Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்கள் புலிகளோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனை - அரசோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனைதான்! - பிரான்ஸ் தமிழரது குடியுரிமை ரத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தமிழர்கள் புலிகளோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனை - அரசோடு தொடர்புவைத்தாலும் பிரச்சனைதான்! - பிரான்ஸ் தமிழரது குடியுரிமை ரத்து! 
[sunday, 2014-01-12 09:09:29]
News Service
இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டதற்காக, ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பிரான்ஸ் மீளப்பெற்றுக்கொண்டுள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்றுவந்துள்ளார்.
 
அத்துடன் இலங்கை தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ளார். படம்இவரது குடும்ப விபரங்களை நிர்வாக ரீதியாக ஒழுங்கு படுத்துவது தொடர்பான ஒரு சந்திப்பில் இந்த விபரங்கள் பிரான்ஸ் அகதிகள் திணைக்களமான OFPRA க்கு தெரியவந்தைதையடுத்து அந்த அமைப்பு அந்த இலங்கைத் தமிழருக்கு வழங்கிய அகதி தகுதி நிலையை திரும்பப் பெற்றுள்ளது.
 
இது தொடர்பாக OFPRAஅவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில். '2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அகதிகளுக்கான ஜெனீவா சட்டத்தின் 1சி 1 சரத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு 3 தடவைகளுக்கு மேல் சென்று வந்தது,நிர்வாக ரீதியாக தொடர்பு கொண்டது.இலங்கைவில் உள்ள அரச நிர்வாகத்துடன் எந்தவித தடங்கலுமின்றி தொடர்பு கொண்டது ஆகிய காரணங்களின் அடிப்படையில் மீளப் பெற்றுக்கொள்கிறோம்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்கத்தால் அச்சுறுத்தல் உள்ளது என்று அகதி தகுதிநிலை பெறுவதற்காக நீங்கள் தெரிவித்த காரணங்கள் இலங்கை அரசாங்கத்துடன் நீங்கள் எந்தவித நெருக்கடிகளுமின்றி தொடர்பு கொண்டதன் மூலம் வலுவற்றதாகியுள்ளதென தெரிவித்துள்ள பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் (OFPRA)) வெளிநாட்டவர் வருகை மற்றும் தங்குவதற்கான உரிமை தொடர்பான பிரான்சின் எல் 731-1,எல் 731-2 மற்றும் ஆர்733-10 ஆகிய சட்ட சரத்துக்களின் கீழ் தங்களது முடிவை ஒரு மாத காலத்துக்குள் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
 
படம்'பிரான்சில் அகதி தகுதி நிலை பெற்ற ஒருவர் இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாகவே அல்லது வேறெந்த வகையிலுமோ எந்தவித தொடர்பும் வைத்திருக்க கூடாது' என்ற விடயம் தனக்கு தெரியாது என்று பாதிக்கப்பட்டவர் தெரிவித்த கருத்தை பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் ஏற்க மறுத்துவிட்டது.புலம் பெயர்ந்த தமிழர்களுடைய வரலாற்றில் பிரான்சில் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதிநிலை திரும்பப் பெறப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
 

பறுவாயில்லை நல்ல செய்தியே... அப்படியே இலங்கைக்கு போறவயினுடைய குடியுரிமையையும் ரத்து செய்யலாமே??

புலம்பெயர் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்படவேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்படவேண்டும்

 

இவர் மேன்முறையீடு செய்து.. அப்படி இப்படிப் போய் அதில் எல்லாம் பிரான்ஸ் அரசு வென்றால்.. மற்றைய நாடுகளும் இதனை பின்பற்றலாம். ஏனென்றால்.. இந்த விசா ரத்து.. ஜெனிவா அகதிகள் பிரமாணங்களை குறித்த நபர் மீறினார் என்று உள்ளது. பல மேற்குநாடுகளும் ஜெனிவா அகதிகள் பிரமாணங்களின் அடிப்படையில் தான் எம்மவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கி உள்ளன. ஆனால் நம்மவர்களுக்கு.. அகதி அந்தஸ்து.. என்பது பொருண்மியம் சார்ந்ததே அன்றி பலர் அதற்கு உண்மையான தகுதியற்றவர்கள் என்பதே உண்மை. ஒட்டுக்குழு ஆக்கள் கூட அகதி அந்தஸ்துப்பெற்றிருக்கிறார்கள்.. ஆனால் அவர்களுக்கு சிறீலங்கா அரசே அடைக்கலமும்.. இராணுவ பாதுகாப்பும் அளிக்கிறது. கள்ளப் பாஸ்போட்டும் அதுவே தயார் செய்து கொடுக்கிறது. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தூதரகங்களில் தீபாவளி, பொங்கல் கொண்டாடினவைக்கு இனி கெடிக்கலக்கமாக இருக்கப்போகுது..

பறுவாயில்லை நல்ல செய்தியே... அப்படியே இலங்கைக்கு போறவயினுடைய குடியுரிமையையும் ரத்து செய்யலாமே??

 

இதுவும் நடந்தால் மிகவும் மகிழ்ச்சி. :D

 

ஆனால் அகதி என்ற நிலையிலிருந்து அந்த நாட்டு குடியுரிமையை பெற்று விட்டால் அதன் பின் அகதிக்கான இதே சட்டத்தை அமுல் படுத்த முடியுமா தெரியாது. :rolleyes:

ஒட்டுக்குழு ஆக்கள் கூட அகதி அந்தஸ்துப்பெற்றிருக்கிறார்கள்.. ஆனால் அவர்களுக்கு சிறீலங்கா அரசே அடைக்கலமும்.. இராணுவ பாதுகாப்பும் அளிக்கிறது. கள்ளப் பாஸ்போட்டும் அதுவே தயார் செய்து கொடுக்கிறது. :lol::icon_idea:

 

இதில் யார் யார் என்ன விதமாக கேஸ் கொடுத்தார்கள் என்பதை பார்ப்பார்கள் என நினைக்கிறேன். :rolleyes:

 

இராணுவத்தால் பிரச்சினை / இரு பகுதியாலும் பிரச்சினை என கேஸ் கொடுத்து அகதி விசாவை பெற்று விட்டு அவர்கள் பரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு செல்லக்கூடிய நிலையில் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தான் வேண்டும்.

அதே போல் புலிகளால் தான் ஆபத்து என கேஸ் கொடுத்தவர்களை நாட்டில் புலிகளால் இப்ப ஆபத்து இல்லை தானே என கூறி திருப்பி அனுப்பினால் நல்லது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

குடியுரிமை பெற்றுக்கொண்டு இலங்கை போய் வருபவர்களை ஒன்றும் செய்யமுடியாது என நினைக்கிறேன். பிற நாடு ஒன்றின் சட்டப் பாதுகாப்பு உள்ள காரணத்தினால் போய் வந்தேன் என்று வாதாடலாம்.

ஆனாலும், அகதியாகவோ, படிப்பைக் காட்டியோ அல்லது வேலையைக் காட்டியோ வந்து குடியுரிமை பெற்றவர்களின் நிலை என்று வேண்டுமானாலும் மாற்றப்பட‌லாம். அத்தகைய குடியுரிமையை தகுந்த காரணங்களுடன் விலக்கிக்கொள்ள கனடா அரசுக்கு அதிகாரம் உள்ளது. மற்ற நாடுகளைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் அவரளுக்கு இந்நாட்டில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமையை விலக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அவரளுக்கு இந்நாட்டில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமையை விலக்க முடியாது.

இதுக்கு சுவிஸ் தான் பட்டையை கிளப்புவான்கள் 15 வருஷம் இருந்த 2 பிள்ளைகள் சுவிஷில் பிறந்ததுகள் இருந்தும் பக்கத்து வீட்டு கிழவி தனக்கு அடிச்சிட்டுனம் என பொய்யா தகவல் குடுக்க முழுக்குடும்பமும் கொழும்பிலை கொண்டு போய் விட்டவன்கள் . :)

 

அதே போல் புலிகளால் தான் ஆபத்து என கேஸ் கொடுத்தவர்களை நாட்டில் புலிகளால் இப்ப ஆபத்து இல்லை தானே என கூறி திருப்பி அனுப்பினால் நல்லது. :icon_mrgreen:

அப்ப பெரியவர் அர்யூன் இனி யாழ்பாணத்தில் இருந்து யாழுக்கு வருவார் என்கிறீங்க. :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு சுவிஸ் தான் பட்டையை கிளப்புவான்கள் 15 வருஷம் இருந்த 2 பிள்ளைகள் சுவிஷில் பிறந்ததுகள் இருந்தும் பக்கத்து வீட்டு கிழவி தனக்கு அடிச்சிட்டுனம் என பொய்யா தகவல் குடுக்க முழுக்குடும்பமும் கொழும்பிலை கொண்டு போய் விட்டவன்கள் . :)

அப்ப பெரியவர் அர்யூன் இனி யாழ்பாணத்தில் இருந்து யாழுக்கு வருவார் என்கிறீங்க. :D  :D  :D

கனடாக்காரன் ரொம்ப நல்லவன்.. :D சுற்றுலாவில் வந்து இங்குள்ள மருத்துவமனையில் பிள்ளை பிறந்தாலும் குடுயுரிமை குடுக்க சந்தர்ப்பம் இருக்கு என்று கேள்விப்பட்டேன்.. :unsure::huh:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களோடையே இருந்திட்டு 2009 மே18க்கு பிறகுபெண்சாதி,பிள்ளைகளுடன் சரணாகதி அரசியல் என்று மகிந்தவுடனும்,கோத்தாவுடனும் பல்லை இளித்தபடி படம் எடுத்தபடி படம் எடுத்திட்டு அதை முகப்பு புத்தகத்தில் போட்டு பவுசு காட்டுறவைக்கும்,சிங்களவன் நல்லவன் கிரிக்கட் விளையாட்டு  என்டு சிலோன் எம்பஸியோடு ஒட்டுறவா இருக்கிற ஜெர்மன் ,சுவிஸ்,லண்டன்,கனடா,அவுஸ் மானங் கெட்ட தமிழுகளுக்கு முக்கியமா மாற்றுக(ழு)க்கு குறூப்கள்  பிரான்ஸ் தமிழரது குடியுரிமை ரத்துஇச்செய்தியை இனைத்து ஆதாரத்துடன் அவர்களின் விபரங்களுடன் அவைக்கு பிடிக்காதவையால் பெட்டிசம் போட்டு அலுப்பு குடுக்கலாம் என்கிறீங்கள் . :D  :D  :D பெரிதாக சில நாடுகளில் நடவடிக்கை எடுக்காவிட்டாலும் சில தொல்லைகளை சந்திக்க வேண்டி வரும் .


இந்த செய்திக்கு பிறகு முகப்பு புத்தகத்தில் சிறிலங்கா டூர் சம்மந்தபட்ட படங்கள் அவசரமாக அகற்றபடுகின்றன பந்த பரமசிவன்களின் fb படமில்லாமல் மூளியாய் இருக்கு . :lol:

கனடாக்காரன் ரொம்ப நல்லவன்.. :D சுற்றுலாவில் வந்து இங்குள்ள மருத்துவமனையில் பிள்ளை பிறந்தாலும் குடுயுரிமை குடுக்க சந்தர்ப்பம் இருக்கு என்று கேள்விப்பட்டேன்.. :unsure::huh:

 

பிரான்சில்,

 

அகதி + அகதி = பிள்ளை பிரெஞ்சு குடியுரிமை

 

(அகதி + immigrant visa), (immigrant visa + immigrant visa) = பிள்ளைக்கு பிரெஞ்சு குடியுரிமை கொடுக்க மாட்டார்கள். 13 வயதில் அந்த பிள்ளை பிரெஞ்சு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கும் சட்டங்கள் உள்ளது என நினைக்கிறேன். பிரான்சில் தொடர்ந்து வசித்தார்களா இல்லையா எவ்வளவு காலம் வசிக்க வேண்டும் போன்றன.

 

ஆனால் இருவரும் குடியுரிமை எனின் பிள்ளையும் குடியுரிமை.

 

ஒருவர் குடியுரிமை மற்றவர் immigrant visa என்றால் எப்படி என தெரியவில்லை.

 

ஏனையவை பற்றியும் தெரியவில்லை.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், அகதியாகவோ, படிப்பைக் காட்டியோ அல்லது வேலையைக் காட்டியோ வந்து குடியுரிமை பெற்றவர்களின் நிலை என்று வேண்டுமானாலும் மாற்றப்பட‌லாம். அத்தகைய குடியுரிமையை தகுந்த காரணங்களுடன் விலக்கிக்கொள்ள கனடா அரசுக்கு அதிகாரம் உள்ளது. மற்ற நாடுகளைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் அவரளுக்கு இந்நாட்டில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமையை விலக்க முடியாது.

பொய்யான தகவல்களை கொடுத்து குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை எந்த காலத்திலும் அகற்றும் சட்ட உரிமை பெரும்பாலான நாடுகளுக்கு இருக்கிறது.

 

குடியுரிமை பெற்றுக்கொண்டு இலங்கை போய் வருபவர்களை ஒன்றும் செய்யமுடியாது என நினைக்கிறேன்.

இலங்கையில் தமக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று காரணம் காட்டி அகதி கோரிக்கை வழங்கி அதன் வழியாக குடியுரிமை பெற்று, பின் இலங்கைக்கு பாதுகாப்பாக போய் வந்தால், இவர்கள் பொய்யான தகவல்களை கொடுத்து குடியுரிமை பெற்றார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சந்தேகத்தை யாராவது எழுப்பாத வரையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரச்சினைகள் வராது. யாராவது இந்த சந்தேகத்தை எழுப்பினால் இலங்கை இன்று பாதுகாப்பான நாடா? இல்லையா? என்ற கேள்வியே இவர்களின் வெளிநாட்டு குடியுரிமையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இலங்கை இன்றும் ஆபத்தான நாடு என்று விசாரணை செய்பவர்கள் நம்பினால், இலங்கைக்கு பாதுகாப்பாக போய் வந்தவர்கள் தமது அகதி கோரிக்கையில் பொய் காரணங்களை கொடுத்திருகிறார்கள் என்ற முடிவுக்கு விசாரணை செய்பவர்கள் வருவார்கள்.

 

பிற நாடு ஒன்றின் சட்டப் பாதுகாப்பு உள்ள காரணத்தினால் போய் வந்தேன் என்று வாதாடலாம்.

  • பிற நாடு ஒன்றின் சட்டம் இலங்கையில் நடைமுறையில் இல்லை. இலங்கையில் இலங்கை சட்டமே செல்லுபடியாகும்.
  • உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிப்பவர்கள் இலங்கை சட்டங்களையோ வேறு நாட்டு சட்டங்களையோ மதித்து செயல்படுபவதில்லை. ஆகவே இவர்கள் வேறு நாட்டு சட்டங்களை மதித்து ஆபத்து விளைவிக்கவில்லை என்று வாதிடுவது ஏற்றுக்கொள்ள படும் சாத்தியம் குறைவு.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களில் பெரும்பாலானோர் சோடித்த கதைகள்.. அடுத்த வீட்டு இடித்த படத்தை எடுத்து வீடு இடிஞ்சு பேச்சுது என்று காட்டினதுகள்.. காசு கொடுத்து சிறீலங்கா பொலிஸிடம்.. பிடிப்பட்டனான்.. என்று வாங்கின ஆதாரங்கள்.. தாங்களே முதுகில பிளேட்டால கீடிட்டு.. ஆமி கீறினது என்று காட்டினது.. ஊரில புருசன் உள்ளதை மறைச்சு.. இல்ல கொழும்பில.. வாற இடத்தில... லொச்சில.. ஏஜென்சிக்காரனோட.. எல்லாம் செய்திட்டு... இங்க வந்து பாலியல் வல்லுறவு என்று மெடிக்கல் சேர்டிபிக்கட் வாங்கினது.. தடிமனுக்குப் போய்.. டிப்பிரசன் என்று மருத்துவரிடம் கெஞ்சி மண்றாடி.. மருத்து வாங்கினது.. மற்றும் பத்திரிகைகளில் தாங்களாகவே காணவில்லை விளம்பரம் செய்துவிட்டு.. ஓடி வந்து அகதிஅந்தஸ்து வாங்கினது தானே அதிகம். உதுகளை எல்லாம் கிளற வெளிக்கிட்டால்.. புலம்பெயர் தமிழர்களில் 90% அகதிஅந்தஸ்துப் பெற்று குடியுரிமை வாங்கின ஆக்கள் ஊருக்கு எல்லோ போகனும்..! :D:lol:

Edited by nedukkalapoovan

வாலுகளை ஒரு இடமும் இருக்க விடமாட்டாங்கள் போல .

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்.. நான் சொல்ல வந்தது அதுவல்ல..

1) இலங்கை அரசின் இராணுவத்தால் பிரச்சினை என எழுதிக் கொடுத்து, பின்னர் குடியுரிமையும் பெற்று ஒருவர் இலங்கை சென்று வந்தால், அவர் குடியுரிமை பெற்ற நாட்டின் குடிமகனாகவே சென்று வந்தவர் ஆகிறார். அவருக்கு ஒன்று நேரும் பட்சத்தில் இலங்கை அரசு சட்டபூர்வமாக பதில்கூற கடமைப்பட்டது.

2) புலிகளால் பிரச்சினை என்று எழுதிக் கொடுத்தவர்களை இப்போது புலிகள் இல்லை என்கிற ஒரு காரண்திற்காக திருப்பி அனுப்பப்போவதில்லை.

3) இருபக்க்தாலும் பிரச்சினை என்று எழுதிக்கொடுத்தவர்களும் குடியுரிமை பெற்றவராகின் அந்த நாட்டின் சட்டப்பாதுகாப்பை பெற்றுக்கொள்கிறார்.. அதாவது காரணமில்லாமல் வெள்ளை வானில் கடத்தப்பட்டால் தூதரகம் மூலம் விளக்கங்கள் கோரலாம். ஆனால் முறைப்படி குற்றம் பதிவு செய்து கைது செய்யப்பட்டால் இலங்கைச் சட்டமே செல்லுபடியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்.. நான் சொல்ல வந்தது அதுவல்ல..

1) இலங்கை அரசின் இராணுவத்தால் பிரச்சினை என எழுதிக் கொடுத்து, பின்னர் குடியுரிமையும் பெற்று ஒருவர் இலங்கை சென்று வந்தால், அவர் குடியுரிமை பெற்ற நாட்டின் குடிமகனாகவே சென்று வந்தவர் ஆகிறார். அவருக்கு ஒன்று நேரும் பட்சத்தில் இலங்கை அரசு சட்டபூர்வமாக பதில்கூற கடமைப்பட்டது.

2) புலிகளால் பிரச்சினை என்று எழுதிக் கொடுத்தவர்களை இப்போது புலிகள் இல்லை என்கிற ஒரு காரண்திற்காக திருப்பி அனுப்பப்போவதில்லை.

3) இருபக்க்தாலும் பிரச்சினை என்று எழுதிக்கொடுத்தவர்களும் குடியுரிமை பெற்றவராகின் அந்த நாட்டின் சட்டப்பாதுகாப்பை பெற்றுக்கொள்கிறார்.. அதாவது காரணமில்லாமல் வெள்ளை வானில் கடத்தப்பட்டால் தூதரகம் மூலம் விளக்கங்கள் கோரலாம். ஆனால் முறைப்படி குற்றம் பதிவு செய்து கைது செய்யப்பட்டால் இலங்கைச் சட்டமே செல்லுபடியாகும்.

இசைக்கலைஞன்,

நீங்கள் சொல்வது அனைத்தும் சரியானதே. ஆனால், இந்த காரணங்களுக்காக, இலங்கையை வெளிநாட்டு மக்களுக்கு பாதுகாப்பான நாடாக வெளிநாடுகள் கருதுவதாக தெரியவில்லை. இந்த நிலையில் இலங்கையில் தமக்கு ஆபத்து என்று காரணம் காட்டி புகலிடம் தேடிய ஒருவர் இலங்கைக்கு மீண்டும் செல்லும்போது அவர் புகலிடம் தேடியபோது தெரிவித்த காரணம் (தனிப்பட்ட அவரை பொறுத்த அளவில்) பொய்யா ? என்ற கேள்வி விசாரணை செய்பவர்கள் மத்தியில் தோன்றும்.அதையே நான் முதன்மை படுத்தினேன்.

ஜெனிவா மகா நாட்டின் கீழ் வழங்கப்படும் குடி உரிமை நிபந்தனைகளுடன் வழங்கபடும் குடி உரிமைகள் அல்ல. இதனால் பயணங்கள் நிபந்தனைகளுடன் செய்ய வேண்டியதில்லை. அவர் தனது பிறப்பு நாட்டில் ஏர்கவே இருக்கும் சொத்துப்பத்துக்களைப்பாதுகாக்க அகதி நாட்டின் உதவிகளை பயன் படுத்தினால் அதில் தவறு இல்லை. 

 

தனது நாட்டுக்கு திரும்பிப்போவது குற்றம் அல்ல. திரும்பி போய் தனது குடியேற்ற நாட்டின் குடியுரிமையை ஒருவர் ரத்து செய்தால் மற்றவரின் அகதி நிலையை பாதிக்காது. முன்னைய உண்மைகள் இன்றும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. அகதிக்குடியேற்ற நாடு ஒன்றில் குடியேற்றியவர், அந்த நாட்டின் சட்ட்ங்கள் இடம் கொடுத்தால், இன்னொரு புது நாட்டிலும் குடியேறி அங்கும் தான் வேறுவகை குடியுரிமை பேற்றுக்கொள்ளலாம். அது அவரின் முன்னைய அகதி குடியுரிமையை பாதிக்காது. குற்ற நாட்டில் ஒருவரின் வாழ்கையில் இருக்கும் அனு கூலங்கள் அகதி நாட்டில் இன்னொருவரின் அகதி நிலையை பாதிக்காது. எனவே சிலர் சட்டங்களை விளங்காமல் பொதுப்படையாக்கி மிரட்டல்கள் எழுதுகிறார்கள்.

 

நெடுக்காலை போவனின் பொதுப்படையான குற்றங்க சாட்டுகள் அகதி வழங்களில் கணிக்கப்படுவதில்லை. அவரின் பிழையான புரிந்து கொள்ளல் முதுகில் இருக்கும் காயத்துக்கு அகதிநிலை கொடுப்பது என்பது. அவர் ஒரு அகதி நிலை கோரும் வழக்கொன்றுக்குள்ளால் போய்வந்தால் தெரியும் முதுகில் இருந்த காயம் பிளேட் வெட்டு என்று நிரூபித்தாலும் அகதி நிலை மறுக்கப்படாது என்பது. அகதி நிலை என்பது ஒருவருக்கு குற்ற் நாட்டில் வாழ இருக்கும் அரச பிரச்சனை சம்பந்தமானது. முதுகுக்காயம் வழக்கின் மற்றய அறிக்கைகளுடன் இணந்து அவருக்கு நாட்டில் இருக்கும் பிரச்சனையை விளங்கவைத்தால் மட்டுமே அது அவரின் பிரச்சனகளுக்கான ஆதரங்களில் ஆதாரமாக கொள்ளப்படும். ஒருவர் ஆமியுடனோ அல்லது பொலிசுடனோ பிரச்சனையில் இருக்கிறார் என்பதும், அது சாதாரண குற்றத்தினால் அல்ல, அரசியல் பிணக்குப் பாடுகளால் என்பதும், ஒருவரை conventional refugee என்றதை நிரூபிக்க் போதுமானவை அல்ல. conventional refugee அரசுடன் முரன்பட அவனது, சாதி, மதம், தேசியம், சிந்தனை போன்ற்வைகள் காரணமாகின்றன. ஆனால் இந்த காரணங்களால் எழும் முரன்பாடு அவனின் வாழ்க்கையை குற்ற நாட்டில் பாதிக்கிறது என்பது கருத்தாகாது. கையளிக்கும் அறிக்கை பல படிகளை தெளிவாக தொடுத்து தனது நிலையை நீதிபதி/ குடியுரிமை திணைகள் விசாரணை அதிகாரிக்கு விள்ங்க வைக்க வேண்டும். இதனால் மட்டுமே அகதிநாடுகள் அகதிக்கு இனாமக வழக்கறிஞசர் உதவி பெற்றுக்கொடுக்க முன் வருகிறார்கள். 

 

பரிசில் நடந்தது பெரும்பாலும் இலங்கை தூவராலயம் செய்த காட்டிக்கொடுப்பாக இருக்கலாம். இவர்கள் இலங்கை தூவராலாயத்திற்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது அந்த நாட்டு சட்டங்களுடன் தமக்கு பிரச்சனை இல்லை என்று பல ஆதரங்கள் காட்ட வேண்டியிருக்கும்.(மந்திரிகளின் தபால்கள் கூட பணம் கொடுத்து வேண்டி வந்திருந்திருக்கலாம்). சொத்து பத்துகள் வெளியிட வேண்டியிருக்கும். இவற்றை எல்லாம் செய்து தம்மைத்தாம் முட்டாள்கள் ஆக்குபவர்கள் படிக்க வேண்டிய பாடம் தூதுவராலயங்களால் காட்டிகொடுக்கப்பட வேண்டியதேகானால் அதற்காக தூதுவரால களியாட்டத்தில் ஒருவரின் படம் வெளிவந்தால் அதனால் அவரின் அகதி நாட்டில் பிரச்சனைகள் எழ சந்தர்ப்பம் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.