Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனந்தியை கைதுசெய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப கோத்தா திட்டம் – அம்பலப்படுத்தியது ஆங்கில நாளிதழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ananthi-Ezhilan.JPG

வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து தகவல் வெளியிடுகையில், 

“2009 மே மாதம் போரின் முடிவில் கைது செய்யப்படாதவர்கள் அல்லது சரணடையாதவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டத்தை தவறவிட்டுள்ளனர். 

புனர்வாழ்வுத் திட்டத்தில் இருந்து தப்பியவர்களில் அனந்தியும் அடங்குகிறார். 

அவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். 

ஒருவேளை அனந்தி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், அவர் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்திருக்கமாட்டார். 

அனந்தியை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைப்பதால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். 

ஆனால், அனந்தியை புனர்வாழ்வுக்கு உட்படுத்தாவிட்டால், போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை சீரழிக்கும் அவரது நடவடிக்கைகள் தொடரும் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

வடக்கு மாகாணசபையின் உறுப்பினராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளரான எழிலனின் மனைவியாவார். 

இவர், வடக்கு மாகாணசபை உறுப்பினராப் பதவியேற்ற பின்னர், கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். 

அண்மையில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ராப், அனந்தி சசிதரனை சந்தித்து காணாமற்போனவர்களின் நிலை மற்றும் இறுதிப்போர் குறித்த விபரங்களை கேட்டறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140115109776

ஒரு வேளை அனந்தியின் பெயரால்த்தான் தமிழ் ஈழம் வர வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.?

புலம் பெயர் நாடுகளில் இலங்கையை அதன் தூதுவராலயங்களை மூட வைக்க வேண்டும்!

அனந்தி வேண்டவே வேண்டாம்! இராணுவம் பொலிஸ் விடாப்பிடி!
ananவடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கெடுத்தமையினையடுத்து…

…பொது நிகழ்வொன்றில் படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பங்கெடுக்க மறுத்திருந்த சம்பவமொன்று அராலி மாவத்தை பகுதியில் இன்று நடைபெற்றுள்ளது. வட- கிழக்கில் பொது நிகழ்வுகளில் அப்பகுதிப் படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை அழைக்க வேண்டுமென்பது எழுதப்படாதச் சட்டமாகவே உள்ளது. அவ்வகையில் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா நிகழ்வொன்றிற்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அழைக்கப்பட்டுள்ளார். அதே போன்று அப்பகுதிப் படை முகாம் அதிகாரி மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கெடுக்கும் நிகழ்வில் தாம் பங்கெடுக்க தயாரில்லையென தெரிவித்துள்ள படை முகாம் அதிகாரி மற்றும் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் அவரே தமக்குத் தற்போது எதிரியென தெரிவித்துள்ளதுடன் அவரை அழைக்காது விட்டால் தாம் வருகை தர தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதிலும் தமக்கு எதிராக அவர் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கு ஏற்பாட்டாளர்கள் மறுதலித்து அனந்தி தலைமையினில் நிகழ்வினை நடத்தி முடித்துள்ளனர்.

 

http://www.puthinamnews.com/?p=43621

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக அறிக்கை
கொழும்பு ஊடகம் ஒன்று என்னைக்கைது செய்து புனர்வாழ்வளிக்கத் திட்டமிடுவதாக செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இலங்கை படைத்துறையினர் இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளள நிலையில் இது குறித்து உள்நாட்டிலும் வெளி நாட்டிலுமுள்ள மனித நேய அமைப்புக்களும், ஆர்வலர்களும் , புலம்பெயர் தமிழர்களும் என்னிடம் விசாரித்
து வருகின்றனர்.
உண்மையில் எதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் பெரும் நெருக்கடியை சந்திக்கவுள்ளதாக கூறப்படும் அரசு இவ்வாறான ஊடகப் பரப்புரைகள் மற்றும் அச்சுறுத்தல் மூலமூம் உண்மைக்கு புறம்பான குற்றச் சாட்டுகள் மூலமும் என்மீது அவதூறு கற்பிக்க முயல்வது அதன் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
கடந்த இருபத்தொரு வருடங்களாக அரச சேவையில் முகாமைத்துவ உதவியாளராக மூன்று மாவட்டங்களில் பணியாற்றிய என்னை பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் எனக் குற்றம் சாட்டி புனர்வாழ்வளிக்க வேண்டுமெனக் கூறுவது அபத்தமான விடயமேயாகும்.
தென்பகுதி இனவாதத் தலைமைகளை தேசபக்தர்களாக இனங்காட்டி அவர்களின் இனவெறிக் கருத்துக்களை கைதட்டி பாராட்டும் அரசு, மனித உரிமைகள் பற்றி நியாயபூர்வமாக பேசி அதற்காக மட்டுமே குரல் கொடுத்து வரும் என்போன்றவர்களை பிரிவினைவாதிகளாக இனம் காட்டமுயல்வதை என்னவென்று சொல்வது? உண்மையில் சர்வதேசரீதியில் பாரிய குற்றச்சாட்டுக்கும் விசாரணைகளுக்கும் முகம் கொடுக் வேண்டிய நிலையில் உள்ள இந்த அரசு, தனக்கு நெருக்கடியை கொடுத்து வரும் சர்வதேச சமூகத்தையும் புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
முள்ளிவாய்கால் போர் முடிவின் போது நான் எனது பிள்ளைகள் மற்றும் கணவருடன் அரச படையினரிடம் சரணடைந்த போது என்னையும் என் பிள்ளைகளையும் விட்டுவிட்டு என் கணவரை மட்டும் தடுத்து வைத்தது ஏன்? அப்போதே எமக்கு புனர்வாழ்வளித்திருக்கலாமே!
இன்று நான் ஒரு தனிமனுஷி அல்ல... எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதி .அவர்கள் என்னை பிரிவிவைவாதியாக பார்க்கவில்லை. தமது வாழ்வியல் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரு பெண்ணாகவே பார்க்கிறார்கள்.
சர்வதேச சமூகமும் என்னை அப்படித்தான் அங்கீகரித்து எனக்கு ஆத்ம பலத்தை தந்து எனது நியாயமான போராட்ட குரலுக்கு செவிசாய்த்து வருகிறது.

இந்த நிலையில் நான் பிரிவினைவாதியென்றால், என்னை தேர்தலில் நிறுத்திய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், என்னை ஆதரித்து வாக்களித்த மக்கள், எனக்கு தமிழ்த்தேசியத்தை போதித்து நிற்கும் மதிப்பிற்குரிய சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராசா ஐயா உட்பட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் பிரிவினைவாதிகளாக அல்லவா இருக்க வேண்டும்.?

இனி இவர்கள் அனைவருக்கும் அல்லவா புனர்வாழ்வளிக்க வேண்டி வரும்?

ஒரு இனத்தின் நியாயமான மனித, அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வழங்கும் திராணியற்று அம் மக்களை ஆயுதமுனையில் ஒடுக்கி வைக்க நினைக்கும் பேரினவாதச் சிந்தனையாளருக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தம் அதனை மேலும் மேலும் தவறுகளையே செய்யத்தூண்டுகிறது என்பதையே இந்த புனர்வாழ்வு பற்றிய ஊடகச் செய்தி வெளிப்படுத்தி நிற்கிறது.

https://www.facebook.com/ananthi.elil

போராளியாக இல்லாவிட்டாலும் அனந்தி குறித்து விசாரணை நடக்கிறது – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது [ வெள்ளிக்கிழமை, 17 சனவரி 2014, 00:58 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ananthi1.jpgவிடுதலைப் புலிகளின் போரிடும் அணிகளிடம் இருந்து வெளிப்படையாக விலகியே இருந்தாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. 

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அவரது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஏதாவது குறிப்பிடத்தக்க தகவலின் அடிப்படையில் அனந்தி சசிதரன் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, அவரது கணவன் திருகோணமலை மாவட்ட அரசியல் தலைவராக இருந்தார்  என்ற அடிப்படையிலேயே விசாரணை முன்னெடுக்கப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். 

நோர்வேயின் ஏற்பாட்டில் போர்நிறுத்தம் கடைப்படிக்கப்பட்ட போது வடக்கு கிழக்கில், அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவலை மேற்கொள்வதற்காகவே, விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவை உருவாக்கியதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளன

 

http://www.puthinappalakai.com/

 

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்ன பெரிய புனர்வாழ்வு உவர் கோத்தா அளிக்கிறார். மண்டையில போட்டிட்டு மன்னாரில கொண்டு போய் புதைக்கிறதா.. புனர்வாழ்வு. மவனோ.. உந்த ஆட்டம் ரெம்ப நாளைக்கு வேக்கவுட் ஆகாது. தீவிர.. சிங்கள பெளத்த பேரினவாத இனப்படுகொலை வெறியனான.. கோத்தாவுக்கு புனர்வாழ்வு அளிக்கும் காலம் வரும்.

Edited by nedukkalapoovan

அப்படி என்ன பெரிய புனர்வாழ்வு உவர் கோத்தா அளிக்கிறார். மண்டையில போட்டிட்டு மன்னாரில கொண்டு போய் புதைக்கிறதா.. புனர்வாழ்வு. மவனோ.. உந்த ஆட்டம் ரெம்ப நாளைக்கு வேக்கவுட் ஆகாது. தீவிர.. சிங்கள பெளத்த பேரினவாத இனப்படுகொலை வெறியனான.. கோத்தாவுக்கு புனர்வாழ்வு அளிக்கும் காலம் வரும்.

இவன் எல்லாம் கடைசியில் இழுத்து வருந்தி தான் சாவான். இவன் கொன்ற தமிழ், சிங்கள ஆத்மாக்கள் விடாது.

ut in a letter, published in Russia's pro-Kremlin newspaper Izvestia, he wrote: "My spiritual pain is unbearable.

"I keep having the same unsolved question: if my rifle claimed people's lives, then can it be that I... a Christian and an Orthodox believer, was to blame for their deaths?" he asked.

"The longer I live," he continued, "the more this question drills itself into my brain and the more I wonder why the Lord allowed man to have the devilish desires of envy, greed and aggression".

The letter is typed on Kalashnikov's personal writing paper, and is signed with a wavering hand by the man who describes himself as "a slave of God, the designer Mikhail Kalashnikov".

The Kalashnikov, or AK-47, is one of the world's most familiar and widely used weapons.

In his letter to Patriarch Kirill, Kalashnikov said that he first went into a church at the age of 91 and was later baptised.

http://m.bbc.co.uk/news/world-middle-east-25709371

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

த.தே.கூ.வில் அங்கம் வகிக்கும் ,87 000 இற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற ஆனந்திபற்றிய சா்ச்சைக்குாிய விடயம் பரவலாக அடிபடுகிறது. ஆனால் த.தே.கூ. இலிருந்து எவருமே கருத்தெதனையும் தொிவிக்காமலிருப்பதிலிருந்தே தொிகிறதே இது மும்மூா்த்திகளது வேலைதானென்று.

 

த.தே.கூ.வில் அங்கம் வகிக்கும் ,87 000 இற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற ஆனந்திபற்றிய சா்ச்சைக்குாிய விடயம் பரவலாக அடிபடுகிறது. ஆனால் த.தே.கூ. இலிருந்து எவருமே கருத்தெதனையும் தொிவிக்காமலிருப்பதிலிருந்தே தொிகிறதே இது மும்மூா்த்திகளது வேலைதானென்று.

 

தீயா யோசிக்கிருங்க நாட்டுகட்டை... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.