Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் - கவிஞர் சேரன்

Featured Replies

cheran1_CI.jpg


இந்த மக்கள் தீர்ப்பாயத்தில்  இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை 'இனப்படுகொலை' என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வௌ;வேறான, ஆனால் தமக்குள் இணகக் மான உறவுகளைக் கொணடி;ருக்கும் தளங்களிலிருந்து என்னுடைய பார்வையையும் வாதங்களையும் முன்வைக்கிறேன்.

முதலாவது தளம் ஊடகவியலாளர் என்பது. 1984 – 1987 வரை முழுநேரப் பத்திரிகை யாளனாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review  என்ற ஆங்கில வார இதழில் பணிபுரிந்தேன். அதற்குப பிற்பாடு கொழும்பிலிருந்து வெளியாகிய 'சரிநிகர்' இதழில் பத்து ஆண்டுகள் பணி யாற்றியிருக்கிறேன். இந்தக் காலகட்டங்க ளில் ஏராளமான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், சித்திரவதை என்பன பற்றி அறிக்கையிட்டிருக்கிறேன். ஏராளமான சாட்சியங்களையும் திரட்டியிருக்கிறேன். பல படுகொலைகளுக்கும் குண்டு வீச்சுக ளுக்கும் வேறு வகையான தாக்குதல்க ளுக்கும் நேரடியான சாட்சியாகவும் இருந்திருக்கிறேன்.


என்னுடைய இரண்டாவது தளம் பல்கலைக் கழகம், ஆய்வு, கல்வித் துறை சார்ந்தது. இப்போது கனடாவின் வின்ஸர்பல்கலைக் கழகத்தில் சமூகவியல், மானுடவியல், குற்ற வியல் துறையில் ஒரு பேராசிரியராக இருக்கிறேன். இனத்துவ முரண்பாடுகள், இனப்படுகொலை, புலம் பெயர்வு, உலகமயமாக்கம் என்பன எனது ஆய்வுத் துறைகள். இந்தத் துறைகளிலேயே எனது பல்கலைக்கழகக் கற்பித்தலும் அமைந்திருக்கிறது.


மூன்றாவது தளம், நான் ஒரு கவிஞன், நாடகாசிரியன் என்பது. என்னுடைய அனுபவங்களும் சிந்தனையும் எண்ணங்களும் ஆய்வுகளும் இந்த மூன்று தளஙக்ளையும் இடைவெட்டியதாகவே அமைகின்றன. 1956 – 2009 காலக்கட்டப் குதியில் ஈழதத்மிழரக்ள் மீது நிகழத்த்ப்பட்ட வனமுறைகள் படுகொலைகள், பேரழிவு என்பன தொடர் பாகக் கணிசமான அளவு ஆதாரங்கள் இந்தத் தீர்ப்பாயத்தில் சமரப்பிக்கப்ட்டுள்ளன. அவற்றோடு ஐ.நா அவையின் சிறப்பு ஆறிக்கை, வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் அலுவலகம் (NESHOR)  திரட்டி வெளியிட்டிருக்கும் தமிழினப் படுகொலைகள் பற்றிய நூல், அனைத்துலக மன்னிப்புச்சபை (Amnesty International)  தொடர்ச்சியாகத் தொகுத்து வெளியிட்டுள்ள அறிக்கைகள், Human Rights Watch, International Crisis Group அறிக்கைகள், சனல்-4 ஆவணப்படங்கள், இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்தோரின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவு ஆதாரங்கள் தீர்ப்பாயம் முன்னே உள்ளன. இத்தகைய ஆதாரங்களுக்கு அப்பால், எவ்வகையில் இந்த ஆதாரங்களை சமூகவியல், மானுடவியல் நோக்கில் நாங்கள் புரிநது கொணடு விளக்கம்  தரமுடியும் எனபது எனது அக்கறைகளுள் தலையாய ஒன்றாகும்.



இனபப்டுகொலை (Genocide)  எனப்து மிகவும் சிக்கலான, பேரதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வு. இதனை வெறுமனே அனைத்துலகச் சட்டங்கள் (International Law)  மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முயல்வதும் வரையறை செய்ய முற்படுவதும் சாத்தியமில்லை என்பது எனது வாதம் ஆகும். நடைமுறை, செயற்பாடு என்ற வகையில் இனப்படு கொலையாளரைக் குற்றக் கூண்டுக்குள் சிறைப்படுத்துவதற்குச் சட்டஙக்ளும் சட்டத்துறை சார்ந்த நுண்மையான நிபுணத்துவமும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனினும், 'இனப்படுகொலை என்பது என்ன?' என வரையறை செய்வதிலும் பல்வேறுபட்ட வடிவங்களில் இடம்பெறும் இனப் படுகொலைகளை இனங்கண்டு கொள்வதிலும் அனைத்துலகச் சட்டத்துறை போதுமானதலல்ல எமககு; சமூகவியல், மானுடவியல், மானுடப் பண்பியல் சார்ந்த அணுகுமுறைகளும் அவசியம் என்பதைப் பல சட்டவல்லுநர்களும் புலமையாளரும் மீள மீள வலியுறுத்துகின்றனர். 1948ல் உருவாகக் பப்பட்ட இனபப்டுகொலை தொடர்பான ஜெனிவா உடன்படிக்கை (Geneva Convention) இன்றைய காலத்துக்கேற்ற வகையில் புதுமையும் மாற்றமும் பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அனைத்துலகச் சட்டங்களும் அவற்றின் எண்ணக்கருக்களும் மெல்ல மெல்லப் பரிணாமம் பெற்றுவருகின்றன என்பது உண்மை எனினும் உலக நிகழ்வுகளும் போரும்  வன்முறையும் படுகொலைகளும் மிக விரைவாகப் பெருகிவிட்டன என்பதையும் நாம் கவனத்திலெடுக்க வேண்டும். இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் அனைத்துலகச் சட்டங்களும் சட்டப் பொறிமுறைகளும் மாற்றமும் வளர்ச்சியும் பெறவில்லை. இனப்படு கொலை தொடர்பாகவும் எமக்குப் புதிய வரைவிலக்கணங்களும் பார்வைகளும் மிக அவசியமாக உள்ளன.



எனவே, ஹெலன்பெயின் (1990) என்னும் அறிஞரின் கருத்துக்களை வழிமொழிந்து இனப்படுகொலை என்பதைப் பின்வருமாறு வரைவிலக்கணம் செய்ய விரும்புகிறேன். 'தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் ஒரு மக்கள் கூட்டத்தை அல்லது இனக் குழுமத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூகநிலை சாரந்தும் உயிர்முறை சார்ந்தும்  அழித்தொழிக்க முனைவது அல்லது அழித்தொழிப்பது இனப்படுகொலை ஆகும் என்பது பொருத்தமான எளிமையான அதேநேரம் சுருகக்மான வரைவிலக்கணமாக அமையமுடியும் என நான் கருதுகிறேன். இப்போது நடைமுறையிலிருக்கும் அனைத்துலகச் சட்டங்கள், அனைத்துலக நிறுவனங்கள், ஐக்கியநாடுகள்  அவை, அனைத்துலக நாணய நிதியம் போன்ற அமைப்புக்கள் அனைததுமே 'நாடு – அரசு' (Nation – State) என்பதை மட்டுமே கருத்திலும் கவனத்திலும் நடைமுறையிலும் கொண்டவை நாடுகள் இல்லாத எந்தத் தேசிய இனம்/ இனக்குழுமம் / மக்கள்  கூட்டத்துக்கு இத்தகைய அமைப்புக்களில் பிரதிநிதித்துவமும் கிடையாது, அவை பற்றிய அக்கறையும் இல்லை. நாடற்ற தேசியங்கள், இடமற்ற இனக்குழுமங்கள், பல நாடுகளுக்கிடையே சிக்குண்டு கிடக்கும் புவியியலில் சிதறிக் கிடக்கும் குர்தீஷ் மக்கள், காஷ்மரீ  மக்கள், தமிழர் போன்ற இனக் குழுமங்களுக்கு இப்போதுள்ள அனைததுலக நிறுவன அமைப்புக்களில் இடம் கிடையாது. நவீன இனப்படுகொலைகள் இத்தகைய மக்களை நோக்கித்தான் குறிவைக்கப்பட்டுள்ளன என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பாகத் தன்னாட்சி அல்லது தனிநாடு அலல்து தமககெனச் சுயநிரண்ய உரிமையைக் கோரும் மக்களை நோக்கியே இனப் படுகொலை ஏவப்பட்டுள்ளது என்பதை நாங் கள் அவதானிக்க முடியும். இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். பிரேஸிலின் பூர்விகக் குடிகள் (1957 – 1968), திபேத் (1959லிருந்து இன் றுவரை), பயா/பரா போர், நைஜீரியா (1967 – 1970), பரகுவேயில் அச்சே பூர்விகக் குடிகள் (1968 – 1978), பங்களாதேஷ் / கிழக்குப்பாகிஸ்தான் (1971), குவாட்டமாலா(1968 – 1996), ஈழத்தமிழர்கள் (1983 –2009). படுகொலைகள்,

இனத்துவச் சுத்திகரிப்பு (Ethmic Cleansing)  போன்ற சொற்கள் / சொற்றொடர்களின் பயன்பாட்டுக்கு இன்றைய அனைததுலகச் சடட்ப பொறிமுறைகளில் எந்த வகையான பயன்பாடும் இல்லை. இத்தகைய அநியாயஙக்ளுக்கும் இனப்படு கொலைகளுக்கும் பொறுப்பாக இருப்பவை நாடுகளும் அரசுகளும்தான். இந்த நாடுகளும் அரசுகளும் சேர்ந்துதான் அனைத்துலகச் சட்டங்களையும் நீதி முறைமைகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். எனவே இவர்களிடமிருந்து, இனப் படுகொலையாளர்களிடமிருந்து எவ்வாறு முற்றான நீதியை எதிர்பார்கக் முடியும? ஒன்றில் மறுப்பார்கள், அல்லது மறைப்பார்கள். அதுதான் அவர்கள் செய்வது. அனைத்துலகச் சட்டப் பொறிமுறைகள், நீதிமுறைமை என்பன ஆண்டுக்கணக்காக இழுபடக்கூடியவை அன்றேதீர்ப்பு வழங்கும் வலுவற்றவை. இதனால் இனப் படுகொலையாளர்களும் இனப்படு கொலை புரிந்த அரசுகளும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், தடயங்களை அழிக்கவும் நிறைய வாய்ப்பு விரும்பியோ விரும்பாமலோ வழங்கப்படுகிறது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்தப் பின்னணியில் இரண்டு புதிய கருத் துருவங்களை அல்லது எண்ணக்கருக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன். இவற்றைப் பற்றி இனப்படுகொலை தொடர்பாகத் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அலெக்சாந்தர் லபான்ஹின்டன் (2002), இஸரேல் சார்ணி (1994) போன்றோர் நிறையவே எழுதியுள்ளனர். முதலாவது 'இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு' (Genocidal Priming)  என்பது. இரண்டாவது இனப் படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப்படுகொலைகள் (Genocidal Massacres).  இந்த இரண்டு வழிமுறைகளும் பின்னர் இனப் படுகொலைக்கு நேரடியாகவே இட்டுச் செல்கின்றன. இனப்படுகொலைக்கான முன்னோடித் தயாரிப்பு என்பது ஆண்டுக்கணக்காக மெல்ல மெலல் இடம்பெற்று வருவது, மாற்று இனத்தவர்களின் குடியேற்றம் வெறுப்பு ஏற்படக் கூடிய வகையில் 'மற்றவர்'களைப் பற்றிக் கல்வியிலும் பாடப்புத்தகங்களிலும் வரலாற்றெழுதலிலும் சித்தரிப்பது, திட்டமிட்ட ஒடுக்குமுறை, பண்பாட்டு அழிப்பு என்பன இந்த வகையுள் அடங்கும்.

இலங்கை அரசு தொடர்ச்சியாகவும் திடட்மிடடும் இத்தகைய நடவடிக்கைகளில் 1948 இலிருந்தே ஈடுபட்டு வந்தமை தொடர்பான ஆவணங்கள் தீர்ப்பாயத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 1956, 1958, 1977, 1983 ல் நடந்தேறிய ஈழத் தமிழருக்கு எதிரான 'கலவரங்கள்' இந்த வழிமுறையின் தர்க்கரீதியான விளைவுதான். இனப்படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட கூட்டுப் படுகொலைகள் வெறுப்பின் அடிப்படையில் நிகழ்த்தப்படுபவை. விடுதலைப் போராளிகள் அரச படையினர் மீது தாக்குதல் தொடுத்தமைக்குப் பதிலடியாகப் பொதுமக்களை அழிப்பதும் ஊர்களை எரித்து அழிப்பதும் இலங்கையில் பரவலாக நிகழ்ந்தவை.

ஜுன்  1956 – டிசம்பர் 2008 காலபப் குதியில் இனப் படுகொலையை உள்நோக்கமாகக் கொண்ட 145 கூட்டுப் படுகொலைகள்  ஈழதத்மிழர் வாழும் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. தமிழ் மக்களுக்கெதிரான 'கலவரங்களை'யும் போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலைகளையும் நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. இந்தக் கூட்டுப் படுகொலைகளில் 41 படுகொலைகள், இடம்பெற்ற ஊர்களுக்கு நான்சென்று தப்பிப் பிழைத்தவர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். அல்லது அந்தப்படுகொலைகளைப் பற்றி  ஊடகவியலாளனாக விவரமாக எழுதியிருக்கிறேன் அல்லது சில படுகொலைகளுக்குச் சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். இவை பற்றிய முழு விவரங்களையும் பட்டியலையும் தீர்ப்பாயத்திடம் வழங்கியிருக்கிறேன். இந்தக் கூட்டுப்படுகொலைகளில் 82 வயதுள்ள முதியவரிலிருந்து எடடு மாதக்குழந்தைகள்வரை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைத் தனியாகப் பிரித்து அழைத்துச்சென்று இலங்கைப் படையினர் அவர்களைப் படு கொலை செய்துள்ளனர். இதத் கைய படுகொலைகள் பறற்றிய எந்தத் தகவலும் இலங்கையின் சிங்கள, ஆங்கில மொழிப்பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. அப்படி வெளியாகி இருந்தாலும், 'பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்'  என்ற வழமையான இலங்கை அரசின் உத்தயோகபூர்வமான அறிக்கையே வெளியாகும். 1982 இலிருந்து இன்றுவரை இலங்கையின் ஊடக நிலைமை பெருமளவுக்கு இதுதான்.



இனப்படுகொலை தொடர்பாகச் சில புதிய பார்வைகளை ருவாண்டாவில் டூட்ஸி மக் களின் இனப்படுகொலை தொடர்பாக  நியமிக்கப்பட்ட அனைத்துலகத் தீர்ப்பாயம் (International Criminal Tribunal for Rwanda–ICTR) எமக்கு வழங்கியிருக்கிறது. இநதத் தீர்ப்பாயம்; 1994ல் நிறுவப்பட்டது. பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் (RAPE) இனப்படுகொலைக் கருவிகள் எனவும் குறிப்பிட்ட சில சூழல்களில் அவை இனப் படுகொலைதான் எனவும் ICTR தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக, இந்தத் தீர்ப்பாயத்தின் மதியுரைஞரும் சமூகவிய லாளரும் அனைத்துலகச் சட்டத்துறையில் புலமையாளருமான போல் ஜே.மக்கெனரெலல் அவர்கள் எழுதியுள்ள பல சிறப்புக் கட்டு ரைகளை நான் தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஈழ இனபப் டுகொலையிலும் பாலியல் வன் கொடுமைகளும் வன்புணர்வும் ஏராளமாக நிகழந்துள்ளன என்பதற்கான ஆதாரஙக்ள் இப்போது குவியத் துவங்கியுள்ளன. இவற்றுட் பல இந்தத் தீர்ப்பாயத்துக்கு வழங்கப்பட்டுள்ன்ன. நண்பர் கொலம் மக்ரேயின் ஆவணப் படங்களில் காட்டப்பட்ட சில காட்சிகள் இத்தகைய ஆதாரங்களின் ஒரு சிறுதுளி மட்டுமே என்பதைக் குறிப்பிட விரும்பு கிறேன். மொத்தத்தில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம்.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101344/language/ta-IN/article.aspx

இணைப்பிற்கு நன்றிகள் நிழலி .

// இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடந்துள்ளது இனப்படுகொலைதான் என்பது எனது வாதம் - கவிஞர் சேரான் //

 

எனக்கும் அப்படித்தான் தோணுது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் நிழலி . 

  • கருத்துக்கள உறவுகள்

சீதைக்கு ராமர் என்ன முறை பாருங்கோ!

கவி சேரனுக்கு மிக்க நன்றி.. எம்மக்களின் விடிவெள்ளியாக உஙகளை போன்றவர்கள் இணைந்து செயற்பட்டு சேரவேண்டிய இடங்களுக்கு விடையங்களை கொண்டு சேர்த்து கொடிய இன அரக்கனிடம் இருந்து எம்மினத்தை காக்க வழி செய்ய வேண்டும். உங்களை சனல் 4 கெலன் மக்ரே சந்தித்தால் நன்றாக இருக்கும்..

Edited by வழிகாட்டி

சேரனின் எழுத்தும் பேச்சும் எப்போதும் மிக தெளிவாக உண்மையாக புள்ளிவிபரங்களுடன் இருக்கும் ,இவர் பேச்சை கேட்பது மிக சுக அனுபவம் உள்குத்து நிறைய இருக்கும் .

இப்படியான துறை சார் நிபுணர்கள் எவரும் எமது போராட்டத்திற்கு பயன்படுத்தப்படாமை "கோரிக்கை அற்று கிடக்குதண்ணை வேரில் பழுத்த பலா " என்ற பாரதிதாசனின் பாடல் தான் நினைவு வருகின்றது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.