Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடு தண்ணீரை யாழ். குடாநாட்டுக்கு கொடுக்கவே கூடாது; திட்டத்தை நிறுத்துங்கள் என்கின்றனர் விவசாயிகள்

Featured Replies

திட்டடத்தை  தொடங்கி யாழ் வளம் பெற நீர் கொடுத்தாலும் அதை  அந்த விவசாயிகள் பாவித்து மிஞ்சும் என்ற நீரை மட்டுமே  வழங்கலாம் என்ற  ஒப்பந்தம் கண்டிப்பாக  அவர்களோடு செய்திருக்க வேண்டும்.

 

இப்போ தமிழநாடு   அயல் மாநிலத்தோடு சண்டை போடுவது போல் இருக்க கூடாது

  • Replies 94
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

30 வருடங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு தொழிநுட்ப ரீதியில் பின்தங்கி இருப்பதும் மற்ற நாடுகளின் உதவியை நாடுவது ஒன்றும் உலக அதிசியம் கிடையாது :D

அதைத்தான் நானும் சொல்லுறன்.. :D ஒரு திட்டம் போட்டு ஆசிய வங்கி கடன் கொடுத்துவிட்டது என்கிற ஒரே காரணத்தினால் மட்டும் அந்தத திட்டம் அப்பழுக்கற்றதாக இருக்கும் என்பது ஏற்புடையதல்ல..

இந்தமாதிரி விவாரங்களுக்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம்.. மன்னர்கள் காலத்தில் இருந்த ஆயிரக்கணக்கான குளங்களைப் பராமரிக்காமல் அவற்றை வீட்டு மனைகளாக்கி நீர் வசதியில்லாமல் போய், காவிரியையும் கர்நாடகா தடுக்க.. வக்கற்ற நிலைக்குப் போனார்கள். இப்போது மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்று ஆரம்பிக்கிறார்கள்.. :huh: இதைத்தான் குளம் வெட்டி மன்னர்கள் செய்து வைத்திருந்தது.

யாழ் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவையும் மக்கள் தேவையையும் ஒப்பிட்டால் இரண்டும் கிட்டத்தில்தான் இருக்கும்.

வன்னியில் மட்டும் எப்படி உபரி நீர் இருக்கும்?? குளங்கள் இருப்பதால்.. அங்கு குளத்தை வைத்திரு.. நாங்கள் இங்கு வீடு கட்டிக் கொள்கிறோம் என்பது ஏற்புடையதல்ல..

எல்லா வழிமுறைகளும் பிழைத்துப்போன பின்னர் நீரை இவ்வாறு கொண்டுவர முயற்சிக்கலாம். அதுவரையில் இவ்வாறான திட்டங்களை ஊக்குவிப்பது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் யாழ் மாவட்டம் என்பது வறண்ட பிரதேசமாகும் அங்கு நிலத்தடி நீரை நம்பித்தான் பெரும்பாலும் மக்கள் இருக்கின்றார்கள் ...... அதுவும் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமா வற்றி வருகின்றது ஆகவே தூர நோக்கு பார்வையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம் அது தான் இரணைமடுவில் இருந்து நீரைக்கொண்டு வருதல் பல வருட ஆராச்சிகளின் பின் எட்டப்பட்ட முடிவு இது இனி யாழில் ஒரு குளம் அமைத்தோ மழையை நம்பியோ அந்த மக்களை ஆபத்தில் மாட்டி விட முடியாது ஆகவே ஒரே வழி இது தான் யாழ்மாவட்ட அரசு அதிகாரிகள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நிச்சையம் இந்த திட்டத்தை நிறைவேற்றுவார்கள்....

தன்னலம் பாராது கடமையாற்றக்கூடிய யாழ் அரசு அதிகாரிகள் மீது எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு மாவட்டத்திற்கு எது நன்மையோ அதை செய்வார்கள்

முதலில் தமிழ் நாட்டையும் தமிழ் ஈழத்தையும் ஒப்பிடாதீர்கள். தமிழ் நாடு தண்ணி செய்ய ஒரு முட்டாள்த்தனமான ஆலை போட்டாலும் கடன் கட்டும் பலம் பெற்றுவிட போகிறது. அங்கே மக்களுக்கு முடிய போகிறது இலங்கை இனி சரித்திரத்தில் நினைத்துப் பார்க்க முடியாதவை. துளிரும் குருத்துமாக தமிழ் நாடு எழும்பிக்கிக்கொண்டுவருவதையும், 1948 லிருந்து இலங்கை ஆட்சியிலிருக்கும் அனுமார்களால் தொடர்ந்த்து தீ வைக்கப்படுபவதையும் நீங்கள் அவதானிக்க வேண்டும். தமிழ் நாடு ஆசிய அபிவிருத்தி வங்க்கி ஏற்றுக்கொள்ள போவதில்லாத திட்டங்கள் போட்டு செய்து காட்ட முடியும். இன்னமும் தமிழ் நாட்டில் பலபகுதிகள் நாம் 1956 இருந்த நிலைக்கு வரவில்லை. ஆனால் கருணாநிதி பில்லியன் கணக்கில் அடித்துமுடிய இன்று பலமான மாநிலங்களில் ஒன்று தமிழ் நாடு.  எனவே மழை நீர் தேக்குதலென்றதை வடமாகணம் இன்று நாளை நினைக்க முடியாது. மேலும் அது சரிவருமாக இருந்தால் அதை வடமாகாணம் நிறை வேற்ற எந்த இடத்திலும் அரசு அனுமதி கொடுக்கவும் மாட்டாது. எனவே மார்ச் 2014 க்கு காட்ட, இடையில் தானும் கொஞ்சம் அடிக்க அரசு இந்த திடத்தை முன்னால் எடுக்க போனால் இதை ஆதரிக்க வேண்டும். நம்மால் சீனா ரோட்டு போட்டத்தையோ, அல்லது இந்தியா ரேயில்விட்டதையோ பற்றி எதுவும் கூற் சந்தர்ப்பம் இருக்க வில்லை. (தும்பளையானின் படங்களில் தெருவில் மக்களோ வாகனங்களோ இல்லை நல்ல புது ரோட்டுக்கள் மட்டும்தான் காணப்பட்டது. இது பல நாடுகளில் சீனா தொடர்ந்து போட்டுவரும் ரோட்டுகள். இந்த நாடுகளை சீன ஆளுவோருக்கு கையூட்டுக்கொடுத்து தொடர்ந்து கடனில் சிக்கவைக்கிறது). இதில் பேச நமக்கு சந்தர்ப்பம் இருக்கு என்பத்தால் நமது வாயால் நாம் கெடக்கூடாது. 

 

கொஞ்சம் ஆழ்மாக சிந்த்தீர்களானால் ஆசிய அபிவிருத்தி வங்கி பொலிடோல் குடிக்க காசு கொடுக்கும் என்றதற்கும், சொல்லவது போல பிழைய படங்களை, திட்டத்தை கொடுத்து  ஆசிய அ[பிவிருத்தி வங்கியிடம் கடன் வாங்கியிருக்கலாம் என்றதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை

 

ஒன்ராறியோ மாநிலம் ரொறொண்டொ நகரத்தில் கட்ட பிழையான கட்டுமானகளுக்கு சான்றிதல் கொடுக்க கூடிய அரசியல் சந்தர்ப்பம் ஆசிய அபிவிருத்து வங்கிக்கு வடமாகாண அரசியலில் ஏற்படாது. மேலும் வங்கிக் கணக்காளர்கள், பொறியியளார்கள், பொருளாதார நிபுனர்கள்,  சூழல் ஆய்வாளர்கள் என்று பலரை feasibility studies யை படிக்க வைத்துதான் கடன் கொடுக்கும். பொய்யாக ஒரு feasibility study எழுதிக்கொடுத்து கடன் வாங்கலாம் என்றதில் உண்மை இல்லை.

 

அது ஒருபுறம் இருக்க ரொறொண்டோ மாநகரம் பல திட்டங்களை தொடந்து நிறை வேற்றி வருவது. அதில் பல பிழைப்பது ஆச்சரியமில்லை. ஆனால் வடமாகாணத்திற்கு ஒன்றாக மட்டும் இருக்கும் இதை செய்த்து பார்க்க சந்தர்ப்பம் வேண்டும்.

 

 

 

(இதற்கு பின்னால் பிரதானமாக முதலாளித்துவ பொருளாதாரத்தை பற்றி இசை பிழையாக விளங்குவதால் மட்டுமே:)

 

கனேடிய திட்டமிடலில் தவறு தவிர்க்க் முடியாதது. ஆனாலும் இந்த திட்டமிடல் சோசலிச திட்டமிடலைவிட நட்டம் குறந்தது

. ஆனால் தொரந்து செய்யும் போது மொத்தநட்டம் சோசலிசத்திட்டங்களால் வரும் நட்டத்தை விட மிகவும் குறைவாக இருக்கும். 

 

ஒரு இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டாருக்கு எத்தனை அம்பியர் மின்னாசரம் வழங்குவது என்றதை கட்டுப்படுத்த Control Circuit  ஒன்று நிறுவப்பட்டால் அது மோட்டர் செய்யப்போகும் வேலையை சரியாக தெரிந்த்து வைத்து தேவைகேற்ப மட்டும் மோடாருக்கு மின் வழங்கும். இந்த பிழையே வராத அதி திற்மை முலதனம் வழங்கலுக்கும், மூலதன வழங்கலில் சரி பிழையை கலந்து அதானல் பாடம் கற்று முன்னால் போகும் முதலாளித்துவத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு மருத்துவ அறிக்கை சோயா கடலை மிக நல்லது என்று கூறினால் அதை வைத்து சோயாவை மக்கள் நிறைய பாவிக்க போகிறார்கள் என்று நினைத்து விவசாயிகளுக்கு முதல் கொடுத்து சோயா பயிர் செய்கையை ஊக்குவிக்கும்போது மக்கள் சோயாவை விட்டு விட்டு இன்னொன்றுக்கு போகும் போது நட்டபடுவார்கள். ஆனால் இது நாள்டைவில் திருந்தி மக்கள் ஏற்கும் மருத்துவ அறிக்கையின் பயிருக்கு மாறும். இதை கணிப்பிட முடியாது என்பதால்த்தான் சோசலிச முறை திட்டமிடலை மேற்கு நாடுகள் எதிர்கின்றன. முதலீடு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்தும் விவசாயிகளிடமிருந்தும் வரும். திட்டமிடலும் லாப நட்டமும் அவர்களது பொறுப்பு.

 

1980 ஆரம்பங்ககளில் போது உலகின் அதி வேக வள்ர்ச்சி நகரங்களில் ஒன்றாக ரொறொண்டோ இருந்தது. இன்றும் அதே பிடி பிடிக்கிறது. சீனா ஏற்படுத்திய சாகசங்களை விட ரொறொண்டொ நகரம் கூட  சாகசம் செய்கிறது. ஆனால் சீனாவில் இன்று பல நகரங்கள் அரசால் கட்டப்பட்ட பின்னர் புது வான் உயர் கட்டடங்கள் அடுக்கு தொடராக கைவிடப்படுவிட்டன. அதன் காரணம் அளவு மீறி நகரங்களுக்கு படை எடுக்கும் மக்களை அங்கு குடியேற்றலாம் என்று அரசு போட்ட பிழையான திட்டங்கள். உலகிலேயே (அமெரிக்கவினதை விட இரண்டு பங்கு பெரிய) மோல் சீனாவில் கட்டி பல ஆண்டுகளின் பின்னரும் வாடகைக்கு யாரும் இல்லாமல் சும்மா கிடக்கிறது. ஆனால் சீனா ஒன்றை கட்டத்தொடங்கினால் நிற்பட்ட முடியாது. இது கமயூனிச திட்டம். இந்த பிழைக்கும் ரொறெண்டோ ஆரம்பித்து கைவிட்ட பிழைக்கும் பேதம் நிறைய. ரொற்ன்டொவில் அரசு மாற, தவறு திருந்தும். அதை விள்ங்க வேண்டும். ஆனால் தொடந்து ரொறேண்டோ திட்டங்களை போட்டு பல்லாயிரமானவற்றை வெற்றிகரமாக முடித்த்தால்தான் நகரம் இன்னமு யாரும் வீழ்த்த முடியாத போக்கோடு போகிறது. என்வே தோற்ற ஒன்று அல்லது இரண்டு திட்டங்களைல் மட்டும்தா தங்கியுள்ளது வேற்றி நடை போடும் ரொறொன்டோ நகரமாக மயங்க கூடாது.

 

நெடுஞ்சாலை, றெயில் திட்டங்கள் சரியோ பிழையோ, சீனத்திட்டங்கள் போன்றவை. அவற்றை மக்கள் அரசை மாற்றி தீர்மானிக்க இடம் இல்லாதவை. ஆனால் இரணைமடுவில் மக்களால் தீர்மானிக்க சந்தர்ப்பம் கொடுக்கிறது. அதை மக்கள் சரியாக பாவிக்க வேண்டும். இதில் கூட்டமைபுக்கு நன்கு தெரியும் தான் இதில் தலையிட்டு தோல்வியுற்றால் வடமாகாண மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் எனப்து. அவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற மாவட்ட மக்களின் வயிற்றில் அடித்து தங்கள் மாவட்டத்தை வளர்க்க கூடிய சுயநலன் மிக்க அதிகாரிகளை கொண்டதல்ல எமது யாழ் மாவட்டம் இன்றும் வன்னியின் கஷ்டப்பட்ட பிரதேசங்களுக்கு மறுக்க வாய்ப்பிருந்தும் சென்று கடமையாற்றக்கூடியவர்கள் வன்னி மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்காது அந்த விவசாயிகளை சிலர் தூண்டி விடுகின்றார்கள் அவளவு தான்

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் மல்லை அண்ணா சரியான பதிலடி

மற்ற மாவட்ட மக்களின் வயிற்றில் அடித்து தங்கள் மாவட்டத்தை வளர்க்க கூடிய சுயநலன் மிக்க அதிகாரிகளை கொண்டதல்ல எமது யாழ் மாவட்டம் இன்றும் வன்னியின் கஷ்டப்பட்ட பிரதேசங்களுக்கு மறுக்க வாய்ப்பிருந்தும் சென்று கடமையாற்றக்கூடியவர்கள் வன்னி மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்காது அந்த விவசாயிகளை சிலர் தூண்டி விடுகின்றார்கள் அவளவு தான்

அதுமட்டும் தான் உண்மை சுண்டல்.

 

பலர் குழ்ம்புகிறாகள் ஏன் எனில் இதில் கிளிநொச்சி மக்களை யாழ்ப்பணத்தவர் எறி மிதிக்கிறாகளால் என்று சில திருதாள்ங்கள் குழ்ப்புல்வதால் மட்டுமே.

 

நானும் திட்டத்தை பார்க்காதவன் என்றாலும் ஆசிய அபிவிருத்து வங்கி ஒரு சுற்றாடல் மிகவும் கெட்டு போக, இன்னொரு சுற்றாடல் சின்னலாபம் அடைய அதற்கு கடன் கொடுக்காது. இரணை மடுவை திருத்தும் போது முதல் லாபம் கிளினொச்சி விவசாயிகளுக்கு மட்டும்தான். திருத்தவிட்டால் குளம் சீர்கெடும் நட்டமும் அவர்களுக்குத்தான். திருத்தினால் சேரும் மேலதிக தண்ணீரில் ஒருபாகம் யாழ்ப்பாணம் போகும். ஆனல் விவசாயிகளை தூண்டி, திருத்தி வரும் முழு லாபத்தையும் கிளிநொச்சிக்குள் பிடியுங்கள் என்கிறாகள் இந்த சிண்டு முடியும் கூட்டம். வங்கி குடி நீர்திட்டத்திட்டத்தால் தான் இரணை மடுவை திருத்த வருகிறது. வழ்மையில் குடி நீர் திட்டம் இல்லாவிட்டால் குழ்த்தை திருத்த வங்க்கி வரும் என்று நான் நினைக்கவில்லை. இதை குழ்ப்புவத்தால் விவசாயிகளும்தான் தோற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீரை குழாய் மூலமாகவோ அல்லது கால்வாய் மூலமாகவோ எடுத்து வருவது இறுதிக் கட்டம். இந்த இறுதிக் கட்டத்திற்குப் போக முன்னம் வேறு என்ன திட்டங்கள் யாழ் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு அது முடியாமல் இந்த இறுதிக் கட்டத்திற்கு வந்தார்கள்? :wub:

திட்டம் முழுவதும் ஒரு unit. முதல் தொட்க்கம் என்பது தனிய பொறியல் மட்டுமானதாகபே இருக்கும். 

 

நிறைவேற்றப்பட்டு அது முடியாமல் இந்த இறுதிக் கட்டத்திற்கு வந்தார்கள்?

 

 

ரொறொண்டோவில் ஆரம்பித்து ஒன்றை கைவிட்டால் அது பிழை என்றால் ஆரம்பித்து கைவிட தக்க பொருளாதார நிலையில் யாழ்ப்பாணம் இருகா? அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் கொடுக்குமா?. 

 

இரணை மடுவை அபிவிருத்தி செய்த்தி 34' நீத்தேக்க்மாகுவதி திட்டம். அதி இப்போது தனது கனத்திக்கு கூட வழ்மையில் நீர் தாக்குவத்தில்லை. எனவே நீதீக்க வழி முறைகள் விரிவாக்கம் செய்தால் குளம் நிரம்பி இருக்கும். 34' அடியையும் நிரம்ப்ப வைத்தால் இன்னும் பிரயோசனமாக இருக்கும். திட்டம் புதிதாக பல நிலங்களை விவசாயத்துக்கு உள்ளடக்க போகிற்து. குளம் சீரழிவதால் பல நிலங்கள் மேலும் கைவிடப்பட போகிறது. அதை தவிர்க்க கிளினொச்சி விவசாயிகள் முன் வர வேண்டும்.

 

இதை நீங்கள் யாழ்பாணத்துக்கு "குடிநீர் திட்டம்" என்று மட்டும் பார்க்கிறீர்கள். இது இரணைமடுவை அபிவிருதி செய்து யாழ்ப்பாணத்துக்கு குடி நீர் வழங்கும் திட்டம். இது கல்லில் இரண்டு மாங்காய். வழ்மையில் ஆசிய அபிவிருத்தி வங்க்கு போன்ற மக்களின் நன்மை தேடும் நிறுவனங்கள் அப்படி திட்டங்களுக்குத்தான் கடன் கொடுக்கும். அவை Commercial வங்கிகள் அல்ல வெறுமனே பொருளாத்தார கணிப்புக்களை வைத்துக் கடன் கொடுக்க. 

 

இதில் குழ்ப்பிதலால் கெடப்போவது கிளிநொச்சி மக்கள். இலாபம் அடியாமல் போவது யழ்ப்பண மக்கள். ஏன் எனில் அவர்களுக்கு இன்றும் குடிக்க நீர் இல்லை. கிளிநொச்சி மக்கள் மேலும் மேலும் சீரளியும் குளத்தால் மேலும் மேலும் நிலங்களை இழக்க போகிறார்கள். 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய வங்கியில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து பார்த்துத்தான் காசு கொடுத்தார்கள் என்கிற மல்லையின் வாதம் நன்றாகத்தான் இருக்கு.. ஆனால் உஸ்பெகிஸ்தானில் இவர்கள் கடன் கொடுத்து தண்ணீர் பிரச்சினையும் தீர்ந்த பாடில்லையாம். சுற்றுச்சூழல், விலங்குகளுக்கும் பாதிப்பாம்.. நான் சொல்லவில்லை இந்தக் கட்டுரை சொல்லுது. :D

http://bankwatch.org/bwmail/51/borrowed-life-asian-development-bank-projects-failing-uzbeks

 

A striking example is the construction of the A-380 road, where the activities financed by the ADB have caused severe harm to the environment and the Bukhara and Kungrad regions of the Karakalpakstan Republic. Principally, the four-lane road “Gusar - Bukhara - Nukus - Beineu” runs in close proximity (200-300 metres) to two protected areas:

Gazelles have an extremely excitable nervous system. Exposure to noise and contact with people results in a stressful condition for gazelles, that leads eventually to serious consequences or death. The construction of a four-lane road in the immediate vicinity of the reserve would have an extremely negative impact on the population of gazelles.

The ADB is attempting to address sectors that are essential to people's lives, particularly with water supply projects. For example, a loan was made in 2001 to improve the water supply of three regional centres – the cities of Jizzakh, Gulistan and Karshi at a total cost of USD65.5 million – and in 2005, USD 25 million for a project to improve the drinking water supply in Navoi and Kashkadarya district.

Ten years have now passed, and the problems related to water supply in Jizzakh, Gulistan and Karshi have become even more acute. Those ADB funds allocated to improve the water supply are completely spent, yet the population of Gulistan in the Syrdarya region continue to drink water from wells installed back in the Soviet era.

தண்ணீர் கொண்டுவர காசை செலவழித்து முடிய இப்பவும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கினமாம் மக்கள். :D அதற்காக, உஸ்பெகிஸ்தானில் பிழையானதால் ஈழத்திலும் பிழையாகும் என்கிற அர்த்தமல்ல. எல்லா வழிகளையும் ஆராய்ந்து முயற்சித்துவிட்டு, முடியாத கட்டத்தில்தான் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தலையிடி என்று வைத்தியரிடம் போனால் மூளை அறுவைச்சிகிச்சை செய்வதுபோல் உள்ளது இவர்கள் செய்வது. கேட்டால் டாக்டருக்குத் தெரியாதது உனக்கென்ன தெரியும். கம்முனு கிட என்று சொல்கிறார்கள்.. :lol:

யாழில் வாழ்ந்த காரணத்தினாலும், வெளிநாடுகளில் நீர் மேலாண்மைக்கு என்ன செய்கிறார்கள் என்பதை அறியக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்த காரணத்தினாலும் சில ஒப்பீடுகளை மேற்கொள்ள முடிகிறது.

சிங்கையில் நன்னீரே கிடையாது. ஆனால் நான் அங்கு வாழ்ந்த காலங்களில் தண்ணீர்ப் பிரச்சினை இல்லை. அதுதான் புத்திசாலிகள் செய்வது. போதாக்குறைக்கு மலேசியாவுக்கே விற்கிறார்கள். மிகுதி சொல்லவேண்டியதில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே மறுபடியும் இசை அண்ணா பண்ணுற காமடி தாங்க முடியல்ல தான் singapore ல இருந்தவராம் அங்க தண்ணி பஞ்சமே வந்ததில்லையாம்.....

singapore என்பது தன்னுறைவு அடைந்த பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை தங்கள் வசம் வைத்திருக்கும் நாடு தாங்கள் தங்கள் பணத்தில் தங்கள் திட்டத்தில் எதுவும் சிவார்கல் ஆனால் நாங்க அப்பிடியே வாங்கிறதே பிச்சை அதுக்குள்ளே demand பண்ணிட்டு இருக்க முடியுமா அவர்கள் தங்கள் நிபுணர்களை வைத்து திட்டம் போட்டு தருகின்றார்கள் எங்களுக்கு அது ஓகே வா இருக்கு நாங்க டீல போடுறம் அத விட்டிட்டு பணக்கார நாடுகள பார் அதைப்பார் இதைப்பார் என்டுகிட்டு :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே மறுபடியும் இசை அண்ணா பண்ணுற காமடி தாங்க முடியல்ல தான் singapore ல இருந்தவராம் அங்க தண்ணி பஞ்சமே வந்ததில்லையாம்.....

singapore என்பது தன்னுறைவு அடைந்த பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை தங்கள் வசம் வைத்திருக்கும் நாடு தாங்கள் தங்கள் பணத்தில் தங்கள் திட்டத்தில் எதுவும் சிவார்கல் ஆனால் நாங்க அப்பிடியே வாங்கிறதே பிச்சை அதுக்குள்ளே demand பண்ணிட்டு இருக்க முடியுமா அவர்கள் தங்கள் நிபுணர்களை வைத்து திட்டம் போட்டு தருகின்றார்கள் எங்களுக்கு அது ஓகே வா இருக்கு நாங்க டீல போடுறம் அத விட்டிட்டு பணக்கார நாடுகள பார் அதைப்பார் இதைப்பார் என்டுகிட்டு :D

உங்கட திட்டம் ஏன் நீண்டகால அடிப்படையில் ஓட்டை என்கிறதை மட்டும் சொல்லுறன்.. :D

யாழ் நகரில் நிலத்தடி நீர் சாக்கடையா மாறுது என்பது தெரிந்ததே.. அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுகிறார்கள். கழிவுகள் எங்கே போகுது? தெரியாது.

நீர் மேலாண்மையில் தாக்குப்பிடிக்கக் கூடிய திட்டங்கள் (Sustainable schemes) மட்டுமே வெற்றி பெறும். சின்ன வயதில் படித்திருப்போம். மழை பெய்யுது.. குளம், கடலில் இருந்து ஆவியாகுது. மேகமாகுது. மழை பெய்யுது.. இது நீண்டகாலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய இயற்கையின் முறை.

இரணை மடுவில் உள்ள உபரி நீரை யாரும் பாவிக்காமல் விட்டால் அது ஆவியாகி மீண்டும் மழையாகப் பெய்யும்.

யாழுக்கு கொண்டுபோனால் மக்கள் உபயோகித்தது கழிவு நீராக மாறி நிலத்தடி நீருடன் சேரும். அதுவும் சாக்கடைதானே.. ஆக, ஒட்டுமொத்த நீரும் பாவிக்க முடியாத நிலைக்கு வரும்.. நீரை வீணடிக்கும் செயலே இது.

முதலில் யாழ் நகருக்கு செய்யவேண்டியது பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் நீர் சுத்திகரிப்பு, நீர்ப்பிடிப்பு முறைகள். இதை ஒன்றுமே செய்யவில்லை. பளபளக்கும் தெருவைப் போட்டுவிட்டு வன்னியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவினமாம். விட்டால் காதில் பெரிய பூவரசம்பூவா வைத்து விடுவாங்கள்.. :lol:

எல்லா இயற்கை மாற்றல் செயல் பாடுகளும் சில சமுதாய நட்டங்களை கொண்டுவரும். கிடைக்கும் லாபம் நட்டத்தை விட கூட என்று காட்டினால் வங்கி கடன் கொடுக்கும். உலகு எங்கும் போட்ட எல்லா நீர்நிலை திட்டங்களுக்கும் இதுதான் முடிவு. JR கொண்டுவந்த ம்காவ்லி திருப்பம் ஏற்படுத்திய சூழல் நட்டம் அள்விட முடியாதது.

 

இந்த திட்டம் மான்களை பாதுகாக்க வந்த திட்டம் அல்ல. மான்களுக்கு ஏற்பட்ட அவலத்தை வைத்து திட்டம் தோல்வியாக கணிக்கப்படமாட்டாது. திட்டம் அமோக வெற்றியாக அமைந்தால் மான்களை வேறு நிலத்திற்கு குடியேற்றுவார்கள்

 

நீங்கள் பதிந்த அறிக்கை யாரால் என்ன நோகத்துக்காக தாயாரிக்கபட்டது என்ற்தை நீங்கள் ஆராந்துதான் இதை இங்கே கொண்டுவந்து பதிவது போல் தெரியவில்லை. நீங்கள் படிக்கத்தக்க சஞ்சிகை ஒன்றில் இந்த ஆய்வு வந்த காரணம்  நீர்த்தேங்கக்ங்களை அமைப்பதன் போது கவனிக்க வேண்டிய மூல்கங்களை பொறியிலாளர்களுக்கு அறிய வைக்கவே. 

 

 

 

கிணற்று நீரை மக்கள் தொடர்ந்து பாவிப்பதால் திட்டம் தோல்வி கண்டுவிட்டது. இது தெளிவாக நடைமுறைப்படுத்தலில் இருந்த தவறு போல படுகிற்தே அல்லாமல் திட்டத்தில், அல்லது திட்டத்தை பரிசீலித்த வங்க்கியில் இருக்கும் தவறு போல் படவில்லை. கடனை வங்கி பொக்கெட்டுக்குள் போட்டால் திட்டம் நிறை வேறாது. அதையேதான் இலங்கையும் செய்தால் கிளினொச்சியும் முன்னேறாது. யாழ்ப்பாணம் முன்னேறாது. எமக்கும் இந்த விவாதம் பிரயோசன்ம் தராது. எனவே நாம் சிந்திக்க வேண்டியது திட்டம் முழுமையாக சீராக நடமுறைப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதே. 

 

ஆனால் திட்ட நடை முறை தோற்ற்மை திட்டத்தில் இருந்த வரைபுக்  கணிப்பு தவறு என்று நீங்கள் வாதாடுவதுதவறு.

 

ஆசிய அபிவிருத்து வங்கி கடன் கொடுக்கும். ஒரளவுகு கடனை சரியாக பாவிப்பதை கண்காணிக்கும். கடனை சரியாக பாவித்து இரணை மடுவை திருத்தி விசாயிகளுக்கு நீரை கொடுத்து, மிகுதியை யாழ்பாணம் கொடு செல்ல்வது அப்படி ஒன்று அழிவு துலைவான திட்டம் அல்ல. இதில் வங்கி அதிகாரிகள் பிழை விட பெரிய பொறியியல் சுற்று சூழல் சிக்கல்கள் ஏற்படவழி இல்லை. விவாதம் கிளினொச்சி நிலங்களை எரியவிட்டுவிட்டு மையவாதிகளால் தண்ணிர் ய்ழ்ப்பாணம் கொண்டு செல்லபடுகிறதென்பதே.  உண்மை  அது அல்ல. குளத்தை திருத்தி புது நிலங்கள் சிவற்றையும் பயிர் இட்டு மிக மிக அவசியமான குடி நீர் பிரச்சனையையும் தீர்ப்பதென்பதாகும்.

 

திட்டம் கிளினொச்சியில் பயிர்கள் எரிவத்தால் குளம் திருத்த என்று வந்ததல்ல.  எனவே குளத்தை திருத்தும் பொது முழு லாமும் விசாயிகளுக்காவும், மேலும் கிளிநோச்சியில் விவாசாயத்துக்கு புதிதாக காடுகள் அளிக்கபட வேண்டும் என்பது தேவை இல்லாதவை. காடுகளான நிலங்களை காடுகளாகவைத்திருப்பத்தா விளை நிலங்களாக்குவதா என்பது வேறு விவாதம். விவாசிகளுக்கு நீருடன் கூடிய வேறு நிலங்களை தெரிந்து கொடுப்பத்தா அல்லது இரணைமடுவை திருத்தி நீர் கொடுப்பதா என்பது இங்கே ஆராயப்பட்ட தலைப்பு அல்ல. 

 

சிங்கையில் இருந்து வெளியே வந்த்தால் உங்களுக்கும் ஆசிய அதிசய நோய் இருக்க சந்தர்ப்பம் இருக்கு.  :lol:  அது உண்மையே இல்லாத வெறும் கனவு. புலத்திலிருந்துகொண்டு யாழ்பாணத்தை சிங்கையாக மாற்றுவது கனவில் கூட வர முடியாத கனவு. அதற்காக போய் அவர்களுக்கு கிடக்கத்தக்க தண்ணிரை குழ்ப்புவதற்கு வாதிடுவத்லும் பார்க்க ஞாயிற்றுகிழ்மை காலை தேய்ட்டரில் நல்ல மூவி ஒன்றை பார்க்கலாம்.  அதை இந்த விவாத்ததில் நாம் இன்னொரு தடவை சொல்லாதிருபதுதான் விவாததிற்கு கண்ணியம்.

 

இப்படி ஒரு ரூசியாவில் இருந்து பிரிந்து போன கோமாளிநாட்டில்தான் மகிந்தா தனது கொள்ளைகளை பதுக்குகிறார் என்பது கேள்வி.

 

போரின் பின்னர் யப்பனும், சேர்மனியும் இப்படியான கடங்களை பெற்றுத்தான் முன்னேறின. கொழும்பு திட்டம் மூலம் யப்பானை முன்னேற்ற் JR உதவியதால்த்தான் யப்பன இன்னமும் இலங்கை அரசுபக்கம் சார்ப்பக ந்டந்து கொள்கிறது. ஆனல் அவை திட்டங்களை நடைமுறைபடுத்துவதில் தங்கள் பொக்கெட்டை விட தங்கள் நாடில்த்தான் கவனம் செலுத்தினார்கள். எனவே ந்மது விவாதம் திருப வேண்டியதிசை திட்டம் எப்படி கண்கானிக்கப்பட போகிறது என்பதில் இருக்க வேண்டும். ஆசிய அபிவிருத்தி வங்கில் பிழை பிடித்து அதை திருத்துவது நமக்கு வேண்டாதது. அதி உலக்கையை போக விடு ஊசியை தேடுவது போன்றது. :)

 

  • கருத்துக்கள உறவுகள்

நீர் ஆவியாகுதாம் மேல எலும்புதாம் திரும்ப வந்து மலையா பெய்யுதாம் என்று அறிவரி பாடம் எடுக்கும் இசை அண்ணா ஆகவே அந்த நீர் குளத்தில இருக்கட்டுமாம் மேல எழும்பட்டுமாம் இல்லை மக்களே தெரியாம தான் கேக்கிறன் ஆசிய வங்கியில் கடமையாற்றுபவர்கள் எல்லாம் என்ன ஒன்றுமே படிக்காமல் வேலைக்கு வந்த அடி முட்டாள்கள் என்று நினைக்கின்றாரா இவர் தமிழர்களிடமே கூட இருக்கும் குணமான ஓட்டைய கண்டுபிடிக்கும் குணம் இசை அண்ணாவிற்கு வந்ததில் ஆச்சரியப்பட ஒண்டும் இல்லை.ஏன் என்றால் அவர் தான் அடங்கா தமிழனாச்சே :D ...... நீர் வழங்குவதற்கு ஆசிய வங்கி முன்வந்திருக்கு அதை நாம் ஏற்றுக்கொண்டோம் வடிகால் அமைப்பதற்கும் ஏனைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இசை அண்ணா தனது செல்வாக்கை பயன்படுத்தி உலக வங்கியிடம் நிதி உதவி பெற்றுத்தருவரானால் நிச்சியமாக அதையும் செயல்ப்படுத்தலாம்

எல்லா பொறிமுறைகளையும் படிப்படியாக தான் செயல்ப்படுத்த முடியும்.....ஆகவே இசை அண்ணா போன்ற சிவில் எஞ்சினிர்கள் வெறும் குறைகளை கண்டுபிடிப்பதை விட்டு தாயக மக்களுக்கும் அபிவிருத்திக்கும் நேரடியாக சென்று உதவ வேண்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

குழாய் மூலமோ, கால்வாய்கள் மூலமாகவோ நீர் கொண்டு வருவது தவறு என்று சொல்லவில்லை. ஆசிய வங்கி "நிபுணர்கள்" சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அது சரியாகவே இருக்கும் என்கிற வாதம் "கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்" என்கிற கொள்கைக்கு எதிரானதாக் இருக்கு. :D அத்தகைய குருட்டு நம்பிக்கைகளை களையவே உஸ்பெகிஸ்தானின் உதாரணத்தை இணைத்தேன். அந்த அறிக்கை சரி, பிழை என்பதல்ல வாதம். ஒரு திட்டத்தைப் போட்டால் அதில் அ முதல் ஃ வரையான விவகாரங்கள் அலசப்பட்டு உள்வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதை விட்டுவிட்டு , ஆசிய வங்கி சொல்லிவிட்டது.. நம்பு என்பது என் கொள்கைக்கு முரணானது. அந்தத் திட்டம் ஏன் வெற்றியாகும் என்பதை சொல்வதை விட்டுவிட்டு யாழ் சிங்கையாக முடியாது என்கிற வாதம் ஏற்புடையதல்ல. சுத்தமான நீர் என்பது அடிப்படை மனித உரிமை. அதையே செய்ய முடியாதவர்கள் வன்னியில் இருந்து அக்கறையில் தண்ணீர் கொண்டுவருகிறார்கள் என்பது வெறும் கதையே. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தனி  நபர் வாழ்க்கை  போன்றதே இதுவும்...

 

இப்போ

எனக்கு கொஞ்சம் பொருளாதாரத்தில் இடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்

முதலில் என்ன  செய்யணும்

 

1- அள்ளி  எறியும்

மற்றும் தேவையற்று செய்யும் செலவுகளைக்குறைக்கணும்

(தண்ணீரை அளவுடன் பயன்படுத்துதல். மக்களுக்கு அதன் அவசியத்தை உணர்த்துதல். ...)

 

அதற்கும் சரிவரவில்லையென்றால்

 

2- வருவாயை  கொஞ்சம் பெருக்கலாமா என்று பார்க்கணும்

(மழை  நீரைச்சேமித்தல். மழை நீர் வழிந்து கடலுக்குச்செல்வதை தவிர்த்தல். ..)

 

அதற்கும் சரிவரவில்லையென்றால்

 

3- எவரிடமாவது கடன் கேட்டுப்பார்க்கலாம்

எமது பக்கத்தால் எல்லாவகையிலும் மாற்றங்களைச்செய்து

மற்றவரிடம் பெறும் கடனை  மீள  அடைக்க வழி  கண்டுபிடித்தபின்.

 

அதுவும் முடியாதவேளை

 

4- அதிகாரத்தையோ

அறிவையோ

பலத்தையோ பாவித்து மற்றவரிடமிருந்து தட்டிப்பறிக்கலாம்

இதற்கு எம்மை  மாற்றவேண்டிய  அவசியமில்லை

சுயநலம் ஒன்றே போதும்.

 

இந்த விடயத்தில்

நாம் முதல் 3 விடயங்களையும் செய்யாது

நான்காவதை செய்ய  முயல்வது தப்பு......... :(

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட திட்டம் ஏன் நீண்டகால அடிப்படையில் ஓட்டை என்கிறதை மட்டும் சொல்லுறன்.. :D

யாழ் நகரில் நிலத்தடி நீர் சாக்கடையா மாறுது என்பது தெரிந்ததே.. அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுகிறார்கள். கழிவுகள் எங்கே போகுது? தெரியாது.

நீர் மேலாண்மையில் தாக்குப்பிடிக்கக் கூடிய திட்டங்கள் (Sustainable schemes) மட்டுமே வெற்றி பெறும். சின்ன வயதில் படித்திருப்போம். மழை பெய்யுது.. குளம், கடலில் இருந்து ஆவியாகுது. மேகமாகுது. மழை பெய்யுது.. இது நீண்டகாலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய இயற்கையின் முறை.

இரணை மடுவில் உள்ள உபரி நீரை யாரும் பாவிக்காமல் விட்டால் அது ஆவியாகி மீண்டும் மழையாகப் பெய்யும்.

யாழுக்கு கொண்டுபோனால் மக்கள் உபயோகித்தது கழிவு நீராக மாறி நிலத்தடி நீருடன் சேரும். அதுவும் சாக்கடைதானே.. ஆக, ஒட்டுமொத்த நீரும் பாவிக்க முடியாத நிலைக்கு வரும்.. நீரை வீணடிக்கும் செயலே இது.

முதலில் யாழ் நகருக்கு செய்யவேண்டியது பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் நீர் சுத்திகரிப்பு, நீர்ப்பிடிப்பு முறைகள். இதை ஒன்றுமே செய்யவில்லை. பளபளக்கும் தெருவைப் போட்டுவிட்டு வன்னியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவினமாம். விட்டால் காதில் பெரிய பூவரசம்பூவா வைத்து விடுவாங்கள்.. :lol:

இசை தங்கள் ஆளால் முன்னெடுக்கும் திட்டம் தோற்றுவிடக்கூடாது என்கின்ற உணர்வே இங்கு முரணான கருத்துக்களை வைப்பவர்களிடம் மேலோங்கியுள்ளது எவ்வளவுதான் படிச்சு தெரிஞ்சு தமிழன் காலம் காலமாய் மோட்டு சிங்களவனிடம் தோற்பதற்குரிய காரணங்களும் இப்படியான முரண் வாதங்களே தான் பிழையாண கருத்தை கூறிவிட்டேன் அதை ஏற்றுக்கொள்ளும் மணப்பக்குவம் கிடையாது பதிலுக்கு தன்னுடைய கருத்தே வெல்ல தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை என்றவாறு உள்ளவர்களை என்ன செய்ய முடியும்?

 

இந்த விடயத்தில் நாங்கள் தமிழர்கள் எங்களின் உறவுகளுக்கு உடணடி தேவையாய் உள்ள விடயம் என்ன ?அதை செய்துமுடித்தோமா?

சிந்திக்கும் திறன் அற்றவர்களாக்கிவிடும் வறட்டு கௌரவம் 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தீவுப்பகுதியைச் சேர்ந்தவன்.அங்கு தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருக்கிறது உண்மையே.ஆனாலும் அங்கு பயிர்ச்செய்கையை காலபோகம் மட்டும் செய்கிறார்கள்.ஆண்டு தோறும் பெய்யும் மழைநீரை கடலில் கலக்க விடாது நீர்த்தேக்கங்களை உருவாக்கினால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம்.முதலில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம்.பின்னர் அவற்றைக் கால்வாய்கள் மூலம் இணைக்கலாம்.ஒழுங்கான வடிகால் அமைப்பு மூலம் பெரும் வெள்ளப் பெருக்கைத் தடுக்கலாம்.இவை எதனையும் ஒரு செய்து பார்க்காமல் இரணை மடு நீரை ஏன் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிறை வேற்ற வேண்டும்.திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின் மழை இன்றி குளத்தின் மட்டம் உயராது விடின் கால்வாயினதோ குழாயினதோ நிலை என்ன?செலவழித்த பணம் திரும்ப வருமா?கடைசி முயற்சியாக வேண்டுமென்றால் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தீவுப்பகுதியைச் சேர்ந்தவன்.அங்கு தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருக்கிறது உண்மையே.ஆனாலும் அங்கு பயிர்ச்செய்கையை காலபோகம் மட்டும் செய்கிறார்கள்.ஆண்டு தோறும் பெய்யும் மழைநீரை கடலில் கலக்க விடாது நீர்த்தேக்கங்களை உருவாக்கினால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம்.முதலில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம்.பின்னர் அவற்றைக் கால்வாய்கள் மூலம் இணைக்கலாம்.ஒழுங்கான வடிகால் அமைப்பு மூலம் பெரும் வெள்ளப் பெருக்கைத் தடுக்கலாம்.இவை எதனையும் ஒரு செய்து பார்க்காமல் இரணை மடு நீரை ஏன் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிறை வேற்ற வேண்டும்.திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின் மழை இன்றி குளத்தின் மட்டம் உயராது விடின் கால்வாயினதோ குழாயினதோ நிலை என்ன?செலவழித்த பணம் திரும்ப வருமா?கடைசி முயற்சியாக வேண்டுமென்றால் செய்யலாம்.

 

 

நன்றி  புலவர்

 

இதன் அடிப்படையில் புங்குடுதீவில்

முதலில் மகாவித்தியாலயத்திலும்  மற்றும் பொதுவைத்தியசாலையிலும் 

பின்னர் ஏனைய  பாடசாலைகளிலும்

அதைத்தொடர்ந்து

ஒவ்வொரு வீடுகளிலும்

மழை  பெய்யும் போது வழியும் நீரை

கூரையிலிருந்து  நேரடியாக நிலத்தின் கீழ் பெரும்  கலன்களை  தாழ்ப்பதினூடக சேமிக்கவும்

அவற்றை பின்னர் பாவிப்பதுக்கமான ஒரு திட்டத்தில் இறங்கியிருக்கின்றோம்.

அத்துடன்

வேறு பலராலும்

கரையோரப்பகுதிகளைச்சுற்றி  பனைகளை  வளர்ப்பதனூடாக

மழைத்தண்ணீர் வெளியில் செல்லாது தடுப்பதும்

உப்புநீர் உள்ளேவராது தடுப்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

 

இந்த அனுபவ  அடிப்படையிலேயே  இங்கு சில கருத்துக்களை வைத்தேன்.

நானும் தீவுப்பகுதியைச் சேர்ந்தவன்.அங்கு தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருக்கிறது உண்மையே.ஆனாலும் அங்கு பயிர்ச்செய்கையை காலபோகம் மட்டும் செய்கிறார்கள்.ஆண்டு தோறும் பெய்யும் மழைநீரை கடலில் கலக்க விடாது நீர்த்தேக்கங்களை உருவாக்கினால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம்.முதலில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம்.பின்னர் அவற்றைக் கால்வாய்கள் மூலம் இணைக்கலாம்.ஒழுங்கான வடிகால் அமைப்பு மூலம் பெரும் வெள்ளப் பெருக்கைத் தடுக்கலாம்.இவை எதனையும் ஒரு செய்து பார்க்காமல் இரணை மடு நீரை ஏன் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிறை வேற்ற வேண்டும்.திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின் மழை இன்றி குளத்தின் மட்டம் உயராது விடின் கால்வாயினதோ குழாயினதோ நிலை என்ன?செலவழித்த பணம் திரும்ப வருமா?கடைசி முயற்சியாக வேண்டுமென்றால் செய்யலாம்.

மேலே நிறைய தேவை இல்லாவைகள். அதற்குள் பெருமாள் இரணைமடுவை தொடாமல் தொடர்ந்து வம்பு விதைக்கிறார். 

 

நீங்கள் சொல்வது ஒரு திட்டம். அதை கிராமசபைகள்  மட்டத்தில் ஆண்டுகளுக்கு மன்னர் செய்திருக்க முடியும். ஆனால் செய்யபடாமையை, குடிசனம் நிறைந்த இடத்தில் நீரை தேக்கி வைது ஒரு பொது நிலைத்துக்கு மாற்றி அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதை திவீரமாக குடிநீர் தரத்துக்கு  பின்னர் சுத்திகரித்து வினியோகிப்பது சாத்தியமில்லாது என்று தான் நான் நினைக்கிறேன்.

 

பூநகரி தடுப்பு சரிவரவில்லை. அப்படித்தடுத்து  ஏரி நீரை வெளியே இறத்தால் அந்த மட்டத்தை சமன் செய்ய கடல் நீர் தையூடா ஊறிவந்து அந்த இட்ங்களின் மண்ணை உவர்ப்பாக்கிவிடும் என்றுதான் கைவிட்டவர்கள். 

 

வெள்ளிக்கரர் காலத்திலிருந்தே இரணைமடு கதை இருந்து வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நிறைய தேவை இல்லாவைகள். அதற்குள் பெருமாள் இரணைமடுவை தொடாமல் தொடர்ந்து வம்பு விதைக்கிறார். 

 

 

இத்திரியின் ஆரம்பத்தில் என்னை குப்பை என்று திட்டினீர்கள் இப்ப நான் வம்பு விதைக்கிறேன் நல்ல கதை அய்யா முதலில் வயதுக்கு ஏற்ற மாதிரி பண்பாக கருத்தெழுத பழகுங்கள் பின்பு ஒரு தமிழனாக இந்த பிரச்சினையை அனுகுங்கள்.

இத்திரியின் ஆரம்பத்தில் என்னை குப்பை என்று திட்டினீர்கள் இப்ப நான் வம்பு விதைக்கிறேன் நல்ல கதை அய்யா முதலில் வயதுக்கு ஏற்ற மாதிரி பண்பாக கருத்தெழுத பழகுங்கள் பின்பு ஒரு தமிழனாக இந்த பிரச்சினையை அனுகுங்கள்.

என்னை திருத்த வெளிகிடாமல் நான் குப்பை கொட்டியால் பார்த்து குப்பை கொட்டுவதாக நடிக்காமல் விக்கி மாதிரி சந்திரன் போன்ற இடத்தில் இருக்கும் பெரிவர்களை உங்கள் குண்ம தரம் மற்ற்வர்கள் அறியாது மாதிரி திட்ட முயலாதீர்கள்.  

 

என்றை வயதை பற்றி எனக்கு தெரியும்; நீங்கள் யார் விக்கி யார் என்ற வித்தியாசம் இருக்க வைத்து நடக்க பழகுங்கள். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்ட எதிர்க்கால வளர்ச்சிக்கு இந்த இரணைமடு திட்டம் கண்டிப்பா அவசியம் என்ன விலை கொடுத்தாவது செயல்ப்படுத்தனும் யாழ்ப்பாணத்தில மழை பெயிரதெ குறைவு இதுக்குள்ள எப்பிடி அதை சேகரிக்கிறது..... நிலங்களும் மட்டு மட்டு அதனால குளம் எல்லாம் கட்ட முடியா இது தான் ஒரே வழி

இந்த திட்டம் மூலம் முழு குடாநாட்டுக்கும் தண்ணி போக போறதில்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் அதனால don't worry guys

வடமாகாணத்தை ஒன்றாக பார்க்கும் போது நாம் யாரிடமிருந்தும் மூளையைப் பாவித்து ஏய்த்து, திருடுடி பெற்றுக்கொள்கிறோம் என்று வராது. அல்லது மற்றைய்வர்கள் வெறும் முட்டாள்; அதனால் யாழ்ப்பாணத்தவர்தான் புத்திசாசிகள் என்றும் ஆகாது.

 

தமிழ் ஈழம்தான் தன்னிறை பெற வேண்டுமேயல்லாமல் வன்னி அல்ல. யாழ்ப்பாணமும் மற்றைய பதிகளில் தங்கி இருக்கலாம். மற்றைய பகுதிகளும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் மக்கள் வசிக்க முடியாத நிலையை தோன்ற்வைத்துவிட்டு, வன்னியை பசுந்தோட்டமாக்கி விவசாய பொருள்களை யாழ்ப்பாணம் கொடு வருவது செய்ல் படுத்த முடியாதது. இந்த தவறை முகாமைத்துவத்தில் Sub-optimization என்பார்கள்.

 

கடையில் ஒருவர் பொருள்களை விற்றால் அவர் வாடிக்கையாளர்களிடம் திருடுகிறார் என்றாகாது. வன்னி மக்கள் விவசாயத்தால் பெறும் பொருள்களை யாழ்ப்பாணத்தில் விற்றுப் பணம் பெற்றால் வன்னியார் எம்மை சுரண்டுகிறார்கள் என்று யாழ்ப்பாணத்தார் கொதிக்க கூடாது. இது நாம் "தமிழர்" என்றதை மறந்து பிரதேசவாத்த்தை கிளறும் செயல்பாடுகள். 

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்ட எதிர்க்கால வளர்ச்சிக்கு இந்த இரணைமடு திட்டம் கண்டிப்பா அவசியம் என்ன விலை கொடுத்தாவது செயல்ப்படுத்தனும் யாழ்ப்பாணத்தில மழை பெயிரதெ குறைவு இதுக்குள்ள எப்பிடி அதை சேகரிக்கிறது..... நிலங்களும் மட்டு மட்டு அதனால குளம் எல்லாம் கட்ட முடியா இது தான் ஒரே வழி

இந்த திட்டம் மூலம் முழு குடாநாட்டுக்கும் தண்ணி போக போறதில்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் அதனால don't worry guys

 

இந்த திட்டத்தின் வரை படத்தை நான் ஏற்கனவே  பார்த்துள்ளேன் சுண்டல்

இதன்படி

இது கிளிநொச்சியால் புறப்பட்டு

பூநகரி ஊடாக யாழுக்கள் வந்து

அதைத்தாண்டி தீவுப்பகுதி  வரை செல்ல  திட்டம் போடப்பட்டுள்ளது

அத்துடன் இரணைமடுப்பகுதியிலும் சில  காலம் இருந்துள்ளேன்

அளவுக்கதிகமான நீர்த்தேக்கம் எப்பொழுதாவது  ஒருமுறைதான் வரும்

மற்றும்படி

அவர்களே

கொஞ்சம் கொஞ்சமாக  மக்களின் தேவைக்கும் குறைவாகவே  திறந்து விடுவார்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.