Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லுர் வளாகத்திற்குள் விக்னேஸ்வரன் அத்துமீறல்! Photo's

Featured Replies

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் இந்தமுறை திருவிழாவின் போது இரண்டாவது தடவையாகவும் சட்டம் வளைந்து கொடுத்துள்ளது.

vikki_nallur_1.JPG

ஆலயத்திற்கு வருபவர்களிற்கான பொது நடைமுறை என ஆலய நிர்வாகமும், மாநகரசபையும் இணைந்து கடைப்பிடித்து வரும் நடைமுறை இரண்டாவது தடவையாகவும் நேற்று மீறப்பட்டது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

vikki_nallur_3.JPG

ஆலய வளாகத்திற்குள் ஏற்கனவே மேர்வின் சில்வா வாகனத்தில் பிரவேசித்ததைப் போல, நேற்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாகனத்தில் பிரவேசித்தார்.

vikki_nallur_4.jpg

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள எப்.எம்மின் கலைகத்தை திறந்து வைக்க வந்த விக்னேஸ்வரன், ஆலயத்திருவிழாவிற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்புத்தடை பகுதியில்  வாகனத்தை நிறுத்தாமல் உள்ளே பிரவேசித்தார்.

vikki_nallur_2.jpg

துவிச்சக்கர வண்டிகள் கூட உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், வாகனமொன்று உள்ளே வருவதை மக்கள் அதிசயமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.

இதேபோல, அண்மையில் மேர்வின் சில்வாவும் ஆலயத்திற்குள் இப்படி அதிரடியாக வாகனத்துடன் நுழைந்திருந்தார்.

ஆலய சூழல் மாசுபட்டுவிட்டதாக அப்பொழுது அறச்சீற்றம் கொண்ட தமிழ் பத்திரிகைகள் எல்லாம், இந்த விடயத்தில் மௌனம் காத்துக் கொண்டிருப்பது ஏன்?http://www.pathivu.com/news/33284/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எனில் விக்னேஸ்வரன் துரோகி தான்...

  • கருத்துக்கள உறவுகள்
வாகனமொன்று உள்ளே வருவதை மக்கள் அதிசயமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.

 

இனிமேல் ஆம்புலன்ஸ் வந்தாலும் ஒருக்கால் நிப்பாட்டிப் போட்டுத் தான் வரவேணும்! :D

 

மேர்வின் என்கிற காவாலிக்கும், விக்கினேஸ்வரனுக்கும் உள்ள வித்தியாசம் 'மக்களுக்குத்' தெரியும் என நினைக்கிறேன்! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி எனில் விக்னேஸ்வரன் துரோகி தான்...

 

அவா் எப்பவோ....

தோ்தல் காலத்திலையே எத்தனையோ போ் அந்த பட்டத்தை கொடுத்திட்டாங்களே...

 

  • கருத்துக்கள உறவுகள்

இனி  நாம  சொல்லி

அவர் சட்டம் படித்து..

அதை மதித்து.... :(

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலும் முக்கிய தலைவர்கள் சில சந்தர்ப்பங்களில்.. பஜிரோக்களில் நல்லூர் ஆதினம் வரை அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் பாதுகாப்புக் கருதி வாகனங்களில் வர அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் ஒருபோதும் நல்லூர் நிர்வாகத்தால் அனுமதிக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் மட்டும் அவர்களுக்குரிய வண்டிகளில் அமர்ந்து வர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 

குறிப்பிட்ட காலங்களில் பள்ளிக்காக சாரண சேவையாற்றியதால்.. இது குறித்து எமக்கு தரப்பட்ட அறிவுரையும் இதே..! :icon_idea::)


பதிவு ஊடகக்காரர்கள் யாழ் இணையக் களத்தில் பொதுமக்களோடு நேரடி கலந்துரையாடல் ஒன்றை வைத்துக் கொண்டு..நாட்டு நடப்புகளை சரியாகப் புரிந்து கொண்டு எழுதுவது நல்லது.

 

மேர்வின் சில்வாவின் நடவடிக்கை அடாத்தானது. எந்த வாகனங்களும்.. (கோவில் பணியில் உள்ள வாகனங்கள் தவிர) நல்லூர் முன் வீதிக்குள் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. மேலும்.. திருவிழாக்காலங்களில்.. பாதணிகளும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வகையில்.. இவை அனைத்தையும் மீறிய மேர்வினின் நடவடிக்கையையும்.... நல்லூர் பின் வீதியால்.. கடைத்தொகுதி வரை.. பாதுகாப்பு நிமித்தம்.. வாகனத்தில் வருவதையும்.. ஒன்றாக நோக்க முடியாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vikki_nallur_4.jpg

 

இப்படியான வாகனங்களில் விறகுதான் ஏற்றுவார்கள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

vikki_nallur_4.jpg

 

இப்படியான வாகனங்களில் விறகுதான் ஏற்றுவார்கள். :icon_mrgreen:

 

 

 

இப்படியான வாகனங்களில் விறகுதான் ஏற்றுவார்கள். :icon_mrgreen:

 

 

இப்படியெல்லாம் சொல்லக்கூடாது

நான் அழுதிடுவன்

அவருக்கு

அந்தளவுக்கு வயசாகல.. :D

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.