Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கை கால்களில் விறைப்பு, எரிவு அல்லது வலிகள்

Featured Replies

numness.jpg

உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் விறைப்பது போல அல்லது உணர்விழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது புதினமானது அல்ல. கையை எங்காவது இசகு பிசகாக வைத்து தூங்கிக் காலை விழித்து எழுந்தவுடன் அவ்விடம் விறைந்தது போலவும், கூச்சம் போல அல்லது அதிர்வு போலவும் தோன்றுவதை உதாரணம் கூறலாம்.

ஆனால் இது கைகளில் மட்டும்தான் ஏற்படும் என்றில்லை. கைகளில், கால்களில், விரல்களில் மேல்கைகளில் தொடைப்புறத்தில், தோள் பட்டையில் என உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம்.

விறைப்பு எரிவு வலிகள் உண்டாக காரணங்கள்:

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்;ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது மரப்பதற்கான சாத்தியம் அதிகம். ஆனால் இது தற்காலிகமானது. சிறிது நேரத்தில் குணமாகிவிடும்.

முள்ளந் தண்டு எலும்புகள் தேய்ந்து, முண்நாணிலிருந்து வெளியே வரும் நரம்புகளை அழுத்துவதாலும் ஏற்படும். கழுத்து எலும்புகளில் ஏற்படும் தேய்வானது கைகளில் எரிவு, மரத்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரும். அதேபோல நாரிப்பகுதி முள்ளந் தண்டு பாதிப்புறுவதால் ஏற்படும் வலி விறைப்பு போன்றவை கால்களில் வெளிப்படும்.

நரம்புக் கொப்பளிப்பான் பற்றி அறிந்திருப்பீர்கள். ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டும் கொப்பளங்கள் தோன்றும். இதனால்; வலி எரிவு போன்ற பாதிப்புகளை அந்த நரம்பின் பாதையில் மட்டுமே கொண்டுவரும். சிலரில் இந்த வலியானது கொப்பளங்கள் கருகி நோய் மாறிய பின்னரும் நீண்ட காலத்திற்கு தொடரும்.

சிலரில் பெருவிரல் சுட்டு விரல், நடுவிரல் அடங்கலான கைகளின் வெளிப்புறத்தில் வலி, விறைப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இதை Carpal tunnel syndrome என்பார்கள். இது மணிக்கட்டின் உட்புறம் ஊடாக உள்ளங்கை மற்றும் விரல்களுக்கு வரும் நரம்பு அழுத்தப்படுவதால் வருவதாகும். பொதுவாக மூட்டுவாதம், தைரொயிட் நோய்கள். அதீத எடை போன்றவை இருப்பவர்களில் அதிகமாக ஏற்படும்.

இவர்கள் ஏதாவது பொருளை பாவிக்கும்போது கைகளில் ஏற்படும் உணர்வற்ற நிலையால் அதனை தவற விட்டுவிடுவார்கள். அதனால் அப்பொருளுக்கும். சிலவேளைகளில் அவர் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இந்த நோய்க்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். அவ்விடத்தில் ஊசி  மருந்தும் வேறு சிலருக்கு நரம்பில் ஏற்படும் அழுத்ததைக் நீக்க சிறிய சத்திர சிகிச்சையும் தேவைப்படுவதுண்டு.

நீரிழிவு நோயாளிகள்

நடந்து செல்லும்போது அவர்கள் கால்களில் இருந்த செருப்புக்கூட அவர்களை அறியாமலே கழன்று விடுகின்றது. ஒரு காலிலிருந்த செருப்பு கழன்று விடுபட்டதை அறியாமல் நடந்து செகின்றனர். இதற்குக் காரணம் காலின் உணர்திறன் நரம்புகள் பாதிப்புற்றதுதான்.

கால்கள் மெத்தைபோல இருப்பதாக இவர்கள் சொல்லுவார்கள். தார் ரோட்டில் கால் வைத்தாலும் சுடாதளவு விறைப்பு உள்ளவர்கள் காலில் பெரும் புண்களோடு வருவார்கள். கோயிலிலும் கடற்கரையில் வெறும் காலுடன் நடக்குப்போது முள்ளு ஆணி கிளாஸ் துண்டு ஏதாவது குத்தி ஏறியிருக்கும். உள்ளுக்குள் கிடந்து சீழ்பிடித்து மனைந்தபின்தான் அவர்களுக்கே தெரியவரும்.

கால்கள் மரத்துப்போவது மாத்திரமன்றி சிலருக்கு எரிவு உளைவு போன்ற வேதனைகளும் இருக்கலாம். விற்றமின் குறைபாடு, தொழுநோய் அடங்கலான பல்வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் அதிகமாகக் காண்பது நீரிழிவு நோயாளரில்தான்.

நீரிழிவாளர்களில் கால்களில் விறைப்பு வந்துவிட்டால் முற்று முழுதாக மாற்றுவது கஷ்டம். ஆரம்ப காலம் என அலட்சியப்படுத்தாது நீரிழிவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே இது வராமல் தடுக்கக் கூடிய ஒரே வழியாகும்.

பக்கவாதம்

பக்கவாதம் வரும்போது அங்கங்கள் செயலிழப்பது மட்டுமின்றி எரிவு, விறைப்பு போன்ற உணர்திறன் பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. அதேபோல வலிப்பு நோய் வருபவர்களிலும் நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டு விறைப்பு எரிவு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுண்டு.

பக்கவாதம் போலவே தோன்றி மறையும் வாதம் எனவும் ஓன்று உண்டு. பக்கவாதம் போலவே கை கால்கள் செயலிழத்தல், மயக்கம் வருதல் போன்ற அறிகுறிகள் தோன்றி எந்தவித சிகிச்சையும் இன்றி தானே மறைந்து விடும். இதனை மருத்துவத்தில் Transient ischemic attack (TIA), அல்லது ‘mini-stroke’ என்பர். குணமாகிவிட்டது என நிம்மதியாக இருக்க முடியாது. இத்தகையவர்களுக்கு முழுமையான பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கால்களில் விறைப்பு ஏற்படுவதற்கு விட்டமின் பீ12 (Vitamin B12)  குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும். இது முக்கியமாக மீன், இறைச்சி, ஈரல், சிறுநீரகம், பால் போன்றவற்றில் காணப்படுகிறது. இதனால் தாவர உணவு மட்டும் உண்பவர்களில் இது வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கால் விறைப்பு மட்டுமின்றி, இரத்த சோகை, வாயில் புண்கள், கடைவாய்ப் புண், நாக்கு அவிச்சல் போன்ற பிரச்சனைகளையும் விட்டமின் ஏவையஅin டீ12  குறைபாடு ஏற்படுத்தும்.

மது அருந்துபவர்களிலும் விறைப்பு எரிவு நோய்கள் வருவது அதிகம். மது அருந்தும் சிலர் ஒரு Vitamin B12    ஊசி அடித்துவிடுங்கோ என வருவதுண்டு. ஓட்டைப் பானையில் தண்ணி விட்டு நிரப்ப முனைபவர்கள் அவர்கள். மதுவினால் பல பாதிப்புகள் ஏற்படும். அதில் போசாக்கு உணவின்மையால் ஏற்படும் B12 குறைபாடும் ஒன்று. ஊசி போடுவதால் மட்டும் அவர்களைக் குணமாக்க முடியுமா?

புகைத்தலும் மற்றொரு காரணமாகும்.

எமது உடலில் கல்சியம், பொட்டாசியம்; போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இவற்றில் ஏற்படும் குறைபாடுகளும் மாற்றங்களும் அத்தகைய அறிகுறிகளுக்கு காரணமாகலாம்.

விறைப்பும் உணர்வு குறைதலும் பல பிரச்சனைகளை பாதிப்புற்றவருக்கு ஏற்படுத்தும். பொருட்களை இறுக்கமாக பற்ற முடியாமை, கால்களில் ஆணி முள்ளு ஆகிய குத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிக் கூறினோம். உணர் திறன் குறைவாக இருப்பதால் நடக்கும்போது அடி எடுத்து வைப்பது திடமாக இருக்காது. இதனால் விழுவதற்கும் காயம் படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாகும். வீதி விபத்துகளில் மாட்டுப்படும் அபாயமும் உண்டு.

உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டுமா?

பெரும்பாலான விறைப்பு எரிவு என்பன படிப்படியாக வருபவை. அவற்றை நீங்களாகவே அவதானித்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

ஆயினும் கீழ்க் கண்ட அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

·    திடீரென அங்கங்கள் செயலிழந்து ஆட்டி அசைக்க முடியாது இருந்தால் அவசர சிகிச்சை பெற வேண்டும்.

·    விழுந்து அல்லது தலை கழுத்து அல்லது முள்ளந்தண்டில் அடிபடுவதைத் தொடர்ந்து விறைப்பு எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக ஆலோசனை பெறுங்கள்.

·    திடீரென உங்களது அங்கங்களை ஆட்டி அசைக்க முடியாது போனாலும்.

·    மலம் சலம் வெளியேறுவதை உங்களால் திடீரென கட்டுப்படுத்த முடியாதுவிட்டால்.

·    திடீரென மயக்கம், நினைவுக் குழப்பம் மாறாட்டம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்.

·    திடீரென ஏற்படும் பார்வைக் குறைபாடு, கொன்னித்தல், நடைத்தடுமாற்றம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்,

நன்றி: டாக்டர்.எம்.கே.முருகானந்தன்.

 

கணணி வேலை, தொழிற்சாலையில் தொடர்ந்து ஒரே வேலை போன்றவையும் காரணிகள் ஆகலாம்.

தோட்டத்திற்கு போக முன், பின் நாம் கட்டாய உடற்பயிற்சி செய்வோம். இதனால் சுழுக்குகள், சவ்வு பிடிப்புகளை குறைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

-----

விறைப்பு எரிவு வலிகள் உண்டாக காரணங்கள்:

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்;ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது மரப்பதற்கான சாத்தியம் அதிகம். ஆனால் இது தற்காலிகமானது. சிறிது நேரத்தில் குணமாகிவிடும்.

முள்ளந் தண்டு எலும்புகள் தேய்ந்து, முண்நாணிலிருந்து வெளியே வரும் நரம்புகளை அழுத்துவதாலும் ஏற்படும். கழுத்து எலும்புகளில் ஏற்படும் தேய்வானது கைகளில் எரிவு, மரத்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரும். அதேபோல நாரிப்பகுதி முள்ளந் தண்டு பாதிப்புறுவதால் ஏற்படும் வலி விறைப்பு போன்றவை கால்களில் வெளிப்படும்.

-------

 

கணணி வேலை, தொழிற்சாலையில் தொடர்ந்து ஒரே வேலை போன்றவையும் காரணிகள் ஆகலாம்.

தோட்டத்திற்கு போக முன், பின் நாம் கட்டாய உடற்பயிற்சி செய்வோம். இதனால் சுழுக்குகள், சவ்வு பிடிப்புகளை குறைக்கலாம்.

 

சுகதேகியான ஒருவருக்கு.... கைகால்களில் விறைப்பு ஏற்படும் உணர்வு ஏற்படும் போதே... உசாராகி வைத்தியரை நாட வேண்டும்.

 

மனிதருக்கு நோய் என்பது... திடீரென்று வருவதல்ல. அதற்கு முதல் சில, அபாய எச்சரிக்கைகளை அறிவிக்கும்.

இதே... விறைப்பு, முள்ள‌ந்த‌ண்டை பாதித்த‌த‌ற்கான‌ அறிகுறி.

முத்த‌ விட்டால்... ச‌க்க‌ர‌ நாற்காலியில் இருக்க‌ வேண்டிய‌ நிலைமையும், ஏற்ப‌ட‌லாம்.

 

ஐந்தில்... ஒரு ஜேர்ம‌ன் நாட்ட‌வ‌ர்க‌ளுக்கு, இவ் வியாதி உள்ள‌து.

அனைவ‌ரும் வாசிக்க‌ வேண்டிய‌ முக்கிய‌ ப‌திவு இது.

 

ந‌ன்றி அலைம‌க‌ள் & விவ‌சாயி விக். :)

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்பயன்  உள்ள பகிர்வை இணைத்தமைக்கு  நன்றி அலைமகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கடினவேலை காரணமாக எனக்கும் கை விறைப்பு இருந்தது.டாக்டரிடம் சென்றபோது கரண்ட் பிடித்து விட்டார்கள்.சரியாகி விட்டது. மீண்டும் வருமென சொல்லியனுப்பினார்கள். :)
 
ருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இது வரும். நான் வைத்தியரல்ல...சொந்த அனுபவம். :icon_idea:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அலுவலகத்தில் அடிக்கடி எலிச்சுட்டியை பயன்படுத்துவதாலும் கணனிக்கு முன் பல மணி நேரம் செலவிடுவதாலும் சிலநேரம் கைகள் மரத்துப்போவது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு.

 

பயனுள்ள தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயாருக்கும் கால் விறைப்பு, கால் வீக்கம் போன்றவை இருந்தது...இன்றும் இருக்கிறது,இப்போ கூடிக் கொண்டு வந்து விட்ட காரணத்தினால் கடந்த கிழமை அவசரசிகிச்சைப் பிரிவில் வைத்திருக்க வேண்டியதாக போய் விட்டது..இறுதியில் கிடைத்த தகவல் இதயம் பலமாக தாக்கபட்டு விட்டதாம்.ஆகவே நோய் வரும் முன் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.