Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள்

Featured Replies

Black-skin-care.jpg

கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.

அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.

பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 

காய்கறி பேஷியல்

முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும். 

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம். 

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம். 

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். 

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.

வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள். 

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 

அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும் …ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. அதை முகத்தில் தடவி, அதற்கு மேல் கால்வானிக் சிகிச்சை தருகிறோம். நான்கைந்து முறைகள் செய்தாலே வியப்பான மாற்றத்தைக் காண முடிகிறது.

கறுப்பான பெண்களுக்கான வரப்பிரசாதமென ஒயிட்டனிங் பேஷியல்களைச் சொல்லலாம். பட்டுக்காகப் பயன்படும் மல்பரி, கோஜிக் அமிலம் என சருமத்தை நிறமாக்கக் கூடிய இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறவற்றால் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. கிளென்சிங்கில் தொடங்கி, மசாஜ், ஸ்கரப், பேக் என ஒவ்வொரு கட்டத்திலும் நிறத்தை அதிகரிக்கச் செய்கிற பொருட்கள் இதில் உண்டு.

கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிற பொருட்களால் செய்யப்படுகிற …ஸ்கின் மிராக்கிள் சிகிச்சை கறுப்பான பெண்களுக்கு ரொம்பவே லேட்டஸ்ட்.

இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்? 

கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது. 

அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம். 

ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும். 

கறுப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம். 

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாகக் காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம். 

கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.

உதடு: உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.

முகத்தின் எண்ணைப் பசை நீங்க: முட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், தேன் கால் ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் பூசிவிட்டு முகம் கழுவினால், எண்ணைப் பசை நீங்கிவிடும். 

முக வறட்சி நீங்க: பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும். 

கரும்புள்ளி மறைய: முகப்பருவால் ஏற் படும் ஜாதிக்காயை அரைத்துப் போடவும். முகப்பரு நீங்க: பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் பருக்கள் மறையும்.

வாய் நாற்றம்: புதினா கீரையைக் காய வைத்து பொடி செய்து பல் துலக்குவதால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும். 

வெண்மையான பல்: இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும். 

உதடு: உதட்டில் தேங்காய் எண்ணை தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும். 

கை: பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடித்து கைகளில் தேய்த்து வந் தால் கை மிருதுவாக இருக்கும்.

நகம்: நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண் ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.

மார்பகங்களைப் பாதுகாக்க: வெள்ளைக் குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் சரியான வடிவம் பெறும்.

வியர்வை நாற்றம்: ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி, சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

உடல் பருமன்: பப்பாளிக் காயை பொறியலோ, குழம்பு வைத்தோ வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

பாதம்: பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

 

 

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=9262:2013-03-25-21-45-36&catid=42:fashion-beauty&Itemid=401

இங்கு வேலை இடங்களில் கறுப்பின ஆண்களுக்கு இருக்கும் "கவனிப்பை" பார்க்கவேண்டும்.

ஆனை கருத்தாலும் ஆயிரம் பொன் பெறும்.

இங்கு வேலை இடங்களில் கறுப்பின ஆண்களுக்கு இருக்கும் "கவனிப்பை" பார்க்கவேண்டும்.

ஆனை கருத்தாலும் ஆயிரம் பொன் பெறும்.

 

 

 

நீங்க தானே முந்திச் சொன்னீங்க..
 
Once you go black you never come back  என்று..
 
இப்ப தோப்பிய பிரட்டி போடுறீங்க...
 
ஆ..
 
Pandu-Tamil-movie-Nilavil-Mazhai-wwwmovi
  • 2 weeks later...

நீங்க தானே முந்திச் சொன்னீங்க..

Once you go black you never come back என்று..

இப்ப தோப்பிய பிரட்டி போடுறீங்க...

ஆ..

Pandu-Tamil-movie-Nilavil-Mazhai-wwwmovi

இரண்டும் ஒன்று தான். கண்டபாட்டுக்கு யோசிச்சு கார்ட் டிரைவை பழுதாக்காதைங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

மார்பகங்களைப் பாதுகாக்க: வெள்ளைக் குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் சரியான வடிவம் பெறும்.

 

அடேயப்பா! :icon_mrgreen:

இதை எப்படி நம்புவது? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வேணாம்.நான் ஒண்ணும் எழுதமாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

மார்பகங்களைப் பாதுகாக்க: வெள்ளைக் குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் சரியான வடிவம் பெறும்.

 

அடேயப்பா! :icon_mrgreen:

இதை எப்படி நம்புவது? :unsure:

 

 

05-1393997359-35copy.jpg05-1393997359-35copy.jpg

 

 

இவரிடம்  கேட்டுப்பாருங்கள்..... :icon_mrgreen:  :D  :D

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.