்பட்ட அனுராதபுரம் முகாமுக்கு செல்வதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என கோருகிறேன்.

 

இத்தகைய ஒரு போராட்ட்த்தில் சர்வதேச அழுத்த்தை ஏற்படுத்தி வெற்றிபெற புலம்பெயர்ந்த உறவுகள் பெரும்பங்காற்றமுடியும்.

முதலமைச்சரும் தலைவர் சம்பந்தரும் இனியாவது கண்விழிப்பார்களா.

 

Compulsory leadership training for undergraduates in Sri Lanka is a mandatory program introduced in 2011 by the Sri Lankan Government for all students select for undergraduate courses in state universities to undergo residential three week leadership training and positive thinking development at training camps under the Defence Ministry which as lead to much controversy.The Sri Lankan Higher Education Ministry seek the university academics' and Vice Chancellors' views on the on-going leadership training program and decided to reduce it from three weeks to two week.

http://en.wikipedia.org/wiki/Compulsory_leadership_training_for_undergraduates

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நீங்கள் எழுதினதை சிலர் விரும்ப மாட்டார்கள்...புலம்பெயர் மக்களுக்கு என்ன தகுதியிருக்கு களத்தில் இருப்பவர்களுக்காக குரல் கொடுக்க என கேட்ககூடும்

ஏதோ செய்ய முயலுகிறீர்கள் என்பது புரிகிறது கவிஞரே...!!  

 

வினை ஆற்றுபவர்கள் மீது  விமர்சனம் வைப்பதை  செய்வது சரி அல்ல ...    ஆகவே உங்களிடம் ஒரு தாள்மையான வேண்டுகோள்... 

 

இலங்கை முஸ்லீம்கள் , தமிழர்கள் பிரச்சினைகளை பற்றி எல்லாம் புரிந்து கொண்ட நீங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் அர்ப்பணிப்புகளையும் புரிந்து கொள்ள முன்வர வேண்டும்... 

 

நீங்கள் சொல்லும் போர்க்குற்றம் எனும் ஆயுதம் கூட புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் எனும் அத்திவாரத்தின் மீது கட்டி எழுப்ப பட்டு உள்ளது...  அந்த அத்திவாரத்தை தகர்பதின் மூலமே தங்களின் பிரசினையை தங்களுக்கு சாதகமாக திருப்ப முடியும் எண்று  செயல் ஆற்றுகிறது இலங்கை அரசு...    

 

அந்த இலங்கை வளியிலேயே பலர் புலம்பெயர் சமூகத்தை தாக்கி கொண்டே தங்களால் ஏதும் செய்ய முடியும் எண்று நினைப்பதை கவனிக்க முடிகிறது..   அதில் நீங்களும் ஒருவராக கூடாது எனும் கவலையில் இதை சொல்ல வேண்டி இருக்கிறது... 

 

புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு உங்களை வேண்டவில்லை...  இருக்கும் இடை வெளிகளுக்கு இணைப்பாக உங்களால் பணியாற்ற முடியும்....   உங்களின் வயதும் அனுபவமும் அதற்கு துணையாக இருக்கும்... 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இது பகிரங்க வெள்ளையடிப்பு கடிதமாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பம்.. இந்தக் கடிதத்திற்கு விக்கினேஸ்வரன்.. மற்றும் த தே கூ பதில் அளிக்குதோ என்று. பதில் அளிச்சா ஐயாக்கு கைதின் பின் செல்வாக்கு அதிகரிச்சிருக்கு என்று அர்த்தம். இல்லைன்னா...????! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்

கொஞ்ச   காலத்துக்கு

அமைதியாக  இருப்பது நல்லது

இன்றையநிலையில் (கைது விடுதலைக்குப்பின்)

என்ன  எழுதினாலும்................??? :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் மிரட்டல்களுக்கு அஞ்சாத உங்கள் துணிவைப்பாரட்டுகின்றேன்..  :D  :icon_mrgreen:

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவற்றுக்குப் பதிலளித்துக் கொண்டிருப்பது தான் தொடர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். பேசாமல் விட்டால் எல்லாம் அடங்கி விடும்.

மாணவர் பயிற்சிக்கு போவதை விட இதை தடுப்பதுதான் முக்கியம் என்பது எனது அபிப்பிராயம்.  பதிவு  செய்யப்பட்டு மட்டும், மன்னரில்  46 பெண்களின் வாழ்க்கை 10 மாத்தத்தில் சீரழிக்கப்படுவிட்டது. வடக்குக்கிழக்கில் மிகுதி பற்றி தெரியாது. இவற்றை எதிர்ப்பதில் ஏன் பலர் அடிக்கடி அஞ்ஞாதவாசகாலம் போகிறார்கள்? பின்னர் ஏன் கூட்டமைப்பை கண்டால் அதிர்ச்சி அடைகிறார்கள்?. 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம்வரை பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 46 பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று வியாழக்கிழமை  பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து பிரசாரமும் எதிர்ப்புப் பேரணியும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

'2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம்வரையான 10 மாதங்களில் மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 46 பதிவாகியுள்ளன.

இதன் அடிப்படையில் 6 பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களும் 16 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் 24 சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/92086--46-.html

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/92086--46-.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள்மீதான முள்ளிவாய்க்கால் இனக்கொலையையும் பாலியல் வன்முறைகளையும் ஒருங்கிணைத்து ஒப்பேற்றிய அனுராதபுரம் படைத் தளத்துக்கு 3 வாரப் பயிற்ச்சிக்காக தமிழ் மாணவ மாணவிகள்  செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை சாட்தாரணமாக எடுக்க முடியுமா? இலங்கைக்கு கலைஞர்கள் செல்வதையே எதிர்ப்பவர்கள் நமது இளம் மானவ மாணவிகளை 3 வார பயிற்ச்சிக்காக இராணுவ முகாம்களுக்கு செல்லும் நிர்பந்தத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாமா? ஏன் இந்த இரட்டை நிலைபாடு?

Edited by poet

உண்மையில் இவற்றுக்குப் பதிலளித்துக் கொண்டிருப்பது தான் தொடர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். பேசாமல் விட்டால் எல்லாம் அடங்கி விடும்.

உண்மை உண்மை உண்மை 
 
சாதாரண அடிப்படை அரசியல் தெரியாத எனக்கே விடயத்தை புரிந்து கொள்ள கூடியதாய் இருக்கும் பொது இந்த களத்தில் நான் பார்த்த ,மதிக்கும் அரசியல் தெரிந்தவர்கள் என நினைக்கும் உறவுகளுக்கு ஏன் இது புரியவில்லை என்பதே என் கவலை ...........
 
எஸ்கேப் ................ :D  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.