Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழிப்புணர்வில் நாம். . .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள பக்கங்கள்...! தொடருங்கள் ஆதவன்...!! :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆதவன்.தொடருங்கள்...இந்தப் பகுதி பல பக்கங்களைத் தாண்டி ஒரு தொகுப்பாக "மஞ்சரி" யாக வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவப் பகிர்வுகள் ஆதவன்.. "புலம்பெயர் வாழ்வியல் கருவூலம்" என்கிற பெயரில் (கோமகனின் தமிழரின் வாழ்வியல் கருவூலம் தந்த பாதிப்பினால்) எழுதலாம் என்கிற யோசனை முன்பு இருந்தது. நீங்கள் எழுதுவது மகிழ்ச்சி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள திரி

முயற்சிக்கு தலை வணங்குகிறேன்

 

யாழில் வரும் பதிவுகளில் எல்லாம் இப்போது பார்வையாளராக மட்டுமே அணிவகுக்க முடிகிறது...நேரம் கிடைக்கும்போது நிச்சயமாக உங்கள் திரியில் பங்காளி ஆகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக நிறைய இடை வெளி விடாமல் எந்தப் பக்கத்தையும் எடுத்து சென்றால் நன்று...ஆனாலும் எல்லாலோருக்கும் நேரம் இருக்கனும்,இருந்து எழுதக் கூடிய மனோ நிலை இருக்க வேண்டும்..எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறேன்..
 

  • 1 month later...
  • தொடங்கியவர்
Air Traffic Controller விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் (சரியான தமிழ் மொழிபெயர்ப்புத் தெரியவில்லை)
 
Air Traffic Controller இனை சுவிசில் மிக இலகுவாகக் கற்கலாம், சுவிசிலுள்ள மாணவர்கள் இதில் அக்கறை குறைவு, அதிகளவில் வெளி நாட்டு மாணவ்ர்கள் இங்கு வந்து கற்று வேலை செய்கிறார்கள்.
 
Air Traffic Controller க்குரிய அடிப்படைச் சம்பளம் 7000-8000 பிராங்குகளில் தொடங்குகிறது, 
 
இத்துறையில் பல மேலதிக படிப்புகள் உள்ளன, படித்து உச்ச சம்பளம் பெறலாம்.
 
உலகம் முழுவதும் வேலை செய்யலாம்.
 
Air Traffic Controller படிப்ப‌தற்குரிய தகுதியாக சுவிசில் என்றால் ஒரு Lehre (EFZ) முடிதிருந்தாலே போதுமானது. 
Deutschland மாணவர்களுக்கு Für Bewerber aus Deutschland wird die Allgemeine Hochschulreife vorausgesetzt.
 
 
எமது மாணவர்கள் Lehre  முடித்து நல்ல வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் இத்துறையில் பயிலலாம். Deutschland உள்ள எமது இளையோர்  உங்களுக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
 
Training இன் போதே சம்பளமும் தருகிறார்கள்(Paid training courses over a 2 ½ year period.)
 
விபரங்கள் பின் வரும் இணையத்திலுள்ளன. 
 
 
 
 
 
நான் தற்சமயம்   பின்வரும் திரியில் கொஞ்சம் busy யாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போது இத்திரியிலும் பதிகிறேன்.
 
 

 

Edited by Athavan CH

சரியான தலைப்பு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

  • தொடங்கியவர்
கனடா /ஒன்ராரியோவில் குடும்பத்துடன் போய்ப் பார்க்க கூடிய இடங்கள்: என் அனுபவம்  

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104672

 

நன்றி நிழலி

  • 2 months later...
  • தொடங்கியவர்
பிறந்தநாளும் தொ(ல்)லை பேசி அழைப்புகளும்.
 
அண்மையில் எனது நண்பரின் மகனின் பிறந்தநாள் அன்று (6 வயது) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். வேறும் சிலர் வந்திருந்தனர். அப்போது  தொலை பேசி அழைப்புச் சத்தம் கேட்டது.
உடனே நண்பரரின்  மகன் ஓடி வந்து தாயிடம் தொலை பேசியை எடுக்க வேண்டாம் என சொன்னார். ஆனாலும் அவர் தொலை பேசி அழைப்புக்கு பதிலளித்து விட்டு மகனிடம் கொடுத்தார் அவரும் ஏனோ தானோ எனக் கதைத்தார்.
 
பிறந்தநாட்களின் போது பல நாடுகளிலிருந்தும் பலரும் வாழ்த்து சொல்வார்கள் . பெரும்பாலானோர் வாழ்த்துகளுடன் நின்று விடாமல் , அப்பா என்ன வாங்கித் தந்தவர் , அம்மா  என்ன வாங்கித் தந்தவா, என்ன  சட்டை போட்டு இருக்கிறீங்கள், ...........என பல கேள்விகளைக் கேட்பார்கள். இப்படி எல்லாரும் மாறி மாறி கேட்டு பிள்ளைகளைச் சலிப்படைய வைத்து விடுவார்கள். 
சில குடும்பங்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் அதிகமாக இருந்தால் அவர்களின் நிலை சொல்லத் தேவையில்லை ...........
தொலைபேசியுடனே அவர்களது பிறந்தநாள் போய்விடும்.
 
 இதனைப் புரிந்து கொண்டு நாம் பின்வரும் வழிமுறைகளை கையாளலாம் என நிணைக்கிறேன்.
 

 பிறந்தநாள் வாழ்த்தினை மட்டும் முடிந்த வரை சுருக்கமாகச் சொல்லி விட்டு தொலைபேசியை வைத்தல்

 

பிறந்தநாளுக்குரியவருடன் மட்டும் கதைத்தல், அவரது பெற்றோர்களுடன்  தொடர்ந்து கதைத்து அவர்களது நேரத்தினை வீணாக்கத் தேவையில்லை( வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள் உணவு தயாரிப்பு, உபசரிப்பு என அவர்களுக்கும் வேலை இருக்கும்)

 

Facebook அல்லது sms மூலம் வாழ்த்தினைத் தெரிவித்தல்

 

அடுத்த நாள் கூட வாழ்த்தைத் தெரிவிக்கலாம் , முதல் நாள்  அழைப்பு எடுக்காதற்கான உண்மையான காரணத்தைத்  தெரிவிக்கலாம்.("நேற்று உங்களுக்கு கணக்க call  வரும் என்று தெரியும்  நாங்களும் கதைத்து உங்களது நேரத்தினைக் குறைக்க விரும்பவில்லை" என்று கூறலாம் )
 
குடும்பத்திலுள்ள எல்லாரும் தனித் தனியே வாழ்த்தவேண்டும் என்பதில்லை, எல்லோர் சார்பாகவும் ஒருவர் வாழ்த்தினாலே போதுமானது(நட்பைப் பொறுத்து).
 
 
 
நீங்களும் உங்கள் ஆலோசனைகளை எழுதுங்கள்
 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆரார் வந்தவை....என்ன வாங்கித்தந்தவை..... பொன்னம்மாக்கா என்ன பலகாரம் செய்து கொண்டு வந்தவ....ஆரார் குடிச்சவை....ஆர் முன்னுக்கு நிண்டு தேத்தண்ணி பலகாரம் குடுத்தது.....அம்மா என்ன சாறி உடுத்தவ....சரசு தனியத்தான் வந்தவவோ....?????
 
உப்பிடியான கேள்விகளுக்கும் பதில் தேவையாய் கிடக்கு.. :D
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளுக்குரிய, பிள்ளைக்கு வாழ்த்தும் போது....
காலையில் அவர் பாடசாலைக்குப் போகும் நேரத்திற்கு சிறிது முன்பாக வாழ்த்துவது சிறந்தது,

அந்த வாழ்த்து அவரை அன்று முழுவதும் மகிழ்ச்சிக் கடலில் வைத்திருக்கும். 
 

அதற்காக.... பிள்ளையை நித்திரையாலை, எழுப்பி  வாழ்த்தி... பிள்ளையின் எரிச்சலுக்கு ஆளாக வேண்டாம்.
பிள்ளை எத்தனை மணிக்கு எழும்பும், என்பதை பெற்றோரிடம் முற்கூட்டியே கேட்டு அறிந்து வைத்திருப்பது நல்லது. :)

தொடருங்கள் ஆதவன் அண்ணா :)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
என்னோடு வேலை செய்யும் மசடோனியா காரர் ஒருவரின் சேமிப்பு முறை இது.
 
இவர் ஒவ்வொரு மாத சம்பளம் வரும் போதும் 5 அல்லது 10 கிராம் தங்க நாணயத்தினை வங்கியில் வாங்கி அப்படியே வங்கியிலுள்ள தனது சேமிப்புப் பெட்டகத்தினுள் வைத்து விடுவார்.
இதனை இவர் பல வருடங்களாகத் தொடர்ந்து செய்துவருகிறார்.
 
ஒரு வருடத்தில் விலையில் சில தளம்பல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் 4 , 5 வருடங்களில் விலை கணிசமான அளவில் கூடியிருக்கும் என்கிறார் .
இதுவரை இவர் 39,000 பிராங்குகளுக்கு வாங்கியுள்ளார், அதன் இன்றய பெறுமதி கிட்டத்தட்ட‌ 62,000 பிராங்குகள். தான் முதன் முதல் வாங்கிய போது இருந்ததை விட இப்போது கிட்டத்தட்ட‌3 மடங்கு விலை அதிகம் என்றார்
 
அப்படி விலை குறைவது என்றாலும் ஒரேயடியாக பாதாளத்துக்கு குறையாது   என்கிறார்,
 
அப்படி குறைவது தெரிந்தால் உடனடியாக வங்கியில் கொடுத்து அன்றைய விலைப்படி பணத்தினை திரும்ப வாங்கி விடலாம் (சுவிசில் அந்த வசதி உண்டு)
 
அண்மையில் சேமிப்பு பற்றிய கட்டுரை ஒன்றினை வாசித்த போது அவர்களும் தங்கத்தில் சேமிப்பது நல்லது எனக் கூருகிறார்கள், ஆனாலும் மொத்த சேமிப்பில் 10%- 15% வீதத்திற்கு மேல் தங்கத்தில் வேண்டாம் என்கிறார்கள்.
 
 தமிழர்களின் பாரம்பரியமான சேமிப்பு முறையும் தங்கத்தில் சேமிப்பது தான் ஆனால் நாம் தங்கமாக சேமிக்காமல் , ஆபரணமாகச் சேமிக்கிறோம்
 
 இதில் சில பிரதி கூலங்கள் இருக்கின்றன‌
 
தமிழர்களின் பாரம்பரியமான சேமிப்பு முறையும் தங்கத்தில் சேமிப்பது தான் ஆனால் நாம் தங்கமாக சேமிக்காமல் , ஆபரணமாகச் சேமிக்கிறோம்
இதில் சில பிரதி கூலங்கள் இருக்கின்றன‌
ஆபரணம் வாங்கும் போது சேதாரம் , செய்கூலி எனவும் , விற்கும் போது பழைய தங்கம், கல்லுக்குரிய கழிவு எனவும் பண இழப்பு ஏற்படுகிறது.
 
வங்கியில் தங்க நாணயமாக வாங்கி சேமிக்கும் போது இந்த பிரச்சனைகள் இல்லை.
 
நீங்களும் தங்க நாணயத்தில் சேமிக்கலாம் அதற்கு முதல் சகல விபரங்களையும் வங்கியில் கேட்டுத் தெரிந்து உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
 
சுவிசில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 37.70 பிராங்குகள்
 
suisse-1g.jpg
சுவிசில் தங்க நாணயத்தில் 999.9 என பபொறிக்கப் பட்டிருக்கும்
 
 
 

 

Edited by Athavan CH

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

winter tyres (வின்டர் டயர்)

 

112290-_9IO5DFsyYS3BW6AP2OTLw.jpg

http://www.20min.ch/schweiz/news/story/18614988

 

சுவிசில் இன்னமும் 84% விகிதமாணோர், வின்டர் டயர் மாற்றவில்லையென நேற்றய பத்திரிகையில் செய்தி வந்திருந்தது.
 
7º வெப்பனிலயிலேயே சம்மர் டயர்கள் கடினமாகிவிடும் என்றும் இதனால் பிரேக் பிடித்தால் கார் போய் நிற்கும் தூரம் கூடும் என்றும்  நிபுனர்கள் சொல்கிறார்கள். (எனவே snow கொட்டும் வரை காத்திருக்காமல் வெப்பனிலை குறையும் போதே டயரினை மாற்ற‌வும்)
 
மேலே உள்ள படத்தில் பனிபடர் சாலயில் 60 km/h வேகத்தில் பயணிக்கையில் பிரேக் பிடிக்கும் போது கார் போய் நிற்கும் இடம்(தூரம்) காட்டப்படுகிறது. வின்டர் டயருடன் ஒப்பிடும் போது  சம்மர் டயர்கள் இரு மடங்கு தூரம் செல்கிறது என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.( இங்கே இந்ததூரம் பிரேக் பிடித்தபின் கார் போய் நிற்கும் தூரம் + உங்களின் உணர்திறன் காலம் ஆகிய இரண்டும் சேர்த்துக் கணிக்கப்படுகின்றன. )
(Bremsweg+ der Reaktionszeit)
 
உங்கள் வின்டர் டயர் பூவின் ஆழம் (Profiltiefe)ஆகக்குறைந்தது 4 mm ஆவது இருக்க வேண்டும் என நிபுனர்கள் சொல்கிறார்கள்.
 
பாரிஸ் , லண்டன் போன்ற நகரங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் வின்டர் டயர் மாற்றுவதில்லை, எனினும் நீங்கள் கிறிஸ்மஸ் காலங்களில் சுவிஸ், ஜேர்மனி க்கு வாகனத்தில் வருவதாக இருந்தால் வின்டர் டயரினை மாற்றுவது நல்லது. அல்லாவிடின் நீங்கள் எல்லையில் வைத்து பொலிசினால் திருப்பி அனுப்பப் படும் சாத்தியம் உண்டு.
  • 1 year later...
  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.