Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொள்ளை அழகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது கடையல்ல கொத்துரொட்டி பல்கலைக்கழகம் :)

  • 4 weeks later...
  • Replies 72
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

11029474_1625400724338408_83723920711876

11178210_1625400717671742_61446619282441

11183448_1625400447671769_16259249716937

10409023_1625400444338436_16781871800572

11051901_1625400441005103_52537064644927

11061657_1625400411005106_12564245482949

unnamed.jpg

  • தொடங்கியவர்

BatticaloaLagoonLearningCenter-02.jpg

BatticaloaLagoonLearningCenter-07.jpg

Batticaloa Lagoon Environmental Learning Center
 
BatticaloaLagoonLearningCenter-10.jpg
 
BatticaloaLagoonLearningCenter-09.jpg
  • 1 year later...
  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் !

6773_1481892570_PhototasticCollage-2016-12-16-13-48-18.jpg

மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக்களை வைத்தே பெயரிடப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம்(ம.மா) மக்கட்பெயரால் அமைந்த ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. சுவாரசியமான இந்தப் ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள் கீழே!
Written by Pravin

1. அக்கரைப்பற்று –பழைய மட்டக்களப்பின் (சம்மாந்துறை) எல்லையான களியோடை ஆற்றின் அக்கரையில் இருந்த பற்று (நிர்வாகப்பிரிவு) ஆதலால் அக்கரைப்பற்று! இந்தப் பற்றின் தலைமைநகரே இன்றைய அக்கரைப்பற்று நகர். அதன் பழைய பெயர் கருங்கொடித்தீவு. கருங்கொட்டித்(ஓர் தாவரம்) தீவு என்பர்.

2. அட்டாளைச்சேனை – அட்டாளை – சேனைக்காவலில் பயன்படும் உயரமான புரண்/காவலரண்.
"முல்லைத்தீவு" என்பது அட்டாளைச்சேனையின் பழைய பெயர்.

3. ஆரையம்பதி – முன்பு ஆரப்பற்றை; இயற்கையாக நீரோடும் ஓடையை “ஆரப்பற்றை” என்னும் மட்டக்களப்புத் தமிழ்.

4. சம்மாந்துறை – சம்பான்+துறை; சம்பான்= சிறுபடகுகள். பழைய மட்டக்களப்பு நகர் சம்மாந்துறையில் அமைந்திருந்தபோது, வாவிவழியே வாணிகம், போக்குவரத்தில் ஈடுபட்ட சம்பான்கள் தரித்த துறை, சம்பாந்துறை.
(அம்பாந்தோட்டையும் இதேதான்; சம்பான்+தோட்டம்= ஹம்பாந்தோட்ட என்று சிங்களத் தோற்றம் காட்டும்.)

5. அம்பாறைவில் (அம்பாறை-அழகியபாறை; இன்று அம்பாரை),
வில் – ஈழத் தமிழில் “சிறுகுளம்” எனப் பொருள்.
மேலும் சில விற்கள்:

6. ஒலுவில்(ஒல்லிவில் – ஒல்லி;நீர்த்தாவரம்),

7. கோளாவில் - குளவில்

8. தம்பிலுவில் (தம்பதிவில் – தம்பதி நல்லாள், மட்டக்களப்புச் சிற்றரசி; தெம்பிலிவில்/தம்பல்வில் என்பாரும் உண்டு - தெம்பிலி செவ்விளநீர்/ தம்பல் வயற்சேறு.)

9. பொத்துவில்(பொதுவில்),
வடக்கே கொக்குவில், மட்டுவில் உண்டு.

10. கல்லாறு – பாறைகள் நிறைந்த ஆறு; மட்டு.வாவி அக்காலத்தில் ஆறென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஒல்லாந்தர் குறிப்புகள் அதை “பொலிகம்ம ஆறு”(பழுகாம ஆறு) என்கின்றன.

11. திருக்கோவில் - மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவில் என்பதால் கோயில் "திருக்கோவில்", அது அமைந்த தலமும் அதே பெயர் பெற்றது.

12. மடம் – நெடுந்தூரப்பயணத்தில் தங்கி ஓய்வெடுக்கும் இடம்.. குருக்கள்மடம்,

13. ஓந்தாச்சிமடம், ஓந்தாச்சி – ஒரு ஒல்லாந்து அதிகாரி; அவன் பணிமனை இங்கிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

14. துரைவந்தியமேடு – துரைவந்தேறிய மேடு. ஒல்லாந்தர் (அ.ஆங்கிலேயர்?) பண்டைய மட்டு.நகருக்கு முதன்முதலாக வந்து ஏறிய இடம்.

15. பிட்டி – பருத்திருப்பது, மண்மேடுகள் இன்றும் புட்டி எனப்படுவதுண்டு. மன்னன்பிட்டி(மன்னம்பிட்டி), மலுக்கம்பிட்டி(மண்கல்பிட்டி என்கிறது ம.மா)

16. மட்டக்களப்பு – மட்டமான களப்பு. மட்டுக்(சேற்று) களப்பு என்பாரும் உண்டு.

17. நிந்தவூர் – இதன் பழைய பெயர் வம்மிமடு. கண்டி மன்னர் காலத்தில் அரசபணியாளர்க்கும் பொதுமக்களுக்கும் நிலங்கள் நிந்தகம், கபாடகம் என்ற பெயர்களில் மானியமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படி யாரேனும் தனிநபர்க்கு அல்லது மக்களுக்கு வழங்கப்பட்ட ஊர். நிந்தம் தமிழில் தனியுரிமை.

18. முனை – களப்பு அல்லது கடலுள் நீண்டிருந்த நிலப்பகுதிகள்.
கல்முனை, மண்முனை, (முறையே கல்லும் மண்ணும் மண்டிக்கிடந்த முனைகள்)

19. சொறிக்கல்முனை (சொறிக்கல் – சுண்ணக்கல் (Lime-stone), தவளக்கல் ( Laterite), மஞ்சட்கல் (Saffron-stone) கனிமப்பாறைகள்)

20. பாலமுனை, குறிஞ்சாமுனை நொச்சிமுனை, வீரமுனை, மருதமுனை
(முறையே பாலை, குறிஞ்சா, நொச்சி, வீரை, மருது மரங்கள் நிறைந்த முனைகள்; வீரமுனை - மட்டு.அரண்மனையின் காவல்வீரர்கள் நின்ற முனை எனும் ம.மா)

21. கமம் – வயல்; வயல்சார்ந்த கிராமங்கள் காமம் என்ற பெயர்பெற்றன.
இறக்காமம் – இறக்கம் – பள்ளம்.

22. சாகாமம், (சா – காய்ந்த, வறண்ட; சோழர்களின் தென்கீழ் படையரண்; பார்க்க:சூளவம்சம்.)

23. பழுகாமம் – பழகாமம் – பழச்சோலைகள் நிறைந்த ஊர். பண்டைய மட்டு.அரசிருக்கைகளுள் ஒன்று.

24. பட்டிருப்பு- மாட்டுப்பட்டிகள் இருந்த பகுதி.

25. களுதாவளை –களுதேவாலயம் (பிள்ளையார் கோயில்) அமைந்த ஊர்.

26. நற்பிட்டிமுனை – நாய்ப்பட்டிமுனை என்பர். நாப்பிட்டி(நா-நடு)முனை ஆகலாம்.

27. காரைதீவு – காரைமரத் தீவு. கடலுக்கும் வாவிக்கும் இடையே நீராற் சூழப்பட்டிருந்ததால், தீவு எனப்பட்டது.

28. சங்கமன்கண்டி – செங்கல்மண் கண்டி ஆகலாம். சங்கமரின் (வீரசைவக் குருமார்) கண்டி என்பதும் உண்டு. கண்டி – ஈழத்தமிழில் தலைநகர்.
##‪#‎மக்கட்பெயர்‬ – முதற்குடியேறிகள் அல்லது வேறு காரணங்களால் தனிநபரின் பெயரில் அழைக்கப்படும் ஊர்கள்.

29. களுவாஞ்சிக்குடி – கலைவஞ்சி என்பாள் குடியிருந்த ஊர்.

30. நீலாவணை – நீலவண்ணனின் ஊர். நீலனின் அணையும் அமைந்திருக்கலாம்.

31. பாண்டிருப்பு – பாண்டு இருந்த இடம். பாஞ்சாலி கோயிலுடன் தொடர்புறுத்துவதுண்டு

32. ஆறுமுகத்தான் குடியிருப்பு - ஆறுமுகன் என்ற வரலாற்று வீரன் வாழ்ந்த இடம்

33. காத்தான்குடி - காத்தான் என்ற தமிழன் குடியிருப்பு அமைத்த இடம்

34. கரடியன் ஆறு - பல சாலிகளும் வீரர்களும் உருவாகிய மண்

35. சித்தாண்டி – சித்தன்+ஆண்டி இருந்த இடம்.

36. பாணமை - பாணகை என்னும் ம.மா. “பாலநகை” என்று விரித்து, ஆடகசௌந்தரியின் கதையுடன் தொடர்புறுத்தும்.

37. வந்தாறுமூலை- "பண்டாரமூலை" என்கின்றன ஒல்லாந்தர் குறிப்புக்கள். பண்டாரம் - கோயில் திருத்தொண்டர்கள், தவசிகளைக் குறிக்கும்.

38. ஏறாவூர் – பகைவர் தடைப்பட்டு ஏறாது (தாண்டிவராது) நின்றவூர் எனும் ம.மா. ஏரகாவில் என்னும் ஒல்லாந்துக் குறிப்புகள்.

39. கிரான் – ஒருவகைப்புல், கிரான்குளம், கிரான் என்று இரு ஊர்கள் உண்டு.

40. செட்டிபாளையம் – பாளையம் – தமிழ்நாட்டு ஆட்சி நிர்வாகப் பிரிவு. தமிழ்நாட்டுச் செட்டிமாரின் தொடர்பைக் காட்டும்.

41. சவளக்கடை – பண்டைய மட்டு.நகரின் அருகிருந்த வர்த்தகக் குடியிருப்பு. ஜவுளிக்கடை?

42.குருமண்வெளி - குறு(கிய) மணல் கொண்ட வெளி

43. -------த்தீவு - தேற்றா மரங்கள் நிறைந்த தீவு.

http://battinaatham.com/description.php?art=6773

  • கருத்துக்கள உறவுகள்

என்ற ஊரும் வந்து போட்டுது  கிழக்கே அழகு   அது தனியழகுtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கிழக்கு வந்த பன்னீரை சந்திக்க சென்றவேளை எடுத்த   போண் கிளிக் இந்த காட்சிக்குமுன் அமர்ந்திருந்தார் பன்னீர்  (ஜீவன்)tw_blush:

20161028_131603.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முனி பன்னீரை இந்த படகில் ஏற்றி ஒரு சுற்றுலா வர விட்டிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் முனி பன்னீரை இந்த படகில் ஏற்றி ஒரு சுற்றுலா வர விட்டிருக்கலாமே?

அதற்க்கான நேரம் குறைவாக இருந்தது அண்ணே  அவருக்கு நீச்சல் தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது  முதலை வேற அதனால் மனதில் சிறுபயம்  ஆனால் ஊர் முழுவதும் சுற்றி பார்த்தார் குறிப்பாக படுவான் கரை பக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, முனிவர் ஜீ said:

அதற்க்கான நேரம் குறைவாக இருந்தது அண்ணே  அவருக்கு நீச்சல் தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது  முதலை வேற அதனால் மனதில் சிறுபயம்  ஆனால் ஊர் முழுவதும் சுற்றி பார்த்தார் குறிப்பாக படுவான் கரை பக்கம்

என்னது  பெண்கள் பக்கம்  பாத்தாரா tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

என்னது  பெண்கள் பக்கம்  பாத்தாரா tw_astonished:

யோய் எங்கய்யா கூறியிருக்கன் பெண்கள் பக்கம் என  கிழக்கின் முன்னய கட்டுப்பாட்டுப் பகுதி  (புலிகளின்)  <_<

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

யோய் எங்கய்யா கூறியிருக்கன் பெண்கள் பக்கம் என  கிழக்கின் முன்னய கட்டுப்பாட்டுப் பகுதி  (புலிகளின்)  <_<

அட கருமமே  ஊரில  தனியாத்தான்  நிக்கிறாரா :221_see_no_evil:

  • தொடங்கியவர்

sri7A0D379F104000EDB.jpg

sri631874B7F2604D7F5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கல்லடி பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஒளவை பாட்டியின் சிலை பாட்டிய வச்சவங்க  அவாக்கு ஒரு குடையை வைக்க மறந்திட்டாங்க 

FB_IMG_1475243372176.jpg

  • 4 months later...
  • தொடங்கியவர்

கிழக்கிலங்கையின் வியத்தகு கடற்கரை – மண்மலை

பொத்துவில் நகரம் என்றவுடனேயே அனேகரது கவனம் அதன் சுற்றுலாத்தளங்களான அறுகம்பை அதைச் சாடியுள்ள உல்லை கடற்கரை போன்றவற்றையே மீட்டுத்தரும். இப்பொத்துவில் நகரம் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பல்வேறுபட்ட மாறுதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. சுற்றுலா விடுதிகள், கடை வீதிகள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்களைக் கொண்டு இன்று இந்நகரம் அபிவிருத்தியடைந்து காணப்படுகிறது. சுற்றுலாப்ப ருவகாலங்களில் இங்கு காணப்படும் கடற்கரைகள் மக்கள் கூட்டங்களால் நிறைந்து காணப்படுவது ஓர் கண்கொள்ளாக் காட்சியாகும். இப்படிச் சுறுசுறுப்பான இந்நகரில் இயற்கை மற்றும் தனிமை விரும்பிகளுக்கு ஓர் சொர்க்கபூமி உண்டென்றால் அது இம்மண்மலையும் அதைச் சார்ந்துள்ள கடற்கரையுமேயாகும்.

இலங்கையின் எந்தவொரு பாகத்திலும் காணமுடியாத இவ்வமைப்பான கடற்கரை பொத்துவிலுக்கான ஓர் தனிச் சிறப்பே எனலாம். முதன்முறை இத்தலத்திற்குச் செல்பவர்கள் வியந்து, உலகில் இப்படியும் ஓர் இடம் உண்டா எனப் பூரிக்கும் அளவு இம் மண்மலை இயற்கை வனப்புமிக்கது. பாடசாலைக் காலங்களில் சுற்றுலா சென்ற சமயம் நாங்கள் பார்த்த மண்மலை சுனாமி அனர்த்தத்தின் பின் சற்று மாறியிருக்கின்றதெனவே கூறவேண்டும். இருந்தும் இப்பிரதேச மக்களை சுனாமி அனர்த்தத்தின் கொடூர தாண்டவத்திலிருந்து இத்தரைத்தோற்றமும் 32 அடிவரை உயர்ந்த இம் மண்மேடுகளும் காப்பாற்றின என்பது மிகையில்லை.

இயற்கையாக அமைந்த இப்பரந்த மண்மேடுகள் அதனிடையே ஆங்காங்கு வளர்ந்திருக்கும் மரங்கள், நீண்டு விரிந்த கடற்கரை, மண்மலையின் உச்சியில் நின்று பார்க்கும்போது தோன்றும் காட்சிபோன்றவை வாழ்வில் ஒருதடவையேனும் நாம் அனுபவித்துச் சுவைக்கவேண்டிய அம்சமே என்பேன்.

குறிப்பாக பௌர்ணமி தினங்களில் நிலா உதிக்கும் காட்சி கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு இறைவன் பூமியில் உருவாக்கிய சுவர்க்கம் என்றே நினைக்கத் தோன்றும். நிலவொளியில் இவ்வெள்ளிமணற்பரப்பில் அமர்ந்து அலைகளின் ஓசையுடன்  கழிக்கின்ற பொழுது பாரதியின் “வெண்ணிலா” பாடலை நினைத்து நினைத்து ரசிக்க ஏற்றது என்பது எனது கருத்து.

நான் ரசித்த இம்மண்மலையை நான் பதிவுசெய்த எனது புகைப்படங்களூடு நீங்களும் ரசிக்கத் தருகிறேன்.

மண்மலையின் உச்சியில் இருந்து அறுகம்பையை நோக்கிய கடற்கரைத் தோற்றம்

மண்மலையின் உச்சியில் இருந்து அறுகம்பையை நோக்கிய கடற்கரைத் தோற்றம்

மண்மலையின் ஆங்காங்கே அமைந்த வரள்நிலத் தாவரங்களாலான பற்றைகள்

மண்மலையின் ஆங்காங்கே அமைந்த வரள்நிலத் தாவரங்களாலான பற்றைகள்

மழை மேகங்கள்க சூழ்ந்த மண்மலைக் கடற்கரையின் மற்றுமொரு தோற்றம்

மழை மேகங்கள்க சூழ்ந்த மண்மலைக் கடற்கரையின் மற்றுமொரு தோற்றம்

பனைமர உயரத்திற்கு வளர்ந்திருக்கும் மண் மேடுகள்

பனைமர உயரத்திற்கு வளர்ந்திருக்கும் மண் மேடுகள்

கடற்கரையில் அமைந்த சிறிய நீர்ப்பரப்புக்கள்

கடற்கரையில் அமைந்த சிறிய நீர்ப்பரப்புக்கள்

கடற்கரை நெடுகிலும் அமைந்த கசூரினா மரங்கள்

கடற்கரை நெடுகிலும் அமைந்த கசூரினா மரங்கள்

கடற்கரையில் நீண்டு செல்லும் ஆழமற்ற நீர்ப்பரப்புக்கள்

கடற்கரையில் நீண்டு செல்லும் ஆழமற்ற நீர்ப்பரப்புக்கள்

கடற்கரைச் சூழலுக்கு இசைவாய் படர்ந்திருக்கும் அடம்பன் கொடி

கடற்கரைச் சூழலுக்கு இசைவாய் படர்ந்திருக்கும் அடம்பன் கொடி

ஆள் நடமாட்டம் குறைந்த மாசடையாத கடற்கரை

ஆள் நடமாட்டம் குறைந்த மாசடையாத கடற்கரை

மண்ணில் மண்டிக் கிடக்கும் புல்லினம்

மண்ணில் மண்டிக் கிடக்கும் புல்லினம்

மன்மலைக்கு சற்றுத் தொலைவில் கரைவலையில் மீன்பிடிக்கும் மீனவர்கள்

மன்மலைக்கு சற்றுத் தொலைவில் கரைவலையில் மீன்பிடிக்கும் மீனவர்கள்

வலையிலகப்பட்ட மீன்களைத் தரம்பிரித்து விற்பனைக்காக தயாராகும் மீனவர்

வலையிலகப்பட்ட மீன்களைத் தரம்பிரித்து விற்பனைக்காக தயாராகும் மீனவர்

வலையில் அகப்பட்டு தரம்பிரித்தலில் பக்கவிளைவாய் வெளியேறிய இழுதுமீன்

வலையில் அகப்பட்டு தரம்பிரித்தலில் பக்கவிளைவாய் வெளியேறிய இழுதுமீன்

கரையிலுள்ள நீர்ப்பரப்பு, கடல்

கரையிலுள்ள நீர்ப்பரப்பு, கடல்

roartamil.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மண் மேடு இதை விட உயரமாக இருந்தது விகாரை கட்டும்  போது பிரச்சினை உண்டானது அந்த நேரம் கோட்டபாய ராஜ பக் ஷ இதை முன் நின்று கட்டினார்  மண் மேடு அகற்றப்பட்டது   அதன் உயரம் பார்ப்பதாக  இருந்தால்  உல்லைக்கடலில் இருந்து பார்த்தால் இன்னும் அழகாக தெரியும்  

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2016 at 8:20 AM, முனிவர் ஜீ said:

கல்லடி பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஒளவை பாட்டியின் சிலை பாட்டிய வச்சவங்க  அவாக்கு ஒரு குடையை வைக்க மறந்திட்டாங்க 

FB_IMG_1475243372176.jpg

அவ்வைக்கு காகம் குருவிதான் பிரச்சினை அதுதான் கையில தடி கொடுத்திருக்கிறார்கள்....வெய்யில், மழையை மனிசி ஒரு வெண்பா பாடியே திரத்தி விடும்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

அவ்வைக்கு காகம் குருவிதான் பிரச்சினை அதுதான் கையில தடி கொடுத்திருக்கிறார்கள்....வெய்யில், மழையை மனிசி ஒரு வெண்பா பாடியே திரத்தி விடும்....!  tw_blush:

சிலை பாடாது என்று கூறி ...........:unsure:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, முனிவர் ஜீ said:

சிலை பாடாது என்று கூறி ...........:unsure:tw_blush:

கல்யாணை கரும்பே தின்னும்போது வெள்ளைச்சிலை வெண்பா பாடாதா....!  tw_blush:

Résultat de recherche d'images pour "stone elephant"

On 18.12.2016 at 0:50 PM, முனிவர் ஜீ said:

கல்லடி பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஒளவை பாட்டியின் சிலை பாட்டிய வச்சவங்க  அவாக்கு ஒரு குடையை வைக்க மறந்திட்டாங்க 

FB_IMG_1475243372176.jpg

நான் பார்த்ததிலேயே எனக்கு பிடித்த ஔவையார் சிலை இதுதான்.

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

நான் பார்த்ததிலேயே எனக்கு பிடித்த ஔவையார் சிலை இதுதான்.

image.jpg

Image associée

எங்களிட்டையும் கிழவி இருக்குதல்ல....! என்ன இது கிழவியாய் இருக்கு.....! tw_blush:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு என்றால் பாயோட ஒட்டவச்சிருவாங்க என்பதன் உண்மையான கருத்து.

மட்டக்களப்பு’ன்னு சொன்னதுமே பொதுவாகவே சொல்ற கொமண்ட் ‘பாத்து கவனமா இருடா, பாயோட ஒட்டவச்சுருவாங்க’ என்றதுதான். உண்மைதான்.
பாயோட ஒட்டவச்சுருவாங்க என்பது உண்மைதான் ஆனால் அதுக்குப்பின்னால இருக்கிற காரணம் வேற. சாதாரணமா செய்வினை, ஏவல், சூனியம் போன்ற தனிப்பட்ட பயங்கள் எதுவுமில்ல. வீட்டில் பெண்பிள்ளை இருந்தால் மாப்பிள்ளை ஆக்க செய்வினை வைப்பாங்க என்றில்லை. அட ‘கருநா’ பயம்கூட இல்லை.
இவங்களோட விருந்தோம்பல்ல, அந்நியோன்னியமான, நட்பான பழக்கத்தில இந்த மக்களோடு பழகத்தொடங்கினா அது கடைசிகாலம் வரைக்கும் மறக்காது. யாரெண்டே தெரியாட்டிலும் மகன், மகள் எண்டு கதைக்கிறத நான் வேற எங்கயுமே கண்டதில்ல.
உதவி செய்ய தயங்குறதா நான் யாரையும் கண்டதில்லை.(விதிவிலக்குகள் உண்டு).

லாகன் மீன் போட்டு சுண்டிய திராய்ச்சுண்டல்,இராலுடன் மரவள்ளிக்கிழங்கு சொதி,வாவியில் பிடித்த யப்பான் மீன் குழம்பு.
நினைத்தாலே பசி எடுக்கும்.
இவற்றை வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு பன் புல்லுப் பாயில் படுத்துறங்கினால் எழும்பவே மனம் வராது அதைத்தான் பாயோடு ஒட்ட வச்சுருவாங்கள் என்றும் கூறுகின்றனர்.

மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை
சிறப்பான விருந்தோம்பல் இன்றும் மாறாமல் இருக்கின்றது

சாதாரணமா விசிட் போனாக்கூட சாப்பாடு போட்டு அனுப்புறத வழக்கமா வச்சிருக்கிற சனம்யா இது.

உக்காந்து சாப்பிட்டா அவங்கட உபசரிப்பிலயும் அந்நியோன்னியத்திலும் நம்ம அவங்களை லேசில மறக்கமாட்டோம் என்றதுதான் ஹைலைட்.
உண்மையாக ‘பாயோட ஒட்டவச்சுருவாங்க’ என்ற வசனம் இங்க கிட்டத்தட்ட எல்லாருக்கும் பொருந்தும். ஆனா அதை பலர் வேற விதமா சொல்றது அதை சொல்பவர்களுக்கு இருக்கும் வருத்தம்.

” மட்டக்களப்பு என்று சொல்லடா! 
மண்ணில் பெருமை கொள்ளடா!”

படித்ததில் பிடித்தது :104_point_left:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 23/04/2017 at 2:03 PM, Athavan CH said:

கிழக்கிலங்கையின் வியத்தகு கடற்கரை – மண்மலை

பொத்துவில் நகரம் என்றவுடனேயே அனேகரது கவனம் அதன் சுற்றுலாத்தளங்களான அறுகம்பை அதைச் சாடியுள்ள உல்லை கடற்கரை போன்றவற்றையே மீட்டுத்தரும். இப்பொத்துவில் நகரம் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பல்வேறுபட்ட மாறுதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. சுற்றுலா விடுதிகள், கடை வீதிகள், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்களைக் கொண்டு இன்று இந்நகரம் அபிவிருத்தியடைந்து காணப்படுகிறது. சுற்றுலாப்ப ருவகாலங்களில் இங்கு காணப்படும் கடற்கரைகள் மக்கள் கூட்டங்களால் நிறைந்து காணப்படுவது ஓர் கண்கொள்ளாக் காட்சியாகும். இப்படிச் சுறுசுறுப்பான இந்நகரில் இயற்கை மற்றும் தனிமை விரும்பிகளுக்கு ஓர் சொர்க்கபூமி உண்டென்றால் அது இம்மண்மலையும் அதைச் சார்ந்துள்ள கடற்கரையுமேயாகும்.

இலங்கையின் எந்தவொரு பாகத்திலும் காணமுடியாத இவ்வமைப்பான கடற்கரை பொத்துவிலுக்கான ஓர் தனிச் சிறப்பே எனலாம். முதன்முறை இத்தலத்திற்குச் செல்பவர்கள் வியந்து, உலகில் இப்படியும் ஓர் இடம் உண்டா எனப் பூரிக்கும் அளவு இம் மண்மலை இயற்கை வனப்புமிக்கது. பாடசாலைக் காலங்களில் சுற்றுலா சென்ற சமயம் நாங்கள் பார்த்த மண்மலை சுனாமி அனர்த்தத்தின் பின் சற்று மாறியிருக்கின்றதெனவே கூறவேண்டும். இருந்தும் இப்பிரதேச மக்களை சுனாமி அனர்த்தத்தின் கொடூர தாண்டவத்திலிருந்து இத்தரைத்தோற்றமும் 32 அடிவரை உயர்ந்த இம் மண்மேடுகளும் காப்பாற்றின என்பது மிகையில்லை.

இயற்கையாக அமைந்த இப்பரந்த மண்மேடுகள் அதனிடையே ஆங்காங்கு வளர்ந்திருக்கும் மரங்கள், நீண்டு விரிந்த கடற்கரை, மண்மலையின் உச்சியில் நின்று பார்க்கும்போது தோன்றும் காட்சிபோன்றவை வாழ்வில் ஒருதடவையேனும் நாம் அனுபவித்துச் சுவைக்கவேண்டிய அம்சமே என்பேன்.

குறிப்பாக பௌர்ணமி தினங்களில் நிலா உதிக்கும் காட்சி கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு இறைவன் பூமியில் உருவாக்கிய சுவர்க்கம் என்றே நினைக்கத் தோன்றும். நிலவொளியில் இவ்வெள்ளிமணற்பரப்பில் அமர்ந்து அலைகளின் ஓசையுடன்  கழிக்கின்ற பொழுது பாரதியின் “வெண்ணிலா” பாடலை நினைத்து நினைத்து ரசிக்க ஏற்றது என்பது எனது கருத்து.

நான் ரசித்த இம்மண்மலையை நான் பதிவுசெய்த எனது புகைப்படங்களூடு நீங்களும் ரசிக்கத் தருகிறேன்.

மண்மலையின் உச்சியில் இருந்து அறுகம்பையை நோக்கிய கடற்கரைத் தோற்றம்

மண்மலையின் உச்சியில் இருந்து அறுகம்பையை நோக்கிய கடற்கரைத் தோற்றம்

மண்மலையின் ஆங்காங்கே அமைந்த வரள்நிலத் தாவரங்களாலான பற்றைகள்

மண்மலையின் ஆங்காங்கே அமைந்த வரள்நிலத் தாவரங்களாலான பற்றைகள்

மழை மேகங்கள்க சூழ்ந்த மண்மலைக் கடற்கரையின் மற்றுமொரு தோற்றம்

மழை மேகங்கள்க சூழ்ந்த மண்மலைக் கடற்கரையின் மற்றுமொரு தோற்றம்

பனைமர உயரத்திற்கு வளர்ந்திருக்கும் மண் மேடுகள்

பனைமர உயரத்திற்கு வளர்ந்திருக்கும் மண் மேடுகள்

கடற்கரையில் அமைந்த சிறிய நீர்ப்பரப்புக்கள்

கடற்கரையில் அமைந்த சிறிய நீர்ப்பரப்புக்கள்

கடற்கரை நெடுகிலும் அமைந்த கசூரினா மரங்கள்

கடற்கரை நெடுகிலும் அமைந்த கசூரினா மரங்கள்

கடற்கரையில் நீண்டு செல்லும் ஆழமற்ற நீர்ப்பரப்புக்கள்

கடற்கரையில் நீண்டு செல்லும் ஆழமற்ற நீர்ப்பரப்புக்கள்

கடற்கரைச் சூழலுக்கு இசைவாய் படர்ந்திருக்கும் அடம்பன் கொடி

கடற்கரைச் சூழலுக்கு இசைவாய் படர்ந்திருக்கும் அடம்பன் கொடி

ஆள் நடமாட்டம் குறைந்த மாசடையாத கடற்கரை

ஆள் நடமாட்டம் குறைந்த மாசடையாத கடற்கரை

மண்ணில் மண்டிக் கிடக்கும் புல்லினம்

மண்ணில் மண்டிக் கிடக்கும் புல்லினம்

மன்மலைக்கு சற்றுத் தொலைவில் கரைவலையில் மீன்பிடிக்கும் மீனவர்கள்

மன்மலைக்கு சற்றுத் தொலைவில் கரைவலையில் மீன்பிடிக்கும் மீனவர்கள்

வலையிலகப்பட்ட மீன்களைத் தரம்பிரித்து விற்பனைக்காக தயாராகும் மீனவர்

வலையிலகப்பட்ட மீன்களைத் தரம்பிரித்து விற்பனைக்காக தயாராகும் மீனவர்

வலையில் அகப்பட்டு தரம்பிரித்தலில் பக்கவிளைவாய் வெளியேறிய இழுதுமீன்

வலையில் அகப்பட்டு தரம்பிரித்தலில் பக்கவிளைவாய் வெளியேறிய இழுதுமீன்

கரையிலுள்ள நீர்ப்பரப்பு, கடல்

கரையிலுள்ள நீர்ப்பரப்பு, கடல்

roartamil.com

நான் இதுவரைக்கும் மட்டக்களப்புக்கு வந்ததில்லை இதில் உள்ள படங்களை பார்க்கும்போது வடமராட்ச்சி கிழக்கில் இது போன்ற இடங்களை பார்த்திருக்கின்றேன் . உண்மையிலயே மிகவும் அழகாக இருக்கின்றது சந்தர்ப்பம் கிடைக்கும்போது நிச்சயமாக மட்டக்களப்பு மற்றும் சில இடங்களும் பார்க்கவேண்டும் என்று எண்ணி உள்ளேன்.

அருமையான படங்கள் நன்றி தனி ஒருவன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.