Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்? 
 

Sumanthiran-sampanthan2-300x200.jpgமுள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் சிறு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தாலும் இறுதி நேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு அவகாசத்தைக் கொடுக்கும் ஒரு வரைபு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டமை பலத்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது.

ஆனால் அமெரிக்கா அண்மையில் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் தற்போது முன்வைத்திருக்கின்ற வரைபுக்கும் இடையில் பலத்த முரண் நிலை காணப்படுவதற்கான பிரதான காரணம் என்ன என்பது தொடர்பிலான அதிர்ச்சி தரும் தகவல்கள் அம்பலமாகியிருக்கின்றன.

நம்ப முடியாத ஆனால் நம்பியே ஆகவேண்டிய ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. புலம் பெயர் தளத்தில் தமிழ் உணர்வாளர்கள் தமது அன்றாடக் கடமைகளை விட்டுவிட்டு வீதி வீதியாக இறங்கி எமது இனத்தின் விடுதலைக்காக முடிந்தவரை தம்மை அர்ப்பணித்துப் போராடுகின்றார்கள்.

ஜெனீவாக் களம் தமிழினத்துக்கு நீதி பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அந்த மக்கள் பனியிலும் மழையிலும் கடினமாய்ப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல மனித நேயத்தினை நேசிப்பவர்கள் ஈழத்தில் நிகழ்ந்தேறிய இனக்கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக மொழி, மதம் கடந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழ் மக்கள் தமது தலைமைகளாக தெரிவு செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானிக்கும் சக்திகள் தமிழினத்தின் தலையில் மண்ணை அள்ளி வீசியிருக்கின்ற விடயங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.

அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பிலான வரைபில் போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை குறித்த எந்த வித வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெறாமைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அவருடைய பிரத்தியேக செயலாளரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுமே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது.

ஜெனீவாக் கூட்டத் தொடர் நெருங்கிவரும் நிலையில் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் விடயங்கள் என்ற சாரப்பட அமெரிக்காவிடம் கூட்டமைப்பின் பெயரால் அறிக்கை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தினை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக வடக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் வெற்றி பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையினை முன்வைத்திருப்பதால் அது தொடர்பில் அமெரிக்கா செவி சாய்த்திருப்பதாகவே தெரிகிறது.

கத்தோலிக்க மதகுருமார் மற்றும் இலங்கையின் 22 சிவில் சமூக அமைப்புக்கள் கூட சர்வதேச விசாரணை தொடர்பில் வலியுறுத்தி ஐ.நாவுக்கு கடிதங்களை அனுப்பியிருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் ஒரு கடிதத்தினையோ ஒரு அறிக்கையினையோ ஐ.நாவிடமோ ஐ.நாவின் மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளிடமோ முன்வைக்கவில்லை. ஆனாலும் கூட்டமைப்பினர் மேடைக்கு மேடை சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான வலியுறுத்தல்களை மேற்கொண்டு வந்திருந்த போதிலும் உண்மையில் என்ன நடந்திருக்கின்றது என்பது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கே நேற்றுத்தான் தெரியவே வந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான திடீர் ஒன்று கூடல் ஒன்று கொழும்பில் நேற்று பிற்பகல் (05.03-2014) நடைபெற்றிருந்தது. அந்தச் சந்திப்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான அதிர்ப்தியினையும் கவலையினையும் வெளியிட்டிருக்கின்றனர்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாணை மேற்கொள்ளல், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வழிமுறைகள், நில அபகரிப்பு உட்பட்ட போரால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று எதுவும் குறிப்பிடப்படாத நிலையில் வெலவெரியாவில் இராணுவத்தினரின் தாக்குதலில் சிங்களவர்கள் மூவர் கொல்லப்பட்டமை, வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டமைக்கு பாராட்டு மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை உட்பட்ட அரசாங்கத்திற்கு சாதகமான விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனவே தவிர அரசாங்கத்துக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் எந்தவித சரத்துக்களும் குறித்த பிரேரணையில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயங்களை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன் இதன் மூலம் மீண்டுமொரு கால அவகாசம் வழங்கப்படுவதால் தமிழர் தாயகம் எதிர்நோக்கவுள்ள நெருக்கடிகள் குறித்தும் விவாதித்திருந்தனர்.

இதனிடையே அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருந்தாலும் கூட்டமைப்பினராகிய நாம் இது தொடர்பில் என்ன செய்தோம்? என்ற கேள்வியை கூட்டமைப்பு உறுப்பிர்கள் எழுப்பிய போது, பதிலளித்த சம்பந்தன், இது தொடர்பில் சர்வதேச பிரதிநிதிகளிடம் வலியுறுத்திவருகிறோம் என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்காவிடம் கூட்டமைப்பினால் ஒரு தீர்மான வரைபு கையளிக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தெளிவுறுத்துமாறும் அறிக்கையின் பிரதியினை தமக்கு காட்டுமாறும் கோரியிருக்கின்றனர். இறுதிவரையில் அதனை காட்டுவதற்கோ, அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து வாய் திறப்பதற்கோ சம்பந்தன் மறுத்திருக்கின்றார். கூட்டமைப்பின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட்ட எவருக்கும் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்ட மனுவில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது? என்பதற்கு பதில் வழங்கப்படவில்லை.

ஆக, சுமந்திரனும் சம்பந்தனும் இணைந்து தயாரித்த ஒரு அறிக்கை அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது என்பது மட்டுமே நேற்றைய கூட்டத்தில் நிரூபணமாகியிருக்கின்றது. இதனிடையே அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு கூட்டமைப்பின் சார்பில் ஒரு மனுவினைக் கையளிப்போம் என்று கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோது முற்றாக மறுத்துரைத்த சம்பந்தன், அடுத்த தீர்மானத்தின் பின்னர் அது குறித்து பரிசீலிக்கலாம் என உறுதியாகத் தெரிவித்ததாக தெரியவந்திருக்கின்றது.

பல மாதங்களுக்கு முன்னரே போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு எதிரான நிலைப்பாட்டினை சுமந்திரன் எடுத்துவிட்டிருந்ததாக தற்போது அறிய முடிகிறது, அவர் தனது கருத்துக்கு துணையாக இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதரை குறிப்பிட்டு, போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவது மஹிந்த அரசு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கச் செய்துவிடும் என்பதால் அதனைக் கைவிடவேண்டும் என்று தென்னாபிரிக்கத் தூதர் தன்னிடம் வலியுறுத்தியதாகவும் அந்த முடிவினை ஏற்கவேண்டும் என்று சக நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் அழுத்ததிற்கு உட்படுத்தியதாவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக, அமெரிக்காவிடம் சம்ந்தன் – சுமந்திரன் கையளித்த பிரேரணையில் சர்வதேச விசாரணையை கைவிடவேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டிருப்பதாக நம்ப முடிகிறது.

இதேவேளை கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் – சம்பந்தன் கொடுத்த பிரேரணையை கவனத்தில் எடுத்துக்கொண்டு அமெரிக்கா தன்னுடைய நடவடிக்கையினை முன்னெடுக்குமா? என்ற கேள்வி கூட எழலாம். சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவு என்ற விடயம் மட்டுமே முன்னுக்குத் தெரியும் என்பதால் கூட்டமைப்பின் பெயரால் கையளிக்கப்பட்ட அறிக்கையினை சர்வதேசம் தமிழ் மக்களின் குரலாகவே பார்த்திருக்கலாம். அதனால் அவ்வாறான ஒரு முடிவினை நோக்கி அமெரிக்கா நகர்ந்திருக்கலாம் என்றும் கருதலாம்.

இதனிடையே,

நேற்றைய கூட்டத்தில் சுமந்திரன் பங்குகொள்ளாத நிலையில் சம்பந்தன் தவிர செல்வராசா தொடக்கம் சிறிதரன் வரையில் போர்க்குற்றவிசாரணைக்கான முன்மொழிவு இடம்பெற்றிருக்காத பிரேரணை தொடர்பில் விசனம் வெளியிட்டிருந்த நிலையில், அன்றிரவே, சம்பந்தன் மற்றொரு நாடகத்தினை அரங்கேற்றியிருக்கின்றார். கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற விடயங்களை தலைகீழாகப் புரட்டிப் போடும் செய்தி ஒன்றினை மாவை சேனாதிராஜா ஊடாக புனைந்திருக்கிறார் சம்பந்தன்.

குறிப்பாக, “பல நாடுகளுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தும்” என்ற தலைப்பில் சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் இன அழிப்பாளர் மஹிந்தவின் தொலைபேசி ஊடான ஆசீர்வாதத்துடன் தமிழின அழிப்பில் முக்கிய பங்குவகித்த ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்களுடன் புதிதாக ‘மலர்ந்த’ இணையத்தளம் சம்பந்தனின் பொய்ப் பித்தலாட்டத்தினை முழுமையாக மூடி மறைக்கும் செய்தியை வெளியிட்டிருக்கின்றது. குறித்த இணையம் வெளியிட்ட செய்தியை சடுதியாக கொப்பி செய்து பழகிய இணையங்கள் மீள் பிரசுரம் செய்திருந்தன.

அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் நகல் வடிவம் மிகவும் வலுவானதாக இறுதி வடிவம் பெற சம்பந்தப்பட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் பேச்சு நடத்தவுள்ளது. அத்துடன் குறித்த பிரேரணையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் காணி சுவீகரிப்பு உட்பட இராணுவ ஆக்கிரமிப்புகளும் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோரைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஜெனீவாப் பிரேரணை தொடர்பில் வெளிநாடுகளுடன் பேச்சு நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சென்றபடியால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது.ஐ.நா. விசாரணையைக் கோரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரேரணையின் நகல் வடிவத்தை ஆரம்பத்திலேயே குழப்பகரமானது என்று சொல்லி இதனை ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டோர் கண்டபடி விமர்சிப்பது வருந்தத்தக்கது என்றும் இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர். “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ பிரேரணை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் இருக்கின்றது. தற்போது அங்கத்துவ நாடுகளிடம் வழங்கப்பட்டுள்ளது பிரேரணையின் நகல் வடிவமே. இந்த நகல் வடிவம் கடந்த காலங்களை விட வலுவானதாக இருக்கிறது.

இதனை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் பேச்சு நடத்தவுள்ளது” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இதன்போது தெரிவித்தனர். இந்தப் பிரேரணையில் இலங்கை மீது சர்வதேச விசாரணை என்ற சொல் வெளிப்படையாக இருக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களிடம் கூட்டமைப்பு எடுத்துரைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச விசாரணையைக் கோரும் வலுவான பிரேரணையை இம்முறை கொண்டு வரவேண்டும். என்று கூட்டமைப்பு இந்தியாவிடம் நேரில் வலியுறுத்தத் தீர்மானித்துள்ளது என்றும், இந்தியாவின் உயர்மட்டக் குழுவினரை சந்திப்பதற்கு டில்லியிலிருந்து அழைப்புக் கிடைத்ததும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தலைமையில் குழுவொன்று அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளது என்று இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரேரணை நகல் வடிவத்தை நீர்த்துப் போகச் செய்ய இந்தியா முயற்சிக்கக்கூடாது என்றும் இந்திய உயர்மட்டக் குழுவினரை கூட்டமைப்பு நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆக, ஐ.நாவில் தீர்மானத்தினை முன்வைக்கின்ற அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கையளித்த மனுவில் என்ன விடயத்தினை குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்பதை சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே வெளியிட மறுத்துள்ள நிலையில் இரண்டுங் கெட்டான் நிலையில் விளங்கி வருகின்ற, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் காத்திரத்தன்மையை சிதைத்த சூத்திரதாரியாகிய இந்தியாவிடம் விசாரணை தொடர்பில் வலியுறுத்தப்போவதாகவும் ஒரு கதையினை மாவை சேனாதிராஜாவின் துணையுடன் சம்பந்தன் அவிழ்த்துவிட்டிருக்கின்றார்.

இதனிடையே, ஜெனீவா கூட்டத் தொடருக்கு முன்பாக அங்கு நடைபெறும் ஆலோசனைக் கருத்தாடல்களில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராக சர்வதேச தளத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற திருவாளர் சுமந்திரன் சென்றிருக்கிறார். கடந்த மாதம் ஜெனீவா சென்ற கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரனை எந்த ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் சந்திக்க அனுமதிக்கவிடாது ஒதுக்கி அவர் மனம் நொந்து அங்கிருந்து திரும்பியதாகவும் இதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சுமந்திரனை சுரேஷ் பிறேமச்சந்திரன் கடுமையாக சுமந்திரனை திட்டித்தீர்த்ததாகவும் தெரியவந்தது.

இதேவேளை, சுமந்திரனின் உண்மை முகத்தினை அனந்தி சசிதரன் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இன்று போட்டுடைத்திருக்கின்றார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த, அனந்தி சசிதரன் ஜெனீவாவிற்கு சென்று அங்கு எதனையும் கதைக்கவில்லை என சில ஊடகங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் இன்றைய அனந்தியின் கருத்துவெளிப்பாடு அமைந்திருக்கிறது,

ஜெனீவாவில் சர்வதேச பிரநிதிகளைச் சந்தித்து காணாமல் போனோர் தொடர்பிலும், தாயகத்தில் எமது மக்கள் எதிர்கொண்டு வருகின்ற நெருக்கடி நிலை மற்றும் இறுதிப்போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கதைப்பதற்காகச் சென்றிருந்தேன்.

ஆனாலும் சந்திப்புக்களை மேற்கொள்ளச் சென்றபோது, எங்களை அழைத்துச் சென்ற சுமந்திரன், ‘உங்களை விடுதலைப்புலிகளாகவே சர்வதேச பிரதிநிதிகள் பார்க்கிறார்கள். எனவே, நீங்கள் ஒன்றும் கதைக்கவேண்டாம்’ என்று தன்னை கட்டுப்படுத்தியதாக தெரிவித்த அனந்தி, தான் ஜெனீவா செல்லும் வரையில் தனக்கு இவ்வாறான ஒரு நிலை ஏற்படும் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார்” எனவே அனந்தி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வாய் திறந்துவிடக் கூடாது என்பதில் மிகச் சாமர்த்தியமாக சுமந்திரன் நடந்திருப்பதாகவே அனந்தியின் கருத்து வெளிப்பாடு அமைந்திருக்கிறது.

இதேவேளை பல வாரங்களாக வெளிநாடுகளின் பிரதிநிதிகளை தனியாகச் சந்தித்து கலந்துரையாடிவரும் சுமந்திரன் என்ன கதைக்கிறார்? எதனை வலியுறுத்துகிறார்? என்பதை யாரும் அறிய முடியாத நிலையே காணப்படுகின்றது. புலம்பெயர் தேசங்களில் பல்லாயிரம் மக்கள் போராடிக் குரல் கொடுத்தாலும் தாயகத்தில் தமிழ் மக்களால் பெரிதாக கொள்ளப்படுகின்ற ஒரு கட்சி என்ற அடையாளத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சுமந்திரன் அதன் ஊடாகவே தமிழினத்தின் கருவறுக்கத் துணிந்து செயற்படுகின்றார்.

இதனிடையே அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுமந்திரன் அமெரிக்கப் பிரேரணையை முன்மொழியுமாறு அவுஸ்திரேலிய அரசை வலியுறுத்தியதாக செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளன. எதுவுமே அற்ற சிங்கள அரசுக்கு சாதகமான ஒரு பிரேரணையை முன்மொழிதல் அல்லது ஆதரித்தல் என்பது தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பயனாகப் போவதில்லை. ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்பார்ப்பையும் தமிழ் மக்களின் இரத்தத்தில் வியர்வையில் கண்ணீரில் ஏறி நின்று அந்த இனத்திற்கு குழி தோண்டும் மிக மோசமான தமிழ் அகராதியில் இடம்பெற்றிருக்காத ஒரு மிகப் பெரிய துரோகத்துக்கு வடிவம் கொடுக்கும் சுமந்திரன் – சம்பந்தனை வரலாறு எந்த வகைக்குள் அடக்கப்போகிறது என்பதை காலம் தான் வரையறுக்கவேண்டும்.

ஆக, கொழும்பில் பிறந்து, வளர்ந்து, சட்டம் பயின்று, ஜி.எல்.பீரிஸின் ஆஸ்தான சீடனாக தன்னை அடையாளப்படுத்தி, ஆங்கிலத்தில் யோசித்து தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதி வாசித்து, சிங்களப் பெண்களை தனது பிரத்தியேக செயலாளர்களாகவும் பணியாளர்களாகவும் வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் ஒரு நபருக்கு, இந்தப் போராட்டம் தோன்றியது எதனால்? தமிழீழப் பிரகடனம் செய்தது விடுதலைப்புலிகளா? அல்லது அதற்கு முன்னிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியா? என்பது தெரிந்திருக்க வாய்ப்புள்ளதா?

அல்லது எண்ணிப்பார்க்க முடியாத நினைத்துப்பார்க்க முடியாத இதுவரை வெளித்தெரியாத பல்லாயிரம் தியாகங்கள் எல்லாம் எதற்காக நிகழ்ந்தன என்பது புரியுமா? இன்றுவரை தாயகம் திரும்பி தங்கள் சொந்த நிலத்தினை தங்கள் பெற்ற தாயை வாழ்ந்த சுற்றத்தை எவற்றையும் இன்றும் பார்க்க முடியாது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் உண்மையான அர்ப்பணிப்புக்கள் புரியுமா?

இன்று கூட்டமைப்பு என்ற ஒரு சக்தி, போராட்டத்தின் வாசனை எதுவுமே தெரியாத சுமந்திரனை தமிழ் மக்களின் பிரதிநிதியாக உலகம் சுற்றவைத்திருக்கிறது என்றாலோ, ஆன்மீகம், கம்பன்கழகம் என்று தனது இறுதிக்காலத்தை கழிக்க முற்பட்டவரை வடக்கு மாகாணத்தின் அதிபதியாக்கி அவர் தான் அரசியல்வாதியல்ல நிர்வாகி என்று சொல்ல வைத்திருக்கின்றது எது என்றாலோ எல்லாவற்றுக்கும் பின்னால் நிற்பது எமது மக்களும் எமது மாவீரர்களும் கொடுத்த உயிர்விலைகள் தான்.

ஆக, அரசாங்கம் நினைத்துப் பார்க்க முடியாத, எத்தனை ஆயிரம் கோடி பணம் கொடுத்தும் சாதிக்க முடியாத பணிகளை செவ்வனே செய்துவருகின்ற தமிழ் மக்களுக்கான இலங்கை அரசின் தூதர்களாக விளங்குகின்ற சம்பந்தன், சுமந்திரனின் அரசியல் பயணங்கள் முடிவுக்கு வந்தால் மட்டுமே எங்கள் பிரச்சினைகளுக்கும் முடிவு வரலாம்..

தமிழ்லீடர் ஆசியர்பீடம் -

http://tamilleader.com/?p=29078

சுமந்திரன் கருத்தை சர்வதேச நாடுகள் அவ்வளவு கரிசனையுடனா ஏற்றுக்கொண்டது?

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருவரா... இருவரா... ஆரையெண்டு சொல்ல,

சம்பந்தன், சுமந்திரன், ஒட்டுக் குழு, ஒணான் குழு, இந்திய காங்கிரஸ் எண்டு ஒரு நீளமான பட்டியலே இருக்கு.

ஜெனீவாக் கூட்டத் தொடர் நெருங்கிவரும் நிலையில் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் விடயங்கள் என்ற சாரப்பட அமெரிக்காவிடம் கூட்டமைப்பின் பெயரால் அறிக்கை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

அறிக்கையையும் இந்த் செய்தியுடன் வெளியிட்டிருக்கலாமே.

 

சுமந்திரனை நம்ப்பினாலும் என்னை நம்பாதை என்று நடந்துகொள்கிறது தமிழ் இல்லாத லீடர்.  எவ்வளவு நேரத்தை வீணாக்கி இப்படி குப்பையை எழுதுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச போர்க்குற்ற விசாரணை, அதனைப்பின்தொடர்ந்து இனவழிப்புக்கான காரணம்தேடல் இவைபோன்றவையை முன்வைத்து பிரேரணை நிறைவேற்ரப்படுமாகவிருந்தால் இவர்களது கூடாரம் காலியாகிவிடும். அதன்பின்பு முப்பத்து ஐந்துரூபாய் மானியவிலை சோத்துப்பாசலை சிங்களத்து நாடாளுமன்றில் யார் இவர்களுக்குக் கொடுப்பார்கள். சம்பந்தனது தலமை தமிழினத்துக்குக்கிடைத்த சாபக்கேடு. அதுவும்பத்தாமல் சுமந்திரன் எனும் இன்னுமொரு விளக்குமாறுமெல்லோ இப்போது வந்துசேர்ந்திருக்கு.

 

தமிழினம் போகவேண்டிய தூரம் இன்னமும் நிறையவே இருக்கு, இவர்களைப் புலம்பெயர்தேசத்தில் தூக்கிப்பிடிப்பவர்களை என்னவென்று சொல்லுறது. மற்றும் கனடாவில் வாழும் தமிழர்களே இவர்களுக்கு பாரிய நிதிவசதியை கடந்த தேர்தலில் வளங்கியதாக அறிந்தேன் இவைகளை நிப்பாட்டினால் கொஞ்சமாவது நல்லதை நினைப்பார்கள்

 

சுமந்திரனிடம் நான் நேரடியாகவே ஒரு கேள்விகேட்கிறேன், அவர்களது துதிபாடிகள் சுமந்திரனது கவனத்துக்குக் கொண்டுபோகவும் சுமந்திரன் அவர்களே "நீங்கள் சோத்துக்குப்பதிலாக ம***னைத் திங்குறீங்களா?" அந்த நரகலை எப்படித் திங்குறீங்க?

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

Archbishop Desmond Tutu, South Africa தலைமைலான சர்வதேச விசாரணையை கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு பல்நாட்டு பிரதிநிதிகளால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் கையொப்பம் வைத்திருக்கிறார்கள். கீழே உள்ள ஆங்கில அறிக்கையை பாருங்கள்.

http://dbsjeyaraj.com/dbsj/archives/28557

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தர் அரசியலில் தன்னை நிலை நிறுத்துவதர்க்காக கையெழுத்து வைச்சிட்டு அங்கால மகிந்தாட்ட போய் சொல்லி இருப்பாரு அதெல்லாம் வெறும் தமாசு எண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இது வெறும் சம்பந்தன்... சுமந்திரனின் தவறு அல்ல.

 

புலம்பெயர் நாடுகளில் நாட்டுக்கொரு அமைப்பு வைச்சிருக்கிறவை.. முதலில்.. சர்வதேச தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய ஒரு சபையை அமைச்சு.. அதன் கீழ் சர்வதேச நாடுகளில் அந்த மக்களின் கருத்துக்களை கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும்.

 

அந்தச் சபையில் தாயக.. அரசியல் மற்றும் சிவில் கல்விச் சமூகங்களைச் சார்ந்தோர் இடம்பெற்றிருக்கவும் வேண்டும்.

 

வெறுமனவே கமரூனை ஒருக்கா சந்திச்சாலோ.. ஜெனிவாவுக்கு நடைப்பயணம் போவதாலோ.. அல்லது டவுனிங் வீதியில் கூடுவதாலோ.. எமது கருத்துக்களை உள்வாங்கி.. அவர்கள் செயற்படுத்தும் அளவிற்கு தயார்ப்படுத்தப்படுகிறார்கள் என்று நாம் கனவு காண முடியாது.

 

அவர்களிடம்  இந்த நகலை கொண்டு வருவதற்கான உண்மையான நோக்கம்.. அதன் பின்னணியில் நாம் உறுதியாக வலியுறுத்தக் கூடிய அம்சங்கள்.. என்று பலவற்றை ஆராய்ந்து.. எமது வரைபுகளை அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்திருக்க வேண்டும். ஐநாவுக்கும் அந்தப் பிரதிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

 

அமெரிக்க அதிகாரிகளை.. மற்றும்.. மனித உரிமைகளை சபையில் உள்ள நாடுகளின் தூதுவர்களை சந்திச்சுப் பேச வேண்டும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அனுபவசாலிகளை இதில் உள்வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்தியாவில்.. இருந்து ஐயா வை.கோ.. திருமுருகன் காந்தி.. இப்படி எண்ணற்றோர் உள்ளார்கள். அவர்களையும் உள்ளடக்கி ஒரு பொது வரைபை நாம் முதலில் வைச்சிருக்கலாம்.

 

அப்படி வைச்சிருந்தால்.. இப்போ.. நாம் ஒன்றை அழுத்திச் சொல்லலாம். நீங்கள் இவற்றை இன்னென்ன காரணங்களால் தவிர்த்திருக்கிறீர்கள்.. இது நியாயமா என்று.

 

ஆனால்.. நாமோ.. எய்தவனை விட்டிட்டு அம்புகளை திட்டுவதில் வழமை போல செயற்படுகிறோம்.

 

சிங்களம் இம் முறை கடந்த கால தவறுகளை திருத்தி முன்னேறி இருக்கிறது. அவன் தெளிவா இருக்கிறான்.. தான் அழிச்சது பயங்கரவாதம் என்பதில். ஆனால் நமக்குள் தான்.. எத்தனை பிரிவுகள்.. எத்தனை காட்டிக்கொடுப்புகள். இவையும் எமக்குப் பலவீனமாகின்றன. சிங்களவன் தன்ர ஆமியை காட்டிக்கொடுக்கத் தயார் இல்லை. ஆனால் எம்மவர்கள்.. தாம் தப்பனும் இல்ல.. பிழைக்கனும் என்றால் கூசாமல் பொய் சொல்வார்கள். காட்டிக்கொடுப்பார்கள். அதற்கு சுயமீளாய்வுன்னும் பெயர் வைப்பார்கள். இவை எல்லாம் எம்மிடம் உள்ள பலவீனங்கள்.

 

நாம் சாதிக்க வேண்டியதை விட்டு.. தேவையற்ற விமர்சனங்களிலும்.. மீளாய்வுகளிலும் கவனம் செலுத்தியதால்... வந்த தோல்வியே இது. சுமந்திரன்.. சம்பந்தன் கருத்துக்கள் மட்டும் இதற்குக் காரணம் அல்ல. அவர்களின் கருத்துக்களையும் வென்று வந்திருக்கலாம். நாம் திட்டமிட்டு மக்களின் குரலை சரியாக சர்வதேசத்திற்கு இனங்காட்டி இருந்தால்.

 

மக்களும்.. ஒரு ஆர்வமின்றி.. தாங்களும் தங்கட கொலிடேக்களும்.. பார்ட்டிகளும் என்றிருக்கிறார்கள். இத்தனை இலட்சம் பேர் இருந்தும்.. புலம்பெயர் மண்ணில் சர்வதேச அழுத்தம் ஒன்றை வலியுறுத்தி.. அதற்கான அம்சங்களை முன் வைத்து எம்மவர்களால் ஏன் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை.. கவனயீர்ப்பை நடத்த முடியல்ல. எல்லாம்... சுயநலம். தன் நலம்.. பேணப்படுதலை விட்டால்.. நம்மவர்களுக்கு வேறு எதிலும் அக்கறையில்லை..! இந்த நிலைகள் மாறாமல்.. நாம் வெற்றியடைய முடியாது.

 

சிங்களவன்.. உள்ளூரில்.. சிங்கள தேசியவாதிகளை கொண்டு.. அமெரிக்காவுக்கு மேற்குலகிற்கு எதிராக.. சிங்கள மக்களின் உணர்வுகள் பெருகுகின்றன என்று காட்டிக் கொண்டு.. இந்தியா சீனாவை.. வளைச்சுக் கொள்கிறான். இதன் மூலம்.. அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள்.. காத்திரமான முடிவுகளை எடுக்காமல்.. அஜெஸ்ட் பண்ணிப் போய் ஈடுசெய்ய விளைகின்றன. அவுஸின் மனமாற்றமும் இதில் அடங்கும்.

 

சிங்களவன் சர்வதே அளவில்.. தனக்காக.. லொபி செய்வதில்.. சீராக இயங்குகிறான். எம்மவர்களையும் பயன்படுத்திக் கொள்கிறான். ஆனால்.. நாமோ.. சந்தர்ப்பங்களை தவற விடுபவர்களாகவே இருக்கிறோம். எங்கட லொபியிங் காணாது. ஒரு நீண்ட நோக்கம் இலக்கு அங்கு இல்லை. அதுதான் எம்மில் உள்ள குறைபாடு. குறுகிய இலக்குகளை வைச்சே நாம்.. செயற்படுகிறோம். அது எமது இனத்தின் நீண்ட கால நலனிற்கு உபயோகமாக இருக்காது. :icon_idea:

Edited by nedukkalapoovan

சம்பந்தர்(சிங்ககொடி), சுமந்திரன் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறியப்படாவிட்டால் தமிழ்மக்களுக்கு என்றும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.. இரகசியம் வெளிவந்திட்டு என்றவுடன் கூத்தணி அமெரிக்காவுடன் பேசபோகுதாம்..யாருக்கு காது குத்தல்? கமரோன் யாழ் சென்ற போதே மக்களிடம் அடிவாங்கியவரை ஏன் வைத்திருக்கவேண்டும்.. முழு இனமும் இத்த கருங்காலிகளால் பாதிக்க விடலாமா? இனி எந்தவித தயவு தாட்சண்ணியம் பார்த்தால் இன அழிவு தொடரும்.. உடனடியாக இவர்களை அமைப்பிலிருந்து அகற்றி கஜேந்திரகுமார்போன்றவர்கள் பொறுப்பில் விடவேண்டும்... உடன் செயலில் இறங்க வேண்டும்..

பிரேரணை இலங்கை அரசுக்கெதிராக வைக்கப்பட வேண்டும். வைப்பவர்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவுக்கு அரசின் ஆட்சி எல்லைக்குள் ஒரு தூதுவராலயம் உண்டு. இலங்கைக்கு ஒடு தூதுவராலயம் அமெரிக்காவில் உண்டு. மாதம் $60,000 சமபளத்தில் வேலைசெய்ய லொபி கம்பனிகள் உண்டு.  கூட்டமைப்பு 6ம் திருத்தத்தின் கீழ். புலம் பெயர்ந்தவர்கள் தெல்லிக்கு தெல்லி.

 

இந்த புலம் பெயர்ந்தவர்கள் பயண செலவுகளை கொடுத்து கூட்டமைப்பின் எம்பீக்களை கனடா அழைப்பதற்கு துள்ளுகிறார்கள். நாடுகடந்த அரசு UNHRC ல் வக்கீல் ஒருவரை சேவைக்கு அமர்த்த பணத்துக்கு அலைகிறது. 2012லும் பல கஸ்டங்கள் பட்டுத்தான் Karen Parkerஐ அனுப்பினார்கள்.

 

இந்த நிலையில் அமெரிக்கா, இலங்கையின் அரசின் பங்கை பிரேரணையில் ஆராய முயலாமல் கூட்டமைப்பின் சுமந்திரன் சொன்னதால் இலங்கைக்கு எதிராக போகாமல் அமெரிக்கா தவிர்த்துவிட்டதாக கட்டுரை வரைகிறார்கள். இப்பட்டி முட்டாள்களால் நிறந்த தமிழ் சமூகம் முன்னால் போகும் என்ப்து குதிரை கொம்பு. 

 

அடிக்கும் மட்டும் அடித்துவிட்டு $60,000 மாதம் கொடுத்து அலுவல் பார்க்கிறார்கள். ஒரு UNHRC க்கு வக்கீலை நியமிக்க தமிழருக்கு பணம் இல்லை. NGO க்கள் செய்யும் சேவையால் தமிழரின் குரல் UNHRC ல் கேக்கிறது. யார் யார் 1948 லிருந்து அரசுக்கு வந்து பணம் அடித்தார்கள் என்று அரசு பேசி சிங்கள அரசு நேரத்தை போக்கவில்லை. தன்னைத்தான் கவனித்துக்கொண்டு $60,000ல் அமெரிக்காவையும் கவனிக்கிறது. இதனால் அவர்களின் கரை முன்னால் போகிறது.  நமது  போக்கறுந்ததுகள் புலிகள் சேர்த்த பணம் எங்கே என்று கேட்டுக்கொண்டு UNHRC க்கு வக்கீல் ஒருவரை வைக்காமல் NGOகளின் பிச்சையில் படம் காட்டிவிட்டு, இரவு ஒரு பியர் போத்தை திறந்து போழுத்தை போக்கிவிட்டு,  இனாமாக தனது பணத்தில் சேவை செய்யும் சுமந்திரனை விழுத்த அலைகிறார்கள். 

அமெரிக்கா ,மற்றும் மேற்குலக நாடுகளின் செயற்பாடு எல்லாம் முஸ்லீம் களுக்கு எதிரானதே அல்லாமல் எந்த பாதிக்கப்பட்ட இனமும் நீதி கிடைத்து விட வேண்டும் அவர்கள்  செயற்படுவதில்லை.

 

ஜநா சபைக்கு வந்த சிறிலங்காவுக்கு எதிரான  உப்பு சப்பில்லாத  தீர்மானமே ஆதாரம்.

ஆனால் சொந்த இனமக்களையே அழித்தார்கள் என்று  சதாம், கடாபி எல்லாருக்கும் தண்டனையே கொடுத்து விட்டார்கள். இப்போ சிரியா.

 

ஆனால் சிறிலங்காவுக்கு மாத்திரம் ஒன்றும் இல்லை

கூத்தமைப்பின் மும்மூர்த்திகள் இந்தியாவின் துணையும் உள்ள வரை சிங்கள அரசை ஒன்றும் செய்யமுடியாது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.