Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூலில் ரசித்தவை

Featured Replies

  • தொடங்கியவர்

இந்திய அம்மா மகனிடம் : ஒழுங்காப் படி, அப்பத்தான் அமெரிக்கா போகமுடியும்.
.
.
.
.
.
..அமெரிக்க அம்மா மகனிடம் : ஒழுங்காப் படி, இல்லன்னா உன் ஜாப் ஒரு இந்தியனுக்குப் போயிடும்.

  • Replies 178
  • Views 29.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆய கலைகளை அறுபத்து நான்கு என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவை எது என பலருக்கு தெரியாது. அவைகளின் பட்டியல்..

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்
38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்
61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்.

  • தொடங்கியவர்

553575_537933812887923_412012447_n.jpg

  • தொடங்கியவர்

10174985_762655280441915_289767776853230

 

அனேகமான ஆண்களின் விபத்திற்குக் காரணம்

  • தொடங்கியவர்

1613850_640489366028838_4919259779616897

 

யாழ்ப்பாண இணுவில் பகுதி மாலை வேளையில்! ...

  • தொடங்கியவர்

volkswagen parking lot towers.

 

autostadt01.jpg

 

 

pb-110309-car-da-02.photoblog900.jpg

 

v7qgb8.jpg

 

  • தொடங்கியவர்

15-1400132237-44copy.jpg

 

அன்புத் தாத்தா

  • தொடங்கியவர்

10383645_639805079430600_506528065438815

 

உங்களுக்கு தெரியுமா ??...

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை...

அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை...

நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை...

15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது...

இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை....

license இல்லையா vehicle papers இல்லையா...

பணத்த எடுனு போலிஸ் சொன்னா...

நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி
செல்லான்வாங்கிக்கோங்க..

நான் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே...
தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம் 

>>> நம்ம யாழ்ப்பாணம் <<<

 

https://www.facebook.com/myjaffna/photos/a.394082700669507.90318.393824350695342/639805079430600/?type=1&theater

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10154274_493578114100987_258061865226041

 

உப்பை.. 

காசு கொடுத்து வாங்கியபோது.. 

ஆச்சரியப்பட்ட நம் தாத்தாவிற்கு 

தெரியாது..... 

நாம் தண்ணீரை காசு கொடுத்து 

வாங்குவது...! 

தண்ணீரை காசு கொடுத்து 

வாங்கும் நமக்கு 

தெரியவாய்ப்பில்லை 

நம் பேரன் காற்றை 

காசு கொடுத்து வாங்கப்போவது...!!

  • கருத்துக்கள உறவுகள்

10174985_762655280441915_289767776853230

 

அனேகமான ஆண்களின் விபத்திற்குக் காரணம்

பள்ளம் திட்டிகள்தான் ......
அவற்றை மூடி நிறுவுவதால் விபத்துக்களை குறைக்க முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான காணொளி! :)

 

 

 

தோல்விதனை எழுதட்டும் வரலாறு... துணைக்கென்று இனிமேல் யார் கூறு...

 

https://www.facebook.com/photo.php?v=690051431054298&set=vb.363469940379117&type=2&theater

  • தொடங்கியவர்

ராஜபக்சே இந்தியா வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல, ஆனா ஒரே ஒரு கண்டிசன்.

திரும்பபோகும் போது சுப்ரமணியசாமியையும் கூடவே கூட்டிட்டு போய்டனும்.

#பூபதி_முருகேஷ்

  • தொடங்கியவர்
விஜய் பற்றி முகநூலில் பதிவுகள் இல்லாத நாளே கிடையாது, பல நேரங்களில் அவரை பெரிதும் கிண்டலடித்தும் கேவலமாய் விமர்சித்தும் வருவது உண்டு...

ஆனால் இன்று அவரை பற்றி கிடைத்த செய்தி, அவரை ஒரு நடிகராய் பார்க்காமல் ஒரு உயர்ந்த உள்ளமாய் பார்க்க தோன்றியது...

கடந்த மாதம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வீட்டிற்கு சென்று, தந்தையை இழந்த குழந்தையுடன் சுமார் இரண்டு மணி நேரம் இருந்துள்ளார்... அந்த குழந்தையின் எதிர்கால ஆசையை கேட்டறிந்தும், அந்த பிஞ்சுடன் விளையாடியும், அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதாய் கூறி விடையளித்துள்ளார்...

விஜய் மோடியை சந்தித்தது அரசியலாய் இருக்கலாம், ஆனால் அந்த குழந்தையை சந்தித்தது அவரின் இளகிய மனதால் மட்டுமே இருக்கும்..

சினிமாவை தாண்டி, அரசியலை தாண்டி ஒரு ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் இவர் மட்டுமாகவே இருக்கும்..

கலைத்துறையில் இவருக்கு நான் ரசிகனாய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இவரின் மனிதநேயத்துக்கு இனி நானும் ஒரு ரசிகன் ... 

நன்றி ப்ரியா 

சல்யுட் விஜய் சார் 

#இனம் மொழி நாடு பணம் பதவி அரசியல் சினிமா இவை அனைத்தையும் தாண்டி மனிதநேயத்தை நேசிக்கும் மனிதர்களையே நாம் நேசிப்போம்!!

 -

10301535_777254108971761_828857961797920

விரைவில் ட்வீட்டரில் இணைகிறார் ஜெ..
‪#‎செய்வீர்களா‬ என்னை FOLLOW செய்வீர்களா ...???

  • தொடங்கியவர்

10357261_778436108853561_810282398912935

 

"காமராஜர் ஒரு சகாப்தம்"

காமராசர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு காமராசரிடம்,

"உங்களுடைய கோட்டா 20 சீட்கள் மிச்சமிருக்கின்றன'' என்று அதிகாரிகள் கூறினர்.

உடனே விண்ணப்பங்களை வாங்கி மளமளவென்று 20 மாணவர்களைத் தேர்வு செய்து தந்தார் காமராசர்.

எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்பதை அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரிடமே அதைக் கேட்டார்கள்.

அதற்கு காமராசர்,

"நான் தேர்வு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். எல்லோரும் விண்ணப்பத்தில் கைநாட்டு போட்டிருக்கிறார்கள். இதைப் பாருங்கள்'' என்று கூறினார்.

அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு, காமராசரின் சமுதாய அக்கறையை நினைத்துப் பார்த்து வியந்து போனார்கள்.

 -

  • தொடங்கியவர்

இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் மகன் அமுதன்.

“அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா. கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் உஷா, என் மனைவி.

அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ உஷாவின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்.

“வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன். “என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி தொந்தரவு

செய்திருப்பாள்.

“கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்’ இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்.

-

“அப்பா, எனக்கொரு சந்தேகம்’ என்றான் அமுதன். “என்னடா சந்தேகம்?’ “தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்…

தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே போவே...?’

என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தேன்...!

- சாகுல் ஹமீது

 

10363387_779432275420611_117071133573516

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமே

 

10437425_784197721610733_578595527439744

  • தொடங்கியவர்

10439503_785410314822807_351161834238652

  • தொடங்கியவர்

எம் மண்ணின் உலக சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம்.

 

10410799_654524567958651_727445081938408

 

ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன்

வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் - ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.
பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு'ஆழிக்குமரன்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.

ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு;

சாதனை 1) 1971ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக்கடந்தது,

சாதனை 2) 1978ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 பதுகளில் பிரசித்திபெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது,

சாதனை 3) 1979 ஆம் ஆண்டில் 1487மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை,

சாதனை 4) 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை,

சாதனை 5) 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை,

சாதனை 6) 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups),

சாதனை 7) 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை,

சாதனை 8) 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை

சாதனை 9) 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை.

ஓர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) விபத்தின் விளைவால் இவரது மண்ணீரலை அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது, 6 மணிநேர துணிகர முயற்சியின் பின், வலுவான சாதகமற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்பநிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்ற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார்.

சாதனை முயற்சியின் போது "குளிர்ந்த கடலே கவலை தருகிறது, அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை" என்று தெரிவித்தார். இதுதான் அவர் 1984 ஆம் ஆண்டுஆகஸ்து 6 ஆம் தேதி ஆங்கிலக் கால்வாய்யை கடக்கும் முயற்சியின் போது இறக்கும் முன்னர் கூறிய கடைசி வார்த்தை.

ஆழிக்குமரன் ஆனந்தன் கின்னஸ் சாதனைகளைப் படைத்தது மட்டுமன்றி, இலண்டன் பல்கலை கழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும் இலங்கையில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைத்திறமைகளை கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் இவரின் படம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

எத்தனை பேர் அறிவோம் இவரை, எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

10460312_661108010633640_198317846651991

 

யாழ் கோட்டைக்கு செல்லும் பாதை

 

10382330_660906057320502_513238653800459

அழகிய மணற்காடு பிரதேசம்

 

 

 


10402916_1501592323385916_23033579753818

Place to relax in Batticaloa

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மக்களே BRAZIL டீம் தோத்ததுக்கு நெய் மோர் இல்லாதது தான் காரணம்னு சொல்றாங்க. ஏன் அந்த teamku நெய் மோர் தரல?

தலைவா , அது நெய் மோர் இல்ல, adhu brazil ஸ்டார் ப்லேயர் NEYMAR..
 —

 

10455861_804475842916254_129401757083981

  • தொடங்கியவர்

10462634_10152133712856637_7661669540689

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=495792963838220

  • கருத்துக்கள உறவுகள்

 https://www.facebook.com/photo.php?v=10152670173563474

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.