Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்டுத்துவசமும் கனவும்..........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கனவுகள் வருவதில்லை

வந்தாலும் அவை நினைவில் நிற்பதில்லை.

ஆனால் இந்தக்கனவு மட்டும்...........

புதுவருடப்பிறப்பன்று 01.01.2014  எமது பெற்றோரின் முக்கிய உறவு ஒன்றுக்கு முதலாவது துவசம்.

அழைப்பு வந்தது.

போறதாகவே இல்லை.

31.12.2013 அன்று இரவு

அண்ணரின் பேத்திக்கு பிறந்தநாள்.

போய் சாப்பிட்டு விட்டு கதைத்துக்கொண்டிருந்த போது

இந்த துவசவீட்டுக்கதையும் வந்தது

அதில் பலர் அதற்கு நாளை  போவதாக சொன்னார்கள்

சும்மா இருங்கோ

நாளைக்கு  புது வருடப்பிறப்பு.

அந்த மாதிரி  சாப்பிடும் நாள்

மரக்கறி  சாப்பாடு எனக்கு வேண்டாம்

நான் வரமாட்டன்.....

சொல்லிவிட்டு

இரவு 12 மணிக்கு எல்லோரும் முதல் வீட்டுக்கு வந்து சாமிக்கு விளக்கு வைத்து

புது வருடம் கொண்டாடி  எல்லோருக்கும் வாழ்த்துச்சொல்லி  நித்திரைக்குப்போகும் போது

நேரம் அதிகாலை 1மணி.

துவசம்

அதை மறந்தே விட்டிருந்தேன்

நாளை  அம்மாவிடம் போகணும்

ஆசி வேண்டி  கை விசேசம் வாங்கணும்

அதன்பின் எனது மனைவியின் அம்மாவிடம் போகணும்

எனது பெரியக்காவிடம் போகணும்

இது தான் புதுவருட திட்டம்.

அதிகாலையில் ஒரு கனவு

அந்த துவச வீட்டுக்கு போகின்றேன்

அந்த வீட்டுக்காறி  என்னை வரவேற்று அழைத்துச்செல்கிறார்

வரமாடடன் என்று சொன்னதாக கேள்விப்பட்டம் என்கிறார் சிரித்தபடி.

உள்ளே  போனதும்

கடவுள் சிலைகள் இருக்கின்றன

அதற்குள் எனது தகப்பனார் இருக்கிறார் சிலையாக.

பட்டு வேட்டி சால்வை அவரை சுத்தி கட்டப்பட்டிருக்கிறது

ஆனால்  முகம் மட்டும் என்னைக்கண்டதும் சிரிக்கிறது

மிகவும் அழகாக இருக்கிறார்

எனது தகப்பனார் இறந்து 10 வருடங்கள் (2004)

இது வரை அவரை நான் கனவிலும் கண்டதில்லை.

அப்படியே  உள்ளே போகின்றேன்

இந்த வருடம் அகால மரணமான எனது சின்னத்தார் வந்து என்னை  அழைத்துப்போகின்றார்

பட்டு வேட்டி கட்டியிருக்கிறார்

உடம்பில் வேறு எந்த உடுப்புமில்லை

பட்டு வேட்டியும் மடித்து தூக்கி  கட்டி இருக்கிறார்.

இவரும்  இறந்து 6 மாதமாகிறது

இதுவரை கண்டதில்லை.

ஆனால் இவர் இறந்தபோது

இந்த  துவச வீட்டைச்சேர்ந்த அனைவரும் அவருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தவர்கள்

அவர் இறந்தபோது இவர்கள் தான் தூக்கினார்கள்

அத்தாரின் சொந்த மருமகன் தான்  இந்த வீட்டுக்காறன்.

உருவ அமைப்பு அப்படியே  அத்தாரைப்போல........

காலையில் மனைவியை எழுப்பி

முதல் வெலையாக துவச வீட்டுக்கு   போறோம் என்கின்றேன்.

மனைவிக்கு ஆச்சரியம்

2 பேர் அங்கை எனக்காக நிற்கினம் என்று கனவைச்சொல்கின்றேன்..

அதன்படி அன்றைய நாள் துவச வீட்டிலேயே  தொடங்கியது......

இதில  இன்னொரு விடயமும் இருக்கு

அத்தாருக்கு அடுத்து

அந்த இடத்தில் இன்னும் 3 பேரை நான் கண்டேன்

ஒருத்தர் எனது மச்சாள் முறையானவர்

வயசு 60 க்கு மேலிருக்கும்

அடுத்தவர்

எனது ஒன்று விட் சகோதரர்

இவருக்கும் 60 வயசாகலாம்

அடுத்தவர்

மிகவும் அளமையானவர்

எனது சொந்த மச்சானின் மகன்

வயசு 30 இருக்கலாம்.....

என் மனதைக்குடைவது 

இவர்களை  ஏன் நான் அங்கு கண்டேன்...............???

எனக்கு கனவுகள் வருவதில்லை

வந்தாலும் அவை நினைவில் நிற்பதில்லை.

ஆனால் இந்தக்கனவு மட்டும்...........

யாராவது

மெஞ்ஞான

விஞ்ஞான விளக்கம் தந்தால்

மனம் அமைதியடையலாம்..........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
யாராவது மெஞ்ஞான விஞ்ஞான விளக்கம் தந்தால் மனம் அமைதியடையலாம்..........
வாழ்க்கை விளக்கம் :---இளம் வயதில் எமக்கு இப்படியான கனவுகள் வருவதில்லை நாம் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதும் இல்லை...வரும் கனவுகள் யாவும் இனிப்பாக இருக்கும்..சினிமா பெண்நட்சத்திரங்களும் அழகிய ஊர் பெண்களும் தான் வருவார்கள்....ஆனால் இப்ப வாழ்க்கையை அதிகம் நாம் சிந்திக்கிறோம் அதுதான் இந்த கனவு என நினைக்கிறேன்....
  • தொடங்கியவர்

வணக்கம் புத்தர்

உங்களது கருத்து மூலம் பல விடயங்களை  உணரக்கூடியதாக உள்ளது

வயசு

அனுபவம்

வாழ்வில் முதிர்ச்சி

அடுத்த கட்டம்.............

இப்படி பலவகையாக என்னை  சிந்திக்க  வைத்தது தங்கள் பதில்.

ஒருவகையில்

நாத்திகத்துக்கும்

ஆத்திகத்துக்குமிடையில் ஊசலாடிய  நான்..

சற்று ஆத்திகத்தின் பால் சாய்வது தெரிகிறது

இதற்கு உங்களது பதிலும் துணைவருகிறது

நன்றி  பத்தர்

நேரத்திற்கும் கருத்துக்கும்........

  • கருத்துக்கள உறவுகள்

------

உள்ளே  போனதும்

கடவுள் சிலைகள் இருக்கின்றன

அதற்குள் எனது தகப்பனார் இருக்கிறார் சிலையாக.

பட்டு வேட்டி சால்வை அவரை சுத்தி கட்டப்பட்டிருக்கிறது

ஆனால்  முகம் மட்டும் என்னைக்கண்டதும் சிரிக்கிறது

மிகவும் அழகாக இருக்கிறார்

எனது தகப்பனார் இறந்து 10 வருடங்கள் (2004)

இது வரை அவரை நான் கனவிலும் கண்டதில்லை.

அப்படியே  உள்ளே போகின்றேன்

இந்த வருடம் அகால மரணமான எனது சின்னத்தார் வந்து என்னை  அழைத்துப்போகின்றார்

பட்டு வேட்டி கட்டியிருக்கிறார்

------

பத்து வருடத்தின் பின்பு... உங்களது அப்பாவை கண்டிருக்கின்றீர்கள் விசுகு. சந்தோசம்.

அவருடன் உங்களது, சின்னத்தாரும் நின்றிருக்கின்றார்.

இறப்பின் பின்பும்... உறவுகள் விட்டுப் போவதில்லை என்பதற்கு, உங்கள் கனவே சாட்சி.

நானும்... புது வருடப் பிறப்பன்று, இறந்த பல நெருங்கிய உறவினர் ஒன்று கூடியிருப்பது போல் ஒரு கனவு கண்டேன்.

அந்தக் கனவைப் பற்றி, இரண்டு நாட்களாக... அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

அவ்வளவு இனிமையாக இருந்தது.

சில வேலைகளில் எனக்கும் கனவில் எனது சில இறந்த நெருங்கிய உறவினர்கள் வந்து போறவை. சில வேலைகளில் அவர்களைக் கண்டால் பிறகு யாராவது அவர்களுக்கு நெருங்கியவர்கள் முதல் நாள் இறந்ததாகத் தகவல் வரும். அதுக்குத் தான் அவர்கள் வந்திருக்கினம் என்று பல முறை நினைத்ததுண்டு!

இறந்தவர்களை... கனவில் கண்டால், வீட்டில் மங்கள நிகழ்ச்சி நடக்கும் என்றும்...

திருமண வீட்டை கனவில் கண்டால்.... வீட்டில் துக்க நிகழ்ச்சி நடக்கும், என்றும் அப்பம்மா சொல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னில ஒரு நரிக்குணம் உண்டு, விசுகர்!

ஒரு நல்ல காரியமும், துக்கமான காரியமும் ஒரே நாளில் வந்தால், துக்கமான காரியத்துக்குத் தான் முதலிடம் கொடுப்பது!

இதற்கான உளவியல் காரணம், உங்கள் 'ஆழ்மனது' என்றே நினைக்கிறேன்! உங்கள் ஆழ்மனதானது நீங்கள் செய்வது சரியல்ல என்று உங்களுக்கு அடித்துச் சொல்வதற்குத் தெரிந்தெடுத்த வழிதான் இந்த கனவாகும்! அதற்காகவே, ஆழ்மனது உங்கள் அப்பாவைத் தெரிந்தெடுத்தது!

உங்கள் அப்பாவுக்கும், உங்களுக்குமான புரிந்துணர்வு, நிச்சயமாக ஒரு கண்டிப்பின் அடிப்படையிலேயே ஆரம்பித்திருக்கும்! சில நல்ல பழக்க வழக்கங்களை, சுமுதாய நடைமுறைகளை, ஊட்டி வளர்த்ததில் உங்கள் அப்பாவே முன்னிலை வகித்திருக்கக் கூடும்!

முன்னர் வராமல், இப்போது மட்டும் இந்தக் கனவு வரவேண்டிய காரணம், நீங்கள் இப்படியான ' முரண்பாட்டு மனநிலை' வந்த சந்தர்ப்பங்களில் 'துக்க கரமான' நிகழ்வுகளுக்கு, 'முன்னுரிமை' கொடுத்திருக்கலாம்! அதனால் கனவுகளுக்குத் தேவை இருக்கவில்லை!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீங்கள் மிகவும் ' இரக்க சிந்தனை' உள்ளவர் என்பது!

அது நல்லது தானே! கனவைப் பற்றிக்கனக்க யோசிக்காதீர்கள்! :D

பச்சையும் முடிஞ்சு போச்சுது! பிறகு வாறன்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கல் எடுக்காதீர்கள் விசுகு எதற்கும் சிக்மண்ட் ப்ரொயிட்டின் கனவு தத்துவத்தை படியுங்களேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடத்தின் பின்பு... உங்களது அப்பாவை கண்டிருக்கின்றீர்கள் விசுகு. சந்தோசம்.

அவருடன் உங்களது, சின்னத்தாரும் நின்றிருக்கின்றார்.

இறப்பின் பின்பும்... உறவுகள் விட்டுப் போவதில்லை என்பதற்கு, உங்கள் கனவே சாட்சி.

நானும்... புது வருடப் பிறப்பன்று, இறந்த பல நெருங்கிய உறவினர் ஒன்று கூடியிருப்பது போல் ஒரு கனவு கண்டேன்.

அந்தக் கனவைப் பற்றி, இரண்டு நாட்களாக... அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

அவ்வளவு இனிமையாக இருந்தது.

நன்றி  சிறி

உண்மைதான்

வருடம் பிறந்த அந்த கணத்தில் அவர்களைக்கண்டதால்

மனசு ரொம்ப சந்தோசமாகவும்

தெளிவாகவும் இருந்தது

புதுவருத்தன்று என்பதால் மேலும் சந்தோசம்

அது தான் இங்கு அதைப்பதியத்தூண்டியது

சில வேலைகளில் எனக்கும் கனவில் எனது சில இறந்த நெருங்கிய உறவினர்கள் வந்து போறவை. சில வேலைகளில் அவர்களைக் கண்டால் பிறகு யாராவது அவர்களுக்கு நெருங்கியவர்கள் முதல் நாள் இறந்ததாகத் தகவல் வரும். அதுக்குத் தான் அவர்கள் வந்திருக்கினம் என்று பல முறை நினைத்ததுண்டு!

நன்றி  அலை

தங்களது அனுபவத்தையும் பதிந்ததற்கு...

எனக்கு கனவுகள் வருவதில்லை

வந்தாலும் நிலைப்பதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னில ஒரு நரிக்குணம் உண்டு, விசுகர்!

ஒரு நல்ல காரியமும், துக்கமான காரியமும் ஒரே நாளில் வந்தால், துக்கமான காரியத்துக்குத் தான் முதலிடம் கொடுப்பது!

இதற்கான உளவியல் காரணம், உங்கள் 'ஆழ்மனது' என்றே நினைக்கிறேன்! உங்கள் ஆழ்மனதானது நீங்கள் செய்வது சரியல்ல என்று உங்களுக்கு அடித்துச் சொல்வதற்குத் தெரிந்தெடுத்த வழிதான் இந்த கனவாகும்! அதற்காகவே, ஆழ்மனது உங்கள் அப்பாவைத் தெரிந்தெடுத்தது!

உங்கள் அப்பாவுக்கும், உங்களுக்குமான புரிந்துணர்வு, நிச்சயமாக ஒரு கண்டிப்பின் அடிப்படையிலேயே ஆரம்பித்திருக்கும்! சில நல்ல பழக்க வழக்கங்களை, சுமுதாய நடைமுறைகளை, ஊட்டி வளர்த்ததில் உங்கள் அப்பாவே முன்னிலை வகித்திருக்கக் கூடும்!

முன்னர் வராமல், இப்போது மட்டும் இந்தக் கனவு வரவேண்டிய காரணம், நீங்கள் இப்படியான ' முரண்பாட்டு மனநிலை' வந்த சந்தர்ப்பங்களில் 'துக்க கரமான' நிகழ்வுகளுக்கு, 'முன்னுரிமை' கொடுத்திருக்கலாம்! அதனால் கனவுகளுக்குத் தேவை இருக்கவில்லை!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீங்கள் மிகவும் ' இரக்க சிந்தனை' உள்ளவர் என்பது!

அது நல்லது தானே! கனவைப் பற்றிக்கனக்க யோசிக்காதீர்கள்! :D

பச்சையும் முடிஞ்சு போச்சுது! பிறகு வாறன்!

நன்றியண்ணா

நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கையில் சரியாகத்தெரிகிறது

எனது அப்பருக்கும் எனக்குமான நிலை என்பது மிகவும் அன்பு சார்ந்தது

(5 பெண்களுக்கு  பின் நான் பிறந்ததால்)

இதுவரை  அவருடைய  சொல்லை  நானும்

வளர்ந்த பின் எனது சொல்லை அவரும் தட்டியதேயில்லை.

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால்

அவர் கடவுளுக்கு போடப்பட்டது போல்

அவரது உருவத்துக்கு பட்டு வேட்டி சால்வை அணியப்பட்டு 

அவர் கடவுள்களுக்கு நடுவில் இருந்தது

சாகும்வரை எங்கு சென்றாலும்

தேவாரத்தை மட்டுமே பாடிய  அவருக்கு கிடைத்த கொடை என்று நினைக்கின்றேன்.

நன்றியண்ணா

உங்களிடம் கருத்து வாங்குவதும் அவரை எனக்கு ஞாபகப்படுத்தும்.. :)

தயவு செய்து கல் எடுக்காதீர்கள் விசுகு எதற்கும் சிக்மண்ட் ப்ரொயிட்டின் கனவு தத்துவத்தை படியுங்களேன்.

உங்களுக்கு திருப்பி  ஒரு விடயத்தைப்போடுகின்றேன்

எதைப்படிக்கணும் என்று சொல்லுங்கள்.......... :lol:

இந்த கனவில்

இறந்த எனது தகப்பனார்

மற்றும் எனது அத்தார்  தவிர

இன்னும் மூன்று பேரைக்கண்டேன்  அல்லவா??

அவர்களை  ஏன் அங்கு கண்டேன்???

போகப்போகிறார்களோ???? :lol:  :lol:  :lol:

இதை மனைவியிடம் சொன்ன போது 

அவர் சொன்ன  பதில்

நீங்களும் அங்கு தானே இருந்தீர்கள்??

அடிப்பாவி............... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.