Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடா /ஒன்ராரியோவில் குடும்பத்துடன் போய்ப் பார்க்க கூடிய இடங்கள்: என் அனுபவம்

Featured Replies

பொதுவாக நான் ஒரு ஊர் சுற்றி. எந்த ஊருக்குப் போனாலும் அங்கு பார்க்கக் கூடியவற்றை போய்ப் பார்ப்பதுண்டு. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இல் இருக்கும் போது, அநேகமாக அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டேன் (6 பெரும் மாகாணங்களைக் கொண்டது ஐ.அ.எ. இதில் டுபாய், சார்ஜா, அபுதாபி என்பனவும் அடங்கும்)

கனடா வந்த பின் ஒரு வருடம் சென்றது கார் லைசென்ஸ் வாங்க. அதன் பின் வந்த 4 வருடங்களில் பல இடங்களுக்கு போயிருக்கின்றேன். சில இடங்கள் பிள்ளைகள் மிக விரும்பும் இடங்களாகவும். சில இடங்கள் இடங்கள் குடும்பமாக நண்பர்களுடன் போய்க் கழிக்க கூடிய இடங்களாகவும் இருந்தன. இந்த 4 வருடங்களில் பார்த்தவை கொஞ்சம் எனிலும் ஒன்ராரியோவில் / கனடாவில் இருப்பவர்களுக்கும் கனடா பார்க்க வருபவர்களுக்கும் சில வேளை இவை உதவியாக இருக்கும் என கருதி போன இடங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுகின்றேன்

1. போர் விமான மியூசியம்

இணையம்: http://www.warplane.com/

இடம்: ஹமில்டன் / ஒன்ராரியோ

இந்த மியூசத்துக்குப் போனால் பழைய போர் விமாஙகளைத் (உலகப் போர் 1, 2 காலங்களில் பயன்படுத்திய மற்றும் அதன் பயன்படுத்தி காலாவதியான விமானங்கள்) தொட்டு பார்த்து, ஏறி இருந்து, அருகில் நின்று அனுபவிக்கலாம். பிள்ளைகள் மிகவும் விரும்பி ஓடி ஓடி பார்ப்பார்கள்

நான் எடுத்த படங்கள்

p8211940.jpg

p8211994.jpg

p8212007.jpg

  • தொடங்கியவர்

2. தீக்கோழி (Ostrich) பண்ணை

இடம்: Guelph

இணையத்தளம்: http://www.whiterock...m.com/index.htm

தீக்கோழி பறவைகளின் உலகில் மிகப் பலம் வாய்ந்த ஒரு இனம். நீளமான கால்களும் கனதியான உடலும் கொண்டு வேகமாக ஓடக்கூடிய ஆனால் கோழியைப் போன்று பறக்கத் தெரியாத ஒரு பறவை. வளர்ந்த ஒரு தீக்கோழியின் உதை ஒன்றே ஒரு மனிதன் இறக்க போதுமானது என்பர். அத்தகைய பறவையின் பண்ணை ஒன்று டொரன்டோவுக்கு அருகில் இருக்கும் Guelph எனும் ஊரில் இருக்கு. இந்த ஊர் விவாசயத்துக்கு பேர் போன இடம்.

என் மகன் மிகவும் ஆச்சரியப்பட்டு பார்த்த இடம் இது. நூற்றுக்கணக்கான தீக்கோழிகளை ஒரே இடத்தில் பார்ப்பது பெரியவர்கள் எங்களையே அசத்தும். அதன் முட்டை ஒன்று 24 கோழி முட்டைகளுக்குச் சமன் என்று பண்ணை பையன் சொன்னார். ஒரு நாள் குஞ்சை அதற்குரிய பெட்டியினுள் வைத்திருந்ததை பார்க்க ஆச்சரியமாக இருந்தது

படங்கள்

p8141874.jpg

p8141881.jpg

p8141896.jpg

(அதன் முட்டை= 24 கோழி முட்டைகள்)

குறிப்பு:

முதலில் Ostrich இனை வான்கோழி என்று தவறுதலாக குறிப்பிட்டு இருந்தேன். 'நான்தான்' எனும் கள உறுப்பினரே திருத்தம் தந்தார். நன்றி அவருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, பதிவு நிழலி.

தீக்கோழி முட்டையை,,, தூக்கி வைத்திருப்பது உங்கள் கையா? :D

வான் கோழியும், தீக் கோழியும் வித்தியாசமானது என எண்ணுகின்றேன்.

  • தொடங்கியவர்

நல்ல, பதிவு நிழலி.

தீக்கோழி முட்டையை,,, தூக்கி வைத்திருப்பது உங்கள் கையா? :D

இல்லை..அங்கிருந்த பண்ணை பையனின் கை. முட்டையை என் கையில் தருவதில் அவனுக்கு சம்மதம் இல்லை (விலையைக் கேட்டபின் வாங்க மறுத்ததால்)

இதே இடத்தில் வான்கோழியின் இறைச்சி ஒரு இறாத்தல் 20 டொலர்களாக விற்பனை செய்தனர். வாங்கிச் சமைப்பமா எனக் கேட்க மனிசி முறைத்து பார்த்து வேண்டாம் என்றுவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை..அங்கிருந்த பண்ணை பையனின் கை. முட்டையை என் கையில் தருவதில் அவனுக்கு சம்மதம் இல்லை (விலையைக் கேட்டபின் வாங்க மறுத்ததால்)

இதே இடத்தில் வான்கோழியின் இறைச்சி ஒரு இறாத்தல் 20 டொலர்களாக விற்பனை செய்தனர். வாங்கிச் சமைப்பமா எனக் கேட்க மனிசி முறைத்து பார்த்து வேண்டாம் என்றுவிட்டார்

தமிழ் முறைப்படி, அந்தப் பையனிடம்... நீங்கள் பேரம் பேசி... முட்டையை வாங்கியிருக்கலாமே...

ஒரு முறை தானே..... கிலோ இறைச்சி 20 டொலர் என்றாலும்....

வாங்கியும், சமைப்பதும்... நீங்க தானே...

அதுக்கு ஏன், அவ முறைத்துப் பாத்தவ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முறைப்படி, அந்தப் பையனிடம்... நீங்கள் பேரம் பேசி... முட்டையை வாங்கியிருக்கலாமே...

ஒரு முறை தானே..... கிலோ இறைச்சி 20 டொலர் என்றாலும்....

வாங்கியும், சமைப்பதும்... நீங்க தானே...

அதுக்கு ஏன், அவ முறைத்துப் பாத்தவ?

தமிழ்முறைப்படி எண்டால் கையில் துண்டுபோட்டு விரலைப் பிடிக்கிறதா? :D

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பறவைகளின் குடும்பத்தைச் சேர்ந்த ;கசொவாரி; என அழைக்கப் படும், ஒரு பறவையினம், வட அவுஸ்திரேலியாவில் வாழ்கிறது! இவை, டைனோசார், இனங்களில் ஒன்றின் வழித் தோன்றல்கள், என நம்பப் படுகின்றது! இவை, மனிதர்களைக் கண்டால், நீண்ட தூரம் துரத்திச் செல்லும்! இவை ஒரு விதமான, காய்களை உண்கின்றன! அந்தக் கைகளின் விதைகள், இவற்றின் வயிற்றுக்குள் போய் வராவிட்டால், முளைக்க மாட்டா!

இப்போது அந்த மரங்கள், அருகி வருவதால், இவற்றின் தொகையும் குறைந்து வருகின்றது!

arlow-0109-09.jpg

  • தொடங்கியவர்

3. Webster water fall

எம்மவர்களில் நான் கதைத்த பலருக்கு ஒன்ராரியோவில் நயாகராவைத் தவிர வேறு எந்த நீர்வீழ்ச்சியும் இருப்பதாக அறியவில்லை என்பதை அறிய மனம் கவலைப்பட்டது. ஆனால் இங்கு இருக்கும் வெள்ளைகள் பலருக்கே இது பற்றி தெரியாது என்பதை அறிந்த பின் உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது

ஒன்ராரியோவின் ஹமில்டன் நகரை கனடாவின் நீர்வீழ்ச்சி நகரம் என்று அழைப்பர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள், நதிகள் என்பன இருக்கு. அதில் ஒன்றுதான் இந்த Webster water fall

அண்மையில் என் நண்பர் குடும்பத்துடன் சென்று, பகலுணவாக BBQ செய்து உண்டு, 0 பாகை நீர் கொட்டும் குளிர் நீர்வீழ்ச்சியில் முழுகி எழும்பினனோம்

குடும்பத்துடன் சென்று களிக்க மிக சிறந்த இடம் இது

p4203730.jpg

p4203651.jpg

மிச்சப்படங்களை இணைக்க முடியாதளவுக்கு வந்த சனம் எல்லாம் நீச்சலுடையில் நிற்கினம்

வான்கோழி - Turkey (X - mas , thanksgiving - time 'லே குடும்பமா சாப்பிடுறது :) )

தீக்கோழி - ostrich (உங்களது படத்தில் இருப்பது)

  • தொடங்கியவர்

வான்கோழி - Turkey (X - mas , thanksgiving - time 'லே குடும்பமா சாப்பிடுறது :) )

தீக்கோழி - ostrich (உங்களது படத்தில் இருப்பது)

நன்றி திருத்தியமைக்கு. எழுதும் போதே எனக்கு இந்த சந்தேகம் வந்தது. (நிறைய கோழிகளை பார்த்ததால் இந்த டவுட் எனக்கு) இடையில் ஊரில் கினிக்கோழி என்ற ஒன்றும் இருந்தது அது என்னது என்ற கேள்வியும் எழுந்தது

மேலே எழுதியதை திருத்தி விடுகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நல்ல பதிவு [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது...தொடருங்கள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பகுதியை ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி நிழலி அண்ணா...இந்த நாட்டில் உதவுவதோடு மட்டுமல்லாம்,வேறை நாடுகளில் இருந்து வருபவர்களும் இவற்றை தெரிந்து கொண்டு வந்தால் பார்த்து மகிழ்வார்கள்.

குடும்பத்தோடு பார்க்க கூடிய மற்றும் ஒரு இடம் butterfly conservatory போய் பார்த்தவர்கள் சொல்லி கேள்விப் பட்டு இருக்கிறன்..படங்களும் பார்த்து மகிழ்ந்து இருக்கிறன்.மிகவும் இயற்கையோடு சேர்ந்த இடம்..பள்ளி விடுமுறையில் இருக்கும் பிள்ளைகளை கூட்டிப் போகலாம்..

Edited by யாயினி

தொடருங்கள் நிழலி அண்ணா. கனடாவை இதிலாவது தரிசிப்பம். படங்கள் எல்லாம் நல்லாயிருக்கு. :)

[size=5]பயனுள்ள பதிவு, நன்றி நிழலி![/size]

[size=5]பயனுள்ள பதிவு, நன்றி நிழலி![/size]

மிகவும் பயனுள்ள பதிவு!

நிழலி போய் வந்த இடங்களைப் பற்றிக் கெதியா எழுதி முடியுங்கோ!

இந்த சமறுக்கு ஒரு இடத்துக்காவது போக வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, பதிவு நிழலி.

தொடருங்கள்

எமக்கு பெரும் பலன் தரும்

நிழலி, இந்த தகவல்கள் கனடாவில் உள்ள ஆட்களுக்கு மட்டுமா?

நீர்விழ்ச்சி என்ற பதம் தவறு என்றும் ,அதன் சரியான சொல் அருவி என்றும் எங்கோ படித்தேன்.

  • தொடங்கியவர்

4. Street car and Electric Railway Museum

இடம்: Guelph

இணையம்: http://www.hcry.org/

இதுவும் சிறு பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பிடிக்கக் கூடிய ஒரு இடம். பல பழைய ரயில்கள், Street car கள் என்பனவற்றைக் காணக் கிடைப்பதுடன் 100 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த பழைய ரயில் ஒன்றில் கொஞ்சத் தூரம் பயணம் செய்யவும் வாய்ப்புக் கிடைக்கும், அதில் ஏறி பயணிக்கும் போது 'என் தாத்தாவின் முதுகில் சவாரி செய்கின்றேன்' என என் மகனுக்கு கூறினேன்.

p8141823.jpg

p8141850.jpg

('தாத்தா')

p8141834.jpg

  • தொடங்கியவர்

5. Albian hills

இடம்: Caledon (பிரம்ரனுக்கு அருகில்)

இணையம்: http://www.thehillsofheadwaters.com/albionhills/

ஒரு மாலைப் பொழுதையோ அல்லது முழு நாளையோ மிகக் குறைந்த செலவில் குதூகலமாக செலவிடக்கூடிய ஒரு நல்ல பூங்கா இது. அருவியின் சலசலப்புகள் கேட்டுக் கொண்டே இருக்க, BBQ போட்டு சாப்பிடவும் மரங்கள் அடர்ந்த வனாந்திரச் சூழலை அனுபவிக்கவும் ஏற்ற இடம். பிள்ளைகளுக்கு சூழல் பற்றிய உணர்வு ஊட்டக்கூடிய பிரதேசம் இது

எல்லாப் படங்களிலும் நந்தி மாதிரி நானோ என் குடும்பமோ நிற்பதால் ஒன்றையும் இணைக்க முடியவில்லை

நல்ல ஒரு விடயம், அழகான படங்கள். ஒன்ராறியோவில் வசிக்கத படியால் நீங்கள் சொன்ன இடங்களுக்கு அண்மைய காலத்தில் போக கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் நான் இருக்கும் இடத்துக்கு 2 மணி நேர தூரத்தில் உள்ள ஒன்ராறியோவின் நகர் ஒன்றுக்கு வார விடுமுறைக்கு அண்மையில் சென்றிருந்தேன். படங்களை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

எல்லாப் படங்களிலும் நந்தி மாதிரி நானோ என் குடும்பமோ நிற்பதால் ஒன்றையும் இணைக்க முடியவில்லை

:lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் படங்களிலும் நந்தி மாதிரி நானோ என் குடும்பமோ நிற்பதால் ஒன்றையும் இணைக்க முடியவில்லை

இனிமேலாவது நந்தி மாதிரி நிக்காமல் சிலதை நாமளும் பார்க்க கூடியதான படங்களாக எடுத்துட்டு வாங்கோண்ணா... :lol: </p>

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேலாவது செல்லும் இடங்களை இப்படியான இணைப்பிற்குரியதாக பிரத்தியேகமாக படம் எடுக்கவும்.... முக்கிய விடயம் ஆர்வக்கோளாறில் மற்றவர்களைப் படம் எடுத்துவிட்டு உங்களை மறந்து விடாதீர்கள்.... எனக்கு புகைப்படங்கள் எடுத்த விடயங்களில் இப்படியான விடயங்கள் பல இடங்களில் நிகழ்ந்திருக்கிறது இப்போது மிகவும் கவலைப்படுவதுண்டு

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கடந்த வாரம் Sibbald point எனும் amusement park இற்கு போய் இரண்டு நாள் காம்ப் பண்ணினோம். இந்த இடம் ஒன்ராரியோவின் தெற்குப் பக்கத்தில் கடற்கரை (lake) இனை அண்மித்த பகுதியில் இருக்கும் அழகான இடம். முற்றிலும் காடும் நதியும் சார்ந்த ஒரு பிரதேசம்.

கட்டிடக் காடாக பரந்து விரிந்து இருக்கும் நகர் புறத்தில் இருந்து சற்றே விலகி, ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த இடத்தில் மிகக் குறைந்த அடிப்படை வசதிகளுடன் இரண்டு நாட்கள் சின்னப் பிள்ளைகளுடன் பொழுதைக் கழித்தது மனசுக்கு மிகவும் பிடித்து இருந்தது. BBQ போட்டும், கொண்டு போன ஒரு சின்ன அடுப்பில் ஒரு கறி, சோறு என்பன சமைத்து உண்டதும் வித்தியாசமாக இருந்தது.

ஆயிரக்கணக்கான டொலர்கள் செலவழித்து சுற்றுலா போவதை விட, இப்படியான இடங்களுக்கு போவதால் பின் வரும் நன்மைகள் இருக்கு

1. நகர்புற போலி வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் என்றாலும் விலகி இருந்து காட்டுவாசி மாதிரி வாழ்வது

2. பிள்ளைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை பழக்கப்படுத்தி எந்த சூழ்நிலையிலும் வாழத் தேவையான அடிப்படை விடயங்களை அனுபவத்தினூடாக பழக்குவது (பால் இல்லாமல் இருக்கவே மாட்டாள் என் மகள்...ஆனால் கிட்டத்தட்ட 65 மணித்தியாலங்கள் பால் கேட்டு அழவில்லை)

3. குறைந்த செலவில் நிறைத்த சுற்றுலா

விடிய காலையில் 5 மணிக்கு காட்டுக்குள் இருக்கும் பறவைகளின் சத்தம் மிக அருமை. என்னால் அதன் ஒலியை பதிவு செய்ய முடியவில்லை என்று வருத்தமாக இருக்கின்றது. என்ன அருமையான இசை அது!!

நுளம்புத் தொல்லை, சிலந்திகளின் தொல்லை என்பன உபரி அனுபவங்கள்

இடம்: Sibbald point

இணையம்: http://www.ontariopa...glish/sibb.html

ஒரு படம், நான் எடுத்தது

p6143958.jpg

orig_ON0446-8.jpg

(இதை நான் எடுக்கவில்லை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.