Jump to content

'ள'கரம் 'ழ'கரம் எங்கே, எப்படி பாவிப்பது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'ள'கரம் 'ழ'கரம் எங்கே, எப்படி பாவிப்பது? விதிமுறைகள் என்னவென்று ஆருக்காவது தெரிந்தால் விளக்குங்களேன். சிறு வயதில் படித்த போது, 'ழ' negative ஆன சொற்களுக்கும் 'ள' positive ஆன சொற்களுக்கும் பாவிப்பதாக படித்த ஞாபகம். ஆனாலும் இவ் இரு எழுத்துகளும் ஒரே குளப்பமாக இருக்கிறது. வேறொரு பிரிவில் எழுத்து பிழைகள் பற்றி விவாதித்த போதுதன் எனக்கும் இவ்விரு எழுத்துகளிலும் உள்ள குளப்பத்தை தீர்க்கலாம் என நினைத்தேன்.

வாசிப்பதை வைத்து அனேகமான நேரங்களில் சரியாக எழுதுவேன் இருந்தாலும் சில நேரங்களில் பிழை விடுவதும் குளப்பமுமாக உள்ளது.

முற்கூட்டிய நன்றிகள்.

-சபேஸ்-

Link to comment
Share on other sites

ழ´கர, ள´கரவில் உங்களுக்கு உண்மையிலேயே குழப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் மீண்டும் மீண்டும் "குளப்பம்" என்று எழுதியிருப்பதில் இருந்து புரிகிறது. "குளப்பம்" தவறு. "குழப்பம்" என்பதே சரி.

ஆனால் இதைக் கண்டுபிடிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று தெரியவில்லை. விசாரித்து சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

தமிழ் தட்டச்சு மென்பொருள் எழுத்துக்கூட்டல் மற்றும் இலக்கண தவறுகளை சுட்டிக்காட்டக் கூடிய வகையில் வந்தால் உதவும். :roll:

Link to comment
Share on other sites

அப் பதிவில் எப்படி உச்சரிப்பது என்றுதான் இருக்கிறது. எங்கே எந்த எழுத்தை பாவிப்பது என்பதுதான் நண்பரின் கேள்வி. இதற்கு ஏதாவது விதிமுறைகள் உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் கைப்பழக்கத்தில் அனேகமாக சரியாக எழுதி விடுகிறேன். சில நாட்களுக்கு முன்பு "வாளாவிருத்தல்" (அலட்சியமாக இருத்தல்) என்ற சொல்லை எழுதுகின்ற பொழுது கடுமையாக திணறி விட்டேன்.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

ஆமா..வாத்தியார் சபேசன் தன் எனக்கு கற்று கொடுத்தார் இருந்தும் அதே பிழை தொடர்கிறது...

இப்போ அவர் தான் என் குரு....

என்ன செய்யலாம்....???

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

அப்பு சபேஸ்!

எண்ணா கேல்வி கேட்டுட்டீர்! உல்லங்கை நெள்ளிக்கணியாக பதிளிறுக்க ஏண் அழைகிரீர்!!! கணடாவிளிறுந்து சுவிஸ் ஜெயிளுக்கு ஒறு போன் போடும்!!! அங்கிறுக்கும் நம்மவர் அட்புதமாக, சறியாக படிப்பிப்பார்!!!! அவர் ஒறு தமில் ஊடகவியளாழறும் கூட!!!!

ரோகரா..... :smile2:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

200610107.jpg

:roll: :lol:

Link to comment
Share on other sites

ல கரம் ள கரம் ழ கரத்தை எங்கு எப்படிபாவிக்க வேண்டும் என்கிற எழுதிவைத்தவிதி எதுவும் இல்லை அது உச்சரிப்பை சொற்களை வைத்துதான் எழுதப்பட வேண்டும் தமிழிற்கு ழ அளகு எண்று படித்திருக்கிறன் அப்ப தமிழ் ற்கு ழ என்று தெரியும்

Link to comment
Share on other sites

மோதலை மேதல் என்று சங்கதி

முன்னரங்கம் என்றதை முந்னரங்கம் என்று பதிவு தலையங்கத்தில எழுதியிருந்தது.

உச்சரிப்பில வித்தியாசம் இருக்கு இவற்றிற்கு

ந் - ன் - ண் .

ன - ண

ஆனா இவற்றிற்கு எப்படி?

ந - ன

நா - னா

நு - னு

நி - னி

ளி - ழி

ளு - ழு

ளை - ழை

ள் - ழ்

ளா - ழா

ன வில சொற்கள் தொடங்காது. அனபடியா ந வை பயன் படுத்த வேணும் என்று ஒரு விதி இருக்கு. அதை விட மிச்ச குளப்பங்கள் எப்படி தீர்ப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ல கரம் ள கரம் ழ கரத்தை எங்கு எப்படிபாவிக்க வேண்டும் என்கிற எழுதிவைத்தவிதி எதுவும் இல்லை அது உச்சரிப்பை சொற்களை வைத்துதான் எழுதப்பட வேண்டும் தமிழிற்கு ழ அ

அழகு??

மன்னிச்சிடுங்க; தமிழில் தட்டச்சுச் செய்யும் போது பிழை வருவது இயற்கை. இது அவ்வாறு வந்த பிழையா இல்லை 'ள' தான் சரியா :roll:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

செல்லமுத்து ஆசிரியர்,

நீங்கள் சிறிது காலத்தின் பின்னர் களத்தில் உலாவுவது போல் தெரிகிறது. இதற்கான் பதிலோ, விளக்கமோ உங்களிடம் இருக்கிறதா?

கனபேருக்கு இந்தக்குழப்பம் இருப்பதை நினைத்து ஆறுதல் அடைகின்றேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவற்றுக்கென்று விதியேதும் இல்லை. அப்படி விதிக்கவும் முடியாது. 'ல'கரம் வருமிடத்தில் மாறிப்பாவிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் தெளிவான உச்சரிப்பு வித்தியாசம் அதற்குண்டு.

ஆனால் 'ள'கர, 'ழ'கரக் குழப்பங்கள் நிறையப்பேருக்கு வர வாய்ப்புண்டு, காரணம் இரண்டையும் ஒரேமாதிரி உச்சரிக்கிறோம். (சரியான 'ழ'கர உச்சரிப்பு தொலைந்தே போயிற்று)

இதைத் தீர்க்க சரியான வழி, பிழையைத் திருத்துவதுதான்.

ஒருமுறை குறி்ப்பிட்ட சொல் தொடர்பான திருத்தத்தை அறிந்துகொண்டால் அதை ஞாபகம் வைத்திருப்பது அல்லது எழுதி வைத்துக்கொள்வது. இப்படி எழுதிவைக்க வேண்டிய சொற்கள் என்று பார்த்தாற்கூட மிகச் சொற்பமானவையே.

முடிந்தால் தமிழ் அகராதியொன்றை வைத்துக்கொள்ளலாம்.

இவ்விசயத்தில் குரவ (கெளரவ)ச் சிக்கலைப் பார்க்காது மற்றவர் திருத்துவதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும்.

இந்த இடத்தில் சகபதிவர்களின் பெயரைச் சொல்லி என் கருத்தைச் சொல்லலாம்.

ஒரே எடுத்துக்காட்டு.

'தல' என்ற பதிவாளர் தொடர்ச்சியாக ஒரு சொல்லைத் தவறாக எழுதிவந்தார்.

'அழி' என்ற வினைச்சொல்லை 'அளி' என்று எழுதிவந்தார். இரண்டும் நேரெதிர் கருத்தைத் தரும் சொற்கள். ஒருமுறை அதைத் திருத்தினேன். அதற்கு அடுத்த கருத்தில் அவர் அச்சொல்லைச் சரியாகப் பாவித்துவிட்டு 'இப்ப சரிதானே நல்லவன்?' என்றார். அத்தோடு சரி.

அதன்பிறகும், இன்றுவரை மீண்டும் பழையபடி பிழையாகவே எழுதி வருகிறார். இப்போது 'சிறிலங்கா அரசின் கவசப்படை வாங்கிய அடி' பற்றிய கட்டுரை தொடர்பான தளத்தில் கடைசியாக எழுதிய கருத்திற்கூட 'வான்படையின் ஏவுகணைகள் புலிகளின் டாங்கிகளை அ'ளி'க்காதா?' என்று கேட்டிருக்கிறார்.

இதோ, மேலே சபேசன் வந்து 'குழப்பம்' தான் சரி என்று திருத்திவிட்டுப் போனபின்பு குறுக்காலபோவான் எப்படி அச்சொல்லை எழுதுகிறார்? 'குளப்பம்' என்று தவறான வடிவத்தில் எழுதுகிறார். அப்படியானால் சபேசன் திருத்தியதில் ஏதாவது பலனிருக்கிறதா? பிறகெப்படி 'ள','ழ' குழப்பங்களைத் தீர்ப்பது? ஏன் அதற்கென்றொரு கருத்துக்களம்? :cry:

(தான் சபேசனின் கருத்தை வாசிக்கவில்லையென்று கு.போவான் சொல்வாரோ? :lol: )

தனக்குச் சிக்கலான, குழப்பமான சொல்லின் சரியான வடிவத்தை ஒருமுறை அறிந்தால் தொடர்ந்து சரியாக எழுத முயலவேண்டும். அத்திருத்தத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபடசம் அச்சொற்களை எழுதிவைத்துக் கொள்ள முயல வேண்டும். அப்படியென்றால்தான் திருந்த வழியுண்டு.

__________________________

தனியே 'ளகர', 'ழகர'ச் சிக்கல் மட்டுமன்றி நிறைய இலக்கணப் பிழைகளுடன்தான் பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

நல்லவன்,

உங்கள் "ல", "ள", "ழ" விளக்கம் அற்புதம்.

பயனுள்ள கருத்துக்கள்.

Link to comment
Share on other sites

தவறாதான் எழுதிப்போட்டன்.

குளம் என்பது நீர் நிலைக்கு பயன்படுத்துறது என்று இப்பான் ஞாபகம் வருது.

எ.காட்டாக கு.போவான் என்று எழுதிற முறை தமிழ் இலகணத்தில் இல்லை.

அதுவும் ஒருவரின் பெயரை அப்படி குறுக்கி எழுதுவது பாரிய அவமரியாதையாக கருதப்படும் எங்கள் கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னர் தொடங்கிய கடவுள் கலாச்சாரத்தில். :lol:

Link to comment
Share on other sites

மோதலை மேதல் என்று சங்கதி

முன்னரங்கம் என்றதை முந்னரங்கம் என்று பதிவு தலையங்கத்தில எழுதியிருந்தது.

உச்சரிப்பில வித்தியாசம் இருக்கு இவற்றிற்கு

ந் - ன் - ண் .

ன - ண

ஆனா இவற்றிற்கு எப்படி?

ந - ன

நா - னா

நு - னு

நி - னி

ளி - ழி

ளு - ழு

ளை - ழை

ள் - ழ்

ளா - ழா

ன வில சொற்கள் தொடங்காது. அனபடியா ந வை பயன் படுத்த வேணும் என்று ஒரு விதி இருக்கு. அதை விட மிச்ச குளப்பங்கள் எப்படி தீர்ப்பது.

ந ன நா னா நு னு இவற்றினிடையே உச்சரிப்பு வித்தியாசம் இருக்கு என நினைக்கிறேன். அதாவது ந நா இவற்றை உச்சரிக்கும் போது உதடுகள் விரியும்.அதாவது கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். ன னா இவற்றை உச்சரிக்கும் போது வாயுக்குள்ளேயே உச்சரிக்கணும். உதடுகள் அவ்வளவு பெரிதாக விரியாது, :roll: :roll:

அது போலவே ழ் (ஈழண்ணா) என்போம். ள் (இள்ளண்ணா) என்போம். இவற்றை உச்சரிக்கும் போதும் அப்படியே. உதாரணத்துக்கு கிளி இதை உச்சரிக்கும் போது உதடுகள் பெரிதாக இழுபடாது. ஆனால் கிழி என சொல்லும் போது முன்னைய சொன்ன உச்சரிப்பினை விட சற்று பெரிதாக உதடுகள் இழுபடும். :roll: :roll:

இதுதான் எனக்கு தெரிந்தவரையிலான வித்தியாசம். இவற்றையும் விட இன்னும் வேறுபாடு இருக்கா என தெரியல்லை. இருந்தால் சொல்லுங்க அடியேனும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். :P :P :P :P

Link to comment
Share on other sites

சில பேர் (வானொலிகள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் உட்பட) "புனர்வாழ்வுக் கழகம்" என்பதை "புணர்வாழ்வுக் கழகம்" என்று உச்சரிப்பார்கள்.

அதில் அர்த்தமே மாறி வேறு ஏதோ அர்த்தம் வருகிறது.

இப்படி உச்சரிக்கின்ற சிலருக்கு நான் இதை சுட்டிக்காட்டி "புணர்"வாழ்வுக் கழகமா? நன்றாக இருக்கிறதே, அது எங்கே இருக்கிறது" என்று கேட்டு கிண்டல் அடித்தபிறகு கொஞ்சம் திருத்தி உச்சரிக்கிறார்கள்.

ஆனால் நிறையப் பேர் இப்படி சொல்கிறார்கள். உங்களிடமும் யாராவது இப்படி உச்சரித்தால் திருத்தி விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவான்,

உப்பிடிப்பாத்தா, காற்புள்ளி (கமா), அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, மேற்கோட்குறி என்று எதுவுமே தமிழ் இலக்கணத்தில் இல்லை. அதெல்லாம் மிகச் சமீபத்தில் மற்றவனிட்ட வறுகினதுதான். இண்டைக்கு அதுகள் இல்லாமல் எழுத முடியுமா?

பெயரைச் சுருக்கிறதை ஏன் பெரிய அவமானமாக் கருதிறீர். அப்பிடிச் சுருக்கிறதுதான் பெரிய புகழ் தெரியுமோ? அதை ஓர் ஒயிலாகவே (Style) சிலர் கருதுகினம்.

எ.காட்டாக, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், அறிஞர்களை இப்படிச் சுருக்கித்தானே எழுதுகிறோம்.

மு.த -> மு.தளையசிங்கம்.

எஸ்.பொ -> எஸ்.பொன்னுத்துரை

மு.பொ -> மு.பொன்னம்பலம்

இதைவிட தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் நூறு காட்டுக்களைச் சொல்லலாம்.

அவ்வகையில் கு.போவானும் இருக்கட்டுமே?

______________________________

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்திய கதையில "வாளோட" தோன்றினதை விட்டிட்டீர்.

நீர் தமிழினத்தின் வீரத்தை ஒழிக்கிறீர் / ஒளிக்கிறீர். [இதில் இரண்டு "ஒளி" என்ற வினைகளுமே ('ஒளி' என்று வெளிச்சத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல்லன்று) பொருந்தும், வேறுவேறு பொருளைக் கொண்டாற்கூட. முதலாவது இல்லாமற் செய்வது, இரண்டாவது மறைத்து வைப்பது]. இதன்மூலம் நீரொரு தமிழினத் துரோகி, கோடரிக்காம்பு எண்டதை இத்தால் முன்மொழிகிறேன்.

(ஈழவன் திரியிறாரோ இதுக்க வழிமொழியிறதுக்கு?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.போவான் எண்டதை விட கு.போ தான் நல்லது.

ஆனா எடுத்த உடன மாத்தாமல் கு.போவான் கொஞ்சம் பிரபலமான பிறகு கு.போ எண்டு மாத்தலாம்.

மு.பொ., எஸ.பொ. வரிசையில கு.போ.

எப்படி?

Link to comment
Share on other sites

குறுக்கால போவான்,

உப்பிடிப்பாத்தா, காற்புள்ளி (கமா), அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, மேற்கோட்குறி என்று எதுவுமே தமிழ் இலக்கணத்தில் இல்லை. அதெல்லாம் மிகச் சமீபத்தில் மற்றவனிட்ட வறுகினதுதான். இண்டைக்கு அதுகள் இல்லாமல் எழுத முடியுமா?

பெயரைச் சுருக்கிறதை ஏன் பெரிய அவமானமாக் கருதிறீர். அப்பிடிச் சுருக்கிறதுதான் பெரிய புகழ் தெரியுமோ? அதை ஓர் ஒயிலாகவே (Style) சிலர் கருதுகினம்.

எ.காட்டாக, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், அறிஞர்களை இப்படிச் சுருக்கித்தானே எழுதுகிறோம்.

மு.த -> மு.தளையசிங்கம்.

எஸ்.பொ -> எஸ்.பொன்னுத்துரை

மு.பொ -> மு.பொன்னம்பலம்

இதைவிட தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் நூறு காட்டுக்களைச் சொல்லலாம்.

அவ்வகையில் கு.போவானும் இருக்கட்டுமே?

______________________________

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முந்திய கதையில "வாளோட" தோன்றினதை விட்டிட்டீர்.

நீர் தமிழினத்தின் வீரத்தை ஒழிக்கிறீர் / ஒளிக்கிறீர். [இதில் இரண்டு "ஒளி" என்ற வினைகளுமே ('ஒளி' என்று வெளிச்சத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல்லன்று) பொருந்தும், வேறுவேறு பொருளைக் கொண்டாற்கூட. முதலாவது இல்லாமற் செய்வது, இரண்டாவது மறைத்து வைப்பது]. இதன்மூலம் நீரொரு தமிழினத் துரோகி, கோடரிக்காம்பு எண்டதை இத்தால் முன்மொழிகிறேன்.

(ஈழவன் திரியிறாரோ இதுக்க வழிமொழியிறதுக்கு?)

ஏன் நல்லவன் - தனியாய் ஒரு தலைப்பை ஆரம்பித்து - எல்லோரும் ...

ழ- ள வித்தியாசங்களை - எல்லோருக்கும் - பயன்படுறமாதிரி - செய்யகூடாதா? :roll: 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன், உங்கள் விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் கூறியது போல 'ல' கரத்தின் உச்சரிப்பு வித்தியாசம். 'ள' கரம், 'ழ' கரம் மற்றும் 'ந' கரம், 'ன' கரம் தான் பிரச்சனையானவைகள். உங்களால் முடிந்தால், பொதுவான, குழப்பமான சொற்களை விளக்கித் தாருங்களேன். உதாரணம்: நீங்கள் மேற்கூறிய 'ஒளி' மற்றும் 'ஒழி' கான விளக்கங்கள்.

Link to comment
Share on other sites

முதல் பாகம் - எழுத்திகாரம்

சிறப்புப்பாயிரம்

வட வேங்கடம் தென் குமரி

ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்

நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி

மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்

பல் புகழ் நிறுத்த படிமையோனே. 15

முதல் பாகம் - எழுத்ததிகாரம்

1. நூல் மரபு

எழுத்து எனப்படுப

அகரம் முதல்

னகர இறுவாய் முப்ப·து என்ப

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 1

அவைதாம்,

குற்றியலிகரம் குற்றியலுகரம்

ஆய்தம் என்ற

முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 2

அவற்றுள்,

அ இ உ

எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்

ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. 3

ஆ ஈ ஊ ஏ ஐ

ஓ ஔ என்னும் அப் பால் ஏழும்

ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. 4

மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 5

நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய

கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். 6

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 7

ஔகார இறுவாய்ப்

பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப. 8

னகார இறுவாய்ப்

பதினெண் எழுத்தும் மெய் என மொழிப. 9

மெய்யடு இயையினும் உயிர் இயல் திரியா. 10

மெய்யின் அளபே அரை என மொழிப. 11

அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. 12

அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே

இசையிடன் அருகும் தெரியும் காலை. 13

உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 14

மெய்யின் இயற்கை புள்ளியடு நிலையல். 15

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. 16

புள்ளி இல்லா எல்லா மெய்யும்

உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்

ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்

ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. 17

மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. 18

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. 19

மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. 20

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. 21

அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்

மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22

ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்

க ச ப என்னும் மூ எழுத்து உரிய. 23

அவற்றுள்,

ல ள·கான் முன்னர் ய வவும் தோன்றும். 24

ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்

தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25

அவற்றுள்,

ண ன·கான் முன்னர்

க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய. 26

ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்

ய·கான் நிற்றல் மெய் பெற்றன்றே. 27

ம·கான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். 28

ய ர ழ என்னும் புள்ளி முன்னர்

முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். 29

மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்

தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே. 30

அ இ உ அம் மூன்றும் சுட்டு. 31

ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. 32

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்

உள என மொழிப இசையடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர். 33

2. மொழி மரபு

குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்

யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு

ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே. 1

புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே

உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். 2

நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்

குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. 3

இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே

கடப்பாடு அறிந்த புணரியலான. 4

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே. 5

ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். 6

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா

ஆய்தம் அ·காக் காலையான. 7

குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்

நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே. 8

ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு

இகர உகரம் இசை நிறைவு ஆகும். 9

நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி. 10

குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. 11

ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி

இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. 12

மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். 13

தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்

மெய்ந் நிலை மயக்கம் மானம் இல்லை. 14

ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற

க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும். 15

அவற்றுள்,

ரகார ழகாரம் குற்றொற்று ஆகா. 16

குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்

தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல. 17

செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின்

னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும். 18

னகாரை முன்னர் மகாரம் குறுகும். 19

மொழிப்படுத்து இசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும்

எழுத்து இயல் திரியா என்மனார் புலவர். 20

அகர இகரம் ஐகாரம் ஆகும். 21

அகர உகரம் ஔகாரம் ஆகும். 22

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்

ஐ என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். 23

ஓர் அளபு ஆகும் இடனுமார் உண்டே

தேரும் காலை மொழிவயினான. 24

இகர யகரம் இறுதி விரவும். 25

பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும். 26

உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா. 27

க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும்

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. 28

சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே

அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே. 29

உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்

வ என் எழுத்தொடு வருதல் இல்லை. 30

ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. 31

ஆவொடு அல்லது யகரம் முதலாது. 32

முதலா ஏன தம் பெயர் முதலும். 33

குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்

ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். 34

முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது

அப் பெயர் மருங்கின் நிலையியலான. 35

உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும். 36

க வவொடு இயையின் ஔவும் ஆகும். 37

எ என வரும் உயிர் மெய் ஈறாகாது. 38

ஒவ்வும் அற்றே ந அலங்கடையே. 39

ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை. 40

உ ஊகாரம் ந வவொடு நவிலா. 41

உச் சகாரம் இரு மொழிக்கு உரித்தே. 42

உப் பகாரம் ஒன்று என மொழிப

இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே. 43

எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே. 44

ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும்

அப் பதினொன்றே புள்ளி இறுதி. 45

உச் சகாரமொடு நகாரம் சிவணும். 46

உப் பகாரமொடு ஞகாரையும் அற்றே

அப் பொருள் இரட்டாது இவணையான. 47

வகரக் கிளவி நான் மொழி ஈற்றது. 48

மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

னகரத் தொடர்மொழி ஒன்ப·து என்ப

புகர் அறக் கிளந்த அ·றிணை மேன. 49

3. பிறப்பியல்

உந்தி முதலா முந்து வளி தோன்றி

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்

உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்தும் சொல்லும் காலை

பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல

திறப்படத் தெரியும் காட்சியான. 1

அவ் வழி,

பன்னீர் உயிரும் தம் நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2

அவற்றுள்,

அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும். 3

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்

அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன

அவைதாம்,

அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. 4

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்

அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5

தம்தம் திரிபே சிறிய என்ப. 6

ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7

சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8

டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9

அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்

நா நுனி பரந்து மெய் உற ஒற்ற

தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற

ற·கான் ன·கான் ஆயிரண்டும் பிறக்கும். 12

நுனி நா அணரி அண்ணம் வருட

ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்

லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15

பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை

கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17

மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்

சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்

மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18

சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்

தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்

தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி

ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்து எழு வளி இசை அரில் தப நாடி

அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20

அ·து இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்

மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21

4. புணரியல்

மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்

இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருப·து

அறு நான்கு ஈறொடு நெறி நின்று இயலும்

எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்

மெய்யே உயிர் என்று ஆயீர் இயல. 1

அவற்றுள்,

மெய் ஈறு எல்லாம் புள்ளியடு-நிலையல். 2

குற்றியலுகரமும் அற்று என மொழிப. 3

உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்றே. 4

உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்

உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்

மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்

மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று

இவ் என அறியக் கிளக்கும் காலை

நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று

ஆயீர் இயல புணர் நிலைச் சுட்டே. 5

அவற்றுள்,

நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு

குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய

பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்

பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்

தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்

தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்

மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என

ஆங்கு அந் நான்கே மொழி புணர் இயல்பே. 6

அவைதாம்,

மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று

இவ் என மொழிப திரியும் ஆறே. 7

நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும்

அடையடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய. 8

மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்

உரியவை உளவே புணர் நிலைச் சுட்டே. 9

வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்

வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும்

எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்

ஒழுக்கல் வலிய புணரும் காலை. 10

ஐ ஒடு கு இன் அது கண் என்னும்

அவ் ஆறு என்ப வேற்றுமை உருபே. 11

வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு

ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும். 12

ஆறன் உருபின் அகரக் கிளவி

ஈறு ஆகு அகர முனைக் கெடுதல் வேண்டும். 13

வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே. 14

உயர்திணைப் பெயரே அ·றிணைப் பெயர் என்று

ஆயிரண்டு என்ப பெயர் நிலைச் சுட்டே. 15

அவற்று வழி மருங்கின் சாரியை வருமே. 16

அவைதாம்,

இன்னே வற்றே அத்தே அம்மே

ஒன்னே ஆனே அக்கே இக்கே

அன் என் கிளவி உளப்பட பிறவும்

அன்ன என்ப சாரியை மொழியே. 17

அவற்றுள்,

இன்னின் இகரம் ஆவின் இறுதி

முன்னர்க் கெடுதல் உரித்தும் ஆகும். 18

அளபு ஆகு மொழி முதல் நிலைஇய உயிர்மிசை

ன·கான் ற·கான் ஆகிய நிலைத்தே. 19

வ·கான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன்

அ·கான் நிற்றல் ஆகிய பண்பே. 20

ன·கான் ற·கான் நான்கன் உருபிற்கு. 21

ஆனின் னகரமும் அதன் ஓரற்றே

நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே. 22

அத்தின் அகரம் அகர முனை இல்லை. 23

இக்கின் இகரம் இகர முனை அற்றே. 24

ஐயின் முன்னரும் அவ் இயல் நிலையும். 25

எப் பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி

அக்கின் இறுதி மெய்ம் மிசையடும் கெடுமே

குற்றியலுகரம் முற்றத் தோன்றாது. 26

அம்மின் இறுதி க ச தக் காலை

தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும். 27

மென்மையும் இடைமையும் வரூஉம் காலை

இன்மை வேண்டும் என்மனார் புலவர். 28

இன் என வரூஉம் வேற்றுமை உருபிற்கு

இன் என் சாரியை இன்மை வேண்டும். 29

பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப

வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்

தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும்

ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி

சொற் சிதர் மருங்கின் வழி வந்து விளங்காது

இடை நின்று இயலும் சாரியை இயற்கை

உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும். 30

அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்

ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்றே

அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. 31

காரமும் கரமும் கானொடு சிவணி

நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை. 32

அவற்றுள்,

கரமும் கானும் நெட்டெழுத்து இலவே. 33

வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய. 34

ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும். 35

புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது

மெய்யடும் சிவணும் அவ் இயல் கெடுத்தே. 36

மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும். 37

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே

உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். 38

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி

இசையின் திரிதல் நிலைஇய பண்பே. 39

அவைதாம்,

முன்னப் பொருள புணர்ச்சிவாயின்

இன்ன என்னும் எழுத்துக் கடன் இலவே. 40

5. தொகைமரபு

க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும்

மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான்

ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே

அன்ன மரபின் மொழிவயினான. 1

ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும்

உயிர் முதல் ஆகிய மொழியும் உளப்பட

அன்றி அனைத்தும் எல்லா வழியும்

நின்ற சொல் முன் இயல்பு ஆகும்மே. 2

அவற்றுள்,

மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார்

சொல்லிய தொடர்மொழி இறுதியான. 3

ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும்

வினை ஓரனைய என்மனார் புலவர். 4

மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும்

வரு வழி நின்ற ஆயிரு புள்ளியும்

வேற்றுமை அல் வழித் திரிபு இடன் இலவே. 5

வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி

மேற் கூறு இயற்கை ஆவயினான. 6

ல ன என வரூஉம் புள்ளி முன்னர்

த ந என வரின் ற ன ஆகும்மே. 7

ண ள என் புள்ளி முன் ட ண எனத் தோன்றும். 8

உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும்

புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும்

இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று

ஆயீர் இயல வல்லெழுத்து வரினே. 9

ஔ என வரூஉம் உயிர் இறு சொல்லும்

ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும்

குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட

முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. 10

உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும்

புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்

எல்லா வழியும் இயல்பு என மொழிப. 11

அவற்றுள்,

இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. 12

அ·றிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே. 13

புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்

வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான்

தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின்

மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்

அம் முறை இரண்டும் உரியவை உளவே

வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 14

மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும்

வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும்

இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்

உயிர் மிக வரு வழி உயிர் கெட வருதலும்

சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும்

சாரியை உள் வழித் தன் உருபு நிலையலும்

சாரியை இயற்கை உறழத் தோன்றலும்

உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்

அ·றிணை விரவுப்பெயர்க்கு அவ் இயல் நிலையலும்

மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும்

அன்ன பிறவும் தன் இயல் மருங்கின்

மெய் பெறக் கிளந்து பொருள் வரைந்து இசைக்கும்

ஐகார வேற்றுமைத் திரிபு என மொழிப. 15

வேற்றுமை அல்வழி இ ஐ என்னும்

ஈற்றுப் பெயர்க் கிளவி மூ வகை நிலைய

அவைதாம்,

இயல்பு ஆகுநவும் வல்லெழுத்து மிகுநவும்

உறழ் ஆகுநவும் என்மனார் புலவர். 16

சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும்

எகர முதல் வினாவின் இகர இறுதியும்

சுட்டுச் சினை நீடிய ஐ என் இறுதியும்

யா என் வினாவின் ஐ என் இறுதியும்

வல்லெழுத்து மிகுநவும் உறழ் ஆகுநவும்

சொல்லிய மருங்கின் உள என மொழிப. 17

நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும்

குறியதன் முன்னர்த் தன் உருபு இரட்டலும்

அறியத் தோன்றிய நெறி இயல் என்ப. 18

ஆறன் உருபினும் நான்கன் உருபினும்

கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை

ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும்

நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன. 19

நும் என் இறுதியும் அந் நிலை திரியாது. 20

உகரமொடு புணரும் புள்ளி இறுதி

யகரமும் உயிரும் வரு வழி இயற்கை. 21

உயிரும் புள்ளியும் இறுதி ஆகி

அளவும் நிறையும் எண்ணும் சுட்டி

உள எனப்பட்ட எல்லாச் சொல்லும்

தம்தம் கிளவி தம் அகப்பட்ட

முத்தை வரூஉம் காலம் தோன்றின்

ஒத்தது என்ப ஏ என் சாரியை. 22

அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு

புரைவது அன்றால் சாரியை இயற்கை. 23

குறை என் கிளவி முன் வரு காலை

நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை. 24

குற்றியலுகரக்கு இன்னே சாரியை. 25

அத்து இடை வரூஉம் கலம் என் அளவே. 26

பனை என் அளவும் கா என் நிறையும்

நினையும் காலை இன்னொடு சிவணும். 27

அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதல் ஆகி

உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே

அவைதாம்,

க ச த ப என்றா ந ம வ என்றா

அகர உகரமொடு அவை என மொழிப. 28

ஈறு இயல் மருங்கின் இவை இவற்று இயல்பு எனக்

கூறிய கிளவிப் பல் ஆறு எல்லாம்

மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி

ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே. 29

பலர் அறி சொல் முன் யாவர் என்னும்

பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை

ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை

ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்

மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே. 30

6. உருபியல்

அ ஆ உ ஊ ஏ ஔ என்னும்

அப் பால் ஆறன் நிலைமொழி முன்னர்

வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை. 1

பல்லவை நுதலிய அகர இறு பெயர்

வற்றொடு சிவணல் எச்சம் இன்றே. 2

யா என் வினாவும் ஆயியல் திரியாது. 3

சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி

ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே. 4

சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி

வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. 5

யா என் வினாவின் ஐ என் இறுதியும்

ஆயியல் திரியாது என்மனார் புலவர்

ஆவயின் வகரம் ஐயடும் கெடுமே. 6

நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும்

ஆவயின் னகரம் ஒற்று ஆகும்மே. 7

ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை. 8

அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு

அத்தொடும் சிவணும் ஏழன் உருபே. 9

ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை. 10

சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும்

கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே. 11

ஏனை வகரம் இன்னொடு சிவணும். 12

ம·கான் புள்ளி முன் அத்தே சாரியை. 13

இன் இடை வரூஉம் மொழியுமார் உளவே. 14

நூம் என் இறுதி இயற்கை ஆகும். 15

தாம் நாம் என்னும் மகர இறுதியும்

யாம் என் இறுதியும் அதன் ஓரன்ன

ஆ எ ஆகும் யாம் என் இறுதி

ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்

ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும். 16

எல்லாம் என்னும் இறுதி முன்னர்

வற்று என் சாரியை முற்றத் தோன்றும்

உம்மை நிலையும் இறுதியான. 17

உயர்திணை ஆயின் நம் இடை வருமே. 18

எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்

எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்

ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப

நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி

உம்மை நிலையும் இறுதியான

தம் இடை வரூஉம் படர்க்கை மேன

நும் இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே. 19

தான் யான் என்னும் ஆயீர் இறுதியும்

மேல் முப் பெயரொடும் வேறுபாடு இலவே. 20

அழனே புழனே ஆயிரு மொழிக்கும்

அத்தும் இன்னும் உறழத் தோன்றல்

ஒத்தது என்ப உணருமோரே. 21

அன் என் சாரியை ஏழன் இறுதி

முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப. 22

குற்றியலுகரத்து இறுதி முன்னர்

முற்றத் தோன்றும் இன் என் சாரியை. 23

நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும்

அப் பால் மொழிகள் அல் வழியான. 24

அவைதாம்,

இயற்கைய ஆகும் செயற்கைய என்ப. 25

எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். 26

ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்

எல்லா எண்ணும் சொல்லும் காலை

ஆன் இடை வரினும் மானம் இல்லை

அ·து என் கிளவி ஆவயின் கெடுமே

உய்தல் வேண்டும் ப·கான் மெய்யே. 27

யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய

ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்

ஆய்தம் கெடுதல் ஆவயினான. 28

ஏழன் உருபிற்குத் திசைப் பெயர் முன்னர்

சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும்

ஆவயின் இறுதி மெய்யடும் கெடுமே. 29

புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்

சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்

தேரும் காலை உருபொடு சிவணி

சாரியை நிலையும் கடப்பாடு இலவே. 30

7. உயிர்மயங்கியல்

அகர இறுதிப் பெயர் நிலை முன்னர்

வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின்

தம்தம் ஒத்த ஒற்று இடை மிகுமே. 1

வினையெஞ்சுகிளவியும் உவமக் கிளவியும்

என என் எச்சமும் சுட்டின் இறுதியும்

ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்

ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. 2

சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின்

ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும். 3

ய வ முன் வரினே வகரம் ஒற்றும். 4

உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது. 5

நீட வருதல் செய்யுளுள் உரித்தே. 6

சாவ என்னும் செய என் எச்சத்து

இறுதி வகரம் கெடுதலும் உரித்தே. 7

அன்ன என்னும் உவமக் கிளவியும்

அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்

செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும்

ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்

செய்த என்னும் பெயரெஞ்சுகிளவியும்

செய்யிய என்னும் வினையெஞ்சுகிளவியும்

அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்

பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட

அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப. 8

வாழிய என்னும் செய என் கிளவி

இறுதி யகரம் கெடுதலும் உரித்தே. 9

உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். 10

பலவற்று இறுதி நீடு மொழி உளவே

செய்யுள் கண்ணிய தொடர்மொழியான. 11

தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின்

லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்தே. 12

வல்லெழுத்து இயற்கை உறழத் தோன்றும். 13

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 14

மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 15

மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை. 16

அத்து அவண் வரினும் வரை நிலை இன்றே. 17

பலவற்று இறுதி உருபு இயல் நிலையும். 18

ஆகார இறுதி அகர இயற்றே. 19

செய்யா என்னும் வினையெஞ்சுகிளவியும்

அவ் இயல் திரியாது என்மனார் புலவர். 20

உம்மை எஞ்சிய இரு பெயர்த் தொகைமொழி

மெய்ம்மையாக அகரம் மிகுமே. 21

ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும்

யா என் வினாவும் பலவற்று இறுதியும்

ஏவல் குறித்த உரையசை மியாவும்

தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியடு

அன்றி அனைத்தும் இயல்பு என மொழிப. 22

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 23

குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்

அறியத் தோன்றும் அகரக் கிளவி. 24

இரா என் கிளவிக்கு அகரம் இல்லை. 25

நிலா என் கிளவி அத்தொடு சிவணும். 26

யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்

ஆ முப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. 27

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 28

மாமரக் கிளவியும் ஆவும் மாவும்

ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன

அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா

னகரம் ஒற்றும் ஆவும் மாவும் 29

ஆன் ஒற்று அகரமொடு நிலை இடன் உடைத்தே. 30

ஆன் முன் வரூஉம் ஈகார பகரம்

தான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே. 31

குறியதன் இறுதிச் சினை கெட உகரம்

அறிய வருதல் செய்யுளுள் உரித்தே. 32

இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்

வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 33

இனி அணி என்னும் காலையும் இடனும்

வினையெஞ்சுகிளவியும் சுட்டும் அன்ன. 34

இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி

நின்ற இகரம் உகரம் ஆதல்

தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே. 35

சுட்டின் இயற்கை முன் கிளந்தற்றே. 36

பதக்கு முன் வரினே தூணிக் கிளவி

முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே. 37

உரி வரு காலை நாழிக் கிளவி

இறுதி இகரம் மெய்யடும் கெடுமே

டகாரம் ஒற்றும் ஆவயினான. 38

பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு

அத்தும் இன்னும் சாரியை ஆகும். 39

வளி என வரூஉம் பூதக் கிளவியும்

அவ் இயல் நிலையல் செவ்விது என்ப. 40

உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 41

புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை. 42

ஏனைப் புளிப் பெயர் மெல்லெழுத்து மிகுமே. 43

வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை

ஒல்வழி அறிதல் வழக்கத்தான. 44

நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு

ஆன் இடை வருதல் ஐயம் இன்றே. 45

திங்கள் முன் வரின் இக்கே சாரியை. 46

ஈகார இறுதி ஆகார இயற்றே. 47

நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்

மீ என மரீஇய இடம் வரை கிளவியும்

ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 48

இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம்

உடன் நிலை மொழியும் உள என மொழிப. 49

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 50

நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும்

ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 51

உகர இறுதி அகர இயற்றே. 52

சுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும். 53

ஏனவை வரினே மேல் நிலை இயல்பே. 54

சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே. 55

அன்று வரு காலை ஆ ஆகுதலும்

ஐ வரு காலை மெய் வரைந்து கெடுதலும்

செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப. 56

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 57

எருவும் செருவும் அம்மொடு சிவணி

திரிபு இடன் உடைய தெரியும் காலை

அம்மின் மகரம் செருவயின் கெடுமே

தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை. 58

ழகர உகரம் நீடு இடன் உடைத்தே

உகரம் வருதல் ஆவயினான. 59

ஒடுமரக் கிளவி உதி மர இயற்றே. 60

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்

ஒற்று இடை மிகா வல்லெழுத்து இயற்கை. 61

ஊகார இறுதி ஆகார இயற்றே. 62

வினையெஞ்சுகிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்

நினையும் காலை அவ் வகை வரையார். 63

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 64

குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்

நிற்றல் வேண்டும் உகரக் கிளவி. 65

பூ என் ஒரு பெயர் ஆயியல்பு இன்றே

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. 66

ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும். 67

அக்கு என் சாரியை பெறுதலும் உரித்தே

தக்க வழி அறிதல் வழக்கத்தான. 68

ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்

இன் இடை வரினும் மானம் இல்லை.- 69

எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா

முன்னிலை மொழிய என்மனார் புலவர்

தேற்றமும் சிறப்பும் அல் வழியான. 70

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்

மேற் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா. 71

ஏகார இறுதி ஊகார இயற்றே. 72

மாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும்

கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். 73

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. 74

ஏ என் இறுதிக்கு எகரம் வருமே. 75

சே என் மரப்பெயர் ஒடுமர இயற்றே. 76

பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும். 77

ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்

வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே. 78

சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும். 79

விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்

ஆ முப் பெயரும் சேமர இயல. 80

பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்

நினையும் காலை அம்மொடு சிவணும்

ஐ என் இறுதி அரை வரைந்து கெடுமே

மெய் அவண் ஒழிய என்மனார் புலவர். 81

பனையின் முன்னர் அட்டு வரு காலை

நிலை இன்று ஆகும் ஐ என் உயிரே

ஆகாரம் வருதல் ஆவயினான. 82

கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப

கடி நிலை இன்றே வல்லெழுத்து மிகுதி. 83

திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன. 84

மழை என் கிளவி வளி இயல் நிலையும். 85

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்

ஐ என் இறுதி அவா முன் வரினே

மெய்யடும் கெடுதல் என்மனார் புலவர்

டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும். 86

ஓகார இறுதி ஏகார இயற்றே. 87

மாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும்

கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். 88

ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்றே. 89

வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே

ஒகரம் வருதல் ஆவயினான. 90

இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும். 91

உருபு இயல் நிலையும் மொழியுமார் உளவே

ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும். 92

ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர்

அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும்

வல்லெழுத்து மிகுதல் வரை நிலை இன்றே

அவ் இரு ஈற்றும் உகரம் வருதல்

செவ்விது என்ப சிறந்திசினோரே. 93

8. புள்ளிமயங்கியல்

ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்

அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்

வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே

உகரம் வருதல் ஆவயினான. 1

ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும். 2

நகர இறுதியும் அதன் ஓரற்றே. 3

வேற்றுமைக்கு உக் கெட அகரம் நிலையும். 4

வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி

வரும் இடன் உடைத்தே மெல்லெழுத்து இயற்கை. 5

ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. 6

ணகார இறுதி வல்லெழுத்து இயையின்

டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே. 7

ஆணும் பெண்ணும் அ·றிணை இயற்கை. 8

ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே. 9

விண் என வரூஉம் காயப் பெயர்வயின்

உண்மையும் உரித்தே அத்து என் சாரியை

செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை. 10

தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 11

கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே. 12

வேற்றுமை அல்வழி எண் என் உணவுப் பெயர்

வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே. 13

முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும். 14

மகர இறுதி வேற்றுமை ஆயின்

துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. 15

அகர ஆகாரம் வரூஉம் காலை

ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே. 16

மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே

செல் வழி அறிதல் வழக்கத்தான. 17

இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே. 18

அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும். 19

அகம் என் கிளவிக்குக் கை முன் வரினே

முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும்

வரை நிலை இன்றே ஆசிரியர்க்க

மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான. 20

இலம் என் கிளவிக்குப் படு வரு காலை

நி

Link to comment
Share on other sites

தொல்காப்பியரின் 'தொல்காப்பியம்'

இரண்டாம் பாகம் - சொல்லதிகாரம்

1. கிளவியாக்கம்

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

அ·றிணை என்மனார் அவர் அல பிறவே

ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே. 1

ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல்

பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி

அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே. 2

ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று

ஆயிரு பாற்சொல் அ·றிணையவ்வே. 3

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்

இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே

உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும். 4

ன·கான் ஒற்றே ஆடூஉ அறி சொல். 5

ள·கான் ஒற்றே மகடூ அறி சொல். 6

ர·கான் ஒற்றும் பகர இறுதியும்

மாரைக் கிளவி உளப்பட மூன்றும்

நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே. 7

ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த

குன்றியலுகரத்து இறுதி ஆகும். 8

அ ஆ வ என வரூஉம் இறுதி

அப் பால் மூன்றே பல அறி சொல்லே. 9

இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய

ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்

தோற்றம்தாமே வினையடு வருமே. 10

வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்

பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்

மயங்கல் கூடா தம் மரபினவே. 11

ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி

ஆண்மை அறி சொற்கு ஆகு இடன் இன்றே. 12

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல். 13

வினாவும் செப்பே வினா எதிர் வரினே. 14

செப்பே வழீஇயினும் வரை நிலை இன்றே

அப் பொருள் புணர்ந்த கிளவியான. 15

செப்பினும் வினாவினும் சினை முதல் கிளவிக்கு

அப் பொருள் ஆகும் உறழ் துணைப் பொருளே. 16

தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்

பகுதிக் கிளவி வரை நிலை இலவே. 17

இனச் சுட்டு இல்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை

வழக்கு ஆறு அல்ல செய்யுள் ஆறே. 18

இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல். 19

செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல். 20

ஆக்கம்தானே காரணம் முதற்றே. 21

ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்

போக்கு இன்று என்ப வழக்கினுள்ளே. 22

பால் மயக்கு உற்ற ஐயக் கிளவி

தான் அறி பொருள்வயின் பன்மை கூறல். 23

உருபு என மொழியினும் அ·றிணைப் பிரிப்பினும்

இரு வீற்றும் உரித்தே சுட்டும் காலை. 24

தன்மை சுட்டலும் உரித்து என மொழிப

அன்மைக் கிளவி வேறு இடத்தான. 25

அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை

நடை பெற்று இயலும் வண்ணச் சினைச் சொல். 26

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்

ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்

வழக்கின் ஆகிய உயர் சொல் கிளவி

இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல. 27

செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்

நிலை பெறத் தோன்றும் அந் நாற் சொல்லும்

தன்மை முன்னிலை படர்க்கை என்னும்

அம் மூ இடத்தும் உரிய என்ப. 28

அவற்றுள்,

தரு சொல் வரு சொல் ஆயிரு கிளவியும்

தன்மை முன்னிலை ஆயீர் இடத்த. 29

ஏனை இரண்டும் ஏனை இடத்த. 30

யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்

அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும். 31

அவற்றுள்,

யாது என வரூஉம் வினாவின் கிளவி

அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத்

தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே. 32

இனைத்து என அறிந்த சினை முதல் கிளவிக்கு

வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். 33

மன்னாப் பொருளும் அன்ன இயற்றே. 34

எப் பொருள் ஆயினும் அல்லது இல் எனின்

அப் பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறல். 35

அப் பொருள் கூறின் சுட்டிக் கூறல். 36

பொருளடு புணராச் சுட்டுப்பெயர் ஆயினும்

பொருள் வேறுபடாஅது ஒன்று ஆகும்மே. 37

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்

வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்

சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்

இயற்பெயர் வழிய என்மனார் புலவர். 38

முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே. 39

சுட்டு முதல் ஆகிய காரணக் கிளவியும்

சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும். 40

சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்

இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். 41

ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி

தொழில் வேறு கிளப்பின் ஒன்று இடன் இலவே. 42

தன்மைச் சொல்லே அ·றிணைக் கிளவி என்று

எண்ணு வழி மருங்கின் விரவுதல் வரையார். 43

ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற்சொல்

ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது. 44

வியங்கோள் எண்ணுப்பெயர் திணை விரவு வரையார். 45

வேறு வினைப் பொதுச் சொல் ஒரு வினை கிளவார். 46

எண்ணுங்காலும் அது அதன் மரபே. 47

இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா. 48

ஒரு பெயர்ப் பொதுச் சொல் உள் பொருள் ஒழியத்

தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்

உயர்திணை மருங்கினும் அ·றிணை மருங்கினும். 49

பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்

மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. 50

பலவயினானும் எண்ணுத் திணை விரவுப்பெயர்

அ·றிணை முடிபின செய்யுளுள்ளே. 51

வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்

வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல் என்று

ஆயிரு வகைய பல பொருள் ஒரு சொல். 52

அவற்றுள்,

வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்

வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும்

தேறத் தோன்றும் பொருள் தெரி நிலையே. 53

ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும். 54

வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல்

நினையும் காலை கிளந்தாங்கு இயலும். 55

குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி. 56

குடிமை ஆண்மை இளமை மூப்பே

அடிமை வன்மை விருந்தே குழுவே

பெண்மை அரசே மகவே குழவி

தன்மை திரி பெயர் உறுப்பின் கிளவி

காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று

ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ

அன்ன பிறவும் அவற்றொடு சிவணி

முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்

உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்

அ·றிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும். 57

காலம் உலகம் உயிரே உடம்பே

பால் வரை தெய்வம் வினையே பூதம்

ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம்

ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன

ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்

பால் பிரிந்து இசையா உயர்திணை மேன. 58

நின்றாங்கு இசைத்தல் இவண் இயல்பு இன்றே. 59

இசைத்தலும் உரிய வேறிடத்தான. 60

எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்தே. 61

கண்ணும் தோளும் முலையும் பிறவும்

பன்மை சுட்டிய சினை நிலைக் கிளவி

பன்மை கூறும் கடப்பாடு இலவே

தம் வினைக்கு இயலும் எழுத்து அலங்கடையே. 62

2. வேற்றுமையியல்

வேற்றுமைதாமே ஏழ் என மொழிப. 1

விளி கொள்வதன்கண் விளியடு எட்டே. 2

அவைதாம்,

பெயர் ஐ ஒடு கு

இன் அது கண் விளி என்னும் ஈற்ற. 3

அவற்றுள்,

எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே. 4

பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்

வினை நிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்

பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று

அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே. 5

பெயரின் ஆகிய தொகையுமார் உளவே

அவ்வும் உரிய அப்பாலான. 6

எவ் வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி

அவ் இயல் நிலையல் செவ்விது என்ப. 7

கூறிய முறையின் உருபு நிலை திரியாது

ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப. 8

பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா

தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே. 9

இரண்டாகுவதே,

ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

எவ் வழி வரினும் வினையே வினைக்குறிப்பு

அவ் இரு முதலின் தோன்றும் அதுவே. 10

காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்

ஒப்பின் புகழின் பழியின் என்றா

பெறலின் இழவின் காதலின் வெகுளியின்

செறலின் உவத்தலின் கற்பின் என்றா

அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்

நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா

ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்

நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா

அன்ன பிறவும் அம் முதற் பொருள

என்ன கிளவியும் அதன் பால என்மனார். 11

மூன்றாகுவதே,

ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

வினைமுதல் கருவி அனை முதற்று அதுவே. 12

அதனின் இயறல் அதன் தகு கிளவி

அதன் வினைப்படுதல் அதனின் ஆதல்

அதனின் கோடல் அதனொடு மயங்கல்

அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி

அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி

அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை

இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம்

அன்ன பிறவும் அதன் பால என்மனார். 13

நான்காகுவதே,

கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

எப் பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே. 14

அதற்கு வினை உடைமையின் அதற்கு உடம்படுதலின்

அதற்குப் படு பொருளின் அது ஆகு கிளவியின்

அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின்

நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று

அப் பொருட் கிளவியும் அதன் பால என்மனார். 15

ஐந்தாகுவதே,

இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

இதனின் இற்று இது என்னும் அதுவே. 16

வண்ணம் வடிவே அளவே சுவையே

தண்மை வெம்மை அச்சம் என்றா

நன்மை தீமை சிறுமை பெருமை

வன்மை மென்மை கடுமை என்றா

முதுமை இளமை சிறத்தல் இழித்தல்

புதுமை பழமை ஆக்கம் என்றா

இன்மை உடைமை நாற்றம் தீர்தல்

பன்மை சின்மை பற்று விடுதல் என்று

அன்ன பிறவும் அதன் பால என்மனார். 17

ஆறாகுவதே,

அது எனப் பெரிய வேற்றுமைக் கிளவி

தன்னினும் பிறிதினும் இதனது இது எனும்

அன்ன கிளவிக் கிழமைத்து அதுவே. 18

இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்

செயற்கையின் முதுமையின் வினையின் என்றா

கருவியின் துணையின் கலத்தின் முதலின்

ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா

தெரிந்து மொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்

திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன

கூறிய மருங்கின் தோன்றும் கிளவி

ஆறன் பால என்மனார் புலவர். 19

ஏழாகுவதே,

கண் எனப் பெயரிய வேற்றுமை கிளவி

வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின்

அனை வகைக் குறிப்பின் தோன்றும் அதுவே. 20

கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல்

பின் சார் அயல் புடை தேவகை எனாஅ

முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ

அன்ன பிறவும் அதன் பால என்மனார். 21

வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை

ஈற்று நின்று இயலும் தொகைவயின் பிரிந்து

பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்

எல்லாச் சொல்லும் உரிய என்ப. 22

3. வேற்றுமைமயங்கியல்

கருமம் அல்லாச் சார்பு என் கிளவிக்கு

உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை. 1

சினை நிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும்

வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர். 2

கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. 3

முதற்சினைக் கிளவிக்கு அது என் வேற்றுமை

முதற்கண் வரினே சினைக்கு ஐ வருமே. 4

முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை

சினை முன் வருதல் தெள்ளிது என்ப. 5

முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ

நுவலும் காலை சொற்குறிப்பினவே. 6

பிண்டப் பெயரும் ஆயியல் திரியா

பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே. 7

ஒரு வினை ஒடுச் சொல் உயர்பின் வழித்தே. 8

மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய

ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி

நோக்கு ஓரனைய என்மனார் புலவர். 9

இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அவ்

இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும். 10

அது என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்

அது என் உருபு கெட குகரம் வருமே. 11

தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்

கடி நிலை இலவே பொருள்வயினான. 12

ஈற்றுப் பெயர் முன்னர் மெய் அறி பனுவலின்

வேற்றுமை தெரிப உணருமோரே. 13

ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும்

தாம் பிரிவு இலவே தொகை வரு காலை. 14

ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு

ஏழும் ஆகும் உறை நிலத்தான. 15

குத் தொக வரூஉம் கொடை எதிர் கிளவி

அப் பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும், 16

அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்

எச்சம் இலவே பொருள்வயினான. 17

அன்ன பிறவும் தொல் நெறி பிழையாது

உருபினும் பொருளினும் மெய் தடுமாறி

இரு வயின் நிலையும் வேற்றுமை எல்லாம்

திரிபு இடன் இலவே தெரியுமோர்க்கே. 18

உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி

ஒரு சொல் நடைய பொருள் செல் மருங்கே. 19

இறுதியும் இடையும் எல்லா உருபும்

நெறி படு பொருள்வயின் நிலவுதல் வரையார். 20

பிறிது பிறிது ஏற்றலும் உருபு தொக வருதலும்

நெறிபட வழங்கிய வழி மருங்கு என்ப. 21

ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின்

மெய் உருபு தொகாஅ இறுதியான. 22

யாதன் உருபின் கூறிற்று ஆயினும்

பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும். 23

எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின்

பொருள் நிலை திரியா வேற்றுமைச் சொல்லே. 24

கு ஐ ஆன் என வரூஉம் இறுதி

அவ்வொடு சிவணும் செய்யுளுள்ளே. 25

அ எனப் பிறத்தல் அ·றிணை மருங்கின்

குவ்வும் ஐயும் இல் என மொழிப. 26

இதனது இது இற்று என்னும் கிளவியும்

அதனைக் கொள்ளும் பொருள்வயினானும்

அதனான் செயற்படற்கு ஒத்த கிளவியும்

முறை கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும்

பால் வரை கிளவியும் பண்பின் ஆக்கமும்

காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்

பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழிக் கிளவியும்

அன்ன பிறவும் நான்கன் உருபின்

தொல் நெறி மரபின தோன்றல் ஆறே. 27

ஏனை உருபும் அன்ன மரபின

மானம் இலவே சொல் முறையான. 28

வினையே செய்வது செயப்படுபொருளே

நிலனே காலம் கருவி என்றா

இன்னதற்கு இது பயன் ஆக என்னும்

அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ

ஆயெட்டு என்ப தொழில் முதனிலையே. 29

அவைதாம்,

வழங்கு இயல் மருங்கின் குன்றுவ குன்றும். 30

முதலின் கூறும் சினை அறி கிளவியும்

சினையின் கூறும் முதல் அறி கிளவியும்

பிறந்தவழிக் கூறலும் பண்பு கொள் பெயரும்

இயன்றது மொழிதலும் இருபெயரொட்டும்

வினைமுதல் உரைக்கும் கிளவியடு தொகைஇ

அனை மரபினவே ஆகுபெயர்க் கிளவி. 31

அவைதாம்,

தம்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும்

ஒப்பு இல் வழியான் பிறிது பொருள் சுட்டலும்

அப் பண்பினவே நுவலும் காலை. 32

வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 33

அளவு நிறையும் அவற்றொடு கொள்வழி

உள என மொழிப உணர்ந்திசினோரே. 34

கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்

கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே. 35

4. விளிமரபு

விளி எனப்படுப கொள்ளும் பெயரொடு

தெளியத் தோன்றும் இயற்கைய என்ப. 1

அவ்வே,

இவ் என அறிதற்கு மெய் பெறக் கிளப்ப. 2

அவைதாம்,

இ உ ஐ ஓ என்னும் இறுதி

அப் பால் நான்கே உயர்திணை மருங்கின்

மெய்ப் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே.3

அவற்றுள்,

இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும். 4

ஓவும் உவ்வும் ஏயடு சிவணும். 5

உகரம்தானே குற்றியலுகரம். 6

ஏனை உயிரே உயர்திணை மருங்கின்

தாம் விளி கொள்ளா என்மனார் புலவர். 7

அளபெடை மிகூஉம் இகர இறு பெயர்

இயற்கைய ஆகும் செயற்கைய என்ப. 8

முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி

ஆவொடு வருதற்கு உரியவும் உளவே. 9

அண்மைச் சொல்லே இயற்கை ஆகும். 10

ன ர ல ள என்னும் அந் நான்கு என்ப

புள்ளி இறுதி விளி கொள் பெயரே. 11

ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா. 12

அன் என் இறுதி ஆ ஆகும்மே. 13

அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும். 14

ஆன் என் இறுதி இயற்கை ஆகும். 15

தொழிலின் கூறும் ஆன் என் இறுதி

ஆய் ஆகும்மே விளிவயினான. 16

பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே. 17

அளபெடைப் பெயரே அளபெடை இயல. 18

முறைப்பெயர்க் கிளவி ஏயடு வருமே. 19

தான் என் பெயரும் சுட்டுமுதற் பெயரும்

யான் என் பெயரும் வினாவின் பெயரும்

அன்றி அனைத்தும் விளி கோள் இலவே. 20

ஆரும் அருவும் ஈரொடு சிவணும். 21

தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும்

வழுக்கு இன்று என்மனார் வயங்கியோரே. 22

பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே. 23

அளபெடைப் பெயரே அளபெடை இயல. 24

சுட்டுமுதற் பெயரே முன் கிளந்தன்ன. 25

நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று

அம் முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும். 26

எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே

நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும். 27

அயல் நெடிது ஆயின் இயற்கை ஆகும். 28

வினையினும் பண்பினும்

நினையத் தோன்றும் ஆள் என் இறுதி

ஆய் ஆகும்மே விளிவயினான. 29

முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல. 30

சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்

முன் கிளந்தன்ன என்மனார் புலவர். 31

அளபெடைப் பெயரே அளபெடை இயல. 32

கிளந்த இறுதி அ·றிணை விரவுப்பெயர்

விளம்பிய நெறிய விளிக்கும் காலை. 33

புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய

அ·றிணை மருங்கின் எல்லாப் பெயரும்

விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின்

தெளி நிலை உடைய ஏகாரம் வரலே. 34

உள எனப்பட்ட எல்லாப் பெயரும்

அளபு இறந்தனவே விளிக்கும் காலை

சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான. 35

அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்

அம் முறைப்பெயரொடு சிவணாது ஆயினும்

விளியடு கொள்ப தெளியுமோரே. 36

த ந நு எ என அவை முதல் ஆகித்

தன்மை குறித்த ன ர ள என் இறுதியும்

அன்ன பிறவும் பெயர் நிலை வரினே

இன்மை வேண்டும் விளியடு கொளலே. 37

5. பெயரியல்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. 1

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

சொல்லின் ஆகும் என்மனார் புலவர். 2

தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்

இரு பாற்று என்ப பொருண்மை நிலையே. 3

சொல் எனப்படுப பெயரே வினை என்று

ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே. 4

இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்

அவற்று வழி மருங்கின் தோன்றும் என்ப. 5

அவற்றுள்,

பெயர் எனப்படுபவை தெரியும் காலை

உயர்திணைக்கு உரிமையும் அ·றிணைக்கு உரிமையும்

ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்

அம் மூ உருபின தோன்றல் ஆறே. 6

இரு திணைப் பிரிந்த ஐம் பால் கிளவிக்கும்

உரியவை உரிய பெயர்வயினான. 7

அவ்வழி,

அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும்

அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும்

அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும்

யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்

யாவன் யாவள் யாவர் என்னும்

ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்

பால் அறி வந்த உயர்திணைப் பெயரே. 8

ஆண்மை அடுத்த மகன் என் கிளவியும்

பெண்மை அடுத்த மகள் என் கிளவியும்

பெண்மை அடுத்த இகர இறுதியும்

நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்

முறைமை சுட்டா மகனும் மகளும்

மாந்தர் மக்கள் என்னும் பெயரும்

ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும்

சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும்

அவை முதல் ஆகிய பெண்டு என் கிளவியும்

ஒப்பொடு வரூஉம் கிளவியடு தொகைஇ

அப் பதினைந்தும் அவற்று ஓரன்ன. 9

எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்

எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்

பெண்மை அடுத்த மகன் என் கிளவியும்

அன்ன இயல என்மனார் புலவர். 10

நிலப் பெயர் குடிப் பெயர் குழுவின் பெயரே

வினைப் பெயர் உடைப் பெயர் பண்பு கொள் பெயரே

பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயரே

பல்லோர்க் குறித்த சினை நிலைப் பெயரே

பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயரே

கூடி வரு வழக்கின் ஆடு இயற் பெயரே

இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரொடு

அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே. 11

அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

என்ன பெயரும் அத் திணையவ்வே. 12

அது இது உது என வரூஉம் பெயரும்

அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்

அவை இவை உவை என வரூஉம் பெயரும்

அவை முதல் ஆகிய வகரப் பெயரும்

யாது யா யாவை என்னும் பெயரும்

ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்

பால் அறி வந்த அ·றிணைப் பெயரே. 13

பல்ல பல சில என்னும் பெயரும்

உள்ள இல்ல என்னும் பெயரும்

வினைப் பெயர்க் கிளவியும் பண்பு கொள் பெயரும்

இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்

ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட

அப் பால் ஒன்பதும் அவற்று ஓரன்ன. 14

கள்ளடு சிவணும் அவ் இயற்பெயரே

கொள் வழி உடைய பல அறி சொற்கே. 15

அன்ன பிறவும் அ·றிணை மருங்கின்

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

என்ன பெயரும் அத் திணையவ்வே. 16

தெரிநிலை உடைய அ·றிணை இயற்பெயர்

ஒருமையும் பன்மையும் வினையடு வரினே. 17

இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்

திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்

நினையும் காலை தம்தம் மரபின்

வினையடு அல்லது பால் தெரிபு இலவே. 18

நிக ழூஉ நின்ற பலர் வரை கிளவியின்

உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே

அன்ன மரபின் வினைவயினான. 19

இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயரே

முறைப்பெயர்க் கிளவி தாமே தானே

எல்லாம் நீயிர் நீ எனக் கிளந்து

சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு

அன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே. 20

அவற்றுள்,

நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்

நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே

முறைப்பெயர்க் கிளவி இரண்டு ஆகும்மே

ஏனைப் பெயரே தம்தம் மரபின. 21

அவைதாம்,

பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்

பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று

அந் நான்கு என்ப இயற்பெயர் நிலையே. 22

பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்

பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் என்று

அந் நான்கு என்ப சினைப்பெயர் நிலையே. 23

பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே

ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரே

பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே

ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் என்று

அந் நான்கு என்ப சினைமுதற்பெயரே. 24

பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று

ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே. 25

பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. 26

ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. 27

பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றே பலவே ஒருவர் என்னும்

என்று இப் பாற்கும் ஓரன்னவ்வே. 28

ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்

ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. 29

தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே. 30

தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 31

எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி

பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே 32

தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது

உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை. 33

நீயிர் நீ என வரூஉம் கிளவி

பால் தெரிபு இலவே உடன் மொழிப் பொருள. 34

அவற்றுள்,

நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 35

ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே. 36

ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி

இரு பாற்கும் உரித்தே தெரியும் காலை. 37

தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும். 38

இன்ன பெயரே இவை எனல் வேண்டின்

முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல். 39

மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி

மகடூஉ இயற்கை தொழில்வயினான. 40

ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே

ஆயிடன் அறிதல் செய்யுளுள்ளே. 41

இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்

இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா

நிலத்துவழி மருங்கின் தோன்றலான. 42

திணையடு பழகிய பெயர் அலங்கடையே. 43

6. வினையியல்

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது

நினையும் காலை காலமொடு தோன்றும். 1

காலம்தாமே மூன்று என மொழிப. 2

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா

அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்

மெய்ந் நிலை உடைய தோன்றலாறே. 3

குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்

காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்

உயர்திணைக்கு உரிமையும் அ·றிணைக்கு உரிமையும்

ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்

அம் மூ உருபின தோன்றலாறே. 4

அவைதாம்,

அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும்

உம்மொடு வரூஉம் க ட த ற என்னும்

அந் நாற் கிளவியடு ஆயெண் கிளவியும்

பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே. 5

க ட த ற என்னும்

அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு

ஏன் அல் என வரூஉம் ஏழும்

தன் வினை உரைக்கும் தன்மைச் சொல்லே. 6

அவற்றுள்,

செய்கு என் கிளவி வினையடு முடியினும்

அவ் இயல் திரியாது என்மனார் புலவர். 7

அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்

ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. 8

அர் ஆர் ப என வரூஉம் மூன்றும்

பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. 9

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை

காலக் கிளவியடு முடியும் என்ப. 10

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

அந் நால் ஐந்தும் மூன்று தலை இட்ட

முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே. 11

அவற்றுள்,

பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி

எண் இயல் மருங்கின் திரிபவை உளவே. 12

யாஅர் என்னும் வினாவின் கிளவி

அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே. 13

பால் அறி மரபின் அம் மூ ஈற்றும்

ஆ ஓ ஆகும் செய்யுளுள்ளே. 14

ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும். 15

அதுச் சொல் வேற்றுமை உடைமையானும்

கண் என் வேற்றுமை நிலத்தினானும்

ஒப்பினானும் பண்பினானும் என்று

அப் பால் காலம் குறிப்பொடு தோன்றும். 16

அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்

அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்

என்ன கிளவியும் குறிப்பே காலம். 17

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்

காலக் கிளவி உயர்திணை மருங்கின்

மேலைக் கிளவியடு வேறுபாடு இலவே. 18

அ ஆ வ என வரூஉம் இறுதி

அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை. 19

ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த

குன்றியலுகரத்து இறுதி ஆகும். 20

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

அம் மூ இரண்டும் அ·றிணையவ்வே. 21

அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும்

ஒக்கும் என்ப எவன் என் வினாவே. 22

இன்று இல உடைய என்னும் கிளவியும்

அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும்

பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும்

பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்

ஒப்பொடு வரூஉம் கிளவியடு தொகைஇ

அப் பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும். 23

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த

அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்

காலக் கிளவி அ·றிணை மருங்கின்

மேலைக் கிளவியடு வேறுபாடு இலவே. 24

முன்னிலை வியங்கோள் வினையெஞ்சுகிளவி

இன்மை செப்பல் வேறு என் கிளவி

செய்ம்மன செய்யும் செய்த என்னும்

அம் முறை நின்ற ஆயெண் கிளவியும்

திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி

இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய. 25

அவற்றுள்,

முன்னிலைக் கிளவி

இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும்

ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். 26

இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும்

பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்

சொல் ஓரனைய என்மனார் புலவர். 27

எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி

ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே. 28

அவற்றுள்,

முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு

மன்னாது ஆகும் வியங்கோட் கிளவி. 29

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை

அவ் வயின் மூன்றும் நிகழும் காலத்துச்

செய்யும் என்னும் கிளவியடு கொள்ளா. 30

செய்து செய்யூ செய்பு செய்தென

செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என

அவ் வகை ஒன்பதும் வினையெஞ்சுகிளவி. 31

பின் முன் கால் கடை வழி இடத்து என்னும்

அன்ன மரபின் காலம் கண்ணிய

என்ன கிளவியும் அவற்று இயல்பினவே. 32

அவற்றுள்,

முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின. 33

அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின்

சினையடு முடியா முதலொடு முடியினும்

வினை ஓரனைய என்மனார் புலவர். 34

ஏனை எச்சம் வினைமுதலானும்

ஆன் வந்து இயையும் வினைநிலையானும்

தாம் இயல் மருங்கின் முடியும் என்ப. 35

பல் முறையானும் வினையெஞ்சுகிளவி

சொல் முறை முடியாது அடுக்குந வரினும்

முன்னது முடிய முடியுமன் பொருளே. 36

நிலனும் பொருளும் காலமும் கருவியும்

வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட

அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய

செய்யும் செய்த என்னும் சொல்லே. 37

அவற்றொடு வரு வழி செய்யும் என் கிளவி

முதற்கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே. 38

பெயரெஞ்சுகிளவியும் வினையெஞ்சுகிளவியும்

எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா. 39

தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்

எச் சொல் ஆயினும் இடைநிலை வரையார். 40

அவற்றுள்,

செய்யும் என்னும் பெயரெஞ்சுகிளவிக்கு

மெய்யடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்

அவ் இடன் அறிதல் என்மனார் புலவர். 41

செய்து என் எச்சத்து இறந்த காலம்

எய்து இடன் உடைத்தே வாராக் காலம். 42

முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை

எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து

மெய்ந் நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும். 43

வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்

ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி

இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்

விரைந்த பொருள என்மனார் புலவர். 44

மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி

அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி

செய்வது இல் வழி நிகழும் காலத்து

மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே. 45

இது செயல் வேண்டும் என்னும் கிளவி

இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே

தன் பாலானும் பிறன் பாலானும். 46

வன்புற வரூஉம் வினா உடை வினைச்சொல்

எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே. 47

வாராக் காலத்து வினைச்சொல் கிளவி

இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்

இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை. 48

செயப்படுபொருளைச் செய்தது போலத்

தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே. 49

இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்

சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. 50

ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். 51

7. இடையியல்

இடை எனப்படுப பெயரொடும் வினையடும்

நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே. 1

அவைதாம்,

புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதநவும்

வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும்

வேற்றுமைப் பொருள்வயின் உருபு ஆகுநவும்

அசைநிலை கிளவி ஆகி வருநவும்

இசைநிறைக் கிளவி ஆகி வருநவும்

தம்தம் குறிப்பின் பொருள் செய்குநவும்

ஒப்பு இல் வழியான் பொருள் செய்குநவும் என்று

அப் பண்பினவே நுவலும் காலை. 2

அவைதாம்,

முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும்

தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும்

அன்னவை எல்லாம் உரிய என்ப. 3

கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று

அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே. 4

விழைவே காலம் ஒழியிசைக் கிளவி என்று

அம் மூன்று என்ப தில்லைச் சொல்லே. 5

அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று

அப் பால்

Link to comment
Share on other sites

தொல்காப்பியரின் 'தொல்காப்பியம்'

மூன்றாம் பாகம் - பொருளதிகாரம்

1. அகத்திணையியல்

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழு திணை என்ப. 1

அவற்றுள்,

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய

படு திரை வையம் பாத்திய பண்பே. 2

முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலும் காலை முறை சிறந்தனவே

பாடலுள் பயின்றவை நாடும் காலை. 3

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே. 4

மாயோன் மேய காடு உறை உலகமும்

சேயோன் மேய மை வரை உலகமும்

வேந்தன் மேய தீம் புனல் உலகமும்

வருணன் மேய பெரு மணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. 5

காரும் மாலையும் முல்லை. 6

குறிஞ்சி,

கூதிர் யாமம் என்மனார் புலவர். 7

பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப. 8

வைகறை விடியல் மருதம். 9

எற்பாடு,

நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும். 10

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே. 11

பின்பனிதானும் உரித்து என மொழிப. 12

இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்

உரியது ஆகும் என்மனார் புலவர். 13

திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே

நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப

புலன் நன்கு உணர்ந்த புலமையோரே. 14

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. 15

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை

தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. 16

கொண்டு தலைக்கழிதலும் பிரிந்து அவண் இரங்கலும்

உண்டு என மொழிப ஓர் இடத்தான. 17

கலந்த பொழுதும் காட்சியும் அன்ன. 18

முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே. 19

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை

செய்தி யாழின் பகுதியடு தொகைஇ

அவ் வகை பிறவும் கரு என மொழிப. 20

எந் நில மருங்கின் பூவும் புள்ளும்

அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும்

வந்த நிலத்தின் பயத்த ஆகும். 21

பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய

திணைதொறும் மரீஇய திணை நிலைப் பெயரே. 22

ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே. 23

ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை

ஆனா வகைய திணை நிலைப் பெயரே. 24

அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்

கடிவரை இல புறத்து என்மனார் புலவர். 25

ஏவல் மரபின் ஏனோரும் உரியர்

ஆகிய நிலைமை அவரும் அன்னர். 26

ஓதல் பகையே தூது இவை பிரிவே. 27

அவற்றுள்,

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன. 28

தானே சேறலும் தன்னொடு சிவணிய

ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. 29

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய

முல்லை முதலாச் சொல்லிய முறையான்

பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும்

இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே. 30

மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே. 31

மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப. 32

உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தினான. 33

வேந்து வினை இயற்கை வேந்தன் ஒரீஇய

ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே. 34

பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே. 35

உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான. 36

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை. 37

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்

பொற்புடை நெறிமை இன்மையான. 38

தன்னும் அவனும் அவளும் சுட்டி

மன்னும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம்

நன்மை தீமை அச்சம் சார்தல் என்று

அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ

முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி

தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்

போகிய திறத்து நற்றாய் புலம்பலும்

ஆகிய கிளவியும் அவ் வழி உரிய. 39

ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்

தாமே செல்லும் தாயரும் உளரே. 40

அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே. 41

தலைவரும் விழும நிலை எடுத்து உரைப்பினும்

போக்கற்கண்ணும் விடுத்தற்கண்ணும்

நீக்கலின் வந்த தம் உறு விழுமமும்

வாய்மையும் பொய்ம்மையும் கண்டோற் சுட்டித்

தாய் நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்

நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை

அழிந்தது களை என மொழிந்தது கூறி

வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு

என்று இவை எல்லாம் இயல்புற நாடின்

ஒன்றித் தோன்றும் தோழி மேன. 42

பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி

வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்

ஊரது சார்பும் செல்லும் தேயமும்

ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்

புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு

அழிந்து எதிர் கூறி விடுப்பினும் ஆங்கத்

தாய் நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்

சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும்

கண்டோர் மொழிதல் கண்டது என்ப. 43

ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும்

ஒன்றிய மொழியடு வலிப்பினும் விடுப்பினும்

இடைச் சுர மருங்கின் அவள் தமர் எய்திக்

கடைக் கொண்டு பெயர்தலின் கலங்கு அஞர் எய்திக்

கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட

அப் பால் பட்ட ஒரு திறத்தானும்

நாளது சின்மையும் இளமையது அருமையும்

தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்

இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும்

அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்

ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்

வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு

ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்

புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும்

தூது இடையிட்ட வகையினானும்

ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்

மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும்

தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்

பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்

பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்

காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்

பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி

இரத்தலும் தெளித்தலும் என இரு வகையடு

உரைத் திற நாட்டம் கிழவோன் மேன. 44

எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே. 45

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும். 46

நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே. 47

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி

விரவும் பொருளும் விரவும் என்ப. 48

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளாது ஆகும் திணை உணர் வகையே. 49

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் எனக்

கொள்ளும் என்ப குறி அறிந்தோரே. 50

உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிக என

உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம். 51

ஏனை உவமம் தான் உணர் வகைத்தே. 52

காமம் சாலா இளமையோள்வயின்

ஏமம் சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்

தன்னொடும் அவளடும் தருக்கிய புணர்த்து

சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. 53

ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇ

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. 54

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப. 55

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்

உரியது ஆகும் என்மனார் புலவர். 56

மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்

சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர். 57

புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது

அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே. 58

2. புறத்திணையியல்

அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்

புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்

வெட்சிதானே குறிஞ்சியது புறனே

உட்கு வரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே. 1

வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்

ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும். 2

படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி

புடை கெடப் போகிய செலவே புடை கெட

ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்

முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய

ஊர் கொலை ஆ கோள் பூசல் மாற்றே

நோய் இன்று உய்த்தல் நுவல்வழித் தோற்றம்

தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என

வந்த ஈர் ஏழ் வகையிற்று ஆகும். 3

மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத் திணைப் புறனே. 4

வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்

வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்

போந்தை வேம்பே ஆர் என வரூஉம்

மா பெருந்தானையர் மலைந்த பூவும்

வாடா வள்ளி வயவர் ஏத்திய

ஓடாக் கழல் நிலை உளப்பட ஓடா

உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்

மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்

தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்

ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்

சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்

தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்

அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும்

வரு தார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று

இரு வகைப் பட்ட பிள்ளை நிலையும்

வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க

நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும்

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று

இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்

சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே. 5

வஞ்சிதானே முல்லையது புறனே

எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்

அஞ்சு தகத் தலைச் சென்று அடல் குறித்தன்றே. 6

இயங்கு படை அரவம் எரி பரந்து எடுத்தல்

வயங்கல் எய்திய பெருமையானும்

கொடுத்தல் எய்திய கொடைமையானும்

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்

மாராயம் பெற்ற நெடுமொழியானும்

பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்

வரு விசைப் புனலைக் கற் சிறை போல

ஒருவன் தாங்கிய பெருமையானும்

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்

வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும்

குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்

அழி படை தட்டோர் தழிஞ்சியடு தொகைஇ

கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே. 7

உழிஞைதானே மருதத்துப் புறனே

முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்

அனை நெறி மரபிற்று ஆகும் என்ப. 8

அதுவேதானும் இரு நால் வகைத்தே. 9

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்

தொல் எயிற்கு இவர்தலும் தோலது பெருக்கமும்

அகத்தோன் செல்வமும் அன்றியும் முரணிய

புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட

ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர்

வரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட

சொல்லப்பட்ட நால் இரு வகைத்தே. 10

குடையும் வாளும் நாள்கோள் அன்றி

மடை அமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச்

சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு

முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய

அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன்

புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்

நீர்ச் செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று

ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும்

மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும்

இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்

வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற

தொகைநிலை என்னும் துறையடு தொகைஇ

வகை நால் மூன்றே துறை என மொழிப. 11

தும்பைதானே நெய்தலது புறனே

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்

சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. 12

கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்

சென்ற உயிரின் நின்ற யாக்கை

இரு நிலம் தீண்டா அரு நிலை வகையடு

இரு பாற் பட்ட ஒரு சிறப்பின்றே. 13

தானை யானை குதிரை என்ற

நோனார் உட்கும் மூ வகை நிலையும்

வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்

தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும்

இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்

ஒருவன் ஒருவனை உடை படை புக்கு

கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து

பாழி கொள்ளும் ஏமத்தானும்

களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு

பட்ட வேந்தனை அட்ட வேந்தன்

வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து

இரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும்

ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும்

செருவகத்து இறைவன் வீழ்ந்தென சினைஇ

ஒருவன் மண்டிய நல் இசை நிலையும்

பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்

ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்படப்

புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. 14

வாகைதானே பாலையது புறனே

தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்

பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப. 15

அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐ வகை மரபின் அரசர் பக்கமும்

இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்

மறு இல் செய்தி மூ வகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்

பால் அறி மரபின் பொருநர்கண்ணும்

அனை நிலை வகையடு ஆங்கு எழு வகையான்

தொகை நிலைபெற்றது என்மனார் புலவர். 16

கூதிர் வேனில் என்று இரு பாசறைக்

காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்

ஏரோர் களவழி அன்றி களவழித்

தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர்

வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்

ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்

பெரும் பகை தாங்கும் வேலினானும்

அரும் பகை தாங்கும் ஆற்றலானும்

புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்

ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்

சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து

தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்

ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்

பகட்டினானும் ஆவினானும்

துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்

கடி மனை நீத்த பாலின்கண்ணும்

எட்டு வகை நுதலிய அவையகத்தானும்

கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்

இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்

பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்

பொருளடு புணர்ந்த பக்கத்தானும்

அருளடு புணர்ந்த அகற்சியானும்

காமம் நீத்த பாலினானும் என்று

இரு பாற் பட்ட ஒன்பதின் துறைத்தே. 17

காஞ்சிதானே பெருந்திணைப் புறனே

பாங்கு அருஞ் சிறப்பின் பல் ஆற்றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே. 18

மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்

கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்

பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்

புண் கிழித்து முடியும் மறத்தினானும்

ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்

பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்

இன்னன் என்று இரங்கிய மன்னையானும்

இன்னது பிழைப்பின் இது ஆகியர் எனத்

துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்

இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்

துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்

நீத்த கணவன் தீர்த்த வேலின்

பேஎத்த மனைவி ஆஞ்சியானும்

நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி

மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்

முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்

தலையடு முடிந்த நிலையடு தொகைஇ

ஈர் ஐந்து ஆகும் என்ப பேர் இசை

மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்

மாய்ந்த பூசல் மயக்கத்தானும்

தாமே எய்திய தாங்க அரும் பையுளும்

கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்

செல்வோர் செப்பிய மூதானந்தமும்

நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து

தனி மகள் புலம்பிய முதுபாலையும்

கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ

ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்

சொல் இடையிட்ட பாலை நிலையும்

மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த

தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்

மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்

பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு

நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே. 19

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

நாடும் காலை நால் இரண்டு உடைத்தே. 20

அமரர்கண் முடியும் அறு வகையானும்

புரை தீர் காமம் புல்லிய வகையினும்

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. 21

வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ

பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்

முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை

வண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே. 22

காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர். 23

குழவி மருங்கினும் கிழவது ஆகும். 24

ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப

வழக்கொடு சிவணிய வகைமையான. 25

மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.26

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. 27

கொற்றவள்ளை ஓர் இடத்தான. 28

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்

சேய் வரல் வருத்தம் வீட வாயில்

காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்

கண்படை கண்ணிய கண்படை நிலையும்

கபிலை கண்ணிய வேள்வி நிலையும்

வேலை நோக்கிய விளக்கு நிலையும்

வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும்

ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்

கைக்கிளை வகையடு உளப்படத் தொகைஇ

தொக்க நான்கும் உள என மொழிப. 29

தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்

சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி

பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ

சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்

சிறந்த நாளினில் செற்றம் நீக்கி

பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்

சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்

நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்

மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்

மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்

பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்

பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி

நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

காலம் கண்ணிய ஓம்படை உளப்பட

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்

காலம் மூன்றொடு கண்ணிய வருமே. 30

3. களவியல்

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே.1

ஒன்றே வேறே என்று இரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே. 2

சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப

இழிந்துழி இழிபே சுட்டலான. 3

வண்டே இழையே வள்ளி பூவே

கண்ணே அலமரல் இமைப்பே அச்சம் என்று

அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ

நின்றவை களையும் கருவி என்ப. 4

நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். 5

குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின்

ஆங்கு அவை நிகழும் என்மனார் புலவர். 6

பெருமையும் உரனும் ஆடூஉ மேன. 7

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. 8

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணு வரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்

சிறப்புடை மரபினவை களவு என மொழிப. 9

முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்

நல் நயம் உரைத்தல் நகை நனி உறாஅ

அந் நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்

தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று

இன்னவை நிகழும் என்மனார் புலவர். 10

மெய் தொட்டுப் பயிறல் பொய் பாராட்டல்

இடம் பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல்

நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்

சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்

தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ

பேராச் சிறப்பின் இரு நான்கு கிளவியும்

பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும்

நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்

குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்

பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்

ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்

நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித்

தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி

குறை அவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்

தண்டாது இரப்பினும் மற்றைய வழியும்

சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையினும்

அறிந்தோள் அயர்ப்பின் அவ் வழி மருங்கின்

கேடும் பீடும் கூறலும் தோழி

நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி

மடல் மா கூறும் இடனுமார் உண்டே. 11

பண்பின் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்

அன்புற்று நகினும் அவட் பெற்று மலியினும்

ஆற்றிடை உறுதலும் அவ் வினைக்கு இயல்பே. 12

பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப. 13

முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. 14

பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. 15

முதலொடு புணர்ந்த யாழோர் மேன

தவல் அருஞ் சிறப்பின் ஐந் நிலம் பெறுமே. 16

இரு வகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்

காணா வகையின் பொழுது நனி இகப்பினும்

தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின்

காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி

வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்

புகாக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி

பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும்

வேளாண் எதிரும் விருப்பின்கண்ணும்

தாளாண் எதிரும் பிரிவினானும்

நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும்

வரைதல் வேண்டித் தோழி செப்பிய

புரை தீர் கிளவி புல்லிய எதிரும்

வரைவு உடன்படுதலும் ஆங்கு அதன் புறத்துப்

புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ

கிழவோள் மேன என்மனார் புலவர். 17

காமத் திணையின் கண் நின்று வரூஉம்

நாணும் மடனும் பெண்மைய ஆகலின்

குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை

நெறிப்பட வாரா அவள்வயினான. 18

காமம் சொல்லா நாட்டம் இன்மையின்

ஏமுற இரண்டும் உள என மொழிப. 19

சொல் எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்

அல்ல கூற்றுமொழி அவள்வயினான. 20

மறைந்து அவற் காண்டல் தற் காட்டுறுதல்

நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல்

வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல்

பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல்

கைப்பட்டுக் கலங்கினும் நாணு மிக வரினும்

இட்டுப் பிரிவு இரங்கினும் அருமை செய்து அயர்ப்பினும்

வந்தவழி எள்ளினும் விட்டு உயிர்த்து அழுங்கினும்

நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும்

பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்

வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும்

கூறிய வா`யில் கொள்ளாக் காலையும்

மனைப் பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு

நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்

உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர் செல

வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும்

நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்

பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி

ஒருமைக் கேண்மையின் உறு குறை தெளிந்தோள்

அருமை சான்ற நால் இரண்டு வகையின்

பெருமை சான்ற இயல்பின்கண்ணும்

பொய் தலை அடுத்த மடலின்கண்ணும்

கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்

வெறியாட்டு இடத்து வெருவின்கண்ணும்

குறியின் ஒப்புமை மருடற்கண்ணும்

வரைவு தலைவரினும் களவு அறிவுறினும்

தமர் தற் காத்த காரண மருங்கினும்

தன் குறி தள்ளிய தெருளாக் காலை

வந்தவன் பெயர்ந்த வறுங் களம் நோக்கித்

தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும்

வழு இன்று நிலைஇய இயற்படு பொருளினும்

பொழுதும் ஆறும் புரைவது அன்மையின்

அழிவு தலைவந்த சிந்தைக்கண்ணும்

காமம் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும்

ஏமம் சான்ற உவகைக்கண்ணும்

தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தையும்

அன்னவும் உளவே ஓர் இடத்தான. 21

வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும்

வரையா நாளிடை வந்தோன் முட்டினும்

உரை எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும்

தானே கூறும் காலமும் உளவே. 22

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்

செயிர் தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனத்

தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு

காமக் கிழவன் உள்வழிப் படினும்

தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும்

ஆ வகை பிறவும் தோன்றுமன் பொருளே. 23

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்

செய் வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்

புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்

உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை

மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது

பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும்

குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப்

பெருமையின் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும்

அருமையின் அகற்சியும் அவள் அறிவுறுத்துப்

பின் வா என்றலும் பேதைமை ஊட்டலும்

முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும்

அஞ்சி அச்சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமொடு

எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும்

வந்த கிழவனை மாயம் செப்பிப்

பொறுத்த காரணம் குறித்த காலையும்

புணர்ந்த பின் அவன்வயின் வணங்கற்கண்ணும்

குறைந்து அவட் படரினும் மறைந்தவள் அருக

தன்னொடும் அவளடும் முதல் மூன்று அளைஇ

பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்

நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்

எண்ண அரும் பல் நகை கண்ணிய வகையினும்

புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்

வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்

புணர்ந்துழி உணர்ந்த அறி மடச் சிறப்பினும்

ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்

செங் கடு மொழியான் சிதைவுடைத்து ஆயினும்

என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ

அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்

ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்

காப்பின் கடுமை கையற வரினும்

களனும் பொழுதும் வரை நிலை விலக்கி

காதல் மிகுதி உளப்படப் பிறவும்

நாடும் ஊரும் இல்லும் குடியும்

பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி

அவன்வயின் தோன்றிய கிளவியடு தொகைஇ

அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்

ஐயச் செய்கை தாய்க்கு எதிர் மறுத்து

பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்

அவன் விலங்குறினும் களம் பெறக் காட்டினும்

பிறன் வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும்

முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப்

புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்

வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும்

ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட

பாங்குற வந்த நால் எட்டு வகையும்

தாங்க அருஞ் சிறப்பின் தோழி மேன. 24

களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்

அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்

கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்

ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்

ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்

காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்

தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும்

போக்கு உடன் அறிந்த பின் தோழியடு கெழீஇக்

கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும்

பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும்

இரு பால் குடிப் பொருள் இயல்பின்கண்ணும்

இன்ன வகையின் பதின்மூன்று கிளவியடு

அன்னவை பிறவும் செவிலி மேன. 25

தாய்க்கும் வரையார் உணர்வு உடம்படினே. 26

கிழவோன் அறியா அறிவினள் இவள் என

மை அறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே. 27

தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்

எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை

பிற நீர் மாக்களின் அறிய ஆயிடைப்

பெய்ந் நீர் போலும் உணர்விற்று என்ப. 28

காமக் கூட்டம் தனிமையின் பொலிதலின்

தாமே தூதுவர் ஆகலும் உரித்தே. 29

அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின்

களம் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்

தான் செலற்கு உரிய வழி ஆகலான. 30

தோழியின் முடியும் இடனுமார் உண்டே. 31

முந் நாள் அல்லது துணை இன்று கழியாது

அந் நாள் அகத்தும் அது வரைவு இன்றே. 32

பல் நூறு வகையினும் தன் வயின் வரூஉம்

நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின்

துணைச் சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்

துணையோர் கருமம் ஆகலான. 33

ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின்

தாய் எனப்படுவோள் செவிலி ஆகும். 34

தோழிதானே செவிலி மகளே. 35

சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே. 36

குறையுற உணர்தல் முன் உற உணர்தல்

இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் என

மதியுடம்படுத்தல் ஒரு மூ வகைத்தே. 37

அன்ன வகையான் உணர்ந்த பின் அல்லது

பின்னிலை முயற்சி பெறாள் என மொழிப. 38

முயற்சிக் காலத்து அதற்பட நாடி

புணர்த்தல் ஆற்றலும் அவள்வயினான. 39

குறி எனப்படுவது இரவினும் பகலினும்

அறியக் கிளந்த ஆற்றது என்ப. 40

இரவுக் குறியே இல்லகத்துள்ளும்

மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே

மனையகம் புகாஅக் காலையான. 41

பகல் புணர் களனே புறன் என மொழிப

அவள் அறிவு உணர வரு வழியான. 42

அல்லகுறிப்படுதலும் அவள்வயின் உரித்தே

அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே. 43

ஆங்கு ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே

ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான. 44

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை. 45

ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும்

ஊறும் உளப்பட அதன் ஓரன்ன. 46

தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப. 47

தாய் அறிவுறுதல் செவிலியடு ஒக்கும். 48

அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்

அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும். 49

வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. 50

வெளிப்படைதானே கற்பினொடு ஒப்பினும்

ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக

வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை. 51

4. கற்பியல்

கற்பு எனப்படுவது கரணமொடு புணர

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை

கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே. 1

கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்து உடன் போகிய காலையான. 2

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே. 3

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப. 4

கரணத்தின் அமைந்து முடிந்த காலை

நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்

எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்

அஞ்ச வந்த உரிமைக்கண்ணும்

நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளினும்

பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ

குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்

நாமக் காலத்து உண்டு எனத் தோழி

ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்

அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ

சொல்லுறு பொருளின்கண்ணும் சொல் என

ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது

வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என

அடிசிலும் பூவும் தொடுதற்கண்ணும்

அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்

அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்

ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்

களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி

அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்

அந்தரத்து எழுதிய எழுத்தின் மான

வந்த குற்றம் வழி கெட

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
    • அவங்கள் விரும்பினால் வைரம் கொடுப்பாங்கள், அவையளின்ட அரசியலுக்கு விருப்பமில்லையென்றால் பித்தளை ,வெண்கலம் கொடுப்பாங்கள் .... மாலைதீவுடன் பகைத்து கொண்டு இந்தியா லட்சதீவில் சுற்றுலா துறையை விரிவு படுத்திய மாதிரி இதுவும் அரசியல் தான்...
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.