Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எனது ஆட்சியில் சமாதானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்" சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கா-

Featured Replies

ஆயிரம் எழுத்துக்கள் சொல்வதை ஒரு படம் சொல்லும் . :icon_mrgreen: .

KFC யில் இருந்து காய்பிஞ்சா சாப்பிடுகின்றார்கள் . :D

வீரத்திற்கும் ஜில்லாவிற்கும் பால் ஊத்தினது மியான் மாரிலா. :icon_idea:

 போராட்டம் நடக்கும் போதுதான் கட்டு கட்டா அள்ளி விட்டீர்கள் ,இனி உந்த பருப்பு வேகாது  . :rolleyes:

அய்யா நீங்கள் எந்த உலகத்து ஆளோ தெரியவில்லை.ஆயிரம் படத்திலை KFC யை பிடித்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் முன்னர் சாப்பாடுக்கடைகளில் சாப்பிடாதவர் போலிருக்கு போலிருக்கு. அந்த நேரம் நாங்கள் வடை வேண்ட போனாலே கியுவில் நின்றுதான் வாங்குவோம். நீங்களும் டக்கியும் மட்டும் வாழ்கிறீர்கள் என்றதின் ஒரு சாட்சியமாக அந்த KFCயில் புரியாணி சாப்பிட்டதை மறக்காமல் பிடித்துவைத்துக்கொள்ளுங்கள். எப்படிதமிழ் மக்களின் உணவு உடை அல்ல கலாச்சாரம் வரைக்கும் கெடுபடுகிறது என்பதைத்தான் விக்கியும், ஐங்கரநேசனும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். 

 

யாழ்ப்பாணத்தில், பாடசாலைகளையும் கோயில்களையும் சிறிலங்கா இராணுவத்தினர் இடித்துத் தள்ளுகின்றனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவு இல்லாமலா சிறிலங்கா படையினர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்?

மகிந்த ராஜபக்சவின் சகோதரர் தானே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக இருக்கிறார்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு என்று கூறி, தமிழர் பகுதிகளில் 500 ஏக்கர் நிலம் சிறிலங்கா இராணுவத்துக்காக சுவீகரிக்கப்பட்டு, அவர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140208109926

Edited by மல்லையூரன்

 

உலகின் சகல அசைவுகளையும் தெரிந்த நீங்கள்!!!! முள்ளிவாய்க்கால் முடிவின் பின் அங்கே நடக்கும் பகிரங்கமான சிங்கள குடியேற்றங்களையும்.....பல இராணுவ ஆக்கிரமிப்புகளையும் தெரியாமல் இருக்க என்ன  திரை உங்களைப்போன்றவர்களை மறைக்கின்றதோ தெரியவில்லை? :lol:  :lol:  :lol:
உங்களைப்போன்றவர்கள் நாளைக்கு கிடைக்கிற பிலாக்காயை விட இண்டைக்கு கிடைக்கிற கிலாக்காயே மேல்....எண்ட சுயநல புத்தியுள்ளவர்கள். :icon_idea:
 
சர்வதேசமே தமிழீழத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன எனும்போது...இவர்களுக்கு மட்டும் சகலதும் சொர்க்கபுரியாக தெரிகின்றது. :o

 

இதில் நீங்கள் கோபப்பட எதுவும் இல்லை அண்ணை .முதலில் தலையங்கத்தை பாருங்கோ ? எங்கே தொடங்கி எங்க வந்திருக்கு என்று .

எமக்கு அரசியல் தீர்வு ஒன்று வைப்பதற்கு சிங்களம் எள்ளவும் முயலவில்லை என்பது நூறு வீதம் உண்மை , அதைவிட இனப்பிரச்சினையே அங்கு இல்லை என்று முழு இலங்கையிலும் எவரும் எங்கும் குடியிருக்கலாம் என்று மிக விரைவாக திட்டமிட்டு குடியேற்றம் செய்வதும் உண்மை .

ஆனால் இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் , புலிகள் இருந்த காலத்தில் தேனும் பாலும் ஓடியது என்று எழுதும் போதுதான் எனக்கும் உண்மையை எழுத வேண்டிய தேவை வருகின்றது .

யுத்தம் நடைபெற்ற காலத்தை விட மக்கள் இன்று சந்தொசமாக இருக்கின்றார்கள் என்பதும் நூறு வீதம் உண்மை .ஓடிவந்து இங்கிருந்து கொண்டு யுத்தத்தின் எந்த எந்த அகோரத்தையும்  அழிவையும் அனுபவிக்காது புலிகள் இருந்த காலத்தில் என்று தொடங்கினால் ....................

தும்பளையானின் படத்தை வைத்து வடக்கில் மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்றதை நீங்கள் ஒருவர் மட்டும்தான் எழுதுகிறிர்கள். டேவிட் கமறுன் கூட அதை நம்பவில்லை. 


http://www.seithy.com/breifNews.php?newsID=103182&category=TamilNews&language=tamil

 

இந்த படங்களையும் ஒருக்கா பாருங்கோ

மன்னிக்க வேண்டும் மல்லை

யாழ்பாணத்தில் கமறரூனும் கொழும்பில் மில்பாண்டும் ,

புலிகள் உலகிற்கே ஜனநாயகத்தையும் சட்டத்தையும் ஒழுங்கையும் சொல்லி கொடுத்தார்கள் என்று பேசியதை பி பி சி ,  சி என்  என்  இருபது தரம் ஒலிபரப்பியத்தை பத்து தரம் கேட்ட நானே மறந்துவிட்ட நிலையில் ஒருதரம் கேட்ட மல்லை அதை நினைவு வைத்திருந்ததற்கு ஆயிரம் நன்றிகள் . :icon_mrgreen:

தும்பளையானின் படத்தை வைத்து வடக்கில் மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்றதை நீங்கள் ஒருவர் மட்டும்தான் எழுதுகிறிர்கள். டேவிட் கமறுன் கூட அதை நம்பவில்லை. 

http://www.seithy.com/breifNews.php?newsID=103182&category=TamilNews&language=tamil

 

இந்த படங்களையும் ஒருக்கா பாருங்கோ

 

கோயில் திருவிழாக்களை பார்த்துட்டும் இப்படி சொன்ன எப்படி...சனம் புலிக்கு முந்தைய காலத்துக்கு வந்திருக்கு என்பதில் சந்தேகமே இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

 

நீலனின் பொதி அது இருந்தாலே இப்போ நிம்மதியாக இருக்கலாம் .

 

 

 

நடந்த ஒப்பந்தங்கள் எல்லாம் குழப்பியது புலிகள் தான் ,

 

 

 

எமக்கு அரசியல் தீர்வு ஒன்று வைப்பதற்கு சிங்களம் எள்ளவும் முயலவில்லை என்பது நூறு வீதம் உண்மை , 

 

  • கருத்துக்கள உறவுகள்
ஐந்து ஆறுதரம் வாசிச்சு இது தமிழில் எழுதி இருக்கு  என்பதை உறுதி செய்ய கூடியதாக இருக்கிறது ....
வரும் சனிகிழமை ஒரு vodka போத்தல் வாங்கி முழுதையும் குடிச்சிட்டு .... ஒருமுறை வாசிச்சு பார்ப்பம் என்று இருக்கிறன். 
ஏதும் விளங்கலாம் என்ற நம்பிக்கை இருக்கு.

 

ஐந்து ஆறுதரம் வாசிச்சு இது தமிழில் எழுதி இருக்கு  என்பதை உறுதி செய்ய கூடியதாக இருக்கிறது ....
வரும் சனிகிழமை ஒரு vodka போத்தல் வாங்கி முழுதையும் குடிச்சிட்டு .... ஒருமுறை வாசிச்சு பார்ப்பம் என்று இருக்கிறன். 
ஏதும் விளங்கலாம் என்ற நம்பிக்கை இருக்கு.

 

 

அவர் தெளிவாக தானே சொல்லியிருகிறார்...தமிழரின் முழு பிரச்சனைகளுக்கும் புலிகளும் சிங்களவரும் தான் காரணம் என்று....இதை விளங்குவதற்காக குடிச்சு போட்டு...பிறகு கார், மோட்டர் சைகிள் ஓடி வீண் பிரச்சனைகளில் மாட்டுபடவேண்டாம்..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தெளிவாக தானே சொல்லியிருகிறார்...தமிழரின் முழு பிரச்சனைகளுக்கும் புலிகளும் சிங்களவரும் தான் காரணம் என்று....இதை விளங்குவதற்காக குடிச்சு போட்டு...பிறகு கார், மோட்டர் சைகிள் ஓடி வீண் பிரச்சனைகளில் மாட்டுபடவேண்டாம்..... :lol:

 

உங்களுக்கு நாளைக்கு லீவுபோல் இருக்கு இன்றைக்கே தொடங்கி விட்டீங்கள்.
 
எனக்கு நாளைக்கு பகுதிநேர வேலை இருக்கு ...... முடிய 
வர சனி வாசிக்கத்தான் தெளிவாக தெரியும்.
 
வார சனிக்கிழமை அநேகமாக ..... நானும் உங்கள்போல் எல்லாம் தெளிவா இருக்கு என்றுதான் எழுதுவேன்.
நான் கொஞ்சம் தெளிஞ்சு இருப்பன்.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழாவில் சந்திரிக்கா காப்பு விற்றார்கள் .மக்களுக்கு யுத்தத்தின் அழிவு பற்றி தெரியும் எனவே சமாதானதை யார் முன்னெடுத்தாலும் ஆதரவு காட்டினார்கள் .

 

பேச்சுவார்த்தைகள் சீரியசாக நடக்கும் போது இந்திய பத்திரிகைள் சந்திரிகாவை கிண்டல் செய்தார்கள் .புலிகளின் சுயரூபம் இவருக்கு தெரியவில்லை என்று .

அதுவே நடந்தது யுத்த நிறுத்தம் முடித்த இரவே சிறிலங்கா கடற்படை மீது தாக்கி நாப்பதுபேர்கள் வரை இறந்தார்கள் .இரகசியமாக் செய்த சத்தியங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் வழக்கம் போல காற்றில் பறந்தது .

நீலனின் பொதி அது இருந்தாலே இப்போ நிம்மதியாக இருக்கலாம் .

சிங்களவனை  பழி வாங்கமட்டும் புறப்பட்டவர்களுக்கும் அதை ஆதரவழித்தவர்களுக்கும் மனித உயிரின் பெறுமதி பற்றி என்ன அக்கறை .

கடைசியில் எதுவுமில்லாமல் வெள்ளை கொடி பிடிக்கவேண்டிய நிலை .தமிழனும் நடுத்தெருவில் .

ஆனால் சிலர் இன்னமும் சவுண்டிற்கு குறைவில்லை.  

 

 

மடிக்குள் இருக்கும் ஓணானை வெளியில் எடுத்து எறியுங்கள்- சம்பந்தன் ஐயாவுக்கு பகிரங்க மடல்!

ஐயா,

பாராட்டு மழைகளில் நனைந்து சளி பிடித்து என்ன கஷ்டப்படுகிறீர்களோ என்ற கவலையுடன் இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறோம்.

சாதாரண நபர்களின் பாராட்டா அது, அமைச்சர் பசில், டக்ளஸ், கருணா, இப்படி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராட்டுக்களால் நீங்கள் இப்போது திக்குமுக்காடிப்போய் இருப்பீர்கள்… அது மட்டுமல்ல நீங்கள் அடிக்கடி தனிமையில் சென்றுவரும் அலரிமாளிகைக்கு கூட உங்களுக்கு விசேட அழைப்பு வந்திருப்பதாக கேள்வி.

தலைவர் பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்களுக்கான விடுதலை கிடைக்கும் என்று பெரும்பாலான தமிழ் மக்கள் நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கைகள் கலைந்த போது சம்பந்தன் ஐயாவின் காலத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என எங்களில் பலரும் நம்பியிருந்தோம். அகிம்சைப்போராட்டம், ஆயுதப்போராட்டம் என தொடர்ந்த எமது பயணம் இப்போது இராஜதந்திரப்போராட்டத்தில் நிற்கிறது. அ, ஆ, இ, அடுத்த கட்டம் ஈ……. நீங்கள் அடிக்கடி இதைத்தான் கூறிவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் மீதும் நீங்கள் தலைமை தாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் பெரும்பாலான தமிழர்கள் நம்பியிருந்தோம். தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். அதற்கு உறுதியான ஒரு தலைவராக சம்பந்தன் ஐயா இருக்கிறார் என இறுமாப்புடன் பெருமை கொண்டிருந்தோம். சம்பந்தன் ஐயா காலத்திலாவது எங்கள் மக்களுக்கு ஒரு விடிவு, விடுதலை கிடைக்கும் என மலைபோல நம்பியிருந்தோம்.

அப்படி பட்ட உங்களுக்கு கொடும்பாவி எரிப்போம் என வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள் என கேள்விப்பட்டே இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறோம். உங்களை தலைவர் என்று நம்பியிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் உங்களின் கொடும்பாவிகளை எரிக்கும் நிலைக்கு அவர்களை தள்ளிவிடாதீர்கள் என்று பணிவோடு சொல்வதற்காகவே இந்த மடலை உங்களுக்கு வரைகிறோம்.

இதற்கு எல்லாம் காரணம் உங்கள் மடிக்குள் இருக்கும் ஒரு ஓணான்தான். அந்த ஓணானை மடிக்குளிருந்து எடுத்து வெளியில் எறியாத வரைக்கும் அது உங்களை குடைந்து கொண்டே இருக்கும். அந்த ஓணான் யார் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும். விளங்காவிட்டால் நேரடியாக சொல்லிவிடுகிறோம். அது வேறுயாருமல்ல.. உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் சட்டம் படித்த சுமந்திரன்தான்.

2010ஆம் ஆண்டுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கு நன்றாகத்தான் இருந்தது. சரியான தீர்மானங்கள் தான் எடுக்கப்பட்டன. எல்லோரின் ஒத்த கருத்துக்கு மதிப்பளித்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் எப்போது சுமந்திரன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளே வந்தாரோ அன்று தொட்டதுதான் தமிழ் தேசியக்தேசியக் கூட்டமைப்புக்கு சனியன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிக்கொள்வது உங்களின் காதுகளுக்கு கேட்டிருக்குமோ தெரியவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விரும்பத்திற்கு மாறாக யாரையோ நீங்கள் திருப்திபடுத்துவதற்காக தன்னிச்சையான தீர்மானங்களை எடுப்பதும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் அடிக்கடி தனியாக பாதுகாப்பு செயலாளர் கோதபாயாவையும், அலரிமாளிகைக்கு சென்று மகிந்த ராசபக்சவையும் சந்தித்து வருவதும் உங்களை யாரோ தவறான திசைக்கு அழைத்து செல்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

தமிழீழத்தை நாங்கள் ஒருபோதும் கோரவில்லை என சொன்னீர்கள், 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனித்தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரம் கோரி சர்வஜன வாக்கெடுப்பாக பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி பிரகடப்படுத்தியிருந்தது. அந்த பிரகடனத்தின் கீழேயே திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டி நீங்கள் வெற்றி பெற்றீர்கள். 32ஆண்டுகளின் பின்னர் விடுதலைப்புலிகளின் அஸ்தமனத்திற்கு பின்னர் தமிழீழத்தை நாங்கள் ஒரு போதும் கோரவில்லை என சொன்னீர்கள்.

அண்மையில் கனடாவில் விருந்து ஒன்றில் பேசிய போது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சொந்தம் என்று சொல்லவரவில்லை என சொன்னீர்கள்….

இவை எல்லாம் உங்கள் ஞாபகமாறாட்டமோ அல்லது யாரையோ திருப்திப்படுத்துவதற்காக சொல்கிறீர்களோ என குழம்பி போய் இருந்தோம்.

ஒரு வருடத்திற்கு மேலாக அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுகளில் இணக்கம் காணப்பட்ட சில விடயங்களை நடைமுறைப்படுத்தாமல் இனிப்பேச்சுக்கள் இல்லை என பேச்சிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழு தீர்மானித்திருந்த வேளையில் யாருக்கும் சொல்லாமல் அலரிமாளிகைக்கு சென்று மகிந்தவுடன் பேச்சு நடத்தி விட்டு மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தீர்கள். இது கூட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் நீங்களும் சுமந்திரனும் எடுத்த முடிவு என்றே ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிக்கொண்டனர்.

ஏற்கனவே நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஜெனிவா கூட்டத்திற்கு குழு ஒன்றை அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டிருந்ததை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அந்த தீர்மானத்தை மாற்றுவதாக இருந்தால் நாட்டில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கருத்துக்களை பெற்றே ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்க வேண்டும்.

எந்த கலந்துரையாடல்களையும் நடத்தாது ஜெனிவாவுக்கு குழுவை அனுப்புவதில்லை என்று அறிக்கை தயாரித்து ஊடகங்களுக்கு அனுப்புவதற்கு 10 நிமிடங்களுக்கு முதல் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த தகவலை சொன்னதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானம் என்று எப்படி சொல்ல முடியும்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு சென்று எதையாவது சாதிக்க முடியுமா இல்லையா என்பது வேறு விடயம். அங்கு போவதால் ஒரு துரும்பை கூட உங்களால் தூக்கி போடமுடியாமல் கூட இருக்கலாம். நீங்கள் போகவில்லை என்ற பிரச்சினைக்கு அப்பால் யாரையோ திருப்திபடுத்துவதற்கு அவசராவசரமாக அந்த ( யாருக்கும் விளங்காத) அறிக்கையை விட்டிருக்கிறீர்கள் என்றே கருதுகிறோம்.

நீங்கள் ஜெனிவாவுக்கு போகவில்லை என்றால் அதை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்து விட்டு இருப்பதுதான் இராஜதந்திரம். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக விளங்காத அறிக்கை ஒன்றை வெளியிட்டு உங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சிக்கலில் மாட்ட வைத்தவர் பற்றி நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த அறிக்கையின் பின்னணியில் உங்கள் மடிக்குள் இருக்கும் சுமந்திரன்தான் உள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இப்போது சுமந்திரன் உங்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதைப்போலவே 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நீலன் திருச்செல்வம் உங்களை தவறாக வழிநடத்தி வந்தார் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருக்கட்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கட்டும். வடகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத கொழும்பை சேர்ந்த சுமந்திரனை சட்டம் படித்தவர் என கூறி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்கியது போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியில் நீங்கள் செயலாளராக இருந்த போது வடகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளை புரியாத நீலன் திருச்செல்வத்தை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்கினீர்கள்.

நீலன் திருச்செல்வம் எவ்வாறு உங்களை தவறாக வழிநடத்தினார் என்பதற்கான பல சம்பவங்களை குறிப்பிடலாம்.

ஆனால் ஒரு சம்பவத்தை மட்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். ஏனெனில் இச்சம்பவத்தை உங்களால் நிட்சயம் மறந்திருக்க முடியாது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது அலரிமாளிகையில் நடந்த கூட்டத்தில் இனிமேல் புலிகள் தென்னிலங்கையில் சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என கூறியதாக சண்டே லீடரில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இலங்கை வங்கி தலைவர் ராஜன் மட்டுமே தமிழர். அவரே அந்த தகவலை வெளியில் சொல்லியிருக்க வேண்டும் என சந்திரிக்கா உட்பட ஆளும் கட்சி தரப்பினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. ஆனால் ராஜன் அந்த தகவலை தனக்கு சொல்லவில்லை என சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கூறியிருந்தார்.

நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என்று சந்திரிக்கா சொன்ன விடயம் சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்தது. இராஜதந்திர மட்டத்தில் சந்திரிக்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. குமார் பொன்னம்பலம் அதை ஒரு சவாலாக எடுத்து பலத்த கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

அந்த வேளையில் நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என ஜனாதிபதி சந்திரிக்கா கூறவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளராக இருந்த நீங்கள் அப்போது திருகோணமலையில் இருந்தீர்கள்.

அந்த அறிக்கையை நீலன் திருச்செல்வமே தயாரித்து தமிழர் விடுதலைக் கூட்டணி கடித தலைப்பில் தன்னுடைய வீட்டு தொலைநகல் இயந்திரத்தின் மூலம் அனுப்பியிருந்தார். அதில் பெரிய மோசடியே இடம்பெற்றிருந்ததை அப்போது சண்டே லீடர் பத்திரிகை ஆதாரபூர்வமாக வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் ஆர். சம்பந்தன் என குறிப்பிட்டு ஆர்.சம்பந்தன் என நீலன் திருச்செல்வம் கையொப்பம் இட்டிருந்தார். சம்பந்தனின் கையொப்பத்தை நீலன் திருச்செல்வம் கள்ள கையொப்பம் இட்டிருக்கிறார் என அந்த நேரத்தில் குமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த விடயங்கள் எல்லாம் சண்டே லீடரில் வெளிவந்ததை நீங்கள் அறிவீர்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகத்திற்கு பதிலாக என குறிப்பிட்டு நீலன் திருச்செல்வம் என கையொப்பம் இடுவது தவறல்ல. ஆனால் ஆர். சம்பந்தன் என நீலன் திருச்செல்வம் கையொப்பம் இடுவது மோசடி வேலையாகும்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து நான் சொல்லித்தான் நீலன் திருச்செல்வம் அறிக்கையை அனுப்பினார் என நீங்கள் நீலன் திருச்செல்வத்தை காப்பாற்ற முற்பட்டிருந்தீர்கள்.

நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என சந்திரிக்கா சொன்னாரா இல்லையா என்பது எப்படி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தெரியும்? சந்திரிக்காவை காப்பாற்றுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி எதற்காக அறிக்கை விட வேண்டும்? அதுவும் கள்ள கையொப்பம் இட்டு.

அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை உறுப்பினர்களிடையே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பல உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ பொதுச்சபை உறுப்பினர்களுக்கோ தெரியாமல் தவறான சில தீர்மானங்களை நீலனும் நீங்களும் எடுப்பதாகவும், நீலன் திருச்செல்வம் உங்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வந்ததை நாம் அறிந்திருக்கிறோம்.

சந்திரிக்காவை காப்பாற்றுவதற்காக நீலன் திருச்செல்வம் கள்ள கையொப்பம் இட்டு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கொழும்பு தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் பெரும் சர்ச்சை எழுந்து அக்கூட்டத்தை இடையில் முடிந்து கொண்டு நீங்களும் நீலன் திருச்செல்வமும், ஆனந்தசங்கரியும் நேரடியாக சந்திரிக்காவின் அதிபர் மாளிகைக்கு சென்று ஆலோசனை நடத்தியதாக கூட அப்போது செய்திகள் கசிந்திருந்தன.

சந்திரிக்கா ஒரு அற்புதமான பொதி வைத்திருக்கிறா என நீலன் திருச்செல்வம் சொல்லி தமிழர் விடுதலைக் கூட்டணியை அப்போது தவறான வழிக்கு அவர் கொண்டு சென்றிருந்தார். சந்திரிக்கா தன்னுடைய பொதியை உங்களுக்கு காட்டினாரோ தெரியாது. சந்திரிக்காவிடம் பொதி ஒன்று இருக்கிறது என கூறி அதில் நீங்கள் மயங்கியிருந்த காலங்களையும் நாம் அறிவோம்.

சந்திரிக்காவின் கையாளாக மாறியிருந்த நீலன் திருச்செல்வம் எப்படி உங்களை தவறான வழிக்கு கொண்டு சென்றிருந்தாரோ அதே போலவே இன்று சுமந்திரனும் உங்களை தவறான வழிக்கு கொண்டு செல்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீலன் திருச்செல்வம் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் உங்களுக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றை சந்திரிக்கா வழங்கியிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உரிமை கோரி நீங்களும், ஆனந்தசங்கரியும் நடத்திய வழக்கில் உங்களுக்காக சுமந்திரன் இலவசமாக வழக்கு பேசியதையும், ஆனந்தசங்கரியை நீதிமன்றில் நிறுத்தி கேள்வி கேட்டதையும் எண்ணிப்பார்க்கிறோம். இது போன்ற சில நன்றிக்கடனுக்காக நீங்கள் சுமந்திரனுக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினீர்கள்.

யாருக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவது என்பதை தீர்மானிப்பது நீங்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான். அது இப்போது பிரச்சினை இல்லை.

அண்மைக்கால வரலாற்றில் இலங்கையில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி துண்டு துண்டாக உடைத்த பெருமை மகிந்த ராசபக்சவை சாரும்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைவராக ரணில் இருக்கும் போது அக்கட்சியுடனான சகல தொடர்புகளுக்கும் கரு ஜயசூரியாவுடன் தொடர்பு கொண்டு ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை உடைத்து சிலரை சிலரை தன்னுடன் சேர்த்துக்கொண்டார் மகிந்த.

அதேபோல ஜே.வி.பி தலைவராக சோவன்ச அமரசிங்க இருக்கும் போது விமல் வீரவன்ச போன்றவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கட்சியை பிளவு படுத்தி பலவீனப்படுத்தினார் மகிந்த.

அதேகதி சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு ஏற்பட்டது. மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஏற்பட்டது.

மகிந்த உடைத்து பலவீனப்படுத்தாத கட்சி இல்லை என்றே கூறலாம். இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு மகிந்த பலவழிகளில் முயற்சி செய்து வருகிறார். அதற்கு ஆயுதமாக சுமந்திரன் பயன்படுத்தப்பட்டு வருகிறார் என்பதை கொழும்பு அரசியல் நடவடிக்கைகளை அவதானிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள்.

எமக்கு கவலை தரும் விடயம் இதுதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறுமனே ஒரு அரசியல் கட்சியல்ல. தேர்தலில் போட்டியி;ட்டு பாராளுமன்றம் சென்று 10ரூபாவுக்கு சாப்பிட்டு விட்டு வருவதல்ல அந்த அமைப்பின் நோக்கம்.

விடுதலைக்காக போராடும் ஒரு இனத்திற்கு தலைமை தாங்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் என்ற வகையில் உங்களுக்கும் ண்டு.

http://inioru.com/?p=26627

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன் சிறீலங்கா சனாதிபதியானால்... அங்குள்ள மிருகக் காட்சி சாலைகளில் கூட புலிகளைப் பார்க்க முடியாது!. புலிகளின் சாயலுள்ள பூனைகளைத் தானும் காண முடியாது!!. எரிபொருள் நிறுவனமான ESSO அங்கு தலைவைத்தும் படுக்க முடியாது!!!. :o:D

நுணாவிலானில் இணைப்பு மூலம் எமக்கு தெரியாத பல விடயங்களை தெரிந்து கொண்டோம். போராட்டத்திற்கு போன இளைஞர்களை அரசியல் அறிவற்றவர்கள் என்று பரப்புரை புரிந்துவரும் படித்தவர்கள் அடுத்தவனுக்கு விசுவாசமாக தனது இனத்தை விற்று பிழைப்பு நடத்திய பல வரலாறுகள் உண்டு. அதில் ஒரு சிறு பகுதியே இது என நினைக்கிறேன்.

மன்னிக்க வேண்டும் மல்லை

யாழ்பாணத்தில் கமறரூனும் கொழும்பில் மில்பாண்டும் ,

புலிகள் உலகிற்கே ஜனநாயகத்தையும் சட்டத்தையும் ஒழுங்கையும் சொல்லி கொடுத்தார்கள் என்று பேசியதை பி பி சி ,  சி என்  என்  இருபது தரம் ஒலிபரப்பியத்தை பத்து தரம் கேட்ட நானே மறந்துவிட்ட நிலையில் ஒருதரம் கேட்ட மல்லை அதை நினைவு வைத்திருந்ததற்கு ஆயிரம் நன்றிகள் . :icon_mrgreen:

 

யாழ்பாணத்தில் கமறரூனும் கொழும்பில் மில்பாண்டும் ,

புலிகள் உலகிற்கே ஜனநாயகத்தையும் சட்டத்தையும் ஒழுங்கையும் சொல்லி கொடுத்தார்கள் என்று பேசியதை பி பி சி ,  சி என்  என்  இருபது தரம் ஒலிபரப்பியத்தை பத்து தரம் கேட்ட நானே மறந்துவிட்ட நிலையில்

 

சி.என்.என்னையும் இதற்குள் தும்பளையான் படம் எடுத்து போட்டிருக்கிறார? நீங்கள் அதை மட்டுமல்ல, ரொரொண்டோ முழுக்க மேடை போட்டு பேசிய பிரான்சிஸ் கரிசனை கூட மந்ததுவிட்டு, தும்பளையாளின் படத்தை மட்டும் தூக்கி பிடிப்பது நிச்சயம் படு பயங்கரமான செலெக்ரெட் அம்னீசியா. 

 

இன்னொரு போத்தலை உடையுங்கோ. புலிகள் ஏன் புளொட் கூட பிரிடிஸ் நேவியின் கடல் கப்பல்களில் உலகம் பூராக சென்று சமாதானத்தை நிலைநாட்டிய படங்களும் தெரிய வரும். 

 

1.புலிகள் விடுதலைக்கு ஆயுதம் எடுத்து போராடினார்கள். அதனால் எதிரியும் நண்பர்களும் உண்டானார்கள். 

2.தும்பளையானின் படத்தில் சமாதானம் பிறந்திருப்பதாக கண்டுபிடித்தமை பேதமை. அரியல் சூனியம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.