Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதே எமது குறிக்கோள் : சி.வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தலைவர்கள் தமிழ் இளையோர் இராணுவத்தில் சேர்வதை என்றும் ஊக்குவிக்கவில்லை. மாறாக அவ்வாறு சேர்வது இன துரோகமாக காட்டப்பட்டது. அதே நேரம் கிளர்ச்சி அமைப்புகளில் தமிழ் இளையோர் சேர்வதை தமிழர் தலைமைகள் ஊக்குவித்து வந்தனர். இவற்றை மீறி இராணுவத்தில் இணைந்து உயர் பதவிகளில் தமிழர்கள் இருந்திருக்கின்றனர். .

ஒரு இராணுவத்தில் சேர்வதற்கு மக்கள் தலைவர்களின் ஆதரவு ஏன்?அண்மையில் இராணுவத்தில் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் பேட்டி கொடுத்திருந்தார்கள் பட்டதாரிகளின் சம்பளத்தைவிட தங்களுக்கு அதிகம் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று ஆகவே அன்று இந்த சந்தர்ப்பத்தை கொடுத்திருந்தால் நிச்சயம் தமிழ் இளைஞர்கள் சேர்ந்திருப்பார்கள்......இலங்கையின் முதல் இராணுவத்தளபதி தமிழர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இராணுவத்தில் சேர்வதற்கு மக்கள் தலைவர்களின் ஆதரவு ஏன்?

அரசு மற்றும் நாடு சம்பந்தப் பட்ட அனைத்து விடயங்களிலும் மக்களை வழிநடத்துவதே மக்கள் தலைவர்களின் பணி. அதற்காகவே மக்கள் அவர்களுக்கு வாக்களித்து அவர்களை தலைவர்கள் ஆக்குகிறார்கள். மக்கள் தலைவர்கள் சேரவேண்டாம் என்று மக்களை வழிநடத்தும் நிலையில் பெரும் தொகையில் இளையோர் எப்படி சேர்ந்து கொள்வார்கள்?

அண்மையில் இராணுவத்தில் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் பேட்டி கொடுத்திருந்தார்கள் பட்டதாரிகளின் சம்பளத்தைவிட தங்களுக்கு அதிகம் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று ஆகவே அன்று இந்த சந்தர்ப்பத்தை கொடுத்திருந்தால் நிச்சயம் தமிழ் இளைஞர்கள் சேர்ந்திருப்பார்கள்..

உண்மையில் அதிக வட்டியில் கடன் வாங்கி இந்த அளவு சம்பளம் கொடுத்து இராணுவத்தை வைத்திருக்க எந்த முன்னைய அரசும் விரும்பவில்லை. இன்றைய அரசு, சீன-அமெரிக்க வல்லரசு போட்டி காரணமாகவும், இந்திய அரசை பகைக்க வேண்டிய நிலை வரலாம் என்ற காரணத்தாலும், புலம் பெயர்ந்த தமிழரின் பொருளாதார பலம் தனி நாடு நோக்கிய இராணுவ நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்ற பயம் காரணமாகவும் அபரீதமாக இராணுவத்துக்கு செலவு செய்கிறது. இது நீண்டகாலம் நிலைக்காது.

....இலங்கையின் முதல் இராணுவத்தளபதி தமிழர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்...

புத்தன் நன்றி. உண்மையில் இலங்கையின் முதல் தளபதி தமிழர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் பல கத்தோலிக்க இராணுவ உயர் அதிகாரிகளும் தமிழ் உயர் அதிகாரிகளும் இணைந்து 60களில், சிங்கள பௌத்த திசை நோக்கி நாடு செல்வதற்கு எதிராக மேற்கொண்ட இராணுவ புரட்சி பற்றி நான் அறிந்திருக்கிறேன்.அதில் ஈடுபட்டவர்களின் நெருங்கிய உறவினர்களை சந்தித்து அவர்களின் படங்களையும் பார்க்க கிடைத்தது.

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் தமிழர்களை இராணுவத்தில் சேர்க்காமல் விட்டமைக்கு.70 ஆம் ஆண்டுகளில் பல இளைஞர்கள் விண்ணப்பங்கள் போட்டவர்கள் ,இராணுவம் ,மற்றும் பொலிஸ் சேவைக்கு ஆனால் அரசாங்கம் அவர்களை தெரிவு செய்யவில்லை ஒரே காரணம் தமிழன் என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையான வசிக்கும் இடம் என்றது இல்லாமல் போய்விடும். இது மகிந்த இருந்தாலென்ன, ரணில் வந்தாலென்ன, இந்த நிகழ்ச்சி நிரல் மாறப்போவதில்லை. அது வரைக்கும் இராணுவ வெளியேற்றம் நடக்க சாத்தியமில்லை.

இப்படி மனம் சோர்ந்து போகாமல் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கு ஏற்ப முயற்சி செய்யுங்கள். உயர்நிதிபதியாக இருந்த புகழும் வசதியுமாக கொழும்பில் வழக்கம் போல வாழ்வதை விட்டு தனது முதிர்வயதில் எமது மக்களின் துயர் கண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணம் செய்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி தலைமை வழங்கும் முதல் அமைச்சரை பார்த்தாவது மனம் சோர்ந்து போகாமல் முயற்சி செய்யுங்கள். ஒரு புதிய தீர்வு திட்டத்துக்கான உங்கள் ஆலோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அனுப்பி விட்டீர்களா? நான் அனுப்பிவிட்டேன். இதோ முகவரி: tnaproposal@gmail.com

உங்கள் பங்களிப்பையும் செய்யுங்கள்.

இதே போன்று, சாதி, மதம், பிரதேசவாதம், வர்க்க முரண்பாடுகள் அனைத்தையும் கடந்து தமிழ் இன அடையாளத்தின் கீழ் தமிழர்கள் ஓரணியில் திரள்வதற்கும் அவ்வாறு திரண்டு சிங்கள நிகழ்ச்சி நிரலை சாத்தியமற்றதாக்குவதற்கும் வாய்ப்பு இல்லை.

பெரும் சாதனைகளை செய்யும் தலைமைக்கு பின் மக்கள் அணி திரள்வார்கள். இது சாத்தியம் என்பதை போர்க்காலத்தில் கண்டோம். இன்று முதல் அமைச்சர் தலைமையில் மீண்டும் இராஜதந்திர வழியில் இது சாத்தியம்.பல சிங்கள ஆய்வாளர்கள் முதல் அமைச்சரை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒப்பிடுகிறார்கள். அதற்க்கு காரணம் மக்கள் இவர் தலைமையில் அணி திரள்வார்கள் என்ற கருத்தாகும்.

Edited by Jude

இப்படி மனம் சோர்ந்து போகாமல் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கு ஏற்ப முயற்சி செய்யுங்கள். உயர்நிதிபதியாக இருந்த புகழும் வசதியுமாக கொழும்பில் வழக்கம் போல வாழ்வதை விட்டு தனது முதிர்வயதில் எமது மக்களின் துயர் கண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணம் செய்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி தலைமை வழங்கும் முதல் அமைச்சரை பார்த்தாவது மனம் சோர்ந்து போகாமல் முயற்சி செய்யுங்கள். ஒரு புதிய தீர்வு திட்டத்துக்கான உங்கள் ஆலோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அனுப்பி விட்டீர்களா? நான் அனுப்பிவிட்டேன். இதோ முகவரி: tnaproposal@gmail.com

உங்கள் பங்களிப்பையும் செய்யுங்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த செயலில் எனக்கு நம்பிக்கை இல்லாமையுடன் பல கேள்விகளும் இருக்கின்றன.  இந்த 'புதிய தீர்வு திட்டத்திற்கான யோசனை' என்பது மேலும் காலத்தினை தாழ்த்தவும், சிங்களத்துக்கு மேலும் மேலும் கால அவகாசத்தினை வழங்கவும் தான் உதவப் போகின்றன.  இனித்தான் தீர்வு திட்டத்துக்கான யோசனைகளைப் பெற்று, பின் அதனை தென் அமெரிக்க மத்தியஸ்துடன் கதைத்து, பிறகுஅதனை விவாதித்து............ இது சிங்களத்துக்கு வழங்கும் கால அவகாசம். சிங்களம் ஐநா வின் மனித உரிமை சபையின் விசாரணையில் இருந்து தப்பித்து மீண்டு வரவே இந்த கால அவகாசம் உதவும்.

இப்படியாக இவர்கள் ஒரு தீர்வை தீட்டி விட்டாலும் மகிந்தவோ அல்லது ரணிலோ இதனை மீண்டும் தெரிவுக் குழுவில் சமர்பித்து, சகல கட்சிகளினதுப் அபிப்பிராயங்களை அறிந்து அவர்கள் தரும் திருத்தங்களையும் மேற்கொண்டு இறுதித் தீர்வைக் காண்போம் என்பர்.... மீண்டும் ஆரம்ப புள்ளியில் வந்து நிற்கும்.  முப்பது வருடங்களுக்கும் மேலாக சிங்களத்தின் நகர்வுகளை புரிந்து கொண்டவர்களுக்கு இதனைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்காது.

பெரும் சாதனைகளை செய்யும் தலைமைக்கு பின் மக்கள் அணி திரள்வார்கள். இது சாத்தியம் என்பதை போர்க்காலத்தில் கண்டோம். இன்று முதல் அமைச்சர் தலைமையில் மீண்டும் இராஜதந்திர வழியில் இது சாத்தியம்.பல சிங்கள ஆய்வாளர்கள் முதல் அமைச்சரை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒப்பிடுகிறார்கள். அதற்க்கு காரணம் மக்கள் இவர் தலைமையில் அணி திரள்வார்கள் என்ற கருத்தாகும்.

போர்க்காலத்தில் தலைமைக்கு பின் அணி திரண்டார்கள் என்று சொல்வதே பெரும் தவறு. 30 இலட்சம் மக்களின் கனவை 3 இலட்சம் மக்களின் முதுகில் ஏற்றிவிட்டு நாங்கள் எல்லோரும் வெளியேறி வர மிச்சமாக இருந்த சனம் தான் இறுதி வரைக்கும்  வேறு வழியின்றி இழுபட்டது. அவர்களிலும் போராட்டத்தின் மீது தீவிர நம்பிக்கையும், பற்றும் கொண்டவர்கள் தவிர மிச்சப் பேர் தாம் தப்பிப்பதற்கான வழிகளை தேடிக் கொண்டே இருந்தார்கள்.

நாங்கள் மக்களாக ஒருபோதும் ஒரு தலைமையின் கீழ் அணி திரளவில்லை. அப்படி திரண்டு இருந்தால் வெளிநாடுகளுக்கு வந்திருக்க மாட்டம், கொழும்பில் அடைக்கலம் தேடியிருக்க மாட்டம்., புலமைப் பரிசில் வெளிநாடுகளுக்கு தப்பி வந்து படிப்பைத் தொடர்ந்து இருக்க மாட்டம்.

இது தலைவர் பிரபாகரனாலேயே சாத்தியமாக்க முடியாமல் போன விடயம் விக்கியால் சாத்தியமாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவர் ஒரு நல்ல ஆளுமை மிக்கவராக, ராசதந்திரம் மிக்கவராக. சமயோசித புத்தியுடையவராக இருக்கலாம். ஆனால்  அவரின் பின் மக்கள் ஒன்றாக அணி திரள்வார்கள் என்று நம்பிக்கை கொள்வதற்கு ஏதுவான எந்த காரணிகளும் என்னால் காணக் கூடியதாக இல்லை. 

இலங்கையின் வரலாறு  சிங்களவர் -தமிழர் பிரச்சனை என்பதின் ஊடாககத்தான் எழுதப்பட்டிருக்கு .அந்நிய படைஎடுப்புகளின் பின் இரு இனங்களுமே அவர்களால் அடக்குமுறைக்கு உட்பட்டதால் பிரச்சனை நீறு பூத்த நெருப்பாக இருந்தது .

சுதந்திரம் கிடைக்க போகும் கால கட்டத்தில் சிங்கள தலைமைகள் முழு அதிகாரத்தையும் தமது கையில் எடுக்க எவ்வளவு பிரயத்தனபட்டார்கள் என்று வரலாறு சொல்லியே நிற்குது .

அதன் பின்னர் நடந்தது  அனைவருக்குமே தெரியும் .தமிழர் தலைமைகள் சிங்கள தலைமைகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதும் பல தமிழ் தலைமைகள் சோரம் போனதும் தான் வரலாறு.

பின்னர் எம் கண் முன்னே தொடங்கிய ஆயுதபோராட்டம்  எமது கண் முன்னாலேயே அழிந்து போனதையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம் .ஆயுதபோராட்டமும் பிழையான வழிமுறைகளும் பல சோரம் போனதும் தான் முக்கிய காரணம் .

ஆயுத போராட்டத்தில் தோற்ற பின் சிங்களம் என்றுமில்லாத துணிவுடன் நேரடியாக தமிழரை அடக்க களத்தில் இறங்கியிருக்கு .அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம் .தமிழர்களின் இன்றையை இயலாமை நிலை ,இரண்டாவது சர்வதேசம் ஒரு தீர்வை திணிக்க முயன்றால் அதற்கு முதல் முடிந்தளவு தமிழ் பிரதேசங்களில் சிங்களமயமாக்குதல்

மக்கள் தலைமைகளுக்கு பின்னால் ஒன்று சேரவில்லை என்பது தவறு .செல்வாவில் தொடங்கி அமிர் பிரபா வரை தொடர்ந்து இன்று சம்பந்தன் பதவியில் இருப்பதற்கும் அதுதான் காரணம் .

சிறுபான்மை தமிழர்கள் எதுவித அதிகாரபலமும் அற்று சிங்களவனை வெல்லுவது மிக கஷ்டம் .தீர்விற்கு ஒரே வழி சர்வதேச அழுத்தமும் அதற்கான அரசியலும் ஆகும் .காலம் காலமாக இந்த விடயத்தில் நாங்கள் மிக பலவீனமானவர்களாக இருக்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 'புதிய தீர்வு திட்டத்திற்கான யோசனை' என்பது மேலும் காலத்தினை தாழ்த்தவும், சிங்களத்துக்கு மேலும் மேலும் கால அவகாசத்தினை வழங்கவும் தான் உதவப் போகின்றன.  இனித்தான் தீர்வு திட்டத்துக்கான யோசனைகளைப் பெற்று, பின் அதனை தென் அமெரிக்க மத்தியஸ்துடன் கதைத்து, பிறகுஅதனை விவாதித்து............ இது சிங்களத்துக்கு வழங்கும் கால அவகாசம்.

அப்படியானால் இதனிலும் வேகமாக இடம்பெறக்கூடிய உங்கள் மாற்று திட்டம் என்ன? அதை நீங்கள் கூட்டமைப்பினருக்கு tnaproposal@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாமே?

சிங்களம் ஐநா வின் மனித உரிமை சபையின் விசாரணையில் இருந்து தப்பித்து மீண்டு வரவே இந்த கால அவகாசம் உதவும்.

அரசியல் தீர்வும், போர்க்குற்ற விசாரணைகளும் வெவ்வேறான விடயங்கள். ஐ. நா. சபை முன்னெடுக்கும் விசாரணை சட்டத்துக்கு முரணான பல்லாயிரக்கணக்கான படுகொலைகள் பற்றியது. அரசியல் தீர்வு அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான ஆட்சி கட்ட்டமைப்பு பற்றியது.இவை வேறு வேறு பிரிவினரால் முன்னெடுக்க படுகின்றன. அமெரிக்கா சீனாவுடனான அரசியல் சாணக்கிய நோக்கில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு முன்னணி வகிக்கிறது. இந்த போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்காத தென் ஆபிரிக்கா அரசியல் தீர்வுக்கு உதவ முன்வந்திருக்கிறது. அரசியல் தீர்வு வெற்றி பெற்று மக்கள் நிம்மதியாக வாழ்ந்தாலும் போர்க்குற்ற விசாரணைகளை அமெரிக்கா தனக்கு தேவையானால் தொடரும். இன்றும் நாசி ஜெர்மன் இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான கைதுகளும் விசாரணைகளும் தொடர்கின்றன.

இப்படியாக இவர்கள் ஒரு தீர்வை தீட்டி விட்டாலும் மகிந்தவோ அல்லது ரணிலோ இதனை மீண்டும் தெரிவுக் குழுவில் சமர்பித்து, சகல கட்சிகளினதுப் அபிப்பிராயங்களை அறிந்து அவர்கள் தரும் திருத்தங்களையும் மேற்கொண்டு இறுதித் தீர்வைக் காண்போம் என்பர்.... மீண்டும் ஆரம்ப புள்ளியில் வந்து நிற்கும்.  முப்பது வருடங்களுக்கும் மேலாக சிங்களத்தின் நகர்வுகளை புரிந்து கொண்டவர்களுக்கு இதனைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்காது.

இது கடினமான ஒரு முயற்சி என்பதை ஐம்பது ஆண்டுகால வரலாறு காட்டுவதை நாம் அறிவோம். அதற்காக இதனை நீங்களும் நானும் கைவிட்டாலும் அங்கெ இருப்பவர்களுக்கு தீர்வு தேவை. முடிந்தால் உதவுங்கள். மற்றவர்கள் முயற்சிக்கிறார்கள்.

Edited by Jude

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த செயலில் எனக்கு நம்பிக்கை இல்லாமையுடன் பல கேள்விகளும் இருக்கின்றன. இந்த 'புதிய தீர்வு திட்டத்திற்கான யோசனை' என்பது மேலும் காலத்தினை தாழ்த்தவும், சிங்களத்துக்கு மேலும் மேலும் கால அவகாசத்தினை வழங்கவும் தான் உதவப் போகின்றன. இனித்தான் தீர்வு திட்டத்துக்கான யோசனைகளைப் பெற்று, பின் அதனை தென் அமெரிக்க மத்தியஸ்துடன் கதைத்து, பிறகுஅதனை விவாதித்து............ இது சிங்களத்துக்கு வழங்கும் கால அவகாசம். சிங்களம் ஐநா வின் மனித உரிமை சபையின் விசாரணையில் இருந்து தப்பித்து மீண்டு வரவே இந்த கால அவகாசம் உதவும்.

இப்படியாக இவர்கள் ஒரு தீர்வை தீட்டி விட்டாலும் மகிந்தவோ அல்லது ரணிலோ இதனை மீண்டும் தெரிவுக் குழுவில் சமர்பித்து, சகல கட்சிகளினதுப் அபிப்பிராயங்களை அறிந்து அவர்கள் தரும் திருத்தங்களையும் மேற்கொண்டு இறுதித் தீர்வைக் காண்போம் என்பர்.... மீண்டும் ஆரம்ப புள்ளியில் வந்து நிற்கும். முப்பது வருடங்களுக்கும் மேலாக சிங்களத்தின் நகர்வுகளை புரிந்து கொண்டவர்களுக்கு இதனைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்காது.

"Spokesperson for the Sri Lankan government, Kehiliya Rambukwella, rejected the demand, stating that no foreign power could dictate terms to the Sri Lanka people.

"We ended a three decade long civil war and brought peace to the country, such a referendum will only ignite divisions that no Sri Lankan wants," he said.

In a rare show of unity, the main opposition party, the United National Party (UNP), has supported the government’s rejection of the referendum call.

Eran Wickremeratne, UNP Member of Parliament, told media that while they support the devolution of power, they "totally reject Jayalalithaa's call for a formation of a separate state in Sri Lanka."

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141083#entry1015414

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த செயலில் எனக்கு நம்பிக்கை இல்லாமையுடன் பல கேள்விகளும் இருக்கின்றன.  இந்த 'புதிய தீர்வு திட்டத்திற்கான யோசனை' என்பது மேலும் காலத்தினை தாழ்த்தவும், சிங்களத்துக்கு மேலும் மேலும் கால அவகாசத்தினை வழங்கவும் தான் உதவப் போகின்றன.  இனித்தான் தீர்வு திட்டத்துக்கான யோசனைகளைப் பெற்று, பின் அதனை தென் அமெரிக்க மத்தியஸ்துடன் கதைத்து, பிறகுஅதனை விவாதித்து............ இது சிங்களத்துக்கு வழங்கும் கால அவகாசம். சிங்களம் ஐநா வின் மனித உரிமை சபையின் விசாரணையில் இருந்து தப்பித்து மீண்டு வரவே இந்த கால அவகாசம் உதவும்.

இப்படியாக இவர்கள் ஒரு தீர்வை தீட்டி விட்டாலும் மகிந்தவோ அல்லது ரணிலோ இதனை மீண்டும் தெரிவுக் குழுவில் சமர்பித்து, சகல கட்சிகளினதுப் அபிப்பிராயங்களை அறிந்து அவர்கள் தரும் திருத்தங்களையும் மேற்கொண்டு இறுதித் தீர்வைக் காண்போம் என்பர்.... மீண்டும் ஆரம்ப புள்ளியில் வந்து நிற்கும்.  முப்பது வருடங்களுக்கும் மேலாக சிங்களத்தின் நகர்வுகளை புரிந்து கொண்டவர்களுக்கு இதனைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்காது.

போர்க்காலத்தில் தலைமைக்கு பின் அணி திரண்டார்கள் என்று சொல்வதே பெரும் தவறு. 30 இலட்சம் மக்களின் கனவை 3 இலட்சம் மக்களின் முதுகில் ஏற்றிவிட்டு நாங்கள் எல்லோரும் வெளியேறி வர மிச்சமாக இருந்த சனம் தான் இறுதி வரைக்கும்  வேறு வழியின்றி இழுபட்டது. அவர்களிலும் போராட்டத்தின் மீது தீவிர நம்பிக்கையும், பற்றும் கொண்டவர்கள் தவிர மிச்சப் பேர் தாம் தப்பிப்பதற்கான வழிகளை தேடிக் கொண்டே இருந்தார்கள்.

நாங்கள் மக்களாக ஒருபோதும் ஒரு தலைமையின் கீழ் அணி திரளவில்லை. அப்படி திரண்டு இருந்தால் வெளிநாடுகளுக்கு வந்திருக்க மாட்டம், கொழும்பில் அடைக்கலம் தேடியிருக்க மாட்டம்., புலமைப் பரிசில் வெளிநாடுகளுக்கு தப்பி வந்து படிப்பைத் தொடர்ந்து இருக்க மாட்டம்.

இது தலைவர் பிரபாகரனாலேயே சாத்தியமாக்க முடியாமல் போன விடயம் விக்கியால் சாத்தியமாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவர் ஒரு நல்ல ஆளுமை மிக்கவராக, ராசதந்திரம் மிக்கவராக. சமயோசித புத்தியுடையவராக இருக்கலாம். ஆனால்  அவரின் பின் மக்கள் ஒன்றாக அணி திரள்வார்கள் என்று நம்பிக்கை கொள்வதற்கு ஏதுவான எந்த காரணிகளும் என்னால் காணக் கூடியதாக இல்லை. 

பிரபாகரனால் மட்டும்தான் முடியும் என்று நம்பினதாலைதான் முள்ளிவாய்க்கால் வரை வந்தது.  யார் குத்தினாலும் அரிசி மாவாகும்.  சரியாக் குத்தத் தெரிந்தால் போதும்.  ஆயுதப் போராட்டத்திற்குப் பிரபாகரன் என்றால் அரசியலுக்கு விக்னேஸ்வரனால் முடியும்.

பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கேக்குள்ளையும் அவராலை முடியாது எண்டுதான் நிறையப் பேர் சொன்னவை.   ஆனால், உலக இராணுவத் தரத்திற்குப் புலிகளைக் கொண்டு வரவில்லையா?  அனுபவமில்லாமல் பிரபாகரனால் முடியும் எண்டால், படிச்சு, நிறைய அனுபவமுள்ள விக்னேஸ்வரனாலும் முடியும். 

இப்பிடி ஒருத்தரை மட்டும் தூக்கிப் பிடிப்பதை நிறுத்திப்போட்டு உங்களாலை முடிஞ்ச உதவி செய்யிற வழியைப் பாருங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வரலாறு  சிங்களவர் -தமிழர் பிரச்சனை என்பதின் ஊடாககத்தான் எழுதப்பட்டிருக்கு .அந்நிய படைஎடுப்புகளின் பின் இரு இனங்களுமே அவர்களால் அடக்குமுறைக்கு உட்பட்டதால் பிரச்சனை நீறு பூத்த நெருப்பாக இருந்தது .

சுதந்திரம் கிடைக்க போகும் கால கட்டத்தில் சிங்கள தலைமைகள் முழு அதிகாரத்தையும் தமது கையில் எடுக்க எவ்வளவு பிரயத்தனபட்டார்கள் என்று வரலாறு சொல்லியே நிற்குது .

அதன் பின்னர் நடந்தது  அனைவருக்குமே தெரியும் .தமிழர் தலைமைகள் சிங்கள தலைமைகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதும் பல தமிழ் தலைமைகள் சோரம் போனதும் தான் வரலாறு.

பின்னர் எம் கண் முன்னே தொடங்கிய ஆயுதபோராட்டம்  எமது கண் முன்னாலேயே அழிந்து போனதையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம் .ஆயுதபோராட்டமும் பிழையான வழிமுறைகளும் பல சோரம் போனதும் தான் முக்கிய காரணம் .

ஆயுத போராட்டத்தில் தோற்ற பின் சிங்களம் என்றுமில்லாத துணிவுடன் நேரடியாக தமிழரை அடக்க களத்தில் இறங்கியிருக்கு .அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம் .தமிழர்களின் இன்றையை இயலாமை நிலை ,இரண்டாவது சர்வதேசம் ஒரு தீர்வை திணிக்க முயன்றால் அதற்கு முதல் முடிந்தளவு தமிழ் பிரதேசங்களில் சிங்களமயமாக்குதல்

மக்கள் தலைமைகளுக்கு பின்னால் ஒன்று சேரவில்லை என்பது தவறு .செல்வாவில் தொடங்கி அமிர் பிரபா வரை தொடர்ந்து இன்று சம்பந்தன் பதவியில் இருப்பதற்கும் அதுதான் காரணம் .

சிறுபான்மை தமிழர்கள் எதுவித அதிகாரபலமும் அற்று சிங்களவனை வெல்லுவது மிக கஷ்டம் .தீர்விற்கு ஒரே வழி சர்வதேச அழுத்தமும் அதற்கான அரசியலும் ஆகும் .காலம் காலமாக இந்த விடயத்தில் நாங்கள் மிக பலவீனமானவர்களாக இருக்கின்றோம் .

நீங்களா இப்படி எழுதுவது ? 
 
சும்மா புலி வாந்தி எண்டுத்து கொண்டிருப்பதில் ஏதும் ஆகிவிட போவதில்லை. விட்ட பிழைகளை திருத்துகிறோம் எனும் பம்மாத்தை யாரும் பேயன் விசரனால்தான் நம்பமுடியும். புலிகளுடைய காலம் ஆயுத போராட்டம் அரசியல் பாதை என்பது இனி ஒருபோதும் வரபோவதில்லை. 
இல்லாத வண்டிக்கு யாரும் பழுதுபார்த்து கொண்டிருந்தால் ........... முழு லூசு என்பதை விட வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?
இந்த விட்ட பிழைகளை திருத்தும் பேர்வழிகள் ஏன் 2009 இற்கு முன் .....
பண்டாரவன்னியன் ...
சங்கிலியன் ...
எல்லாளன் .... போன்றவர்கள் விட்ட பிழைகளை பற்றி ஒரு கட்டுரையும் எழுதவில்லை?
புலி வாந்திக்கு என்ன பெயரையும் சூட்டலாம். ஆனால் அடித்தளத்தில் என்ன இருக்கிறது என்பது ஆறு அறிவு உள்ளவர்களால் கண்டு கொள்ள முடியும். அதை காணும் போது அது அருவெறுப்பை கொடுப்பதை தவிர வேறு ஏதும் அங்கு இருப்பதில்லை.
 
ஆயுத போராட்ட காலத்தில் திரை மறைவில் நடந்துகொண்டிருந்த விடயங்களை புலிகளின் மேல் இருந்த வெறுப்பால்  உங்கள் பார்வை காணாது விட்டு விட்டது. 
1984 இல் இலங்கையில் நடந்த போர் ............. இந்திய றோவிட்கும் விற்கும் பாகிஸ்தான் ஐ எ எஸ் இற்கும் நடந்த போர்தான். அவர்களின் களமாகத்தான் தமிழ் விடுதலை போராட்ட களம் மாறிக்கொண்டு இருந்தது .
சிங்களவர்களை ஐ எ ஸ் பெரிய செலவில் வளர்த்து கொண்டிருந்தது. 1984 இல் ஸ்ரீலங்கா இராணுவ தளபாடங்களை  ஒரு முறை கூகிளில் தேடிப்பாருங்கள்...... அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் ஊடாக வந்து சேர்ந்தவைதான். 
  இலங்கை இராணுவத்தின் -2 ரக ஏகே துப்பாக்கிகள் அனைத்தும் பாகிஸ்தான் தயாரித்தவை. 
உங்கள் மாலைதீவு பயணம் ....
ஸ்ரீ சபாரத்தினம் தனது முதன்மை தளபதியான தாசை போட்டு தள்ளியது. 
கருணாநிதி டேலோவிட்கு காசை அள்ளி கொடுத்தது 
பொற்கோவிலில் கைப்பற்றிய அனைத்து ஆயுதமும் சில ஸ் எல் ஆர் களை தவிர டேலோவிடம் வந்தது.
1987 புலிகள் இந்திய இராணுவம் சண்டை தொடங்கியவுடன் உங்கள் தலைவர் பாகிஸ்தான் பறந்தது.
எல்லாம் தமிழ் விடுதலை போராளிகள் போட்ட திட்டங்கள் இல்லை. இவர்கள்   வெறும் அம்பாகவே இருந்திருக்கிறார்கள்.
பிரபாகரன் தமிழ் ஈழ விடுதலை என்பதில் உறுதியாக இருந்த ஒரே ஒரு காரணம்தான் இன்று அனைத்து பழிகளையும்  சுமக்க வேண்டி வந்ததற்கு ஒரே காரணம்.
மற்றையவர்கள் போல் புலிகளும் குத்து கரணம் அடித்திருந்தால் .... இந்திய இந்து பேப்பர் முதல் பக்கத்தில்  பிரபாகரன்  படம் அட்டைபடமாகவே இருந்திருக்கும்.
 
இன்று அமெரிக்க ​- சீன பொருளாதார யுத்தம் மட்டுமே எங்கள் விடுதலையை நிர்ணயிக்க கூடியதாக இருக்கிறது. அதில் சீனா எப்போதும் கழுவிய நீரில் நழுவிய மீன்தான். அமெரிக்க வலையில் ஒருபோதும் வீழ்ந்ததில்லை. ஆப்ரிக்க நாடுகளில் பல ஆட்சி கவிழ்ப்புகளை கூட பெரியவர்கள் செய்து களைத்துவிட்டார்கள்  சீனர்கள் விதைத்த பயிரை நன்றாக அறுவடை செய்து கொண்டு போகிறார்கள்.
இலங்கையிலும் இதுதான் நடக்க போகிறது.
சீனாவே சொல்லிகொடுக்கும் மேற்க்கிற்கு தாலிகட்டிய மனைவி மாதிரி இரு அப்பத்தான் எல்லாம் சுகமாக போகும்  எனக்கு வப்பாட்டியாக இருந்தாலே போதும் என்று. இதில் தாலி கட்டியவர்தான் செலவு எல்லாம் செய்ய வேண்டும்  என்பதுதான் சீனாவின் தந்திரம். 
 
இன்று புலிகளுக்கு எதிராக மக்களை திருப்புவதில் ஏதும் பயன் இருப்பதாக நீங்கள் நம்பினால் அதை தெளிவாக எழுதவேண்டும் . அதில் ஏதும் காரணம் இருந்தால் நாங்களும் அதை முனைப்போடு செய்வது எனபதுதான்  இன்றைய காலத்தின் தேவை. அதை விடுத்து மக்களை குழப்பி அடிப்பதில் மட்டுமே அக்கறை எனில் இதில் யாருக்கு லாபம்  என்று கொஞ்சம் பார்க்க வேண்டும்.
உங்களுக்கு நம்ப கஷ்டமாக இருக்கலாம் இன்றும் பல தமிழ் எழுத்தாளர்கள் தங்களை கட்டுரையாளர்கள் என்று  சொல்லிகொண்டிருப்பவர்கள். இந்திய இலங்கை நல்லாசியுடந்தான் திரைக்கு பின்னால் இருக்கிறார்கள். 
 
எல்லோருடைய வாய்களும் சுதந்திரமாக இல்லை ... பேச வேண்டியவர்களால் இன்று பேச முடியாது.
அதன் பொருள் பேசுபவர்கள் உண்மைகளை பேசுகிறார்கள் என்று பொருள் இல்லை.
காய்கிற மரத்திட்குதான் கல்லெறி என்பது பொதுவான விதி.
காய்க்காத மரங்களால் எப்போதும் நிமிர்ந்து நிற்க முடிகிறது எனபதுதான் உண்மை.
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனால் மட்டும்தான் முடியும் என்று நம்பினதாலைதான் முள்ளிவாய்க்கால் வரை வந்தது.  யார் குத்தினாலும் அரிசி மாவாகும்.  சரியாக் குத்தத் தெரிந்தால் போதும்.  ஆயுதப் போராட்டத்திற்குப் பிரபாகரன் என்றால் அரசியலுக்கு விக்னேஸ்வரனால் முடியும்.

பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கேக்குள்ளையும் அவராலை முடியாது எண்டுதான் நிறையப் பேர் சொன்னவை.   ஆனால், உலக இராணுவத் தரத்திற்குப் புலிகளைக் கொண்டு வரவில்லையா?  அனுபவமில்லாமல் பிரபாகரனால் முடியும் எண்டால், படிச்சு, நிறைய அனுபவமுள்ள விக்னேஸ்வரனாலும் முடியும். 

இப்பிடி ஒருத்தரை மட்டும் தூக்கிப் பிடிப்பதை நிறுத்திப்போட்டு உங்களாலை முடிஞ்ச உதவி செய்யிற வழியைப் பாருங்கப்பா.

நீங்கள் சொல்வது 100 வீதம் உண்மை.
 
ஆனால் அரசியல் தளத்தில் நான் யார் என்பதில் பொருள் கிடையாது. எமது எதிரி யார் என்பதில்தான் பொருள் உண்டு. 
இன்று ரசியா ஒரு ரவடியாக அடையாளம் காட்டபடுகிறது ஆனால் அதிகளவு அணு ஆயுதத்தை அதுதான் வைத்திருக்கிறது ஓரிடமும் வீசியதில்லை.
உலக ஜெனநாயக வாதிகள்தான் மக்களையே இலக்கு வைத்து அணுகுண்டை போட்டார்கள்.
 
எமது வர்ணம் என்பது எதிரியின் வர்ணத்தை பொறுத்தே வருகிறது.
 
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று சொன்ன ஜேசுவே தனது தத்துவம்  ஒருபோதும் செல்லாது என்ற செய்தியைத்தான் சிலுவையில் இருந்து சொல்லிவிட்டு போனார். 
 
பிரபாகரன் பயங்கரவாதியாக மாறியிருந்தால் தமிழர்கள் வென்றிருப்பார்கள். அல்லது சிங்களவரும் தோற்று போயிருப்பார்கள். தமக்கான தர்ம பாதையில் புலிகள் இருந்ததுதான் அவர்களுக்கு தோல்வியை கொடுத்தது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு சிங்கள இந்தியர்கள் மாறி மாறி ஆட்டும் நூல் பொம்மைதான். அதை தவிர்க்க போனால்  த தே கூ தவிர்க்க பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.