Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோந்துப் படகுகள கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு

Featured Replies

DSC_1540.jpg
அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படைக்கு ரோந்துப் படகுகளை நன்கொடையாக கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸனும் பங்கேற்றனர்.(படங்கள்:பிரதீப் பத்திரன)
DSC_1405.jpg

DSC_1409.jpg

DSC_1411(1).jpg

DSC_1426.jpg

DSC_1431.jpg

DSC_1462.jpg

DSC_1492.jpg

DSC_1509.jpg

DSC_1536.jpg

DSC_1570.jpg

DSC_1584.jpg

http://tamil.dailymirror.lk/--main/117372-2014-07-09-09-03-28.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசில அவுஸ்ரேலிய தமிழர்களுக்கு நல்ல செய்தி....... :D

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படைக்கு ரோந்துப் படகுகளை நன்கொடையாக கையளிக்கும்..

மக்களின் வரிப்பணம் நன்கொடையாகப் போகுது..  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வில் பல அவுஸ்ரேலிய தமிழ்தேசிய சிங்கங்கள் அல்லது புலிகள் கலந்திருக்கணுமே அந்த படம் எங்கே? :)

அதுசரி நாம் எவ்வளவு தான் "நமது பிரதமர்" எண்டு மூச்சுக்கு 300 தரம் சொன்னாலும் அவனை பொறுத்தவரை எல்லோரும் bloody south Asian தான்:)

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இந்தக் கப்பல்கள் ராணுவ தேவைக்குப் பயன்படாது என்று அவுஸ்த்திரேலியப் பிரதமர் கூறியிருந்தார். ஆனால் கப்பலின் முன்புறத்தில் எதுக்கு இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்டிருக்கிறது ? மீனவர்களைச் சுடவா??

கோஷான்,

இங்கே அவுஸ்த்திரேலியாவில் இந்தியர்கள் மற்றும் எங்களைக் கூப்பிடுவதற்கென்று ஒரு தனி விஷேட பெயரே வைத்திருக்கிறார்கள். பலமுறை வீதியால் செல்லும்போது என்னையும் அன்போடு அழைத்திருக்கிறார்கள்.  நிர்வாகம் நிச்சயம் இதைத் தூக்கும் என்று தெரியும், என்றாலும் இணைத்து விடுகிறேன்,

Fu.... Black   Cu.. !

 இது தமிழ் ஆஸிப் புலிகளுக்கும் நன்கு தெரியும். பாவம் என்ன செய்வது, இவர்கள் எவ்வளவுதான் தம்மை வெள்ளையடிக்கப் பார்த்தாலும், அவனைப் பொறுத்தவரையில் நாம் எப்போதுமே F B C தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் எதுக்கு இங்க இருக்குறீங்க மறுபடியும் மூட்டை முடிசுகளோடு நடைய கட்டலாமே?

நானும் இத்தனை வருடம் இங்க இருக்கிறன் என்ன அப்பிடி யாருமே கூப்பிட்டதில்ல என்று கவலையா இருக்கு.....

நிற்க இந்த நிறவெறி ஜாதி வெறி மத வெறி எல்லா நாட்டிலையும் தான் இருக்கு

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை அனுப்பும் முக்கியமான ஏஜென்ட் நமால் ராஜபக்சதான். இந்தப் படகிலேயே அவர்கள் ஆட்களை அனுப்பவும் வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

'கல்கத்தாவுக்கு' அனுப்ப வேண்டியதுகளை, அவுஸ் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குகின்றது!

அதைத் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றது சிங்களம்! :D

  2616732-3x2-940x627.jpg

Fireworks explode off the decommissioned HMAS Adelaide as it sinks
  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் எதுக்கு இங்க இருக்குறீங்க மறுபடியும் மூட்டை முடிசுகளோடு நடைய கட்டலாமே?

நானும் இத்தனை வருடம் இங்க இருக்கிறன் என்ன அப்பிடி யாருமே கூப்பிட்டதில்ல என்று கவலையா இருக்கு.....

நிற்க இந்த நிறவெறி ஜாதி வெறி மத வெறி எல்லா நாட்டிலையும் தான் இருக்கு

திரும்பிப் போக முடியுமென்றால் எப்பவோ நான் போயிருப்பேன். நீங்கள் சொல்லமட்டும் காத்திருக்கவேண்டியதில்லை. அகதிகள் இங்கு வருவதன் காரணமே அங்கே இருக்கமுடியாதென்பதுதான்.

உங்களை யாரும் இதுவரை கூப்பிடவில்லை என்பதற்காக அவுஸ்த்திரேலியர்கள் இனவெறியர்கள் இல்லையென்று ஆகிவிடுமா. உங்களை விடுங்கள், இங்கே பிறந்து வளர்ந்த எனது உறவினர்களின் பிள்ளைகள், பேச்சுவழக்கில் ஆஸிகளுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு கிடையாது. ஆனால் கறுப்புத்தோல். அவர்களே தாம் நடத்தப்படும் முறை குறித்து பேசுகிறார்கள். ஆனால் வித்தியாசம் என்னவென்றால், எம்மைப்போல அவர்கள் வாய்மூடி மெளனிகளாக இருப்பதில்லை, வெள்ளளைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

அண்மையில்க்கூட சிட்னியிலிருந்து நியூகாசலுக்குச் சென்ற புகையிரத்தத்தில் உங்கள் வெள்ளையினப் பெண்மணியொருத்தி வேற்றினத்தவர் குடும்பம் ஒன்றுடன் நடந்துகொண்டவிதம் உலகச் செய்தி நிறுவனங்களில் விவாதிக்கப்பட்டது. தேவையென்றால் சொல்லுங்கள். இணைத்துவிடுகிறேன். எனக்குத் தெரிந்த எத்தனையோ பேருக்கு இதேமாதிரி இனவெறித் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. மெல்பேர்ன், சிட்னியென்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டது, தாக்கப்பட்டது நினைவிலிருக்கலாம். பொதுவாக இந்தியர்களையும் எங்களையும் அவன் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எல்லோருமே அவனைப் பொறுத்தவரையில் Fu.... Black CU... தான். நீங்கள் இப்படியொரு பெயரைக் கேள்விப்பட்டதில்லை என்று சொல்லுங்கள் ????

ஜாதிவெறி, மதவெறி, இனவெறி எல்லா நாட்டிலையும்தான் இருக்கு. ஆனால் சிறிலங்காவில் அதிகமாக இருப்பதால்த்தான் இதுவரை 200,000 தமிழர்களைக் கொன்று தள்ளியிருக்கிறது. நான் இங்கு வந்ததற்குக் கூட அதுதான் காரணம். ஆனால் நீங்களும் உங்கள் பிரதமரும் சிறிலங்கா அமைதியின் பூங்கா என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்வதைத்தான் சகிக்க முடியவில்லை.

அவுஸ்த்திரேலிய வெள்ளையினத்தவர்கள் எவ்வளவு இனவாதிகள் என்பதற்கான சிறு பதிவு,

http://indymedia.org.au/2010/01/21/let%E2%80%99s-not-deny-the-evidence-that-australia-has-a-problem-with-racism

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அதான் சொல்லிட்டமே...ஜாதி வெறி நிற வெறி மத வெறி இலங்கையில் யாழ் தமிழரிடம் தான் அதிகம் இருக்கு ...அதுவும் பிரதேச வேறுபாடு சொல்லி வேலையில்ல....நீங்க பிறந்த ஊரே அப்பிடி இருக்கும் போது எதுக்கு வாழ வந்த ஊற குறை சொல்லுறீங்க....

வரே வா, ஆக, இலங்கையில் பிரச்சினைக்குக் காரணத்தை மிகவும் தெளிவாக கண்டுபிடித்திருக்கிறீர்கள். அதற்கான முழுக் காரணமும் யாழ்ப்பாணத்துத் தமிழன். ஏனென்றால், அவனிடம்தான் எல்லோரையும் விட இனவெறியும், ஜாதிவெறியும், மதவெறியும் இருக்கு. அப்படித்தானே. அதுசரி, ஏன் இதுவரை நீங்கள் இதுபற்றிப் பேசியதேயில்லை ? ஏன் புலிகளது போராட்டம் பிழயென்று சொல்லவில்லை? விசிலடிச்சான் குஞ்சுகள் போலக் கூத்தாடிவிட்டு இப்போது ஞானோதயம் வந்ததுபோலப் பேசுகிறீர்கள் ? உங்களுக்குத் தேவையென்றால் தேசியம் பேசுவீர்கள், தேவையில்லாதபோது சந்தர்ப்பத்து ஏற்றதுபோல கட்சியும் மாறுவீர்கள். புலம்பெயர் புலித்தேசியம் என்று சரியாகத்தான் சொன்னார்கள்.

நான் வாழவந்த ஊரைக் குறை சொல்லவில்லை. எனென்றால், இந்தக் குறையெல்லாம் இருக்குமென்றும் தெரிந்துகொண்டுதான் இங்கு வந்தேன், வந்தபிறகு குறைசொல்லுவதில் அர்த்தமில்லை. ஆனால், உங்களை யாரும் இனரீதியாக அழைக்கவில்லை என்று சொன்னீர்கள், அதற்காகத்தான் எழுதினேன். ஏனென்றால் எனக்கு அப்படி நடந்திருக்கிறது.

எனக்கு பிரச்சினை நான் பற்றியதல்ல, அகதிகள் பற்றியது. கொலைக்களத்துக்கே அவர்களைத் திருப்பியனுப்ப நீங்களும் உங்கள் வெள்ளையினப் பிரபுவும் அந்தக் கொலைக் களத்தை அமைதிப் பூங்காவென்று பூசி மெழுகுவது. அவ்வளவுதான்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி அனுப்ப படும் அகதிகள் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக எந்த விதமான ஆதாரமும் இல்லை....அப்பிடியே உயிராபத்து இருந்தாலும் இந்தியாவை தாண்டி Australia க்கு வர வேண்டிய அவசியமே இல்லை.....இங்கே வந்தவர்கள் கள்ள கேஸ் குடுக்க பொய்களை எல்லாம் எப்பிடி எழுதி தள்ளுகின்றார்கள் என்று சம்மந்தப்படவர்களோடு வேலை செய்வதால் எனக்கு தெரியும் அதுவும் இவன்களுக்காக ஸ்டோரி create பண்ணி எழுத பெரிய ஒரு கதாசிரியராக இருக்க வேண்டும்.....

மொதல்ல எங்க முதுகுல இருக்கிற அழுக்க எடுத்து விட்டு பிறகு அடுத்தவன் அழுக்க பற்றி குறை சொல்லுவம்....

கள்ள படகு அகதிகளுக்கும் தமிழ் தேசியத்துக்கும் சம்மந்தமே இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

Wow.. இந்த மனிசிக்கு ஏதாவது நடந்ததா? கனடாவில் போன வருடம் என நினைக்கிறேன்.. ஒரு ஃபிலிப்பினோவை "Are you fresh off the boat?" என்று கேட்ட கடை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

*எழுத்துப்பிழை*

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி அனுப்ப படும் அகதிகள் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக எந்த விதமான ஆதாரமும் இல்லை....அப்பிடியே உயிராபத்து இருந்தாலும் இந்தியாவை தாண்டி Australia க்கு வர வேண்டிய அவசியமே இல்லை.....இங்கே வந்தவர்கள் கள்ள கேஸ் குடுக்க பொய்களை எல்லாம் எப்பிடி எழுதி தள்ளுகின்றார்கள் என்று சம்மந்தப்படவர்களோடு வேலை செய்வதால் எனக்கு தெரியும் அதுவும் இவன்களுக்காக ஸ்டோரி create பண்ணி எழுத பெரிய ஒரு கதாசிரியராக இருக்க வேண்டும்.....

மொதல்ல எங்க முதுகுல இருக்கிற அழுக்க எடுத்து விட்டு பிறகு அடுத்தவன் அழுக்க பற்றி குறை சொல்லுவம்....

கள்ள படகு அகதிகளுக்கும் தமிழ் தேசியத்துக்கும் சம்மந்தமே இல்லை....

ஏன், நீங்கள் போய்ப் பார்த்தீர்களா?? திருப்பியனுப்ப பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்று அரசாங்கம் சொல்வதைத்தானே இங்கு ஒப்புவிக்கிறீர்கள். நீங்கள் எப்போது சிங்கள அரசாங்கத்தின் உத்தியோக பூர்வப் பேச்சாளராக மாறினீர்கள் ? 2009 முள்ளிவாய்க்காலில் ஒரு சிவிலியனும் கொல்லப்படவில்லை, தாம் நடத்தியது மனிதாபிமான மக்கள் மீட்பு நடவடிக்கை என்றும் அவன் சொல்கிறான், அதையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அன்று அப்படிச் சொன்னவந்தான் இன்று சிறிலங்காவில் அமைது தவழ்கிறது, தமிழருக்கு எந்தப் பிரச்சினையுமில்லை என்று சொல்கிறான். அதையும் அப்படியே வேதவாக்கு என்று ஏற்றுக்கொள்கிறீர்கள், உங்கள் வாதத்திற்குத் தேவையென்றால் நீங்கள் எவ்வளவுக்கும் தாழ்ந்து எழுதுவீர்கள் என்பதைக் கண்டுகொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பி அனுப்ப படும் அகதிகள் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக எந்த விதமான ஆதாரமும் இல்லை....அப்பிடியே உயிராபத்து இருந்தாலும் இந்தியாவை தாண்டி Australia க்கு வர வேண்டிய அவசியமே இல்லை.....இங்கே வந்தவர்கள் கள்ள கேஸ் குடுக்க பொய்களை எல்லாம் எப்பிடி எழுதி தள்ளுகின்றார்கள் என்று சம்மந்தப்படவர்களோடு வேலை செய்வதால் எனக்கு தெரியும் அதுவும் இவன்களுக்காக ஸ்டோரி create பண்ணி எழுத பெரிய ஒரு கதாசிரியராக இருக்க வேண்டும்.....

மொதல்ல எங்க முதுகுல இருக்கிற அழுக்க எடுத்து விட்டு பிறகு அடுத்தவன் அழுக்க பற்றி குறை சொல்லுவம்....

கள்ள படகு அகதிகளுக்கும் தமிழ் தேசியத்துக்கும் சம்மந்தமே இல்லை....

கள்ளப்படகு அகதி, நல்ல படகு அகதி என்று இரண்டில்லை. ஒன்றுதான். அகதி. அவ்வள்வுதான்.

தமிழ்த்தேசியம் என்பது உங்களைப் பொறுத்தவரையில் புலியடிக்கும்போது பியரை அடித்துவிட்டு வீரம்பேசுவதென்று நீங்கள் நினைத்தால், அந்தோ பரிதாபம். அப்படியென்றால் நீங்களெல்லாம் இனித் தேசியவாதிகளாக இருக்க முடியாது.

தமிழனது நீதிக்கான போராட்டமும், அதனை முன்னெடுக்க இயங்குபொருளாக இருப்பதும்தான் தமிழ்த் தேசியம். அகதிகள் என்று வருவோர் கூட தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்போது, அகதிகளுக்கும் தேசியத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள் ??

அப்படியென்றால், எதற்காக "அகதிகள் இங்கே வந்தால் எமது நிலம் முற்றாகப் பறிபோய்விடும், ஆகவே அங்கிருந்து போராடி, நிலத்தைத் தக்கவைக்கட்டும்" என்று எழுதினீர்கள் ? அது என்ன தேசியம்? புலம்பெயர் தேசியமா?

ரகு...நான் கண்ட வரை ஒரு 10% மானவர்கள் நீங்கள் சொல்வது போல் கடுப்பாக தான் இருக்கிறார்கள்....மிகுதியானவர்கள் அதை வெளிகாட்டுவதில்லை.. :)........ஆனால் இனி வெள்ளை எம்மை எவ்வளவு தூற்றினாலும் கலவலைப்பட தேவையில்லை....ஏனென்றால் அவுஸ் முழுக்க சீனர்களாலும் இந்தியர்களாலும் நிரம்பி வழிகிறது... :) எல்லா "pizza hut"களும் இந்தியர்களாலும்...மற்றைய எல்லா சிறு வியாபார தாபனங்களும் சீனர்கலாளுமே வாங்கப்பட்டு நடக்கின்றன...வெள்ளைகள் திரும்பியும் தோட்டம் செய்ய போக வேண்டியது தான் :) (அவையையும் சீனர்கள் வாங்க வெளிகிட்டு விட்டார்கள்)...ஆகவே வெள்ளைகள் தங்களது இயலாமையிலேயே இப்படி செய்கிறார்கள் என்று எடுக்க வேண்டியது தான்.....

  • கருத்துக்கள உறவுகள்

Wow.. இந்த மனிசிக்கு ஏதாவது நடந்ததா? கனடாவில் போன வருடம் என நினைக்கிறேன்.. ஒரு ஃபிலிப்பினோவை "Are you fresh of the boat?" என்று கேட்ட கடை ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இனரீதியாக ஒருவரை தூற்றியதற்காக வழக்குப் போடப்பட்டிருக்கிறதென்று கேள்விப்பட்டேன். என்ன நடந்ததென்று தெரியவில்லை. பொதுவாக இப்படியானவை சிலமணிநேர  Community Service உடன் தள்ளுபடியாகிவிடும்.

இசை: அந்த பெண் போலீசாரால் காது செய்யப்பட்டார்...வானொலி தொலைகாட்சி ஊடகங்களில் அவரின் செயலுக்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்தார்கள்....இங்கே பொது வாகனங்களில் அடிகடி இப்படி நடப்பது தான்...ஆனால் பெரும்பாலானவர்கள் "அன்பாக" கதைப்பார்கள்.....ஆகவே அவுஸை முழு இனவெறி நாடு என்று சொல்ல முடியாது...கிட்டதட்ட கனடாவுக்கு சமன்..தேவைஎன்றால் ஒரு படி கீழே...ஆனால் இடைவெளி அதிகம் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

ரகு...நான் கண்ட வரை ஒரு 10% மானவர்கள் நீங்கள் சொல்வது போல் கடுப்பாக தான் இருக்கிறார்கள்....மிகுதியானவர்கள் அதை வெளிகாட்டுவதில்லை.. :)........ஆனால் இனி வெள்ளை எம்மை எவ்வளவு தூற்றினாலும் கலவலைப்பட தேவையில்லை....ஏனென்றால் அவுஸ் முழுக்க சீனர்களாலும் இந்தியர்களாலும் நிரம்பி வழிகிறது... :) எல்லா "pizza hut"களும் இந்தியர்களாலும்...மற்றைய எல்லா சிறு வியாபார தாபனங்களும் சீனர்கலாளுமே வாங்கப்பட்டு நடக்கின்றன...வெள்ளைகள் திரும்பியும் தோட்டம் செய்ய போக வேண்டியது தான் :) (அவையையும் சீனர்கள் வாங்க வெளிகிட்டு விட்டார்கள்)...ஆகவே வெள்ளைகள் தங்களது இயலாமையிலேயே இப்படி செய்கிறார்கள் என்று எடுக்க வேண்டியது தான்.....

நாந்தான்,

நீங்கள் சொல்வது புரிகிறது. இவர்களின் கொட்டம் அடங்கவாவது வேற்றினத்தவர்கள் அவுஸ்த்திரேலியாவை ஆள வேண்டும். அதற்கு முதற்படியாக தென் அவுஸ்த்திரேலிய ஆளுநராக ஒரு ஆசிய நாட்டவர் (வியட்நாமியர்) சென்றவாரம் நியமிக்கப்பட்டார். கடந்த லேபர் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சரும் இன்றைய எதிர்க் கட்சியின் உபதலைவரும் ஒரு சீனப் பெண்மணி.

இங்கே ஒருவர் சகட்டுமேனிக்கு டோனி அபோட்டிற்கு வக்காலத்து வாங்குவதுதான் எரிச்சலாக இருக்கிறது. தான் செய்வது என்னவென்று தெரிந்துகொண்டே ஒருவரால் இப்படி நடிக்கமுடியுமா என்று கேட்கத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல வெள்ளைகள் முட்டாள்கள் என்று எப்போ நினைக்கிறதா நிறுத்திரீங்கலோ அப்போ தான் உங்களுக்கு எல்லாம் விடிவு.....சீனார்கள் வாங்கி குவித்தாலும் ஆஸ்திரேலியா,அமெரிக்கா ,Japan நாடுகள் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ரகசியமான பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.....

எது, இலங்கையில் இப்போது ஈடுபடுவதுபோலவா?? அட சும்மா போவீங்களா?? எரிச்சலைக் கிளப்பிக்கிட்டு !

சுண்டல் சொன்னது வருபவர்கள் எல்லாரும் அகதிகள் இல்லை என்று ..அகதிகள் போர்வையில் வேலி கண்டாயத்துகூடாக எல்லாரும் வருகிறார்கள் என்று....சுண்டல் சொல்வதிலும் நியாயம் உள்ளது...காரணம் அவுத்திரேலியா வருடத்துக்கு கிட்டத்தட்ட 250000 வெளிநாட்டினரை (அகதிகள் அல்லாத குடியேற்ற வாசிகள்) அனுமதிக்கிறது....இப்படி அகதிகளாக மக்கள் வரவெளிகிட்டால் இப்படி வரும் குடியேற்றவாசிகளை கட்டுபடுத்த வேண்டும்...மற்றும் அகதிகளுக்கும் செலவு செய்யவேண்டும்...அதால் அவுசுக்கு ஒரு வருமானமும் இல்லை....மற்றது இப்படி முறையாக வரும் குடியேற்றவாசிகளை கட்டுபடுத்த வெளிகிட்டால்....யார் முதல் பாதிக்கபடுவார்கள்? இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து விண்ணப்பித்து விட்டு காத்திருப்பவர்களே முதலில் பாதிக்கபடுவார்கள்.. (அவுஸ் ஒரு நாளும் ஐரோப்பாவிலிருந்து வருபவர்களை குறைக்க மாட்டாது)...ஆகவே சுண்டலை தாளிப்பதில் பிரயோசினம் இல்லை..சுண்டல் இதை விளங்கினாலும் தனது நிலையை வீம்புக்கு பிடித்திருகிறது என்றும் சொல்லலாம் (இந்த களத்தில் இருக்கும் தேசிய மாற்றுகருத்தாளர்கள் போல :) )

முடியல்ல வெள்ளைகள் முட்டாள்கள் என்று எப்போ நினைக்கிறதா நிறுத்திரீங்கலோ அப்போ தான் உங்களுக்கு எல்லாம் விடிவு.....சீனார்கள் வாங்கி குவித்தாலும் ஆஸ்திரேலியா,அமெரிக்கா ,Japan நாடுகள் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ரகசியமான பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.....

வெள்ளைகள் முட்டாள்களோ இல்லையோ...வர வர அவர்களின் உலகின் மீதான ஆதிக்க பிடி தளர்கிறது....அதுவே நியாயமுமாகும் உலகை எப்போதும் அழிக்கும் வேலையை வெள்ளைகளே தங்களின் பேராசையால் நடத்துகிறார்கள்........உலகை சீனாவும் இந்தியாவுமே கொண்டு நடத்த வேண்டும்...காரணம் அவர்கள் தான் உலகுக்கு எபோதுமே நல்ல நல்ல போதனைகளை காலம் காலமாக கொடுத்தார்கள்...இன்னும் கொடுக்கிறார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சொன்னது வருபவர்கள் எல்லாரும் அகதிகள் இல்லை என்று ..அகதிகள் போர்வையில் வேலி கண்டாயத்துகூடாக எல்லாரும் வருகிறார்கள் என்று....சுண்டல் சொல்வதிலும் நியாயம் உள்ளது...காரணம் அவுத்திரேலியா வருடத்துக்கு கிட்டத்தட்ட 250000 வெளிநாட்டினரை (அகதிகள் அல்லாத குடியேற்ற வாசிகள்) அனுமதிக்கிறது....இப்படி அகதிகளாக மக்கள் வரவெளிகிட்டால் இப்படி வரும் குடியேற்றவாசிகளை கட்டுபடுத்த வேண்டும்...மற்றும் அகதிகளுக்கும் செலவு செய்யவேண்டும்...அதால் அவுசுக்கு ஒரு வருமானமும் இல்லை....மற்றது இப்படி முறையாக வரும் குடியேற்றவாசிகளை கட்டுபடுத்த வெளிகிட்டால்....யார் முதல் பாதிக்கபடுவார்கள்? இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து விண்ணப்பித்து விட்டு காத்திருப்பவர்களே முதலில் பாதிக்கபடுவார்கள்.. (அவுஸ் ஒரு நாளும் ஐரோப்பாவிலிருந்து வருபவர்களை குறைக்க மாட்டாது)...ஆகவே சுண்டலை தாளிப்பதில் பிரயோசினம் இல்லை..சுண்டல் இதை விளங்கினாலும் தனது நிலையை வீம்புக்கு பிடித்திருகிறது என்றும் சொல்லலாம் (இந்த களத்தில் இருக்கும் தேசிய மாற்றுகருத்தாளர்கள் போல :) )

வருபவர்கள் எல்லோரும் உண்மையான அகதிகள் இல்லையென்பதை ஒத்துக்கொள்கிறேன். அதற்காக எல்லோரையும் சரியாக விசாரிக்காமல் திருப்பியனுப்புவது தவறு என்பதுதான் எனது வாதம்.

சிங்களவர்கள் வருகிறார்கள். வருபவர்கள் முன்னர் புலிகளால் பிரச்சினை என்றார்கள், இப்போது யாரைக் காரணம் காட்டுகிரார்களோ தெரியவில்லை.

தமிழர்களைப்பொறுத்தவரையில் போர் நடந்தபோதும் சரி, முடிந்தபின்னரும் சரி, சிங்கள அரசாங்கத்தின் அவர்கள் மீதான கெடடுபிடி குறைந்ததாக நான் நினைக்கவில்லை. அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழர்களைத் தவிர மற்றைய எல்லாத்தமிழர்களுமே ஏதோ ஒரு விதத்தில் அடக்குமுறைக்கு உற்பட்டவர்கள் என்பதுதான் எனது வாதம். அதற்காக எல்லோருக்கும் அகதி அந்தஸ்துக் கொடுத்து ஏற்றுக்கொள்வதும் சாத்தியமில்லை. ஆகவே, உடனடியாகக் துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்களை அல்லது உள்ளாகக் கூடியவர்களை ஏற்றுக்கொள்வது தவறில்லையே?? ஆனால் இதைக் கடலில் வைத்துக் கப்பலில் முடிவுசெய்வதென்பது சரியானதாகப் படவில்லை. அவர்களி, ஏதோ அவுஸ்த்திரேலிய நிலம் ஒன்றிற்குள் கொண்டுவாருங்கள், பின்னர் முறையாக விசாரணை செய்யுங்கள். அதன்பின்னர் யாரைத் திருப்பியனுப்புவது, யாரை ஏற்றுக்கொள்வது என்று முடிவுசெய்யுங்கள். அதை விடுத்து எல்லோரையும் திருப்பியனுப்புவது என்பது மனிதாபிமானம் அல்ல.

வடக்குக் கிழக்கில் இருந்து வருபவர்கள் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள். அதேபோல மலையகம், ஏனை மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் நேரடியாக இல்லாவிட்டாலும்கூட தமிழர் என்கிற ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே அகதி அந்தஸ்த்துக் கோரும் உரிமையுடையவர்கள். அதற்காக அவுஸ்த்திரேலியா இவர்கள் எல்லோருக்கும் அகதி அந்தஸ்த்துக் கொடுக்கமுடியாது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் விசாரணையை உரிய முறையில் நடத்துங்கள் என்பதுதான் கோரிக்கை.

இங்கே இதுகாலவரை அகதிகளாக வந்தவர்கள் பலர் இருக்கிரார்கள். பெரும்பாலானோர் சமூகத்துடன் ஒன்றி அனுசரித்து வாழ்பவர்கள். ஒருசிலர் சமூகச் சீர்கேடுகளில் ஈடுபட்டார்கள். அவர்களால் மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் கெட்டபெயர் ஏற்பட்டது. இப்போது நிலமை ஓரளவு பரவாயில்லை என்று நினைக்கிரேன். அதேபோல அகதி என்று வருபவர்களளில் பலர் நியாயமான கோரிக்கை ஒன்றில்லாமல் வெறும் பொறுளாதார வசதிக்காகவே வருகிறார்கள். அப்படியானவர்கள் தாம் உண்மையாகவே எதற்காக வந்தோம் என்பதையும் கூறிவிடுவதால், மற்றையவர்களையும் அதிகாரிகள் அவர்களைப்போலவே எண்ணுவதும் நடக்கிறது. மேலும் அண்மையில் ஒருவர் தனது நாயையும் கொன்டுவர முயன்றாராம். அது அவரது சொந்தப் பிரச்சினையாக இருந்தாலும்கூட, அவர் உண்மையான அகதிதானா என்கிற கேள்வியை அதிகாரிகள் எழுப்பலாம். இவ்வாறான செயல்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட அகதிகளுக்கான கோரிக்கையை நலிவடையச் செய்யலாம்.

இதற்கு என்ன வழியென்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் திருப்பியனுப்புவது ஒரு வழியில்லை . அதேபோல விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கும்வரை உண்மையான அகதிகளின் உயிருக்கு உத்தரவாதமும் இல்லை. ஆகவே கியூவில் வாருங்கள் இல்லாவிட்டால் திரும்பிச் செல்லுங்கள் என்பதும் சாத்தியமில்லை.

ஆனால், இன்று அவுஸ்த்திரேலிய அரசு செய்வது, தனது அகதி திருப்பியனுப்பல் கொள்கைக்காக இலங்கையில் எந்தப் பிரச்சினையுமில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வேலை. இது சிங்களப் பேரினவாதத்திற்கு உலக அளவில் நற்சான்றிதழ் கொடுப்பதோடு, மற்றைய நாடுகளும் இவரைப் பின்பற்ற ஏதுவாக்கி விடுகிறது. அதுமட்டுமல்லாமல் நீண்ட காலப் போக்கில் தமிழரின் நியாயமான கோரிக்கைகள் காற்றில் அடிபட்டுப் போகவும் இது காரணமாகி விடும்.

எல்லாவற்றிற்கும் ஒரே வழி உலக நாடுகள் (தமிழ் அகதிகளால் சிக்கல்களை எதிர்நோக்கும் நாடுகள்) ஒன்றிணைந்து இலங்கையில் நிரந்தரமான அமைதி தோன்றுவதற்கான சுய நிர்ணய உரிமையுடனான இரு தேசங்களையோ அல்லது சமஷ்ட்டி ரீதியாலான அரசியல் அமைப்பொன்றையோ கொண்டுவர ஆவண செய்யவேண்டும். அதைச் செய்வார்களா??

நேவிக்கு ரோந்துக் கப்பல் கொடுப்பதைக் காட்டிலும் விட பிரச்சினையைத் தீர்த்துவைப்பது எவ்வளவோ மேல். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ரொம்ப ரகசியம் ஆனா சுண்டலுக்கு மட்டும் தெரியும்:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.