Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்திறக்குமா அவுஸ்திரேலியா????

Featured Replies

 10404530_10152264132598002_1678375922808

 

காணாமல்போன "மலேசியன் விமானத்தைதேட" அவுஸ்திரேலியா 600 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது பெரும் சர்ச்சையை அண்மைகாலத்தில் அவுதிரேலிய மக்களிடம் ஏற்படுத்தியது.
தன்னை ஒரு மனிதாபிமான நாடாக காட்டிக்கொள்ளவே அவுஸ்திரேலியா அவ்வாறு பணத்தை வாரி இறைத்தது எனவும் தனது கடற்படையையும் விமானப்படையையும் உதவிக்கு அனுப்பியது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

எது எவ்வாறெனினும் உலக நாடுகள் ஓடிப்பொய் மலேசியாவுக்கு உதவும் போது அவுஸ்திரேலியாவும் தன் பங்குக்கு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால் கொஞ்சம் "ஓவராகத்தான்" அவுஸ்திரேலியா தன் பங்கை செய்கிறதோ என ஒரு சிறு சலசலப்பு இங்கு எழவே செய்கிறது.

ஏனெனில் அண்மைக்காலமாக "அகதிகள் " விவகாரத்தில் மிகக்கடும்போக்கை தற்போதைய அரசாங்கம் எடுத்துவருகிறது.அதுவும் "இலங்கைத்தமிழ்" அகதிகள் விவகாரத்தில் மிக இறுக்கமான கடும்போக்கை அது கொண்டுள்ளது.

கடுமையான சட்டங்கள் மூலமும் இறுக்கமான நடவடிக்கைகள் மூலமும் "தமிழ் அகதிகள்" நீண்டகால தடுப்பு மற்றும் விசாரணையின் பின் விடுதலை செய்யப்படுகிறார்கள். அப்படி இணைப்பு விசாவில்(bridging visa) தற்காலிகமாக வெளியில் விடப்படும் அகதிகளுக்கான வாழ்வாதார அடிப்படை உதவிகள் ஒரு சில வழங்கப்பட்டாலும், அவர்களின் வாழ்வுரிமை பெரும் இடர்களுக்கு மத்தியில் இருப்பதாய் பாதிக்கப்பட்ட "தமிழ் ஏதிலிகள்" விசனப்படுகிறார்கள்.காரணம்
1.வேலை செய்வதற்கான அனுமதி(legally work rights) இல்லை.
2.கல்வி கற்பதற்கான உதவிகள்(education loan or fund) ஏதும் இல்லை.
3.நாட்டினை விட்டு எந்த காரணத்துக்காகவோ வெளியில் செல்லமுடியாது.
(விசா கிடைக்கும் வரை ,அது 5 வருடங்களோ 10 வருடங்களோ அவர்களால் 3ம் நாடொன்றுக்கு சென்று திருமணம் செய்யவோ உறவினர்களை சந்திக்கவோ அனுமதி இல்லை)

அதாவது 32 வயதில் அவுஸ்திரேலியா வரும் ஒரு ஈழத்தமிழ் அகதி ஒருவருக்கு தற்போதைய நடைமுறைகளின் படி அவருக்கான நிரந்த வதிவிட விசா(permanant visa) பெரும்பாலும் 35வயதில் தான் கிடைக்க வாய்ப்புள்ளது.அதன் பிறகே அவர் வேறொரு நாட்டுக்கு சென்று திருமணம் முடிக்க இயலும். அதன் பிறகு அவர் தனது நிரந்தர குடியுரிமையை(citizenship) பெற்ற பின்பே தன்னுடைய குடும்பத்தை இங்கே அழைக்க விண்ணப்பிக்க முடியும்.
ஆக குடியுரிமை பெற 4 வருடம் எனில் அவரால் 40 வயதிலேயே தன் குடும்பத்துடன் இணையமுடியும்.இது மிகக்கொடுமை.

35 வயதில் தன் குடும்பம்,பிள்ளைகளை விட்டு வந்தவர் 45 வயதிலேயே தன் பிள்ளைகளை,மனைவியை சந்திக்கமுடியும் என்ற துர்ப்பாக்கிய நிலைமை இங்கே உள்ளது.

அதாவது நிரந்தர வதிவிட உரிமை(PR) கிடைத்தவுடன் முன்பு தங்களின் குடும்பங்களை இங்கே அழைப்பதற்கு விண்ணப்பிக்கமுடியும்.ஆனால் தற்போதைய நடைமுறை நிரந்தர குடியுரிமை(citizenship) கிடைத்த பின்பே தங்களுடைய குடும்பத்தினை இங்கே அழைப்பதற்கு விண்ணப்பிக்கமுடியும்.விண்ணப்பங்களினை பரிசீலிக்கும் காலம்(processing period) 6மாதங்களில் இருந்து 1வருடம் கூட ஆகலாம்.

அவுஸ்திரேலியாவுக்கு வெளியே "கிறிஸ்துமஸ் தீவிலும்" "பப்புவா நியுகினி" தீவிலுமே தற்போது அகதிகள் சிறைவைக்கப்படுகிறார்கள்.அடிப்படை வசதிகள் மோசமான தற்காலிக கொட்டகைகளில் அவர்கள் வருடக்கணக்காக தங்கவைக்கப்படுகிறார்கள்.
"காத்திருக்கவைத்தல்" என்ற மோசமான சூட்சுமத்தினை குடிவரவு திணைக்களம் கையாள்கிறது.இதனால் பொறுமையிழந்த பலர் தாங்களாகவே முன்வந்து நாட்டுக்கு திரும்பிசெல்கிறார்கள் என்பது உண்மை.

அகதிகளுக்கான ஐ.நா சாசனத்தில் அவுஸ்திரேலியா கையெளுத்திட்டுள்ளது.

1.அகதி அந்தஸ்து கோருவது குற்றமல்ல
2.அகதிகள் சட்டபூர்வமாக வராவிட்டாலும் அவர்கள் அகதிகள் என இனங்காணபடும் பட்சத்தில் அவர்கள் அகதிகளே!!!
3.அகதிகளை நீண்டகால தடுப்பில் வைத்தல் ஆகாது.
4.அகதிகளுக்கான அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
5.அகதிகள் என இனங்காணப்பட்ட பின் அவர்களை அவர்களின் அனுமதியின்றி திருப்பி அனுப்பமுடியாது.

 

The facts are simple:

  • Asylum seekers are not 'illegal' - it is a human right to seek asylum by boat in Australia (UN Refugee Convention and Australian Migration Act 1958)

  • Asylum seekers arriving by boat make up less than 3% of Australia’s annual immigration.

  • The majority of asylum seekers who arrive in Australia by boat are found to be genuine refugees fleeing persecution, torture and violence.

  • pleace check http://www.amnesty.org.au/refugees/comments/24019/

 

http://secretsandlives.com.au/

 

மேலே கூறப்பட்ட விடயங்கள் உள்ளடங்கலாக பல விடயங்கள் " அகதிகள் சாசனத்தில்" உண்டு.

இருந்தாலும் அகதிகள் என இனங்காணப்பட்டாலும், ஒரு சில இலங்கை அகதிகளை, பாதுகாப்பு பொலீஸ்(ASIO) நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி 5 வருடங்களுக்கு மேலாக சுமார் 43 பேரை இப்போதும் தடுத்துவைத்துள்ளது.தடுத்து வைப்பது தவறல்ல. ஆனால் அவர்கள் பக்க நியாயங்களினை நீதிமன்றத்தில் சொல்லி வழக்காட கூட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதுதான் பெரும் கொடுமை.

இன்னும் ஒரு மிகப்பெரிய "சூட்சுமத்தினை" குடிவரவு திணைக்களம் செய்துள்ளது. அதாவது அகதிகளை தடுப்பில் வைத்திருந்தால் அவர்களை தங்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப போதுமான காரணங்கள் இல்லை. எனவே அவர்களை வெளியில் தற்காலிக விசாவில் விடுகிறார்கள்.அவர்களை அப்படி வெளியிலே சமூகத்தோடு இணைந்து வாழ அனுப்பும் போது "code of condact" எனப்படும் சட்டநடைமுறையில் கையெழுத்து பெற்றபின்பே அனுப்புகிறார்கள். அந்த சட்ட நடைமுறை கடிதத்தில்,

1.வீதி நடமுறைகளை மீறல்(road rules)
2.பாலியல் துஸ்பிரயோகம் செய்தல்(sexual abuse)
3.சட்டரீதியாக வேலை செய்யும் அனுமதி இல்லை.(no legal work rights)
4.சமூகத்துக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுதல்.(anti social activities)

என்பன உள்ளடக்கபட்டுள்ளது.

தூரதிஸ்டவசமாக குடிவரவு திணைக்களம் வைத்துள்ள இந்த பொறியில் பல அகதிகள் சிக்கிவிடுகிறார்கள்.இதனால் பலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இது பற்றிய முழுத்தெளிவும் அவதானமும் இருந்தும் 10% ஆனவர்கள்...

1.மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரனிடம் சண்டை செய்வது அல்லது தங்களுக்குள்ளேயே சண்டைபோட்டு வெட்டுகுத்துப்படுவது
2.மது அருந்திவிட்டு வாகனம் ஓடுவது இல்லையெனில் சாரதி அனுமதிபத்திரம் இல்லாமல் வாகனம் ஓடுவது.
3.வீதி ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்காமை
4.கோஸ்டி மோதல்
5.சட்டத்துக்கு புறம்பாய் வேலை செய்தல்
6.பாலியல் துஸ்பிரயோகம்

போன்ற சட்டவிரோத செயல்களை செய்யும் போது குடிவரவு திணைக்களம் அதனை காரணம் காட்டி திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
இதில் இன்னொரு மிகப்பெரிய பாதிப்பு என்னவெனில் இந்த 10% செய்யும் தவறான விடயங்கள் மிகுதி 90% அகதிகளின் விசா நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

திருப்பி அனுப்பப்படும் போது மேலே கூறிய சில காரணங்கள் வலுவானதாக காணப்படும் போது அவர்கள் நாடு கடத்தப்படுவதில் தப்பேதும் இல்லை என்பது இங்குவாழும் பலரின் கருத்து.

இன்னொரு விடயம் அவர்கள் திருப்பி அனுப்பப்படும்போது தகுந்த காரணங்கள் இருந்தாலும் வெளியில் சொல்வது இல்லை.அவர்களின் "அகதி அந்தஸ்து" நிராகரிக்கப்படுள்ளது என்பது மட்டுமே தெரியும்.

ஒரு சிலரை முன்னறிவித்தல் ஏதும் இன்றியே அனுப்பிவிட்டதாயும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

"நீண்ட கால தடுப்பும்" விண்ணப்பங்களினை பரிசீலிப்பதில் வேண்டுமென்றே " தாமதப்படுத்தலுமே" பெரும் மன உளைச்சலை அகதிகளுக்கு ஏற்படுத்துகிறது என்பது உண்மை.இதனாலேயே ஒரு சிலர் பொறுமை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இப்படி பொறுப்பற்ற செயல்களை செய்கிறார்கள் என்பது இன்னொருசாராரின் வாதமாகவும் உள்ளது.

ஆனால் எது எவ்வாறு இருந்தாலும் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களினை மதித்து நடக்கவேண்டியது எல்லோருடைய கடமையும் கட்டாயமும் ஆகும்.

இது இவ்வாறு இருக்க , பல மாதங்களுக்குப்பிறகு இந்த வாரம் இலங்கை அகதிகள் படகு அவுஸ்திரேலிய கடல் எல்லைக்கு அண்மையில் ஆபத்தில் தத்தளிப்பதாய் தகவல் ஒன்று வெளியாகி அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் இது பற்றி அவுஸ்திரேலியா பெரிதாய் அலட்டிக்கொள்ளவேயில்லை என்பது மிக வேதனையான விடயம்.152 பேருடன் வந்துகொண்டிருக்கும் அந்த கப்பலில் 37 பெண்களும் 32 சிறுவர்களும் இருப்பதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது.

"எல்லை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்ற தொனிப்பொருளில் அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து வெளியிட்டதாய் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலிய எல்லையில் இருந்து இருந்து 1cm தூரத்தில் ஒரு படகு மூழ்கி அகதிகள் இறந்து போனாலும் எங்களுக்கு கவலை இல்லை என்பது போலத்தான் உள்ளது அவரது கருத்து.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 64 அகதிகள் அடங்கிய படகு ஒன்று 3 நாட்களாய் அவுஸ்திரேலிய கடல் எல்லையை கடந்து கரையை வந்தடைந்து கடல் கொந்தழிப்பால் படகு பாறையுடன் மோதி சுக்குநூறாய் உடைந்து கண்முன்னே அவர்கள் செத்துப்போனார்கள்.அந்த படகின் வருகை பற்றி எல்லைக்காவல்ப்படையும் குடிவரவு திணைக்களமும் அறிந்திருந்தும் அவர்கள் கண்டும் காணாமலும் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இதே போன்ற ஒரு அவல நிலை இந்த இலங்கைத்தமிழ் அகதிகளுக்கும் நிகழ்ந்துவிடாமல் இருக்க அவுஸ்திரேலிய அரசு மனிதாபிமான அடிப்படையில் செயற்படவேண்டும்.

ஏனெனில் "மலேசிய விமானப்பயணிகள்" போல இவர்களும் "மனிதர்கள் தான்!!!"

 

-தமிழ்ப் பொடியன்-

podiyan@gmail.com
30/06/2014

Edited by தமிழ்ப்பொடியன்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் இவ்வளவு கஸ்டங்கள் இருந்தும் ஏன் ஈழத்தமிழர்கள் அங்கே போகவேண்டும். அவுஸ்ரேலியா ஒன்றும் இலங்கைக்கு அயல் நாடு அல்லவே? சொல்வது மிகவும் இலகு, ஆனால் வெளி நாட்டு அகதிகள் விவகாரம் சர்வதேச நாடுகளுக்கு எவ்வளவு பெரிய தலையிடியானது என்பதை நாங்களும் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். உண்மையான, மனிதாபிமான அடிப்படையில் அகதி அந்தஸ்த்து பெற உரிமையுடைய அகதிகள் நாட்டுக்குள் வந்து தஞ்சம் கோரும் மொத்த பேரில் மிக சொற்ப அளவானவர்களே என்பது தான் ஜதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மேற்குலகம் வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவது.. பிறகு அகதிகள் என்று கூச்சல் போடுவது.. எமது பிரச்சினையை விட மத்திய கிழக்குப் பிரச்சினை இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

அகதிகள் என்று கூச்சல் போடும் அவுஸ்திரேலியா பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாத (மறைமுகமாகவேனும்) கொள்கையை வைத்துள்ளதா? வாக்கு அரசியலுக்காக போடும் கூப்பாடு மட்டுமே இது. கிட்டத்தட்ட சிங்கள அரசியலுக்கு ஒப்பானது. யார் தமிழருக்கு அதிகமாக அடிக்கிறார்களோ அவர்களுக்கு வாக்கு என்பதுமாதிரி யார் அகதிகளுக்கு அதிகம் கொடுமை செய்கிறார்களோ அவர்களுக்கு அதிகம் வாக்கு.

கனடாவிலும் அகதிகள் வந்து இறங்குகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அது ஒரு பெரிய அரசியல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய அரசு இப்போதும் MH 370 ஐத் தேடுகிறது. அதற்கு காரணம் மனிதாபிமானமோ வேறு எந்தக் கட்டாயமுமோ அல்ல. போயிங் நிறுவனம் விமான இயந்திரங்களில் இருந்து வந்த PING தரவுகளில் இருந்து எதிர்வு கூறிய இரண்டு திசைகளில் ஒன்று அவுஸின் வான் எல்லைக்கு மிக அண்மையானதாகும். இப்படி ஒரு மிகப்பெரிய பயணிகள் விமானம் அவுஸின் வான் எல்லைக்கு அருகில் வந்திருந்தால் அவுஸின் தன்னியக்க  வான் மற்றும் கடல் பிரதேசக் கட்டுப்பாட்டு JORN (Jindalee Operational Radar Network ) பொறிமுறை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இப்படி எதுவுமே நடக்கவில்லை.  இந்த JORN ஒரு குசேலர் காலத்து OTHR தொழில்நுட்பம். இதையே அபிவிருத்தி செய்யறது எண்டு எமது DMO எக்கச்சக்கமாக செலவழித்து விட்டார்கள். இவ்வளவு செய்தும் இது சரிப்பட்டு வராது என்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறுபவர்களுக்கு, இல்லை இது நன்றாக வேலை செய்கிறது எனக் காட்டுவது தான் இந்த இந்தியக் கடலை உழுது கொண்டிருக்கும் அவுஸின் நோக்கம்.

முன்பு ஒருமுறையும் ஜெரால்டன் துறைமுகத்தினுள் அகதிகள் படகு ஒன்று எது வித பிரச்சனும் இல்லாமல் நுழைந்து விடவே பாதுகாப்பிலே மிககப்பெரிய ஓட்டை என்று ஓடுப்பட்டுத் திரிந்தார்கள்.

http://www.news.com.au/national/asylum-boat-carrying-72-sri-lankan-passengers-sails-into-geraldton/story-e6frfkp9-1226615986980

இவர்கள் வந்தது அநியாயம். பல தடவைகள் சொன்னது போல இவர்கள் ஒருபோதுமே அவுசினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவர்களை அவுஸ் அரசாங்கமோ கடற்படையோ ஒன்றுமே செய்யாது. படகில் இருப்பவர்கள் செய்மதித் தொலைபேசி வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது, இது திட்டமிட்ட ஆள்கடத்தல் நடவடிக்கை எனக்கூறி பேசாமல் விட்டுவிடுவார்கள். உயிர் தப்பிக் கரை சேர்ந்தால் மனுஸ் தீவிலே இவர்களது எதிர்கால கழியும் அல்லது மற்றைய அநேகர் போல இலங்கைக்கு விசேட விமானத்தில் அனுப்பி விடுவார்கள்.

http://www.immi.gov.au/allforms/foreign/1444itam.pdf

நீங்கள் சொல்லியிருப்பதை விட குடும்பத்தைக் கொண்டுவருவது மிகவும் கடினம்.

Family reunion setback for refugees who came by boat

Source
World News Radio
8 Jan 2014 - 6:08 PM  UPDATED 8 Jan 2014 - 7:10 PM
    


(Transcript from World News Australia Radio)

Refugees who arrived by boat will now find it even harder to bring family members to Australia under a directive issued by the Immigration Minister.

SBS has obtained a copy of an Immigration Department email notifying registered migration agents that refugees who arrived by boat will be given the lowest processing priority when they apply for family reunions.

The directive applies retrospectively to all permanent visa holders.

This report by Thea Cowie and Shalailah Medhora.

(Click on audio tab above to listen to this item)

The news is devastating for refugees like Abdul Karim Hekmat who is still hoping to save his extended family in Afghanistan and Pakistan.

"Why do you have to punish those people who are accepted as refugees and they live in the community? I still got family members to bring and obviously this is making it very harder to bring family members. I think it really closes doors to a lot of us who thought that this would be another way that we could have bring family members. And when I say closes it's really it's putting family members at risk back home."

Mr Hekmat came to Australia by boat in 2001 and gained a permanent protection visa in 2004.

He says it took another five long and stressful years for him to bring his mother, brother and two sisters to Australia through the humanitarian program.

"I was really under a lot of pressure when I was trying to get my family here and I couldn't manage it and it was slow. I was calling them every day and I was really worried about their safety, about their future. And my sisters obviously with the Taliban were not able to go to school and get education and I was really under pressure."

Under the changes to family stream visa applications, boat arrivals will still be able to sponsor family members to Australia, but their applicaions will be given the lowest processing priority.

According to the directive, processing could take a number of years.

It says the changes will apply to all current and future family stream visa applications.

Since 2012 changes to family reunion policy, many refugees have applied for their families to come to Australia under the family stream visa, rather than the Special Humanitarian Program.

Due to a shortage of humanitarian places, the number of family stream places specifically for humanitarian entrants was boosted by four-thousand.

The Australian government told refugees applying for family stream places would be a quicker way to reunite their family.

Migration agent and refugee advocate Marion Le says now those people will be sent to the back of the queue.

"It doesn't matter if that application has been in for ten years and is almost finalised, it will have no further action until every other case all over the world has been actioned. And I'd say that means that anyone who came by boat whose case has not already been decided has no hope at all of having reunion with their family and their wives and their children for many many years to come, if at all."

Ms Le says as many as 30,000 refugees may be affected, some who have spent up to 20-thousand dollars lodging their applications and obtaining DNA tests, and health and security checks.

The Immigration Minister's directive says if sponsors decide to withdraw their applications that money will not be refunded.

Kevin Lane is the chief operating officer of the Migration Institute of Australia.

He says he'll be calling on the Immigration Minister to review the decision.

"As the Migration Institute of Australia representing migration agents we will certainly be making representations about this to the Minister. Especially in regards to the retrospectivity of this direction. I've had lots of calls from members who are very concerned about this for their clients who have already lodged applications."

The directive applies to all permanent visa holders until they obtain Australian citizenship.

Elaine Pearson from Human Rights Watch says the new policy may violate international human rights law.

"Quite clearly under the Convention of the Rights of the Child there is a priority for family reunification. That applications are dealt with in a humane, positive and expeditious manner. I also think it's somewhat problematic in terms of Article 31 of the Refugee Convention because under that provision of the Refugee Convention people should not be penalised on their mode of arrival, whether they come by boat or whether they come by plane."

And Geoff McPherson from Canberra Refugee Support says it's a further blow to some of Australia's most vulnerable people.

"Telling people that we agree that they're a refugee but we don't agree that they can have their family reunion application processed for years or indefinitely is obviously going to add to the wait that we already see where people suffer mental illness and distress. Why we keep on ratchetting up that level of distress is something that only our national leaders can explain."

In a statement to SBS, Immigration Minister Scott Morrison says the change is consistent with the Coalition's long-held position that people he terms "Illegal Maritime Arrivals" should not have their claims prioritised over people who come to Australian legitimately.

He says the policy will ensure the limited number of family reunion places will not be take by boat arrivals at the expense of others.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா malasiyan விமானத்தை தேட முக்கிய காரணம் மலேசியாவில் இருந்து வரும் அகதிகளை நிறுத்த மலேசியா அரசின் ஒத்துழைப்பை வழங்க

மற்றும் படி அகதிகள் வருகையில் Australia அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் மிகச்செரியானவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அகதிகள் பிரச்சனை ஒருபுறமிருக்க......
 
மலேசியன் விமானப்பிரச்சனையை தயவுசெய்து அகதிகள் பிரச்சனையுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள். அந்தப்பிரச்சனைக்கும் அகதிகள் பிரச்சனைக்கும் எட்டாப்பொருத்தம்.
  • கருத்துக்கள உறவுகள்

அது உங்கட கருத்து ஆனா ஆஸ்திரேலியா விழுந்த விமானத்துக்கு மலேசியாவிற்கு தேடலுக்கு விழுந்தடித்து உதவி செய்வதற்கு முக்கிய காரணமே அது வாயிலாக தான் இலங்கை அகதிகள் இந்தோனேசிய பக்கம் போய் இங்கே வருகின்றார்கள் மற்றது இங்கே வருகின்ற அகதிகளை மலேசிய பக்கம் சிலரை திருப்பி விடுறா ஐடியா வும் இருக்கு சோ......

But Mr Abbott refused to say whether the boat was being taken back to Sri Lanka.

:D

Refugee advocates say they have not heard from the Tamil asylum seekers since Saturday and they believe Australia is co-ordinating with the Sri Lankan navy to tow them back.

தங்களுக்கு இந்தியாவில் கிடைத்த பாதுகாப்பான வாழ்க்கையையும் விட்டுவிட்டு மற்றவர்களின் சொல் கேட்டு படகில் வந்தால் நேர sari lanka தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளை அகற்ற அடக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது போயும் போயும் மலேசிய விமானப்பிரச்சனையா சந்தர்ப்பமாக வந்தது?

நல்ல காமெடி.

இதே போன்று இன்னும் சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ற கொடுத்து தான் ஒன்றை பெற முடியும் ஆஸ்திரேலியா மலேசிய உறவுகள் பெரிதாக இருந்ததில்லை என்று ஜெர்மனி யில் இருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் :D

அகதிகளை ஏற்றுக்கொள்ளு மாறு மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா அரசுகளுக்கு இடையில் பேச்சுவாரத்தை நடைபெற்றதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா க்கு வரும் அகதிகளை கட்டுப்படுத்த 1000 வழிகள் இருந்தும் மலேசியாவிடம் Australia உதவினாடியதும் உங்கள் பொது அறிவு மூளைக்கு எட்டிவிட வாய்ப்புகள் இல்லை தான்.....

அந்த நேரம் பாத்து மலேசியா விமானம் விழுந்ததும் மலேசிய அரசு ஆஸ்திரேலியாவிடம் விமானத்தை தேடுமாறு கேட்டுக்கொண்டதும் இதை வைத்து வேறு வழியில் இன்னுமொரு உதவியை பெறமுடியும் என்று ஆஸ்திரேலியா அதிகாரிகள் நினைத்ததும் உங்கள் சிற்றறிவிற்கு எட்டிவிட வாய்ப்பில்லை தான் என்ன செய்ய அந்தோபரிதாபம் என்று அனுதாபப்படுவதை தவிர.....

  • கருத்துக்கள உறவுகள்

எனது கோபம் முழுவதும் இந்தியாவுடன் தான்!

 

இதில் உண்மையான குற்றவாளி, இந்தியாவேயன்றி அவுஸ்திரேலியாவில்லை என்பது எனது கருத்து!

 

நாங்கள் அனைவருமே வேறு, வேறு காலகட்டங்களில் வேறு, வேறு நாடுகளில் புகலிடம் தேடியவர்கள்! அந்தந்த நாடுகள், அகதி அந்தஸ்துக் கோரியவர்களுக்குரிய, தங்கள் கடப்பாடுகளை, தங்கள் நாட்டின் பொதுசன எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் நிறைவேற்றியுள்ளன!

 

எம்மவர் கூறிய பொய்கள், புனைகதைகள், அனைத்தையுமே ஒரு பக்கம் ஒதுக்கி விட்டுத் தமிழர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும் என்ற காரணத்துக்காகவே, பல வேளைகளில் மனந்திறந்து கருத்துக்கூறுவதில்லை! 

 

பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் எமது பிரச்சனையுடன் நேரடித் தொடர்புள்ளவை மட்டுமன்றி, அவற்றுக்கு மூலகாரணமாகவுள்ள நாடுகளாகும்!

 

இதில் இந்தியா தமிழருக்காக, புகலிடம் கோரியவர்களுக்காக, ஐக்கியநாடுகளின் சாசனத்தில் சொல்லப்பட்டபடி எதனைச் செய்துள்ளது?

 

பல வருடங்களுக்குத் தமிழர்களை அகதி முகாம்களில் முடக்குவதே சர்வதேச நடைமுறைகளுக்கு முரணானது!

 

இந்தியாவின் அகதிக்கொள்கையின் விளைவு என்று நாம் கூறிவிட்டு நடந்து செல்ல முடியாது!

 

ஏனெனில் திபெத்திய அகதிகளை, நன்றாகப் பராமரிக்க  இந்தியாவுக்குத் தெரிந்திருக்கின்றது! :o

 

ஈழத் தமிழர் என்று வரும்போது மட்டுமே இந்த மாற்றாந்தாய் மனப்பாங்கு இந்தியாவுக்கு எதற்காக வருகின்றது?

 

அவுஸ்திரேலியா போன்ற சர்வ தேச நாடுகள், இந்த அகதிகளை ஏற்றுக்கொள்ளும்படி இந்தியாவை வற்புறுத்த வேண்டும்!

 

இந்தப் படகு விடயத்தில் மட்டும், எனது கருத்தானது, சர்வதேச நாடுகள், இந்தியாவுக்கு அதனது கடப்பாடுகளை நினைவு படுத்தி, இந்தியாவினது மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளைக் கண்டித்துக் காட்டமான அறிக்கை விட்டு, இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்ற கொடுத்து தான் ஒன்றை பெற முடியும் ஆஸ்திரேலியா மலேசிய உறவுகள் பெரிதாக இருந்ததில்லை என்று ஜெர்மனி யில் இருக்கும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் :D

அகதிகளை ஏற்றுக்கொள்ளு மாறு மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா அரசுகளுக்கு இடையில் பேச்சுவாரத்தை நடைபெற்றதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் :D

 

தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.

ஆனால் உலகத்திற்கே மர்மமான மலேசிய விமானத்தேடல் எனும் அடிப்படையில் பூச்சாண்டித்தனம்  காட்டும் அவசியம் அவுஸ்ரேலியா கண்டத்திற்கு தேவைப்படாது. அந்தளவிற்கு சிறுமைத்தனம் உள்ள நாடுமல்ல. அவசியமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

BOATLOADS of asylum-seekers who have failed to make it to Australia are being intercepted trying to return to Malaysia from Indonesia, says the head of Malaysia’s border command.

Mohd Amdan Kurish, director-general of the Malaysian Maritime Enforcement Agency, said Australia’s crackdown on boatpeople was having a dramatic impact further up the people-smuggling chain, in Malaysia.

மலேசிய விமானத்தை தேடுவதற்கு ஆஸ்திரேலியா செலவு செய்திருக்கும் தொகை 600 மில்லியன் டாலர் களுக்கும் மேல் ..........ஆனால் மலேசியாவை பயன்படுத்தி வரும் அகதிகள் தொகையோ பணத்தை விட அரசியல் தலையிடி.......ஆஸ்திரேலியா க்கு உடனடி தேவை மலேசியவுடன் நல்லுறவு அதை இதன் மூலம் சாதித்தார்கள் அவளாவே.....

They come to Australia by boat because they can’t come by plane. The durable myth that they come by boat because they are rich is not only false – it is logically absurd. Why would a rich person pay to risk their life at sea? Typically, these people travel to Malaysia or Indonesia

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

600 மில்லியனை மலேசியா அழுதழுது அவுஸ்ரேலியாவுற்கு கட்டியே ஆகவேண்டும். இதுவும் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவுஸ்ரேலியா ஒன்றும் புண்ணியத்தில் கடலுக்குள் மல்லுக்கட்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய ஊடாக வரும் கள்ள தோணி அகதிகளுக்கு பில்லியன் கண்ணக்கில் செலவளிப்பதை விட மலேசிய விமானத்தை தேட சில நூறு மில்லியன் களை ஒதுக்கி அதனூடாக மலேசிய அரசுடன் நல்ல உறவை பெற்று அதன்மூலம் அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த முடிந்தால் அந்த அகதிகளை திரும்ப ஏற்றுக்கொள்ள வைக்க முடியும் என்ற மிகப்பெரிய அரசியல் காரணி இருப்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் பட் ஆஸ்திரேலியா மக்களுக்கு நன்றாகவே தெரியும்

வெள்ளைக்காரன் எண்டா சும்மாவா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி. :D

உங்கள் படிப்பு பட்டதாரி நிலவரங்கள் எப்படி போகின்றது? :)

எப்போது நாடு திருப்பப்போகின்றீர்கள்? :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு 5 years ல Sri Lanka ல நிப்பன் அங்க சந்திக்கலாம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் அந்த மட்டிலைதான் போவன்..... :)

அப்ப சந்திப்பம்.........

அப்ப தொண்டமனாற்றிலை மலேசியன் விமானத்தை இரண்டுபேரும் சேர்ந்து தேடுவம். :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதான் சாட்டெண்டு கடலுக்க என்ன மூழ்கடிக்கவா நான் மாட்டன்.....:(:D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் குறித்து கருத்து வெளியிட முடியாது – டோனி அப்போட்

 

 

australia-tony-abbott_CI.jpg

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் குறித்து கருத்து வெளியிட முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பினை சென்றடைந்ததாகவும், அங்கிருந்து அவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் புகலிடக் கோரிக்கையாளர் உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இந்த விவகாரம் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை தடுக்கும் தமது கொள்கை வெற்றியளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆறு மாத காலமாக புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கவில்லை என தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையில் இலங்கைக் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் மீட்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கைத் தமிழர்கள் 153 பேரைக் கொண்ட படகு ஒன்றும், 50 புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்றும் கிறிஸ்மஸ் தீவுகளை அண்டிய கடற்பரப்பை சென்றடைந்ததாகவும், படகு ஒன்று பழுதடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படகுகளை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108781/language/ta-IN/-----.aspx#.U7IogBSO654.facebook

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.