Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க தூதரை திருப்பி அழைக்க மத்திய அரசு உத்தரவு

Featured Replies

Tamil_News_large_893014.jpgTamil_News_large_893014.jpg

 

புதுடில்லி : அமெரிக்காவிலிருந்து, நம், பெண் துணை தூதர், தேவயானியை, அமெரிக்கா, திருப்பி அனுப்பி வைத்ததற்கு பதிலடியாக, அவர் அந்தஸ்தில் உள்ள, அமெரிக்க அதிகாரியை, திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு, அமெரிக்காவுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

'விசா' முறைகேடு:இந்தியாவிற்கான அமெரிக்க துணை தூதராக, நியூயார்க்கில் பணியாற்றியவர், தேவயானி கோப்ராகடே. இவர் வீட்டு பணிப்பெண் சங்கீதாவுக்கு, ஒப்பந்த அடிப்படையில், உரிய சம்பளம் தராமல் இருந்ததாகவும், அவரை பணியமர்த்துவதற்காக தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த மாதம், 12ம் தேதி, தேவயானி, அமெரிக்க போலீசாரால், கைவிலங்கிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்; சிறையில் அடைக்கப்படுவதற்கு முன், ஆடைகளைக் களைந்து சோதனை இடப்பட்டார்; 1.5 கோடி ரூபாய் ரொக்க ஜாமினில், அவர் விடுவிக்கப்பட்டார்.

தேவயானியை, இவ்வழக்கில் இருந்து காப்பாற்ற, இந்தியா பல வழிகளிலும் முயற்சி செய்தது. அமெரிக்க சட்டப்படி, கைது செய்யப்பட்ட ஒருவர் மீது, 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி, வரும், 13ம் தேதி, தேவயானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்ற நடவடிக்கையைத் துவக்க, அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

கோரிக்கை:இந்நிலையில், தேவயானியை, ஐ.நா., குழுவின் நிரந்தர உறுப்பினராக நியமித்து, அவரது பாதுகாப்பை இந்தியா அதிகரித்தது. அவரை வழக்கில் இருந்து விடுவிக்கவும், இந்தியா சார்பில் கோரிக்கை விடப்பட்டது.ஆனால், தேவயானி கைது செய்யப்பட்ட போது, அவர், ஐ.நா., குழு உறுப்பினர் பதவியில் இல்லை என்பதால், அவரை விடுவிக்க முடியாது என, அமெரிக்கா மறுத்தது. தேவயானி மீது, விசா மோசடி மட்டுமின்றி, நியூயார்க் கோர்ட்டில், வழக்கறிஞர், ப்ரீத் பராராவிடம் பொய் வாக்குமூலம் அளித்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தேவயானி மீதான, இரண்டு குற்றச்சாட்டுகளும் சேர்த்து, அவருக்கு, அதிகபட்சமாக, 15 ஆண்டுகள் வரை, சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகளை துவக்கி உள்ள அமெரிக்கா, தேவயானியின் தூதர் அந்தஸ்து பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு, இந்தியாவிடம் கேட்டது. இதற்கு இந்தியா மறுத்ததை தொடர்ந்து, 'தேவயானி, அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும்' என, அமெரிக்க நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன் படி, நேற்று, தேவயானி, நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு, நள்ளிரவில் இந்தியா வந்து சேர்ந்தார்.

கோர்ட்டில் ஆஜர்:'நாட்டை விட்டு வெளியேறினாலும், தேவயானி மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட மாட்டாது. உரிய நேரத்தில் தேவயானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும்; அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பும் போது, அவருக்கு எவ்வித அந்தஸ்தும் கொடுக்கப்பட மாட்டாது' என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தேவயானி குறிப்பிடுகையில், ''என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை; இவை அடிப்படையில்லாதது,'' என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு, அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், தேவயானி போல், துணை தூதர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவரை, திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு, அமெரிக்காவுக்கு உத்தரவிட்டுள்ளது.இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில், மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் தங்கியுள்ள, தேவயானி வீட்டு பணிப்பெண், சங்கீதா, தேவயானி வீட்டில் பணிபுரிந்த போது, பல கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறி, பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளார்.

blank.gif

Edited by Athavan CH

1.5 கோடி ரூபாய் ரொக்க ஜாமினில், அவர் விடுவிக்கப்பட்டார்.

 

ஏழைகளின் பணத்திலிருந்து மத்திய அரசு கட்டியிருக்கும். அதனால் பயப்படாமல் தேவயானிக்கு பதிலாக ஒருவரை திருப்பி அனுப்பிவிட்டு காசை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள்.

 

அது சரி ஐ.நா தூதுவரை அமெரிக்கா வெளியேற்றினால் எப்படி இந்தியா அவருக்கு இணையானவர் ஒருவரை வெளியேற்றலாம்? இந்தியாவிலும் ஐ.நா இருக்கா?அப்போது தேவயானிக்கு பதவி உயர்வு கொடுத்தார்களா இல்லையா?  சுத்த கோமாளிகள் கூட்டம். தேர்காசியாவின் அவமானத்தின் சின்னம் அந்த நாடு.

 

எது இருந்தாலும் இந்த முறை சுப்பிர-சாமி  மார்சில் ஐ.நா பிரேரணைகளில் தலையிட்டால் சாணகத்தண்ணி வாளியோடைதான் ஐ.நாவில் தமிழர் காத்திருப்பார்கள்!

நாடுகடத்தப்பட்டு ஒருதடவை நாட்டை விட்டுப்போனால் இனிமேல் ராஜதந்திர சட்ட விதி விலக்குகள் இல்லாது போய்விடும். இனி வாழ்நாளில் அமெரிக்காப் பக்கம் தலை வைத்துப்படுக்க முடியாது. குற்றம் இருப்பதால் அமெரிக்கா சர்வதேச தேடலுக்கு போடமுடியுமா தெரியவில்லை. அது முடியுமாயின் இவவால் இந்தியாவை விட்டு வெளியேற முடியாது. ஆனால் அது இருந்தாலும் அமெரிக்கா அப்படி செய்யும் என்று நினைக்கவில்லை. அது பழிவாங்கலாக கருதப்படலாம். ஆனால் இவவுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆபத்து காங்கிரஸ் பதவியை விட்டு போக போகிறது என்பதாகும். :o

 

அதன் பின்னர் இவ எந்த இடத்தில் மாட்டுப்பட்டாலும் பா.ஜ.கா ஓடிவராது.  அமெரிக்க இன்னும் நான்கு மாதம் பொறுத்திருந்தால் கோழையை வடிவாக கரப்பால் மூடியிருக்கலாம்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

அதன் பின்னர் இவ எந்த இடத்தில் மாட்டுப்பட்டாலும் பா.ஜ.கா ஓடிவராது.  அமெரிக்க இன்னும் நான்கு மாதம் பொறுத்திருந்தால் கோழியை வடிவாக கரப்பால் மூடியிருக்கலாம்.  :D

 

:D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடத்தப்பட்டு ஒருதடவை நாட்டை விட்டுப்போனால் இனிமேல் ராஜதந்திர சட்ட விதி விலக்குகள் இல்லாது போய்விடும். இனி வாழ்நாளில் அமெரிக்காப் பக்கம் தலை வைத்துப்படுக்க முடியாது. குற்றம் இருப்பதால் அமெரிக்கா சர்வதேச தேடலுக்கு போடமுடியுமா தெரியவில்லை. அது முடியுமாயின் இவவால் இந்தியாவை விட்டு வெளியேற முடியாது. ஆனால் அது இருந்தாலும் அமெரிக்கா அப்படி செய்யும் என்று நினைக்கவில்லை. அது பழிவாங்கலாக கருதப்படலாம். ஆனால் இவவுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆபத்து காங்கிரஸ் பதவியை விட்டு போக போகிறது என்பதாகும். :o

 

அதன் பின்னர் இவ எந்த இடத்தில் மாட்டுப்பட்டாலும் பா.ஜ.கா ஓடிவராது.  அமெரிக்க இன்னும் நான்கு மாதம் பொறுத்திருந்தால் கோழையை வடிவாக கரப்பால் மூடியிருக்கலாம்.  :D

உங்கள் கருத்துடன் உடன் படும் வேளையில், உங்களது கடைசி இரண்டு வரிகளுடனும் உடன்பட முடியவில்லை!

 

இது தனிப்படக் காங்கிரசோ, அல்லது பா.ஜ. க, சம்பந்தப்பட்ட விடயமில்லை என்று நினைக்கிறேன்!

 

மேட்டுக்குடி வர்க்கம், நாட்டுப்புற வர்க்கம் சம்பந்தமானது என்று கருதுகின்றேன்!

 

பா.ஜ.க விலும், அத்வானி, நரேந்திர மோடி, சுப்பிரமணியன் சுவாமி, போன்றவர்கள் இந்தப்பிடியைத் தான் பிடிப்பார்கள்!

 

உண்மையில், பா.ஜ.க ஆட்சி, இவவின் குற்றங்களுக்கான வழக்கை இந்தியாவில் நடத்தி, இவவுக்கு உரிய தண்டனையை அளிப்பதால் மட்டுமே, இந்தக் கோமாளிக் கூத்துக்கு, இந்தியா பிராயச்சித்தம் செய்ய முடியும் என நம்புகின்றேன்!

 

அத்துடன் இன்னும் பல கூத்துக்களையும் பார்க்கப்போகிறோம்!

 

நீங்களும் வடக்கு வீதிக்கு வாங்கோ! கூத்து முடியச் சின்ன மேளமும் துவங்கும்! :icon_idea:

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் வடக்கு வீதிக்கு வாங்கோ! கூத்து முடியச் சின்ன மேளமும் துவங்கும்! :icon_idea:

நாங்களும் தயார் கூத்தும் சின மேளமும் பார்க்க

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்களும் வடக்கு வீதிக்கு வாங்கோ! கூத்து முடியச் சின்ன மேளமும் துவங்கும்! :icon_idea:

 

இங்க  கீழ இன்னொருவரும்   தயாராம்

என்னப்பா

களம் நிரம்பி  வழியுதே............ :D  :icon_idea:  :icon_idea:

நாங்களும் தயார் கூத்தும் சின மேளமும் பார்க்க

 

வாங்கோ

வாங்கோ..........

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கன பேர் வந்திருக்கிற படியால, சின்ன மேளம் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு சாம்பிள்! :D

 

http://youtu.be/Xw1NNzHABsY

என்ன கொடுமை ஒரு குற்றவாளி இந்திய தூதரிற்கு பதில் இன்னொரு குற்றமில்லாத அமெரிக்கன் தூதுவரா? இது என்ன நியாயம். இப்போ தெரிகிறதா இவர்களின் வழி ... இலங்கை வழியே... தெருக்கூத்துக்கள் தொடரட்டும்....

இப்படியான தரங்கெட்ட குற்ற நடத்தைகளையும், கேடு கெட்ட தனமான பழிவாங்கல்களையும் இந்திய பாதுகாப்புக் கொள்கைகளாக யாழில் ஆண்டாண்டாக டமாரம் அடித்தார்கள் என்பதும் நகைச்சுவை.

அவங்கள் நாளைக்கு ஒன்றாய் போய்விடுவார்கள் கிடைக்கும் இந்த கப்பில நாங்கள் சயிக்கில் ஓடினால் சரி . :icon_mrgreen: .

பா ஜா கா வந்தால் நிர்வாணமாக அமேரிக்கா தூக்கில் போட்டிருக்கும் நாங்களும் ஒருக்கா பார்த்திருக்கலாம் . :D

அவங்கள் நாளைக்கு ஒன்றாய் போய்விடுவார்கள் கிடைக்கும் இந்த கப்பில நாங்கள் சயிக்கில் ஓடினால் சரி . :icon_mrgreen: .

 

ஏதோ.. உங்களின்ரை வாழ்த்துக்கள் கிடைத்துவிட்டது. இனி இந்தியா தன்ரை அணுக்குண்டுகளால் அமெரிக்காவை சுட்டுப்பொசுக்காது. நாம் பயப்படாமல் வட அமெரிக்காவில் குடியிருககலாம்.  இப்படியான நல்லவர்கள் சிலர் இருப்பதால் வட அமெரிக்காவில் எல்லோருக்கும் பெய்கிறது "உறைபனி மழை." <_<

 

பா ஜா கா வந்தால் நிர்வாணமாக அமேரிக்கா தூக்கில் போட்டிருக்கும் நாங்களும் ஒருக்கா பார்த்திருக்கலாம் . :D

பார்க்க விளையாட்டுக்கள் இல்லாத நாட்களை தேவயானியின் தோக்கை கற்பனை செய்த்து கொண்டு கழிக்க வேண்டியதுதான்.  தேவாயான்யின் *** தூங்கும் உடல் கற்பனைக்கு வராவிட்டா, கனவில் புலி வந்து உறுமும். அதை விட இது சுகமான, இதமான, சொகுசான கற்பனை.

உங்கள் கருத்துடன் உடன் படும் வேளையில், உங்களது கடைசி இரண்டு வரிகளுடனும் உடன்பட முடியவில்லை!

 

இது தனிப்படக் காங்கிரசோ, அல்லது பா.ஜ. க, சம்பந்தப்பட்ட விடயமில்லை என்று நினைக்கிறேன்!

 

மேட்டுக்குடி வர்க்கம், நாட்டுப்புற வர்க்கம் சம்பந்தமானது என்று கருதுகின்றேன்!

 

பா.ஜ.க விலும், அத்வானி, நரேந்திர மோடி, சுப்பிரமணியன் சுவாமி, போன்றவர்கள் இந்தப்பிடியைத் தான் பிடிப்பார்கள்!

 

உண்மையில், பா.ஜ.க ஆட்சி, இவவின் குற்றங்களுக்கான வழக்கை இந்தியாவில் நடத்தி, இவவுக்கு உரிய தண்டனையை அளிப்பதால் மட்டுமே, இந்தக் கோமாளிக் கூத்துக்கு, இந்தியா பிராயச்சித்தம் செய்ய முடியும் என நம்புகின்றேன்!

 

அத்துடன் இன்னும் பல கூத்துக்களையும் பார்க்கப்போகிறோம்!

 

நீங்களும் வடக்கு வீதிக்கு வாங்கோ! கூத்து முடியச் சின்ன மேளமும் துவங்கும்! :icon_idea:

 

தொடர் உந்துகள் எல்லாவற்றையும் இஞ்சின்கள் இழுத்து செல்லவதால் அவர் செய்வதெல்லாம் ஒன்றாக இருக்கது. பயணிகள் வண்டி தரிப்பிடம் வந்தால் சனங்கள் எறி இறங்குவார்கள். சரக்குவண்டி தரிப்பு நிலையத்துக்கு வந்தால் பெட்டிகள் கழற்றி மாற்றுவார்கள். 

 

ஜெயலலிதா சின்ன மேளம் படத்துக்காக ஆடினாலும் பிரபல பரத நாட்டியக்காறியும் கூட.  அது அவர் ஆட சொல்பவர்களைப்பொறுத்தது.

 

சோனியா இந்தியர்களை ஆளுவதற்கும், இந்தியர்கள தங்களைத்தாங்கள் ஆஉவதற்கும் எப்படியோ வித்தியாசம் இருந்துதான் தீர்க்க போகிறது. 

 

நான் இதில் அமெரிக்கா பின்வாங்கும் என்று ஒரு திரியில் சொல்லியிருந்தேன். காரணம் உபயோகம் இல்லாத சண்டை பிடித்து நட்டமாக அமெரிக்க பொது மக்களின் பணத்தை செல்விடுவது கஸ்டம். ஆனால் துள்ளி துள்ளி வீரம் காட்ட சோனியாவால் முடியும். ஏன் எனில் செய்யப்படும் முட்டாள் தனங்கள் அவரின் பெயரில் செய்யப்படுவதில்லை. அவரின் வாக்குக்கள் இந்த முறையும்கூட மேலே போகலாம்.  மேலும் மன்மோகன்சிங், சிதம்பரம் எல்லோரும் தோற்பது சோனியாவுக்கு வாசி மட்டுமே.

 

ஆனால் மோடி இந்த வகை முடிவுகளை எடுக்க முடியாது. அவர்கள் ஏற்கனவே சுப்பிரமணிய சாமியை அடக்கி வாசிக்கும் படி கூட அறிவுறுத்தியிருந்தார்கள்.( அதானல் அவர் திருந்திவிட்டார் என்பதல்ல). நாங்கள் மோடி வெல்ல வேண்டிய பொறிமுறைக்கும், மோடி செயலாற்ற வேண்டிய பொறிமுறைக்கும், சோனியா, ராகுள் வெல்ல வேண்டிய பொறிமுறைக்கும், மன்மோகன் சிங் செயலாற்ற வேண்டிய பொறிமுறைகளிற்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை அவதானிக்க வேண்டும்.  வடக்கிலும் பல இடங்களில் தாழ் குலங்கள் தேர்தல் மூலம் பதவிகளுக்கு வரத்தொடங்கிவிட்டார்கள். மோடி சிலவற்றை செய்யாமல் பதவிக்கு வர முடியாது. 

 

மோடி பொருளாதார மேதை அல்ல. குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிதான் அவரின் பிடி. மன்மோகன் சிங் பிரதமாரனது "சமயவாதி, கிருஸ்ண அவதாரம், நரசிமராவோவால்" நிதி மந்திரியாக வைதிருந்தபோது செய்தவையால். (இப்போ சோனியாவால் பிரதமராக்கபட்டவுடன்  அந்த சாதனைகளை செய்த முறைகளை மறந்துவிடார் போலிருக்கு). சிதம்பரம் மிக திறமையான நிதி மந்திரி. பிரணாப் பெயர் போன ஒரு நிதி மந்திரி.  ஆனால் இவர்களை வைத்து வேலை வாங்கும் சோனியாவின் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி கீழே போய்விட்டது. 

  • தொடங்கியவர்

அமெரிக்க இமிக்ரேஷன் லிஸ்ட்டில் தேவயானி பெயர் தேவயானி திரும்பிவந்தால் கண்டிப்பாக கைது செய்வோம் : அமரிக்கா எச்சரிக்கை

 

Tamil_Daily_News_7663691044.jpg

 

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் தேவயானி திரும்ப வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் இந்திய துணை தூதராக பணியாற்றியவர் தேவயானி. இவர் மேல் விசா மோசடி குற்றம் சாட்டி, தெருவில் கைவிலங்கிட்டு, அமெரிக்கா கைது செய்தது. சிறையில் ஆடைகளைந்து சோதனை செய்யப்பட்டும், கொடூர குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டும் சித்ரவதை செய்யப்பட்டார். இந்த கைதுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
Tamil_News_large_893465.jpg
இதைத் தொடர்ந்து தேவயானியை ஐ.நா.வுக்கான தூதராக பணியமர்த்திய இந்தியா, அவர் மீதான நடவடிக்கையை கைவிடவேண்டும், அமெரிக்கா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரியது. இந்த கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க அரசு, இந்திய தூதர் மீது வழக்கு விசாரணை தொடரும் என்று அறிவித்தது. இதனால் இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. தூதரகங்களில் தனிப்பட்ட முறையில் வர்த்தக ரீதியில் செய்யப்பட்ட வணிகங்களை உடனே நிறுத்துமாறும் உத்தரவிட்டது.

இதையடுத்து, தேவயானி உடனே அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று முன்தினம் அமெரிக்க அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக இந்தியா திரும்பினார். இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரை 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது:

தேவயானி தூதராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார், எதிர்காலத்தில் அவர் அமெரிக்கா வருவதை கண்காணிக்க அவரது பெயர் இமிக்ரேஷன் லிஸ்ட்டில் வைக்கப்படும். கிளம்பும் முன்னர் அவரிடம் கைது வாரண்ட் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்க தூதர் வெளியேற்றப்படுவது வருத்தமளிக்கிறது. இதனால் இந்திய அமெரிக்க உறவில் பின்னடைவு ஏற்படாது. இதுகுறித்து இந்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி, இருநாட்டு உறவை புதுப்பிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்.. அடுத்தவனை ஏய்த்து வெளியுறவுத்துறைக்குள் புகுந்து அமெரிக்காவரையில் போக முடிந்தது.. இப்ப முதலுக்கே மோசம்போல் இருக்கு.. :unsure: வளர்ந்த நாடுகள் இனிமேல் தூதராக ஏற்கமாட்டினம்.. உகாண்டா, பங்களாதெஷ் என்று முயற்சிசெய்ய வேண்டியதுதான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்.. அடுத்தவனை ஏய்த்து வெளியுறவுத்துறைக்குள் புகுந்து அமெரிக்காவரையில் போக முடிந்தது.. இப்ப முதலுக்கே மோசம்போல் இருக்கு.. :unsure: வளர்ந்த நாடுகள் இனிமேல் தூதராக ஏற்கமாட்டினம்.. உகாண்டா, பங்களாதெஷ் என்று முயற்சிசெய்ய வேண்டியதுதான்.. :D

இசை, இதுக்குத் தான் தமிழிலை நல்ல பாட்டொண்டு இருக்கு!

 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்,

கொண்டு வந்தானொரு தோண்டி,

அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!

 

ஜெய் ஹிந்த்! :lol:

அந்த மனிசுக்கு மெடிக்கல் டிக்கிறி  காசு கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் போலிருக்கு. இல்லையாயின் படித்த மெடிசினை வைத்து ஒரு வைத்திய சாலையில் ஒரு பங்கை வாங்கி நன்றாக முன்னால் போயிருந்திருக்கலாம். வைத்தியத்துறையில் இறங்க பயந்து இந்த கூத்தாடியிருக்கிறா.

  • கருத்துக்கள உறவுகள்

கொப்ரகடே இனிமேல் கொப்பற்றகடையை பார்க்க போகவேண்டியதுதான்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசை, இதுக்குத் தான் தமிழிலை நல்ல பாட்டொண்டு இருக்கு!

 

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்,

கொண்டு வந்தானொரு தோண்டி,

அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!

 

ஜெய் ஹிந்த்! :lol:

இதுக்குத்தான் வள்ளுவர் அன்றே சொல்லிச்சென்றார்..

அநியாயம் பண்ணினால்..

முனியாண்டி கேப்பான்.. :lol:

இதுக்குத்தான் வள்ளுவர் அன்றே சொல்லிச்சென்றார்..

அநியாயம் பண்ணினால்..

முனியாண்டி கேப்பான்.. :lol:

 

இந்த குறள் மட்டும் வெகு சுருக்கமா இருக்கு..  :lol:

  • தொடங்கியவர்

எனது மகள்கள் தனியாக என்ன செய்கிறார்களோ - தேவ்யானி கோப்ரகடே கவலை!

 

 

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியுள்ள தூதரக துணை அதிகாரி தேவ்யானி கோப்ரகடே ‘துணையாக நான் அருகில் இல்லாமல் அமெரிக்காவில் தனியாக இருக்கும் எனது இரண்டு மகள்களும் என்ன செய்கிறார்களோ?’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

img1140112013_1_1.jpg
 


இதுதொடர்பாக தேவயானி கூறியதாவது:

தொடர்ந்து தான் அமெரிக்காவிலேயே பணிபுரிய வேண்டும். மகள்களும் அங்கேயே தங்கி படிக்க வேண்டும் என்று எனது கணவர் முடிவு செய்து விட்டால் அமெரிக்காவுக்கு நான் செல்லவே முடியாது என்ற நிலையில் எங்கள் குடும்பம் ஒன்றும் வாய்ப்பே கிடையாதா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

 

எனது 4 மற்றும் 7 வயது மகள்கள் இருவரும் என்னைவிட்டு பிரிந்து இருந்ததே கிடையாது. நான் திரும்பவும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாது என்பதை புரிந்துக் கொள்ள முடியாத வயதில் இருக்கும் எனது மகள்களை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகின்றேன்.

இந்தியாவுக்கு வந்த பிறகு அவர்களுடன் நீண்ட நேரம் போனில் பேசினேன். ’அம்மா.. நீங்கள் எப்போது வீட்டுக்கு வருவீர்கள்?’ என்று எனது இளைய மகள் கேட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் கண்ணீருடன் வாயடைத்து நின்றுவிட்டேன். உதவிக்கு கூட யாருமின்றி என் மகள்களை கணவரிடம் ஒப்படைத்து விட்டு வந்துள்ளேன்.

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற அவர் என்ன சிரமப்படுகிறாரோ..? என்னை பார்க்க முடியாமல் எனது மகள்கள் எப்படி தவித்துக் கொண்டிருக்கிறார்களோ.. இந்நேரம் என்ன செய்கிறார்களோ’ என்பதை நினக்கும்போது என்னால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயம் பண்ண முதல் இதையெல்லாம் யோசித்திருக்க வேணும்.. மேட்டுக்குடி ஆணவத்தில் செய்துவிட்டு இப்ப பிள்ளைகளை நினைத்து ஏங்குகிறேன் என்பது போலியானது.. உண்மையான பாசம் இருந்தால் கணவரை வேலையை விட்டுவிட்டு இந்தியா வரும்படி தேவயானி கேட்க வேண்டும்.. :huh:

எப்படிப் பார்த்தாலும் அமெரிக்கா இந்தியர்களை மதிக்காத நாடு என்று இந்திய அரசு மற்றும் ஆர்ப்பாட்டம் செய்த இந்தியர்கள் சொல்லிவிட்டார்கள்.. :rolleyes: மனைவிக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி கணவர் வேலையை விடமாட்டாரா என்ன??

பிரச்சனையை ஏற்படுத்தியது இவர்கள். தன்னை அமெரிக்கா நாடு கடத்தும் வரை இந்தியாவில் வைத்து அமெரிக்க அதிகாரிகளுக்கு உபத்திரபம் கொடுத்த்தது இவர்கள். போகும் போது பிள்ளைகளை கொண்டு போக கேட்டிருந்திருக்க முடியும். 4 வயதை நிச்சயமாக நாடு கடத்தும் விமானத்தில் ஏற்றிருப்பார்கள்.  பிள்ளைகள் தொடர்ந்தும் அங்கே படிக்க இன்னொரு வேலைக்காறி கண்டு பிடிக்க ஆயத்தமாகிறா. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.