Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது கடைக்கு நீண்ட காலமாக வரும் ஒரு லண்டன் காரன் பெயர் யோன். அவரின் தலை முடி கருப்பாக இருக்கும். அவர் கலப்பினமாக இருக்கலாம் என்று எண்ணி நீ எந்த நாட்டவன் என்று கேட்டுவைக்க நான் பிரிட்டிஷ். இங்குதான் பிறந்து வளர்ந்தேன் என்றதுடன் மேற்கொண்டு அவனை நான் அவன் யார் எவர் என்று கேட்பதில்லை.

 

அவன் தூரத்தில் வரும்போதே ஒரு நாற்றம் என் மூக்கை அடைக்கச் செய்யும். நான் அவன் கடையில் நிற்கும் நேரம் அத்தனையும் எவ்வளவு விரைவில் அவனை அனுப்பிவிட முடியுமோ அத்தனை விரைவாக அணிப்புவேன். குடிவகைகளின் நாற்றமோ அன்றி குளிக்காமல் இருப்பவரின் நாற்றமோ இல்லை. பிணங்களின் வாடைபோல் அது இருக்கும். எனவே அவனைப் பார்க்கும் நேரம் எல்லாம் வழியில் தென்படும் சவக்காலைகள் எல்லாம் என் கண்முன்னே வந்து போகும். அவனிடம் என்ன  என்று கேட்பதே இல்லை.

 

கணவர் நிற்கும் நேரங்களில் அவன் வரும் போது நான் பின் பக்கமாக நழுவிவிடுவேன். அவன் சென்றபின் கணவர் கதவைப் பெரிதாகத் திறந்துவிட்டதன் பினரே நான் மீண்டும் வருவேன். ஆனால் அவனது முகம் பார்க்க நட்புடன் இருக்கும். வந்த உடனேயே பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள். படிப்பு எப்படிப் போகிறது, விடுமுறை செல்லவில்லையா என்று அக்கறையாக விசாரிப்பான். அதுமட்டுமன்று ஒவ்வொருநாளும் கடையில் பதினைந்து தொடக்கம் இருபது பவுண்டுகளுக்குக் குறையாது பொருட்களை வாங்குவான். 

 

என் கணவரின் மூக்கு மாலையில் வரும் குடிகாரக் கஸ்டமர்களிடம் எல்லாம் இசைபாக்கம் அடைந்து இவனது மணம் பெரிதாகத் தெரிவதில்லை என்பார். அவன்  பிணங்களுடன் தான் வேலை செய்வதாக ஒருநாள் கணவர் கூறினார். அதன் பின் அவன் தரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவன் சென்றபின் கைகளைக் கழுவியபின் தான் நின்தியாக இருக்கும்.

 

நான் விடுமுறையில் நின்றதனால் கன நாட்கள்  அவனைக் காணவில்லை. இன்று மதியம் அவன் கடைக்கு வரும் போதே அவனில் மாற்றம் தெரிந்தது. கன்னங்கள் ஒட்டி முகத்தில் மலர்ச்சியின்றி, நான் இன்னொரு கஷ்டமரிடம் நின்றிருந்தபடியால் அவனைப் பார்த்து ஹலோ என்றுவிட்டு என் அலுவலைப் பார்த்தேன். அவன் கடையின் பின் பக்கமாகச் சென்றவன், எதோ பெரிதாகக் கதைப்பது கேட்டது. அவன் என்னிடம் தான் எதோ சொல்கிறான் என எண்ணியபடி உனக்கு ஏதும் உதவி தேவையோ என்றேன். 

 

நான் புதியவனல்ல எனக்கு உதவி தேவை இல்லை. எனக்கு டெற்றோல் பெரியதில் ஆறு வேண்டும் என்றான். அங்கு இல்லையா முடிந்துவிட்டதா என்று நான் கேட்டேன். நான் இப்ப இரண்டு கொண்டுபோகிறேன் எனக்கு இன்னும் ஆறு வேண்டும் என்றான். எம்மிடம் வேறு இல்லை என எண்ணியபடி நாளை வா வாங்கி வைக்கலாம் என்றேன். ஏன் எனக்கு ஆறு வைக்க முடியாதா என்று அவன் கேட்டபோதுதான் அவன் சொல்வதில் எதோ சிக்கல் இருப்பது புரிந்தது.

 

அவனின் பொருட்களைக் கொண்டுவந்து மேசையில் அடுக்கியவுடன் நான் ஒவ்வொன்றாக அடிக்கத் தொடங்கினேன். அவனுக்குப் பின்னால் இன்னொரு பெண் குழந்தையுடன் பொருட்களையும் காவியபடி வந்து நிற்க, பொருட்களை வாங்கி வைப்பதற்காக நான் அவள் பக்கம் கையை நீட்டினேன். எனக்கு முதலில் சேவ் பண்ணு என்று என்னை உறுக்குவது போல் கத்தினான். அந்தப் பெண் அதிர்ந்ததில் அவள் கையிலிருந்த பொருளொன்று கீழே விழுந்தது. நான் அவளது பொருட்களை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு இவனது பொருட்களை அடித்து முடித்தேன். பதினெட்டுப் பவுன்கள் சொச்சம் வர அதை நான் அவனுக்குக் கூறினேன்.

 

அவன் உடனே அந்தப் பெண்ணை முடித்துவிட்டு என்னை அனுப்பு என்றான். உனது பொருட்கள் அடித்து முடித்துவிட்டேன் நீ பணத்தைச் செலுத்து என்றதற்கு, நான் சொல்வது உனக்கு விளங்கவில்லையா ?? அவளை முதலில் அனுப்பு என்று மீண்டும் எனக்குக் கட்டளையிட்டான். அவனின் அசாதாரண நிலை புரிந்து போனதால் நான் மீண்டும் எல்லாவற்றையும் கான்சல் செய்துவிட்டு அவளை முன்னே வருமாறு அழைக்க அவள் முன்னே வந்தால். பின்னால் சென்றவன், உனக்கு ஆங்கிலம் விளங்காமல் எப்பிடிக் கடையை நடத்துகிறாய் என்று கூற, எனக்கு ஆங்கிலம் கதைக்கத் தெரியும் என்று நான் கோபமானேன்.

 

உடனே அவன் பெரிதாகச் சிரிக்க ஆரம்பிக்க, அவனின் சிரிப்பின் கோரம் தாங்காது அந்தப் பெண்ணின் கையிலிருந்த குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்தது. அந்தப் பெண்ணை ஒருவாறு அனுப்பிவிட்டு அவனை அழைக்க அவனோ மீண்டும் என்னை எதோ திட்டியபடி பெரிதாகச் சிரித்தபடி வந்தான். மீண்டும் அவனைக் கணக்கை முடித்து ரிசீற்ரைக் கொடுக்க எனக்கு சரியான றிசீட் வேண்டும். மீண்டும் அடி என்றான். மற்றும் நேரம் எனில் முடியாது வெளியே போ என்றிருப்பேன். இது ஒன்றும் செய்ய முடியாது இரு பைகளுள் அடக்கிய பொருட்களை வெளியே எடுத்து மீண்டும் அடித்தேன். பணத்தைத் தந்துவிட்டு அவன் வாசல்ப் பக்கம் செல்ல இன்னொருவன் வந்துவிட்டான். நான் வந்தவனைக் கவனிக்க இவனோ இன்னும் வாசல்ப் பக்கம் நின்று நாம் போட்டிருந்த மற்றை(matt) மற்றவளம் திருப்பிப் போட்டுக்கொண்டிருந்தான்.

 

சரி என்று இவனை அனுப்பிவிட்டுப் பார்த்தால் இன்னும் நின்றுகொண்டிருந்தான். கடையில் என்னையும் அவனையும் தவிர யாரும் இல்லை. கூடவே பயமும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. எதாவது மறந்துவிட்டாயா என்று கேட்க நீ எனக்கு ரிசீற் தரவில்லை. அதுதான் நிக்கிறேன் என்றான். என்னடா இது தொல்லை என்று மனதுள் எண்ணியபடி, உனக்குத் தந்துவிட்டேனே என்றேன். நீ தரவில்லையே என்றபடி ரில்லுக்குக் கிட்ட வர, என்ன தற்காப்பு முயற்சி எடுக்கலாம் என என் மனம் எண்ணத் தொடங்க, கீழே குனிந்து இன்னொரு ரிசீற்ரை எடுத்துக்கொண்டு, ஓ கீழே எறிந்துவிட்டாயா என்றான். நான் எறியவில்லை என்று நாக்கு நுனியாரை வந்த வார்த்தையை அடக்கியபடி சொறி என்றேன். அவனும் சந்தோசமாக எடுத்தபடி சரி ஆங்கிலம் கதைக்கத் தெரியாமல் எப்படிக் கடை நடத்துகிறாய் என்று கேட்டபடியே வெளியேறினான்.

 

அப்பாடா நின்மதி என எண்ணியபடியும் ஏன் இவனுக்கு இப்படி ஆனது என எண்ணியபடியும் இருக்க இதை யாழில் எழுதவேண்டும் என்று எண்ணம் தோன்றியது. சரி எழுதுவோம் என எழுத ஆரம்பிக்க மீண்டும் கதவைத் திறந்துகொண்டு அவன் உள்ளே வந்தான். நான் பயத்தை விழுங்கியபடி சிரித்துக்கொண்டே என்ன என்றேன். நீ ரிசீட் தரவில்லை என்ற பழைய பல்லவி. நீ எவ்வளவு காசுக்குப் பொருட்கள் வாங்கினாய் என்றதற்கு இருபது பவுண்களுக்கு வாங்கினேன் என்றான். இருபது பவுன்டுகளுக்கு ரிசீட் அடித்துக் கொடுத்தவுடன் நீ மறந்துவிட்டாய் என்று கூறியபடி வெளியே செல்பவனை இரக்கத்தோடு பார்த்தபடி நின்றேன் நான்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்.. கோவில் திருவிழாக் காலங்களில்.. கோயில்ல.. வந்து சப்பாடு வாங்கிச் சாப்பிடுறவர். இவர் பைத்தியமா... அல்லது ஊரைச் சுருட்டுறவரா..??! :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்பவர் வேறு ஒருவர் என்று நினைக்கிறேன். இவரை வைத்திய சாலையில் அனுமதிக்கும்படி பக்கத்துவீட்டுக்காரர் போலீசில் முறையிட்டுள்ளதாக பிந்திய தகவல். வருகைக்கு நன்றி நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... ஓ...  அப்ப அவனுக்கும் தெரிஞ்சுட்டுதா உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்டு...! :)

  • கருத்துக்கள உறவுகள்

நாற்றம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்குபோல..... :D பகிர்வுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சுமே, இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக எழுதியிருக்கின்றீர்கள்!

 

எதற்கும் அந்த மனிதனுடன் 'கொஞ்சம்' மனம் விட்டுப் பேசியிருக்கலாம்!

 

உங்களது வித்தியாசமான அனுகும்ரையை, அவன் நிச்சயம் அவதானித்திருக்கக் கூடும் என்பது எனது அனுமானம்!

 

அதனால் தான், தனது செயலகளின் மூலம் தனது ஆதங்கத்தைப் பிரதிபலித்திருக்கிறான்!

 

நாங்கள் அன்னை திரேசாவைப் போல வாழவியலா விட்டாலும், மனநிலை பிறழ்ந்தவர்கள், மன நோயாளிகள், இயலாதவர்களுடன் கொஞ்சம் மனிதாபிமானமாக நடப்பது நல்லது என்பது எனது கருத்தாகும்!

 

நாளை நாங்கள் கூட அவனது நிலைக்கு வரக்கூடும் தானே!

 

அனுபவப் பகிர்வை எழுதிய விதம் அருமை!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் இப்படியான மன நலம்  பாதிக்கபட்டவர்கள் போன்று பேசிக் கொண்டுஇருக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்........உண்மையாக பாதிக்கபட்டவர்களா அல்லது அப்படி நடித்துக் கொள்கிறர்களாக என்று கண்டு பிடித்துக் கொள்ள முடியாதளவுக்கு இருக்கிறார்கள்.கடந்தகிழமை ஒரு இடத்தில் போய் நின்று பக்கத்தில் நின்ற இந்தியரிடம் ஒரு இலகத்தை சொல்லி எங்கே இருக்கிறது தெரியுமா என்று கேக்கும் போது....அவர் பேச மனிதர்கள் அற்று இருந்தவர் போல் வா..வா..எப்ப வந்தனி,என்ன குடிக்கிறாய்......என்ன சாப்பிடுவாய் என்று எல்லாம் வீதியோரமாக நின்று பேசிக் கொண்டே இருந்தார்...நான் கேட்பது புரிந்து கொள்ளாத ஒருவராகவே இருந்தார்....எனக்கு அந்த மனிதரை நினைக்கும் போது பாவமாக இருந்தது..சிலரை பாவம் பார்ப்பதும் தப்பு.........அப்படி நடித்து அடுத்த நடவடிக்கையாக என்ன செய்வார்களோ தெரியாது.இருந்தாலும் அந்த மனிதரை விட்டு விலகி வரும் போது நாளை நான் கூட இந்த நிலைக்கு தள்ளப்படலாம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டே வந்தேன்..அந்த மனிதரையும் ஏதோ ஒரு விடையம் தாக்கிக் கொள்கிறது..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த சுவி அண்ணா, புத்தன், புங்கை, யாயினி ஆகியோருக்கு நன்றி. 

 

அவனுக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது என்று பக்கத்து வீட்டுக்காரன் போலீசில் பலதடவை முறையிட்டு அவனை இப்போ வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவன் இருப்பது கவுன்சில் பிளற். அடிக்கடி கொரிடோரை மப் பண்ணுகிறான். அயலவரின் பெல்லை அடித்து மப் பண்ணுமாறு ஆக்கினை கொடுக்கிறான். சாமத்திலும் இதே நிலை என பக்கத்து வீட்டுக் காரன் இன்று கூறினான். ஆனால் எப்படி வந்து பொருட்களை மட்டும் சரியாக வாங்குகிறான் என்பது அதிசயம் தான். அத்தோடு அவனை நான் வெறுக்கவும் இல்லை. நினைக்க இப்படி ஆகிவிட்டானே என மனவருத்தம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் யாயினி. முன்பு நான் யேர்மனியில் இருக்கும் போது எம்முடன் ஒரு யேர்மன் காரர் நல்ல நட்பாக இருந்தார். நன்றாகச் செஸ் விளையாடுவார். எத்தனையோதரம் பரிசும் பெறுள்ளார். எமது உணவு உண்ண நல்ல விருப்பம். அதனால் நான் சாப்பிட வரட்டா என்று கேட்டுவிட்டு வருவார். சிறிது நாளில் அவருக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது. எதனால் என்று தெரியவில்லை. ஒருநாள் விடயம் தெரியாது நான் கதவைத் திறந்துவிட்டேன். வீட்டுக்குள் வந்து இருந்துகொண்டு என்னைக் கதைக்க விடாது அலட்டிய அலட்டலில் தான் அவர் நிலை விளங்கியது. கணவரும் வீட்டில் இல்லை. பிள்ளைகளும் நானும் தான். இருட்டியபின்னும் எழுந்து போகமறுத்து அடம் பிடித்தவரை என் தம்பியை அழைத்து வெளியே அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் இரு வாரங்களின் பின் போன் செய்யாமல் வந்து கதவைத் தட்ட நான் பயத்தில் திறக்கவில்லை. பாவமாக இருந்ததுதான். அதற்காக நான் என்ன செய்ய முடியும் ???

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அனுபவப்பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி சுவைப்பிரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.