Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொலை

[திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 13:57 ஈழம்] [ம.சேரமான்]

அம்பாறை மாவட்டத்தில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

அம்பாறை பனாமா நகருக்கு அருகே இக்கொலைச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவம் நேற்று நடந்திருக்கக் கூடும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

( Puthinam)

  • Replies 53
  • Views 9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

BBC News

Sri Lankan civilians found dead

The bodies of 11 Muslim civilians have been found in a remote area in eastern Sri Lanka, the military has said.

The bodies of the men, who had apparently gone to repair an irrigation system, were found in Ampara district.

Tamil Tiger rebels were suspected of being behind the attack, army spokesman Brig Prasad Samarasinghe said. There was no comment from the rebels.

Months of heavy fighting have displaced more than 200,000 people in Sri Lanka. Hundreds have been killed.

The military says the men had been working on a water project in Ampara on Sunday. When they failed to return home, a team went to investigate on Monday morning and found the bodies.

"They had gone to renovate a sluice gate and went missing. They have been found dead, hacked and chopped," an unnamed military spokesman quoted by the Reuters news agency said.

Another man was injured, but survived the attack.

இலங்கை அரசியல் தலைமை யாராவது வெளிநாட்டில் நிக்கும் போது கிடைக்கும் நெருக்குவாரங்களை தவிர்க்க இப்பிடி படுகொலைகள் செய்வது ஒண்டும் புதிதாய் இல்லை...! சர்வசாதராணமான விசயம்..! இப்ப பயங்கரவாதிகளோடு பேச முடியாது எண்டு சொல்லலாம் தானே...!

ஆனால் ஐநாவால் விருது வழங்கப்பட்ட சங்கரியை போட்டு புண்ணியத்தை அரசாங்கம் தேடும் எண்டுதான் நினைச்சன்....! ஆனால் முஸ்லீம்களை போட்டு இருகிறது....!

சங்கரியாரை பெரிய வேள்விக்காக வளர்க்கிறார்கள் போல கிடக்கு...! அந்தாள் கவனமாய் இருக்கிறது எங்களுக்கு நல்லதுதான்...!

இறந்த உடல்கள் தொகை தெரியமுன் புலிகள் மீது குற்றம் சுமத்தி இருந்தால் நாம் நம்புவோம் முஸ்லிகளின் ஆவசர கோவம்தான் சிங்கள அரசுகள் மேலும் மேலும் இப்படியான

கொலைகளை செய்ய தூண்டுவது.

இஸ்லாம் மதபெரியார்கள் இதை புரிந்து கொள்ளுவார்களா? :roll: :?: :idea:

கோரமாக சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களுக்கு இதய அஞ்சலிகள்!!

இக்கொலையின் பின்னாவது முஸ்லீம் தலைவர்கள் தாமென்று கூறிக்கொண்டு, தம் மக்களையே காட்டிக் கொடுத்து அழிக்கும் நபர்கள் திருந்துவார்களா?????

தன் கணவனேயே சிங்கள சதிக்கு பலியாக்கி, தமிழ் எதிர்ப்பே கொள்கையாகவும், கதிரைக்காக இன்றும் சிங்களத்துடன் ஒட்டியிருக்கும் "பேரியல் அஸ்ரப்" போன்றவர்கள் இனியாவது திருந்துவார்களா??? ..... "தானும் தாய்தான்" என்று அன்பு வசனம் சுவிஸ் பேச்சுவார்த்தையில் உருகப் பேசி, தமிழ் குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்த அற்புதத்தாய், இன்று தனது குழந்தைகளுக்காக இதே வசனம் பேசுவாரா??????

இன்று தென் தமிழீழத்தில் தமிழ்/முஸ்லீம் உறவுகளுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கும் "அதாவுல்லா, கக்கீம், ..." போன்ற மற்றைய தலைவர்களென்று கூறுபவர்களின் பதிலென்ன?????

புலம் பெயர்ந்து லண்டனிலேயே தமிழ்/முஸ்லீம் உறவுகளுக்கு பாடை கட்டும் "ஜிகாத் அமைப்பின்" லண்டன் முகவர் "பஷீ**" போன்றோர் இனியும் துரோகிகளின் வானொலியில் வந்து "இக்கொலையை தமிழர்களின் தலையில் கட்டப் போகிறாரா"??????

இக்கொலைகள் ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்கிறது!!!! "முஸ்லீங்களோ அல்லது தமிழ்த் துரோகிகளோ" எப்படித்தான் சிங்களத்துடன் ஒட்டியிருந்தாலும், சிங்களம் உங்களை பயன்படுத்திவிட்டு அழித்தே தீரும்!!!!!! தப்பவே முடியாது!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

10 முஸ்லிம்கள் படுகொலை: விடுதலைப் புலிகள் கண்டனம்- சிறிலங்கா அதிரடிப்படை வானகம் மீது மக்கள் தாக்குதல்!

அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாம் அருகே 10 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலைச் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்துள்ள மக்கள் சிறிலங்கா அதிரடிப்படை வாகனத்தின் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர்.

அம்பாறை யால தேசிய பூங்கா அருகே 11 முஸ்லிம்கள் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

இப்படுகொலைச் சம்பவம் நடந்த இடம் அருகே சிறிலங்கா இராணுவம் முகாம் அமைந்துள்ளது. இந்த இடம் சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இத்தகைய படுகொலைகளை நிகழ்த்தும் போது தமிழீழ விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டுவதை நீண்டகாலமாக சிறிலங்கா இராணுவம் செய்து வருகிறது. இதற்கு நல்ல உதாரணமாக மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட் சம்பவத்தை சுட்டிக்காட்டலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டி சிறிலங்கா இராணுவம் வெளியிடும் செய்திகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 நிவாரணப் பணியாளர்களின் குடும்பங்களை சர்வதேச ஊடகங்கள் சந்தித்தமையால் அது வெளிச்சத்துக்கு வந்த்து. அத்தகைய ஒரு நடைமுறையை ஊடகங்கள் இலங்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவ இணையத்தளத்தில் சாஸ்திரவெளி சிறிலங்கா அதிரடிப்படை முகாம் அருகே உள்ள றொட்வெல, பொத்துவில் பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டோர் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அதிரடிப்படையினர் நிகழ்த்தியுள்ள இக் கொடூர படுகொலையைத் தொடர்ந்து அங்கு பதற்றமான நிலை உருவாகி உள்ளது. அதிரடிப்படையினர் வாகனங்கள் கல்வீச்சுக்கு இலக்காயின.

இதனையடுத்து பொத்துவில் மசூதியில் படுகொலை செய்யப்பட்ட 25 வயதுக்கும் குறைவான இளைஞர்களின் சடலங்களுடன் காத்திருந்த மக்களை கலைந்து செல்ல வேண்டும் என்று சிறிலங்கா அதிரடிப்படையினரும் சிறிலங்கா காவல்துறையினரும் உத்தரவிட்டனர். அப்போது வானத்தை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் விவரம்:

பொத்துவிலைச் சேர்ந்தோர்:

எம். அனுருதீன் (வயது 15)

எம். நஃபார் (வயது 15)

எம். சம்சுதீன் (வயது 18 )

எல். அனீஸ் (வயது 19)

ஏ.எம். பைசால் (வயது 19)

எம். ஜாஃபர் (வயது 20)

எஸ்.எல். ரிசாட்

அக்கரைப்பற்றைச் சேர்ந்தோர்:

ஏ.எம். அஜ்மீர் (வயது 18 )

எம். பைரூஸ் (வயது 19)

எம்.ஐ. சியாம் (வயது 20)

படுகாயமடைந்த எம். மீரா மொகைதீன் (வயது 55) என்பவர் அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது சிங்களப் பேரினவாதிகள் புத்தர் சிலையை இங்கே நிறுவினர். இதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கடந்த ஈழப்போர் - 03 இன் போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் அம்பாறை மாவட்டத்தில் பெருந்தொகையான எண்ணிக்கையில் பொதுமக்கள் காணாமல் போயினர்.

-புதினம்-

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடிப்படையால் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லீம் சகோதரர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

முன்பு, தமிழரைத் தான், இடத்தை விட்டுத் துரத்தியடிக்க படுகொலைகள் செய்தனர். இப்போது முஸ்லீம்களையும் விட்டு வைக்கவில்லை!

இந்த நேரத்தில் சர்வதேச சமுதாயம் இலங்கையின் ஒழுங்கான விசாரணை நடக்குமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஒரு படுகொலை நடந்தவுடன், தன் எதிராளி மீது பழியைப் போடுகின்ற சிங்கள அரசு, எவ்வாறு சரியான தீர்ப்பினைச் சொல்லும்.

எனவே, சிங்கள அரசு சார்ந்த, தீர்பாளிகளின் தீர்வு சரியானதாக இருக்காது என்பதே உண்மை!

ipr4.jpg

12ow4.jpg

Police officers try to clear the street as angered Muslim villagers protest against the killing of 10 labourers in the eastern town of Pottuvil September 18, 2006. Sri Lanka's military on Monday accused Tamil Tiger rebels of hacking 10 Muslim labourers to death in the island's east, but angry local residents blamed security forces. REUTERS/Anuruddha Lokuhapuarachchi (SRI LANKA)

Muslim protestors charge STF for Pottuvil massacre

[Mon, 18 Sep 2006, 15:03 GMT]

"Special Task Force (STF) troops killed these people," Muslim M.S. Mohedeen, told Reuters as around 2,000 people, including women and children, gathered around the Periya Pallivasal mosque in the eastern town of Pottuvil where the bodies were laid out and incense burned to mask the stench of death. The protestors rejected Sri Lankan government accusations the Tamil Tigers were responsible for the killings near the Yala game reserve. The LTTE condemned the massacre and, citing the August massacre of 17 aid workers blamed on government forces, said Sri Lanka’s military had “a long tradition of blaming the LTTE for the atrocities it commits.” Full story >>

"(Police) Special Task Force (STF) troops killed these people," said Muslim M.S. Mohedeen, as around 2,000 people, including women and children, gathered around a mosque in the eastern town of Pottuvil where the bodies were laid out and incense burned to mask the stench of death.

"We don't blame anyone else," he added. "The LTTE can't come into this area. It is completely controlled by the STF. Without the STF's knowledge, no one can come into this area."

நாளை பேச்சுவார்த்தை என்ற மாயைக்குள்ளே தனிதரப்பு என்ற பெராசை காட்டி சில முஸ்லிம் அரசியல்வாதிகள்

வேறு ஒரு அறிக்கை விடாமல் இருந்தால் மீண்டும் இப்படியான பிரச்சாரத்துக்கானாதும், இனமோதலுக்கான படுகொலைகள் நடக்காது இல்லை என்றால் மீண்டும் இப்படியான கொலைகள் நடத்திவிட்டு புலிகள் தலையில் சுமத்த மகிந்தாவின் சிந்தனை சிந்திக்கும் ஆகவே அதுக்கு முன் முஸ்லிம் மக்கள் சிந்தித்தால் நல்லது :?: :idea:

உணருவீர்களா முஸ்லிம் உறவுகளே?????????????? :roll: :roll: :roll:

எப்படி ஆயினும் இறந்தது தமிழ் பேசும் எம் உறவுகள்.

கண்ணீர் அஞ்சலிகள்!

முஸ்லீம் மக்கள் இனியாவது கொஞ்சம் திருந்தி நாம் எல்லோரும் தழிழ் பேசும் உறவுகள் எண்ட நிலைக்கு வர இலங்கை அரசு உதவி செய்கிறது ............... இதனுடைய விசாரனையும் மகிந்த மதவாச்சி நீதிமன்ற த்துக்குத்தான் மாத்துவார் ஆனபடியால் உண்மைகள் ஒருபோதும் வெளிவரமாட்டது செய்த இராணுவம் பயமில்லாமல் அடுத்த கட்டத்தை தொடங்கலாம் ................

capt6ad4a80086b647349206123118eaf546srilankaviolencextt2.jpg

r3843669072nh0.jpg

பொத்துவில் பகுதியில் 10 முஸ்லிம்கள் படுகொலை

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் நீர்ப்பாசனக் கால்வாயொன்றின் துப்பரவு பணிக்காகச் சென்றிருந்த 10 முஸ்லிம் தொழிலாளிகள் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் அரச மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ரதகொல்ல நீர்ப்பாசனக் கால்வாய் திருத்த வேலைக்காக நேற்றுக் காலை சென்றிருந்த தொழிலாளிகள் மாலையானதும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடிச் சென்ற சமயம், ஒருவர் பலத்த காயங்களுடனும் ஏனைய 10 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டதாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அரச ஊழியரொருவர் கூறுகின்றார்.

சம்பவத்தையடுத்து அந்தப் பிரதேசத்தில் உருவான பதற்ற நிலை காரணமாக வழமை நிலை பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ஜெயாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

விசேட அதிரடிப் படையினரே இதற்குப் பொறுப்பு என்று அவர் கூறினார்.

இதேவேளை இன்று மாலை கொழும்பிலிருந்து அமைச்சர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அந்தப் பிரதேசத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்தது.

முகாமொன்றின் விசேட அதிரடிப் படைப் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு பிரதேச மக்களினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹக்கீம் கருத்து

படையினர் மீதே ஊர் மக்கள் சந்தேகிப்பதாக ஹக்கீம் கூறுகிறார்

அதேவேளை அங்கு சம்பவ இடத்தைச் சென்று பார்த்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், சம்பவ இடத்துக்கு அருகில் படை முகாம் இருப்பதாலும், அண்மைக்காலமாக அப்பகுதியில் விடுதலைப்புலிகள் பலம் குன்றியிருப்பதாலும், இந்தச் சம்பவத்தோடு அவர்களுக்கு சம்பந்தம் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று அப்பகுதி மக்கள் கருதுவதாகவும், அதேவேளை அப்பகுதி மக்களின் சந்தேகம் படையினர் மீதே பலமாக இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் படையினர் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்த தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு என்று குற்றம் சாட்டுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

சம்பவத்தையடுத்து அந்தப் பிரதேசத்தில் உருவான பதற்ற நிலை காரணமாக வழமை நிலை பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
.

ஏன் தான் பிபிஸி வடிவாக உண்மைகளை சொல்ல வெக்க படுதோ தெரியா? :roll: :idea: :?:

சிறி லாங்கா அரசு படைகள் தான் கொலைசெய்தது என்று மக்கள் அறிந்து படைகளுக்கு ஏதிராக ஆத்திரம் அடைந்து ஆர்ப்பாட்டதிலும், வீதியில் தடைபோட்டு கல்லு எறிந்தார்கள்

பொலிஸார் மீது ஆனா சும்மா வெறும் பதறற்ம் என்ற சொல்லுக்குள்ளே எல்லாத்தையும் மறைத்து விட்டதா? இல்லை மறந்து விட்டதா? இல்லை தவறாக நேயர்களை திசை திருப்புகிறதா? :roll: :idea: :?:

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்-புலிகள் அல்ல: முஸ்லிம்கள் குற்றச்சாட்டு- நாளை முழு அடைப்பு

[திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 23:45 ஈழம்] [ம.சேரமான்]

அம்பாறையில் 10 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி முஸ்லிம்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொத்துவில் மசூதியில் கூடியிருந்தனர்.

அவர்களில் எம்.எஸ். மொகதீன் என்பவர் ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் இந்தப் படுகொலைக்கு காரணம். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிக்குள் வரமுடியாது. இது முழுமையாக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம். சிறப்பு அதிரடிப்படைக்குத் தெரியாமல் யாரும் இந்தப் பகுதிக்குள் நுழைந்துவிட முடியாது என்றார் அவர்.

இதனிடையே சிறிலங்கா அதிரடிப்படையின் இந்தப் படுகொலைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து அம்பாறை மாவட்டத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் இதர மாவட்டங்களில் கறுப்புக் கொடி ஏற்றி துக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது.

http://www.eelampage.com/?cn=28833

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: டெய்லி மிரர்

[செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 06:46 ஈழம்] [கொழும்பு நிருபர்]

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி மக்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஏடான டெய்லி மிரர் குற்றம்சாட்டியுள்ளது.

இப்படுகொலை தொடர்பில் சிறிலங்கா இராணுவம் தெரிவித்த செய்திகளை மறுத்து டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்கள்:

அம்பாறை பனாமா சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமுக்கு அருகில் இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டோர் அனைவரது கண்களும் கைகளும் கட்டப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் முதலில் கூறியது போல் அது அடர்ந்த காட்டுப் பகுதி அல்ல.

மேலும் எமது புகைப்படக் கலைஞர் பொத்துவில் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று பார்வையிட்டார். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இக்கொடூரப் படுகொலையை சிறிலங்கா அதிரடிப்படையினர்தான் செய்தனர் என்றும் விடுதலைப் புலிகள் அல்ல என்றும் வலியுறுத்திக் கூறுகின்றனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: டெய்லி மிரர்

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி மக்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஏடான டெய்லி மிரர் குற்றம்சாட்டியுள்ளது.

இப்படுகொலை தொடர்பில் சிறிலங்கா இராணுவம் தெரிவித்த செய்திகளை மறுத்து டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்கள்:

அம்பாறை பனாமா சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமுக்கு அருகில் இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டோர் அனைவரது கண்களும் கைகளும் கட்டப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் முதலில் கூறியது போல் அது அடர்ந்த காட்டுப் பகுதி அல்ல.

மேலும் எமது புகைப்படக் கலைஞர் பொத்துவில் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று பார்வையிட்டார். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இக்கொடூரப் படுகொலையை சிறிலங்கா அதிரடிப்படையினர்தான் செய்தனர் என்றும் விடுதலைப் புலிகள் அல்ல என்றும் வலியுறுத்திக் கூறுகின்றனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் சிகரட் துண்டுகளூம் சாராய போத்தலகளும் இருந்ததாக தெரிவிக்கின்றது பி.பி.சி புலிகள் இவற்றை பாவிப்பதில்லை.குர்ரம்சாட்டப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.eelampage.com/?cn=28845]படுகொலைக்கு புலிகள் காரணமில்லை- சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த ஐ.நா.விடம் முறைப்பாடு: ஹக்கீம்

[செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 07:07 ஈழம்] [கொழும்பு நிருபர்]

rauf20060807.jpg

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

படுகொலைச் சம்பவ இடத்துக்கு ரவூப் ஹக்கீம் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் ரவூப் ஹக்கீம் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் இதனைச் செய்திருப்பார்கள் என்ற முடிவுக்கு என்னால் வர முடியாது. இந்தப் படுகொலையை விடுதலைப் புலிகள் செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

படுகொலைச் சம்பவம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியை சந்தித்துப் பேச உள்ளேன்.

இச்சந்திப்பின் போது சர்வதேச நாடுகளின் உதவியுடன் விசாரணைகளை நடத்துவதற்கு வேண்டுகோள் விடுக்கப்படும்.

படுகொலைச் சம்பவ நடந்த இடமானது முழுமையாக சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம். அங்கு விடுதலைப் புலிகள் உள்நுழைந்திருப்பதாகத் தெரியவில்லை என்றார் ஹக்கீம்.

ஒரே நேரத்தில் 11 உயிர்கள் படுகொலை செய்யப்பட்டது.......

மிகவும் கொடூரம்.......

இழப்புகளோடு நாளும் வாழும் - எங்களுக்கு தான் அதனோட வலி சரியா தெரியும் !

எங்களை விட - அதன் வலி யாரும் முழுதாய் உணர்ந்து கொள்ள முடியாது!

எது எப்பிடியோ........

ஒறு தொழுகையின் முடிவில் இடம்பெறும் - ஒன்றுரையாடலே அவர்கள் - நாளைய முடிவென்று போச்சு!

செய்தது சிங்களவன் தானென்று சரியா தெரிஞ்சாலும்.....

நாளை அதை மறந்திடுவார்கள்.....!

உயிர் நீத்த - சகோதர உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் சகோதரர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ten of the civilians died on the spot but one survived and was rushed to the Kalmunai hospital and was redirected to the Base Hospital Ampara, due to security formalities.

அப்ப காயப்பட்டவரை விரைவில ருபவாகினி பேட்டி எடுக்கப்போகுது. செஞசோலை மாணவிகளை பேட்டி எடுத்ததுபோல.

அப்ப காயப்பட்டவரை விரைவில ருபவாகினி பேட்டி எடுக்கப்போகுது. செஞசோலை மாணவிகளை பேட்டி எடுத்ததுபோல.

வாய்பேயில்லை...

Muslim community leaders were summoned in Pottuvil Tuesday morning as the only survivor and the eyewitness to the massacre was reported dead Monday night. The eyewitness, M. Meeramohideen, 55, was blocked by the Sri Lankan armed forces at a checkpost and redirected elsewhere "on orders from Colombo," from being transferred to Kalmunai Ashraf Memorial Hospital for treatment by Muslim doctors, the community leaders charged.

]http://www.tamilnet.com/art.html?catid=13&...tid=19643

அப்ப காயப்பட்டவரை விரைவில ருபவாகினி பேட்டி எடுக்கப்போகுது. செஞசோலை மாணவிகளை பேட்டி எடுத்ததுபோல.

வாய்பேயில்லை...

Muslim community leaders were summoned in Pottuvil Tuesday morning as the only survivor and the eyewitness to the massacre was reported dead Monday night. The eyewitness, M. Meeramohideen, 55, was blocked by the Sri Lankan armed forces at a checkpost and redirected elsewhere "on orders from Colombo," from being transferred to Kalmunai Ashraf Memorial Hospital for treatment by Muslim doctors, the community leaders charged.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19643

எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே :twisted: :evil: :twisted: :evil: :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.