Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் முழுவதும் சிதறியுள்ள தமிழ் அகதிகள்:களியாட்டங்களில் புலம்பெயர் அமைப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் சிதறியுள்ள தமிழ் அகதிகள்:களியாட்டங்களில் புலம்பெயர் அமைப்புக்கள்

புலிகள் இயக்கத்தில் போராளிகளாகவிருந்தவர்களும் வன்னியில் இறுதிக்கட்டத்தில் முடக்கப்பட்டுத் தப்பியவர்களும் இன்று உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அகதிகளாக சிதைக்கப்பட்டுள்ளனர். கடந்து ஐந்து வருடங்களாக எப்போதும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் நாளாந்தம் மரணத்துள் வாழ்கின்றனர். புலிகளின் முக்கிய போராளிகள் உட்படப் பலரின் இந்த அவலத்திற்குப் பணக்காரப் புலம்பெயர் அமைப்புக்கள் எந்த உதவியையும் மேற்கொள்வதில்லை. ஆபிரிக்க நாடுகளான பெனின், தன்சானியா, ரொகோ, தென்னாபிரிக்கா போன்றவற்றிலும் கிழக்காசிய நாடுகளிலும் இந்தியாவிலும் அனாதைகளாக குழந்தைகளுடன் சிதறுண்டு சிதைக்கப்பட்டுள்ள இந்த அகதிகளின் மலேசியப் பிரிவினர் விடுத்துள்ள வேண்டுகோள்.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், காணாமல் போகச்செய்தல், சட்டத்துக்குப் புறம்பான கைது, படுகொலை என்பவற்றால் பாதிப்படைந்து UNHCR யையே முழுதாக நம்பி 5000 ற்கும் மேற்பட்டோர் அகதியாக பதிவுசெய்து மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

எனினும் சமீப காலமாக UNHCR இன் செயல்பாடுகள் கவலையளிப்பதாகவும், சந்தேகத்துக்கிடமானதுமாக உள்ளது.

UNHCR இல் அகதியாக பதிசெய்யப்பட்ட ஒருவர் பொலிசாரால், அல்லது குடிவரவுத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டால், 14 நாட்களில் நீதிமன்றம் கொண்டு செல்லப்படும் போது UNHCR இல் பதிவுசெய்யப்பட்ட அகதிகள் என UNHCR இன் பிரதிநிதியால் உறுதிசெய்யப்படும் போது அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவார், அல்லது மீண்டும் தடுத்து வைக்கப்பட்டு அடுத்த 14 நாளும் நீதிமன்றத்தில் ஓர் சந்தர்ப்பம் வழங்கப்படும். அப்போதாவது UNHCR ஆஜராகி சம்பந்தப்பட்டவரை விடுவிக்கலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவ்விடயம் புறக்கணிக்கப்படுகின்றமையால் பலர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாகும் நிலை உண்டாகியுள்ளது.

கடந்த வாரத்திலும் மகாதேவன் கிருபாகரன் (வயது 42), குசாந்தன் சந்திரலிங்கராஜா (வயது 45) ஆகியோர் கருப்பு முகமூடி அணிந்து வந்த மலேசியா பொலிசாரினால் கடத்தல் பாணியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் UNHCR இல் பதிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட அகதி ஒருவர் திருமணம் முடிக்க வேண்டுமாயின் பதிவுத்திருமணம் செய்துகொள்ள முடியாது, எனவே சமய முறைப்படி திருமணம் செய்து அதற்கான ஆதாரங்களுடன் கணவனை / மனைவியை UNHCR இல் கணவனாக / மனைவியாக பதிவுசெய்து கொள்ளல் வேண்டும், அவ்வாறான பதிவுக்காக செல்பவர்கள் தொலைபேசி மூலம் அழைப்பதாக திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

எனினும் 1 வருடத்துக்கும் மேலாக அழைப்புகள் வருவதும் இல்லை பதிவுசெய்யப்படுவதும் இல்லை, இப்படியாக எந்த பதிவும் இல்லாமையினாலும் பலர் கைதாகி சிறையில் உள்ளனர், இவ்வாறான UNHCR இன் புறக்கணிப்பின் உச்சமாக ஒருவருடத்துக்கும் மேலாக தனது மனைவியை பலமுறை பதிவுசெய்ய முயற்சித்தும் UNHCR வேண்டுமென்றே புறக்கணித்து வந்த ஒருவரின் மனைவி கடந்த மே 18 ம் திகதி சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளார்.

குழந்தை பெற்று 2 ம் நாளான மே 20 ம் திகதி வைத்தியசாலை வாயிலில் வைத்தே குழந்தையுடன்

கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக UNHCR இல் முறையிடச்சென்ற கணவரிடம் “பதிவுசெய்யமுன் உங்களை யார் குழந்தை பெற்றுக்கொள்ளச்சொன்னது” என பொறுப்பற்ற விதத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது, எனினும் 1 வருடத்திற்கும் மேலாக பலமுறை UNHCR அலுவலகம் சென்றும் பதிவுசெய்யாமல் பொறுப்பற்ற விதத்தில் செயல்பட்டது UNHCR அதிகாரிகளே.

1951 ம் ஆண்டு அகதிகளுக்கான வரையறையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் கூட இலங்கை அகதிகளை நடாத்த மறுத்து, 2009 இல் தமிழினம் அழியும் வரை பார்த்திருந்து பின்னர் ஐ.நா தவறிளைத்து விட்டதாக அறிக்கை மட்டும் வெளியிட்டது போன்று, மலேசியாவில் உள்ள அகதிகள் அனைவரும் வேட்டையாடப்படும் வரை UNHCR ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றதா என்ற எண்ணமே தோன்றுகின்றது.

தயவுசெய்து இச்செய்தியை படிக்கும் செயற்பாட்டாளர்களும், தமிழர்களுக்கான ஊடகமான தாங்களும் இவ்விடயத்தை பொறுப்பு வாய்ந்த தரப்புகள், மனித உரிமைகள் அமைப்புகளுக்கு எமது அவலம் பற்றி தெரியப்படுத்தி, ஓரளவேனும் எமக்கான தீர்வினைக் காண உதவுமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

மலேசியாவிலுள்ள இலங்கை அகதிகள்

refugeerajan@gmail.com

http://inioru.com/?p=40468

அகதியாக்கிய சிறிலங்கன்ஸ் ஆயிரக்கணக்கான கோடிகளிகள் வேசக், இராணுவ பவனி குத்தாட்டம் போடுகிறார்கள்.

யாரவது அவர்களை தட்டி கேட்கிறார்களா?

இது ஒரு தமிழர் மனவுறுதி உடைக்கும் யுக்தி.

எல்லா பிழைகளும் தமிழரது, சிறி லண்கன்ஸ் எம் பிழைகளை திருத்த கொல்லும் நல்லவர்கள்.

அகதியாக்கிய சிறிலங்கன்ஸ் ஆயிரக்கணக்கான கோடிகளிகள் வேசக், இராணுவ பவனி குத்தாட்டம் போடுகிறார்கள்.

யாரவது அவர்களை தட்டி கேட்கிறார்களா?

இது ஒரு தமிழர் மனவுறுதி உடைக்கும் யுக்தி.

எல்லா பிழைகளும் தமிழரது, சிறி லண்கன்ஸ் எம் பிழைகளை திருத்த கொல்லும் நல்லவர்கள்.

 

மிக அருமை விவசாயி,போகிற போக்கில் புலம்பெயர் நாட்டில் பசிக்குது என்று சாப்பிட்டால் கூட அதை அநியாயம் என்று எழுதுவீனம், உளவியல் போரில் ஒரு அங்கம் அது, 4ம் கட்ட ஈழப் போரில் சிங்களவன் வென்றது இந்த உளவியல் போரில் தான், புலிகள் தான் போரை தொடக்கினார்கள்,சிங்களவன் சிறந்த ராஜதந்திரி, யாழ்பாணத்தில் கல்வி தரம் குறைந்து போச்சு(படிக்க போனவன் தலையில் குண்டைப் போட்டு,ரோடு முழுத்தா ஆமியை நிறுத்தி சுதந்திர செயற்பாட்டை குழப்பி விட்டு)இப்படி பல உண்டு

  • கருத்துக்கள உறவுகள்
அரசியல் முடிவுகளை மட்டும் இங்கிருப்பவர்கள் எடுக்க முடியாது.
(தம்பி எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணன் அறிவுரை சொல்ல கூடாது)
புடுங்கி எடுக்கிறதுக்கு மட்டும் புலம்பெயர்ந்தவன் .... (மூளை இன்றி) புண்ணாக்காய் இருக்க வேண்டும் ?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பாத்தால் புலம்பெயர் தமிழன் டெய்லி சோகப்பாட்டோடை செத்தவீடு கொண்டாடோணும் போலை கிடக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

இது வேண்டுமென்றே எழுதப்பட்ட தலைப்புப் போல எனக்குத் தெரிகிறது,

 

ஏனென்றால் தலைப்பிற்கும், கீழே உள்ள செய்திக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 

தலைப்பில் புலம்பெயர் தமிழனைக் குற்றம் சாட்டிவிட்டு, கீழே செய்தியில் மலேசியாவில் அகதித் தமிழன் படும்பாடு பற்றிச் சொல்லப்பட்டிருக்கு. அதில் ஒரு வரியில் தன்னும் புலம்பெயர் தமிழன் கூத்தடிக்கிறான் என்றோ கும்மியடிக்கிறான் என்றோ கூறப்படவில்லை. அப்படியிருக்க எதற்காக வேண்டுமென்றே புலம்பெயர் தமிழனை தலைப்பில் சீண்டிப் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டதென்று புரியவில்லை.

 

சரி, தலைப்பு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், பரவாயில்லை. ஆனால் மலேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் படும்பாடு சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே மலேசிய சிங்கள அரசுகளால் அவர்கள் துன்புறுத்தப்படுவது சொல்லப்பட்டிருக்கு. அகதிகளைக் காக்கவேண்டிய UNHCR அமைப்புக்கூட மலேசிய அரசுடன் சேர்ந்து வேலை செய்வது கூறப்பட்டிருக்கு. ஆகவே இதுதொடர்பாக நாம் ஏதாவது செய்யவேண்டிய தேவை இருக்கிறதா இல்லையா??

 

மலேசியாவில் அரசும் இந்த அமைப்பும் நடந்துகொள்ளும் விதம்பற்றியும் அகதிகளுக்கு நடந்துவரும் அநியாயம் குறித்தும் நாம் பலரது கவனத்திற்கு கொன்டுவருவது அவசியம்தானே? அந்த உதவியைத்தானே இவர்கள் கேட்கிறார்கள் ? எவரையும் களியாட்டம் போடவேண்டாம் என்றோ கும்மியடிக்க வேண்டாமென்றோ கேட்கவில்லையே?? 

 

ஆகவே, தலைப்பை பார்த்துவிட்டு முகம் சுளிக்காமல், செய்தியில் உள்ளதை உள்வாங்கி முடிந்தவற்றைச் செய்வோம். 

 

பெட்டிசன் போடுவதிலிருந்து முகப்புத்தகம் அல்லது டுவிட்டர்..எதுவாகிலும் இதுதொடர்பாக எழுதுவோம். பலரது கவனத்தை ஈர்க்க இது உதவியாக இருக்கும்.

 

நாம் முதலில் செய்ய வேண்டியது நடக்கும் அநியாயங்கள் பற்றிய செய்தியைத் திரட்டுவது. பின்னர் அதை முடிந்தவர்களுக்கு எடுத்துச் செல்வது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயா, தலைப்பை மட்டும் படித்துவிட்டுப் பாட்டுப் போட்டிருக்கின்றீர்கள் போலிருக்கு. பாட்டைப் போடுவதைத் தவிர வேறு என்னதான் செய்யமுடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.