Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்க வேண்டாம், சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்: விக்னேஸ்வரன் அறிவுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Wigneswaran-150.jpg

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிக்குமாறும் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையில் இன்று இடம்பெற்ற மாகாணசபை அமர்வின்போது சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனற பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்து இருந்தார். இதன் போதே இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்காமல் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவியுங்கள் இனவழிப்பு என்ற சொல்லினை பாவிக்கும் போது சில சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னரே இங்கு நடைபெற்றது இனவழிப்பு என கூறமுடியும். அதுவரைக்கும் இங்கு நடைபெற்றது இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிப்பதே நன்று என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=102349&category=TamilNews&language=tamil

அற்புதமான அணுகுமுறை விக்கினேஸ்வரன் 
ஐயா தாங்கள் பொருத்தமான தருணத்தில் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரபிரஸாதம்
 
கதிர்காமர் என்கிற தமிழ் சட்ட மேதையை வைத்து சிங்களவன் விளையாடியது ஒருகாலம் தற்போது நமது நேரம் தங்கள் வழிகாட்டலில் வாழ்த்த்துக்கள் ஐயா
  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாவிடம் ஒரு கேள்வி.. உங்கள் சட்டத்தில் பயங்ரவாதம் என்றால் என்ன? அது தொடர்பான சட்ட வரைபு என்ன? அதன் கீழ் தானா பயங்கரவாதம் சிறீலங்காவில் உச்சரிக்கப்படுகுது?

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது கேள்வி மட்டுமல்ல. கண் மூடி இல்லாத உலக மக்களின் கேள்வியும் கூட. நவிப்பிள்ளை அம்மையாரிடம் இதே கேள்வியை கேட்ட போது அவரது பதில் " I don't think there is a definition for terrorism in the world"

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் என்பது அரசியற்சொல்லே தவிர சட்டச்சொல் அல்ல..! முறையான வழக்கறிஞர்களின் துணையுடன் எதிர்கொள்ளும்போது இவற்றை உடைக்கமுடியும்.

இது எனது கேள்வி மட்டுமல்ல. கண் மூடி இல்லாத உலக மக்களின் கேள்வியும் கூட. நவிப்பிள்ளை அம்மையாரிடம் இதே கேள்வியை கேட்ட போது அவரது பதில் " I don't think there is a definition for terrorism in the world"

  நெடுக்கர் உங்கள் கேள்விக்கு நவி அம்மையாரின் பதிலை விட சிறந்த பதில் இருக்க முடியாது. பயங்கரவாதத்தை வரையறை செய்யும் போது அதன் அளவுகோல் அரசியலுக்கேற்ப வேறுபடும். இசை அண்ணா சொல்வது போல பயங்கரவாதம் என்பது ஒரு அரசியல் முலாம் பூசப்பட்ட ஒரு வடிவம். ஒரு முறை ஹிலாறி அம்மையார் கூட பயங்கரவாதத்திற்கான ஒரே அளவு கோலை வைத்து எல்லா அமைப்புகளையும் வரையறுக்க முடியாது. உதாரணமாக தமிழ் புலிகள் என்று சொன்னார். ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு பயங்கரவாதியாக தெரிந்த நெல்சன் மண்டெலா இன்று அவர்களுக்கு ஒரு சிறந்த உலக தலைவராக தெரிகிறார். தத்தமது தேவைக்கேற்ப அதன் வரையறையை மாற்றிகொள்வார்கள். அதற்கெற்ப நாம் சாதுர்யமாக பயணிக்க வேண்டும். புலிகள் அரசியல் தலைவர்களை கொன்றதை பயங்கரவாதம் என்று சொன்ன அமெரிக்கா தான் சிஐயே மூலம் பல அரசியல் படுகொலைகளை நிகழ்த்தியது. உலக நடை முறையில் ஒரு அரசாங்கத்தை பயங்கரவாத அரசாங்கம் என நிரூபிப்பது மிகவும் கடினம். அதனால் தான் புலிகள் தாங்கள் மௌனிக்கும் போது இலங்கை அரசை பாரிய போர்குற்ற/இனப்படுகொலை பொறிக்குள் தக்க சான்றுகளுடன் மாட்டி விட்டார்கள். அதுவே எமது  விடுதலைக்கான திறவுகோலாக அமையப்போகிறது. 

Edited by seeman

அமேரிக்கா செய்யுது அப்ப நாங்கள்  ஏன் செய்ய முடியாது என்று பலர் இப்பவும் எழுதுகின்றார்கள்.வீட்டில வானொலி டி வி இல்லையோ . :icon_mrgreen:

திறவுகோல் கவனம் தொலைத்து விடவேண்டாம் . :D

எதை சொன்னாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கின்றது இவர்களை நம்பித்தான் பலர் அரசியலில் குதிக்கின்றார்கள் . :icon_idea:

அமெரிக்கா செய்யுது அப்ப நாங்களும் செய்வம் எண்டுதான் நாங்கள் மாலைதீவுக்கு போனம். :icon_mrgreen: 

அங்கை எங்கட திறவுகோலை தொலைத்துவிட்டு வந்தம். :D  

இப்ப நாங்கள் என்ன கத்தினாலும் கேட்பார் யாரும் இல்லை. :(

எங்களை ஒருத்தனும் நம்புறான் இல்லை. :unsure: 

எங்களை நம்பி யார் ஐயா அரசியலில் குதிப்பான். 

நாங்களே அரசியலில் நேரடியாக குதித்தால் தான் உண்டு. :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

1377591_632767450109464_2122467955_n.jpg

கந்தா கடம்பா கதிர்வேலா உன்திருவாயால் ஒரு அருள் வார்த்தை உதிர்த்தாயே அது கானும் ஈழத்தமிழர்கள் ஏழ்பிறவிப்பயனை அடைந்ததற்க்கு சமன். வல்வைமேடையில் நிகரற்ற மாவீரன் பிரபாகரன் , கொழும்பில் உலகம் வெறுக்கும் பயங்கரவாதி இரண்டும் சொல்வது ஒரே வாய் அதான் நம்ம விக்கியின் ஸ்டைல்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணையை வைத்து, அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்!

ஆனால் எமது பிரச்சனைக்கான தீர்வின் வழி, 'இனப்படுகொலை' என்பதை நிறுவுவதன் மூலமே சாத்தியமாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

இனஅழிப்பு சொல்லை பயன்படுத்த விக்னேஸ்வரன் தடை.

vikki%20dakku%20mahi_0.jpg?itok=pyD40u4p
 
தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதனை  பாதிக்கப்பட்ட அவர்கள் தானே கூறவேண்டும், இதற்கு கூடவா மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியினையும், சர்வதேசத்தின் ஆலோசனையினையும் பெறவேன்டும்.

முதலமைச்சர் தனது சட்ட நிபுணத்துவத்தினை தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உபயோகிக்கலாம் அல்லவா?

நேற்று நடந்த மாகான சபையின் அமர்வில்;  வடமாகாண சபையில் 'இன ஒழிப்பு' என்ற சொற்பதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் நேற்றைய அமர்வின் போது அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இனவொழிப்பு சொற்பதங்களைப் பயன்படுத்தினர். இதனையடுத்தே விக்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முதமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இனவழிப்பு என்பது ஒரு சட்டச் சிக்கலான வார்த்தைப் பிரயோகம். சர்வதேச விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இனவழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்த முடியும். அது வரையிலும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற வார்த்தை பயன்படுத்தவும் என்று எடுத்துரைத்துள்ளார்.

மக்கள் மத்தியில் மக்களாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலராலும் மக்களுக்கு நடந்த விடயங்களை துணிந்து கூற சக்தியுள்ளது என்றால் அந்த சக்தியினை ஏன் விக்னேஸ்வரன் தடுக்கவேண்டும்.

அடுத்ததாக தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்போகின்றேன் என கடந்த மாதம் அறிவித்த விக்னேஸ்வரன் ஏன் இந்த முறை சபை அமர்வில் அதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை தீர்மானம் எடுக்கவும் இல்லை.

நன்றி: ஈழநாதம். ( http://www.eelanatham.net/articles/2014/01/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88 )

Edited by nedukkalapoovan

முதலமைச்சர் தனது சட்ட நிபுணத்துவத்தினை தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உபயோகிக்கலாம் அல்லவா?

இதை எழுதிய ஊடகவியலாருக்கு இலங்கையில் பிரதம நீதியரசர் 13ம் திருத்ததை சட்டங்கள் முரண முடியாது என்று கூறியதால் பதவி நீக்கப்பட்டார் என்பது தெரியாதமை வருந்த தக்கது. அவரால் சிறையில் வைத்து ஒரு சிறு பரிசு கொடுக்கமுடியாத நிலையில், இந்த ஊடகவியலார் இலங்கையில் சட்ட்ம் எதுவரை செல்லும் என்ற யதார்த்தை புரியாமல் பேசுகிறார் என்பது தெரிகிறது. மேலும் இனவழிப்பு என்றது "Rule of Law" இல்லாத இலங்கைக்கு வெளியேயும் போகும் என்பது இவரின் அறிவுக்கு புரியவில்லை. 

இனவழிப்பு என்ற பதம் இருப்பதால் அதன் தாற்பரியம் கருத்தி ரூசியா, சீனா போன்ற நாடுகள் வெளிப்படையாக ஐ.நா ஒரு நாட்டை பிரிப்பதை எதிர்க்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இனவழிப்பு விசாரணை கிடைக்காது என்றால் போர்க்குற்ற விசாரணையை வராமல் தடுக்கதக்க நடத்தைகள் கூடாது. 

பழைய தமிழர்சுக்கட்சி போன்றல்லாது  இப்போது தேவையான அளவு வக்கீல்கள் கூட்டமைப்பில் இல்லை என்பது புரியப்பட வேண்டும்

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

  • ருவாண்டாவில் ஹுட்டு இனத்தவருக்கும், டுட்சி இனத்தவருக்கும் மோதல். ஒரு இனம் இன்னொன்றை அழிக்க முனைந்ததால் அது இன அழிப்பு என்று வரையறுக்கப்பட்டது.
  • பழைய யூகோஸ்லாவியாவில் சேர்பிய இனம், போஸ்னியர்களைக் கொன்றதால் அது இன அழிப்பு.
  • பழைய ஜேர்மனியில் நாட்சிகள் யூதர்களை அழித்ததால் அது இன அழிப்பு.
ஆனால் இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் அழித்தார்கள் என்கிற வழக்கு இன்னும் பதிவு செய்யப்படவில்லை. தமிழ்ப் புலிகளை சிங்கள இராணுவம் அழித்தது என்றுதான் பதியப்பட்டுள்ளது. அந்த நிகழ்வின்போது ஒருவேளை தமிழ் பொதுமக்களும் இறந்திருக்கலாமோ என்கிற கேள்வி மட்டும்தான் இப்போது உள்ளது.

தெற்கில் தமிழர்கள் போருக்கு முன் கொல்லப்பட்டபோதும் அது ஒரு கலவரம் (riots) என்றுதான் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. சிங்களவர்கள் அடிக்க தமிழர்கள் அடிவாங்கினார்கள் என்று பதியப்படவில்லை. வன்முறைக் கும்பல்கள் (violent mobs) தமிழர்களைத் தாக்கினார்கள் என்றுதான் உள்ளது. இதன் பயனாக‌, சிங்களத் தலைமைகள் சில துப்பாக்கி குண்டுகளுக்கு இலாவகமாக குனிந்து தப்பித்துக் கொண்டார்கள்.

இன்று செய்யக்கூடியது அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்க வைப்பது. இதன்மூலம் சில விடயங்களை நிறைவேற்றலாம்.

1) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்றின் படைகள் சிறுபான்மையினரை கொன்றது. அதை மறைக்க அங்குள்ள ஜனநாயக அரசு முற்பட்டது. ஆகவே இவ்விடயம் அங்குள்ள ஜனநாயகத்தின் தோல்வி என்பது நிறுவப்படும்.

2) தோல்வி என்றானவுடன், மறுபடி இது நிகழாதிருக்க என்ன வழி என்பது சர்வதேச சமூகத்தால் (அதாவது ஐநாவால்) ஆராயப்பட வேண்டும். அந்தக் கட்டத்தில் இது ஒருமுறை நடந்த நிகழ்வல்ல. பலமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை ஆவணப்படுத்தும்போது, இன அழிப்பு வரையறைக்குள் வர வாய்ப்பு உள்ளது. இது தமிழ்த்தரப்பின் செயற்திறன்களில் தங்கியுள்ளது.

3) அவ்வாறு இன அழிப்பு என்கிற எல்லைக்குள் வந்துவிட்டால், இரு இனங்களும் சேர்ந்து வாழ்வது பாதுகாப்பற்றது என்கிற விடயம் நிறுவப்பட்டுவிடும்.

அத்தனையும் உண்மை

நல்ல விடயங்கள்

எமது பக்கம் நீதியும் தர்மமும் உண்டு

வன்முறைப்பாதையும் தற்பொழுது இல்லை

எல்லாம் சரி  தம்பிமார்

இவற்றை   யார் செய்வது.........???????????????????????????????? :(  :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.