Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனம் - திரைவிமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மலையாளியால் தமிழனாக சிந்திக்க முடியாது என்பதனை மீண்டும் நிருபித்திருக்கிறார் சந்தோஷ் சிவன்.

முன்னதாக படத்தில் ஏதேனும் குறை யிருந்தால் பார்த்து விட்டு கூறுங்கள், அதனை நீக்கிக்கொள்ளலாம் என 

லிங்குசாமி உறுதியளித்திருந்தார். அதன் பேரில் தோழர்கள் சிலர் பார்த்தோம்.

ஒளீப்பதிவு, இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என சகல விஷயத்திலும் தான் ஒரு சிறந்த கலைஞன் என 

நிருபித்துள்ளார். ஆனால் எந்த வித புரிதலுமின்றி அம்மக்களை அனுகியிருக்கிறார்.

(எனக்கென்னவோ ராஜபக்ஷ தான் பணம் கொடுத்திருப்பான் என தோன்றுகிறது).

அவர் எதற்காக இந்த படம் எடுத்தார், எதனை சொல்ல வந்தார் என என்னால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.

அகதியாக ஒரு சிறுமி வருகிறாள். இந்திய அதிகாரி அவளை விசாரிக்கிறார். அவள் நடந்ததை கூறுகிறாள்.

அவள் பார்வையில் கடந்த காலம் விரிகிறது. அவள் கதையை கேட்டு இறக்கம் கொள்ளும் அதிகாரி அவளை 

விட்டுவிடுகிறார். அவள் எழுந்து செல்கிறாள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என படம் நிறைவடைகிறது.

இலங்கை அகதியை சுதந்திரமாக விடும் அதிகாரி உள்ளானா? அது சாத்தியமா? அந்த இந்திய அதிகாரியின்

முகத்தை திரையில் காண்பிக்கவே இல்லை (அப்படி ஒருவன் இருக்க வாய்ப்பில்லை என குறிப்பால் உணர்த்துகிறாரோ?)

நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் இது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய, அனுப்ப போகும் படமாக இருக்க முடியாது.

நம் கண் முன் வைத்திருப்பதே edited versionஆக இருக்கும் என நினைக்கிறேன். ஆங்காங்கே இசை மற்றும் படத்தொகுப்பில் 

jumping தெரிகிறது. இவை ராஜபக்ஷ குழுக்களின் நவீன பிரச்சார உக்தி. ஆனால் ஒரு பாமர திரை ரசிகனால் இவை எதையும்

நினைத்துப்பார்க்காமல், நமக்கான படமாகவே நினைக்க வாய்ப்புள்ளது, அதனுள் பொதிந்திருக்கும் அரசியல் மிக ஆபத்தானது.

ஒட்டு மொத்த கதையே ஆட்சேபத்திற்குறியதுதான். அதில் ந்மக்கு நான்கைந்து இடங்களில் சற்றும் உடன்பாடில்லை.

தலைப்பு ஆரம்பிக்கும் போதே அவன் சூழ்ச்சிகளை ஆரம்பிக்கிறான். டைட்டிலில் வரைந்த ஓவியங்களை காண்பிக்கிறான். அதில் ஒரு 

ஓவியத்தில் சீஷா விளையாட்டில் விளையாடுவது போல், இருவர் நேருக்கு நேர் அமர்ந்து ஒருவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியை 

நீட்டியபடி இருக்கின்றனர். இது உண்மையிலேயே அப்படி நடந்த சண்டையா? சிங்களவன் நேருக்கு நேர் தான் நம்முடன் மோதினானா?

(உணர்வுள்ளவனோ, உண்மையானவனோ எடுத்திருந்தால், ஒருவனுக்கு எதிரே ஒன்பது பேர் நிற்பதைப் போல் தான் வரைந்திருப்பான்)

முதல் கால் மணி நேரத்தில், நான்கைந்து இடங்களில் இனக்கலவரம், இனக்கலவரம் என்ற வார்த்தை திரும்ப திரும்ப பிரயோகிப்பதின் நோக்கமென்ன?

(உணர்வுள்ளவனோ, உண்மையானவனோ எடுத்திருந்தால், இனப்படுகொலை எனவே நிறுவியிருப்பான்)

போராளியாக சித்தரிக்கப்பட்ட ஒருத்தரும், பதின் பருவத்தை தாண்டாதவராகவே இருக்கின்றனர். ஒருத்தருக்கு கூட மீசை அரும்பாத வயது, சிறுவன், 

சிறுமிகளை மட்டுமே போராளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

சிங்கள ராணுவ அடியாள் ஒருவன் இறந்து கிடக்கிறான். அவனது கையில் குழந்தையின் புகைப்படம் இருக்கிறது. இந்த காட்சியின் மூலம் பாசத்தை தான் இயக்குனர் 

காட்ட முற்பட்டாரானால், அந்த புகைப்ப்டம் ஏன் போராளியின் கைகளில் இருந்திருக்ககூடாது. அதை விட இது மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியுமே?

(இத்திரைப்படத்தை இவன் சிறீலங்காவிலா வெளியிடப்போடிறான், தமிழ் நாட்டில்தானே?)

கருணாஸ் குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கே பெண் போராளிகள் வருகிறார்கள். அக்குழந்தைகளுக்கு போர்க்காட்சிகளை கானொளியில் போட்டு காண்பிக்கின்றனர்.

கருணாஸின் முகம் பல கோணகளில் நெளிகிறது. (மக்களுக்கு விருப்பமில்லாததை போராளிகள் செய்கிறார்களாம்)

ஒரு தமிழ் சிறுவன் கூறுகிறான். "நான் கடைசிகட்ட போரில் அங்கே தான் இருந்தேன். லீடர் இறந்ததை என் கண்ணால் பார்த்தேன். அவர் கழுத்து அறுபட்டு கிடந்தது."

(இந்த வசனமும், மேலே கூறிய கருணாஸின் காட்சியும் திரைக்கதையில் ஒரு மயிரிழையளவும் தேவைப்பட்டதாக தெரியவில்லை, மற்றவை தேவையா என கேட்காதீர்கள்)

உச்சமாக அனுமதிக்கவே முடியாத காட்சி, போர் எல்லாம் முடிந்து, எல்லோரும் காட்டு வழியே பயணிக்கிறார்கள், வெளி நாடு செல்ல. அங்கே சிங்கள ராணுவத்தினர் அவர்களை பார்க்கிறார்கள்.

(அதாவது மே 19 வாக்கில், அந்த மூன்று நாட்களில் அவர்கள் கண்ணில் கண்டவனையெல்லாம் சுட்டார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். இந்த சந்தொஷ் சிவனிற்கு மட்டும் எப்படி தெரியாமல் 

போனதோ?) தமிழ பெண்களின் உடலை தடவி, அழுத்தி சோதனை செய்கிறார்கள். இதனை கண்ட கருணாஸ் பொங்கி எழுந்து கட்டையை கொண்டு துப்பாக்கி ஏந்தியவனை அடிக்கிறார். 

(மற்ற ராணுவத்தினர் வேடிக்கை பார்க்கிறார்களாம்.) இன்னொரு சிங்களவன் கருணாஸை அடிக்க துப்பாக்கியை தூக்கி வருகிறான். (துப்பாக்கியால் சுடாமல் அடிக்க தான் வருகிறானாம்). 

அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் போராளி துப்பாக்கியை கொண்டு சிங்களவனை சுடுகிறாள். அங்கே இரு தரப்புக்கும் சண்டை நடக்கிறது. (அதாவது இவர்கள் தாக்கியதால் தான் அவர்கள் 

தாக்கினார்களாம்) சண்டையில் இருதரப்பினரும் மறைந்து நின்று தாக்கிகொள்கிறார்கள். (இங்கே தான் வாங்கிய எச்சில் பணத்திற்க்கு, அவன் மிகுந்த விசுவாசமாய் காட்சியை வைக்கிறான்)

அதாவது, ஆயுதம் இல்லா பொதுமக்கள் அனைவரும் சிங்களவர்களின் பின்னால் மறைந்து நிற்கிறார்கள். அதில் ஒருவன் பொதுமக்களை பாதுகாப்பாக அப்புற படுத்துகிறான். போராளி

துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு சிங்கள ராணுவத்தின் பின்னால் இருக்கும் தமிழ் சிறுவன் காலை பதம் பார்க்கிறது.(அச்சிறுவன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவன்)

(சிங்கள ராணுவத்தினர் பொதுமக்களை பாதுக்காக்க சண்டையிட்டார்களாம், போராளிகள் தான் தாக்கினார்களாம்)

கதையில் வரும் எந்த கதாபாத்திரமும், ஈழத்தின் சூழல் தெரிந்து வாழ்பவர்களாக தெரியவில்லை. கதை நடைபெறும் காலம் போர்(இனப்படுகொலை) நடைபெறும் காலம். அதன் பிரதிபலிப்பு எந்த

கதாபாத்திரத்தின் செயலிலும், பேச்சிலும் தெரியவில்லை. காலம் செல்ல செல்ல அவரவர் வாழ்விடங்களை விட்டு, குறுகிய பகுதிக்குள் சுருங்கினார்கள். அப்படி ஒரு விடயமே படத்தில் இல்லை. 

மாறாக அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அதில் 7 வயது சிறுவன் ஒரு சிறுமியை காதலிக்கிறான். 15 வயது சிறுவன் ஒரு சிறுமியை காதலிக்கிறான். கட்டிப்பிடிக்கிறார்கள், 

முத்தமிடுகிறார்கள். அச்சிறுமி வெட்ட வெளியில் சிறுவர்களுக்கு மத்தியில் குளிக்கிறாள். மூளை வளர்ச்சியில்லாத ஒருவனும் கடைசிவரை முத்தம் கேட்டுக்கொண்டே அலைகிறான். (போர்ச்சூழலில் 

இருக்கும் குழந்தைகள் உயிரை காக்க போராடுமா அல்லது இன்ப விளையாட்டுகளில் திளைக்குமா)

படத்தில் எல்லாருமே ஒரு கதாபாத்திரமாக காட்டப்பட்டு, ஒருவன் மட்டுமே மகாத்மாவாக சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் சிங்கள ராணுவ கேப்டன்.

கடைசியில் போரில் உயிர் இழநத 40000 பேருக்கும், அடிபட்ட ஆயிரக்கணக்கான பேருக்கும் இப்படம் சமர்ப்பணம் என முடிகிறது.

(டேய் நாயே இது போரா? இல்ல இனப்படுகொலையா? செத்தவன் 40000 பேருன்னு உனக்கு யாருடா சொன்னது? ன்னு கேக்க தோனுது, யாருகிட்ட கேக்கலாம்?)

சந்தோஷ் சிவன? லிங்குசாமியா?

John Karthik

https://www.facebook.com/john.karthik.148

1004877_624511910963237_1081378192_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் அசின் வகையறா பிரச்சாரப் படம்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழனாக உணர்ந்து, விடுதலைப்போரில் பங்காளியாக, சாட்சியாக இருந்த ஒரு படைப்பளியாலேயே எம்மையும், எமதுவரலாற்றையும்,  எமது உணர்வுகளையும் பிரதியெடுக்க முடியும். இதில் வேறுயாராவது முயல்வார்களாகவிருந்தால், யானையைப்பார்த்த குருடனைப்போல் ஏமாந்துவிடுவார்கள்.

 

நான் வாழும் நாட்டில் இரண்டாம் உலகயுத்தத்தின்போது இத்தேசத்தை வழிநடாத்திய தலைவர் ஒருவரைப்பற்றிய திரைப்படம் நெடுநாள்களாக வெறும் அதன் திரைக்கதைபற்றிய கருத்தாடல்களால் தேங்கிநிற்கின்றது, கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்குமுன்னர் படமாக்கத் திட்டமிட்ட இத்திரைப்படம் இன்னமும் ஆரம்பநிலையிலேயே நிற்பதற்கான காரணம் திரைக்கதைபற்றிய கலந்துரையாடல்கள் தேசப்பற்றாளர்களது விமர்சனத்திற்கு உள்ளாகியதே, எனினும் இத்திரைப்படத்தயாரிப்புக்கான செலவுதொகை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுபோனாலும் சம்பந்தப்பட்டவர்கள் அதைப்பற்றிக்கவலைப்படவில்லை. எப்போதாவது அத்திரைப்படத்தை வெளிக்கொணர்வோம் என முடிவோடே இருக்கிறார்கள்.

 

காரணம், வரலாறு தங்கள் சந்ததிகளுக்கு சரியானவிதத்தில் சொல்லப்படல்வேண்டுமென்பதற்காக.

 

என்னிடமும் எனது மண்சார்ந்த திரைக்கதை (ஸ்கிறிட்) எழுத்துவடிவில் இருக்கின்றது கிட்டத்தட்ட ஐந்துவருடங்களாக இப்போதும் காட்சிகளை மாற்றி மெருகுபடுத்தி.... இப்படியே இழுபட்டுப்போகின்றது திரப்படமாக்குவதற்கு முன்போ அன்றேல் யாராவது தகுதியானவர்கள் கைகளுக்குச் சேர்ப்பிக்கமுன்போ, 

நான் இறந்துவிட்டால்........

 

அதுமட்டுமே எனது சொத்தாக என்மகனுக்குப்போய்ச்சேரும். 

 

இப்படி ஒவ்வொரு ஈழத்தமிழன் மனங்களிலும் தனது சமூகத்துக்கான பல கதைகள் இருக்கின்றன, அதை எங்காவது  குறித்துவைத்துவிடுங்கள். நாளை உங்கள் பிள்ளைகள் ஒரு சரித்திரத்தை எமக்குத்தர முற்படலாம்.

 

மற்றப்படி போலிகளைகண்டு ஏமாறாதீர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ” இனம் ” திரைப்படம் – மலையாளி தெலுங்கர்  கூட்டணியின் திட்டமிட்ட சதி நடவடிக்கை!

 

மலையாள ஒளிப்பதிவாளர் சந்தோஸ் சிவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இனம் திரைப்படத்தை இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி வெளியிட்டுள்ளார். இவர் தெலுங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கொச்சைப் படுத்தும் வகையில் இனம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனஅழிப்பை அறிந்து இன்று உலகமே சிங்களதேசத்தையும் அதன் அரசையும் காறி உமிழ்கின்ற நிலையில் சந்தோஸ் சிவன் , லிங்குசாமி ( மலையாளி தெலுஙகர்  ) கூட்டணியினர் தமிழ் மக்களின் போராட்டத்தை தவறாக சித்தரித்து சிங்கள அரசுக்கு பல்லக்கு தூக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் பல முன்னணி கதாநாயகர்களை வைத்து படமெடுத்து பணம் சம்பாதிக்கும் இவர்கள் சிங்கள அரசுக்கு துணைபோவதன் நோக்கம் தான் என்ன?

 

ஒளிப்பதிவாளர் சந்தோஸ் சிவன் ஒரு மலையாளி ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர். மல்லி ,. ரெரரிஸ்ட் என இரன்டு படங்களை

இயக்கியிருந்தார். மல்லி என்ற திரைப்படத்தில் தமிழ் பெண்களை படுமோசமாக சித்தரித்திருந்தார்.

 

ஒழுக்கக் கேடான முறையில் கர்ப்பமுற்ற தமிழ் பெண் மனிதவெடிகுண்டாக மாறுவதாக அந்தப் படத்தில் கதை அமைக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் தற்போது சந்தோஸ் சிவனால் எடுக்கப்பட்டுள்ள இனம் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஈழத்தமிழர்களின்

வாழ்வியலும் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதுடன, தமிழின அழிப்புப்பற்றியோ அல்லது சிங்கள படைகளின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.

 

விடுதலைப் புலிகள் 12 வயது பாலகர்களை கூட வலிந்து படையில் இணைப்பதாகவும் இதனால் வளர்ப்புத்தாயான  (சரிதா) 12 வயதிலேயே தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் கதை அளந்துள்ளனர்.

 

போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்காக செஞ்சோலை . அறிவுச் சோலையென இளம் தலைமுறையின் நல்வாழ்விற்காக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அறப்பணிகள் இவர்களின் கண்ணில் படாமல் விட்டதன் மாயமென்ன.

 

அதே செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் சிங்களப்படை குண்டுவீசி 60  குழந்தைகளை கொன்றுகுவித்ததை இனம் படத்தில் சந்தோஸ் சிவனும், லிங்குசாமியும் குறிப்பிடாமல் விட்டது ஏன்?

 

இதே படத்தில் இன்னொரு காட்சியில் சிங்களப் படையினன் களத்தில் இறந்து கிடக்கின்றான. அவனது கையில் அவனின் குழந்தையின் ஒளிப்படம் இருக்கிறது. அந்தக்காட்சியை மிகவும் உருக்கமான பின்னணி இசையோடும்  பரிவோடும் காட்சிப்படுத்தியுள்ள சந்தோஸ் சிவன் , பாலச்சந்திரன் போன்ற ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்ட நிஐத்தை ஏன் சொல்ல

மறந்தார்.

 

போரில் இருந்து தப்பிவரும் குழந்தைகளை அரவணைப்பவர்களாக, அவர்களுக்கு பரிவுகாட்டுபவர்களாக சிங்கள புத்த பிக்குகளை சித்தரித்துள்ள சந்தோஸ் சிவன் லிங்குசாமி ( மலையாளி தொலுங்கர் ) கூட்டணியினர். சிங்களபேரினவாத பிக்குகளால் தமிழ் மக்கள்

கொல்லப்பட்டதையும் தமிழ் பெண்கள் சிறுமிகள் இன்றுவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதையும் மறைக்க முனைவது ஏன்?

 

பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட தமிழ் பெண்ணொருவர் (கதை நாயகி) ஆற்று நீரில் தனது கறைகளை கழுவிச் செல்வதாக மிகவும் மோசமான அருவருப்பான காட்சியும் இன்னும் பல இழிவான காட்சிகளும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன..

 

சிங்கள அரசின் இனப்படுகொலையால் பெரும் அழிவுகளை சந்தித்தபடி நிர்க்கதியான நிலையில் சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி போராடிக்கொண்டிருக்கும் தமிழ்இனத்தையும் அவர்களின் போராட்டத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சந்தோஸ் சிவன் , லிங்குசாமி (மலையாளி தொலுங்கர் ) கூட்டணியினர் இந்தப்படத்தை எடுத்துள்ளனர்.

 

சிங்கள அரசின் படுகொலைகளையும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பையும் மறைத்து சிங்கள அரசையும்  படைகளையும் உத்தமர்களாக காட்டியுள்ளனர் இவர்கள். மகிந்த ராயபக்சவின் விசுவாசிகள் போன்று செயற்படுகின்றனர்.

 

தமிழ் திரையுலகம் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதாரவாக எத்தனையோ அறப்போராட்டங்களை மேற்கொண்டுள்ளது. சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியுள்ளது.

 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எத்தனையோ திரைத்துறையினர் தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்த் திரைத் துறை மூலம் பெயர் பெற்று தமிழ் மக்கள் மூலம் கோடி கோடியாக பணம் சம்பாதித்து  இறுதியில் தமிழ் மக்களின் போராட்டத்தையும் அவர்களின்

வாழ்வியலையும் இழிவு படுத்தும் மலையாள ஒளிப்பதிவாளர்  சந்தோஸ் சிவன் , இயக்குனரும்தயாரிப்பாளருமான   தெலுங்கர்  லிங்கு சாமி ஆகியோருக்கு பதில் சொல்ல தமிழ் மக்கள் கடமைப்பட்டுள்ளனர்.

 

இனம் திரைப்படத்தை புறக்கணிப்பதோடு  இந்த கூட்டணியினரால் உருவாக்கப்படவுள்ள ஏனைய திரைப்படங்கள் அனைத்தையும் உலகத்தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கவேண்டும்.

 

-தமிழின உணர்வாளர்கள்-

ஒரு மலையாளியால் தமிழனாக சிந்திக்க முடியாது என்பதனை மீண்டும் நிருபித்திருக்கிறார் சந்தோஷ் சிவன்.

முன்னதாக படத்தில் ஏதேனும் குறை யிருந்தால் பார்த்து விட்டு கூறுங்கள், அதனை நீக்கிக்கொள்ளலாம் என லிங்குசாமி உறுதியளித்திருந்தார். அதன் பேரில் தோழர்கள் சிலர் பார்த்தோம்.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என சகல விஷயத்திலும் தான் ஒரு சிறந்த கலைஞன் என நிருபித்துள்ளார். ஆனால் எந்த வித புரிதலுமின்றி அம்மக்களை அனுகியிருக்கிறார். (எனக்கென்னவோ ராஜபக்ஷ தான் பணம் கொடுத்திருப்பான் என தோன்றுகிறது).

அவர் எதற்காக இந்த படம் எடுத்தார், எதனை சொல்ல வந்தார் என என்னால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.

அகதியாக ஒரு சிறுமி வருகிறாள். இந்திய அதிகாரி அவளை விசாரிக்கிறார். அவள்  நடந்ததை கூறுகிறாள். அவள் பார்வையில் கடந்த காலம் விரிகிறது. அவள் கதையை கேட்டு இறக்கம் கொள்ளும் அதிகாரி அவளை விட்டுவிடுகிறார். அவள் எழுந்து செல்கிறாள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என படம் நிறைவடைகிறது.

இலங்கை அகதியை சுதந்திரமாக விடும் அதிகாரி உள்ளானா? அது சாத்தியமா? அந்த இந்திய அதிகாரியின் முகத்தை திரையில் காண்பிக்கவே இல்லை (அப்படி ஒருவன் இருக்க வாய்ப்பில்லை என குறிப்பால் உணர்த்துகிறாரோ?)

நிச்சயமாக என்னால் சொல்ல முடியும், இது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய, அனுப்ப போகும் படமாக இருக்க முடியாது. நம் கண் முன் வைத்திருப்பதே edited versionஆக இருக்கும் என நினைக்கிறேன். ஆங்காங்கே இசை மற்றும் படத்தொகுப்பில் jumping தெரிகிறது. இவை ராஜபக்ஷ குழுக்களின் நவீன பிரச்சார உக்தி. ஆனால் ஒரு பாமர திரை ரசிகனால் இவை எதையும் நினைத்துப்பார்க்காமல், நமக்கான படமாகவே நினைக்க வாய்ப்புள்ளது, அதனுள் பொதிந்திருக்கும் அரசியல் மிக ஆபத்தானது.

ஒட்டு மொத்த கதையே ஆட்சேபத்திற்குறியதுதான். அதில் ந்மக்கு நான்கைந்து இடங்களில் சற்றும் உடன்பாடில்லை.

தலைப்பு ஆரம்பிக்கும் போதே அவன் சூழ்ச்சிகளை ஆரம்பிக்கிறான். டைட்டிலில் வரைந்த ஓவியங்களை காண்பிக்கிறான். அதில் ஒரு ஓவியத்தில் சீஷா விளையாட்டில் விளையாடுவது போல், இருவர் நேருக்கு நேர் அமர்ந்து ஒருவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியை நீட்டியபடி இருக்கின்றனர். இது உண்மையிலேயே அப்படி நடந்த சண்டையா? சிங்களவன் நேருக்கு நேர் தான் நம்முடன் மோதினானா?  (உணர்வுள்ளவனோ, உண்மையானவனோ எடுத்திருந்தால், ஒருவனுக்கு எதிரே ஒன்பது பேர் நிற்பதைப் போல் தான் வரைந்திருப்பான்)

முதல் கால் மணி நேரத்தில், நான்கைந்து இடங்களில் இனக்கலவரம், இனக்கலவரம் என்ற வார்த்தை திரும்ப திரும்ப பிரயோகிப்பதின் நோக்கமென்ன?

(உணர்வுள்ளவனோ, உண்மையானவனோ எடுத்திருந்தால், இனப்படுகொலை எனவே நிறுவியிருப்பான்)

போராளியாக சித்தரிக்கப்பட்ட ஒருத்தரும், பதின் பருவத்தை தாண்டாதவராகவே இருக்கின்றனர். ஒருத்தருக்கு கூட மீசை அரும்பாத வயது, சிறுவன், சிறுமிகளை மட்டுமே போராளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

சிங்கள ராணுவ அடியாள் ஒருவன் இறந்து கிடக்கிறான். அவனது கையில் குழந்தையின் புகைப்படம் இருக்கிறது. இந்த காட்சியின் மூலம் பாசத்தை தான் இயக்குனர்  காட்ட முற்பட்டாரானால், அந்த புகைப்ப்டம் ஏன் போராளியின் கைகளில் இருந்திருக்ககூடாது. அதை விட இது மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியுமே?

(இத்திரைப்படத்தை இவன் சிறீலங்காவிலா வெளியிடப்போடிறான், தமிழ் நாட்டில்தானே?)

கருணாஸ் குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கே பெண் போராளிகள் வருகிறார்கள். அக்குழந்தைகளுக்கு போர்க்காட்சிகளை கானொளியில் போட்டு காண்பிக்கின்றனர்.

கருணாஸின் முகம் பல கோணகளில் நெளிகிறது. (மக்களுக்கு விருப்பமில்லாததை போராளிகள் செய்கிறார்களாம்)

ஒரு தமிழ் சிறுவன் கூறுகிறான். “நான் கடைசிகட்ட போரில் அங்கே தான் இருந்தேன். லீடர் இறந்ததை என் கண்ணால் பார்த்தேன். அவர் கழுத்து அறுபட்டு கிடந்தது.” (இந்த வசனமும், மேலே கூறிய கருணாஸின் காட்சியும் திரைக்கதையில் ஒரு மயிரிழையளவும் தேவைப்பட்டதாக தெரியவில்லை, மற்றவை தேவையா என கேட்காதீர்கள்)

உச்சமாக அனுமதிக்கவே முடியாத காட்சி, போர் எல்லாம் முடிந்து, எல்லோரும் காட்டு வழியே பயணிக்கிறார்கள், வெளி நாடு செல்ல. அங்கே சிங்கள ராணுவத்தினர் அவர்களை பார்க்கிறார்கள்.

(அதாவது மே 19 வாக்கில், அந்த மூன்று நாட்களில் அவர்கள் கண்ணில் கண்டவனையெல்லாம் சுட்டார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். இந்த சந்தொஷ் சிவனிற்கு மட்டும் எப்படி தெரியாமல் போனதோ?) தமிழ பெண்களின் உடலை தடவி, அழுத்தி சோதனை செய்கிறார்கள். இதனை கண்ட கருணாஸ் பொங்கி எழுந்து கட்டையை கொண்டு துப்பாக்கி ஏந்தியவனை அடிக்கிறார்.

(மற்ற ராணுவத்தினர் வேடிக்கை பார்க்கிறார்களாம்.) இன்னொரு சிங்களவன் கருணாஸை அடிக்க துப்பாக்கியை தூக்கி வருகிறான். (துப்பாக்கியால் சுடாமல் அடிக்க தான் வருகிறானாம்).

அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் போராளி துப்பாக்கியை கொண்டு சிங்களவனை சுடுகிறாள். அங்கே இரு தரப்புக்கும் சண்டை நடக்கிறது. (அதாவது இவர்கள் தாக்கியதால் தான் அவர்கள் தாக்கினார்களாம்) சண்டையில் இருதரப்பினரும் மறைந்து நின்று தாக்கிகொள்கிறார்கள். (இங்கே தான் வாங்கிய எச்சில் பணத்திற்க்கு, அவன் மிகுந்த விசுவாசமாய் காட்சியை வைக்கிறான்) அதாவது, ஆயுதம் இல்லா பொதுமக்கள் அனைவரும் சிங்களவர்களின் பின்னால் மறைந்து நிற்கிறார்கள். அதில் ஒருவன் பொதுமக்களை பாதுகாப்பாக அப்புற படுத்துகிறான். போராளி துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு சிங்கள ராணுவத்தின் பின்னால் இருக்கும் தமிழ் சிறுவன் காலை பதம் பார்க்கிறது.(அச்சிறுவன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவன்) (சிங்கள ராணுவத்தினர் பொதுமக்களை பாதுக்காக்க சண்டையிட்டார்களாம், போராளிகள் தான் தாக்கினார்களாம்)

கதையில் வரும் எந்த கதாபாத்திரமும், ஈழத்தின் சூழல் தெரிந்து வாழ்பவர்களாக தெரியவில்லை. கதை நடைபெறும் காலம் போர்(இனப்படுகொலை) நடைபெறும் காலம். அதன் பிரதிபலிப்பு எந்தகதாபாத்திரத்தின் செயலிலும், பேச்சிலும் தெரியவில்லை. காலம் செல்ல  செல்ல அவரவர் வாழ்விடங்களை விட்டு, குறுகிய பகுதிக்குள் சுருங்கினார்கள். அப்படி ஒரு விடயமே படத்தில் இல்லை. மாறாக அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அதில் 7 வயது சிறுவன் ஒரு சிறுமியை காதலிக்கிறான். 15 வயது சிறுவன் ஒரு சிறுமியை காதலிக்கிறான். கட்டிப்பிடிக்கிறார்கள், முத்தமிடுகிறார்கள். அச்சிறுமி வெட்ட வெளியில் சிறுவர்களுக்கு மத்தியில் குளிக்கிறாள். மூளை வளர்ச்சியில்லாத ஒருவனும் கடைசிவரை முத்தம் கேட்டுக்கொண்டே அலைகிறான். (போர்ச்சூழலில் இருக்கும் குழந்தைகள் உயிரை காக்க போராடுமா அல்லது இன்ப விளையாட்டுகளில் திளைக்குமா)

படத்தில் எல்லாருமே ஒரு கதாபாத்திரமாக காட்டப்பட்டு, ஒருவன் மட்டுமே மகாத்மாவாக சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் சிங்கள ராணுவ கேப்டன். கடைசியில் போரில் உயிர் இழநத 40000 பேருக்கும், அடிபட்ட ஆயிரக்கணக்கான பேருக்கும் இப்படம் சமர்ப்பணம் என முடிகிறது.

(டேய் நாயே இது போரா? இல்ல இனப்படுகொலையா? செத்தவன் 40000 பேருன்னு உனக்கு யாருடா சொன்னது? ன்னு கேக்க தோனுது, யாருகிட்ட கேக்கலாம்?) சந்தோஷ் சிவனா? லிங்குசாமியா?

inam.jpg

 

http://www.jvpnews.com/srilanka/63636.html

 

சந்தோஷ் சிவனின் இனம் வெளியாவதில் சிக்கல்...!

தமிழர்களுக்கு எதிராக இனம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, சந்தோஷ் சிவனின் இனம் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இயக்கி இருக்கும் படம் இனம். இப்படத்தில் சரிதா, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. நாளை(மார்ச் 28ம் தேதி) இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

 
சில தினங்களுக்கு முன்னர் இனம் படத்தின் ப்ரீமியர் ஷோ சென்னையில் நடந்தது. திரையுலகைச் சேர்ந்த வி.ஐ.பி.க்களுக்காக திரையிடப்பட்ட அந்த ப்ரிமியர் ஷோவில் இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்ட தமிழ்இன உணர்வாளர்கள் சிலரும் படத்தைப் பார்த்திருக்கின்றனர். இனம் படம் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கு எதிரானதாக எடுக்கப்பட்டிருப்பதாக அப்போது படம் பார்த்த பலர் கூறியிருந்தனர்.
 
இந்நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கொளத்தூர் மணி, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் அளித்துள்ளார். அதில் இனம் படம் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அப்படத்தை வெளியிடக்கூடாது என்றும், இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், படத்தை மீறி திரையிட்டால் தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று தனது புகாரில் கூறியிருக்கிறார்.
 
இதனிடையே இப்பிரச்னை தொடர்பாக இயக்குநர் சங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் சங்க உறுப்பினர்கள், தமிழ் உணர்வு எங்களுக்கும் இருக்கிறது, தமிழ்ர்களுக்கு எங்கெல்லாம் பிரச்னை இருக்கிறதோ, அங்கெல்லாம் முதலில் குரல் கொடுப்பது இயக்குநர் சங்கம் தான். கர்நாடக தண்ணீர் பிரச்னை தொடர்பாக நெய்வேலி வரை போராட்டம் செய்தோம். இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக ராமேஸ்வரம் சென்று போராட்டாம் செய்தோம். இந்தப்படத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் எதுவும் கிடையாது. தமிழ் இனத்திற்கான படம் தான் இனம். சென்சார் போர்டு வரிவிலக்கு செய்தபோதும் ஒருபடத்தை தடை செய்கிறார்கள் என்றால் அவர்கள் படத்தை பார்க்க வாய்ப்பில்லை. இந்தப்படத்தை எடுத்தது, தயாரித்தது சங்க உறுப்பினர்கள், இவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. இதுமாதிரி தடை கொடுத்தார்கள் என்றால் படைப்பாளியின் சுதந்திரம் பறிக்கப்படும். படங்களுக்கு தடை விதிப்பது விஸ்வரூபம் மாதிரி தொடர் கதையாகிவிடக்கூடாது. இந்தப்படம் உலகம் முழுவதும் போய் சேருகின்ற படம். அதனால் இப்படத்தை தடை செய்யாமல், படத்தை ரிலீஸ் செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 

தமிழ் இன உணர்வாளர்களின் எதிர்ப்பு, கொளத்தூர் மணியின் போலீஸ் புகார் போன்ற காரணங்களால் இனம் படம் நாளை வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது

http://cinema.dinamalar.com//tamil-news/17827/cinema/Kollywood/Santhosh-Sivans-Inam-movie-under-troubled.htm

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10155170_788296961182331_414865979_n.jpg

நக்கீரனின் விமர்சனம் இப்படிச் சொல்கின்றது..

 

 

--------------------------------------------------------

 

இனம் - ஒரு பார்வை!
 
ழத்தில் நடந்த கொடுமைகளை சொல்ல வார்த்தைகளே இல்லாத சூழ்நிலையில் போரின் போது கைக்கைட்டி வேடிக்கைப் பார்த்த உலக சமுதாயத்தின் முகத்தில் அறைவது போல இனம் என்ற படைப்பு வெளியாகி இருக்கிறது. 
 
இனம் படத்தைப் பொறுத்தவரை, அதை ஒரு கதையாக வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது. அது ஒரு வலி! அடையாளத்தை இழந்து, குடும்பத்தை இழந்து, உடமைகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்து இதயத்தில் ரணங்களையும், வலிகளையும் மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளின் சொல்ல முடியாத சோகத்தை பதிவு செய்த 'இனம்' படத்தை வெளியிட முன் வந்த லிங்குசாமிக்கு ஒரு பெரிய சல்யூட்!
 
அங்கே நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான அடிப்படை விஷயங்களோ, காரணங்களோ படத்தில் விவாதிக்கப்படவில்லை என்றாலும், அங்கே நடந்ததும்... நடந்துகொண்டிருப்பதும் இனப்படுகொலை என்ற உண்மையை பதிவு செய்த இனம்  படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான சந்தோஷ் சிவனுக்கு நம் நன்றியை பதிவு செய்வதே தர்மமாகும். 
 
படம் எப்படி இருக்கிறது என்று நான்கு வரிகளில் விமர்சனம் எழுத இது வழக்கமான சினிமா இல்லை. ஈழத்தமிழரின் அவலங்கள் கடலாய் இருக்க, அதில் ஒரு துளியை பதிவு செய்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அந்த ஒரு துளியின் ஒரு துளிதான் இந்த வார்த்தைகள்...
 
inam1.jpg
 
கடல்தாண்டி அகதியாய் வந்த ஒரு பெண் தன் கடந்தகாலக் கொடுமைகளையும் தனக்கு நேர்ந்த அவலங்களையும் பகிர்ந்துகொள்வது போலத்தான் படத்தின் கதை அமைகிறது. நான்கு புறமும் குண்டுமழை... எப்போது சாகப்போகிறோம் என்று தெரியாத நிலை... என்றாவது ஒரு நாள் அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பு... என  கனவுகளை சுமந்து கொண்டு வாழும் ரஜினி என்ற பெண். அவளுடன் குடும்பத்தைத் தொலைத்தவர்கள் பலரும் ஒரு குடும்பமாய் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பிஞ்சுப் பூக்களை அரவணைத்து பாதுகாப்பவர் சுனாமி அக்கா எனும் சரிதா. அந்த பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஸ்டான்லியாக கருணாஸ்.
 
கடற்கரையில் கையில் சின்னக் கத்தியுடன் ஒரு சிறுவன் மயங்கிய நிலையில் கிடக்க, அவனை சுனாமி அக்காவின் காப்பகத்திற்கு கொண்டுவருகிறார்கள் பிள்ளைகள். கையில் கத்தி வைத்திருந்தாலும் அவன் பேச்சு வெகுளியாய் இருக்கிறது. ஆட்டிஸத்தோடு இருக்கும் விஷேசக் குழந்தை எனத் தெரியவருகிறது.  அவன் பெயர் நந்தன். அங்கே நடக்கிற அத்தனை விஷயங்களையும் நந்தனின் பார்வையிலேயே பதிவு செய்வதுபோல அமைகிறது காட்சிகள். ரஜினிக்கு அவன் மீது தனி அக்கரை ஏற்படுகிறது. மற்ற பிள்ளைகள் அவனை கிண்டலும் கேலியும் செய்யும்போது கூட ரஜினி அவர்களை கண்டித்து அவன் மேல் கரிசனத்துடன்நடந்துகொள்கிறாள்.
 
inam4.jpg
 
அதே முகாமில் இருக்கும் ஒரு வாலிபனோடு காதலில் விழுகிறாள் ரஜினி. அந்த நிலை நீடிப்பதற்குள்ளாகவே தான் காதலித்தவன் விடுதலை போராட்டத்தில் ஈடுபட காப்பகத்தில் இருந்து வெளியேறி விடுகிறான். பெண் மீது வைத்திருக்கும் காதலைவிட, மண் மீது வைத்த காதல் தான் மேன்மையானது என்று நினைத்ததே காரணமாக இருந்திருக்கலாம்.
 
ஆகாயத்தில் விமானங்கள் பறக்கும்போதும் குண்டு சத்தங்கள் கேட்கும்போதும் வெட்டிய குழிகளில் பதுங்கிக் கொள்ளும் தன் பிள்ளைகளை பார்த்து இதயம் கொதிக்கும் சுனாமி அக்கா, கோபத்தின் உச்சத்தில் ‘என் பிள்ளைகளுக்கு நான் கல்யாணம் செய்துவைக்கப் போகிறேன்’ என்ற முடிவெடுக்கிறார்! பூமியில் அமைதி பூக்கும்... காதலன் என்றாவது ஒரு நாள் திரும்புவான்... என்ற ஏக்கங்கள் கண்களில் மிதக்க, தன்னை காப்பாற்றிக்கொள்ள நந்தனை தன் கணவனாக தேர்ந்தெடுக்கிறாள் ரஜினி.
 
inam3.jpg
 
தாய்மை உள்ளத்தோடு நந்தனை நேசித்தாலும் இதயமெல்லாம் காதலனே நிறைந்திருக்கிறான். காட்சிகள் நகர... இலங்கை இராணுவத்தினர் அவளை பரிசோதனை என்ற பெயரில் உடலை விரல்களால் தடவிப்பார்க்க, அவளை விட்டுவிடுங்கள் என கருணாஸ் கையில் கிடைத்த ஒரு கம்பைக் கொண்டு மிரட்ட, வேறு வழியில்லாமல் தமிழர்கள் துப்பாக்கியால் பேசுகிறார்கள்... தப்பி செல்ல நினைத்த ரஜினி ஒரு சிங்கள வெறிநாயிடம் சிக்கிக்கொள்ள, அந்த நாய் அந்தப் பெண்ணை சின்னாபின்னமாக்குகிறது. அந்த பாலியல் வல்லுறவுக் காட்சியை தன் செல்போனில் பதிவு செய்வது இன்னொரு சிங்கள நாய். 
 
ஒரு மருத்துவ முகாமில் தான் லீடர் என அழைக்கும் தம்பியை பார்த்துவிட்டு தப்பிசெல்ல ரஜினியோடு படகின் அருகில் வரும் நந்தனுக்கு தன் தம்பியின் நினைவு வர, ரஜினி எவ்வளவோ அழைத்து திரும்பிப்பார்க்காத நந்தன் மறைந்த இடத்தில் ஒரு குண்டுவிழுவதப் பார்க்கிறாள் ரஜினி...
 
inam2.jpg
 
 
மனிதர்களையும் தாண்டி குண்டு வெடிக்கும் நேரத்தில் அலரித் துடிக்கும் பறவைகளையும் விலங்குகளையும் தன் கேமராக் கண்கள் கொண்டு பதிவு செய்த சந்தோஷ் சிவன் அந்தக் காட்சிகளில் மனதை உருக்குகிறார்.
 
இங்கிருந்து போகவேண்டாம் என்று வெள்ளைக்காரர்களை தமிழ் மக்கள் கெஞ்சும் காட்சியில் மீன்களுக்கு நடுவில் கேமராவை நகர்த்துவது பிரம்மிப்பு. அந்தக் காட்சியின் முடிவில் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பதிவு செய்வது சந்தோஷ் சிவனின் துணிச்சல். 
 
inam5.jpg
 
‘எல்லா நாட்டிலும் தான் வெடி செய்கிறார்கள், ஆனால் எல்லாம் இங்கே தானே வெடிக்கிறது’ என்பது வசனமல்ல நிஜம் என்ற உண்மையை நிரூபிக்கிறது இனம். ‘பாட்டன் முப்பாட்டன் காலத்துல தொடங்கிய சண்டை இப்போ குழந்தைங்க சத்தமே கேக்குறதில்லை...’ என சரிதா சடலங்களுக்கு நடுவில் புலம்புகிறாரே... அது ஒட்டுமொத்த தமிழர்களின் குரல்.
 
தமிழர்கள் என தெரிந்த பிறகும் பழத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்கிறார் ஒரு புத்த பிட்சு, பாலியல் வல்லுறவுக் காட்சிட்யை செல்போனில் பதிவு செய்யும் சிங்களவனை  இன்னொரு சிங்களவன் திட்டுகிறான்... இந்த இரண்டு காட்சியிலும் சிங்களவன் உத்தமன் என்று விளக்கப்பட்டுவிட்டதா என்ன? ஆயிரம் பேரில் ஒரு நல்லவன் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
 
சிங்கள ராணுவம் இரக்கமில்லா மிருகங்களாக மாறும்போது, கையில் கிடைத்த கம்பைக் கொண்டு, என் குடும்பத்தை காப்பாற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என புலியாய் உருமுகிறாரே ஸ்டான்லியாக நடித்திருக்கும் கருணாஸ்... இதைத் தீவிரவாதம் என்று சொல்கிறவன் முட்டாள் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்.
 
inam7.jpg
 
தமிழுணார்வு தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்ய வேண்டியதை சந்தோஷ் சிவன்  செய்திருக்கிறார். ஈழ விடுதலைக்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும் இந்தப் படைப்பில் எங்கே சொல்லப்படுகிறது என்ற விமர்சனங்கள் கண்டிப்பாக எழும்... இப்படி நடந்தது என்ற உலகத்துக்கு ஒரு பதிவை செய்ய ஒருவர் வேண்டுமல்லவா... அந்த விதத்தில் இனம் படத்தை ஆதரிப்பது நியாயம் என்றே தோன்றுகிறது!
 
ஈழ விடுதலைப் போராட்டத்தோடு பயணித்தவர் அல்ல என்பதை வைத்து அந்தப் படைப்பை கொச்சைப்படுத்துவது நியாயமில்லை. இத்தனை கொடுமைகள் நடந்தும் நீயும் நானும் என்ன செய்தோம், இனி என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியை எழுப்புகிற துணிச்சல் சந்தோஷ் சிவனுக்கு வந்திருப்பதில் என்ன தவறு!
 
inam8.jpg
 
படத்தின் முடிவில் போரில் இறந்தவர்களின் பட்டியலை காட்டி(இறந்தவர்களின் எண்ணிக்கை தவறானது என்றாலும்) அவர்களுக்கு இந்த படம் சமர்ப்பனம் என்பதோடு... என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தை நான் சந்திப்பேன் என நம்பிக்கையுடன் ஈழத்தின் திசை நோக்கிப்பார்க்கும் இறுதிக்காட்சி நமக்குள்ளும் அதே நம்பிக்கையை விதைக்கிறது!
 
இனம் - வலியின் ஒரு துளி...!
 
 

ஈழ விடுதலை தொடர்பான நடிகர்களின் போராட்டங்களில் பங்குகொள்ளும் செல்வமணி இப்படிச் சொல்கின்றார். அத்துடன் ஈழத்தமிழ் கலைஞர்களுடன் நல்ல விதமான உறவு வைத்திருக்கும் பாலாஜி சக்திவேலும் இப்படிச் சொல்கின்றார் - இவர் கடந்த வருடம் பிரான்ஸில் இடம்பெற்ற நாவலர் குறும்படப் போட்டிக்கு நடுவராக வந்தவர்.

 

---------------

 

முட்டாள்களுக்கான பதில் ’இனம்’ - ஆர்.கே.செல்வமணி!
 
ந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘இனம்’ திரைப்படத்தைப் பார்த்த திரையுலக முக்கிய கலைஞர்கள் பலரும் வாழ்த்திவருகின்றனர். 
 
inaminside2.jpg
 
இனம் படம் பற்றி ஆர்.கே.செல்வமணி :
 
சந்தோஷ்சிவன் என் இனம் எப்படி அழிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார். அந்த இன அழிப்பு துயரங்களை கொடுமைகளை ஒரு சதவிகிதம் தான் காட்டியிருக்கிறார். அதுவே இவ்வளவு கொடுமையாக தெரிகிறது. படத்தில் சொல்லப்படாதவை எவ்வளவோ இருக்கின்றன.
 
கருணாஸ் பாத்திரம் மிக அற்புதமாக உள்ளது. இங்கே சரியான புரிதல் இல்லாமல் அறிவில்லாமல் பேசுகிற பல முட்டாள்களுக்குப் பதிலாக அந்த பாத்திரம் இருக்கும். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ‘என் குடும்பத்தை காப்பாற்ற நான் எதையும் செய்வேன்’ என்கிற அந்த வசனம் தான் இலங்கையில் தன் குடும்பத்தை, இனத்தை காப்பாற்ற எதையும் செய்ய வேண்டிய சூழலில் சிக்கியிருக்கும் தமிழர்களின் போராட்டம் 
 
இனம் படத்தை வெளியிடும் இயக்குனர் லிங்குசாமி :
 
இனம் படத்தைப் பார்த்தோம், பிடித்தது வெளியிடுகிறோம். இதில் வேற எந்த வியாபாரக் கணக்கும் இல்லை. படத்தின் மூலம் இரண்டு சொட்டு  கண்ணீர் போதும் அதுதான் எதிர்பார்ப்பு கணக்கு
 
inaiminiside1.jpg
 
இயக்குனர் பாலாஜி சக்திவேல் :
 
“இனம்” ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு. இதில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. சாதாரண கண் கொண்டு இப்படத்தை பார்க்க வேண்டாம். நெஞ்சில் ஏந்திப் பாருங்கள்
 
நடிகர் சித்தார்த் :
 
ஐம்பது நூறு ஆண்டுகளில் மனித இனம் கண்டறியாத மனிதப் படுகொலை இன அழிப்பு தான் இலங்கையில் நடந்தது. அது மனித நாகரிகம் இதுவரை காணாத இனப்படுகொலையாகும். அதைப் பற்றி பேசுகிற இந்த படத்தை அரசியல் படமென்று யாரும் சிறுமைப் படுத்திவிட வேண்டாம். கசப்பான உண்மைகளை உலகமே கைகட்டி நிற்கும் இந்த சூழலில் எடுத்திருக்கிறார். அனைவரும் பார்க்க வேண்டிய உணர்ச்சிகரமான முக்கியமான நல்ல படம்  “இனம்”

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=2850

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனம் - தேவை நீக்கம்

 

” இனம் ”

Kollywood-news-8736.jpg

இன்று தமிழகம் முழுக்க தமிழர்களின் மனக் கொந்தளிப்பில் திளைத்து நிற்கிற சொல்லாடல் ”இனம்”

இனம் என்கிற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு அதுவும் கடந்த சில நாட்களாக பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது..

இந்த படத்திற்கான சிறப்புக் காட்சி என்கிற பெயரில் அந்த படத்தை வெளியிடும் நிறுவனம் சத்யம் திரையரங்கில் சிலரை அழைத்து காட்டியது..

727471af-846f-4658-8239-5e676d2277611.jp
அதில் படம் பார்த்த தமிழ் உணர்வாளர்கள் படம் ஈழத்திற்கு எதிராகவும் ஈழ மக்களுக்கு எதிராகவும்,களத்தில் நின்று போராடிய புலிகளுக்கு எதிராகவும் இருந்ததாக குற்றம் சாட்டினர்...இதற்கான காரணம் மிக அழுத்தமானது படம் எடுக்கப்பட்டு ஓராண்டான நிலையில் ஜெனிவா தீர்மானம் வரும் வேளையில் படத்தை திரையிட்டு இருப்பதும் சந்தேகத்தின் வலிமையைக் கூட்டுகிறது.தமிழர்களுக்கு எதிராகவே இறுதிக் கட்ட போரின் பொழுது மலையாள அதிகார வர்க்கத்தினர் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டத்தையும்,அதன் காரணமாக இயக்குனர் ஒரு மலையாளி என்பதால் சந்தேகம் இன்னும் வலுப்பதும் இயல்பானதே...

24681-1-3-2014-1-002.jpg
அதே வேளை தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் விக்ரமன் தலைமையில் கூடி இந்த படம் தமிழர்கள் ஆதரவுப் படம் எனக் கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் இனத்தை யார் தடுத்தாலும் அவர்களை அரசு ஒடுக்கி,படத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என முன் மொழிந்தது..பலரை ஆச்சர்யத்தில் தள்ளியது..

14-vikraman4545-600-jpg.jpg

விச்வரூபம்,டேம் 999 போன்ற படங்கள் வெளியாகும் பொழுது ஒரு வித அமைதி காத்த இயக்குனர் சங்கம் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததுடன் “கலைஞர்களின் சிந்தனை உங்கள் சிந்தனையோடு பொருந்தி வர வில்லை என அவர்களின் படைப்பை நிராகரிக்க முடியாது என்றும் ,எல்லொரும் விரும்பும் படத்தை யாராலும் எடுக்க முடியாது என்றும் நாம் தமிழர் கட்சி மேடைகளில் தென்படும் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கருத்து தெரிவித்திருத்தார்..

tamil_directors_union_eye_camp_photos_st

கலகம் படத்தை பார்க்காமல் கருத்து தெரிவிப்பது ஒரு மோசமான படத்தை வெற்றியடைய வைக்கும் கீழ்த்தரமான வணிக நோக்க உத்திகளுக்கு துணை போய் விடக்கூடாது என மெளனம் காத்தோம்...

ஒரு படைப்பாளி என்பவர் இந்த சமூகத்தில் எது ஒடுக்கப்படுகிறதோ,யார் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களின் பின் நின்று,அவர்களின் ஆதரவு நிலையை,சம நோக்குடன் அணுக வேண்டும்..அதுவே ஒரு படைப்பாளியின் தார்மிக செயலாக இருக்க முடியும் என கலகம் கருதுகிறது..

அந்த அடிப்படையில் தான் கலையையும் இலக்கியத்தையும் கலகம் அணுகுகிறது...

அந்த வகையில் இன்று இயக்குனர் சங்கத்திற்கு மட்டும் போடப்பட்ட முன்கான் காட்சியில் கலகம் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது..

அது என்ன வென்றால் 

விடுதலைக்கு ஏங்கித் தவிக்கும் ஒரு குறிப்பிட்ட மக்களின் ,அதற்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை,தவறான சித்தரிப்புகளை உருவாக்கிய காட்சிகளை நீக்கினால் கலகம் இனம் திரைப்படத்திற்கு ஆதரவாக நிற்கும்..இல்லையேல் மற்ற அமைப்புகள் கலந்து கொள்ளும் போராட்டங்களில் கலகமும் கலந்து கொள்ளும்...

ஆதரவற்றவர்களை எடுத்து வளர்க்கும் சுனாமியக்கா,நந்தன் என்கிற மூளைக் குறையுடையவனையும் எடுத்து வளர்க்கிறார்..இலங்கையின் போர்ச் சூழலில் சிக்குண்டு சிதறும் ஆதரவற்றவர்களின் வாழ்க்கைதான் இந்த படத்தின் கதை..

vanni_20090514002.jpg

இயக்குனர் சந்தோச் சிவன் தான் பொதுவான ஆள் என நிருபிக்க முயல்வதே படத்தின் கதையாகவும் நகர்வதாக சொல்லலாம்...ஆனால் அதைத் தாண்டி அவர் கையாண்டிருக்கும் சில காட்சிகள் இங்கிலாந்து,மற்றும் இரோப்பிய நாடுகளின் எண்ணங்களை செதுக்க பயன் படுத்தப் பட்டிருக்கிறார்..அல்லது விரும்பி இருக்கிறார் எனச் சொல்லும் காட்சிகள் படம் நெடுக நிறுவி இருக்கிறார்..அமெரிக்கா போன்றவை இனப்படுகொலை என்பதை மறுத்து போர்க்குற்றம் என பிடி கொடுக்காமல் பேசும் பாவனையை இயக்குனரும் செய்து உறுதிபடுத்திக் கொள்கிறார்..

தமிழ்ப் பெண்களின் பாலியல் வன்முறைகள் குறித்த காட்சிகளில் இராணுவம் தன்னிச்சையாக செய்தது போல பாவிக்கிறார்.. அதை ஊக்கப்படுத்திய இலங்கை அரசைக் குறித்து ஒரு கேள்விக் கூட கேட்கப்பட வில்லை..மாறாக இன்னொரு இராணுவ வீரனே அது தவறு செய்யாதீர்கள் என கெஞ்சுவதாக காட்டுவது..இயக்குனருக்கு இலங்கை அரசின் மீதான பிடிப்பை உறுதி செய்வது போல இருக்கிறது..

இப்படி நிறையச் சொல்லலாம்...

நீக்கம் செய்யப்பட வேண்டிய காட்சிகள் என கலகம் குறிப்பிடுவது..

1) ”பொறக்கும் பொழுது எல்லோருக்கும் ஒரே மொழிதான்..ஆனால் ஆங்கிலம் படிச்சா எங்க வேண்ணாலும் பொழைச்சுக்கலாம்” என ஒரு ஆசிரியர் மாணவர்களிடம்(கருணாச்) சொல்வது

2)நிவாரணக் குழு வெளியேறும் பொழுது(unisef)அவர்களிடம் தமிழ் மக்கள் நீங்களும் போயிட்டா நாங்க எப்படி வாழ்றது என்கிற வசனம்

3)பள்ளியில் பாடம் நடக்கும் பொழுது போராளிகள் கட்டாயப்படுத்தி போர்க்காட்சிகளை திரையிட்டுக் காட்டி மாணவர்கள் உணர்ச்சி வசப்படுவதாக காட்டும் காட்சி

4)சிறுவர்கள் போராளிகளின் துப்பாக்கியை கண்டு ஆவேசம் அடைவதாக காட்டுவது..

5)அடிக்கடி இனக்கலவரம் என்கிற சொல்லாடலை திட்டமிட்டு பயன்படுத்துவது

6)இறுதியில் 1,50,000 மக்களுக்கு பதிலாக 40,000 மக்கள் என போட்டிருப்பதும்,தமிழ் மக்கள் எனப் போடாமல் பொதுமக்கள் என எழுதப்பட்டிருப்பது

7)வயதான செயல் இழந்த ஒரு மனிதர் ஆபாச படங்களைக் கண்டு இன்புறுவது.

8) புத்த பிட்சு மிக நல்லவராக சித்தரிக்கும் காட்சி

9)குழந்தைகள் திருமணத்தை தமிழர்கள் போர்ச்சுழலில் செய்வது போல சித்தரிக்கும் காட்சி

10) ஜீவன் என்பவரைப் பற்றி படம் நெடுக சொல்லி கடையில் அவர் ஒரு குழந்தைப் போராளி என சித்தரித்திருக்கும் காட்சி

இவைகள் நீக்கப்பட வேண்டும் என கலகம் போராடும்..

கலகத்தின் எண்ணத்தைப் போல திரைப்பட உதவி இயக்குனர்களும்,சில இயக்குனர்களும் கூட இனத்தை சரியான பார்வையோடு அணுகினர்...

அவர்களின் முன் முயற்சியால் இந்த கோரிக்கைகள் இயக்குனர் சங்கத்தால் விவாதிக்கப்பட்டு இந்த காட்சிகளை நீக்கம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பிடம் உறுதி பட கூறி இருக்கிறது..அவர்கள் சம்மதித்து இரவுக் காட்சிக்குள் அதை நீக்குவதாக உறுதி அளித்திருப்பதாகவும் தெரிகிறது..பொருத்திருந்து பார்ப்போம்...

மேலும் இந்த படம் இந்தக் காட்சிகளை நீக்கி விட்டால் தமிழர் ஆதரவுப் படமாக மாறும் முழுமையான வாய்ப்பு இருக்கிறது..அதோடு இந்த படம் பொது பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்பு குறைந்த படமாகவே கலகம் பார்க்கிறது.

 

http:www.kalakam1987.blogspot.in/2014/03/blog-post_28.html

 

இனம் - The mob

 

inam.jpg
 
முதலில் நன்றி சொல்வது தான் எப்பொழுதும் நமக்கான பாரம்பரிய தமிழின குணத்தின் கடமை என்பதால் நன்றியை முதலில் உரித்தாக்குகிறேன் சந்தோஷ் சிவனுக்கும் லிங்கு சாமிக்கும். ஒரு இனப்படுகொலை நடந்தது இன்று திட்டமிட்ட இன அழிப்பு நடந்தேறி வருகிறது இந்த சூழ்நிலையில். 2009ல் நடந்த இனப்படுகொலையை இது வரை இந்த அளவு நேர்த்தியாக பொதுமக்களை சென்றடையும் ஊடகம் வழியாக யாரும் சொல்லவில்லை என்பதற்காக. ஆம் ஐ.நா அலுவலகத்தை சிங்கள அரசு ஈழப்பகுதியில் இருந்து வெளியேற சொல்லியது 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்பொழுது வெளியேறிய ஐ.நா ஊழியர்கள் பேசிக் கொண்டதை மிகவும் அருமையாக சித்தரித்து இருக்கிறீர்கள். அதில் பின்னால் நின்று தொலைபேசியில் பேசுபவர் தனது மேலதிகாரிக்கு இங்கு நடப்பது இனப்படுகொலை இதை நாம் தடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அவர் பின்னால் நிற்காமல் முன்னால் நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஏதோ இந்த அளவிற்காவது உங்களுக்கு செய்யனும் தோன்றியதற்காக நன்றிகள்.

இனம் ஒரு வரி விமர்சனமாக சொல்வதென்றால் படத்தின் பெயரிலேயே ஆரம்பித்துவிடுகிறது.. “இனம்- The Mob" இனம் என்றால் ஒரு கூட்டமாம். The Ethnicity என்று குறிப்பிட்டிருக்கலாம் ஆனால் ஒரு கூட்டமாக சித்தரிக்கிறார்கள். அடுத்து இனம் படத்தின் கதை ஈழத்தில் கடைசிகட்ட போர்காலத்தின் ஊடக அங்கு நடந்த கொடூரங்களை காட்டும் ஒரு முயற்சி, ஆனால் யார் செய்த கொடூரங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதில் தான் சிக்கல். ஒவ்வொரு காட்சியும் நகரும் பொழுது தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை காட்டுவது போல் இருந்தாலும் ஒட்டுமொத்த கட்டமைப்பில் உடைத்து எறிந்து இருக்கிறார்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை.

முழுகதையும் சிலவரிகளில் முடித்துவிட்டு அடுத்து நமக்கு எதிரான கட்டமைப்புகள் எவை என்று பார்க்கலாம். ரஜனி கதையின் நாயகி (இந்த பெயர் ரஜனி திரணகாமவை நியாபகப்படுத்தும் ஒரு சொல்லாடல்) சிறு வயதில் பெற்றோரை இழந்தவர் சுனாமி அக்கா என்பவர் நடத்தும் ஒரு காப்பகத்தில் வளர்கிறார் இவருடன் ரவி, முத்து, ஆயிசா, சாவித்திரி, ரூபன் போன்ற பல குழந்தைகளும் வளர்கின்றன, அங்கு ஒரு பாடசாலை அதில் ஸ்டீபன் எனும் வாத்தியார் மற்றும் அவரின் மனைவி வசிக்கிறார்கள். இதில் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இனக்கலவரத்தில் பாதிக்கபப்ட்டவர்கள். கடைசி போர் காலகட்டத்தில் இவர்கள் பயணித்து பல்வேறு துன்பங்களை தாண்டி அங்கிருந்து தப்பி அகதியாக ஒரு முகாமுக்கு வந்து சேர்வதாக முடிகிறது கதை.

ஸ்டிபன் வாத்தியார் பாடம் எடுக்கிறார் இது ஒரு காட்சி, இதில் வாத்தியாராக நடித்திருப்பவர் கருணாஸ், மொழி என்பதைப் பற்றி பாடம் எடுக்கிறார், அதில் ஒரு வரி கூட அவர் தமிழில் பேசவில்லை ஆனால் ஆங்கிலத்தில் சொல்வது என்னவென்றால் உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மொழி தான் அழுகும் சிரிக்கும் இது மட்டும் தான் மொழி, ஆனால் இந்த உலகத்தில் வாழ முக்கியம் ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்று பாடம் எடுக்கிறார், மேலும் உலகத்தில் அதிகமானவர்கள் பயன் படுத்தும் மொழி என்ன என்று கேள்வி கேட்டு ரஜனி அதற்கு மாண்ட்ரீன் என்று பதில் சொல்வதையும் சேர்த்து மொழியின் கீழாக பெருமைப் பட்டுக்கொள்வது என்ன என்ற கேள்வியுடன் நம்மை தொங்க விடுகிறார்கள். இதில் படத்தின் ஆரம்பத்தில் டைட்டிலில் செம்மொழி என்று குறிப்பிட்டுவிட்டு உள்ளே தமிழினம் என்பது மொழியின் கீழாக அமைவதை கேலிக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

அதன்பிறகு அங்கு போராளிகள் வருவதாகவும் அவர்கள் படம் போட்டு காட்ட விரும்புவதாகவும் சொல்லி கரும்பலகையை மறைத்து வெள்ளைத்திரை போட்டு போராட்ட காட்சிகளை மாணவர்களுக்கு காட்டுவதாகவும், அதை பார்த்த மாணவர்கள் சந்தோசப் படுவதாகவும் காட்டுகிறார்கள். மாணவர்களிடையே போர் குறித்த ஒரு மாயை உருவாக்கும் கட்டமைப்பு இந்த காட்சியில் ஆனால் இவர்கள் யாரும் இந்திய தேசிய மாணவர் படையில் 13 வயது பையன் கையில் துப்பாக்கி கொடுத்து சுடப் பயிற்சி கொடுப்பதை தப்பென்று சொல்லி இது வரை ஒரு படமும் எடுக்கவில்லை என்பது நிதர்சனம். 

 
ஒவ்வொரு காட்சியின் பிண்ணனியிலும் தங்களுக்கான அரசியலை செய்தே வந்திருக்கின்றனர், ஒட்டுமொத்த கதையமைப்பில் தமிழர்கள் தரப்பில் சிங்களவன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சிறுவர் போராளி, மக்களுடன் இருந்து கொண்டு கேடயமாக பயன்படுத்தினர் என்று ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் காட்டியவர்கள். இரண்டு சிங்களவர்களை ரொம்ப நல்லவர்களாக காட்டியிருக்கிறார்கள். அதுவும் ஐ.நா அதிகாரிகள் வெளியேறிய பின் காப்பகத்தின் மீது குண்டு விழுந்து சுனாமி அக்காவின் வீடு இடிந்துவிடுகிறது ஒரு குழந்தையும் பழியாகிறாள். அப்பொழுது அனைவரையும் பாதுகாக்க சுனாமி அக்கா ரஜனி, முத்து, ஆயிசா, நந்தன் ஆகியோரை பக்கத்தில் இருக்கும் இன்னொரு வீட்டுக்கு போகச் சொல்கிறார் போகும் வழியில் அவர்கள் ஒரு புத்த பிக்குவை பார்க்கிறார்கள், அவர் ஓடையில் துணியின் மூலமாக தண்ணீர் சேகரிப்பது போலவும் அப்பொழுது மாட்டும் மீனை திரும்பவும் ஓடையில் விடுவது போலவும், ஒரு மாதுளையை இவர்கள் நால்வருக்கும் தருவது போலவும் சித்தரித்து இருக்கிறார்கள். போர் நடக்கும் அந்த பகுதியில் எதற்கு அந்த புத்த பிக்கு வந்தார், எப்படி வந்தார் என்பது எல்லாம் இல்லை. சும்மா போற போக்கில் அவரை திணித்து அதிலும் அவர் போல் நல்லவர் உலகில் வேறு யாருமே இல்லை என்பது போல சித்தரித்துள்ளனர். 
 
அடுத்து இராணுவ வீரர் ஒருவர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது போலவும், கடைசியில் ரஜனியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொண்டு இருக்கும் தங்கள் சக வீரர்களை பார்த்து, இவர்கள் என் நண்பர்கள் ஆனால் போர் அவர்களை மிருகமாக்கிவிட்டது என்கிறார். ஆம் சிங்களவர்கள் எல்லோரும் நல்லவர்கள் பொது பல சேன, மஹா போதி சொசைட்டியில் இருக்கும் புத்த பிக்குகள் என்றுமே யாரையும் அடித்ததும் இல்லை அடிக்க சொன்னதும் இல்லை, ஏன் இராணுவ வீரர்களும் மிக மிக நல்லவர்கள் போர் அவர்களை மிருகமாக்கிவிட்டது என்றும் சொல்லி சிங்கள காடையர்களின் அந்தியந்த தோழர்களாகிவிட்டனர் நம்ம சாமியும் சிவமும். 
 
இதில் ஒரு மூட நம்பிக்கையையும் விதைக்கிறார்கள் அதுவும் எப்படி என்றால் இறந்தவர்கள் கண்ணை மூடாமல் பார்த்துக் கொண்டே இறந்தார்கள் என்றால் திரும்ப வருவார்கள் என்று சுனாமி அக்கா சொன்னதாக சண்டையில் இறந்த போராளியையும் ஒரு இராணுவ வீரனையும் காட்டி ஒரு வசனம் இருக்கும் எதுக்குடா இந்த காட்சி என்று யோசித்திருக்க கூட மாட்டோம். ஆனால் பல காட்சிகள் கடந்து நந்தன் என்ற சிறப்பு குழந்தையின் (Special Children)  தம்பியை காயங்களுடன் மருத்துவமனையில் காட்டுகின்றனர், அவன் கடைசி போர் காலத்தில் லீடருடன் இருந்தேன் அவர் இறந்தபொழுது கண்களை மூடவில்லை என்கிறார். அப்பொழுது நந்தன் கண்களை மூடாமல் இறந்தவர்கள் திரும்ப வருவார்கள் என்கிறார். இதில் கூட ரவியும் இருப்பான் நந்தன் எனது சகோதரன் பெரிய வீரன் என்று சொல்லியிருப்பான் முன்பே அந்த சிறுவனைப் பார்த்து இவனா வீரன் என்று கேட்கும் பொழுதே லீடர் கடைசி போரில் இறந்துவிட்டார் என்பதை சொல்வான். அதாவது புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள் போராளிகளாக இருந்தனர் அதிலும் தலைவரின் அருகில் கடைசி கட்டம் வரை மெய்க்காவல் படையாகக் கூட சிறுவர் போராளிகளை பயன் படுத்தியதாக காட்டியிருக்கிறார்கள். மேலும் தேசியத் தலைவரின் இறந்துவிட்டார் என்பதை ஆவணப்படுத்தும் ஓர் முயற்சி. இத சர்வதேச ஊடகங்களை கூப்பிட்டு அவர்கள் முன்னால் தலைவரின் உடலை காட்டியிருந்தால் அதிகாரப்பூர்வமாக ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இராணுவத்தினர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே உள்ளன.

கடைசியாக மருத்துவமனையில் தம்பியை பார்த்துவிட்டு ரஜனியை தம்பியிடம் காட்டுவதற்காக ரஜனியை கூட்டி போக ஓடி வரும்பொழுது தான் ஒரு சிங்களவன் ரஜனியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திகொண்டிருப்பான் அப்பொழுது சிறப்பு குழந்தையான நந்தன் தனக்கான உலகத்தில் மட்டுமே வாழும் அந்த குழந்தை கத்தியை எடுத்து அந்த சிங்களவனை கொலை செய்வான். ஏதும் அறியாத தனக்கென ஒரு உலகை அமைத்து அதில் வாழும் ஒரு சிறப்பு குழந்தையின் உணர்ச்சியை நன்றாக படம் பிடித்து காட்டியவர்கள் இளைஞர்கள் துப்பாக்கி தூக்கி சண்டை போடுவது சண்டைபிடிக்கும் மோகத்தினால் மட்டுமே எந்த உணர்வின் அடிப்படையிலும் இல்லை என்பது போல் சித்தரித்திருப்பது மிகப்பெரிய முரண்.

படம் ஆங்கிலத்தில் சிலோன் என்ற பெயரிலும் தயராகியுள்ளது, சர்வதேச திரைப்பட விழாக்களை குறிவைத்தும், சர்வதேச அரசியலில் இலங்கையில் நடந்தது ஒரு இனக்கலவரம் என்பதைவிட ஒரு தீவிரவாத இயக்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான ஒரு போர் என்பதாக சித்தரிக்கும் வகையில் உள்ளது. இதை தமிழில் நாம் தடை செய்தாலும் சர்வதேச அரங்கில் இந்த படம் தனக்குண்டான அரசியலை தாராளமாக செய்யும். அதை நம்மால் தடுக்க இயலுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டால் ஈழத்தில் நடந்த கொடூரங்களை காட்சிப் படுத்தும் ஒரு ஆவணமாகவும் மாற்றலாம். 

ஆகமொத்தம் இனம் - ஒரு சிங்கள ரவுடி கூட்டத்தினூடாக தமிழர் கதை பேசுவது போல் நடிக்கிறது.

 

 

‘இனம்’ படத்தை ஏன் தடை செய்ய வேண்டும்? : வெளிச்சத்துக்கு வரும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

ஈழத்தில் 2009- ஆம் ஆண்டு விடுதலைப் போர் ஒரு முடிவை எட்டினாலும் ஈழத்தமிழர்களின் அரசியல் ரீதியான போராட்டம் உலகெங்கும் விரிந்து தமிழினத்துக்கு வலு சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

சேனல் 4 உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் சிங்கள அரசுக்கு எதிரான அடுக்கடுக்கான போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவற்றை எதிர்கொள்ள முடியாத சிங்களப் பேரினவாத கொடுங்கோல் அரசு தம்மால் இயன்ற அளவு கைக்கூலிகளுக்கு பணத்தைக் கொடுத்து தமிழினத்துக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டேயிருக்கிறது. அரசியலையும் தாண்டி சினிமா, இலக்கியம் உள்ளிட்டவைகள் மூலமாகவும் அது தமிழினத்துக்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.

அவற்றில் ஒன்று தான் ‘இனம்’ திரைப்படம். சந்தோஷ் சிவன் என்கிற மலையாளியும் அவருடைய சகாக்களும் தயாரித்துள்ள இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இறுதிப்போரில் இறந்த (40,000 அரசின் கணிப்புப்படி) தமிழர்களுக்குச் சமர்ப்பணம் என்று சொல்லி வெளியிடப்பட்டிருக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளையும், ஈழப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு படத்திலேயே பல ஆதாரங்கள் உள்ளன.

இந்தப்படம் தமிழ்மக்கள் அனுபவித்த கொடுமைகளை உலகறியச் செய்யும் விதமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிற தென்றும் அதன் காரணமாகவே இந்தப் படத்தைத் தாம் வாங்கி ரிலீஸ் செய்வதாகவும் இயக்குநர் லிங்குசாமி பெருமையோடு சொல்லியிருக்கிறார். ஆனால் படத்தைப் பார்த்தால் இப்படி ஒரு அரைவேக்காட்டுத்தனமான படம் எப்படி லிங்குசாமிக்கு பிடித்துப் போனது என்ற சந்தேகம் எழும். அந்த சந்தேகங்களைத்தான் இங்கே கேள்விகளாக்கியிருக்கிறோம். இந்த உண்மைகள் எல்லாவற்றைக்குமே ஒரு மனசாட்சியுள்ள தமிழராக லிங்குசாமி உடன்படுவார்.

ஆனால் ‘நான் சந்தோஷ்சிவனின் தீவிரமான விசிறி’ என்று சொல்லிவிட்ட பிறகு லிங்குசாமி இந்த உண்மைகளை ஏற்க மாட்டார் என்பதே உண்மை.

போரில் இறந்து போன தமிழர்களுக்குச் சமர்ப்பணம் என்று டைட்டில் கார்டில் போடப்படும் இந்தப்படத்தின் அடையாளமான ஒட்டுமொத்த இலங்கையின் வரைபடத்தையும் தலைகீழாகப் போட்டிருப்பது ஏன்? தமிழர்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படம் என்றால் அதில் ஈழவரைபடம் தான் வந்திருக்க வேண்டும்? அப்படியானால் அமைதியாக இருந்த இலங்கையை விடுதலைப்புலிகள் இப்படி தலைகீழாக மாற்றி விட்டார்கள் என்று அர்த்தம் வருகிறதல்லவா..?

படத்தின் ஒரு காட்சியில் நடிகர் கருணாஸ் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கு வருகிற விடுதலைப்புலிகள் கரும்பலகையில் வெள்ளை வேட்டியை கட்டி போர்க்காட்சிகளைத் திரையிட்டு காண்பிக்கிறார்கள். கருணாஸ் அச்சமும் அருவெறுப்புமாய் அவர்களைப் பார்க்கிறார். இந்தக்காட்சி சொல்லும் செய்தி என்ன?

குடும்பமே இல்லாதவர்களெல்லாம் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்ந்ததாகக் கதையைத் தொடங்கும் இளம்பெண், என் அம்மாவைப் பலர் சேர்ந்து கற்பழித்ததன் விளைவாக நான் பிறந்தேன். நான் பிறந்தது தெரியும், ஆனால் பிறப்பின் மூலம் தெரியாது என்று தொடங்கும்போதே எங்கள் குழந்தைகள் இப்படித்தான் உருவானர்கள் என்று சொல்லத் துணிந்த சந்தோஷ் சிவனின் வக்கிர சிந்தனை கண்டு தமிழர்களாகிய எங்களுக்கு மனம் வலிக்கிறது. உங்களுக்கு?

ஒரு இடத்தில், இயக்கத்திலிருக்கும் அவன் நன்றாகச் சோறு சாப்பிட்டிருக்க மாட்டான் அவனுக்கு வாய்க்கு ருசியாக சோறு ஆக்கிப் போடவேண்டும் என்று சொல்கிறார் சுனாமி அக்கா என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் சரிதா. இன்னொரு இடத்தில் ஒரு விடுதலைப்புலியே நல்லசோறு சாப்பிட்டு நாளாயிற்று என்று சொல்கிறார். மற்றொரு இடத்தில் இரவில் ஒரு வீட்டுக்குள் நுழைகிற போராளி அங்கு வைக்கப்பட்டிருக்கும் பாலைக்குடித்து விட்டு வெறிபிடித்த மாதிரி மாதுளம்பழத்தைக் கடிக்கிறார். இவற்றின் மூலம் இயக்குநர் சந்தோஷ்சிவன் சொல்ல வருவதென்ன?

லீடர் செத்துட்டாரு. அவர் சாகும்போது நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன் என்று உடலெங்கும் கட்டுகளோடு மருத்துவமனையில் படுத்திருக்கும் மீசை முளைக்காத சிறுவன் சொல்கிறான். இந்தக்காட்சி விளக்கும் செய்திகள் எவை?

இயக்கத்தில் சேர்ந்த ஒருவரைப் பார்த்து, உன்னுடைய படிப்புக்கு நீ எங்கியோ போயிருக்க வேண்டியவன் என்று சரிதா வருத்தப்படுவது எதனால்? தமிழர் பகுதிகளில் ஒரு புத்தபிட்சு எதற்கு வந்தார்? எப்படி வந்தார்? என்பனவற்றைத் தாண்டி அவர் தன்னுடைய தண்ணீர் சேமிக்கும் பாத்திரத்துக்குள் தெரியாமல் வந்துவிட்ட மீன்குஞ்சுகளைத் திரும்பவும் கால்வாயில் விடுவதும் தன் பையிலிருந்து ஒரு பழத்தை எடுத்துக் கொடுப்பதும் எதை சுட்டிக்காட்டுகிறது?

சுனாமி அக்கா வீட்டில் படுத்த படுக்கையில் இருக்கும் வயதானவர் ஒரு சிறுவனிடம் அருகில் இருக்கும் அவருடைய பழைய போட்டோ ஆல்பத்தை திறந்து காட்டச் சொல்கிறார். அதில் அவருடைய புகைப்படங்களுடன் பல பெண்களின் கவர்ச்சிப் படங்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த புகைப்படங்களை எல்லாம் அவர் வெறியோடு பார்த்து ரசிக்கிறாரே? இந்த வக்கிரமான காட்சி பற்றி சந்தோஷ் சிவனின் அபிப்ராயம் என்னவோ? அல்லது இப்படிப்பட்ட ஒரு கேவலமான காட்சியை வைக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன?

உயிரிழந்த சிங்கள ராணுவத்தினரின் கையில் ஒரு குழந்தையின் புகைப்படம் இருக்கிறது, அது மக்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என்பதற்காக அதை எடுத்துப் பார்த்து விட்டுத் திரும்பவும் அங்கேயே வைக்கிற மாதிரியான காட்சியில் என்ன சொல்ல வருகிறார்கள்? குண்டுவெடிப்பின் போது உடைந்து சிதறிடும் பொம்மைகளில் விநாயகர் பொம்மை, இயேசுநாதர் பொம்மையும் சிதறிக் கிடப்பது நடந்த வரலாறு. கூடவே புத்தர் சிலையும் உடைந்து கிடக்கிறதே? அது எதற்காக?

போர்க்காட்சியன்றில் மக்களுக்கு மத்தியிலிருந்து விடுதலைப்புலிகள் சுடுவதாகவும் மக்களை விலகிப்போகச் சொல்லிவிட்டு சிங்கள இராணுவம் சுடுவதாகவும் அமைக்கப்பட்டிருப்பதில் எவ்வித உள்ளர்த்தமும் இல்லையா? இந்தவெற்றி பற்றிச் சொல்லுங்க கேப்டன், என்று ஒருவன் கேட்க அதற்கு, மிகவும் வருத்ததுடன் இவர்களெல்லாம் நம் நண்பர்கள் அவர்கள் செய்த தவறினால் இறந்திருக்கிறார்கள், இதை எப்படிக் கொண்டாட முடியும்? என்று இராணுவதளபதி கேட்பது போன்ற காட்சி சொல்கிற அர்த்தம் என்ன?

தமிழகத்துக்குப் போய் விடலாம் என்று தப்பி வருகிற வேளையில், ரஜினி, ஆயிஷா (ஒருவர் தமிழ் ,இன்னொருவர் முஸ்லிம்) ஆகிய இரு பெண்களையும் சிங்கள இரணுவத்தினர் பாலியல் வன்குணர்வுக்குட்படுத்தி அதை மொபைலில் படம் பிடிக்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்தப்பெண் நீர்நிலையன்றில் கறையைக் கழுவும் காட்சியும் இடம் பெறுகிறது? இந்தக்காட்சி சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்கள் நிகழ்த்தும் கொடுமைகளை வெளிக்காட்டவா? வெற்றி எக்காளமா?

குடும்பமே இல்லாதவர்களாகச் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்ந்தோம் என்று கதையைத் தொடங்கும் பெண் சொல்லும் கதையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பாதிப்பேர், இறந்து விட்டார்கள், மீதிப்பேர் தமிழகத்துக்குத் தப்பி வந்து விட்டார்கள். அப்படியிருக்கும் போது, பாலியல் வன்புணர்வின் காரணமாக கர்ப்பம் தரித்திருக்கும் அவர், என் குழந்தையையும் என்னைப் போல அனாதையாக விட மாட்டேன் என் குடும்பத்தைத் தேடி நான் போவேன் என்று சொல்லி படத்தை முடிப்பதன் மூலம், உன்னைக் கற்பழித்த சிங்களவனைத் தேடிக்கண்டு பிடித்துக் குடும்பம் நடத்து, அதுதான் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு என்று சொல்ல வருகிறாரா?

ரெண்டு நெடுக்கு நாலு குறுக்கு ஊர்வலம், நீயுந்தான் போகணும் நானுந்தான் போகணும் சந்தோஷமா வாழணும் என்று படம் முடிகிற நேரத்தில் ஒலிக்கும் பாடல் வரிகள் சொல்வதென்ன?
இப்படி ‘இனம்’ படம் தடை செய்யப்பட வேண்டியதற்கான காரணங்களை அடுக்கிக் கோண்டே போகலாம்.

இந்த நிதர்சனமான உண்மைகள் தெரிந்திருந்தும் கூட லிங்குசாமி போன்ற திறமையான தமிழ்சினிமாக் கலைஞர்கள் அதை திட்டமிட்டு மறைப்பது யாருடைய நலனுக்காக..?

 

1972418_746771912019981_1073106243_n.jpg

 

https://www.facebook.com/fbtamil

 

ஒரு படத்தை பார்க்காமல் விமர்சனம் எழுத முடியாது ,

ஆனால் தன்னால் முடியாததை இன்னொருவன் செய்தால் அதை தட்டி கொட்ட ஆயிரம் பேர்கள் எப்பவும் தயார்.

அதுவும் தேசியத்தை தங்கள் தோள்களில்  தூக்குபவர்கள் பற்றி கேட்க தேவையில்லை . 

இனம் தினமலர் விமர்சனம்

 

'இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கைகூலிகளுக்கும், காசுக்கும், நம்மூர் படைப்பாளிகள் சிலரும் விலை போகக்கூடும்' என்று சில வருடங்களாக வந்து கொண்டிருக்கும் தகவல்கள் உண்மைதானோ.?! என புருவம் உயர்த்தும் விதமாக, இலங்கையில் சிங்களர்களால் நடந்த இனப்படுகொலைகளையும், பாலியல் வல்லுறவுகளையும் நியாயப்படுத்தும் விதமாகவும், தமிழினப்போரினை கொச்சைபடுத்தும் விதமாகவும், சிங்களர்களை நல்லவர்களாகவும், தமிழர்களை சண்டைக்காரர்களாகவும், புத்தபிட்சுக்களை உத்தமர்களாகவும் சித்தரித்து வந்திருக்கும் படம் தான் சந்தோஷ் சிவனின், 'இனம்'! அவர் இயக்கத்தில் இதை இனங் கண்டு கொள்வதே சற்று கடினம் என்பது தான் இப்படத்தின் பெரும்பலம்!

 
சரிதாவும், கருணாஸூம் அடாத போரிலும் இடைவிடாது நடத்தும் ஒரு திண்ணை பள்ளிக்கூடத்தில் பயின்று அவர்களது கருணை காப்பகத்திலேயே தங்கி வாழும் சிறுவர் சிறுமியரை, ஒருகட்டத்தில் போராளிகள் போரில் ஈடுபட அழைத்து போவதாகவும், அவர்களை காபந்து செய்ய அவர்களுக்கு சரிதா, குழந்தை திருமணம் செய்து வைப்பதாகவும், அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் பதுங்கி இருக்கும் போராளிகளை அழிக்க, அப்பகுதியிலும் ஒருநாள் இராணுவம் குண்டுமழை பொழிவதாகவும், போரில் இருந்தும், போராளிகளிடமிருந்து குழந்தைகளை காக்க அவர்களுக்குள் மாலைமாற்றி ஊரை விட்டு அனுப்பி வைக்கும் சரிதா, போரில் அடிபட்டு உயிரை விடுவதாகவும், அங்கிருந்தும் கிளம்பும் சிறுவர், சிறுமியர் இலங்கை இராணுவத்தால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கற்பழிக்கப்படுவதாகவும், அதில் ஒருத்தி உயிரை விடுவதாகவும், ஒருத்தி ஊருக்கு ஒதுக்குபுறமான குட்டையில், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மொத்த உடம்மையும் குழுவிக் கொண்டு ஊரை விட்டு கிளம்பும் கருணாஸ் கோஷ்டியுடன், இராமேஸ்வரத்திற்கு வந்து மொத்த கதையையும் கண்ணீரும், கம்பளையுமாக சொல்ல ஆரம்பித்து முடிப்பது தான் 'இனம்' படத்தின், தமிழனை சினம் கொள்ள வைக்கும் கதைக்களம்!
 
அதில் கதாநாயகன் ஒரு ரெண்டுங்கெட்டான்... சோடாபுட்டி கண்ணாடி, ஜொள்ளுவாய், தொண தொண பேச்சு... என இந்த பாத்திரம் மூலம் ஈழத்தமிழர்கள் அத்தனை பேரையும் திட்டமிட்டு பரிகாசித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ்சிவன் என்பது இன்னும் வேதனை!
 
போருக்கு சிறுவர்களை போராளிகள் அழைத்து செல்வது, அப்படி போய் அடுத்தமுறை திரும்பும் சற்றே வளர்ந்த இளைஞனிடம் சரிதா, 'உன் படிப்புக்கு நீ எங்கேயோ போக வேண்டியவன், இதெல்லாம் தேவையா...?!' என கேட்பது, அத்தியாவசிய பொருட்களுக்கு தனியாக ரேஷன் கடை, ஊர், ஒழுங்கு, காவல், கட்டுப்பாடு... என உலகில் எந்த திசையிலும் போராளிகள் வாழாத விதத்தில் சுயகட்டுப்பாட்டுடன் போராளிகள் வாழ்ந்த ஈழத்தில், தமிழ் சிறுவர்கள் புத்தபிட்சுவிடம் ஒரு மாதுளம் பழத்திற்காக கையேந்தும் காட்சி, சிங்கள ராணுவத்தினர் ஐந்தாறு பேர் கற்பழித்த பின் அலட்டிக்கொள்ளாமல் அந்த உடம்பை குட்டையில் கழுவி திரும்பும் படியாக கதாநாயகி சிறுமியின் பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம், சிங்கள வீரர்களுக்கும் குடும்பம் குழந்தை குட்டி உண்டென்று சொல்லும் சித்தரிப்பு., நம் வீரர்கள் நல்லவர்கள்தான், போரினால் இப்படி ஆகி விட்டார்கள் என ஓர் அதிகாரி கொக்கரிப்பது., உட்சகட்டமாக ஈழ இறுதிப்போரில் ஒன்றரை லட்சம், இரண்டரை லட்சம் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதாக தமிழர்கள் தரப்பில் சொல்லப்பட்டு வரும் வேளையில், வெறும் நாற்பதாயிரம் தமிழர்கள்தான் போரில் பலியானதாக ராஜபக்ஷேவின் கருத்தையே பிரதிபலித்திருப்பது உள்ளிட்ட விபரீதங்களை வைத்து பார்க்கும் போது சந்தோஷ்சிவன் அண்ட் கோவினர், ராஜபக்ஷே கைக்கூலிகளிடம் விலை போயிருப்பது புரிகிறது. இப்படத்தை வாங்கி வெளியிட்டு லிங்குசாமியியும் துணைபோயிருப்பதின் ரகசியம் தான் புரியாத புதில்!
 
ஆகமொத்தத்தில், 'இனம்' (இவர்களுக்கு 'பணம்') - நோகுது மனம்!
 

சிங்கள அரசின் கைக்கூலி சந்தோஷ் சிவன் - வைகோ கடும் தாக்கு!

இனம் படம் பற்றி கடுமையான எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டுள்ள வைகோ, படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன் சிங்கள அரசின் கைக்கூலி என்று கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார்.
 
இது குறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை வருமாறு:
 
‘இனம்’ எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் இயக்கி உள்ளார். ‘பயங்கரவாதி’ என்ற பெயரில் அவர் முன்பு வெளியிட்ட திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, கேவலமான முறையில் சித்தரித்தது.
 
இப்பொழுது அவர் இயக்கிய ‘இனம்’ எனும் திரைப்படத்தைப் பார்த்து விட்டு இயக்குநர் புகழேந்தி தங்கராசு என்னிடம் அது குறித்து விவரித்தபோது, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன்.
ஈழ விடுதலைப்போரையும், அங்கு ஈழத்தமிழர்கள் பட்ட அவலங்களையும் ஒரு பக்கத்தில் காட்டிக்கொண்டே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, சிங்களவனின் ஆலகால விஷத்தை படம் முழுக்க பரவ விட்டுள்ளார்.

சிறுவர்களும் இப்படம் பார்க்கலாம் என்ற ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தில், சின்னஞ் சிறுவர்களும், சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும், தங்க வைக்கப்படும் இடங்களில் அவர்கள் அச்சிறு வயதிலேயே பாலியல் இச்சைக்கு ஆட்பட்டு, சேட்டைகள் செய்வதாகவும் எடுக்கப்பட்டுள்ள விதம் காம இச்சையைத் தூண்டும் வகையில் கீழ்த்தரமாக அமைந்துள்ளன.

 
பாடசாலை வகுப்பு நடக்கும்போது, கரும்பலகையில் உள்ள பாடத்திட்டத்தை அழித்துவிட்டு, விடுதலைப் புலிகளின் காணொளி திரைப்படம் காட்டப்பட்டதாக ஒரு அபாண்டமான பொய்யை காட்சியாக்குகிறார்.
 
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது, ஒரு இளந்தமிழ் பெண் சிங்களவர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக ஒரு காட்சியை அமைத்துவிட்டு, அதன் பிறகு கால்களின் மூட்டுகளுக்கு மேல் அந்த அபலைப் பெண்ணின் அங்கங்களை பெருமளவுக்கு காண்பித்துவிட்டு, அப்பெண் நீரால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதாக அமைத்துள்ள காட்சி வக்கிர புத்தி படைத்தவர்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்டும் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
இனியொரு காட்சியில், ஓடையில் வரும் நீரை, குடிப்பதற்காக குவளையில் புத்த பிட்சு நிரப்புவதாகவும், குடுவையின் வாயில் துணியை வைத்துப் பிடிப்பதாகவும், குடுவையின் வாய்ப் புறத்துத் துணியில் சிக்கும் சிறிய மீன்களை மீண்டும் ஓடை நீரிலேயே உயிருடன் நீந்த விட்டுவிடுவதாகவும் காட்சி சித்தரிக்கிறது.
 
இதன் நோக்கம் என்ன? புத்த பிட்சுகள் மனிதாபிமானிகள் என்றும், தமிழர்கள் புத்தர் சிலையையே உடைப்பவர்கள் என்றும் தமிழ் இனத்தின் மீது களங்கம் சுமத்துவதுதான்.
 
இத்திரைப்படத்தில் கதைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு காட்சியை அமைத்து, நந்திக் கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து கிடந்ததாக படம் தெரிவிக்கிறது.
 
மொத்தத்தில் சிங்களக் கொலைகார அரசின் மறைமுகப் பின்னணியில், அந்த அரசின் கைக்கூலியாக கேரளத்து சந்தோஷ்சிவன் படத்தை இயக்கி உள்ளார்.
 
மலையாளிகளைக் கொச்சைப்படுத்தி, இதுபோன்ற திரைப்படத்தைத் தயாரித்து கேரளத்தில் வெளியிட யாராவது முனைவார்களா?
 
தமிழர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? சொரணையற்ற ஜென்மங்களா?
 
இளம் தமிழர்களே, மாணவர்களே சிந்தியுங்கள். இந்தத் திரைப்படம் தமிழகத்துத் திரையரங்கங்களில் ஓடுவது தமிழர்களின் முகத்தில் காரி உமிழப்படும் அவமானம் என்பதை உணர வேண்டுகிறேன்.
 
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்க் குலத்தை இழிவுபடுத்த முனையும் ‘இனம்’ எனும் திரைப்படத்தை திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
 
திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு ‘இனம்’ திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்து வைகோ கடிதம் அனுப்பி உள்ளார்.

ஒவ்வாத காட்சிகள் இனம் படத்திலிருந்து நீக்கப்பட்டன???

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோஷ் சிவனின் இனம் சொல்வது என்ன?

கண்ணன்

5b1776e4-29ae-4745-976d-775734494f3a1.jp

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஐந்தாண்டுகள் நிறைவடையப் போகின்றன. இந்தப் போரின்போதும் போர் முடிந்து இத்துணை ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னும் அங்கு வாழும் தமிழர்களுக்கு நிகழ்ந்த அநீதி குறித்தும் இப்போதும் தமிழர்கள் வாழ்வின் மறுசீரமைப்பு என்பது கண் துடைப்பாகவே நடந்துகொண்டிருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை பல்வேறு படைப்பாளிகள் தமிழுணர்வாளர்களாகவும் ஈழ ஆதரவாளர்களாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஈழப்பிரச்சினை குறித்து தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தோ படம் எடுத்துவிடுவதில்லை. ஆங்காங்கே நடக்கும் ஒரு சில முயற்சிகளும் வெகுஜன மக்களைச் சென்றடைவதில்லை.

இந்நிலையில் இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் மாறுபட்ட படங்களைக் கொடுக்கும் இயக்குநராகவும் அறியப்படும் சந்தோஷ் சிவன், இலங்கைப் போரின் பாதிப்புகள் குறித்துப் பேசும் படம் என்ற அறிவிப்புடன், "இனம்" என்ற படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராகவும் அறியப்படும் லிங்குசாமி தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை உலகமெங்கும் வெளியிட்டிருக்கிறார்.

இதே படம் "சிலோன்" என்கிற பெயரில் ஆங்கிலத்தில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுவிட்டது. 'இனம்' இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த அல்லது பார்த்தவர்களிடமிருந்து அதன் உள்ளடக்கத்தை அறிந்துகொண்ட பெரியார் திராவிடர் கழகம், படம் தமிழர்களையும் தமிழீழத்துக்காக போரிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினரையும் இழிவுபடுத்தி சிங்கள ராணுவத்தை மேன்மைபடுத்துவதாக அமைந்திருப்பதாகக் குற்றம்சாட்டி படத்துக்குத் தடை கோரினர்.

ஆனால், படத்தைப் பார்த்துவிட்ட தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் 'இனம்' படம் இலங்கைப் போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட துபங்களை மிகச் சரியாக விவரிப்பதாக அறிக்கை வெளியிட்டனர். ஈழ ஆதரவாளராக அறியப்படும் இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தான் எடுத்த 'குற்றப்பத்திரிகை' படத்தைவிட பத்து மடங்கு வலிமையாக ஈழ மக்களின் துயர் பற்றி இந்தப் படம் பேசுகிறது என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், படத்தை எதிர்த்த பெரியார் திராவிடர் கழக அமைப்பினர், மார்ச்சு 28 அன்று படம் வெளியானபோது சில அரங்க்குகளில் திரையிடலை நிறுத்தச் சொல்லிப் போரிட்டிருக்கிறார்கள். இதையடுத்து படத்தில் ஆட்சேபத்திற்குரிய நான்கு காட்சிகளும் ஒரு வசனமும் விநியோகஸ்தரான லிங்குசாமி மூலம் நீக்கப்பட்டுள்ளன. இயக்குநர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரின் பரிந்துரையின் பேரில் இந்தக் காட்சிகளும் வசனமும் நீக்கப்பட்டதாக லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நீக்கப்பட்ட காட்சிகள் அல்லது வசனங்களை வைத்தே இந்தப் படத்தை எடுத்தவரின் நோக்கம் தெளிவாகிறது.

தமிழ்ச் சிறுவர்களைக் காணும் சிங்கள புத்தபிக்கு ஒருவர் அவர்களுக்கு மாதுளம்பழம் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவதுபோல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. போராளிகள் குழுவினர் (விடுதலை புலிகள் என்ற பெயர் சொல்லப்படாவிட்டாலும் அவர்களைத்தான் சுட்டுகிறது) கல்வி பயிலும் மாணவர்களை போர் காட்சிகளைப் போட்டுக் காண்பித்து அவர்களுக்கு வெறியேற்றி போரில் ஈடுபடத் தூண்டுவதாக ஒரு காட்சி இருக்கிறது.

5b1776e4-29ae-4745-976d-775734494f3a4.jp

இறந்துகிடக்கும் சிங்கள ராணுவ வீரரின் கையில் ஒரு குழந்தையின் புகைப்படம் இருப்பதுபோன்ற காட்சி வருகிறது.

'தலைவர் இறந்துவிட்டார்' என்ற வசனம் (தலைவர் என்பது விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை குறிக்கிறது) இடம்பெற்றிருக்கிறது..

படத்தின் முடிவில் இலங்க்கைப் போரில் 40,000 பொதுமக்கள் இறந்துவிட்டதாக ஒரு தகவல் காண்பிக்கப்படுகிறது.

இவைதான் படத்திலிருந்து நீக்கப்பட்டவை. இன்னும் சில காட்சிகளுக்கு தமிழீழ ஆதரவு அமைப்புகளிடமிருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவையும் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. படக்குழுவினருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் இயக்குநர் செல்வமணி பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன. மேலும் சில காட்சிகளும் நீக்கப்பட்டுவிடலாம். ஆனால் அதோடு பிரச்சினை முடிந்துவிட்டதா?

சிங்கள புத்தபிக்கு தமிழர்களிடம் அன்பு செலுத்துவதுபோல் காண்பிப்பது சிங்களவர்களை நியாயப்படுத்தும் செயல் இல்லையா? சில புத்த பிக்குகள் அப்படி இருக்கலாம். ஆனால் அதை மட்டும் காண்பித்தால் அங்கிருக்கும் புத்த பிக்குகள் அனைவரும் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்று பொருள்படாதா? போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக படமெடுத்ததாகச் சொல்லிக்கொள்பவர் எப்படி இப்படி ஒரு காட்சியை வைக்க முடிந்தது?

இதே போல்தான் போராளிகள்(புலிகள்) மாணவர்களை போருக்கு இழுப்பதும். சில நேர்வுகளில் இது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் இதை மட்டுமே பதிவு செய்வது போராளிகளின் தேவையையே இழிவுபடுத்துவதாகாதா? புலிகளும் வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம். அதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இலங்கை அரசும் தமிழர்களை சரியாக நடத்தியிருந்தால் போராட்டக் குழுவுக்கான தேவையே இருந்திருக்காதே. போராளிகளைக் குறை சொல்பவர் இதையும் உறுதியாகவும் உரக்கவும் சொல்லியிருந்தால் இப்படி ஒரு காட்சி தகவல் ரீதியாக சரியோ தவறோ, ஆனால் அதன் பின்னணியில் உள்ள உணர்வை நியாயப்படுத்திக் கொள்ளலாம்.

40,000 மக்கள் இறந்ததாக காண்பிக்கப்படும் விடயத்தில், உண்மையில் லட்சக் கணக்கான தமிழர்கள் இறந்திருக்கும்போது எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்பதற்காகவே எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இப்போது அந்தத் தகவல் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் 40,000 தமிழர்கள் இறந்தார்கள் என்றுகூடச் சொல்லாமல் பொதுமக்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய காரணம் என்ன என்ற கேள்வியை எதிப்பாளர்கள்கூட எழுப்பவில்லை.

இவை தவிர ஒரு காட்சியில். சிங்கள ராணுவத்தினரிடம் அப்பாவித் தமிழர்கள் மாட்டிக்கொள்ளும்போது ஆயுதம் வைத்திருந்ததால் மட்டுமே அவர்களை ராணுவத்தினர் தாக்குவதாகக் காண்பிக்கப்படுகிறது (இந்தக் காட்சிக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே நீக்கப்படலாம்). உலக மனித உரிமை அமைப்புகள் இலங்கைப் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாகச் சொல்வது சந்தோஷ் சிவன் காதில் விழவில்லை போலிருக்கிறது. மேலும் போராளி குழுவினர்தான் முதலில் ஆயுதத் தாக்குதலைத் தொடங்குவதாகவும் இதே காட்சியில் காண்பிக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்ன என்பதை உலகறியும்.

இவற்றுக்கெல்லாம் அப்பால் தமிழ், தமிழர், ஆகியவை குறித்து சரியாகத் தெரிந்துகொள்ளும் சிரத்தை தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து படமெடுத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் இயக்குநரிடம் இருந்திருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்மொழி தொன்மையான மொழி என்று படத்தின் தொடக்கத்தில் போடும்போது, பாரதியார் படத்தையும் பெரியார் படத்தையும் போடுகிறார்கள். 'தொன்மை'க்கு வள்ளுவர் படம்கூடவா கிடைக்கவில்லை? இந்த அளவில்தான் இருக்கிறது சந்தோஷ் சிவனின் தமிழ்மொழி குறித்த புரிதல்.

ஈழத் தமிழ் வழக்கு குறித்து ஒரு மூன்றாம் தர இயக்குநர் எடுத்துக்கொள்ளும் சிரத்தையைக்கூட உலக திரைப்பட விழாக்களுக்கு படம் எடுக்கும் சந்தோஷ் சிவன் எடுத்துக்கொள்ளவில்லை.

படத்தில் இலங்கை, சிங்களம், ஆகிய வார்த்தைகளோ, சிங்கள மொழி வசனங்களோ எங்குமே இடம்பெறவில்லை. தமிழ்ப் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்யும் சிங்கள(?) ராணுவத்தினர்கூட ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்கிறார்கள். பிரச்சினையைப் பேசியதற்கான நற்பெயரும் கிடைக்க வேண்டும். ஆனால் அதனால் வரும் பிரச்சினையைத் தவிர்த்துவிட வேண்டும். இந்த அதீதமான சாக்கிரதை உணர்வுதான் படத்தைக் கொடுத்தவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

படத்தில் போர்ச் சூழலில் பதின்பருவ சிறுவர்கள் காதல் வயப்படுகிறார்கள். அதாவது பரவாயில்லை. காதலுக்கு கண்ணில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் சிறுவர்களை வளர்க்கும் சுனாமி அக்கா பாத்திரம் (சரிதா) பதின்ம வயதினருக்கு திருமணம் செய்துவைக்கிறார். அதையும் ஒரு ஜோடி விருப்பத்துடன் ஏற்கிறது. இதற்கான காரணம்கூட சரியாக விளக்கப்படவில்லை. எனவே திரைக்கதை அடிப்படையில்கூட இந்தப் படத்தில் பல்வேறு ஓட்டைகள் இருக்கின்றன,

ஆனால், இந்தப் படத்தை திரைப்பட ஊடகங்கள் அனைத்தும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன. வெளிப்படையான குறைகளைசக் கூட ஒரு சிலர்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இயக்குநர் சங்கமும் திரைப்பட பிரமுகர்களும் இந்தப் படத்தை வெளிப்படையான குறைகளைக் கூட சுட்டிக்காட்டாமல் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில் தமிழர் மீதான அக்கறையைவிட திரையுலகம் சார்ந்த உறவுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இத்தனை குறைகள் இருந்தாலும் படம் எடுத்திருப்பதற்கான நோக்கத்தில் சந்தேகங்கள் இருந்தாலும், இந்தப் படம் இலங்கை தமிழர் பட்ட துன்பங்களை சில காட்சிகளிலேனும் வெளிப்படுத்துகிறது. கடைசி 40 நிமிடங்களில் பெண்கள் பாலிய வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும் மருத்துவ முகாம்களின் அவல நிலையும் அங்கு சிகிச்சை பெறும் தமிழர்களின் பரிதாபகரமான நிலையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைப் போர் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்க தீர்மானம் நீர்த்துப் போயிருந்தாலும், அது இலங்கையை அடிபணியவைப்பதற்கான அமெரிக்காவின் சதியாக இருக்கலாம் என்றாலும், அந்த தீர்மானத்தை இலங்கை தமிழர்கள் மீதும் மனித உரிமை மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்க வேண்டும் என்பதுபோல், 'இனம்' திரைப்படத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அதை மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காகவேனும் பாராட்டலாம். இலங்கை தமிழர்களுக்கு போரின்போது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்தும் அவர்களுக்கு இப்போதும் தொடரும் அவலநிலை குறித்தும் பிரஞ்யையே இல்லாதவர்கள் தமிழகத்தில், குறிப்பாக மேல்தட்டு வர்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் இந்தப் படத்தைப் 'புறக்கணிக்க வேண்டும்' என்று சொல்வது சரியாகத் தோன்றவில்லை,

படத்தின் திரையிடலை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவது கருத்து சுதந்திரம் என்ற அளவுகோளின்படி பார்க்கும்போது ஏற்க முடியாதுதான். ஆனால் ஈழத் தமிழர் பிரச்சினை மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள ஈழ மக்களின் பிரச்சினைகளை, துயரங்களை சரியாகவும் நேர்மையாகவும் பதிவு செய்யும் படைப்பாளிகளை உருவாக்கி அந்தப் படைப்புகளை மையநீரோட்டத்தில் சரியாகக் கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டால் மட்டுமே வருங்காலத்திலேனும் தமிழ்த் திரைச் சூழலில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும் என்று சொல்லத் தோன்றுகிறது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=5b1776e4-29ae-4745-976d-775734494f3a

Breaking - Screening of Inam to be stopped immediately

 

In a latest development, leading director / producer / distributor Lingusamy has sent a press statement to the media explaining that the screening of the movie Inam will be stopped in all theaters, in effect from tomorrow, the 31st March onwards. It must be noted that Inam was released in Tamil Nadu by Lingusamy's firm, Thirrupathi Brothers.

 
Lingusamy adds that this move has been taken in order to avoid any political and security related complications, at a time when the elections are just around the corner. He maintains that he has utmost love and respect for Tamil people and their feelings. 
 
It must be noted that 4 scenes were removed and 1 dialogue was muted just before Inam released in theaters on Friday, due to stiff opposition from certain political parties.

 

http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/santosh-sivans-inam-to-be-stopped-screening.html

  • கருத்துக்கள உறவுகள்

Breaking - Screening of Inam to be stopped immediately

 

....

 
Lingusamy adds that this move has been taken in order to avoid any political and security related complications, at a time when the elections are just around the corner. He maintains that he has utmost love and respect for Tamil people and their feelings. 
 

 

http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/santosh-sivans-inam-to-be-stopped-screening.html

 

 

Good decision.

 

"இனம்" படத்திற்கு வக்காலத்து வாங்கும் திரையுலகினர், ஏன் "காற்றுக்கென்ன வேலி" திரைப்படத்தை  தாங்கிப் பிடிக்கவில்லை? :huh:

இனம்” நாளை முதல் எந்த திரையரங்கிலும் திரையிடப்படமாட்டாது : லிங்குசாமி அறிவிப்பு !!

March 30, 2014
செய்திகள்0
3
xlingu_1818112h.jpg.pagespeed.ic_.zl_LMs

லிங்குசாமி இனம் படத்தை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளார். நாளை தொடக்கம் எந்த திரையரங்கிலும் படம் திரையிடப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளார். ஆயினும் அந்த படத்தை வெளியிட்டமைக்காக எந்தவொரு இடத்திலும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியான படம் தானாயினும் புரிதலின்றி போராட்டம் நடத்தப்பட்டதாகவே அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ‘இனம்’ படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன்.

உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன்.

தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்க்கும் மாதிரியான தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல சினிமாக்களையும், படைப்புகளையும் முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன்.

அப்படி ஒரு சினிமா நேசனாகவே ‘இனம்’ படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது. அது சினிமாவாக முக்கியமான முயற்சியாக தோன்றியதாலேயே வாங்கி வெளியிட்டேன். அது சிலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன்.

அரசியல் ரீதியிலான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. இதன்பொருட்டு தனிமனித தாக்குதல்களையும் தனிப்பட்ட முறையில் கசப்பான அனுபவங்களையும் சந்தித்தேன். யாருக்காவும் எதற்காகவும் அச்சப்படுபவனல்ல நான்.

ஆனால், இந்த தேசத்தின் மீதும், தமிழ் மண் மீதும், மக்கள் மீதும் மிகப் பெரிய அக்கறை வைத்திருக்கிறேன்.

எனவே, தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க ‘இனம்’ படத்தை நான் நிறுத்துகிறேன். ‘திருப்பதி பிரதர்ஸ்’ சார்பாக வெளியிடப்பட்ட ‘இனம்’ திரைப்படம் நாளை முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.

இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாண்டியும், மனித உணர்வுகளையும் இந்த மக்களையும் நேசிப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறேன்” என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

http://www.velichaveedu.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.