Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்! ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாரதி சாதி ஒழிப்பை பாடுகிறேன் என்று என்னென்ன சாதி உள்ளதென்று விபரமாகப் பாடலில் பதிவு செய்திருப்பதுதான் உண்மை. அதேபோல ஈழம் என்பதையே உச்சரிக்க மனமின்றி சிங்களத் தீவு என்று பாடியவந்தான் அவன். இதுதான் இன்றூவரையும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பிராமணர்களின் நிலைப்பாடு.

 

 

இது தொடர்பான யாழில்.. ஒரு பட்டிமன்றத்தையே நடத்துவமே. பாரதி தனது கவிகள் மூலம்.. சாதியை வற்புறுத்தினானா.. அழிக்க முனைந்தானா என்று..??!

 

ஆனால் அதற்கு இந்தத் தலைப்பும் செய்தியும் சரியான இடமாகத் தெரியவில்லை..!

 

ஓடி விளையாடு பாப்பா.. கூடி விளையாடு பாப்பா.. என்று.. சின்னக் குழந்தையின் எண்ணத்திலேயே.. வேற்றுமையற்ற ஒற்றுமையை வலியுறுத்தியவன்.. அந்த முட்டாசுக் கவிஞன். அவன் மீதும்.. பழியா..???!

 

அதுசரி.. நாங்கள் பழிபோடாதோர் தான் யார்..?????????! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையைத் தேடுவது அவரது சொந்த உரிமை. இங்கே அண்ணன் , தம்பி ,அப்பா என்று யாரும் அவர்களின் முடிவுகளில் தலையிட முடியாது.

குறிப்பாக ஈழத்துப் பெண்கள் ஆணாதிக்க அடிமையில் அடக்கப்பட்டு கணவனே கண் கண்ட தெய்வம்..... கல்லானாலும் கணவன்.... புல்லானாலும் புருஷன்...... ஒருவனுக்கு ஒருத்தி....ஒருத்திக்கு ஒருத்தன்... இல்லையென்றால் போர்த்து மூடிப்படு .....

என்றெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

 

ஈழத்துப் பெண்கள் உலகம் என்றால் கணவன் பிள்ளைகள் இல்லாவிட்டால் சமையல் மற்றதெல்லாம் ஆண்கள் பார்த்துச் சொல்வார்கள் என்று அடைபட்டு இருப்பது தவறு.

தனக்கு தவறு எனும் பட்சத்தில் கணவனைத் தூக்கியெறிய ஈழத்துப்  பெண்கள் முன்வரவேண்டும். விவாகரத்து என்பது ஆணாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் பெண்களுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் பெண்கள் குறைவு. காரணம் ஆணாதிக்கம்

 

இரண்டாவது திருமணம் செய்யும் ஈழத்துப் பெண்கள் இன்னும் குறைவு காரணம் ஆணாதிக்கம், ஆண்களால் பழி வாங்கப்படுவோம் என்ற அச்சம். இதையெல்லாம் உடைத்து.... ஏற்கனவே உடைபட்டுக் கொண்டிருக்கின்றது..இன்னும் ஈழத்துப் பெண்கள் ஆணாதிக்கத்தில் இருந்து வெளியே வரவேண்டும். :D

 

ஏன் வாத்தியார் உங்களிடம் ஒரு கேள்வி..??! ஒரு மனிதன் கலியாணம் கட்டாமல் வாழ முடியாதோ..???!

 

அதேபோல்.. ஒரு பெண்/ ஆண் கலியாணம் கட்டாமல்.. இந்தச் சமூகத்திற்கு எவ்வளவோ கடமைகளை ஆற்ற முடியும். அதேபோல்.. ஒரு கணவனை இழந்த பெண்.. இன்னொருத்தன் கூட வாழ்ந்து தான் முடிக்கனுன்னு எதுக்கு நாங்கள் நினைக்கனும். அது அவளின்ர விருப்பம். அவள் விரும்பினால் அப்படி செய்யட்டும். இல்லை என்றால்.. அவள் தனியே தனது இனத்துக்காக குடும்பத்துக்காக தனக்காக தனக்குப் பிடித்த வாழ்வை வாழட்டும்.

 

இந்த உலகில்.. அமைதிக்கும்.. சேவைக்கும் இலக்கணமாக விளங்கிய பல பெண்மணிகளில்.. உலக அங்கீகாரம் பெற்ற அன்னை தெராசா போன்ற பெண்மணிகள்.. தனி மனிதனாக... வாழ்ந்து சாதித்ததைப் பற்றி ஏன் பேசினம் இல்ல.. உதாரணம் காட்டினம் இல்ல.

 

அதேபோல்.. பிளோரன்ஸ் நைட்டிங்கேல்.. போர் பெற்றெடுத்த தாதி மங்கை..!

 

Although much of Nightingale's work improved the lot of women everywhere, Nightingale was of the opinion that women craved sympathy and were not as capable as men.[20] She criticised early women's rights activists for decrying an alleged lack of careers for women at the same time that lucrative medical positions, under the supervision of Nightingale and others, went perpetually unfilled.[21] She preferred the friendship of powerful men, insisting they had done more than women to help her attain her goals, writing, "I have never found one woman who has altered her life by one iota for me or my opinions."[22][23] She often referred to herself in the masculine, as for example "a man of action" and "a man of business".[24]

 

She did, however, have several important and long-lasting friendships with women. Later in life she kept up a prolonged correspondence with Irish nun Sister Mary Clare Moore, with whom she had worked in Crimea.[25] Her most beloved confidante was Mary Clarke, an Englishwoman she met in 1837 and kept in touch with throughout her life.[26]

Some scholars of Nightingale's life believe that she remained chaste for her entire life; perhaps because she felt a religious calling to her career.[27]

 

http://en.wikipedia.org/wiki/Florence_Nightingale

 

கலியாணம்.. ஆணாசை.. மறுமணம்.. என்று எமது பெண்களுக்கு பிரச்சனைகளுக்குரிய.. வழிகாட்டுவதை விட.. நல்ல சமூக வழிகாட்டலைச் செய்யலாமே..??!!!!!

 

இவை புரட்சி இல்லையோ..???????????????????! :):rolleyes::icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா சொல்லுறன் தனிய ஒரு திரி திறந்து அடிபடுங்கோ  யார்  பெரியவர் எண்டதை அங்க தீர்மானிப்பம் . <_<

சத்தியமா சொல்லுறன் தனிய ஒரு திரி திறந்து அடிபடுங்கோ  யார்  பெரியவர் எண்டதை அங்க தீர்மானிப்பம் . <_<

 

அர்த்தமுள்ள வாதங்களுடன் மல்லாடலாம்.

ஆனால் இங்கே பதியப்படுபவை விதண்டாவாதங்கள்!! ஆகவே திரிக்கு அவசியமில்லை.  :D

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி.அனந்தி என்ன விசையமாய் கடிதம் எழுதினவ  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணா கண்ணகி அவ்க்காகவும்,அவவின் கணவரை மீட்பதற்காகவும் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு மதுரையை எரித்தார்.ஆனால் பாஞ்சாலி ஜந்து பேருக்கு மனைவியாக இருந்தாலும் இழந்த நாட்டை மீட்பதற்காக பாண்டவர்களால் பணயம் வைக்கப்பட்டவள் ...கற்பு,ஒழுக்கம்,ஒருத்தனுக்கு ஒருத்தி என கதைப்போர் கண்ணகியை முதன்மைப்படுத்துவார்கள்.இங்கு ஆனந்தி போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கதைக்கும் போது பாஞ்சாலியை விட உதாரணம் காட்ட சிறந்த பெண் இல்லை என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எழுதின கதை (யாழில் இல்லை) தமிழ்ப்பெண்களை கண்ணகிகளாக உருவகிக்கவில்லை என்பதும் அனந்தி பாஞ்சாலிகள் என்று சொன்னதும் பொருந்தித்தான் வருகின்றது.

பழைய பஞ்சாங்கத்திலேயே தமிழீழப் பெண்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.    கருணாநிதியிடம் வேண்டுமானால் இந்த உதாரணம் வேகலாம்.  ஆனால், இரும்புப் பெண்மணி ஜெயாவிடம் இது வேகாது.   அனந்தி கற்க நிறைய இருக்கிறது.  

ஆனந்தி அவர்கள் எழுதிய கடிதம் மிகவிளக்கமான காலத்தின் தேவையும், அவசியமான கடிதமாகும். இருவரும் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் நலன்களில் அக்கறையுடையவர்கள் என்பதில் ஒற்றுமையுடையவர்கள். வாழ்த்துக்கள் ஆனந்தி. உங்களுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் ஏன் தமிழகம் ஒருவாட்டி சென்று முதலமைச்சரை சந்தித்தால் என்ன?..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.