Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம.... ஜாக்கிரதையாய், இருக்கிறது நல்லது.
நெடுக்ஸ்சிற்க்கு... விசர் பிடிச்சுப் போட்டுது, என்று சந்தேகமாய்... இருக்கு. :lol:

  • Replies 62
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னமோ அறப்படிச்சவன் கூழ்ப்பானைக்கை விழுந்த கதை மாதிரி முடியப்போகுதோ தெரியேல்லை :lol:  :D

நல்லா இருக்கு, தொடருங்கோ. :)


அதே மனதோடு.. அவளோடு சேர்ந்து அவளுக்காக உடுப்புகளை தெரிவு செய்தேன். உங்க தெரிவுகள் எல்லாம்.. நல்லாத்தான் இருக்கு. என்ன.. அப்படியே  பில்லையும் கட்டிட்டீங்கன்னா.. நல்லா இருக்கும் என்றாள்.. சிரித்தபடி. சரி தாங்க நான் பில் கட்டிறேன் என்றேன். ஆனாலும் என்னிடத்தில் அந்தளவுக்கு வங்கி அட்டையில் பணம் இருக்கவில்லை. இருந்தாலும்.. அவள் அதனை உணர்ந்தவளாய்.. நீங்களே படிக்கிறதுக்கு கஸ்டப்படுறீங்க.. இதில எனக்கு பில் கட்டப் போறாராம்.. ஆளைப் பாரு. சும்மா பகிடிக்கு கேட்டேங்க என்றாள்.. எல்லாவற்றையும் புரிந்து கொண்டவளாய்.

 

இதுதான் பிழை. தனது தங்கைக்கும், தனக்கும் உடை வாங்குவதற்கு உங்களை பணம் கட்ட சொன்னதும் உடனே சம்மதிப்பது பிழை. இவ்வாறான சம்மதங்கள் தான் பின்னர் பெரும்பாலான பெண்கள் தாம் shopping செய்வதற்கு தனது காதலனின் பணத்தை தொடர்ந்து நாடுவதற்கு காரணமாக அமைகிறது. :rolleyes:

பின்னர் இடையில் பிரிவு ஏற்பட்டால் அவள் காசுக்காக தான் பழகினாள், தனது தேவைக்கு பயன்படுத்தி விட்டு கழட்டி விட்டிட்டாள் என அப்பெண் மேல் பழி போடுறது. :icon_idea:
 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் பிழை. தனது தங்கைக்கும், தனக்கும் உடை வாங்குவதற்கு உங்களை பணம் கட்ட சொன்னதும் உடனே சம்மதிப்பது பிழை.

எல்லாம் ஒரு முன்னேற்பாடுதானே.. :rolleyes: ஜொள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.. கண்டுக்காதீங்க.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முக்கியமான சொப்பிங் முடித்து நாங்கள் இருவரும்.. ஆளுக்கொரு பார்க்கை கையில் சுமந்து கொண்டு.. வெளியே வரும் போது.. வழியில் ஒரு அலங்காரப் பொருள் அங்காடி இருந்தது. அங்கு பல வர்ணங்களில் உருவான பல வகை..கண்ணாடியிலான அழகு சிலைகள் நிறைந்திருந்தன. அவளுக்கு மேர்க்கப் பிடிக்காது என்பதால்.. அவள் அழகு சிலைகள் மீது கண்ணோட்டம் விட்டாள். நானும்.. அவளை அங்கு நிறுத்தி அவற்றின் மீது ஒரு கண்ணோட்டத்தை செலுத்தினேன். அவளோ.. அவற்றில் ஒன்றை தெரிவு செய்து "இது அழகா இருக்குங்க.. வாங்கித் தாறீங்களா" என்றாள். அவள் என்னிடம் ஆசைப்பட்டு முதன்முதலில் வாங்கித் தரச் சொன்ன பொருள் அது தான். அதனால் அதனை எப்படியாவது வாங்கிக் கொடுத்திட வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள். ஆனால் கடைக்காரனிடம் விலை கேட்ட போது.. அவன் அங்காடிக்கும் சேர்த்து விலை சொல்வது போலச் சொல்ல.. அவளே "வேணாங்க.. அவன் ஆளுக்கும் சேர்த்து விலை சொல்லுறான் போலக் கிடக்கு" என்று தனது ஆசையை மாற்றிக் கொண்டாள்.
 
 
ஆனாலும் எனக்குள் அது.. ஒரு வடுவாக மாறிப் போனது. அவள் கேட்டு நான் வாங்கிக் கொடுக்கல்லையே என்ற சிந்தனையே எனக்குள் எழுந்திருந்தது. சொப்பிங் சென்ரரில் இருந்து.. இரு வேறு வழித்தடங்களில் எங்கள் பயணம் ஆரம்பமானது. அவள் தன் வீட்டிற்கும்.. நான் என் வீட்டிற்கும் பயணமானோம். அவளின் சொப்பிங்கை அவளின் வழித்தடத்தில் ரெயில் நிலையத்தில் வைத்துக் கையளித்து விட்டு நான் பேரூந்தில் பயணித்து வீடு வந்து சேர்ந்தேன். அவளும் வீடு போய் சேர்ந்ததை போனுக்கு ரெக்ஸ்டில் சொல்லி இருந்தாள்.
 
வீடு வந்து சேர்ந்த எனக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. யுனியில் இருந்து வந்திருந்த நீதிமன்ற நோட்டீஸ் தான் அது. தவணைக்குரிய யுனிக் கட்டணம் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை என்பதால்.. குறித்த 7 நாளைக்குள் கட்டணத்தைச் செலுத்தா விட்டால்.. நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பதோடு தண்டனைப் பணமும் சேர்த்துக் கட்ட வேண்டும் என்று வந்திருந்தது. பணம் கட்டுவதற்குரிய..திகதியை நான் மாறி யோசித்து வைச்சிருந்ததால்.. பணம் கட்ட தயாராகவும் இருக்கவில்லை. எனக்கோ நீதிமன்ற நோட்டீஸ் என்பது புதிய அனுபவம் என்பதால்.. ஒரே பதட்டம். கையிலோ அந்தளவு தொகை காசில்லை. உறவினர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்களும் என்ன சொல்கிறார்களோ தெரியாது. என்ன செய்வது ஏது செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்க.. அவள்.. இணையத் தூதில் இணைந்து.. என்னை அழைத்துக் கொண்டிருந்தாள். 
 
அங்கு "நன்றீங்க.. என் பார்க்கை சுமந்து வந்தததிற்கு" என்று அந்தச் சின்ன விசயத்திற்கும்... நன்றி சொல்லி இருந்தாள். நான் அவளுக்கு பதில் அளிக்க நாளிகைகள் எடுத்ததால்.. என்னமோ ஏதோ என்று பதறிப் போய்.. போன் செய்தாள். போனில் அவளுக்கு விபரம் சொன்னேன். கவலைப்படாதேங்க.. அப்ப நாளைக்கு யுனில சந்திப்பம் என்று விட்டு அவளாகவே போனை கட் செய்து கொண்டாள்.. நிலைமையைப் புரிந்து கொண்டவளாய். இணையத் தூதிலும்.. "Don't Worry" என்ற செய்தியோடு செல்லக் குட்டும் தந்திருந்தாள். ஆனால் அது எல்லாம் அன்றைய பணப் பிரச்சனையின் முன் பெரிசாகத் தெரியவே இல்லை. முதன்முறையாக அவளை மிஞ்சி ஒரு பிரச்சனை எனக்குள் முக்கியம் பெற்ற நாள் அது தான். 
 
மறுநாள்.. யுனியில் அவளை சந்தித்தேன். அவள் கணணி அறைக்கு கூட்டிக் கொண்டு போனாள். தன்னருகில் வந்து அமரச் சொன்னாள். அமர்ந்தேன். சில பழங்களை வேண்டி வந்திருந்தாள். அவற்றை சுத்தம் செய்து எனக்கும் தந்து தானும் சாப்பிட்டாள். சிலவற்றை வழமைக்கு மாறாக.. எனக்கு ஊட்டியும் விட்டாள். திடீர் என்று உங்க கையைக் காட்டுங்க என்றாள். என் கை விரலில் இருந்த மோதிரத்தை பார்த்தவள்.. அதனை கழற்றச் சொன்னாள். கழற்றிக் கொடுத்தேன். அதனை தான் அணிந்து கொண்டாள். என் மோதிரம் அணிந்திருந்த தன் கையை முன்னும் பின்னும் புரட்டி பார்த்திட்டு.. "உங்க மோதிரம்.. எனக்கும் நல்ல மச்சா" இருக்குது என்றாள். அதோடு நிற்கவில்லை.. என் மோதிர விரலை.. நீட்டச் சொன்னாள். தான் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி எனக்கு தானே அணிவித்தாள். "இப்ப எங்க கல்யாணம் முடிஞ்சு போச்சுது. ஓகே..." என்றாள் விளையாட்டோ.. சிரீயஸோ என்று கண்டுபிடிக்க முடியாதபடி.. முகத்தில் ஒரு புன்னகையோடு. 
 
"இப்ப கேளுங்க.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும். உங்களுக்கு பணப் பிரச்சனை என்றதும்.. என்னைக் கேட்கல்ல. ஏங்க.." என்றாள். உங்களுக்கு ஏன் வீண் சிரமம் என்று தான் கேட்கல்ல. உறவினர்களட்ட கேட்டிருக்கிறன். அவை தருவினம்.. பார்ப்பம் என்றேன் பதிலுக்கு. "அப்ப நான்.. உங்களுக்கு சொந்தமில்லையாங்க என்றாள்".. கண்கள் கலங்க. இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஐயோ அப்படி இல்லைங்க.. நீங்க பாவம் அது தான் கேட்கல்ல என்றேன். "இந்தப் பாவம் கீவம் கதை எல்லாம் வேண்டாம். நாளைக்கு செக் கொண்டு வாறன்.. எவ்வளவு வேணும்..என்று சொல்லுங்க. காசை உடனடியா யுனிக்கு கட்டுறீங்க" என்று காட்டமாகச் சொல்லி நின்றவள்.. "இப்ப எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுது நினைவில வைச்சுங்க. அதுக்காக அட்வான்ரேஜ் எடுத்துக்கப்படாது. படிப்பு படிப்பா இருக்கனும்" என்றிட்டு.. "சரிங்க நேரமாகுது.. அப்ப நாங்க போவமாங்க" என்றாள். நான் மறு பேச்சின்றி.. "ஆமாங்க போவம்" என்றேன். என்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு பேரூந்துத் தடம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
 
 
அன்று அவள் அப்படி நடந்து கொண்டதற்கு.. காரணம் புரியாமலே நான். இருந்தாலும்.. நான் அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்த.. அவள் சொப்பிங் சென்ரரில் அலங்காரப் பொருள் அங்காடியில் காட்டிய அதே வகை சிலை ஒன்றை எடுத்து.. அவளுக்குக் கொடுத்தேன். அவள் விழிகளில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க அதனை பவுத்திரமாக வாங்கி தன் கைப்பைக்குள் வைச்சுக் கொண்டாள். "என்ன இதனை வீட்டு எடுத்துக் கொண்டு போய்.. எங்க ஒளிச்சு வைக்கிறது என்றது தான் பிரச்சனை" என்றாள். "வீட்ட தங்கச்சியவளவை கண்டாளவ தொலைஞ்சன்" என்றாள்.. சிரித்தபடி. "வீட்டுக்குத் தெரியாமல் இருக்க.. பாத்ரூமில நின்று என் கூட போன் போட்டுக் கதைக்கிற உங்களுக்காங்க ஒளிச்சு வைக்க வழி சொல்லித் தரணும்" என்றேன் நான் பதிலுக்கு நக்கலாக. "ஐயா பாவம்.. நான் போன் பண்ணாட்டி.. ரெக்ஸ்ட் பண்ணாட்டி.. நித்திரை இல்லாமல்.. கிடப்பார் என்றிட்டு றிஸ்க் எடுத்து பண்ணினா.. அவருக்கு நக்கல்".. என்றாள் என்னை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய்... கொஞ்சம் கோபமாகவே. இருந்தாலும்.. "சும்மா பகிடிக்குங்க" என்று நான் சமாளிக்க அவள் சாந்தமானாள். 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை.) :)  :lol: 
 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

* மீண்டும் புத்தாண்டைத் தாண்டி வருவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். *


இது ஒரு கதை.. என்பதை எல்லோரும் கருத்தில் கொள்ளுங்கள். நெடுக்காலபோவன் பற்றிய  சுய அளவீட்டுக்கு இதனை பயன்படுத்துவது மகா தவறு ஆகும்.  :) 

  • கருத்துக்கள உறவுகள்

கதை என்று நல்லா தெரியுது நெடுக்ஸ்.. :unsure: எனக்கெல்லாம் மோதிரத்தை மாத்திவிட்டால் நான் எங்கையோ போயிடுவன்.. :lol:

தொடருங்கள்!  :)


உங்கள் பெண் இந்தியத் தமிழோ? ( கதையில் வாற பெண்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!  :)

உங்கள் பெண் இந்தியத் தமிழோ? ( கதையில் வாற பெண்)

இந்தியாவில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழிச்சி அப்படின்னு வைச்சுக்குங்களேன். :)

Edited by nedukkalapoovan

தொடருங்கள். :lol::)

* மீண்டும் புத்தாண்டைத் தாண்டி வருவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். *

 

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :) நீங்கள் westminster க்கு போய் அங்கு இடம்பெறும் வான வேடிக்கைகளை (fireworks) பார்க்க போகிறீர்களாக்கும். :rolleyes: அந்த பெண்ணும் வாறாவா இல்லையா என அறிய ஆவல். :D போட்டு வந்து சொல்லுங்கோ. :icon_idea::)

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்  நிணைவுகள், கனவுகள் , நனவுகளாக  புத்தாண்டும் பிறக்கின்றது , வாழ்த்துக்கள் நெடுக்ஸ் !! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :) நீங்கள் westminster க்கு போய் அங்கு இடம்பெறும் வான வேடிக்கைகளை (fireworks) பார்க்க போகிறீர்களாக்கும். :rolleyes: அந்த பெண்ணும் வாறாவா இல்லையா என அறிய ஆவல். :D போட்டு வந்து சொல்லுங்கோ. :icon_idea::)

 

மத்திய இலண்டனுக்குப் போகும் எண்ணமில்லை. வழமை போல.. நண்பர்களோடு மட்டும் சாதாரண ஒரு நாளாக இந்த இரவும் விடியும். மேலும்.. அந்தப் பொண்ணா.. எந்தப் பொண்ணு. இது கதை..!  :)  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
யூனி பீசை கட்ட முடியாத நெடுக்ஸ் கடையின் பெறுமதியான சிலையை வாங்கி அவவுக்கு பரிசாக கொடுப்பாராம் பதிலுக்கு அவ பீசை கட்டுவாவாம் ஜயோ,ஜயோ முடியல அலப்பறை தாங்க முடியல்ல :lol:
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கதைபுரியல்ல. விடுங்க. எல்லாருக்கும் ஒரே புரிதல் இருந்திட்டா.. கதை விடுகதை ஆகிடும்.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்
அது சரி நெடுக்ஸ் இந்த கதை எப்ப நடந்தது 5,6 வருசத்திற்கு :D  முந்தியா அல்லது அண்மையிலா :D  படிப்பிற்கு வயசில்லை இல்லை என்டது உண்மை தான் ஆனால் 7 கழுதை வயதாகியும் நெடுக்கருக்கு இன்னும் யூனியில் படிச்சு முடியலையாம் :lol: ...மற்றது கதையில் உங்களை நீங்களே புகழ்கிறீர்களே ஓவராய் இல்லை :) தன்னம்பிக்கை இருக்கத் தான் வேண்டும் ஆனால் எதுக்கும் ஒரு எல்லை இருக்கு அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு :icon_idea:
 
 
 
 
 
வருடம் பிறந்த முதல் நாளே யாரோடாவது கொழுவோணும் போல இருக்கு நெடுக்ஸ் அச்சாப் பையன் தானே :lol: 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் மறுநாள்.. சொன்ன நேரத்துக்கு முன்னரே.. அவள் யுனிக்கு வந்திருந்தாள். கையில் செக்கோடு. "வாங்க போய் காசைக் கட்டிட்டு வருவம்" என்றாள். எனக்கு இப்படிச் செய்வது சரியா தவறா என்ற தயக்கம் மனதில் இருந்தாலும்.. அவளின் அக்கறையினை தட்டிக்கழிக்க முடியாமல்.. தலையாட்டிக் கொண்டே.. எனக்கு வந்திருந்த கடிதத்தோடு கவுண்டரில் நான் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.
 
நான் கடிதத்தைக் காட்டி செக்கை நீட்ட.. கவுண்டரில் இருந்த பெண்மணி கேட்டார். இது உனது செக்கா என்று. நான் இல்லை.. என்னருகில் நின்ற அவளைக் காட்டி.. இவளுடையது என்றேன். அவள் யார் என்று அவர் கேட்டார். அவள் பிரண்ட் என்றேன். நான் அப்படிச் சொல்ல.. அவள் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். சரி என்று சொல்லி செக்கை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண்மணி.. காசு கட்டியதற்கான ரசீதை தந்து எங்களைப் போகச் சொல்லி சொல்லி விட்டார்.
 
நாங்கள் இருவரும் கவுண்டரில் இருந்து வெளியேறி.. யுனியில் இருந்து வெளியேற.. யுனி நுழைவாயில் வரும் போது.. அங்கு நுழைந்த மெல்லிய இளங் காலைக் காற்றில்.. அவள் பாவித்திருந்த வாசனைத்திரவியம் மூக்கை இதமாக வருடிச் சென்றது. அந்த மயக்கத்தில் நானிருக்க மயக்கம் தெளிப்பவளாய்..அவள் சொன்னாள்... "எனக்கு சுப்பர் மார்க்கட் ஒன்றில வேலை கிடைக்கும் போல இருக்குது. பகுதி நேரம் தான். என் சி.வி யை அங்க ஒருத்தன் கிட்ட குடுத்திருக்கிறன். போய் அவனட்ட ரிசல்ட் கேட்கனும்".. என்றாள். "அப்புறங்க.. அவன் ஒரு மாதிரி.. நேற்றும் வீட்ட போற வழில அங்க போயிருந்தன். அவன் என் போன் நம்பர் கேட்டான். ஏன் உனக்கு என் போன் நம்பர் என்று கேட்க.. சும்மா பொழுதுபோக்கக் கதைக்கத்தான் என்றான். இந்த ஆம்பிளைங்களே ஒரே ஜொள்ளுப் பேர்வழி தானாங்க" என்றாள் அவள்.. வில்லங்கமான வினாவை தொக்க வைச்சு. 
 
எனக்கோ.. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் உள்ளூர ஒரு பயம் தொற்றிக் கொண்டது. வில்லன் ஒருத்தன் கிராஸ் பண்ணிடுவானோ என்றல்ல.. இவள் தேவையற்ற பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறாளே என்று. ஆனாலும் நான் அவளுக்கு புத்திமதி சொல்லப் போய்.. வாங்கிக் கட்டிக்கொள்ள தயாராக இருக்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. இணையத் தூதில் அவளுடன் பேசும் தருணங்களில்.. ஒரு பேச்சுக்கு என்றாலும்.. ஆண் - பெண் விவாதங்கள் வந்தால் அவள்.. பொங்கி எழுந்து ஆண்களை ஒரு வாங்குவாங்குவதுமின்றி.. அந்தப் பழிபாவத்தை என் மீது கோபமாக உதிர்த்துக் கொள்ளவும் தயங்காதவள்.. என்ற வகையில்.. அவளை அவள் போக்கிலேயே விட்டுவிடுவது என்று தீர்மானித்தேன். 
 
அவள் வாரம் தோறும் அந்த சுப்பர் மார்க்கெட் வேலை சரி வருமா வராதா என்று கேட்க அங்கு போகும் வாடிக்கையை கொண்டிருந்தாள். ஆனாலும் நடப்பதை எல்லாம் எனக்கு அப்டேட் செய்வாள். அதில் உண்மை பொய் என்பது.. அவளின் வார்த்தைகளை நம்பும் அளவில் தான் இருந்தது. ஒரு நாள்.. என்னை மீண்டும் கணணி ரூமுக்கு அழைத்தாள். அழைத்தவள் அன்று வழமைக்கு மாறாக சோகத்தோடு உட்கார்ந்திருந்தாள். என்ன விசயம். முகம் மாறி இருக்குது. சோகம் தாண்டவமாடுது என்று கேட்டேன்.. "இல்லைங்க... என் பிரண்ட் ஒருத்தி ஊரில இருந்து வந்திருக்கிறாள். அவளுடைய அம்மாக்கு  கொஞ்சம் சீரியஸ். அவா இங்க தான் கொஸ்பிட்டலில. அவவை போய் பார்க்கப் போனனான். அது தான்".. என்றாள். "அப்புறங்க என் பிரண்ட் கிட்ட உங்களைப் பற்றியும் சொன்னன். அவள் சொன்னாள் பார்த்துப் பழகடி. உங்க ஊருக்க பல கதைகள் நடக்குது. ஏமாந்திடாத" என்று.
 
நான் பதிலுக்கு.. "உங்க பிரண்ட்.. சொன்னதை அப்படியே நம்புறீங்களா" என்றேன். "நம்பவும் முடியல்ல.. நம்பாமலும் இருக்க முடியல்ல. அந்த சுப்பர் மார்க்கெட் ஆளை நினைச்சா.. எப்படிங்க ஆம்பிளையள நம்புறது. கொஞ்சம் அழகா இருந்த உடன.. உதவி செய்யுற மாதிரி வந்து.. போன் நம்பர் கேட்கிறது. அட்ரஸ் கேட்கிறது... அவனை நம்பி.. அவனட்ட சி வி யை கொடுத்திட்டன். எப்படி அதில இருந்து வெளில வாறது என்று தெரியாமல் இருக்கிறன். அப்படிப் பார்க்கேக்க.. பிரண்ட் சொன்னதையும் தட்டிக்கழிக்க முடியல்ல" என்றாள்.
 
எனக்கோ.. ஒரு பெண்ணின் வாயால் இப்படி ஒரு நம்பிக்கையீனத்தை..கேட்பது அன்று தான் முதல்தடவை... என்பதால் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமே வெளிப்பட்டது மனதில். நான் அழகாக அன்பாக ஆராதித்தது.. நிலையில்லாத ஒரு மனநிலையில்.. நிற்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். என்னோடு என்ன தான் அவள் நெருக்கம் காட்டினாலும்.. அவளிடத்தில் ஒரு அந்நியத்தனம் ஒட்டி உள்ளதை அன்று உணர்ந்தேன். நான் இப்படி யோசிச்சுக் கொண்டிருக்க, அவள்.. "என்ன யோசிக்கிறீங்க. நீங்க ஒன்றுக்கும் யோசிக்காதேங்க... நான் உங்களை அப்படிப் பார்க்கேல்ல... ஆனாலும்.. ஆம்பிளையள எப்படிங்க நம்புறது".. என்றாள் மீண்டும்.. சுற்றிவளைத்து அதே தொடுபுள்ளியைச் சுற்றி...! அன்று தான்... என்னில் எல்லாமாக நினைத்திருந்த அவள் மீது நான்.. வளர்த்திருந்த.. அன்பின்... நம்பிக்கையின்... நிலையில்லாத தன்மையை வாழ்க்கையில் முதன்முதலில் உணர ஆரம்பித்தேன்..! வாழ்க்கையில்.. ஒரு வெறுமைக்குள் சென்று வந்த நாளிகையும் அப்போதே வந்து போயிருந்தது..! இருந்தாலும் அவளின் மீதி.. வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையையும் நான் உணராமல் இல்லை..! அதுவே அன்று.. எனக்கு அவளிடம்.. உயிர்ப்பாகவும் தென்பட்டது.  
 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை) :)  :lol: 

Edited by nedukkalapoovan

அந்த supermarket இல் நிற்பவன் தான் வில்லனோ? :rolleyes: தொடருங்கள். :D

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் .. இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டால் விஞ்ஞான ரீதியில் எல்லாம் சிந்திக்கப்படாது.. :huh: 'சி.வி. வாங்கினவன் மாதிரி போக்கிரிகள்தான் முக்கால்வாசி ஆம்பிளைகள்.. ஆனால் என்னை இளகின மனத்துடன் ஆண்டவன் படைத்துவிட்டானே' எண்டு புளுக வேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

த்ரில் ரசிகர்களைக் கவர இந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியைச் செருகலாமே? வில்லன் வந்தாச்சு, ஹீரோவுக்கு சண்டை போட வருமா அல்லது ஜொள்ளு விட மட்டும் தான் வருமா எண்டு வாசகர்களுக்குத் தெரிய வேணாமோ? :lol:

ம்ம்..... சின்னத் தொடர் தானே கெதியாய் எழுதி முடியுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

த்ரில் ரசிகர்களைக் கவர இந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியைச் செருகலாமே? வில்லன் வந்தாச்சு, ஹீரோவுக்கு சண்டை போட வருமா அல்லது ஜொள்ளு விட மட்டும் தான் வருமா எண்டு வாசகர்களுக்குத் தெரிய வேணாமோ? :lol:

தமிழ் ஆக்களிடம் தான் வன்முறைக்குப் பஞ்சமில்லையே. நாங்களும் அதே பாதையைக் காட்டக் கூடாது. நாடக் கூடாது. மாற்றி யோசிக்கனும்.  :)  :lol:

ம்ம்..... சின்னத் தொடர் தானே கெதியாய் எழுதி முடியுங்கோ

சின்னத் தொடர் என்றதற்காக நாலு வரில நிறுத்திறதா அலையக்கா. சொல்ல வந்ததை சொல்லிட்டு நிறுத்துவமில்ல. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சரி.. சரி ரெம்ப யோசிக்காதீங்க. நீங்களாவது ஒழுங்கா இருக்க. மற்ற ஆம்பிளையள் மாதிரி பொம்பிளையளோட விளையாடாமல்.. ஜொள்ளு வழியாமல்.. ஒழுங்க இருங்கப் பாருங்க. இல்ல மாமிட்ட சொல்லிடுவன்.. போன் போட்டு என்றாள். மாமியா.. யாருங்க அது என்றேன் ஆச்சரியம் பொங்க. உங்க அம்மா தான் எனக்கு மாமி. அவட போன் நம்பர் எடுத்து வைச்சிருக்கிறனில்ல. உங்க ஸ்கூல் பழைய மாணவர் லிஸ்டில இருந்து எடுத்து வைச்சிருக்கிறன்.. சோ.. நீங்க குழப்படி செய்தீங்க.. ஐயாவைப் பற்றி.. போன் போட்டுச் சொல்லிடுவன். என்ன நினைச்சீங்க என்னைப் பற்றி. நான் ஒன்னும் ஏமாளி இல்லைங்க என்றாள். அப்புறங்க... எனக்கு ஏலாமல் இருக்குது.. வாங்க வீட்ட போவம்.. தலையிடிக்குதுங்க என்றாள். 
 
யுனி.. கன்ரீன் மதிய நேரத்தோடு.. நேரகாலத்துக்கு மூடப்பட்டு விடுவதால்.. நான் யுனி ஸ்ருடண்ட் சொப்பில போய் பரசிற்றமோலும் பெப்சியும் வாங்கி வரட்டா என்று கேட்க.. ஓம் என்று தலையாட்டினாள். நான் ஓடிப்போய் மருந்தோடும் மென்பானத்தோடும்.. வர... "நல்ல ஸ்பீட்டா தான் வேலை செய்யுறீங்க. இதென்ன உண்மையாக அக்கறையா இல்ல நடிப்பாங்க" என்றாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பாவம் என் தயவை நாடியவளுக்கு உதவனுமே என்ற நிஜ அக்கறையில் ஓடிப் போய் ஓடி வாறன்.. இவள் என்ன இப்படிக் கேட்கிறாள் என்று யோசிச்சுக் கொண்டிருக்க..... மெல்லச் சிரிச்சுக் கொண்டே.. "என்ன ஐயா சீரியஸ் ஆகிட்டாரோ.... சும்மா பகிடிங்குங்க" என்றாள்.. என்னை சமாதானப்படுத்தியவாறு.
 
மருந்து குடித்து கொஞ்ச நேரம் இருவரும்.. ஊர் அரசியல் பேசிட்டு.. வீட்டுக்குக் கிளம்பத் தயாரானோம். அவளுக்கும் விடுதலைப் புலிகள் மேல் ஒரு பெரிய மரியாதை இருந்தது. குறிப்பாக தமிழ்செல்வன் அண்ணா மீது நல்ல மரியாதை வைத்திருந்தாள். இருந்தாலும்.. புலிகளின் தவறுகளையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. ஆனால் நானோ அவை தவறுகள் அல்ல.. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள். அதனை ஏற்படுத்தியவர்களும் அவற்றைத் தவிர்த்திருந்தால்.. புலிகளுக்கும் தவறு செய்ய வேண்டிய தேவை வந்திருக்காது என்று சொல்ல.... அவளும் நிஜம் தாங்க என்று ஒத்துக் கொண்டாள். அவளும் சூரியக்கதிர் சிறீலங்கா சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கையின் போது.. வன்னிக்கு இடம்பெயர்ந்து ஜெயசிக்குறு.. இராணுவ நடவடிக்கைகளால்.. தொடர்ந்து பலமுறை இடம்பெயர்ந்து..துன்பப்பட்டு அப்புறம் இந்தியா போய் தகப்பனின் ஸ்பொன்சரில் இங்கு வந்திருந்தாள்.  
 
பேரூந்து தரிப்பிடத்தில் இருவரும் பேரூந்திற்காகக் காத்திருக்க.. நாங்கள் ஏற வேண்டிய வழித்தட பேரூந்து கொஞ்சம் ஆள் நெரிசலோட வர.. நான் அடுத்த பேரூந்தில் போவமே என்றேன். அவள் இல்லை.. எனக்கு அவசரமாப் போகனும்.. என்றாள். நானோ.. அது சரியான நெரிசலுங்க என்று சொல்லிக் கொண்டு நிற்க.. பேரூந்து வந்து நின்று கதவைத் திறக்க.. அவள் ஓடிப் போய் ஏறிவிட்டாள். வழமையாக நான் ஏற வரும் வரை காத்திருப்பவள் அன்று அப்படி நிற்கவில்லை. ஓடிப் போய் ஏறிவிட்டாள். ஆனால் நான் ஏறவில்லை. அவள் ஏறிவிட்ட நிலையில்.. பேரூந்தும் கதவுகளை அடைத்துவிட்ட நிலையில்.. எதுவும் செய்ய முடியாத நான்.. வெளியில் நின்று அப்பாவியாய்.. கைகாட்டி விட்டேன். பேரூந்து புறப்பட்டு போய் விட்ட கொஞ்ச நேரத்தில் போன் பண்ணினாள். கோபமாகப் பேசினாள். அவசரமாப் போகனும் என்றிறன்.. நீங்கள் நிலைமையைப் புரிஞ்சுக்காம விளையாடிக் கொண்டு நிற்கிறீங்க. அடுத்த ஸ்ரொப்பில இறங்கி நிற்பன். வாங்க. ஆனால் ஒன்று இதுதான் கடைசியும் முதலும். எனி உங்க கூட கூடிக் கொண்டு பேரூந்தில.. போய் வாற விளையாட்டு என்னட்ட இல்லை என்றாள் கோபமாக. நானோ.. பதில் எதுவும் பேசவில்லை. இந்தா மற்றப் பேரூந்து வந்திட்டு கெதியா வாறன் என்று மட்டும் சொல்லிக் கொண்டு போனை கட் பண்ணிக் கொண்டேன். அதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்.
 
 
நான் பயணித்த பேரூந்து அவள் இறங்கி நின்ற ஸ்ராண்டில் வந்து நிற்க அவளும் அதே பேரூந்தில்... ஏறிக் கொண்டாள். எனக்கு அருகில் ஒரு இருக்கை இருந்தது. ஆனால் அவள் அதில் இருக்கவில்லை. மாறாக இன்னொரு இருக்கையில் போய் இருந்து கொண்டாள். அங்கு வருமாறு கூப்பிட்டாள். எழுந்து போனேன்... இது விளையாட்டில்ல.. நீங்க.. இப்படித்தான் என்னை விட்டிட்டு போவிங்க. நான் தவிச்சுக் கொண்டு நிற்க ஏலாது. இந்த காதல் கத்தரிக்காய் ஒன்றும் எனக்கு வேண்டாம். உதால தலையிடிதான் எனக்கு. வீட்டிலும் பிரச்சனை. இங்கும் பிரச்சனை. நீங்கள் என்னைப் புரிஞ்சுக்கிட்ட மாதிரித் தெரியல்ல... என்றாள் கண்களில் அனல் பறக்கும் கோவத்தோடு. நான் அவள் கோபத்தோடு நிற்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு மெளனமாக நின்றேன். எனது தவறை உணர்ந்து எனக்குள் வருந்திக் கொண்டதும் இல்லாமல்.. சொறி சொறி என்று பல தடவை சொன்னேன்.  ஆனால் அவள் ஏலவே அன்று சோகத்தோடு காணப்பட்டதற்கான காரணம் அப்போது தான் வெளிப்பட்டிருந்தது. ஒன்றைப் புரிஞ்சு கொள்ளுங்க.. நீங்க ஒழுங்கா இல்லைன்னா.. உங்களுக்காக மட்டும் காத்திருப்பனுன்னு நினைக்காதீங்க. இன்னொரு கலியாணம் செய்துகிட்டு என் பாட்டில போய்க்கிட்டு இருப்பன். நான் ஒன்றும் அழுது வடிக்கிறவள்.. கிடையாது. எனக்கு சுதந்திரமா இருக்கனும். இப்படி இழுபட்டுக் கொண்டு திரியுறதில இஸ்டமில்லை என்றாள் மீண்டும் கோபம் தணியாமலே.
 
அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்.. நான் திகைத்து நிற்க.. பேரூந்தும் சேரும் இடம் வந்து சேர்ந்தது. விறுக் என்று எதுவும் சொல்லாமல் இறங்கியவள்.. தெருவைக் கடந்து தொடரூந்து நிலையத்துக்குள் தனது தொடரூந்து தரிப்பிடம் நோக்கி ஓடிச் சென்று விட்டாள். நான் அவளை அப்படியே கோபத்தோடு அனுமதிப்பது நியாயமில்லை... நான் அவள் மீது வைச்சிருந்த அன்புக்கும் நல்லதல்ல என்ற காரணத்தாலும்.... அவளின் கோபத்தில் ஓரளவு நியாயம் இருக்கு என்பதை உணர்ந்து கொண்டதாலும்.... அவள் நின்ற இடம் நோக்கி ஓடிப் போனேன். போய் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தவள் அருகில் அமர்ந்து கொண்டேன். "ஏங்க கோவிக்கிறீங்க. சொறிங்க" என்றேன். அவளோ..மெளனமாக இருந்தாள். நான் மீண்டும் "சொறிங்க" என்றேன். எனக்கு உங்க சொறி தேவையில்ல. உங்களுக்காக நான் எவ்வளவோ ரிஸ்க் எடுத்திருக்கிறன். அது எனக்குத் தான் தெரியும். ஆனால் நீங்க எல்லாத்தையும் சிம்பிளா நினைச்சுக் கொண்டு இருக்கிறீங்க. என் பிரண்ட் சொன்னவள்.. உன்னை அவன் சரியா புரிஞ்சு கொண்டிருக்கிறான் என்று எப்படி நம்புறாயடி.. என்று. அவள் கேட்டது சரியாப் போச்சுது. எனக்கு உந்தக் காதல்.. கலியாணம் தேவையில்லை. நீங்களும் தேவையில்ல. என்னைத் தொந்தரவு பண்ணாமல் போயிடுங்க" என்றாள்.. கோபம் மாறாமலே. 
 
 
மிகுதி அப்புறம்...
 
(பகுதி கற்பனை.) :)  :lol:  :( 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னய்யா அநியாயம்..! சும்மா இருந்த நெடுக்கை இழுத்துவிட்டிட்டு அறிக்கை வேறை வாசிக்கினம்?? :unsure: ஆனாலும் மரக்கட்டை மாதிரி இருந்தால் ஒண்டுக்கும் ஆகாது நெடுக்ஸ்.. :rolleyes:

சரி. விண்ணைத்தாண்டி வருவாயா படம் மாதிரி புடுங்குப்பாடு ஆரம்பிச்சிட்டுது. :D

 

இனி அவா த்ரிஷா மாதிரியும் நெடுக்ஸ் அண்ணா சிம்பு மாதிரியும் ஆகிடப்போறார்கள். :unsure::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.