Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனதை கவர்ந்த face book பதிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

* ' தாயை பழித்தவனை

---- தாய் தடுத்தால் விட்டுவிடு ,

' தாய் மொழியை பழித்தால்

---- தாய் தடுத்தாலும் விடாதே .

...................................- பாரதிதாசன் -

Edited by Ahasthiyan

  • Replies 171
  • Views 15.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்... பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது

என்று யோசித்து கொண்டிருந்தவரிடம்...

அவர் மனைவி..

நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம்

பார்க்ககூடாது என்றார்... அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்.

எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு. காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு,

அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.

அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க, சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.

அதனால தான் சொல்றேன்...

இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும். என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று

முத்தாய்ப்புடன் முடித்தாள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேவுக்கு அமைதி விருது -

பொலிவியா வழங்குகிறது .

// அப்ப எங்க தல மன்மோகனுக்கு எத கொடுப்பீங்க விஞ்ஞானிகளா ?? இதுவும் ஆஸ்திரிய ஸ்டாம்ப் மாதிரி டுபாக்கூறா இருக்குமோ ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழிசையில் 12 ஆயிரம் ராகங்கள் உள்ளன. கருநாடக சங்கீதமே தமிழிசையின் ஒரு வடிவம்தான் என்கிறார் தமிழிசை ஆராய்ச்சியாளர் மம்மது.

தமிழராக நாம் பெருமைபடவேண்டிய செய்தி.

Tamil Music had 300 musical instruments & 12 Thousand Ragas !! Carnatic Music is just a branch of Tamil Music which is 5000 years old. SBS Radio has done a wonderful interview with Tamil music researcher Mr N. Mammathu - http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/340472/t/Tamil-Music-had-300-musical-instruments-&-12-Thousand-Ragas-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செண்பகமே செண்பகமே பாடல். இளையராஜா அவர்கள் ஏக்கத்தை தீமாக வைத்து எத்தனையோ பாடல்களைத்தந்திருக்கிறார். அதில் இந்தப்பாடல் முதல் மூன்றில் ஒன்றாய் கண்டிப்பாக வரும். குறிப்பாக ஆஷாபோஸ்லே குரலில் வரும் பீமேல் வர்ஷன். இன்னமும் குறிப்பாக அவருடைய ஏக்கம் தோய்ந்த குரலில் கீழ்வரும் வரிகளைப் பாடும்போது..

உன் பாதம் போகும் பாதை

நானும் போக வந்தேனே

உன் மேலே ஆசைப்பட்டு

பார்த்துப் பார்த்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு

என் மனம் தானா பாடிடலாச்சு

என்னோட பாட்டு சத்தம்

தேடும் உன்னை பின்னாலே

எப்போதும் வந்து தொட்டு

பாடப்போறேன் தன்னாலே

பூ வைச்சுப் பொட்டும் வைச்சு

மேளம் கொட்டிக் கல்யாணம்

பூ மஞ்சம் போட்டுக் கூட

எங்கே அந்த சந்தோசம்

ஒரு மாமன் மகளோ அத்தை மகளோ வாய்த்திருக்கக்கூடாதா என இன்றுவரையிலும் என்னை ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் பாடலிது

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒரு மாமனையோ , அத்தையையோ தேடிப் பிடிக்க வேண்டும்...!   ஆ... மறந்திட்டன்  ... அவங்களுக்கு கன்னிகாதானத்துக்கு ஏற்ற கன்னியும் இருக்க வேண்டும்...!!!  :rolleyes:  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னிக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கேன்னா அதுக்கு எங்கஅப்பாதான் காரணம்.ஆமா.அவர் பைக்கைதான் எடுத்துட்டு வந்தேன்.‪#‎தந்தையர்‬ தின பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடலை சுமக்க நாலுபேரையும்

உள்ளத்தில் சுமக்க ஒருவரையும் சாவதற்குள் எப்படியாவது சம்பாதித்துடனும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க யூரியா மூட்ட மாதிரி இருந்துட்டு கட்டிக்க ஆரியா தான் வேணுமாம்...

சில்லி கேர்ள்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒளவையே, உலகில் அரியது என்ன ?

அரியது கேட்கின் வரிவடி வேலோய்

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது!

மானிடராயினும்....கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்...ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது!...

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்...தானமும் தவமும் தான் செய்தல் அறிது!

தானமும் தவமும் தான் செய்தலாயினும்...வானவர் நாடு வழி திறந்திடுமே!

கொடியது என்ன?

கொடியது கேட்கின் வரிவடி வேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது; இளமையில் வறுமை

அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடு நோய்

அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்

அதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே!

பெரியது என்ன?

பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமோ நான்முகன் படைப்பு

நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்

கரியமாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்

குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்

கலசமோ புவியிற் சிறுமண்

புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்

அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்

உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்

இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்

தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!

ஒளவையே, இனியது என்ன? = எங்கள் இனியது கேட்கின்!

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்

இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்

அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே.

அரியது கொடியது பெரியது இனியது - அனைத்துக்கும் முறையோடு விடை பகன்ற ஒளவையே....புதியது என்ன?

(இனி வரும் வரிகள்: கண்ணதாசன்)

என்றும் புதியது

பாடல் - என்றும் புதியது

பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது

முருகா உனைப் பாடும் - பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்

அமுதம் என்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

முருகன் என்ற - பெயரில் வந்த - அழகே என்றும் புதியது

முறுவல் காட்டும் - குமரன் கொண்ட - இளமை என்றும் புதியது

உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது

உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது

முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது

சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது

அறிவில் அரியது...அருளில் பெரியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவு அது

முடிவில் முதல் அது

மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மை அழகாக காட்டும் கண்ணாடியை விடவா தன்னம்பிக்கைக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டை சொல்லிவிட முடியும்.

.............................................................................................................

உளுந்து வடையோ

பருப்பு வடையோ

இருப்பதை வைத்து சுவைக்க கற்றுக் கொண்டால் இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் சிறப்பான நாளே

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்

இல்லையென்று சொல்லுவதில்லை

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

அதிரூபன் தோன்றினானே!

இவை மூன்றுமே மதங்கள் போன்ற எல்லைகளைத் தாண்டி நீங்கள் ரசித்த பாடல்கள்தானே! பொய் சொல்லாமல் சொல்லுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

1) அறுபடை வீடு கொண்ட திருமுருகா..

2) ஈச்ச மரத்து இன்பச் சோலையில்..

3) அன்னையே.. ஆரோக்ய அன்னையே..

இவை எனது தெரிவுகள்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலக்கோட்டுப் படங்கள்

கடாபியின் உட்பக்கம்

1. லிபியாவில் மின்சாரம் கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உருமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அணைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால் அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இலங்கை பணம் சுமார் 56 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை இலவசமாக வழங்கியது.

5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம் , கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழத வாசிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும் , விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரனம்களும் , விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.

7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதட்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.

8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் பெருமதியின் அறைவாசித்தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.

9. அந்தநாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.

10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் எடுத்ததில்லை.

11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில் , அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.

12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டுமக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.

13. ஒவ்வொரு குழந்தை பிரச்சவிதின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5000 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய திநாரை வழங்கும் அதாவது இலங்கை பணம் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா.

14. 40ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.

15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.

16. உலகிலேயே மிகப்பெரிய செயற்க்கை ஆரை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டைனா button

சன்டேனா mutton...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நான் என் மனதில் நெடுநாளாக செல்லரித்துக் கொண்டு இருந்த இருக்கின்ற ஒரு விஷயத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்,,,..என்னடா பீடிகை ரொம்ப பெருசா போடுறாளே-னு பாக்குறீங்களா….உண்மை-யா விஷயம் பெரிசு தான்..ஆனால் பார்க்க சிறிசு….ஆமாங்க நாமலாம் எந்த மாறி உலகத்து-ல வாழுறோம்-னு சுத்தமா புரியல…மனிதர்களை பிற உயிர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காண்பிப்பதே சக உயிரிடம் நாம காட்டுற மனிதநேயம் தான்….ஆனா இப்ப இருக்க மனுசங்க-லாம் அத தொலைச்சுட்டு சுயநலமாக இருக்காங்க-னு சொல்ல வேதனையா தான் இருக்கு….ஆனா அதான் உண்மை….அதுக்கு உதாரணம் :

நாம எல்லாரும் ஜவுளிக்கடைக்கு போறாம் அடிக்கடி அல்லது பண்டிகை சமயங்களில்…….அப்ப கடையை-யே ஒரு வழி ஆக்கிடுவோம் நமக்கு பிடிச்ச மாறி துணி கிடைக்குற-வர….அப்ப அங்க துணி எடுத்து போடுறவரே டென்ஷன் ஆகி கத்திடுவாரு….நாமலும் பதிலுக்கு திட்டுவோம் ஏன் சில பேர் மேனஜர்-டயே புகார் பண்ணி வேலைக்கே ஆப்பு வச்சுடுவாங்க….ஆனா ஏன் இது மாறி நடக்குது-னு யாராவது என்னைக்காவது யோசிச்சு இருக்கீங்களா….அவர முன்ன பின்ன கூட தெரியாது…அவர் ஏன் உங்க மேல கோவப்படனும்??????காரணம் இருக்குங்க……ஒரு மனுஷன் எவ்வளவு தான் பிரஷர் தாங்குவான்????? சாதாரண டியுப்-ல இல்ல பலூன்-ல பிரஷர் குடுத்துட்டே இருந்தா எவ்வளவு நேரம் தான் தாங்கும்????????????????????….ஒரு கட்டத்து-ல அதும் வெடிச்சுடும்…………..அது மாறி தாங்க மனுசங்களும்….அப்படி என்ன பிஷர் அவுங்களுக்கு-னு கேக்குறீங்களா…..காலை-ல 8 மணிக்கு வேலைக்கு வந்தா நைட் 10 மணி வர உட்காராம வேலைப்பாக்கனும்……நம்மலால ஒரு 2 மணி நேரம் கூட தொடரந்து நிக்க முடியாதுங்க….கால்-லாம் ஆட ஆரம்பிச்சுடும்…ஆனா அவுங்க 14 மணி நேரம் உட்காராம வேலை செய்யும் போது பிரஷர் வர தான செய்யும்…அவுங்களும் மனுஷங்க தானே….அந்த பிரஷர் தான் நம்மக்கிட்ட கோவமா வெளிப்படுது….நீங்க கேக்குறது புரியுதுங்க…அதுக்கு நாம என்ன செய்ய முடியும்-னு….வேலை-னா அப்படி தான் இருக்கும்-னு வாய் பேச்சுக்கு சொல்ல நல்லா தான் இருக்கும்,,,ஆனா அவுங்க இடத்துல இருந்து யோசிச்சுப் பாருங்க….உண்மை உங்களுக்கே புரியும்……………இதலாம் மாத்த முடியாதா……முடியுங்க நாம நினைச்சா……….ஒரு தொழிற்ச்சாலை-ல கூட நின்னுட்டு வேலை செய்யுற தொழிளாலிக்கு உட்கார அனுமதி உண்டு…ஆனா இந்த ஜவுளிக்கடை-ல மட்டும் நின்னுட்டே இருக்கனுமாம்….சொந்த ஊர் விட்டு குடும்ப கஷ்டத்துக்காக வெளியூர் வந்து வேலை பாக்குற இவுங்கள பகடக்காயா பயன் படுத்திக்குறாங்க இந்த முதலாளி வர்க்கம்….ஒரு மனுசன் 8 மணி நேரம் தான் வேலைப் பாக்கனும் –னு சட்டமே இருக்கு…….ஆனா யாரும் அத கடைபிடிக்குறது இல்ல….சரி அப்படி 14 மணி நேரம் உட்காராம விழுந்து விழுந்து வேலைப் பாக்குற இவங்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்-னு நினைக்குறீங்க….. வெறும் 5000 -7000 குள்ள தாங்க….வாங்குற இந்த சம்பளத்துக்கு தினமும் 14 மணி நேரம் கால் கடுக்க நிக்கனும்….இது-ல வேற நம்ம மக்கள் இந்த துணி எடுங்க….அந்த துணி எடுங்க….இந்த டிசைன் ….அந்த டிசைன் –னு அவுங்க பங்குக்கு பிச்சி எடுத்துட்டு கடைசி-ல வேறக்கடைக்கு போய்டுவாங்க ஒன்னும் வாங்காம..….கடைசி-ல நீ தான் ஒழுங்கா அவுங்கள்-ட பேசல….கஷ்டமர்-அ கோட்ட விட்ட எதுக்கும் லாயுக்கு இல்ல….என் உசிரவாங்க-னே வருவீங்களா –னு அவுங்க முதலாளி-கிட்டயும் திட்டுவாங்கிட்டு சகிச்சுக்குறாங்க……கொஞ்சமாவது மனித நேயத்தோட நடந்துக்கோங்க முதலாளி வர்க்கமே…..அவுங்களும் மனுசங்க தான் …ஒரு மணி நேரம் நீங்க நின்னு வேலைப் பாத்த தெரியும் அவுங்க வலியும் வேதனையும்…ஒரு உட்கார இருக்கை அமைச்சுத் தரது-ல உங்களுக்கு என்ன பிரச்சனை???????இது பாக்க சின்ன பிரச்சனை-யா தெரியலாம்..ஆனா உள்நோக்கி பாத்த தெரியும்….இப்படி நின்னுட்டே வேலை செய்யுறதால அவுங்க தீராத கால்வலி பிரச்சனை-ல இருக்காங்க….நானே கண்கூடாக சிலரை பார்த்து தான் இந்த பதிவை இங்கு பதிவு செய்கின்றேன்……வாங்குற சம்பளத்துல குடும்பத்த கவனிக்கனும்,பிள்ளைங்க படிப்ப பாக்கனும் இதுல வேற அப்ப அப்ப விலைவாசி ஏறி போய்டும்…இதுல டாக்டர் செலவுக்கு அவுங்க எங்க போவாங்க….?????????? நம்ம மனித நேயம் எங்க போச்சு…????????அந்த காலத்து-ல வழிப்போக்கனுக்காக வாசல்-ல திண்ணக்கட்டி வச்சாங்க…..அப்படி மனித நேயத்தோட வாழ்ந்த தமிழ்நாடு-ல யா வாழுறோம்-னு எனக்கு வியப்பா இருக்கு….அதே சமயம் தலை குனிவா இருக்கு இத தட்டிக் கேட்க முடியலயே-னு…..ஏதோ என்னால முடிஞ்சது என் மனசுல இருக்குறத வார்த்தைகளில் உங்கள்-ட வெளிப்படுத்துறேன்…… இதெல்லாம் கொஞ்சம் மனசு-ல வச்சுக்கிட்டு அவுங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க முகநூல் நண்பர்களே…..நீங்களும் ஏதாவது செய்யனும் –னு நினைச்சா இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்….இந்த பதிவைப் பார்த்து சில பேர் அவர்களுக்கு உதவ கூட முடியும்….அப்படி நடந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்….முகநூலை எது எதற்க்கோ பயன் படுத்துகின்றோம்…..ஒரு நல்ல விஷயம் நடக்க இதை ஷேர் செய்யவும்…..

உங்கள் சிந்தனை தமிழச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமண மேடையில் மணமகனுக்கு

கொடுக்கப்படும் கடைசி Warning

"பொண்ண கூப்பிடுங்க நல்ல நேரம்

முடியப் போகுறது"......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“புலிகள் வென்றால் அது தமிழ் மக்களுக்கு வெற்றி அல்ல. ஆனால் புலிகள் தோற்றால் அது தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும்”

புளொட் தலைவர்

உமா மகேஸ்வரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்தை அவர் குடிக்கிறார் என்று பேஸபுக்கில் பலபேர் கண்டமேனிக்கு ஓட்டுகிறார்கள். ஓட்டுபவர்களில் எத்தனைபேர் வாழ்நாளில் குடிவாசனையே அறியாத அப்பிராணிகள் எனத்தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் விஜயகாந்தைப்போல ஒருநாள் அரசியலுக்கு வர நேர்ந்தால் ஒரே நாளில் குடிக்கு முழுக்கு போட்டுவிட்டு புத்தராக மாறிவிடுவார்களா எனவும் தெரியவில்லை.

இதே நபர்கள்தான் அவர் நடித்து ஹிட்டான பல படங்களை நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்து ரசித்தவர்கள். அப்போதெல்லாம் அவர் தங்கமான மனுஷராகத் தெரிந்திருப்பார் போலும். இன்றுவரை சன்டிவி போன்ற டிவிக்கள் வரிந்துகட்டிக்கொண்டு ப்ரைம் டைம்களில், சனி ஞாயிறுகளில் ஒளிபரப்பும் படங்கள் அனைத்தும் விஜயகாந்தின் படங்கள்தான் என்று அவர்களுக்குத்தெரியுமா? அந்த அளவுக்கு அவர் படங்களில் என்டர்டெயின்மென்டுக்கு கியாரண்டி இருக்கும்.

அரசியலில் இருக்கும் மற்றவர்கள் எல்லாம் ரொம்ப ஒழுங்கானவர்களா? ரேப் செய்பவர் முதல் பகல்கொள்ளையடிப்பவர் வரை ஏராளமானவர்கள் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்கு இவர் ஒன்றும் மோசம் கிடையாது. உடனே நான் தேமுதிக கட்சியைச்சேர்ந்தவன் என்று யாரும் படையெடுத்துக்கொண்டு வராதீர்கள். தவிர, நான் குடிப்பதை நியாயப்படுத்துபவனும் அல்ல.

டாஸ்மாக்குகளை மூடிவிட்டு என்னிடம் குடிப்பதைப்பற்றிக் கேளுங்கள் என்று அவர் கூறியதில் தவறேதும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன் கணவன் தன்னோடே இருக்கவேண்டும் என ஒரு மனைவி நினைக்கும் காலம் - அவளின் கர்பகாலமாகதான் இருக்கும்

‪#‎நிஜ‬ பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தனிநபருக்கும், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவருக்கும் நடத்தை விதிகளில் வித்தியாசம் தேவைப்படுகிறது. விஜயகாந்த் நடித்துக்கொண்டிருந்தபோது அவரது குடியைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. ரொரான்டோ மேயர் இன்னொரு உதாரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஆசை எல்லாம் பிரேசிலும் அர்ஜண்டைனாவும் ஃபைனலில் மோத வேண்டும் என்பதே! ஆனால் ஜெர்மனியும் ஹாலாந்தும் ஃபைனலுக்குள் நுழைந்து விடுமோ என பயமாக இருக்கிறது.

பிரேசிலில் நெய்மர், அர்ஜென்டினா மெஸ்ஸி, ஜெர்மனி முல்லர், நெதர்லாந்து வான் பெர்ஸி என்பதையெல்லாம் தாண்டி ஆர்டியன்ஸ் ஆம்பியன்ஸ் நன்றாக இருக்க வேண்டும். பிரேசிலிலும் அர்ஜென்டினாவிலும் பெண்கள் மேக்கப்பே இல்லாமல் செக்ஸியாக இருப்பார்கள். அவர்களுடைய ஸ்கின் டோன் நம் தென்இந்தியர்களின் ஸ்கின் டோனுக்கு இணையான அழகு இருக்கும். சில்க் ஸ்மிதா இன்றளவும் நம் கனவில் வந்து செல்கிறார் என்றால் அதற்கு அந்த ஸ்கின் டோன் தான் முக்கியமான காரணம். ஷோபா, சிம்ரன், ரீமா சென், நந்திதா தாஸ், தன்ஷிகா, ப்ரியா ஆனந்த் என காலம் கடந்து ரசிக்கும் என்னால் பிரேசில் அர்ஜென்டினாவைத் தவிர வேறு ஒரு நாட்டை ரசித்துப் பார்க்க முடியவில்லை. பிரேசில் பெண்களும் அர்ஜென்டினா பெண்களும் அல்லாத ஆடுகளம் மேக்கப் போட்ட அமலா பால் போல் செயற்கையாக இருக்கும்.

இப்படி யோசிக்கும் போது ஜெர்மனிக்கு நெதர்லாந்து பெண்கள் பார்க்கும் படி இருப்பார்கள். இந்த ஜெர்மனி பெண்கள் ஏனோ நோய்வாய்ப்பட்ட ஓமர் பாய்க்கு பிறந்தவர்கள் போலவே இருப்பார்கள். அனைவரும் சீசியம் சுரண்டும் ஜிஹாத் போல் காட்சியளிப்பார்கள். நெதர்லாந்து பெண்கள் நம் ஹன்சிகா, காஜல் அகர்வால் போல் வெள்ளையாக இருப்பார்கள். சிலருக்கு அது பிடிக்கலாம் ஆனால் என்னை போன்ற சில்க் ஸ்மிதா ரசிகர்கள் பிரேசிலுக்கும் அர்ஜென்டினாக்கும் உங்கள் வாக்குகளை அள்ளித் தந்து ஜெர்மனியையும் நெதர்லாந்தையும் வீட்டுக்கு அனுப்புங்கள்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=633436693378424

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.