Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா, கள்ளிக்குளம், பெரியபுளியங்குளம் என்ற தமிழ் கிராமத்தில் 300 சிங்கள குடியேற்றம்!

Featured Replies

வவுனியா, கள்ளிக்குளம், பெரியபுளியங்குளம் என்ற தமிழ் கிராமத்தில் 300 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
வவுனியாவில் அண்மைக் காலமாக பல தமிழ் கிராமங்களில் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, தமிழ் மக்கள் மத்தியில் இன சிதைப்பை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமான கள்ளிக்குளத்திற்கு அருகாமையில் உள்ள பெரியபுளியங்குளத்தில் 300 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இக்கிராம மக்கள், பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்து இன்று பல இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமன்றி அவர்களின் பல விவசாய நிலங்களும் இப்பகுதியில் உள்ள நிலையில் இக்குடியேற்றம் இடம்பெறுக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அரசினால் வவுனியா மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அரச உயரதிகாரிகள் துணை போய்க்கொண்டுள்ளனர்.

இவ்வாறான தமிழ் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் எமது இனத்தின் மீது ஏவி விடப்பட்டுள்ள இன சிதைப்பாகவே கருதுகின்றேன்.

அரசும் அவர்களின் செல்லப்பிள்ளைகளான அமைச்சர்கள் சிலரும் தமது சமூகம் சார்ந்த நன்மைகளையே பார்வையிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையிலேயே தற்போது குடியேற்றம் செய்யப்படும் பெரியபுளயங்குளம் கிராமத்திலும் வீதிகள், வீட்டு வசதிகள் என அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் அருகில் உள்ள கள்ளிக்குளத்தில் கடந்த 4 வருடங்களாக மீள்குடியேறியுள்ள தமிழ் மக்களுக்கு எவ்வித அடிப்படை வதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/33312/57/300/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தனது நிகழ்ச்சி நிரலின்படி  எந்த எதிர்ப்பும் இல்லாமல்  செய்ய வேண்டிய காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த சிந்தனை இது. இதை சரியென்று சொல்பவர்கள் புலம்பெயர் தேசத்தில் அதிகம் பேர் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே.... வேகத்தில் போனால், இன்னும் 25 வருடத்தில் இலங்கையில் தமிழ் பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள். :o  :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே.... வேகத்தில் போனால், இன்னும் 25 வருடத்தில் இலங்கையில் தமிழ் பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள். :o  :huh:

 

அதன் பின் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப்படும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தனது நிகழ்ச்சி நிரலின்படி  எந்த எதிர்ப்பும் இல்லாமல்  செய்ய வேண்டிய காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றது.

 

 

மகிந்த சிந்தனை இது. இதை சரியென்று சொல்பவர்கள் புலம்பெயர் தேசத்தில் அதிகம் பேர் இருக்கின்றார்கள்.

 

 

இதே.... வேகத்தில் போனால், இன்னும் 25 வருடத்தில் இலங்கையில் தமிழ் பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள். :o  :huh:

 

 

அதன் பின் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப்படும். :icon_idea:

  இதை எல்லாம் தடுக்க ஒரே வழி புலம் பெயர் தமிழர்கள் நாடு திரும்புவது தான். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  இதை எல்லாம் தடுக்க ஒரே வழி புலம் பெயர் தமிழர்கள் நாடு திரும்புவது தான். :)

 

சரி..உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கும் வேண்டாம். திரும்பிப்போய் என்னத்தை செய்யலாம் எண்டதை ஒருக்கால் வரிசைப்படுத்தி சொல்லுங்கோ? :(
இந்த கேள்வி ஈழ ஆதவரவாளர்களுக்கு மட்டும். :)
  • கருத்துக்கள உறவுகள்

 

சரி..உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கும் வேண்டாம். திரும்பிப்போய் என்னத்தை செய்யலாம் எண்டதை ஒருக்கால் வரிசைப்படுத்தி சொல்லுங்கோ? :(
இந்த கேள்வி ஈழ ஆதவரவாளர்களுக்கு மட்டும். :)

 

 

 ஒரே வரி தான் எங்கடை நிலத்தில போய் குந்தி இருந்தால் கானும்.அத சரிப்பட்டுவாராது என்டால் ஒரு போராட்டமும் வோண்டாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ வாசித்ததுதான் ஞாபகம் வருகிறது. இது எனக்கும் பொருந்தும்.

 

"ஈழத்தமிழர்களிடம் பல காலமாகவே ஒரு வழக்கு உள்ளது. யூதர்களுடன் தங்களை கற்பனையாக இணைத்துப் பார்த்து சுயஇன்பம் அனுபவித்து கொள்வார்கள். யூதர்கள் தங்களிற்கென ஒரு நாடு உருவாக்க வேண்டும் என்றதும், உலகெங்குமிருந்து இஸ்ரேலை நோக்கி படையெடுத்து சென்றார்கள். மாறாக இலங்கையில், ஈழத்தமிழர்கள் தங்களிற்கென ஒரு நாட்டை உருவாக்க வேண்டுமென மிகக்குறிப்பிட்ட எண்ணிக்கையான இளைஞர்கள் போராடப் புறப்பட்ட சமயத்தில், அதனை சாக்காக வைத்து பெரும்பாலானவர்கள் அங்கிருந்து தப்பி வெளியேறினார்கள்."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.