Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரை தாம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எங்கள் மேல் நம்பிக்கையில்லாமல் தான் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்தோம். ஆக, அந்த நம்பிக்கையீனத்தை வெளிக்காட்டி, உங்களின் பலவீனத்தைக் மற்றவர்களுக்கு காட்டாதீர்கள்!

  • Replies 131
  • Views 17.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி என்றால் நம்பிக்கையின்னமைஎன்பது தமிழர்களின் பலவீனம் என்கிறீங்களோ?

ஆனால், சம்பூர்ப் பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகவும், முன்னேற முயலும் ராணுவத்தினர் மீது தாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தமிழோசையிடம் சற்று முன்னர் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாவிட்டால், புலத்திற்கு ஒடிவந்திருக்க மாட்டோம் மட்டுல்ல, எந்த நேரத்திலும், இப்படி தலைமையைச் சுரண்டும் வார்த்தைகள் வராது. நாங்கள் கேள்வி கேட்ட கேண்டியது உலகத்தை நோக்கியே இருக்க வேண்டியது இப்போது அவசியமாகும் என்பது தான் என் கருத்து!

தமிழோசை பழையதுதானே இணயத்தில் உள்ளது

ஆனால்இ சம்பூர்ப் பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகவும்இ முன்னேற முயலும் ராணுவத்தினர் மீது தாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் தமிழோசையிடம் சற்று முன்னர் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நீங்கள் உலகத்தை கேளுங்க பாப்பம் என்ன முடிவு சொல்லுறாங்கள் என்டு. மறுபடியும் அறிக்கை விடாமல் செயல்ல காட்டினாங்கள் என்டால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு வேளை இது உண்மையாகவே தந்திரமாக இருக்கலாம். இப்பொழுது மகிந்தர் எல்லாருக்கும் அறிவிச்சிட்டார் தாங்கள் பிடிச்சிட்டம் என்டு.

இப்ப புலிகள் திருப்பி பிடிச்சா மகிந்தருக்கு செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும்.

:shock: :shock: :?: :roll:

புலம்பெயர்ந்த மக்கள் நோர்வேயிடம் சில நியாமான கேள்விகள் கேக்கும் காலம் வந்துவிட்டது. முக்கியமாக நோர்வே அரசாங்கம் சமாதான முயற்சிகள் மத்தியஸ்த்தம் என்று தனது நாட்டு மக்களுக்கு காது குத்துவது பற்றி விளக்கம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது. தமிழ் மக்கள் ஊடகங்கள் ஏனைய தொடர்பாடல்கள் மூலம் நோர்வே மக்களிற்கு சில உண்மைகளை எடுத்துச் சென்று தெளிவாக்க வேண்டும்.

இன்று சிறீலங்காவில் நடப்பது என்ன? யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கா இல்லையா? யார் அதை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்? தமிழர் மீது கட்டவிள்த்து விடப்பட்டுள்ள இராணுவ வன்முறைகள், அத்தியாவசிய உணவு மருந்து தடைகள், தமிழர் புனர்வாழ்வுக்களகத்தின் நடவடிக்கைகள் முடக்கல் இவை எல்லாவற்றை கண்டும் காணாது போல் இருப்பதற்கு விளக்கங்கள் கொடுக்க வேண்டும். சிங்கள மிதவாதிகளை கோபப்படுத்தக் கூடாது தனது அனுசரையாளர் பதவியை தக்கவைக்க வேண்டும் என்ற காரணங்களிற்கா சிங்கள அரசின் திட்டமிட்ட இன அழிப்பை மொளனமாக பாத்துக் கொண்டிருக்கிறது நேர்வே அரசு.

இந்த உண்மை நோர்வே மக்களிற்கு தெரிய வேண்டும். சமாதானம் உருவாக்க என்று வந்த நோர்வே தமிழரின் கைய்யை கட்டிவிட்டு இன அழிப்பை பார்த்துக் கொண்டிருக்கிறது.

புலம் பெயர்ந்த மக்கள் அந்தந்த நாட்டு நோர்வே தூதரங்களிற்கு முன்னால் கவனயீர்பு போராட்டங்களை நடத்த வேண்டிய காலம் இது. நோர்வே வாழ் மக்கள் உள்ளூர் ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களிற்கு நேர்வே அரசின் இரட்டை வேடம் பற்றி தெளிவு படுத்த வேண்டும்.

அவர் 55தாம் ஆண்டு விளாவுக்கு ஒ௫ டூப்படிசார் எண்டு நினகுரன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைகுடம் தழும்பாது !!!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உலகத்த நோக்கி எத்தனையோ கேள்விகளும் கேட்டாச்சு எத்தனையோ ஆரிப்பாட்டஙகளும் நடத்தியாச்சு பலண் பூச்சியம் தான்...இப்படியே எழிழன் ஒவ்வோரு வராமும் போர் நிறு;த கண்காணிப்பு குழுக்கு அறிக்கை அணுப்பிட்டு கேள்வியும் கேட்டிட்டு இருக்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு சிறு பின்னடைவே,

இது அவசியமானதும் சிந்தித்து எடுத்த தீர்மானமுமே

யார் ஞானவான் என்று காலம் பதில் சொல்லும்

நெஞசம் கலங்கவோ அதைர்யம்டையவோ வேன்டாம். :(

ஆனால் இது நிச்சயமாக எம்மை இன்னும் சிறப்பாகவே செயளாற்ற வைக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை.

# தொடர்ந்து சிந்திப்போம் செயற்படுவோம் #

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த எழிலன், புகித்தேவன், ... போன்றோர் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வதை நிறுத்தினால் நல்லது!! சிலவேளை சகிக்க முடியவில்லை!!!!

சம்பூரைவிட்டு விடுதலைப் புலிகள் பின்வாங்க வில்லை எழிலன் உறுதிபடத் தெரிவிப்பு.

சம்பூர் சுற்றுவட்டாரங்களை ஆக்கிரமித்து நிற்கும் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வருகின்றன. சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நகர்வுகளுக்கு எதிராக புதிய கள அரங்குகள் திறக்கப்பட்டு போராளிகள் களமாடி வருகின்றனர். இது குறித்து திருமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு.எழிலன் கருத்துரைக்கையில்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் எறிகணைத் தாக்குதல்களும் நேரடி மோதல்களும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. சம்பூரை விட்டு போராளிகள் பின்வாங்கிச் செல்லவில்லை என்றும் போர் நிறுத்த உடன்படிக்கையில் வரையறை செய்யப்பட்ட இடங்களை எக்காரணம் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் உறுதி படத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் 55வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சம்பூரை சிறீலங்காப் படையினர் கைப்பற்றி விட்டதாகவும் இதற்கு லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவே முயற்சியே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது

வெற்றி தோல்வி என்பது ஒரு இராணுவ களத்தில் சரிசமனானது. வெற்றி வரும்போது கொண்டாடுவதும் தோல்லியை சந்திக்கையில் துவண்டு போவதும் மனித பண்பு. ஆனால் தோல்விகள் தான் வெற்றியின் படிக்கற்கள்.

கழகங்களுக்குள் நடைபெறும் உதைபந்தாட்ட போட்டிகளை நாம் ஒரு யுத்தத்திற்கு ஒப்பிடலாம். ஒரு கழகத்தின் உண்மையான ஆதரவாளர் தமது கழகம் தோற்றாலும் வென்றாலும்ஆதரவளிப்பார்கள். ஆனால் வெற்றியை வேட்டையாடுபவர்கள் எந்த கழகம் வெல்கிறதோ அதற்கு ஆதரவளிப்பார்கள். இவர்களை ஆங்கிலத்தில் குளோரி ஹன்டேர்ஸ் என்று ஏளனமாக அழைப்பார்கள். லண்டனில் இருந்தபடி 350 மைல்களுக்கு அப்பால் இருக்கும் மான் யுனைட்டட்டை ஆதரிப்பார்கள். தொடரந்து வெற்றி பெற்ற ஒரு கழகம் என்ற காரணத்திறாகவே அவர்கள் அந்த கழகத்தை ஆதரிப்பார்கள் அவர்களும் தோல்வியை தழுவி வேற ஒரு கழகம் அவர்களின் இடத்தை பிடித்ததும் பின்னர் அவர்களை ஆதரிப்பார்கள். இநடத குளோரி ஹன்டர்ஸ் போலவே தான் நாமும் மாறுகிறோமா?

தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு விழையாட்டுடன் ஒப்பிட முடியது. வெளிநாட்டில் வெறும் பார்வையாளர்களா ஒரு பங்களிப்பை செய்யும் நாம் யுத்த கள யதார்தத்தை பரிந்து கொண்டு தான் பேசுகிறுறோமா?

புலிகள் வெற்றிபெறுகையில் ஆக்ரோஷக்கவும் தோல்வியடைகையைல் நக்கல் பண்ணவும் நாம் என்ன சினிமா ரசிகர்களா? வரலாற்றை மீண்டும் நாம் திரும்பி பாரக்கும் நேரம் வந்து விட்டது.

வியட்நாமில் வியட்கொங்குகள் இழந்ததில் சிறு பகுதியை தானும் நாம் இழக்கவில்லை. கிராமங்கள், ஏன் நகரங்கள் கூட விமான குண்டு வீச்சால் தரைமட்டமானது. அனால் வியட்நாமியர்கள் துவண்டு போகவில்லை. அந்த பழதிக்கள் இருந்து முழுவீச்சாக மிகவும் ஆக்ரோஷமாக விறுகொண்டு எழுந்தார்கள். 2 நாடுகளுடன் ஆண்டுக் கணக்கில் போரடியே சுதந்திரம் பெற்றார்கள்.

எதிரியை நாம் குறைவாக ஒரு போதும் மதிப்பிடக்கூடாது. எதிரியை நாம் குறைவாக எடைபோட்டால் நமக்க தோல்வியே தொடரும். எதிரியின் பலம் எங்கே பலமாக இருக்கிறதோ அங்கு நாம் அவர்களுடன் சண்டைபோடக்கூடாது. மாறாக எதிரி பலவீனமாக ஈரக்கையில் தாக்கினால் வெற்றி நிச்சயமே.

இந்த தோல்விகளால் புலிகளை எதிரப்பவர்கள் அல்லது அவர்களை கிண்டல் செய்பவர்கள் நிச்சயம் தேசியத்தின் மீத அன்ப கொண்டவர்களாக இருக்க முடியாது. நாம் பிடித்த ஒரு படி மண் போனாலும் அதை மீளப்பெறும் வைராக்கியமே போராடும் திறனை அதிகரிக்கும்.

புலிகள் களத்தில் பெற்ற தேல்விகள் எப்படி வெற்றியாக மாறியது என்பது வரலாறு. ஒப்பரேசன் லிபரேசன் முதல் இந்நதயி இராணு ஆக்கிரமிப்பு பின்னர் ஜெயசிக்குறு என்று நாம் திரும்பி பார்த்தால் அந்த பின் வாங்கல்களுக்கு பின் நாம் முன்னேறியது அதிகம். அந்த நம்பிக்கையுடன் வெற்றிபெற நாம் புலிகளுக்க மன உறுதியை கொடுப்போம்.

ஒன்றை மட்டும் சிந்தியுங்கள். இலங்கை அரசிற்கு ஏதவ பாக்கிஸ்தான், அமரிக்கா, இந்தியா, பிரித்தானியா, என்று நான் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். நாம் வெறும் சிறீ லங்கா இராணுவத்துடன் மோதவில்லை மாறாக சர்வதேசத்துடன் போராடுகிறோம். புலிகளிற்கு இருக்கும் ஒரே ஒரு ஆதரவு தமிழ் பேசும் மக்களே. நாமே புலிகளை நிராகரிக்க முன்வந்தால் நம்மை நமே தீயில் கருக்குவதற்கு சமன்.

தற்போதைய நிலமையில் பல இழப்புக்களை நாம் சந்தித்தே தீர வேண்டும். இப்பொழுது உலக நாடுகளின் கவனம் முன்பு ஒரு போதும் இல்லாத அளவில் கூடயிருக்கிறது. அகவே அதுவே ஒரு நல்ல தருணம் உலகிற்கு முதலில் இலங்கையில் நடப்பது ஒரு இன அழிப்பு போர் என்பதை புரிய வைக்க வேண்டும். அணுசாரளாராக வந்த நோர்வே ஓரளவு புரிந்து விட்டது. இப்படியானவைளே இப்போதைக்கு பெரிய வெற்றிகள். அதுதவிர இராணுவ hPதியிலாக பார்த்தால் புலிகள் சம்புூரில் இருந்து பின்வாங்கி சிங்கள பேரினவாதிகளை களிப்புூட்டி. இந்த பேரினவாதிகளின் இனதுவேச முகத்தை உலகிற்கு காட்டும் தந்திரபோயமான நகர்வுகளே விடுதலைபோர் எனும் நீண்ட பயணத்திற்கு வெற்றிகளை தரக்கூடும். பதிலாக சிங்கள பேரினவாதிகள் போல் அணைகட்டுக்கும் சிறிய நிலப்பரப்புக்காகவும் போரிட்டு மக்களை கொல்வது பின்னடைவுகளையே கொடுக்கும். இது தவிர இராணுவம் தனது முழுப்பலத்தையும் திருகோணமலையில் குவித்து இருக்கிறது அது தவிர பாரிய எறிகணை வீச்சுக்களே போர்நடக்கும் இடங்களில் நடப்பதால் புலிகளின் முக்கிய படையணிகளை களமிறக்குவது ஆழ்இழப்பை ஏறடபடுத்தும். புலிகள் தாமாக தாக்குதல் திட்டங்களை தீட்டி எதிரி எதிர்பாராத முறையில் எதிர்பாராத இடங்களில் தக்குதல் நடத்துவதென்றாலே பெரிய படையணிகளை களமிறக்க முடியும். இதுதவிர இது எதிரியால் தேர்வு செய்யப்பட்ட களம் இங்கே புலிகளின் பெரிய படையணிகளை கூப்பிடும் ஒரு தந்திரோபாயமக கூட இருக்கலாம் இப்போது நடக்கும் யுத்தங்கள். ஆகவே கண்ணை மூடிக்கொண்டு புலிகள் தமது மோத்த பலத்தையும் எதிரிக்கு காட்டமுடியாது. நண்பர்களே நாம் ஒன்றை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் அதாவது புலிகள் சில காலங்களுக்கு முன்பு கூறிவந்த விடயம் நாம் இறுதி போருக்கு தயாராகிறோம் என்பதே அது. அகவே நமக்கு பொறுமை என்ற ஒன்று மட்டுமே இப்போது வெற்றி தரும் கசப்பானதுதான். எமது போரட்டத்தை இழிவு படுத்துவவர்களுக்கு இது இனிப்பான காலம். புலிகள் தமது மொத்த பலத்தையும் காட்டபோய் எதிரி பயந்து விட்டால் உடனேயே சமாதான விரும்பி போல் வேடமிட்டு கொண்டு பேச்சுவார்த்தை என்பான் காலம் வீண்ணடிக்க படும். அதை இராணுவத்தை பலப்படுத்தவதற்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் போரை திணிப்பான். ஆகவே புலிகள் போரை தொடங்கும் வேளை உலகமும் எமக்கு சற்றேனும் சாதகமாக இருக்க வேண்டும். பொறுத்தார் புூமியாழ்வார் என்று எமது முன்னோர் வேற சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நண்பர்களே இதற்கெல்லாம் நம்பிக்கை இழக்கலாமா? புலிகள் மாவிலாற்றில் தண்ணி திறந்துவிட இராணுவம் திறந்துவிட்டதாக பிரச்சாரம் செய்தது மறந்துவிட்டீர்களா? கேட்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. உண்மையை அறியாமல் எழுதுவது நல்லதல்ல. சிலவேளை இலங்கை அரசு சாதிக்க நினைத்ததை சாதித்துவிட்டதோ தெரியவில்லை. அதுதான் பொய்பிரசாரங்கள் மூலம் மக்களை குழப்புவது. :twisted: :twisted:

உந்த எழிலன், புகித்தேவன், ... போன்றோர் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வதை நிறுத்தினால் நல்லது!! சிலவேளை சகிக்க முடியவில்லை!!!!

சகிக்க முடியாவிட்டால் உமக்கென்ன உம்மடை திருவாயை மூடிக்கொண்டு பேசாமல் இரும். அல்லது போய் உம்மடை ஊத்தைத் தளத்தைக் கட்டிக்கொண்டு அழும்.

  • கருத்துக்கள உறவுகள்

சகிக்க முடியாவிட்டால் உமக்கென்ன உம்மடை திருவாயை மூடிக்கொண்டு பேசாமல் இரும். அல்லது போய் உம்மடை ஊத்தைத் தளத்தைக் கட்டிக்கொண்டு அழும்.

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

We are still in control of Sampoor - Ezhilan

http://www.sibernews.com/the-news/tamil-ee...n-200609045361/

சம்பூரை ஆக்கிரமிக்கும் நடவடிக்கை போர்ப் பிரகடனம்- கண்காணிப்புக் குழு அமைதி காப்பது ஏன்?: சி.எழிலன்

திருகோணமலை மூதூர் கிழக்கு சம்பூரை ஆக்கிரமிக்கும் சிறிலங்கா இராணுவத்தின் போர்ப்பிரகடன நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக்குழு ஏன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவருக்கு சி.எழிலன் இன்று திங்கட்கிழமை அனுப்பிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர்நிறுத்தம் பற்றிய எந்த அக்கறையும் இன்றி அதனைப் புறக்கணித்த சிறிலங்கா அரசு, போர்ப்பிரகடனமாக சம்பூரை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை கடந்த 28 ஆம் நாள் தொடங்கியது.

சம்பூரை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த நிலையில் அரசுத்தரப்பு மகிழ்ச்சியாக இதனைக் கொண்டாட உள்ளதாக அறிவிக்கிறது.

- அப்பாவித்தமிழ் மக்கள் 97 பேரை கொன்றொழித்து

- 215 பேரை காயப்படுத்தி

- மக்களின் சொத்துக்களை அழித்து

- 46 ஆயிரம் மக்களை இடம்பெயர்த்தி விட்டு

- சம்பூரை தரைமட்டமாக்கி விட்டு

அதனை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்று சிறிலங்கா அரசுத் தரப்பு அறிவிக்கின்றது.

ஆனால் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அமைதியாக இருப்பது ஏன்?

சிங்கள மக்கள் யாரும் கொல்லப்பட்டால் ஆதாரம் ஏதுமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோட்டு குரல் எழுப்புகின்றவர்கள்-

- தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு

- அவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டு

- நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு

அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோதும் அமைதி காப்பது ஏன்?

என்று அந்த முறைப்பாட்டில் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன் தொலைபேசியூடாக இன்று கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமிப்பது என்பது பாரிய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மதிக்கவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

இருப்பினும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பதில் தாக்குதலாக தமிழீழ விடுதலைப் புலிகள் எங்கும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவிப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு நிகழ்வுப் பேரணியில் பங்கேற்றுப் பேசிய சிறிலங்கா அரசாங்க தலைவர் மகிந்த ராஜபக்ச, சம்பூரில் முன்னேறியிருப்பதாக அறிவித்தார் என்று ஏ.எஃப்.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தற்போது நடப்பது யுத்தம் அல்ல. தாக்குதல் நடவடிக்கைதான் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல, "சம்பூரை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் அழித்தொழிப்பதனூடான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் மூலம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கொழும்பு ஊடகமான சண்டே லீடருக்கு அளித்த நேர்காணலில், சம்பூருக்குள் சிறிலங்கா இராணுவம் நுழைந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்றும் இளந்திரையன் எச்சரித்துள்ளார்.

யுத்த நிறுத்தத்திலிருந்து விலகுவது குறித்து எமது தலைமைப்பீடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இளந்திரையன் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

புதினம்.கொம்

---------------------------

ம்ம்ம்ம் சம்பூர் உம் போய்ட்டுது..யுத்த நிறுத்த காலத்தில் ஏற்பட்ட நன்மைகளை விட தீமைகளே அதிகம்...இப்படியே போனால் மக்கள் மத்தியில் ஒரு சலிப்பு ஏற்பட போவது நிதர்சனம்...

அது ஓல்ரெடி ஏற்பட்டாச்சு..சுண்டல்..! இப்ப புலிகள் பொறி வைச்சிருக்கினமாம் பாப்பம்..சிங்கம் எம்பிடுதோ இல்ல...தமிழ் மக்கள் தான் பொறிக்குள்ள சிக்கிச் சீரழியுறதோ தெரியாது..! :idea: :roll: :?:

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 வது வருடாந்த சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய, மஹிந்த ராஜபக்க்ஷ ஆதரவாளர்களின் பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் இதனை இங்கு தெரிவித்தார்.

சுட்டசெய்தி

அதெப்படி காத்திருந்து இன்றைக்கு படைகள் கைப்பற்றி இருக்கின்றது.? 55வது வருடக்கூட்டத்தில் வெற்றிச்செய்தியை அறிவிக்கவென்று படைகள் காத்திருந்து இன்று வெற்றி கொண்டிருக்கின்றது. :cry: :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.