Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதான வாசிப்பு ஒரு கலை

Featured Replies

இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.

அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான். இணையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் வாசிப்பு நம் மனதில் சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நீண்ட கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றைப் படித்து அவற்றிலுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப் படுகிறது. ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே அடுத்த கட்டுரைக்குத் தாவும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையாக ஒரு கட்டுரையையும் படிப்பதில்லை. அதைவிட அவ்வப்போது நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதன் காரணமாகவும் தடை ஏற்படுகிறது. இது தவிர ‘ட்விட்ட'ரும் ‘ஃபேஸ்புக்'கும் இத்தகைய தடைக்குத் தம்மாலானவற்றைச் செய்கின்றன.

 

தாவும் மனம்

 

இணையம் மூலம் பலதரப்பட்ட குட்டிக் குட்டிச்செய்திகளை, தகவல்களைத் தொகுக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஆனால், பொறுமையாக அமர்ந்து அவற்றைப் பற்றி யோசிப்பதையும் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதையும் மறந்துகொண்டிருக்கிறோம். எப்போது பார்த் தாலும் நமது மனம் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இன்னோரிடம் என்று நிலை கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இந்தக் கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் சிறுபான்மையினராக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீங்கள்.

 

பெரும் புரட்சி

 

அண்மையில் இலக்கிய வாசிப்பு தொடர்பான‌ பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு நிதான உணவு என்றொரு புரட்சி, பின்னர் நிதானப்பயணம் என்றொரு புரட்சி. அவற்றோடு இப்போது நிதான வாசிப்புக்கான இயக்கம். வெவ்வேறு வகையான கல்வியாளர்களும் அறிவுஜீவிகளுமான இவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசித்ததைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர். இவர்களின் வேண்டுகோள்: “அவ்வப்போது கணினியை அணைத்துவிட்டு, அச்சிட்ட பிரதிகளுடன் உறவுகொள்வதன் சந்தோஷத்தையும் அவற்றை முழுமையாக‌ உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் நாம் மறுகண்டுபிடிக்க வேன்டும்.”

 

‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்’' என்கிறார் ‘ஸ்லோ ரீடிங்’ புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா.

ஆனால் நிதான வாசிப்பு என்ற பதத்தைப் பிரபலப்படுத்திய லான்ஸ்லாட் ஆர். ப்ளெட்சர் இக்கருத்தை ஏற்கவில்லை. ‘‘நிதான வாசிப்பு என்பது வாசகனின் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக அல்ல, மாறாக ஆசிரியரின் படைப்பாற்றலை, கற்பனையைக் கண்டறிவதற்கானது; ஒரு நூலின் ஆசிரியர் எழுதியதை முற்றிலும் கண்டுணரும் நிலையை ஊக்குவிப்பது’’ என்கிறார்.

 

நிதான வாசிப்பு புதிய கருத்தாக்கமா?

 

நிதான வாசிப்பு என்பது ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. 1623-ல் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் ஃபோலியோ பதிப்பு அவருடைய நாடகங்களை திரும்பத்திரும்பப் படிக்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. 1887-ல் ஃப்ரெடரிக் நீட்ஷே தன்னை ‘நிதான வாசிப்பைப் போதிப்பவன்' என்று கூறிக்கொண்டார். 1920-களிலும் 1930-களிலும் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றோர் கல்வியாளர் மத்தியில் நூலை ஆழ்ந்து படிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார்.

 

ஒன்று மட்டும் தெளிவு. இன்றைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய வெறுப்பு நிதான வாசிப்பாளர்கள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸ்போர்டு வரலாற்றுப் பேராசிரியரான கீத் தாமஸ் என்பவர் அத்தகையோரில் ஒருவர். “ஒரு செய்தியில் உள்ள சில முக்கியமான சொற்களைக் கண்டறிய தேடுபொறியைப் பயன்படுத்துதல் என்பது அதை ஒழுங்காகப் படிப்பதற்கு ஈடாகாது. அப்போது பணியில் ஓர் ஒழுங்கு காணப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தை யும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலை யில் நிதான வாசிப்பில் நிகழ்வது போன்ற‌ தற்செயலான‌ கண்டுபிடிப்புகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் இடமே இல்லை. என் ஆய்வின் பாதிக்கு மேற்பட்டவை நான் எதிர்பாராத நிலையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே” என்கிறார் அவர்.

 

முப்பது நொடிகள்தான்

 

தன்னுடைய சில மாணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட டிரேசி சீலி என்ற ஆசிரியர், பெரும்பாலான மாணவர்கள் ஒரு பிரதியை ஒரேசமயத்தில் 30 நொடிகளுக்கு மேலோ ஒரு நிமிடமோ தொடர்ந்து ஈடுபட்டுப் படிப்பதில்லை என்கிறார்.

 

பெரும்பாலான நிதான வாசிப்பாளர்கள் முற்றிலுமாக இணையத்தை ஒதுக்குவது நடைமுறைக்குப் பொருந்தாதது என்றும், அதற்குத் தீர்வு தொழில்நுட்பத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்வதே என்றும்கூறுகிறார். உதாரணமாக டிரேசி சீலியின் மாணவர்கள் வாரம் ஒரு நாள் கணினியின் முன் அமர்வதில்லை. அதே சமயம் நாம் வாழும் சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு முதலில் நேரம் உள்ளதா என்ற வினாவை முன்வைக்கிறார். கர்ரார்ட் என்பவரின் சிந்தனை வேறுவிதமானது. அவர் தற்போதுதான் ஐபோனில் இருந்ததாகவும், தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார். வாரத்தின் நடுவில், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இணையத்துடனான தொடர்பை அறுத்துக்கொண்டு, படிப்பதற்கான விடுமுறை நாள்களை ஒதுக்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.

 

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு

நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு. இது கருத்துகளையும் மக்களையும் ஒன்றிணைக் கிறது. படிப்பதன் மூலமாகக் காணப்படும் உறவின் தொடர்ச்சி நண்பர்களிடமிருந்து நாம் நூலைக் கடனாகப் பெறும்போதும், நீண்ட கதைகளை நம் குழந்தைக்கு அது தூங்கும்வரை படித்துக்காட்டும்போதும் உணர முடியும்

கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: பா. ஜம்புலிங்கம்

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/article5571241.ece

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நிழலி ! முன்பு ஒரு புத்தகம் எடுத்தால் அதை படித்து முடிக்காமல் வைப்பது கிடையாது. இப்ப இதில் கூறியது போல் முப்பது செக்கன், ஒரு நிமிடத்துக்கு மேல் படிக்க முடிவதில்லை, அதுவும் ஒப்புக்கு சப்பாணிபோல்  ஒன்றை விட்டு மற்றதைப் படிக்கும் போது முதல் படித்தது நினைவில் இருப்பதில்லை...! :)

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குதான் எங்கன்ட வள்ளுவர் எல்லாத்தையும் இரண்டு வரியில் சொன்னவரோ....:D..

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நிழலியண்ணா..இப்போது எல்லாம் ஏதாவது கிறுக்குதற்கு காரணமாக இருப்பது முன்னர் என்னிடம் இருந்த வாசிப்பு பழக்கம்..ஒவ்வொரு புத்தகம் வாசிக்கும் போதும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் நல்ல விடையங்களை கோடிட்டு வைப்பதிலிருந்து பல விடையங்களை மனதில் பதித்தும் வைத்திருந்தேன்..நிறைய எழுத தூண்டியதும் முன்னர் புத்தக பூச்சியாக இருந்த காரணத்தினால் தான் என்று நினைக்கிறன்..
தற்போது புத்தகம் படிப்பது 0 என்று தான் சொல்ல வேண்டும்...ஒரு இடத்தில் இருந்து வாசிக்ககும் தன்மை மிக,மிக குறைந்தே விட்டது..ஒரு கிழமையில் ஒரு நாளைக்காவது கணணிக்கு வரக் கூடாது என்று எல்லாம் நினைப்பேன்..கட்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.ஒரு புத்தகத்தை கையில் வைத்து வாசிப்பதற்கும், கணணியில் வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

நாங்கள் எப்பவும் "நிதானமாகத்தான் " வாசிப்போம்.

ஆனால் நீங்கள் எழுதுவதை மனத்தை அடக்கி 3 நொடிகள் படிப்பது கஸ்டமாக இருக்கிறதே? :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவுதான். ஆனால் எம் வயதினருக்கே வாசிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டது. ஒரு கதை முதலாம் பரிசு பெற்றதாக போட்டிருந்தது. சரி எதனால் அதற்க்கு முதலிடம் என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தினால் அதை வாசிக்க முனைந்தால் ஒரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மேல் என்னால் அதை வாசிக்க முடியவில்லை.

  • தொடங்கியவர்

பின்னூட்டங்களுக்கு  நன்றி.

 

எனக்கு இன்னமும் வாசிப்பதில் அலுப்பு ஏற்படவில்லை. ஒரு நாவல் ஆகக் குறைந்தது 600 பக்கங்களாவது இருந்தால் தான் வாசிக்க ஆர்வமே எழும் எனக்கு. டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' போன்ற 2500 பக்கங்களுக்கும் மேற்பட்ட நாவல் என்றால் இன்னும் ஆசையாக இருக்கும்.

 

இங்கு வளரும் பிள்ளைகளும் வாசிப்பு பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர் (ஆனால் தமிழ் பிள்ளைகள் வாசிப்பது மிகக் குறைவு). என் மகனும் தன் வயதிற்குரிய பல பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியுள்ளார். அவர்களது பாடசாலையில் வாசிப்பதற்கு கொடுக்கும் ஊக்கம் சிறப்பாக இருக்குது.

 

ஒரு சாரார் தொலைக்காட்சி பக்கம் தம் நேரத்தினை செலவழிக்க, இன்னொரு சாரார் தீவிரமாக வாசிக்க தொடங்கியுள்ளனர். அண்மையில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியின் வெற்றி இதற்கு சாட்சியாக இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு வகையான வாசிப்பு வகைகளைப் பாவிக்கின்றேன். படிக்கும் புத்தகம் சுவாரஸ்யமாக இருந்தால் நிதானமான வாசிப்புத்தான் கிரகிக்க வைக்கும். இல்லாவிட்டால் ஏதோ வாசித்தமாதிரி இருக்கும். ஒரு சில சொற்கள் வசனங்கள்தான் நினைவில் நிற்கும்.

சிலவேளைகளில் வேகமாக மேய்ந்து முக்கியமான சொற்களை வைத்தே சாராம்சத்தைக் கண்டுபிடித்துவிடலாம். இதை முக்கியமற்ற செய்திகள், விடயங்களைப் படிக்கும்போது பயன்படுத்துவேன்.
சிலவேளை வேகமாக வாசிப்பேன். எல்லா விடயங்களும் கிரகிக்கமுடியாது. ஆனால் பெரும்பாலானவற்றைக் கிரகிக்கலாம்.
சுவாரஸ்யமான அகடமி, தொழில்நுட்ப விடயங்கள், கதை, கவிதை, நாவல்களைப் படிக்கும்போது ஒவ்வொரு வரியும் என்ன கூறுகின்றது, எழுதப்பட்ட சொற்களுக்கும் மேலாக அதை எழுதியவர் என்னத்தைச் சொல்லமுயல்கின்றார் என்றெல்லாம் சிந்திக்கவேண்டிவரும். இப்படியான வாசிப்புக்களையே அதிகம் விரும்புவேன். ஆனால் அச்சடிக்கப்பட்ட புத்தகம், ஈ-ரீடர்ஸ் என்ற பேதம் எல்லாம் கிடையாது. படிக்கும்போது மனதைத் தாவவிடாமல் படிப்பது படிக்கும் விடயத்தைப் பொறுத்துத்தான் இருக்கின்றது. முன்னரைவிட பல விடயங்கள் இப்போது குறுக்கிடுகின்றன. Facebook, emails, twitter ஏன் யாழ் களம்கூட நிதானமாகப் படிப்பதைக் குழப்பலாம். கட்டுப்பாடு இருந்தால் இந்தத் தடைகளைத் தாண்டலாம்.

தொடர்ச்சியாக ஒருமணிநேரம் வாசிக்கும் பழக்கத்தைக் கைவிட்டவர்கள் திரும்பவும் வாசிக்கப் பழகுவது கடினமாகத்தான் இருக்கும்.

தற்போது படிக்க ஆரம்பித்துள்ள புத்தகம் காவல்கோட்டம். 1048 பக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பகிர்வு, நிழலி!

 

ஒரு ஆழமான வாசிப்புக்கும், தியானத்துக்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கின்றது என்பது எனது கருத்தாகும்!

 

ஊரில், கதைப் புத்தகங்கள் வாசிக்கும், அம்மா மார், அக்காமார், சில வேளைகளில் அந்தப் புத்தங்கங்களில் ஆழ்ந்து போய் விடுவதால், கறி அடிப்பிடித்துப்போவதும், சோறு கரியாகுவதும் கண்ணால் கண்ட காட்சிகளாகும்! :D

 

ஆனால், பாட்டுக்கேட்கும் போது அவ்வாறில்லை! புத்தகம் வாசிக்கும் போது மட்டும் தான் இப்படி நடந்திருக்கு!

 

அவர்கள் வாசித்த புத்தகத்தின் பெயர்....... மாடி வீட்டில் ஜோடிக்கொலைகள்....! :icon_idea:

ஆழ்ந்து போகும் மனம் உள்ளவர்கள் கிரகிப்பதும், வேகமாக வாசிப்பதும் இயல்பு. ஆனல் அது அவர் அவரின் தனி இயல்புகளுக்கு மேலால்த்தான். உதாரணமாக அழ்கான பெண்தான் அழகான சேலை உடுத்தால் அழகாக இருப்பாள் என்றில்லை. அழகில்லாத பெண்ணும் அதனால் சற்று அழகாவாள்.  இராமக்கிருஸ்ணர் சிறுவனாக இருந்த போது படிக்க முடியவில்லை. தியானத்தில் இறங்கிய பின்னர் ஆழமான தத்துவங்களை எடுத்துரைத்தார். ஆனால் மகாநாத குப்தா, நரேன் போன்ற அறிவாளிகளிடம் தனக்கு கணிதம், விஞ்ஞானம் ஒத்துவராது என்று அவர்களிடமே அதற்கான விடைகளை கேட்பார். என்வே அவருக்கு வாசிக்கும் போது கிரக்கிக்கும் ஆற்றல் ஆரம் தொடக்கம் மட்டாகவே இருந்து வந்தது. மாறாக விவேகானந்தர் புத்தகளை வாசிப்பதிலும் கிரகிப்பதிலும் சாதனைகளை நிலைநாட்டியவர். 

 

மர்மநாவல்களை வாசிக்கும் மனம் ஆழ்ந்து போவதால் அவர்களால் விட்டு விலமுடிவதில்லை என்று சொல்ல முடியாது. மனம் ஒரு சலன நிலையில்த்தான் அப்போது இருக்கும். அந்த நிலை ஆழ்ந்த நிலையை வழமையில் குழ்ப்பும் தன்மை உள்ளது.  பிரபல வக்கீல்கள், நிறைய சட்ட இடாப்புக்களை கரைத்துக்குடித்திருந்தவர்கள், தமது பிற்காலங்களிம் இலக்கிய புத்தங்களில் ஆர்வம் காட்டி படித்திருந்திருக்கிறார்கள். ஆனால் நாவல்களில் ஆர்வம் காட்டுவது குறைவு. அவர்களுக்கு இலக்கியங்களில் காண்ப்படும் கனதி, உயர்வான நடை பிடிக்கும் அளவுக்கு இன்றைய நாவல்களில் இருக்கு அலம்பல் பிடிப்பத்தில்லை. போரும் அமைதியும் ரூசிய அரச வாழ்க்கையில் ரோல்ரோயிற்கு இருக்கும் ஆழ்ந்த அறிவை எடுத்துக்காட்டினாலும், ஆயிரக்கணக்கில் கதா பாத்திரங்களை தாயாரித்து சிக்கலான சூழ்நிலைகளில் உலாவவிட்டாலும், அதை A/L காலத்தில் சுண்ணாகம் வாசிக சாலையில் இருந்து எடுத்துப்   படித்த போது அதை ஒரு அலம்பலாகத்தான் மதிப்பிட்டேன். (கதை இப்போது மறந்துவிட்டது)

 

1984ல(நடுப்பகுதி)ல் நான் கனடா வந்த போது மிக விரைவில் (1985 ஆரம்பத்தில்) தனி எபாட்மெண்டுடன் போய்விட்டேன். அப்போது பல பழைய பாடல்களை பதிவு செய்து, தானாக வழம் திரும்பி மறுகரையும் படிக்கும் வாக் மென் வாங்கி ஒரு மணித்தியாலம் அசையாமல் இருந்து கேட்பேன்.  வேலையால் வந்து பின்னேரங்களில் அப்படி கேடக முதல் படுக்கையில் சென்று சப்பாணி போட்டு அமர்ந்து கொள்வேன். பின்னர் என்னை ஒரு போர்வையால் மூடி மூக்கை மட்டும் வெளியே தெரிய விட்டு காதுக்கு கெட்போன் போட்டுக்கொள்வேன். இதனால் வெளியில் ரோட்டில் கார் போகும் சத்தம், தொலை அழைப்பு கூட தெரிய வாரது. அப்படிக்கேட்கும் போது பழைய பாடகிகள்,பாட்கர்கள் குரலை வைத்திருக்கும் வகையும், குரலில் ஏர்படும் வளைவு நெளிவுகளையும் தெளிவாகவும்,  ஒவ்வொரு இசைக் கருவியையும் மிக ஆழமாக் கவனித்துக்கொண்டிருப்பேன். ஒருமணித்தியாலம் முடிந்து வாக்மன் நிற்கத்தான் அமர்ந்திருக்கும் படுக்கையை விட்டு அகலுவேன். சங்கீதம் என்றதையே 1985 வரைக்கும் அறிந்திருக்காத நான் கார்நாடக சங்கீத பாட்ல்களை பிற்காலம் கேட்க ஆரம்பித்தது, சினிமா பாட்டுக்களான ஓம் நமச்சிவாய, ஒருநாள் போதுமா, இது கேட்கத்திகட்டதா கானம், சாமரவரகமானா மற்றும் சப்தபடிகள் போன்ற படங்களின் பாடல்களை கேட்டாதால் அதில் அவர்கள் குரலுக்கு கொட்டுக்கும் முக்கியத்துவத்தை வைத்துப் பழகிய பழ்க்கம்.  

 

கவனம் ஆழ்ந்த மனநிலையில் வரும். அது வாசிக்க கேட்க, சிந்திக்க எல்லாவற்றுக்கும் உதவும். மேற்கு நாடுகளில் notes கொடுப்பத்தில்லை என்பதால் பிள்ளைகள் Text புத்தகங்களை வாசிக்க பழக வேண்டும். இதற்கு ஆரம்பமாக அவர்கள் நல்ல கதைப்புத்தங்களை வாசிக்க சொல்கிறார்கள்.(அம்மா கதைபுத்தகங்களை கையிலை கண்டால் கூரையில் ஏறிவிடுவா :D ) பலன் கொஞ்சம் இல்லாமல் இருக்காது. ஆனால் வைத்தியசாலையில் நல்ல தாதி, நல்ல தாயாக இருப்பதில்லை என்பது போல் கதைப்புத்தகங்களை வாசிக்க ஆர்வம் காட்டும் பல பிள்ளைகள் பாடப்புத்தகங்களை தொட விரும்புவதில்லை. பிச்சாவை சாப்பிடும் வாயால் அவர்கள் புட்டையும் குழம்பையும் சாப்பிட விரும்புவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை, இந்த 'ஓம் நமச்சிவாயா' மாதிரி என்னைக்கவர்ந்த இன்னொரு பாடல்.....

 

 

சங்கராபரணமு.......!!!

 

 

இவ்வளவுக்கும் சங்கீதத்தில் நான் ஒரு ஞான சூனியம்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.