Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கைகளை சுமந்திரன் முன்வைக்கவில்லை என்னையும் பேச அனுமதிக்கவில்லை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

Ananthi%20prass_CI.png

தமிழ  தேசியக்கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எந்தவொரு சந்திப்பிலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. என்னையும் எதும் பேச அனுமதிக்கவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்,ஊடக அமையத்தில் இன்று (06.03.14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்;தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வடமாகாணசபையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன் அங்கு வடமாகாணசபை சார்பில் என்னையே ஜெனிவாவிற்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்வகையினில் தமிழரசுக்கட்சியின் அனுசரணையுடன் நான் பல்வேறு சிரமங்களிற்கு மத்தியில் ஜெனீவா சென்றிருந்தேன்.

அங்கு சென்று இறங்கியதுமே  தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நான் விடுதலைப்புலிகளது முக்கிய போராளியான எழிலனின் மனைவி என்பதால் என்னையும் சர்வதேச பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் போராளியாகவே பார்ப்பார்களென தெரிவித்ததுடன் என்னை ஏதும் பேச வேண்டாமெனவும் தானே எல்லாவற்றினையும் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார். 

இவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரலில் அவர் என்னை அங்கு அழைத்து சென்றிருப்பார் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக அங்கு சென்றிருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

18 நாட்டு ராஜதந்திரிகள் சகிதம் கடந்த பெப்;ரவரி 13ல் இடம்பெற்ற ஜெனீவா சந்திப்பில் கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்டிருந்த சுமந்திரன் போர்குற்ற விசாரணை தொடர்பாகவோ இன அழிப்பு தொடர்பாகவோ ஏதும் பேசியிருக்கவில்லை. என்னையும் பேச விடவில்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக நான் இருந்தேன். குறுக்கிட்டு அங்கு பேசியிருக்க முடியுமாயினும் ராஜதந்திரிகளிடையே கௌரவத்தினை மதித்து தான் பேசாதிருந்ததாகவும் அனந்தி மற்றொரு கேள்விக்கு அங்கு பதிலளித்தார். 

ஏதாவதொரு பிரேரணையினை கொண்டுவந்தால் போதுமென்பதே அவரது நிலைப்பாடாக இருந்ததெனவும் அவர் தெரிவித்தார்.

ஜெனீவாவினில் ஓர் போர்க்குற்ற விசாரணை வருமென நம்பிருந்த எமது மக்கள் விரக்திக்குள்ளாகி இருக்கிறார்கள். காணாமல் போனோர் தொடர்பில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும் அற்றுப்போயுள்ளது. எமது மக்கள் கடும் மன உளைச்சலிற்கு உள்ளாகியுள்ளார்கள். இன அழிப்பிற்கு சர்வதேசம் நீதியான தீர்வொன்றினை தராதென எமது இளம் சமுதாயம் கருதி மாற்றுவழிகளை தேடிக்கொள்ளுமானால் அகிம்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளே அதற்கு பொறுப்பாக வேண்டியிருக்குமெனவும் அனந்தி தெரிவித்தார்.

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103913/language/ta-IN/article.aspx

 

நான் முன்னர் கூறியபடியே சுமந்திரன் சம்பந்தர் கூட்டு தமிழ்மக்களுக்கு முதுகில் குற்றி துரோகம் செய்துள்ளது..ஆனந்தியை அவரை அறியாமலே எமாற்றியுள்ளது.. இனியும் இவர்கள் எமக்கு தேவையா? மூழு இனமும் ஏமாற்றப்பட்டு கோடிக்கணக்கில் கைமாறி... Posted 28 February 2014 - 07:00 PM வாசித்து அறியுங்கள் இது உண்மையானால்? தமிழினத்தின் கதி அதே கதி தான்.. http://www.yarl.com/forum3/index.php?showtopic=136006&hl= http://www.yarl.com/forum3/index.php?showtopic=136006&hl=

Edited by வழிகாட்டி

பொறுபில்லாத தனமான செய்திகளை சங்கதியும், குளோபலும் போட்டு வியாபாரம் பண்ணுகிறார்கள். 

 

அனந்தி போனது NPC யின் முடிவால்.

தமிழனுக்கு தமிழன் தான் எதிரி... அவசரமாக ஆனந்தியை கூட்டிவந்து சர்வதேச விசாரணைகளில் இருந்து இலங்கையை தப்பவைக்க சதி செய்துள்ளார்கள்... இறுதி யுத்தத்தின் போதும் இப்படி தான் நடந்தது சதிவேலைகள்.. எமது முழு இனமும் திட்டமிட்டு எமாற்றப்படுகிறது... இனியும் தான்.. உடன் தமிழ்மக்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டு இனியும் எமாறமல் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

தமிழனுக்கு தமிழன் தான் எதிரி... அவசரமாக ஆனந்தியை கூட்டிவந்து சர்வதேச விசாரணைகளில் இருந்து இலங்கையை தப்பவைக்க சதி செய்துள்ளார்கள்... இறுதி யுத்தத்தின் போதும் இப்படி தான் நடந்தது சதிவேலைகள்.. எமது முழு இனமும் திட்டமிட்டு எமாற்றப்படுகிறது... இனியும் தான்.. உடன் தமிழ்மக்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டு இனியும் எமாறமல் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

 

புரிகிறது. நம்மால் என்ன பண்ண முடியும். திருடனாகத்தான் பார்த்து திருந்த வேண்டும். அதை விடுத்து முதலைக்கண்ணீர் வடித்தால்......

இறுதியுத்தத்தில் உங்களையும் யாரோ குழப்பினார்களா? யார் சுமந்திரனா?

சுமத்திரன் இலங்கையில் இருக்கும்  தொழில்துறை சார்பான சிறந்த சட்டத்துறை நிபுணர்களில்  ஒருத்தர்...  அவரின் வாடிக்கையாளர்கள் எல்லாமே இலங்கையிலும்  வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் முதலிட்ட பெரிய முதலீட்டாளர்கள்...  அதில் சிங்களவர் தமிழர் எல்லாரும் அடக்கம்... 

 

இதுக்கை சுமத்திரன் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு வாறமாதிரி ஏதாவது செய்வார் எண்டு,  போர்குற்றம் சாட்டுவார் நாட்டை துண்டாட சாத்தியமான  விடயங்களை பேசி தமிழ் மக்களுக்கு  தீர்வு கிட்ட ஏதாவது செய்வார் எண்டு  நம்பும் மோட்டு கூட்டமா நாங்கள்...?? 

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தரய்யாவையும் சுமத்திரனையும் குறைசொன்னால் யாழில் சிலருக்கு பதறத்தொடங்கிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஒரு சுத்த அரசியல்வாதி. அவருக்கு தனது இருப்பே முக்கியம். அதன்பிறகுதான் மீதியெல்லாம். இவரும், தமிழ்நாட்டின் சிதம்பரமும் ஒரே வண்டியில் கட்டப்படக் கூடியவர்கள். 

 

ஆகவே அவரை நொந்து பயனில்லை. எமது தலையெழுத்து எதுவோ அப்படியே நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுபில்லாத தனமான செய்திகளை சங்கதியும், குளோபலும் போட்டு வியாபாரம் பண்ணுகிறார்கள். 

 

அனந்தி போனது NPC யின் முடிவால்.

ஆதாரம் இல்லாமல் சங்கதியிலும்,குளோபல்.தமிழ்நெற்களை பழி சுமத்தவேண்டாம் பிழையை பிழை என ஒத்துக்கொள்ளுங்கள்.

சம்பந்தரய்யாவையும் சுமத்திரனையும் குறைசொன்னால் யாழில் சிலருக்கு பதறத்தொடங்கிவிடும்.

ஆருக்குத்தான்  தங்களின் சம்பளத்தில் கைவைத்தால் உங்களுக்கு வரும் நடுக்கம் வராது?

ஆதாரம் இல்லாமல் சங்கதியிலும்,குளோபல்.தமிழ்நெற்களை பழி சுமத்தவேண்டாம் பிழையை பிழை என ஒத்துக்கொள்ளுங்கள்.

ஆதாரம் இல்லாதவற்றை பதிந்துவிட்டு திரும்ப திரும்ப ஓடி ஒழிக்க வேண்டாம். இதுவரையில் அனந்தியின் எல்லாக கதைகளும் திரிக்கபட்டவை. எல்லோருக்கும் தெரியும் சிலர் அனந்தியை மானம் இல்லாமல் தங்களின் ஓடு குதிரையாக்குகிறார்கள் என்பது. 

இந்த திரியில் தமிழ் நெட்டை இழுப்பதின் நோகம் என்ன?

தமிழினத்துரோகிளை பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே போகும்... தமிழ்மக்களுக்கு உலகம் எதாவது நன்மை செய்ய விரும்பினாலும் விடமாட்டார்கள் எம்முள் இருக்கும் களைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உள்ள அமைப்புக்கள் பல எதிரியை நோக்கிக் கை நீட்டாமல், எமக்குள்ளேயை யாரை நோக்கிக் குற்றவாளி கை நீட்டலாம் என்று தான் திரிகின்றன... யாரையும் தனிப்பட்ட விதத்தில் பட்டியலிடவிரும்பவில்லை. புரிந்தவர்கள் மானே, தேனே போட்டுக் கொள்ளுங்கள்.

அனந்தி அக்காவின் கருத்தோடு ஒத்துப் போகின்றேனன். ஏனென்றால் சுமந்திரனுக்கு ஒரு இழப்பு வலி என்ன என்று புரிந்து கொள்ளும் அறிவு இல்லை. அவர்களின் வேதனை என்ன என்று புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. தமிழிக்கூட்டமைப்பில் உள்ள பிரச்சனையும் அது தான். வேறு யாரையும் சுமந்திரனுக்கு நிகராக அனுப்பமுடியவில். அனுப்பப்படுபவர் ஆயுத அமைப்புப் பின்ணனி இல்லாதவர் என்று பார்த்தால் சுமந்திரன், விக்னேஸ்வரன் அப்படி என சிலர் தான் மிஞ்சுகின்றனர். அதிலும் முதுமை என்று தவிர்த்தால் சுமந்திரன் மட்டுமே மிஞ்சுகின்றார். அதனால் சுமந்திரனே இங்கு தேவைப்படுகின்றார்.

அவரில் முழுக்குற்றமா என்றால் அதுவும் சொல்லமுடியவில்லை. அவர் ஒருவேளை இருப்பதைக் காப்பாற்றுவது எப்படி என்று சிந்திக்கலாம். இழந்தவற்றுக்கு தீர்வினை நாங்கள் சிந்திக்கின்றோம். இவற்றைக் கூடிப் பேசுவது தான் சரியாக இருக்குமே அன்றி இப்படி அடிபடுவது சரியாக இல்லை.

தங்களுடைய வரையறைக்குள் வரமுடியாதவர்களோடு இப்படிப் போர் தொடக்கின்ற செயலைச் செய்யாது இருப்பது தான் சில அமைப்புக்களுக்கு நல்லது. ஏன் அடுத்தவரை உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றீர்கள்.



 

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்னவுடன் அமெரிக்கா அதைக்கேட்டு நடந்துகொண்டது என்பதை நான் நம்பவில்லை.. ஆனால் இந்தியா காதுக்குள் சொன்னதை சுமந்திரன் அந்தப்பக்கம் வட மாகாணசபையின் கருத்தாக அமெரிக்காவிடம் சொல்லியிருக்கலாம் என்பதை நம்புகிறேன். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு சுத்த அயோக்தியத்தனம்.

 

ஆனந்தி இப்படி சொன்னதிக்கு பிறகும் சம்பத்தனையோ சுமந்திரனையோ இன்னும் நம்புவது கடினம் . புலிகளின் மீது தமிழ் தேசிய கூட்டமைபிக்குள் மறுபட்ட் கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் அவர்களை தீண்ட தகாதவர்கள்போல் நடத்துவது அநியாயம்'..இங்கே பலர் பல விதமான கருத்துக்கள், கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி சொல்லுகிறார்கள், சொல்லி இருக்கிறார்கள் , அடிப்படையில் இது EPDP ஒரு எதிரான அமைப்பாகவே தோன்றியது ..யார் என்ன செய்தாவது EPDP தோற்கடிக்க வேண்டும் என்றே ஆரம்பத்தில் தொடங்கியது - அந்த நேரத்தில் UNP மகேஸ்வரனும் அதில் ஒன்று , பின் களநிலவரங்கள் மாற , சிவசிதம்பரமும் மாமனிதரனார் ...

 

அந்த நேரத்தில் புலிக்கு TNA யும் TNA க்கு புலியும் எதிரிக்கு எதிரியாக இனித்தார்கள் ..இன்று TNA நன்றாக ஏக பிரதிநிதி போல , தங்கள் விருப்பங்களை விருப்பு-வெறுப்புக்களை செய்கிறார்கள் ...சம்பந்தன் அல்லது TNA இதுவரை சென்ற பாதையை மறந்து போகிறார்கள் ...

 

புலிகள் புனிதர்கள் என்பது எவ்வளவு தவறோ அதேயளவு தவறு அவர்கள் தீண்டதகாதவர்கள் என்பதுவும் . அவர்கள் எங்கள் உறவுகள்; சரி பிழை செய்த உறவுகள், இனத்த்தவர்கள் என்று பார்ப்பதே இன்றைய காலத்தில் எங்கள் பிரச்சனையை முன் நகர்த்த உதவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.