Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லைகாவின் ஞானம் அறக்கட்டளை 3000 மில்லியன் ரூபாய்களை இலங்கையின் வடகிழக்கிற்கு ஒதுக்கியது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 3000 மில்லியன் ரூபாய் நிதியீட்டத்துடன் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை:-

 

இலங்கையில் 3000 மில்லியன் ரூபாய் நிதியீட்டத்துடன் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்கும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை

 

(லண்டன், ஜூன் 26) இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வாழ்வாதார மூலத்தினை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்விமேம்பாட்டினை ஏற்படுத்தல் போன்ற ஆக்கபூர்வமான பல திட்டங்களை இலக்குவைத்து, 3000 மில்லியன் ரூபாய்கள் நிதியீட்டத்துடன் லைகாவின் ஞானம் அறக்கட்டளையின்  இரண்டாம் கட்டப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.    

 

ஆக்கபூர்வமான பல திட்டங்களை இலக்குவைத்து பாரிய நிதியீட்டத்துடன் கூடிய இந்த மக்கள் நலன்புரித் திட்டங்களை நேர்த்தியாக மேற்கொள்ளும்பொருட்டு, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பிராந்தியக் காரியாலயங்களை லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் போஷகர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா, லைகாவின் ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவர்  அல்லிராஜா சுபாஸ்கரன், லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதித் தலைவர்  பிறேம் சிவசாமி ஆகியோர் இன்று வியாழக்கிழமை வைபவரீதியாகத் திறந்துவைத்தனர்.

 

”பட்டினி கிடப்பவனுக்கு மீன் ஒன்றை ஒருவேளை உணவாகக் கொடுப்பதிலும் பார்க்க அவனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பதனூடாக வாழ்நாள் முழுவதும் அவனுக்கு உணவளிக்கமுடியும்” என்ற முதுமொழியை கருப்பொருளாகக்கொண்டே லைகாவின் ஞானம் அறக்கட்டளை இயங்கிவருகிறது.

 

மட்டக்களப்பு புதிய வன்னியர் வீதியில் அமைந்துள்ள பிராந்தியக்   காரியாலயத்தினை இன்று வியாழக்கிழமை காலை திறந்துவைத்த இவர்கள், மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் பயனாளிகளுக்கான அன்பளிப்புப் பொருட்களையும் கையளித்தனர். இந்த நிகழ்வில் பயனாளிகள், சமூக முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.    

 

அம்பாறை மாவட்டக்காரியாலம் அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் அத்தாவுல்லா கலையரங்கத்தில் இடம்பெற்ற அன்பளிப்புக்களைக் கையளிக்கும் நிகழ்வில் மூவின மக்களும் பெரிய எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

 

மண்டபம் நிறைந்த அந்த அரங்கில் உரையாற்றிய லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதித் தலைவர் திருவாளர் பிறேம் சிவசாமி அவர்கள், லைகாவின் ஞானம் அறக்கட்டளை என்பது இன, மத, மொழி வேறுபாடின்றி மக்கள் நலன்புரிச் சேவைகளை ஆற்றிவரும் ஒரு அமைப்பு என்றும், மக்கள் குறைதீர்க்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.

 

இன்று வியாழக்கிழமை பிற்பகல் மன்னாரில் செபஸ்டியன் கோயில்வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அலுவலகத்தினை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்த இவர்கள், மன்னார் நகரசபை மண்டபத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் பயனாளிகளுக்கான அன்பளிப்புக்களை வழங்கினார்கள். இந்த நிகழ்விற்கு மன்னார் மாவட்டத்தின் பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்மார்கள், மாணவர்கள், மன்னார் மற்றும் மடு பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகளும் கலந்துகொண்டனர்.  

இந்தப் பன்முகப்படுத்தப்பட்ட மக்கள் நலன்புரித் திட்டங்களுக்காக அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், பொலனறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா  போன்ற மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, இந்தப் பணிகளைக் கனகச்சிதமாக மேற்கொள்வதற்காக மொத்தம் எட்டு பிராந்தியக் காரியாலயங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

 

இவற்றில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டக் காரியாலயங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டக் காரியாலயங்கள் திங்கட்கிழமையன்றும், திருகோணமலை மாவட்டக் காரியாலயம் செவ்வாய்க்கிழமையும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக எட்டு அதிகாரிகளுடன் கூடிய சுமார் 40-பேர் கொண்ட அணியொன்றும் உள்வாங்கப்பட்டிருக்கிறது.

 

ஏற்கனவே இரண்டாம் கட்டப் பணிகளுக்காக உறுதியளிக்கப்பட்ட 3000 மில்லியன் ரூபாய்களுக்கு மேலதிகமாக,  வவுனியா மாவட்டத்தின் பூந்தோட்டம் அகதிகள் முகாமிலுள்ள 150 அகதிகள் தமது காணிகளில் வீடுகளைக் கட்டுவதற்கான நிதியீட்டத்தினையும் வழங்க லைகாவின் ஞானம் அறக்கட்டளை உறுதியளித்திருக்கின்றது.

 

திங்கட்கிழமையன்று லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் வவுனியா பிராந்திய அலுவலகத்தினை வைபவரீதியாகத் திறந்துவைப்பதற்காக வவுனியா சென்றிருந்த லைகாவின் ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா  மொபைல் நிறுவனத்தின் தலைவர் திரு அல்லிராஜா சுபாஸ்கரன், லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதித் தலைவர் திருவாளர் பிறேம் சிவசாமி ஆகியோர், பூந்தோட்டம் அகதிமுகாமில் நீண்டகாலம் அல்லலுறும் மக்களுக்கு நிரந்தமான வதிவிடங்களை வழங்கும் நோக்கிலேயே, 150 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான நிதியினை வழங்குவதாக உறுதியளித்திருக்கின்றனர்.

 

இந்த இரண்டாம் கட்டப்பணிகளில் குறிப்பாக, மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் கல்வி மற்றும் வாழ்வாதார அனுசரணைத்திட்டம்என்ற திட்டத்தினூடாக சுமார் 10,000 ற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும், 660 குடும்பங்களுக்கும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை வருடாந்தம் அனுசரணை வழங்கவிருக்கிறது.

 

இதன்பிரகாரம், இலங்கையின் மேற்குறிப்பிட்ட 11 மாவட்டங்களிலிருந்து வருடாந்தம் தலா 55 குடும்பங்கள் விகிதம் தெரிந்தெடுக்கப்பட்டு, அவர்களின் குடும்பங்களில் நிலவும் வறுமையை நிரந்தரமாக இல்லாதொழிக்கும் நோக்கில், குடும்பமொன்றிற்கு ஒரு குறித்த தொகையினை வழங்கி அவர்களின் நிரந்தர வாழ்வாதார மூலத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதே நோக்கமாகும்.

 

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சுமார் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும்கூட, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்காகவும், உறுதித்தன்மைக்காகவும், அரசாங்கத்திடமிருந்தும், சர்வதேச தன்னார்வத் தொண்டர் அமைப்புக்களிடமிருந்தும் பல்வேறு ஆதரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள், ஆதாரங்கள் கடந்த பல வருடங்களாகக் கிடைக்காதிருக்கும் நிலையில், யுத்தத்தின் மோசமான விளைவுகளைச் சந்தித்த பிரதேசங்களில் வறுமையுடன் கூடிய நிலைமைகள் மிகவும் மோசமாகிக் கொண்டுசெல்வது அவதானிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவரும் இளம் சமுதாயத்தினரும், சிறார்களும் விடைகாண முடியாத மிகவும் மோசமானதொரு சமூக பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகிறார்கள்.

 

அபாயங்கள் நிறைந்த உள்ளூர் இடம்பெயர்வுகள், சுயமாகவும், பெற்றோரின் உந்துதலின்பேரிலும் மேற்கொள்ளப்படும் சட்டரீதியற்ற இடப்பெயர்வுகள், சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுதல், துஷ்பிரயோகங்கள் போன்றவை இந்த இளஞ்சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஊறுவிளைவிக்கும் முக்கிய விடயங்களாகும்

இவ்வாறானதொரு மோசமான புறச்சூழலில்தான், லைகாவின் ஞானம் அறக்கட்டளை சுமார் 3000 மில்லியன் ரூபாய்களைத் தொடர்ந்தும் வழங்க உறுதியளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பகிர்ந்தளிக்கப்படும் நிதி என்பன சிறார்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நேரடியாகவே ஆதரவளிப்பதனை நோக்காகக் கொண்டது. இதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதனூடாக பாடசாலைக்குச் செல்லாதிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையிலும், பாடசாலையிலிருந்து இடைவிலகும் சிறுவர்களின் எண்ணிக்கையிலும் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தல், அவர்களின் உடல், உள மேம்பாட்டினை ஏற்படுத்தல், ஆசிரியர்-மாணவர் இடையே சுமுகமான உறவினை ஏற்படுத்தல், நாளாந்த வாழ்வில் மகிழ்ச்சியாக சமூக மேம்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடுதல் போன்றனவற்றை உறுதிப்படுத்துவதனை எட்டுவதே லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.   

 2010 டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு சீரிய முறையில் அறம் புரிந்துவரும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை என்பது லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் லைகா மொபைல் நிறுவனத்தினால் முழுமையாக நிதியீட்டம் செய்யப்படும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

லைகாவின் ஞானம் அறக்கட்டளை 3000 மில்லியன் ரூபாய்களை இலங்கையின் வடகிழக்கிற்கு ஒதுக்கியது:-

 



இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இலக்குவைத்து, பரந்துபட்ட மக்கள் நலன்புரி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக சுமார் 3000 மில்லியன் ரூபாய்களை லைகாவின் ஞானம் அறக்கட்டளை ஒதுக்கியிருக்கிறது.

 

மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வாழ்வாதார மூலத்தினை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்விமேம்பாட்டினை ஏற்படுத்தல் போன்ற ஆக்கபூர்வமான பல திட்டங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்டப்பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பாரிய நிதியீட்டத்துடன் கூடிய பன்முகப்படுத்தப்பட்ட மக்கள் நலன்புரித் திட்டங்களுக்காக அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், பொலனறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா  போன்ற மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இந்தப் பணிகளைக் கையாளுவதற்காக எட்டு மாவட்டக் காரியாலயங்களும் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன.

இவற்றில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டக் காரியாலங்கள் நேற்றும் (June 22) இன்றும் (June 23) லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் போஷகர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா, லைகாவின் ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிறேம் சிவசாமி மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ் டூலி ஆகியோரினால் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.

 

 

 

  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108637/language/ta-IN/article.aspx

 

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன பிளான்???????????? "கத்தி" படத்தை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா :D

  • கருத்துக்கள உறவுகள்

சரியான புத்திக் கூர்மையான கத்தி ...தீட்டல்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3000 மில்லியன் ரூபா என்பது 18 மில்லியன் யூரோவிற்குச்சமன். நம்பக்கூடியதாகக் கொழுத்துங்கோ.

Edited by naaddukkaddai

எங்களவர்களுக்கு எழுந்த மானத்திற்கு "௦"களை பாவிப்பது ஒரு கை வந்த கலை... :)

 

மூன்று மில்லியன் SLR ஆகா இருக்கலாம் (180,000 Euro)??

 

பாதிக்கபட்ட மக்களுக்கு சென்றால் நல்லது (அதற்காக அவர்களை ஏய்க்காவிட்டால் சரி....)..அதை தடுக்க யாருக்கும் உரிமையில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்த சிலவற்றை தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன்

 

பிறேம் சிவசாமி  லைக்காவின் உதவித்தலைவர் கிடையாது

ஆலோசகர் மட்டுமே..

 

அண்மையில்

ஒரு கோடி ரூபாக்களை கிராமங்களின் அபிவிருத்திக்காக லைக்கா  ஒதுக்கி

வேலைத்திட்டங்களை கேட்டபோது

லண்டனிலுள்ள எமது ஊர் ஒன்றியம் கேட்டதற்கு அமைய 

எமது ஊரிலுள்ள குளங்களை  புனரமைப்பதற்காக

3 குளங்களின் திட்டங்களை  கொடுத்திருந்தோம்..

எனவே ஒரு கோடி என்பது

1 லட்சம் பவுண்கள் மட்டுமே....

 

 

நன்றி

சம்திங் இஸ் பெட்டர் தான் நத்திங்!!

 

அய்!! இங்கிலீசிலை சொல்லீட்டன்!!  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.