Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தப்பிப் பிழைக்குமா ஈபிடிபி?

Featured Replies

daglas.jpg

தப்பிப் பிழைக்குமா ஈபிடிபி?

  • அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன் பிடிபட்ட சம்பவமாகட்டும், அதற்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவமாகட்டும், ஈபிடிபியின் ஆயுதக்களைவின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.என்கின்றார் இன்போ தமிழின் கொழும்புச் செய்தி  ஆய்வாளரான கே.சஞ்சயன் அவர்கள்.

ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதான ஈபிடிபியின் கூற்று உண்மையானால், இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? அவ்வாறாயின், இன்னமும் ஈபிடிபி வசம் ஆயுதங்கள் உள்ளதா என்ற கேள்விகளை இந்தச் சம்பவங்கள் எழுப்பியுள்ளன. பொலிஸ் விசாரணைகள் இதை துருவுமா - உண்மைகள் கண்டறியப்படுமா என்ற உத்தரவாதங்கள் ஏதுமில்லாத நிலையில், சாதாரண பொதுமக்கள் மத்தியில், ஈபிடிபி குறித்த அச்சமும் சந்தேகங்களும் நிலவப் போவது இயல்பு. எனக் குறிப்பிடும் கே.சஞ்சயன் ,  

தனது விரிவான ஆய்வில்,

  • நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியன் படுகொலை, வடக்கில் ஈபிடிபிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பின்னர், இன்னொரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.  வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் அரசதரப்பு தீவிரம் காட்டி வந்த சூழலில், யாழ். குடாநாட்டின் ஒதுக்குப் புறமாக உள்ள புங்குடுதீவில் உள்ள தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் நெடுந்தீவுப் பிரதேசசபைத் தலைவர். 

    ஒரு துப்பாக்கிச் சூட்டு மரணத்தை, ஒரு தற்கொலை மரணமாக, அதுவும், நஞ்சருந்தி மரணமானதாகப் பிரகடனப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. இதுவே, நான்கரை ஆண்டுகளுக்கு முன்னரென்றால், வேறெவர் மீதும் மிகச் சுலபமாக பழியைப் போட்டோ, அல்லது எத்தகைய முறையான விசாரணைகளும் இல்லாமலுமோ, இந்த விவகாரம் மூடிமறைக்கப்பட்டிருக்கலாம். வடக்கில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஏராளமான படுகொலைகள் அவ்வாறு தான் முடிக்கப்பட்டன. ஆனால், போர் முடிந்து நான்கரை ஆண்டுகள் கழித்து, வடக்கில் முற்றிலும் ஜனநாயக சூழல் திரும்பி விட்டதாக அரசாங்கத்தினால் திரும்பத் திரும்ப பிரகடனம் செய்யப்படுகின்ற சூழலில், நிகழ்ந்து விட்ட ஒரு படுகொலையை எந்தவகையிலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது போனது. இதன் விளைவாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு, தெரிவான வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். இவரது கைது, ஈபிடிபியைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், ஈபிடிபியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக இருந்தவர் இவர். ஈபிடிபியில் உள்ள விரல் விட்டு எண்ணி விடத்தக்க, முக்கியமான மூத்த உறுப்பினர்களில் கமலேந்திரனும் ஒருவர். 

    வடக்கு மாகாணசபைத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதன்மை வேட்பாளராக நிறுத்திய, சின்னத்துரை தவராசாவை விடவும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தவர் இவர். கமலேந்திரன் கைதானதை அடுத்து, தாம் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, நெடுந்தீவில் உள்ள அலுவலகத்தை மூடிய ஈபிடிபி, அங்கிருந்து முற்றாக வெளியேறியதுடன், தீவகத்தின் பல அலுவலகங்களை மூடப்போவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், இது ஒரு திடீர் நடவடிக்கையோ அல்லது கமலேந்திரன் கைதானதை அடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையோ அல்ல என்று ஈபிடிபியின் முக்கியஸ்தரான தவராசா தெரிவித்துள்ளார். அதாவது கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். ஈபிடிபி மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது என்பது இப்போதல்ல, வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோதே தெளிவாகிவிட்டது. 

    நடந்து முடிந்த மூன்று மாகாணசபைத் தேர்தல் முடிவுகள், ஐதேகவுக்கு பாதகமாக அமைந்த போது, கட்சி மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள், கட்சிக்குள் எழுந்தன. அது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு பெரும் சவாலாக எழுந்த போதிலும், தற்போது சில மறுசீரமைப்புகளின் மூலம் தற்காலிகமாக அந்தப் பிரச்சினை தணிக்கப்பட்டுள்ளது. அதுபோல, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஈபிடிபி ஒரு வரலாற்று தோல்வியை சந்தித்திருந்தது. பல பாடங்களை கற்கவேண்டிய நிலையில் ஈபிடிபி இருப்பதை அந்த தோல்வி எடுத்துக் காட்டியிருந்தது. ஈபிடிபி பற்றிய பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் அது ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றிருந்தது என்பது மறுக்க முடியாது உண்மை. 

    1994இல், தீவகத்தில் மட்டும் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில், போட்டிக்கு யாரும் இல்லாத சூழலில், ஈபிடிபி 10 ஆசனங்களுடன் நாடாளுமன்ற அரசியலுக்குள் நுழைந்தது. அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலங்களில் கூட, ஈபிடிபி ஒரு சவாலாக சக்தியாகவே இருந்து வந்தது. ஆனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலில், விடுதலைப் புலிகள் இல்லாத சூழலிலும், அவர்களால் வெற்றி பெறமுடியாது போனது. ஈபிடிபியின் கோட்டையாக இரண்டு தசாப்தங்களாக கருதப்பட்ட ஊர்காவற்றுறைத் தொகுதியைக் கூட தக்க வைத்துக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. 

    போர்க்கால அரசியல் பரப்பில் இலகுவாகப் பயணிக்க முடிந்த ஈபிடிபியால், ஜனநாயக அரசியல் பரப்பில், பயணிக்கச் சிரமப்படுகிறது என்பதை அது உணர வைத்தது. இதற்கு ஆயுதக் குழுவாகச் செயற்பட்ட மனோநிலையில், இருந்து முற்றாக விடுபட முடியாமையும் ஒரு காரணம். ஏனென்றால், விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர், தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதான ஈபிடிபியின் வாதம் வலுவிழந்து போனது. தமது ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதாகவும், முழுமையான ஜனநாயக அரசியல் வழிமுறையின் படி செயற்படுவதாகவும், பலமுறை ஈபிடிபி தலைமை தெளிவுபடுத்தி விட்டது. 

    அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன் பிடிபட்ட சம்பவமாகட்டும், அதற்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவமாகட்டும், ஈபிடிபியின் ஆயுதக்களைவின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதான ஈபிடிபியின் கூற்று உண்மையானால், இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? அவ்வாறாயின், இன்னமும் ஈபிடிபி வசம் ஆயுதங்கள் உள்ளதா என்ற கேள்விகளை இந்தச் சம்பவங்கள் எழுப்பியுள்ளன. பொலிஸ் விசாரணைகள் இதை துருவுமா - உண்மைகள் கண்டறியப்படுமா என்ற உத்தரவாதங்கள் ஏதுமில்லாத நிலையில், சாதாரண பொதுமக்கள் மத்தியில், ஈபிடிபி குறித்த அச்சமும் சந்தேகங்களும் நிலவப் போவது இயல்பு. 

    வடக்கின் ஜனநாயக அரசியல் பரப்பில் தொடர்ந்தும் அரசியல் நடத்த ஈபிடிபி விரும்பினால், தம்மை அவர்கள் மறுசீரமைப்புச் செய்ய வேண்டியது அவசியமானதே. அத்தகைய மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் ஆலோசகர் தவராசா கூறியுள்ள போதிலும், அது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளின் காலத்தில், ஈபிடிபி உச்சகட்ட ஜனநாயகம் பற்றி வானொலி மற்றும் பத்திரிகை மூலம் போதனைகள் செய்து கொண்டிருந்த போதிலும், தம்மையும் அந்த ஜனநாயக வெளிக்குள் கொண்டு வர அவர்கள் முயற்சித்திருக்கவில்லை. 

    அதன் விளைவும் இன்றைய நிலைக்கு மற்றொரு முக்கிய காரணம். 

    வெறும் சலுகைகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான காட்டமான விமர்சனங்களும், தேர்தல் ஒன்றில், தம்மைக் காப்பாற்றி விடும் என்று ஈபிடிபி கருதிக் கொண்டிருந்தது. அதையும் மீறி, மக்களை ஈர்ப்பதற்கு கட்சி ஒழுங்கும், ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியம். ஆயுதக் குழுவாக இருந்து ஓர் அரசியல் கட்சியாக மாறுவது என்பது கடினமானது. எல்லா அமைப்புகளாலும் அத்தகைய மாற்றங்களை இலகுவாகவும், வெற்றிகரமாகவும் செய்து விடமுடிவதில்லை. மாற்று அரசியல் சிந்தனைகளையும், மாற்றுக் கருத்துகளையும் சகித்துக் கொள்ளும் பக்குவம் ஒரு போதும், ஆயுதக் குழுவொன்றுக்கு இருந்ததில்லை. ஈபிடிபி, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எல்லா ஆயுத அமைப்புகளுக்கும் இது பொருந்தும். இத்தகைய ஆயுதக் குழுவாக இருந்து ஜனநாயக அரசியல் வெளிக்குள் நுழையும் தரப்புகளால், ஆயுதக்குழு மனோபாவத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட முடிவதில்லை. ஈபிடிபி யாழ்ப்பாணத்தில் ஓரளவுக்கு தம்மை நிலை நிறுத்திக் கொண்ட போதிலும், எல்லா மக்களாலும் அதனை ஓர் அரசியல் அமைப்பாக ஏற்கமுடியாது போனதற்கு அதுவும் ஒரு காரணம். 

    எவ்வாறாயினும், அண்மைய சம்பவங்களின் தொடர்ச்சியாக ஈபிடிபி தம்மை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளதை கண்கெட்ட பிறகு செய்யும் சூரிய நமஸ்காரமாக சொல்ல முடியாது. ஏனென்றால், ஒரு நீண்ட அரசியல் வெளி வடக்கில் உள்ளது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அரசியல் சக்தி என்று வேறு எந்தக் கட்சியும் கிடையாது. கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க்கடை தேவைப்படும் போது, ஒரு ஜனநாயக அரசியல் பரப்பில் எதிர்க்கட்சி என்பது எந்தளவுக்கு முக்கியமானது என்று கூறவேண்டியதில்லை. அத்தகையதொரு பிரகாசமான வாய்ப்பு வடக்கு அரசியல் பரப்பில் இருக்கின்ற போதிலும், அதைத் தக்கவைத்துக் கொள்வதும் தவற விடுவதும் ஈபிடிபியின் கையில் தான் உள்ளது.

நன்றி :தாய்நாடு .

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்துக்கு பாதுகாப்புக்கு முன் வரும் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் இவர்கள் தான்.யார்  குறுக்கே போனாலும் காலால் உதைந்து தள்ளுபவர்கள் இவர்கள் தான். ஈ.பி.டி.பியிடம் ஆயுதம் இல்லை என்பது "கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா" என்பது போலுள்ளது.
மக்கள் நிராகரித்து விட்டால் மூட்டையை கட்ட வேண்டியது தானே. ஏனிந்த நடிப்பு அரசியல்??
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனுக்கு கிடைக்க இருந்த‌ நல்ல ஒரு சந்தர்ப்பத்தை...
சிங்களவனுக்குக் காட்டிக் கொடுத்த,  கட்சிகள் எல்லாம்... அழிந்து போக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈபீடீபி இனிமேல் வெளியேறுவது தான் நல்லது.

தலைவர் கீறின கோடுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு.
இப்ப நடப்பதுதான் புலிகளின் அரசியல்.

காட்சிகள் மாறலாம், கதாபாத்திரங்கள் மாறலாம் ஆனால் குறிக்கோள் மாறாது

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுடன் சேர்ந்து தமிழர்களது தாயக்கத்துக்கான போராட்டத்தை அழித்து அவனுடன் சேர்ந்து வெற்றி கொண்டாட்டங்களில் கலந்து பொது மக்களின் இழப்புக்களைக்கூட கருத்தில் கொள்ளாத ஈவு இரக்கம் இல்லாத ஈபிடிபி அழிந்துபோகவேனும்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஈபீடீபி இனிமேல் வெளியேறுவது தான் நல்லது.

தலைவர் கீறின கோடுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இப்ப நடப்பதுதான் புலிகளின் அரசியல்.

காட்சிகள் மாறலாம், கதாபாத்திரங்கள் மாறலாம் ஆனால் குறிக்கோள் மாறாது

 

அருமையான கருத்து, அகஸ்தியன். :)

ஈபீடீபி இனிமேல் வெளியேறுவது தான் நல்லது.

தலைவர் கீறின கோடுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இப்ப நடப்பதுதான் புலிகளின் அரசியல்.

காட்சிகள் மாறலாம், கதாபாத்திரங்கள் மாறலாம் ஆனால் குறிக்கோள் மாறாது

பொருள் ...........

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.

 

தமிழ் லீடர் போட்ட மாவையின் பேச்சை எத்தனை பேர் கவனமாக கேட்டீர்களோ தெரியாது.

 

பிள்ளையானுக்கும், தேவானந்தாவுக்கும் அரிய சந்தர்ப்பம் TNA யில் இணைய கேட்டு இணைவதாகும். இணைய முடிந்தால் இருவரும் இலங்கையில் சரித்திரம் படைப்பார்கள். 

 

TNA யையும் மற்றவர்களையும் வேறு வேறு கருத்துக்களை தமக்கு சொல்ல வேண்டாம் என்று மேற்கு நாடுகள் கேட்டிருக்கின்றன. இதில் தம்முள் அடிபடும் தமிழ் கட்சிகள் ஒத்துப்போகாவிட்டால்  எல்லாம் கெடசந்தர்ப்பம் இருக்கு. இந்த நிலையில் இவர்களும் தமிழர்களுடன் இணைந்த்தால் மேற்கு நாடுகள் தமிழரின் தேவையை வடிவாக தெரிந்து கொள்ளும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஈபீடீபி இனிமேல் வெளியேறுவது தான் நல்லது.

தலைவர் கீறின கோடுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இப்ப நடப்பதுதான் புலிகளின் அரசியல்.

காட்சிகள் மாறலாம், கதாபாத்திரங்கள் மாறலாம் ஆனால் குறிக்கோள் மாறாது

 

அதுதுதுதுதுதுதுதுதுதுதுது

(பச்சை  முடிந்ததால்)

  • கருத்துக்கள உறவுகள்

பொருள் ...........

இந்த எழுத்தாளர் ஆயுதம் ஏந்தியவர்கள் அரசியல் செய்வது கடினம் என்று எழுதியுள்ளார். அது உண்மையாக இருக்கலாம் , ஆனால் புலிகள் இதற்கு விதி விலக்கு. எல்லோருக்கும் தெரியும் புலிகளின் அரசியல் தெரிவுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உதயம் . தலைவரின் கணிப்பு பாராளமன்றத்தில் தமிழரின் பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பது. இதை எப்படியோ மோப்பம் பிடித்த சிங்களவர்கள் சிங்கள ஹெல உருமுயவை தோற்று வித்தார்கள். ஆனால் கூட்டமைப்பு எப்போதும் சிங்களவர்களின் பார்வையிலும், சில அந்நிய சக்திகளின் பார்வையிலும் புலிகளாகவே அவர்களுக்கு தெரிகிறது. ஏனெனில் அதன் கரு தலைவரிடம் இருந்தே தோன்றியது. அதனால்தான் எழுதினேன் தலைவர் கீறின கோடுதான் கூட்டமைப்பு. அதன் பாதையில் பயணிப்பது இப்ப உள்ள தலைவர்களின் கடமை. தமிழ் தேசியத்திக்கு ஆதரவாக உள்ளவர்களை எல்லாம் உள் வாங்கி எமது குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டும். எனது கருத்து ஈபீடீபீ தமிழ் தேசியதிக்கு ஆதரவான கட்சி அல்ல.

தமிழ் சூரியன் என்னை இவ்வளவு எழுத வைத்ததற்கு நன்றி. என் அறிவுக்கு எட்டிய வரை பதில் தந்துள்ளேன். கடந்த 4 வருடங்களில் யாழ் களத்தில் எனது பதிவு வெறும் 206 . நல்லாக வாசிப்பேன் அதிகமாக எழத தெரியாது. முயற்சிகின்றேன். தினமும் யாழ் களத்திக்கு எனது வருகை இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்   Ahasthiyan

ஈபீடீபி இனிமேல் வெளியேறுவது தான் நல்லது.

தலைவர் கீறின கோடுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

இப்ப நடப்பதுதான் புலிகளின் அரசியல்.

காட்சிகள் மாறலாம், கதாபாத்திரங்கள் மாறலாம் ஆனால் குறிக்கோள் மாறாது

அருமையான கருத்து :icon_idea: 

12ebec131aa5a072f3aea16acc5f37e1850ceb8f

ஈபீடீபி கமல் இராணுவ சிருடையில் 

தமிழ் லீடர் போட்ட மாவையின் பேச்சை எத்தனை பேர் கவனமாக கேட்டீர்களோ தெரியாது.

 

பிள்ளையானுக்கும், தேவானந்தாவுக்கும் அரிய சந்தர்ப்பம் TNA யில் இணைய கேட்டு இணைவதாகும். இணைய முடிந்தால் இருவரும் இலங்கையில் சரித்திரம் படைப்பார்கள். 

 

TNA யையும் மற்றவர்களையும் வேறு வேறு கருத்துக்களை தமக்கு சொல்ல வேண்டாம் என்று மேற்கு நாடுகள் கேட்டிருக்கின்றன. இதில் தம்முள் அடிபடும் தமிழ் கட்சிகள் ஒத்துப்போகாவிட்டால்  எல்லாம் கெடசந்தர்ப்பம் இருக்கு. இந்த நிலையில் இவர்களும் தமிழர்களுடன் இணைந்த்தால் மேற்கு நாடுகள் தமிழரின் தேவையை வடிவாக தெரிந்து கொள்ளும்.

இது நல்ல விடயமாக தெரிகிறது....எல்லா தரப்பு மக்களும் ஆதரிப்பதற்கும் வழி இருக்கிறது...

பாலகுமாரும் உயிரோடு இருந்தால் ...இணைந்தால் நல்ல இருக்கும்

கருணா KP யும் இணைந்தால் ???

Edited by naanthaan

கருணாவின் கதை தெரியும். K.P.யின் கதை தெரியாதது. இவற்றை பற்றிய உண்மைகளை  விரித்து எழுத ஆதாரம் இல்லை. இருவரும் அரசால் விடுவிக்கபட்டால், அரசியலில் இருப்பார்களா தெரியாது. 

காரணம் காட்டமல் திரிகள் தூக்கப்படுவத்தால் ஒழுங்கான விவாதம் எப்படி வைக்கலாம் என்பது கண்டறிப்படவேண்டும். நாங்கள் புத்தகம் எழுதாததால் யாழ் வெட்டுவதற்கு கண்டுபிடிக்கும் நொண்டிச்சாட்டான "ஆதாரம்" கண்டு பிடிக்கும் வரையும் விரிவான விவாதங்கள் தலை எடுக்காது. அரிசுனின் மாலை தீவு அடிக்க போன கதையை மட்டும்தான் யாழ் நிறைய ஆதாரம் உள்ளதாக வெட்டாமல் அரசியல் விவாதமாக  விட்டு வைக்க்கபட்டிருக்கும் செய்தி.  

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் கதை தெரியும். K.P.யின் கதை தெரியாதது. இவற்றை பற்றிய உண்மைகளை  விரித்து எழுத ஆதாரம் இல்லை. இருவரும் அரசால் விடுவிக்கபட்டால், அரசியலில் இருப்பார்களா தெரியாது. 

காரணம் காட்டமல் திரிகள் தூக்கப்படுவத்தால் ஒழுங்கான விவாதம் எப்படி வைக்கலாம் என்பது கண்டறிப்படவேண்டும். நாங்கள் புத்தகம் எழுதாததால் யாழ் வெட்டுவதற்கு கண்டுபிடிக்கும் நொண்டிச்சாட்டான "ஆதாரம்" கண்டு பிடிக்கும் வரையும் விரிவான விவாதங்கள் தலை எடுக்காது. அரிசுனின் மாலை தீவு அடிக்க போன கதையை மட்டும்தான் யாழ் நிறைய ஆதாரம் உள்ளதாக வெட்டாமல் அரசியல் விவாதமாக  விட்டு வைக்க்கபட்டிருக்கும் செய்தி.

ராஜீவ் கொலையில் கேபிக்கு பல விடயங்கள் தெரியும் என்றும், அதனால் கேபியை வைத்து இந்தியாவை மிரட்டுகிறது இலங்கை என்றும் சொல்லுகிறார்கள் முன்னாள் சிபிஐகாரர்கள்.

தமிழ் சூரியன் என்னை இவ்வளவு எழுத வைத்ததற்கு நன்றி. என் அறிவுக்கு எட்டிய வரை பதில் தந்துள்ளேன். கடந்த 4 வருடங்களில் யாழ் களத்தில் எனது பதிவு வெறும் 206 . நல்லாக வாசிப்பேன் அதிகமாக எழத தெரியாது. முயற்சிகின்றேன். தினமும் யாழ் களத்திக்கு எனது வருகை இருக்கும் .

அன்பான அகஸ்தியன் உங்களிடம் ஆழமான நேர்மையான சிந்தனை இருக்கின்றது ...............உங்களால் ஆரோக்கியமான கருத்துக்களை வைக்க முடியும் .தொடர்ந்து எழுதுங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.