Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை

என்.செல்வராஜ்

நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.2000 குமுதம் தீபாவளி மலரில் டாப் டென் நாவல் தலைப்பில் சிறந்த எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டுவெளியிட்டு இருந்தார்கள். அனைத்து எழுத்தாளர்களின் பார்வை வேறு வேறாக இருந்தன. எனவே நல்ல நாவல் எது என தேடினேன். ஆனந்த விகடன்படித்ததில் டாப் டென் என்ற தலைப்பில் 2006ல் பல எழுத்தாளர்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

குமுதம் டாப் 10 ல் சி. மோகன், வெங்கட் சாமினாதன், ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, கந்தர்வன் ஆகியோர் தங்களின் கருத்தை வெளியிட்டனர்.

சி மோகன் டாப் 10 நாவல்கள்

1.இடைவெளி 2. புயலிலே ஒரு தோணி 3. விஷ்ணுபுரம் 4. நினைவுப் பாதை 5. நாளை மற்றுமொரு நாளே 6.ஜே ஜே சில குறிப்புகள் 7. மோகமுள் 8.பள்ளிகொண்டபுரம் 9. தண்ணீர் 10. சாயாவனம்

வெங்கட் சாமினாதன் டாப் 10 நாவல்கள்

1. மோகமுள் 2. தலைமுறைகள் 3.ஜே ஜே சில குறிப்புகள் 4.கோவேறு கழுதைகள் 5. வானம் வசப்படும் 6. தூர்வை 7. எட்டு திக்கும் மத யானை 8. கரமுண்டார் வீடு 9.விஷ்ணுபுரம் 10. செந்நெல்

ராஜமார்த்தாண்டன் டாப் 10 நாவல்கள்

1.பொய்த்தேவு 2. ஒரு புளிய மரத்தின் கதை 3. அம்மா வந்தாள் 4. ஜே ஜே சில குறிப்புகள் 5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 6. புயலிலே ஒரு தோணி 7.விஷ்ணுபுரம் 8. பின் தொடரும் ஒரு நிழலின் குரல் 9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 10. உப பாண்டவம்

சா.கந்தசாமி டாப் 10 நாவல்கள்

1. பிரதாப முதலியார் சரித்திரம் 2. நாகம்மாள் 3. ஒரு நாள் 4. வாசவேஸ்வரம் 5. 18 வது அட்சக்கோடு 6.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 7..பள்ளிகொண்டபுரம் 8.அவன் ஆனது 9. வானம் வசப்படும் 10.ரப்பர்

கந்தர்வன் டாப் 10 நாவல்கள்

1.மோகமுள் 2. தலைமுறைகள் 3. சாயாவனம் 4.மலரும் சருகும் 5. கோபல்ல கிராமம் 6. கடல்புரத்தில் 7.கீரல்கள் 8. புத்தம் வீடு 9. பொய்த்தேவு 10. கோவேறு கழுதைகள்

எஸ். ராமகிருஷ்ணன் டாப் 10 நாவல்கள் ( ஆனந்தவிகடன் 2011)

1.மோகமுள் 2.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 3.கோபல்ல கிராமம் 4.புயலிலே ஒரு தோணி 5.நாளை மற்றுமொரு நாளே 6.ஒரு புளிய மரத்தின் கதை 7.ஒற்றன் 8. பசித்த மானுடம் 9.கடல்புரத்தில் 10. .இடைவெளி

எஸ். ராமகிருஷ்ணன் டாப் 10 நாவல்கள்( சன் டிவி பேட்டி)

1.மோகமுள் 2.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 3.பசித்த மானுடம் 4..நாளை மற்றுமொரு நாளே 5.இடைவெளி 6. கம்பாநதி 7. வேள்வித்தீ 8.ஒற்றன் 9.ஒரு புளிய மரத்தின் கதை 10.நினைவுப்பாதை

விக்கிரமாதித்யன் டாப் 10 நாவல்கள் ( எல்லாச் சொல்லும் கட்டுரை தொகுப்பு )

1. நித்யகன்னி 2. மலர் மஞ்சம் 3.நினைவுப்பாதை 4.பொய்த்தேவு 5.புயலிலே ஒரு தோணி 6.புத்தம் வீடு 7.வாசவேஸ்வரம் 8.ஒரு புளிய மரத்தின் கதை 9.கரைந்த நிழல்கள் 10. பிறகு

ஜெயமோகன் டாப் 10 நாவல்கள் (வலைத் தளம்)

1..விஷ்ணுபுரம் 2.பின் தொடரும் ஒரு நிழலின் குரல் 3.புயலிலே ஒரு தோணி 4.ஒரு புளிய மரத்தின் கதை 5..மோகமுள் 6. பொய்த்தேவு 7.. ஜே ஜே சில குறிப்புகள் 8. தலைமுறைகள் 9. கிருஷ்ண பருந்து 10. மானுடம் வெல்லும்

ஆர் வி டாப் 10 நாவல்கள் (வலைத் தளம்)

1. பின் தொடரும் ஒரு நிழலின் குரல் 2.விஷ்ணுபுரம் 3.பொன்னியின் செல்வன் 4.என் பெயர் ராமசேஷன் 5.கரைந்த நிழல்கள் 6.சாயாவனம் 7.கோபல்ல கிராமம் 8. வெக்கை 9. ஜே ஜே சில குறிப்புகள் 10.மோகமுள்

ரமணி டாப் 10 நாவல்கள் (வலைத் தளம்)

1.காகித மலர்கள் 2.குருதிப்புனல் 3. உயிர்த்தேன் 4.நாளை மற்றுமொரு நாளே 5.தலைமுறைகள் 6.புத்தம் வீடு 7.சாய்வு நாற்காலி 8. கடலுக்கு அப்பால் 9.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 10. கோபல்லபுரத்து மக்கள்

கோபால் ராஜாராம் டாப் 11 நாவல்கள் (வலைத் தளம்)

1.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 2. அம்மா வந்தாள் 3. புத்ர 4. கிருஷ்ண பருந்து 5. புதிய தரிசனங்கள் 6.ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 7. வாசவேஸ்வரம் 8.மானுடம் வெல்லும் 9. கடல்புரத்தில் 10. கரைந்த நிழல்கள் 11.தலைமுறைகள்

வெங்கட் டாப் 9 நாவல்கள் (வலைத் தளம்)

1.ஜே ஜே சில குறிப்புகள் 2. 18 வது அட்சக்கோடு 3.பள்ளிகொண்டபுரம் 4.நாளை மற்றுமொரு நாளே 5.என்பிலதனை வெயில் காயும் 6.மோகமுள் 7. கோபல்லபுரத்து மக்கள் 8.குருதிப்புனல் 9.சில நேரங்களில் சில மனிதர்கள்

ஆனந்த விகடன் (படித்ததிலே டாப் 10) பகுதியில் நாவல்கள்

மனுஷ்ய புத்திரன் படித்ததிலே டாப் 10 – .ஜே ஜே சில குறிப்புகள்

சின்னக் குத்தூசி படித்ததிலே டாப் 10 – 1.பொன்னியின் செல்வன் 2.கள்ளோ காவியமோ 3. பொன்னர் சங்கர் 4.மோகமுள் 5. சினேகிதி 6.ஒரு புளிய மரத்தின் கதை 7. குறிஞ்சி மலர் 8. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 9. சோளகர் தொட்டி

அறிவுமதி படித்ததிலே டாப் 10 :- கரிசல்

காசி ஆனந்தன் படித்ததிலே டாப் 10 :- சிவகாமியின் சபதம், கல்லுக்குள் ஈரம், சித்திரப் பாவை

தொ. பரமசிவன் படித்ததிலே டாப் 10 :- வானம் வசப்படும்

வண்ணதாசன் படித்ததிலே டாப் 10 :- பிறகு, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், .மோகமுள், ரத்த உறவு

கலாப்ரியா படித்ததிலே டாப் 10 :- ஏழாம் உலகம், கடல்புரத்தில், உயிர்த்தேன், கோவேறு கழுதைகள், நெடுங்குருதி

சாருனிவேதிதா படித்ததிலே டாப் 10 :- புயலிலே ஒரு தோணி, ம் , தகப்பன் கொடி

கனிமொழி படித்ததிலே டாப் 10 :-புத்தம் வீடு

பெருமாள் முருகன் படித்ததிலே டாப் 10 :- நாகம்மாள், ஒரு புளிய மரத்தின் கதை, மோகமுள், ரத்த உறவு

நா.முத்துக்குமார் படித்ததிலே டாப் 10 :- நாளை மற்றுமொரு நாளே, .கரைந்த நிழல்கள்

பி.கே. சிவக்குமார் படித்ததிலே டாப் 10 :- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

சு வேணு கோபால் டாப் 10 நாவல்கள் (உயிர்மை 100வது இதழ்)

1.கொற்றவை 2. கன்னி 3. ஆழி சூழ் உலகு 4.மணல் கடிகை 5. அஞ்சலை 6.காவல் கோட்டம் 7. நெடுங்குருதி 8. கூகை

க ந சு டாப் 10 நாவல்கள் ( கநசுகட்டுரைகள் )

1. மண்ணாசை 2. நாகம்மாள் 3.இதயநாதம் 4. .மோகமுள் 5.ஒரு புளிய மரத்தின் கதை 6.தலைமுறைகள் 7.நினைவுப்பாதை 8.தண்ணீர் 9. அவன் ஆனது 10. மாமிசப் படைப்பு 11. வெக்கை 12. கடல்புரத்தில் 13. அசடு 14.வாசவேஸ்வரம்

நாஞ்சில்நாடன்டாப் 10 நாவல்கள்

1.காவல்கோட்டம் 2.நெடுஞ்சாலை 3. ஆழிசூழ்உலகு 4. கலங்கியநதி 5. ஆறாவடு

சுவெங்கடேசன் :- 1.புயலிலே ஓரூ தோணி 2. அஞ்சலை 3. நிறங்களின்உலகம்

தமிழ்மகன் :- 1.காவல்கோட்டம் 2. கலங்கியநதி

வாலி :- 1.பாலும்பாவையும் 2. கள்வனின்காதலி 3. ஜெயஜெயசங்கர 4. கோதைத்தீவு 5. திருவரங்கன்உலா

சிம்புதேவன் 1.வாடிவாசல் 2. யவனராணி

கிரிஜாடாப் 10 நாவல்கள் (வலைத் தளம்)

1.கமலாம்பாள் சரித்திரம் 2. பொய்த்தேவு 3.ஒரு புளிய மரத்தின் கதை 4.18 வது அட்சக்கோடு 5..மோகமுள் 6.கோபல்ல கிராமம் 7.மானுடம் வெல்லும் 8.மெல்ல கனவாய் பழங்கதையாய் 9.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 10.கோவேறு கழுதைகள்.

பாலகிருஷ்ணபாலாஜிடாப் 10 நாவல்கள் (வலைத் தளம்)

1.சில நேரங்களில் சில மனிதர்கள் 2.மெர்க்குரிபூக்கள் 3.பாவப்பட்டஜீவன்கள் 4.கோபல்ல கிராமம் 5.கடல்புரத்தில் 6.ரப்பர் 7.ஒரு புளிய மரத்தின் கதை 8. தலைமுறைகள் 9. எட்டு திக்கும் மத யானை 10.கரைந்த நிழல்கள்

தி டாப் டென்ஸ்.காம்டாப் 10 நாவல்கள்

1.பொன்னியின் செல்வன் 2.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 3.மோகமுள் 4.ஒரு புளிய மரத்தின் கதை 5.பிரிவோம்சந்திப்போம் 6. சேரமான்காதலி 7. சித்திரப்பாவை 8. யவனராணி 9. குறிஞ்சிமலர் 10. வாஷிங்டனில்திருமணம்

செந்தில்.ப்ளாக்ஸ்பாட்.இன் டாப் 10 நாவல்கள்

1. புயலிலே ஓரூ தோணி 2.விஷ்ணுபுரம் 3.கொற்றவை 4.ஜே ஜே சில குறிப்புகள் 5.ஆழிசூழ்உலகு 6.கூகை 7.என் பெயர் ராமசேஷன் 8.மோகமுள் 9.சாய்வு நாற்காலி 10. 18 வது அட்சக்கோடு

கற்பக விநாயகம் டாப் 10 நாவல்கள் (வலைத் தளம்)

1.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 2. வேள்வித்தீ 3 ஜே ஜே சில குறிப்புகள் 4.வானம் வசப்படும் 5.கோபல்ல கிராமம்6.கடலோரகிராமத்தின்கதை 7. நல்லநிலம் 8..கடல்புரத்தில் 9.பள்ளிகொண்டபுரம் 10. புதியதோர் உலகம்

நாஞ்சில் நாடன் பிடித்த நாவல்கள் (ஒரு இனிய உதயம் பேட்டி)

1. காடு 2. ஏழாம் உலகம் 3. குள்ளச் சித்தன் சரித்திரம் 4.பகடையாட்டம் 5. சிலுவை ராஜ் சரித்திரம் 6.ஆழி சூழ் உலகு 7.மணல்கடிகை 8. காக்டெயில் 9. யாரும் யாருடனும் இல்லை 10. சோளகர் தொட்டி 11. நெடுங்குருதி

சி மோகன் டாப் நாவல்கள் (புதுயுகம் பிறக்கிறது 1987 )

1..மோகமுள் 2.ஜே ஜே சில குறிப்புகள் 3.புயலிலே ஒரு தோணி 4.பொய்த்தேவு 5.இடைவெளி 6.ஒரு புளிய மரத்தின் கதை 7. அம்மா வந்தாள் 8.நாகம்மாள் 9.கிருஷ்ண பருந்து 10.நினைவுப்பாதை 11.தண்ணீர் 12.பள்ளிகொண்டபுரம் 13.கடல்புரத்தில்

இரா.முருகன் பட்டியலில் முதல் பத்து நாவல்கள் (வலைத் தளம்)

1.மோகமுள் 2. பாலும் பாவையும் 3.நாளை மற்றுமொரு நாளே 4.கோபல்ல கிராமம் 5.பொய்த்தேவு6.தியாகபூமி 7. பள்ளிகொண்டபுரம் 8. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 9. தாகம் 10.கோவேறு கழுதைகள்

பாலகுமாரன் பட்டியலில் முதல் பத்து நாவல்கள் (வலைத் தளம்)

1.பொன்னியின் செல்வன் 2.வேள்வித்தீ 3..மோகமுள் 4. பசித்த மானுடம் 5.ஜே ஜே சில குறிப்புகள் 6.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 7. 18 வது அட்சக்கோடு 8.சாயாவனம் 9.கோபல்ல கிராமம் 10. வாடிவாசல்

ஃபோரம்ஹப்.காம் டாப் 10 நாவல்கள்

1.பொன்னியின் செல்வன் 2. இரும்புக் குதிரைகள் 3.சிவகாமியின் சபதம் 4. மோகமுள் 5. அலைஒசை 6. ஒரு நடிகை நாடகம் பார்க்கிராள் 7.சித்திரப்பாவை 8. மீண்டும் ஜீணோ 9.பார்த்திபன் கனவு 10.கடல்ராணி

இதுவரை பத்திரிக்கைகள் மற்றும் வலைத்தலங்களில் வெளிவந்த பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளை பார்த்தோம். இதன்மூலம் தமிழின் மிகச் சிறந்த நாவல்களை அடையாளம் காணமுடியும். இந்த பட்டியல் முதல் பத்து நாவல் எது என நேரடியாகச் சொல்ல முடியாததாக இருக்கிறது . வாசகர்கள் தங்களின் விருப்பமான எழுத்தாளர்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த பட்டியலில் உள்ள நாவல்களை பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதே சிறந்த முடிவைத்தரும்.

நான்கு (அ) நான்குக்கு மேற்பட்ட பரிந்துரைகளை பெற்ற நாவல்களே தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. . எல்லோரின் பரிந்துரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த நாவல்களின் பட்டியலை டாப் 10 இடத்துக்கான நாவல்களாக தேர்வு செய்யப்படுகிறது .

19 பரிந்துரைகளுடன் முதல் இடத்தை பிடித்த நாவல்

மோகமுள்

நாவலின் ஆசிரியர் – தி.ஜானகிராமன்

பரிந்துரை செய்தவர்கள்

1.சி.மோகன் 2. ஆர்வி 3. வெங்கட் 4. வெங்கட்சாமினாதன் 5. கந்தர்வன் 6. சின்னக்குத்தூசி 7. பெருமாள் முருகன்8. ஜெயமோகன் 9. எஸ்.ராமகிருஷ்ணன் 10. க ந சுப்ரமணியம் 11. இரா.முருகன் 12. வண்ணதாசன் 13. கற்றதுராம் 14. பாலகுமாரன் 15. செந்தில் 16.கிரிஜா 17. திடாப்டென்ஸ்.காம் 18. மய்யம்.காம் 19.ஃபோரம்ஹப்.காம்

12 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்த நாவல்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

நாவலின் ஆசிரியர் – ஜெயகாந்தன்

பரிந்துரை செய்தவர்கள்

1. ராஜமார்த்தண்டன் 2. சா.கந்தசாமி 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4.இரா.முருகன் 5.வண்ணதாசன் 6.பி.கே.சிவக்குமார் 7.கிரிஜா 8.திடாப்டென்ஸ்.காம் 9.பாலகுமாரன் 10. கற்பகவினாயகம் 11.ரமணி 12. கோபால்ராஜாராம்

11 பரிந்துரைகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்த நாவல்

ஒரு புளிய மரத்தின் கதை

நாவலின் ஆசிரியர் – சுந்தரராமசாமி

பரிந்துரை செய்தவர்கள்

1.ராஜமார்த்தண்டன் 2.விக்கிரமாதித்யன் 3.சின்னக்குத்தூசி 4.பெருமாள்முருகன் 5.ஜெயமோகன் 6 . எஸ்.ராமகிருஷ்ணன் 7. க ந சுப்ரமணியம் 8. கிரிஜா 9. பாலகிருஷ்ணபாலாஜி 10. திடாப்டென்ஸ்.காம் 11. சிமோகன் 1987

10 பரிந்துரைகளுடன் நான்காம் இடத்தை பிடித்தநாவல்

ஜே ஜே சில குறிப்புகள்

நாவலின் ஆசிரியர் – சுந்தரராமசாமி

பரிந்துரை செய்தவர்கள்

1.சி மோகன் 2. ஆர்வி 3. ராஜமார்த்தண்டன் 4.வெங்கட் 5. வெங்கட்சாமினாதன் 6. ஜெயமோகன் 7. மனுஷ்யபுத்திரன் 8. பாலகுமாரன் 9. செந்தில் 10.கற்பகவினாயகம்

9 பரிந்துரைகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்த நாவல்கள்

1. கடல்புரத்தில் 2. புயலிலேஒருதோணி

கடல்புரத்தில் நாவலின் ஆசிரியர் :- வண்ணநிலவன்

பரிந்துரை செய்தவர்கள்

1. 2. கலாப்ரியா 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4.க ந சுப்ரமணியம் 5. பாலகிருஷ்ணபாலாஜி 6. பாலகுமாரன் 7. சிமோகன் 1987 8.கற்பகவினாயகம் 9.கோபால்ராஜாராம்

புயலிலே ஒரு தோணி நாவலின் ஆசிரியர் :- ப. சிங்காரம்

பரிந்துரை செய்தவர்கள்

1.சிமோகன் 2.ராஜமார்த்தண்டன் 3.விக்கிரமாதித்யன் 4.ஜெயமோகன் 5. எஸ்.ராமகிருஷ்ணன் 6.சு வெங்கடேசன் 7. சாரு நிவேதிதா 8. மாலன் 9. செந்தில்

8 பரிந்துரைகளுடன் ஆறாம் இடத்தை பிடித்த நாவல்

கோபல்லகிராமம்

நாவலின் ஆசிரியர் :- கிராஜநாராயணன்

பரிந்துரை செய்தவர்கள்

1. ஆர்வி 2. கந்தர்வன் 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4.இரா.முருகன் 5.கிரிஜா 6. பாலகிருஷ்ணபாலாஜி 7. பாலகுமாரன் 8.கற்பகவினாயகம்

7 பரிந்துரைகளுடன் ஏழாம் இடத்தை பிடித்த நாவல்கள்

1. பொய்த்தேவு 2. தலைமுறைகள்

பொய்த்தேவு நாவலின் ஆசிரியர் :- க நசுப்ரமணியம்

பரிந்துரை செய்தவர்கள்

1..ராஜமார்த்தண்டன் 2. கந்தர்வன் 3. விக்கிரமாதித்யன் 4. ஜெயமோகன் 5.இரா.முருகன் 6.கிரிஜா 7.சிமோகன் 1987

தலைமுறைகள் நாவலின் ஆசிரியர் :- நீலபத்மநாபன்

பரிந்துரை செய்தவர்கள்

1.வெங்கட்சாமினாதன் 2. கந்தர்வன் 3.ஜெயமோகன் 4.கநசுப்ரமணியம் 5.பாலகிருஷ்ணபாலாஜி 6. ரமணி 7. கோபால்ராஜாராம்

6 பரிந்துரைகளுடன் எட்டாம் இடத்தை பிடித்த நாவல்கள்

1. 18 வது அட்சக்கோடு 2.நாளை மற்றுமொரு நாளே

3. பொன்னியின் செல்வன் 4. விஷ்ணுபுரம்

18 வது அட்சக்கோடு நாவலின் ஆசிரியர் :- அசோகமித்திரன்

பரிந்துரை செய்தவர்கள்

1. வெங்கட் 2. சா.கந்தசாமி 3. கற்றதுராம் 4. கிரிஜா 5. பாலகுமாரன் 6. செந்தில்

நாளை மற்றுமொரு நாளே நாவலின் ஆசிரியர் :- ஜி.நாகராஜன்

பரிந்துரை செய்தவர்கள்

1. சிமோகன் 2. வெங்கட் 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4. இரா.முருகன் 5. நா.முத்துக்குமார் 6.ரமணி

பொன்னியின் செல்வன் நாவலின் ஆசிரியர் :- கல்கி

பரிந்துரை செய்தவர்கள்

1.ஆர்வி 2.சின்னக்குத்தூசி 3. ஃபோரம்ஹப்.காம் 4. மய்யம்.காம் 5. திடாப்டென்ஸ்.காம் 6. பாலகுமாரன்

விஷ்ணுபுரம் நாவலின்ஆசிரியர் :- ஜெயமோகன்

பரிந்துரை செய்தவர்கள்

1. சி.மோகன் 2.ஆர்வி 3.ராஜமார்த்தண்டன் 4.வெங்கட்சாமினாதன் 5.செந்தில் 6. ஜெயமோகன்

5 பரிந்துரைகளுடன் ஒன்பதாம் இடத்தை பிடித்த நாவல்கள்

1. கரைந்த நிழல்கள் 2. கோவேறு கழுதைகள்

3.பள்ளிகொண்டபுரம்

கரைந்த நிழல்கள் நாவலின் ஆசிரியர் :- அசோகமித்திரன்

பரிந்துரை செய்தவர்கள்

1.ஆர்வி 2. விக்கிரமாதித்யன் 3. நா.முத்துக்குமார் 4.பாலகிருஷ்ணபாலாஜி 5.கோபால்ராஜாராம்

கோவேறு கழுதைகள் நாவலின் ஆசிரியர் :- இமையம்

பரிந்துரை செய்தவர்கள்

1. வெங்கட்சாமினாதன் 2.கந்தர்வன் 3. கலாப்ரியா 4. இரா.முருகன் 5.கிரிஜா

பள்ளிகொண்டபுரம் நாவலின் ஆசிரியர் :- நீலபத்மநாபன்

பரிந்துரை செய்தவர்கள்

1. சிமோகன் 2. வெங்கட் 3. சா.கந்தசாமி 4. இரா.முருகன் 5.கற்பகவினாயகம்

4 பரிந்துரைகளுடன் பத்தாம் இடத்தை பிடித்த நாவல்கள்

1.அம்மா வந்தாள் 2. ஆழிசூழ்உலகு 3. நாகம்மாள்

4. நினைவுப் பாதை 5. புத்தம் வீடு 6. சாயாவனம் 7. வானம் வசப்படும்

8. வாசவேஸ்வரம்

அம்மா வந்தாள் நாவலின் ஆசிரியர் :- தி.ஜானகிராமன்

பரிந்துரை செய்தவர்கள்

1. ராஜமார்த்தண்டன் 2. காசிஆனந்தன் 3. சிமோகன் 1987 4. .கோபால்ராஜாராம்

ஆழி சூழ் உலகு நாவலின் ஆசிரியர் :- ஜோ.டி.குரூஸ்

பரிந்துரை செய்தவர்கள்

1. சு. வேணுகோபால் 2. நாஞ்சில்நாடன் 3. செந்தில் 4. பொன்னீலன்

நாகம்மாள் நாவலின் ஆசிரியர் :- ஆர்.சண்முகசுந்தரம்

பரிந்துரை செய்தவர்கள்

1. சா.கந்தசாமி 2. பெருமாள்முருகன் 3. கநசுப்ரமணியம் 4. சிமோகன் 1987

நினைவுப் பாதை நாவலின் ஆசிரியர் :- நகுலன்

பரிந்துரை செய்தவர்கள்

1.சிமோகன் 2. விக்கிரமாதித்யன் 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4.கநசுப்ரமணியம்

புத்தம் வீடு நாவலின் ஆசிரியர் :- ஹெப்சிபா ஜேசுதாசன்

பரிந்துரை செய்தவர்கள்

1. கந்தர்வன் 2.விக்கிரமாதித்யன் 3. கனிமொழி 4. ரமணி

சாயாவனம் நாவலின் ஆசிரியர் :- சா. கந்தசாமி

பரிந்துரை செய்தவர்கள்

1.சிமோகன் 2.ஆர்.வி 3. கந்தர்வன் 4. பாலகுமாரன்

வானம் வசப்படும் நாவலின் ஆசிரியர் :- பிரபஞ்சன்

பரிந்துரை செய்தவர்கள்

1. வெங்கட்சாமினாதன் 2.சா.கந்தசாமி 3. தொ.பரமசிவன் 4. கற்பகவினாயகம்

வாசவேஸ்வரம் நாவலின் ஆசிரியர் :- கிருத்திகா

பரிந்துரை செய்தவர்கள்

1. சா.கந்தசாமி 2.விக்கிரமாதித்யன் 3. கநசுப்ரமணியம் 4. கோபால்ராஜாராம்

இந்த முடிவுகளை வைத்து பார்க்கும்போது , தி.ஜானகிராமனின் இரண்டு நாவல்களும், சுந்தரராமசாமியின் இரண்டு நாவல்களும், நீலபத்மநாபனின் இரண்டு நாவல்களும், அசோகமித்திரனின் இரண்டு நாவல்களும் டாப் 10 தரத்தில் தலை சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் பிடித்து உள்ளன. பரிந்துரை செய்த எழுத்தாளர்களில் சிமோகனின் இரண்டு பட்டியலிலும் இருந்து 13 நாவல்களும், எஸ் ராமகிருஷ்ணனின் இரண்டு பட்டியலிலும் இருந்து 8 நாவல்களும், பாலகுமாரனின் பட்டியலில் இருந்து 8 நாவல்களும், கந்தர்வன் பட்டியலில் இருந்து 8 நாவல்களும், ஜெயமோகன் பட்டியலில்இருந்து 7 நாவல்களும், இரா முருகன் பட்டியலில் இருந்து 7 நாவல்களும், க ந சுப்ரமணியம் பட்டியலில் இருந்து 7 நாவல்களும், ராஜமார்த்தாண்டன் பட்டியலில் இருந்து 7 நாவல்களும், விக்கிரமாதித்யன் பட்டியலில் இருந்து 7 நாவல்களும், சா. கந்தசாமி பட்டியலில் இருந்து 6 நாவல்களும், வெங்கட்சாமினாதன் பட்டியலில் இருந்து 6 நாவல்களும் தலைசிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் பிடித்து உள்ளன. இந்த பட்டியலில் மூன்று பரிந்துரைகள் பெற்ற நாவல்கள் 12, இரண்டு பரிந்துரைகள் பெற்ற நாவல்கள் 27, ஒரு பரிந்துரை பெற்ற நாவல்கள் 55. இந்த 94 நாவல்களும் டாப் 10 க்கு வெளியே இருந்தாலும் அவை மிக முக்கிய நாவல்கள் என்பதில் சந்தேகம் இல்லை. டாப் 10 இடத்தைப் பிடித்த நாவல்கள் பற்றிய விவரங்களை உங்களுக்கு கீழே தந்திருக்கிறேன்.

நாவல் ——— ஆசிரியர்——-பதிப்பகம்——விலை

1.மோகமுள்- தி.ஜானகிராமன் - காலச்சுவடு பதிப்பகம்- ரூ-475/

2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்– காலச்சுவடு – ரூ-250/

3. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தரராமசாமி–காலச்சுவடு பதிப்பகம்- ரூ-175/

4. ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தரராமசாமி–காலச்சுவடு பதிப்பகம்- ரூ-175/

5. கடல்புரத்தில் – வண்ணநிலவன்–நற்றிணை பதிப்பகம் – ரூ 90/

6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்–நற்றிணை பதிப்பகம் – ரூ 350/

7 .கோபல்ல கிராமம் – கிராஜநாராயணன்—காலச்சுவடு பதிப்பகம்- ரூ-150/

8. பொய்த்தேவு – க ந சுப்ரமணியம்–நற்றிணை பதிப்பகம் – ரூ 180/

9. தலைமுறைகள் – நீலபத்மநாபன்–காலச்சுவடு பதிப்பகம்- ரூ-290/

10. 18 வது அட்சக்கோடு – அசோகமித்திரன்–காலச்சுவடு பதிப்பகம்- ரூ-175/

11. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்–காலச்சுவடு பதிப்பகம்- ரூ-100/

12. பொன்னியின் செல்வன் – கல்கி- பல பதிப்பகங்கள்

13. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் -நற்றிணை பதிப்பகம் – ரூ 680/

14. கரைந்தநிழல்கள் – அசோகமித்திரன்–நற்றிணை பதிப்பகம் – ரூ 120/

15. கோவேறு கழுதைகள் – இமையம்- க்ரியா பதிப்பகம் — ரூ 180/

16. பள்ளிகொண்டபுரம் – நீலபத்மநாபன்–காலச்சுவடு பதிப்பகம்- ரூ-225/

17. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-130/

18. ஆழி சூழ் உலகு – ஜோ.டி.குரூஸ் — தமிழினி பதிப்பகம் -ரூ 450/

19. நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம்–நற்றிணை பதிப்பகம் – ரூ 120/

20. நினைவுப்பாதை – நகுலன்–காலச்சுவடு பதிப்பகம்- ரூ-175/

21. புத்தம்வீடு – ஹெப்சிபாஜேசுதாசன்–காலச்சுவடு பதிப்பகம்- ரூ-120/

22. சாயாவனம் – சா. கந்தசாமி–நற்றிணை பதிப்பகம் – ரூ 160/

23. வானம் வசப்படும் – பிரபஞ்சன்–நற்றிணை பதிப்பகம் – ரூ 480/

24. வாசவேஸ்வரம் – கிருத்திகா–காலச்சுவடு பதிப்பகம்- ரூ-140/

http://puthu.thinnai.com/?p=26102

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பயனுள்ள பதிவு கிருபன்.
நன்றி  
 

வாசிக்க கனக்க இருக்கு இணைப்பிற்கு நன்றி கிருபன் .

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

டாப் 10 என்றால் என்ன? :rolleyes:

எனக்குப் பிடித்த நாவல்கள் (பிரபல்யமானோர் மட்டுமா வரிசைப்படுத்தலாம்...ம்ஹும்)

 

1. காடு - ஜெயமோகன்

2. ம் - ஷோபா சக்தி

3. குழந்தைகள் பெண்கள் ஆண்கள்: சுந்தர ராமசாமி

4. ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி

5. போரும் அமைதியும் (மொழிபெயர்ப்பு நாவல்: - லியோ டால்ஸ்டாய்)

6. ஆழி சூழ் உலகு - ஜே.டி.குரூஸ்

7. Uncle Tom's Cabin - Harriet Beecher Stowe

 


டாப் 10 என்றால் என்ன? :rolleyes:

 

69 மாதிரி ஒன்று... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன். வாசிக்கத்தான் நேரம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.