Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போஸ் நிஹாலே

 

ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களது அரசியலரங்கில் மே 2009 ற்குப் பிறகு மூன்று போராட்ட சீசன்கள் உள்ளன. முதலாவது மார்ச் மாதத்தில் சனல் 4 தொலைக்காட்சி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கத் தீர்மானத்துடன் ஐ.நாடுகள் சபைக்கு முன்பாக தீர்த்தத்திருவிழாவில் கொத்துரொட்டித் தானத்துடன் நிறைவு பெறும்.

May18--with-child-face_zps00de81ad.png?tஇரண்டாவது சீசன் மே மாதத்தின் மூன்றாவது வாரம். இங்கே மூன்றாவது வாரம் என்று குறிப்பாக ஒரு நாளைச் சொல்லாமல் வாரத்தையும் சொல்லுவதற்கு காரணம் உள்ளது. மே பதினேழு, பதினெட்டு,பத்தொன்பது, இனப்பொடுகொலை நாள், துக்கநாள் என்று தமிழன் குழம்புவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளது. அது சரி திருவிழா என்றால் கொடியேற்றம் தேர் ,தீர்த்தம், சப்பரம், திருக்கல்யாணம் எண்டு இருக்கத்தானே செய்யும் என்கிறீர்களா?  முள்ளிவாய்க்கால் நினைவு காலம் வந்து விட்டால் அதுவரை சிவனேயென விட்டத்தை பார்த்து நித்திரை கொள்பவர்கள் எல்லாம், மரவள்ளித் தோட்டத்துக்குள் நுழைந்த பன்றிகள் இரண்டு சீனா வெடியப் போட்டால் பரபரப்பாவது மாதிரி அலாதிப் படுவார்கள். கதைக்கும் போது, குரலை ஒரு சோக ரோனில் வைத்திருப்பார்கள். ஒரு வார்த்தை மேலதிகமாக கதைத்துவிட்டால் உடைந்து அழ தயாராகிவிடுபவர்களை  போல இருப்பார்கள். அதுவரை சமூகவலைத்தளங்களில் அமலாபாலினதும், விராட்ஹோலியினதும் படங்களை முகப்புபடங்களாக வைத்திருப்பவர்கள், அவசர அவசரமாக கூகுளில் ஒரு தேடுதல் வேட்டையை நடத்தி ஒரு தீபத்திற்கோ அல்லது போட்டோசொப்பில் பதப்படுத்தப்பட்ட ராஜபக்ச,சோனியா காந்தி போன்ற படங்களுக்கோ அல்லது இலங்கை அரசை கண்டிக்கும் சுலோகத்திற்கோ மாறுவார்கள் (அவரவரது அறிவுஜீவித் தனத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்) அமலாபாலுக்கு கல்யாணமாகப்போகுதே எண்ட கவலையிலைதிரிந்தவர்கள், ஐபிஎல்இல் மக்ஸ்வெலின் சூறாவளியில் சுருண்டுபோய் இருந்தவர்களும், கான்டி கிரஷ் சாகவுக்கு இடைவிடாது இன்விட்டேசன் அனுப்பிக்கொண்டிருந்த பயபுள்ளகள்  எல்லோரும் சட்டென போராளியாகி, அறக்கத்திகளை நாலாபுறமும் வீசத் தொடங்குவார்கள். ஒவ்வொரு முகப்புத்தக நிலைத்தகவலும் அணுகுண்டாக மாறும், ருவிட்டரில் கண்ணிவெடிகளைப் புதைப்பார்கள், பகிரப்படும் ஒவ்வொரு போட்டோவும் கண்ணீர் வெடியாக மாறும் ஒவ்வொருவரின் தாக்குதலிலும் ராஜபக்ச நூற்றியெட்டு துண்டாகி விழுவார்.

RTXEAPG_MAIN_PICTURE5_zps5134c3ad.jpg?t=

முள்ளிவாய்க்காலிலிருந்து இடம்பெயரும் மக்கள்

இந்த வருடத்தில் இரண்டாவது சீசனும் எந்தக் தொய்வுமில்லாமல் நடந்து முடிந்துவிட்டது. இனி மூன்றாவது சீசனில்த்தான் இந்த காட்சிகளை காணலாம். அது நவம்பரில் மாவீரர்தின சமயத்தில் வரும். புவிவெப்பமடைந்து வருகிறது, காலநிலை மாற்றம் ஏற்படுகின்றதென சொல்கிறார்கள். அதுபோலத்தான் இதுவும்.  ஈழத்தமிழர்களின் அரசியலரங்கில் கடந்த ஐந்து வருடங்களில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றமிது. முன்னர் வருடத்தின் 365 நாளும் போராடிய காலம்போய், இப்பொழுது வருடத்திற்கு மூன்று போராட்ட சீசன்களாகச் சுருங்கிப் போயிருக்கிறது.   வங்கக்கடலோரமாக திடீர்திடீரென காற்றழுத்த மையங்கள் ஏற்படுவது மாதிரி, அவ்வப்போது ஏதாவது மாற்றங்கள் வரலாம். எப்பவாவது ராஜபக்ச வெளிநாட்டிற்கு ஒரு விசிற் அடித்தால், வடக்கில் ஒரு எலக்சன் வந்தால்த்தான் சீசனிற்கு மிஞ்சிய பொங்குதல் நடக்கும்.

09-05-2009-velikkulam-refugees-camp_zps2

பால்மாப்பைக்கற்றுக்களை தம்மிடம் சரணடைந்தவர்களை நோக்கி வீசி எறிந்து படையினர் விநியோகிக்கும் காட்சி மே 2009

அதுவரை அமலாபாலையோ அடுத்த வீட்டு பிகரையோ புரபைல் பிக்சராக்கிவிடலாம். அந்த போராட்டமுறையினால் யாரிற்கும் எந்த பாதகமுமில்லை. அவ்வப்போது மனத்திருப்தியுமாயிற்று. நூறு லைக் வாங்கியுமாயிற்று.

மனிதர்களின் நிஜ வாழ்க்கை வேறு, இணைய வாழ்க்கை வேறு என்பதுதான் தொழில்நுட்பம் கற்றுதந்திருக்கும்பாடம். இணைய உலகமும் நிஜ உலகமும் வேறுவேறானவை என்பதை துல்லியமான உதாரணங்களின் மூலம் காலம் நிரூபித்துள்ளது.

எல்லா மனிர்களிற்குள்ளும் அற உணர்வு உள்ளதுதான். போராட்டகுணமும் உள்ளதுதான். ஆனால் அதன் அளவில் வித்தியாசம் இருக்கலாம். உலகின் பெரும்பாலான மனிதர்களிற்கு இவை மிகக்குறைந்த அளவில்த்தால் இருக்கும். இதனால்த்தான் நம்மத்தியில் ஒரேயொரு காந்தி இருந்தார். ஒரேயொரு நெல்சன் மண்டேலா இருந்தார். ஒரேயொரு சேகுவேரா இருந்தார். ஆனால் இவர்கள் பற்றிய கனவு நம் எல்லோர் மத்தியிலும் உள்ளது. இன்றும் இணையங்களில் எழுதும் பலர் இந்த பெயர்களை வைத்திருக்கிறார்கள். இவர்களின் நினைவுதினங்களில் புரபைல் பிக்சராக இவர்களின் படங்களை வைத்து கொள்கிறார்கள்.

ff0158c2594917cd6a9c4e297e8a8d7c_XL_zps2

யாழ்ப்பாணத்தில் 2014 மே மாதம் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அன்னதானப் பந்தலில் யாழ்ப்பாண வாசிகள் உணவு உண்ணும் காட்சி

ஒருவகையில், தங்களால் முடியாததை செய்து முடித்த சாகசகாரர்கள் மீதான ஈர்ப்பாகவும் இதனைக் கொள்ளலாம். சாகசக்காரர்களின் படங்களை பகிர்ந்து கொள்வதற்கும், இணையத்தில் அறச்சீற்றத்தை வெளிப்படுத்துவதற்குமிடையில் ஆகப்பெரிய வித்தியாசங்கள் எவற்றையும் கண்டுபிடிக்க முடியாது. ஒரு செயலுக்காக இணையத்தில் ஆவேசத்தை வெளிப்படுத்தும் ஒருவர், அதனை நேரடிய காணும்போது அதேவிதமான எதிர்வினையை ஆற்றுவதில்லை. நம்மை, நமது வாழ்க்கையை, குடும்பத்தை, வேலையை என பலதையும் சிந்தித்தே செயற்படுகின்றோம். பெரும்பாலான சமயங்களில் எதுவும் பேசாமல் இடத்தைவிட்டு நகர்ந்து விடுவோம். இதனால்த்தான் இணைய உலகம் வேறு, நிஜ உலகம் வேறு என்கிறேன்.

இதனை மேலுமிரண்டு துல்லியமான உதாரணங்கள் மூலம் சொல்கிறேன்.

இன்று நாங்கள் கண்டு கொதிக்கும் முள்ளிவாய்க்கால் துயரம் ஐந்து வருடங்களின் முன்னர் நடந்தது. அப்பொழுது தமிழ்சமூகம் என்ன செய்தது? வகைதொகையில்லாமல் நமது மக்களே கொல்லப்பட்ட அடுத்தடுத்த மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் திருவிழா நடக்கவில்லையா? நமது பெண்கள் நந்திகடலோரமாக நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்பட, கற்பில் சிறந்தது கண்ணகியா சீதையா என நாம் பட்டிமன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கவில்லையா? நடிக நடிகையரை அழைத்து புலம்பெயர் தேசங்களில் நட்சத்திரகலைவிழாக்கள் நடக்கவில்லையா? என்ன, வழமையில் எதுவும் சொல்லாமல் ஆடிப்பாடிவிட்டு செல்பவர்கள், அந்த சமயத்தில் மட்டும், “ஐ லவ் யூ யப்னா” என அரங்கத்திலிருப்பவர்களை பார்த்து ஒரு உதட்டு முத்தம் கொடுப்பார்கள். அந்த நடிகையையும் நாம் போராளியாக்கி மனதை திருப்திப்படுத்தி கொள்வோம்.

இரண்டாவது உதாரணம் அண்மையில் நடந்தது. அண்மையில் வடக்கு மாகாணசபைக்கு எதிரில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அஞ்சலி நிகழ்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அறிவித்தல் வந்ததும், பாதுகாப்பு தரப்பு பெருந்தொகையில் அங்கு திரண்டு சென்றது. கணிசமான ஊடகக்காரர்களும் சென்றனர். ஆனால், தமிழ்தேசிய கூட்டமைப்புகாரர்கள்தான் வரவில்லை. அன்றைய நிகழ்விற்கு வந்தது வெறும் மூவர். சிவாஜிலிங்கம், அனந்தி, மேரி கமலா. மிகுதிப்பேர் எங்கே? யாழ்ப்பாணத்தில் நான்கரை இலட்சம் மக்களிற்கு குறையாமல் உள்ளபோதும், அன்றைய அஞ்சலிக்கு வந்தவர்கள் வெறும் மூவர்தான்.

மிகுதிப்பேர் அனைவரும் வேறு ஒரு இடத்தில் பிஸியாக நின்றனர். கைதடியில் இருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில்த்தான் யாழ்ப்பாண நகர மையம் உள்ளது. அங்கு படையினர் பிரமாண்ட வெசாக் வலயம் அமைத்திருந்தனர். தமிழர்கள் பெரும்பாலானவர்கள் அங்கு குவிந்து நின்றனர். களியாட்டமொன்றை கண்டு களிக்கும் உற்சாகத்துடன் வந்து சென்று கொண்டிருந்தனர். இந்த நிகழ்வின் பிரதான அம்சமாக படையினர் கூறியது, 60 ஆயிரம் மின்குமிழ்களினால் ஆன வளைவொன்று. அதில் நடுநாயகமாக புத்தர் வீற்றிருந்தார். 60 ஆயிரம் மின்குமிழ்களின் ஒளி, யாழ்ப்பாணத்தவர் அணிந்து சென்ற பட்டுவஸ்திரங்களில் பட்டு தெறித்து கொண்டிருந்தது.

சிவாஜிலிங்கம் தனித்து நின்று தீபமேற்றிய செய்தி வெளியான அன்று, நகரத்தில் படையினர் அமைத்த வெசாக் வலயத்தில் 10 ஆயிரம் மக்கள் அன்னதானம் உண்டதாக படையினர் அறிவித்தனர். இந்தப் பத்தாயிரம் பேரும் தென்பகுதியில் இருந்து இராணுவம் அழைத்து வந்தவர் அல்ல. அனைவரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக இதே சிவாஜிலிங்கத்திற்கும் விக்னேஸ்வரனுக்கும் ஓட்டுப்போட்ட சிவப்பு மஞ்சள் தமிழர்கள்தான்.  இந்த எண்ணிக்கை மிகை எண்ணிக்கை அல்லவென்பது அன்றைய நிகழ்வை அவதானித்தவர்களிற்கு தெரிந்திருக்கும். இத்தனைக்கும் யாழ்ப்பாண நகரத்துக்கும் கைதடிக்குமிடையில் உள்ளது வெறும் 12 கிலோமீற்றர்கள்தான். சாதாரணமாக இருபது நிமிட பயணத்தூரம்தான்.

நான்கு நாட்கள் நடந்தது அந்த வெசாக் கண்காட்சி. மே 20ம் திகதி வரையும் நடந்த கண்காட்சியில் அண்ணளவாக முப்பதாயிரம் மக்கள் கலந்து கொண்டார்கள் என வைத்து கொள்ளலாம். இவர்களில் சமூக வலைத்தள ஊடாட்டமுள்ளவர்கள் என அரைப்பங்கிற்கு மேற்பட்டவர்களை கொள்ளலாம். அவர்கள் அத்தனைபேருமே சமூகவலைத்தளங்களில் முகப்பு படங்களாக ராஜபக்சவினதோ, ராணுவத்தினதோ படங்களை கொண்டவர்கள் என்பது அர்த்தமல்ல. சமூக வலைத்தளங்களில் அறச்சீற்றம் கொள்பவர்கள், இந்த மக்கள் திரளிற்குள்தான் இருப்பார்கள்.

இவர்கள் அன்றை தினத்தில் மனம் பொங்கி, யாழ்ப்பாணம் சிங்கள மயப்பட்டு வருகின்றதென்றோ, பௌத்த சிங்கள அடையாளத் திணிப்பு நடக்கின்றதென்றோ பக்கத்திலிருந்தவருடன் கீழ்க்குரலில் குசுகுசுத்திருக்க கூடும். அதுபற்றியும் நமது அக்கறையல்ல. நாம் குறிப்பிட விளைவது, யாழ்ப்பாண நகரத்திற்கும் கைதடிக்குமிடையிலான இடையிலான தூரம் பற்றியதே.

vesak_zps1bc85b11.jpg?t=1400953372

யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வெசாக் வெளிச்சக் கூடுகளில் ஒரு பகுதி

தமிழர்கள் என்றாலே முகத்தை உர்ரென வைத்தபடி இருக்க வேண்டுமென்பதோ, களியாட்டங்களை புறக்கணிக்க வேண்டுமென்பதோ நமது வாதமல்ல. விடுதலைப்போராட்டமொன்றை நடத்திக் கொண்டிருக்கும் நமது மக்களின் அடிப்படை இயல்பு பற்றியது. இன்னும் துல்லியமாக சொன்னால், இந்த இயல்பு நமது சமூகத்தின் பொது இயல்பு. அதனை இப்படி புரிந்து கொள்ளலாம்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் பற்றிய கணக்கீடொன்றை செய்யலாம். யுத்தத்தில் இறுதியில், சுமார் 12 ஆயிரம் பேர் புலிகள் அமைப்பில் இருந்ததாக கூறப்பட்டு புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். புலிகள் அமைப்பு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையான 35 வருட காலத்தில் பல்வேறு காலத்திலும் பங்களித்தவர்கள் அவர்கள். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையை சார்ந்தவர்களாக கொள்ளலாம். இதனை தவிர, விடுதலைப்புலிகளில் மரணமானவர்கள் என நாற்பதாயிரம் பேரை கொள்ளலாம். விடுதலைப்புலிகளின் மாவீரர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், யுத்தத்தின் கடைசி இரண்டு மூன்று நாட்களில் கொல்லப்பட்டவர்கள் என ஒரு மூவாயிரம் பேரைக் கணக்கிட்டாலும், மொத்தமே விடுதலைப்புலிகளின் நேரடி களச்செயற்பாட்டாளர்கள் என 55 ஆயிரம் பேர்தான். வெவ்வேறு காலங்களில் புலிகளிலிருந்து விலகி வெளிநாடு சென்றவர்கள் என, இரண்டாயிரம் பேரைக் கொண்டாலும் மொத்தமே 57 ஆயிரம்தான். அதாவது, கனடாவில் ரொரான்டோவில் உள்ள ஈழத்தமிழர்களின் ஆறில் ஒரு பகுதியினர்.

உலகம் முழுவதும் சுமார் 10 இலட்சம் ஈழத்தமிழர்கள் சிதறி இருக்கிறார்கள். இவர்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் தீவிர தமிழ்தேசியவாதிகள். விட்டால் ராஜபக்சவின் குரல்வளையைக் கடித்துக் குதறிவிடத் தயாராய் இருப்பவர்கள்.  விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்கள். மனதளவில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆழமாக நேசிக்கிறார்கள். ஈழவிடுதலைக்காக பணம் உள்ளிட்டவற்றை கொடுக்கிறார்கள். ஆனால், தத்தமது நாடுகளில் அகதி அந்தஸ்து கோரும்போது இவர்களில் பலர், தம்மால் இலங்கையில் இருக்க முடியாமல் போய்விட்டதென்றும், அரசு மற்றும் விடுதலைப்புலிகளினால் தமக்கு அச்சுறுத்தல் இருந்ததென்றும் கூறியிருப்பார்கள். அவர்கள் அப்படி கூறியதுதான் தமிழீழ விடுதலைப்போராட்டம் தோற்றுபோக காரணமல்ல. அப்படி கூறுவதால், விடுதலைப்போராட்டத்திற்கு எந்த நேரடி சிக்கலுமில்லை என்ற மனச்சம்மதத்துடன் அதனை கூறியிருக்க கூடும். யார் கண்டது, அன்று யாழ் வெசாக வலயத்திற்கு சென்றவர்கள் கூட இதேவிதமான மனச்சம்மதத்டன், சென்றிருக்ககூடும்.

இங்கே குறிப்பிடும் மனநிலை இப்பொழுது உருவானதல்ல என்பதற்கு மேலே சொன்னவை ஆகச்சிறந்த உதாரணங்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலும் அதுதான் இருந்தது. அவர்கள் இல்லாமல் போன பின்னரும் அதுதான் இருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில், மிகச்சிறிய அளவிலென்றாலும் செயற்பாட்டாளர்கள் இருந்தது அனைத்தையும் ஈடு செய்து கொண்டிருந்தது. இப்பொழுது அப்படியல்ல. அனைத்து செயற்பாடும் இணையத்திற்குள் முடங்கிவிட்டது.

ஆகவே தோழர்களே.. இனி பொழுதை வீணடிக்க தேவையில்லை. இன்னும் மெழுகுவர்த்திகளையோ, மே 18 என எழுதிய படங்களையோ முகப்பு படங்களாக வைத்திருக்க தேவையில்லை. மாற்றி விடலாம். நவம்பர் வரைக்கும் அறச்சீற்றத்துக்கு அல்வாகொடுத்துவிட்டு அமலாபால் கல்யாண அலுவல்களைக் கவனிக்கலாம்? சுப்பரமணிய புரம் சுவாதி கூட கல்யாணத்துக்கு தயாராம் ( எவ்வளவு சோகத்தைத் தான் தமிழன் தாங்குவான்)

 

http://pagetamil.com/?p=2989

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அடியார் மடத்திலை அந்தமாதிரிச்சனம்.....பொன்னம்மா மடத்திலை சனமேயில்லை எண்டமாதிரி கதை போகுது......
 
கதை ஆசிரியர்கள் ஈழப்பிரச்சனையும் அதன்  முக்கிய விடயங்களையும் தவறவிட்டுள்ளார்கள்......
 
  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர்களிடம் உள்ள உணர்வுகளை பழிக்கும் செயல்.

 

உலகெங்கும் மக்கள் தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநியாயங்களை அந்தந்த கால எல்லையில் தான் நினைவுகூர்ந்து வருகிறார்கள். தமிழர்கள் அதுக்கு விதிவிலக்கல்ல. அவரவர் தங்களின் ஆற்றல் வசதிக்கு ஏற்ப நினைவு கூறுகிறார்கள்.

 

இதில் தவறு எதுவும் இல்லை. பெரிய புரட்சிகளில் இருந்து பெரிய உலகப் போர்கள் ஈறாக ஒரு தனி மனிதனின் சிரார்த்த தினம் வரை இது தான் இப்பூமிப்பந்தில் இன்றைய மனித சமூகத்தில் நிலை..!

 

இதனை கைவிடுவது தான் ஆபத்தானது. ஒரு மனித இனத்துக்கு எதிராக மனிதனுக்கு எதிராக ஆற்றப்பட்ட கொடுமைகளை அது மறைக்கச் செய்யலாம். எனவே இப்படியான பிரச்சாரங்கள் குறித்தும்.. இவற்றை முன்னெடுப்பவர்கள் குறித்தும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

#ஈழம் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுக்கும் பொழுது மட்டும் சிலர் நீங்க போராளி வேடம் போடுறிங்க என்னும் பொழுது.....அவர்களுக்கான சிறு பதில்..


அரசியல் சமூக காரணிகள் இலட்சம் இருப்பினும் அதை விட்டு விட்டு பேசுவோம்..
==============================================================

ஒரு வேளை போலியாக கூட ஈழப் போராளி வேடம் அணிவதும் கூட சாதாரணமானது அல்ல...
சிறை செல்ல வேண்டும்,வீட்டில் திட்டு வாங்கணும்,
உங்களைப் போன்ற எவனும் மதிக்க மாட்டான்..வேலை கொடுக்க மாட்டான்...
பேருந்து புடிச்சி போராட்ட இடத்துக்கு போகக் கூட பணம் இருக்காது...

கல்யாணமாகாதவனா இருந்தா அதுக்கப்புறம் எப்பவும் சிரமம் தான்...

கல்யாணம் ஆனவனா இருந்தா வீட்டில இருந்து விரட்டி விட்டுடுவாங்க...

(இதில் எந்த போராட்டத்துக்கும் போகாத இண்டலக்சுவல் கும்பலை சேர்க்க முடியாது..ஏன்னா..கார சாரமாக காலம் காலமாக அரசியல் மட்டுமே பேசிக்கொண்டு..படித்த புத்தகங்களை சிலாகிப்போரும் உண்டு..அவர்களுக்கு எல்லா வசதிகளும் அமையப்பெறும்..வேலை..குடும்பம்ன்னு எந்த தொந்தரவும் இருக்காது..)

#எல்லாராலும் வெட்டிப் பய என்கிற முத்திரைக் குத்தப்படுவான்...

 

thanks : வ. கீரா

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளரின் நோக்கம் தமிழரின் இன்றைய  சோர்வுநிலை என்றால்

புரிந்து கொள்ளமுடிகிறது

என்னையும் நோக்கி  இது  கைநீட்டி நிற்கிறது

என்னை திருத்திக்கொள்ளமுயல்வதே

அடுத்த  கட்டம் ஏதாவது உண்டு என்றால்அதற்கு வழி

கட்டுரையாளரின் நோக்கம் தமிழரின் இன்றைய சோர்வுநிலை என்றால்

புரிந்து கொள்ளமுடிகிறது

என்னையும் நோக்கி இது கைநீட்டி நிற்கிறது

என்னை திருத்திக்கொள்ளமுயல்வதே

அடுத்த கட்டம் ஏதாவது உண்டு என்றால்அதற்கு வழி

கட்டுரையாளர் யார்? அவர் எப்படி போராடுகிறார்?

9/11 சீசன் வந்தால் அமெரிக்கன் கொடி வீசுவான்.

7/7 வந்தால் பிரிடிஸ்காரன் கொடி வீசுவான்.

எல்லாம் சீசனில தான் இயங்குது.

  • கருத்துக்கள உறவுகள்

சீசன் எழுத்தாளர்கள்

 

2009ற்கு முதல் புலிகளை வசைபாடி பிழைப்பு நடத்தினோம். 

 

2009-2011 வரை புலிகளின் அடுத்த அரசியல் ஆலோசகர் பதவிக்காக ஆய்(வு) கட்டுரைகள் எழுதினோம். எதுவும் எடுபடிவில்லை.கழுவி கழுவி மக்கள் ஊத்தியதால் துடைத்துவிட்டு செய்வதறியாது நின்றோம். 

 

2012ற்கு பின்னர் புலி வாந்தி எடுத்தோம். புத்திஜீவி என்று கொண்டாடியது ஒரு கூட்டம். இந்த சுகம் நன்றாக இருந்ததால் தற்போது அங்கேயே பாய்விரித்து படுத்துக்கெண்டோம்.

 

எத்தனை இணையங்கள் எம்மை தடைசெய்தாலும் மீண்டும் பல பெயர்களில் பல இணையங்களில் எழுதித்தள்ளுவோம். அம்புட்டு அறிவு எங்களுக்கு!

 

இப்படிக்கு

-பிரச்சனைகளை மட்டுமே எழுத தெரிந்த சீசன் எழுத்தாளர்கள் சங்கம் -

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத்தான் இதையெல்லாம் வாசிப்பதில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத்தான் இதையெல்லாம் வாசிப்பதில்லை.. :D

 

கட்டுரையாளர் என்ன சொல்கின்றார் என்றால்...

இனி பொழுதை வீணடிக்க தேவையில்லை

 

 

நான் இதை வாசித்து வீணடித்துவிட்டேன்.  :wub:

தமிழனக்கு வேறு ஒருவரும் எதிரி இல்லை. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வரலாறுகள் தினமாக கொண்டாடபடுகிறது. இதில் தமிழரும் விதி விலக்கு அல்ல.. இதனை சீசன் என்று கொச்சைப்படுத்தினால் தமிழர் இதனை எல்லாம் வெட்கத்தில் மறந்து விடுவார்கள் என்ற சிங்கள, ஆரிய கூட்டு நோக்கம் போல் இருக்கிறது இந்த கட்டுரையாளருக்கு. இப்படி விடுதலை வரலாற்றில் மண்டை கழுவும் தொழிலை கச்சிதமாக மேற்கொண்டு தம்மினத்தை அடிமைகளாக மற்ற இனத்துடன் ஒத்துபோகவைப்பார்கள்.. இப்படியான சீசன் எழுத்தாளர் பற்றி எம்மக்கள் கவனமாக இருந்து செயல்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதம் முடிகின்றது. கோடை விடுமுறையில் ஊருக்கு விடுமுறைக்குப் போகவேண்டும் என்பதால் தாயகம், தேசியம் எல்லாவற்றையும் அடக்கி வாசிக்க வேண்டும். போய் வந்து ஒரு ஓய்வு எடுத்த பின்னர் நவம்பரில் மாவீரர் தினத்தை அண்மித்து ஆவேசமாகத் தேசியம்,விடுதலை, தியாகம் எல்லாவற்றைப் பற்றியும் கதைக்கவேண்டும். இதைத்தான் பலரும் செய்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பார்த்து நொந்து போன மனிதர்கள்
எப்போதுமே நொந்தவர்கள் அல்ல.
வெற்றியைப் பார்த்து மகிழ்பவர்கள் எப்போதும் தோற்றவர்கள்  அல்ல.
மேற்கில் மறையும் சூரியன் மீண்டும் கிழக்கில் உதிக்கத்தானே செய்வான்
வெற்றியின் விமர்சனங்களை விடத் தோல்வியின் விமர்சனங்கள் வலுவானவை

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.