Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு எம் வீரவணக்கம்

Featured Replies

தியாகத்தின் உருவே

உன் தியாகத்தால்

உருவாகும் தமிழீழம்

உன் கனவு விரைவில் நனவாகும்

புறப்படும் புலிப்படை

மிக விரைவிலே

உனக்கு என் வீர வணக்கங்கள்

Thileepan.gif

செப்ரம்பர் 15-26

தியாக தீபம் திலீபனின் உரைகள்

http://connecttamils.com//images/MISC/Eelam/urai.smil

திலீபன் பற்றிய கவிதை

http://connecttamils.com//images/MISC/Eelam/poem.smil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேன்மையானதே திலீபனின்

ஈழம் நோக்கிய

செம்பார்வை.

அளவிட முடியாதததே

அவனது நெடுந்தூர

நேர்கொண்ட வீச்சு.

சென்று விட்டானே

சின்ன வயதில்

எம்மைப் பிரிந்து.

நிச்சயம் பலிக்குமே

அவனது விழிகள்

கண்ட கனவு.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்வீகச் சின்னம்

கத்தியின்றி இரத்தமின்றி

யுத்தமொன்று செய்தவன்.

செத்து நின்ற இந்தியத்தை

முத்தமிட்டு நின்றவன்.

பித்தம் கொண்ட வல்லரசைப்

பேதலிக்க வைத்தவன்.

கத்தும் கடல் சூழ்ந்திருந்த

காசினியில் உதித்தவன்.

வேலவனின் காலடியில் - தமிழ்

வேதனைகள் சொன்னவன்.

காலனையும் அங்கிருத்தி

கதைகள் பல கேட்டவன்.

ஞாலமிங்கு தலை குனியும்

கோலமதில் வென்றவன்.

காலமது பார்த்து - தன்

காரியத்தைச் செய்தவன். - இவன்

காலத்தால் அழியாத காவியத்தைப் படைத்தவன்.

வேங்கையரின் பாதையிலே - இவன்

வெகுண்டெழுந்த சன்னம். - இன

வேதனையைத் தான் சுமந்த

சாத்வீகச் சின்னம்.

காந்தியவர் மண்டியிடும்

காவியம் இவன் திண்ணம்.

காய்ந்த இவன் நா உதிர்த்த

வார்த்தை இனி மின்னும்.

தியாக தீபமே

தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில்

தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே

அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில்

அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும்

ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும்

ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான்

ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன்

கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான்

தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால்

மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது

இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன்

இளைத்துமே சாய்ந்தனன் நல்லையுூர் மண்ணிலே

சுந்தரப் பெண்களைச் சதந்திரப் பெண்களாய்

கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன்

தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே

தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே

அண்ணலின் வழியினில் வந்தவர் செய்கையால்

ஆத்திரம் கொண்டவன் அஹிம்சையை நாடினான்

அஹிம்சையே கொள்கையாம் சொன்னவர் செய்கையால்

அருமருந் தானஎம் திலீபனும் தூங்கினான்

அடிதடி மட்டுமே அறிந்தவர் இவரென

அயலுள நாடுகள் எள்ளிய வேளையில்

அறவழிப் போரிலும் அசையா இனமென

அகிலமே கண்டிட அமரனாய் ஆகினான்

வாய்களில் வார்த்தைகள் வந்திட மறுத்தது

விழிகளும் நீரினைச் சொரிந்துமே களைத்தது

தமிழரெம் தலைகளும் ஒருநொடி சரிந்தது

தவப்பெரும் புதல்வனின் மறைவினால் பதைத்தது

இருக்கையில் பிறர்பணி செய்திட மறுப்பவர்

இருக்குமிப் புூமியில் இருந்துமே வந்தவன்

இறந்துமே உடல்தனை அடுத்தவர்க் கீந்தவன்

இருக்கிறான் தமிழரெம் இதயச் சிறையிலே

தியாக தீபம் திலீபனின் நினைவுகளைச் சுமந்து வீரவணக்கம் செலுத்துவோம்.

ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல அகிம்சை போராட்டத்திலும் ஈழத்தமிழர் உறுதியானவர்கள்

என்பதை உலகத்துக்கு எடுத்துக்காட்டிய தியாகி.....திலீபன் அண்ணாக்கு எமது வீர வணக்கங்கள்

காலத்தால் அழியாத காவியத்தைப் படைத்த எம் இனிய திலீபன் அண்ணாவிற்க்கு வீரவணக்கங்கள்

:):(:(:(:(:(:(:(:(:(

thileepa.jpg

அகிம்சையை அகிம்சையின் பிறப்பிடம் என சொல்லிக்கொள்ளும் பாரதத்திற்கு படிப்பித்த மாவீரன் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு என் வீரவணக்கம்

பாராத தேசத்தின் அகிம்சை தந்தை என்ற காந்தியின் கொள்கையை கடைப்பிடித்த திலீபன் காந்தியத்தின் கொள்கையை குழி தோண்டி குப்பை தொட்டிக்குள் புதைத்த பாரத அரசிடம் ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் நீர் கூட அருந்தாது அகிம்சை வழிப்போராட்டத்தை நடத்தி பாரதத்திற்குப் பாடம் புகட்டி ஈகச்சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 19வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் நாளை ஆரம்பமாகிறன. வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டத்தில் மக்கள் குடிமனைகள், பிரதான சந்திகள், வணக்கஸ்த் தலங்கள், மற்றும் பாடசாலைகள், வியாபாரத் தலங்கள் அரச செயலகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணிமனைகள், முகாம்கள், செயலகங்கள் போன்ற இடங்களில் நாளை (15.09.2006) காலை 9.00 மணிக்கு பொது ஈகச் சுடரேற்றலுடன் அடையாள உண்ணாவிரத நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

மாவட்டத்தில் கோட்ட ரீதியாக நடைபெறும் அடையாள உண்ணாவிரத நிகழ்வில் அரச உத்தியோகஸ்த்தர்கள், அதிகாரிகள் உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் விவசாய அமைப்பினர், வர்த்தகர்கள், வணக்கஸ்த்தல தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள், கலைஞர்கள், மகளிர் அமைப்பினர் ஏனைய தொழிலாளர்கள், போராளிகள், கிராமியப் படை வீரர்கள் அனைவரும் இந்த அடையாள உண்ணா விரத நிகழ்வில் கலந்து கொள்வர்.

சொந்த சுயநலத்திற்காக காந்தியன் கொள்கையை காலால் மிதித்த பாராத தேசம் காந்தியத்தை அவமதித்து இண்றுடன் 19 வருடங்கள் கடந்துவிட்டநிலையில் காந்தியின் கொள்கையை காப்பாற்றும் ஈழத்தமிழருக்கே காந்தியத்தின் கொள்கை உருத்துடையது.

http://nitharsanam.com/?art=20348

தியாக தீபத்தின் நினைவைச் சுமக்கும் தாயக வாழ் தமிழர்கள

தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 19ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகப்பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. முதல் ஒன்பது நாட்கள் தமிழர் தாயகத்தில் கிராமங்கள் தோறும் சிரமதானங்கள் கருத்தரங்குகள், போட்டிகள் கலைநிகழ்வுகளும் இறுதி மூன்று நாட்கள் அடையாள உண்ணாவிரதமும் நடைபெறும்.

200609154.jpg

200609155.jpg

200609156.jpg

http://sankathi.org/news/index.php?option=...id=468&Itemid=1

முதல் நாளான இன்று பொதுச்சுடரேற்றி தேசியக்கொடியேற்றப்பட்டு லெப் கேணல் திலீபனின் திருவுருவப்படத்திற்குச் சுடரேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்க நிகழ்வுகளும்,நினைவுரைகளும் இடம்பெற்றுள்ளது. பாடசாலைகள் பொதுஇடங்கள் பணிமனைகள் போன்றவற்றில் இந்நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

அகிம்சையை போதிப்பவர்களுக்கே அகிம்சையை போதித்தவர்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 19ம் ஆண்டு தொடக்க நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 19ம் ஆண்டு தொடக்க நினைவு நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பங்கேற்றுள்ளார்

திலீபன் நிகழ்வுக்கென பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மண்டபத்தில் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் பேராளிகளும் கலந்து கொண்டு தீலீபனும் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

thileepan2006.gif

thileepan20062.gif

thileepan20063.gif

http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

திலீபன் அண்ணாவிற்கு எனது வீரவணக்கம்

eelam01100014.jpg

திலீபன் அண்ணாவுக்கு வணக்கங்கள்.

தீயாக தீபம் திலீபன் அண்ணாவுக்கு வணக்கங்களும் அஞ்சலிகளும்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்கம்.

வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தியாகதீபம் திலீபனுக்கு வீரவணக்கங்கள்.

திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ் களத்தில் இருந்து சுட்டு ஒரு கட்டுரையை என் வலைப்பூவில் பதித்திருக்கிறேன்.... http://madippakkam.blogspot.com/2006/09/bl...2261599543.html

உங்கள் கருத்துக்களை அங்கே பின்னூட்டமாக இட்டால் மகிழ்ச்சி!!!

தமிழகத்தின் இன்றைய தலைமுறைக்கு திலீபன் பற்றிய அறிமுகம் அவ்வளவாக இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரின்றி உயிர் நீத்த அந்தத் தியாகி திலிபனைப்பற்றி உங்கள் வலைப்பதிவில் இட்டமைக்கு நன்றிகள் லக்கிலுக்கு - அன்புடன் யாழ்கள கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிம்சையின் நாயகன் தியாகி திலீபன் அண்ணாக்கு வீர வணங்களங்கள். லக்கிலுக் உங்கள் விமர்சனமும் அருமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.