Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புதிய மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு  மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine)  கருணையுள்ளம் கொண்டவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

 
 
நீண்டகாலமாக அவசியத் தேவையாகவிருந்த  மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியைப் பெற்றுத் தருமாறு புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்தியர் திரு.சரவணபவனின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி கனகரத்தினம் கனகம்மா குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
 
 
இந்த நிகழ்வில் திருமதி உஷா ரகுநாதன், உயிரியல் வைத்தியப் பொறியியலாளர் திருமதி சாந்தி,  மருத்துவவியல் நிபுணர் டாக்டர் சரவணபவன், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் குணதாசன் மற்றும் பொதுமக்கள்    கலந்துகொண்டனர்.
 
 
 
hos-003.jpg
 
 
hos-008.jpg
 
hos-009.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=858283352120799899#sthash.VxE2UjzR.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அந்த வைத்தியரின்.... முகத்தில் தெரியும், சந்தோசத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
தமது ஊரில் உள்ள தேவைகளை, அரசை நம்பியிராது தனிப்பட்டவர்கள், அமைப்புகள் செய்யும் சேவை பாராட்டுக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் தமிழர் பகுதிகளுக்கு எந்த உதவியும் செய்து, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதில்லையோ? :o

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் தமிழர் பகுதிகளுக்கு எந்த உதவியும் செய்து, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதில்லையோ? :o

 

மிகவும் குறைவு.

உதாரணத்துக்கு தமிழ்ப் பகுதிகளுக்கு வர வேண்டிய புற்று நோய் பொன்ற மருத்துவ உபகரணங்களை சிங்களப் பகுதிகளுக்கு கொண்டு போய் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்களின் ஊர்ப்பற்று மெச்சத்தக்கது.ஊர்த்தேவையை உடனுக்குடன் தீர்த்து வைக்கின்றார்கள்.

இப்படி எலோரும் மாறிவிட்டால் மக்களின் சகல தேவைகளும் பூர்த்தியாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வைத்தியரின்.... முகத்தில் தெரியும், சந்தோசத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

தமது ஊரில் உள்ள தேவைகளை, அரசை நம்பியிராது தனிப்பட்டவர்கள், அமைப்புகள் செய்யும் சேவை பாராட்டுக்குரியது.

 

 

இங்கு  ஏற்கனவே  வன்னி  வைத்தியர் ஒருவர்

தனது சொந்த மெசினை  கிழமைக்கு ஒரு தடவை

வன்னியிலிருந்து வாகனத்தில் கொண்டு வந்து

மக்களுக்கு சேவையாற்றி  வந்தார்

அதைக்கொண்டு வரும் போது 

அதற்கு ஏற்படும்  அசௌகரியங்களையும் ஆபத்தையும் விளக்கி

புலம் பெயர் புங்குடுதீவு மக்களிடம் கோரிக்கை விட்டிருந்தார்

 

அதை ஏற்று பல அமைப்புக்கள் அதை  எடுத்துக்கொண்டபோதும்

சுவிசிலுள்ள புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் 

ஒரு குடும்பத்தின் உதவியோடு இதைச்செய்து முடித்திருக்கிறது

 

அந்தக்குடும்பத்துக்கு

வாழ்த்துக்களும் நன்றிகளும்

வாழ்க  வளமுடன்..

 

http://www.swisspungudutivu.com/?p=10445

உலகம் எல்லாம் புங்குடுதீவு அமைப்புக்கள் இருக்கு ஆனால் தனி ஒரு குடும்பம் தான் வாங்கி கொடுத்திருக்கு வாழ்த்துக்கள் ...

 

இவ்வாறு தங்கள் மண்ணுக்கு செய்பவர்கள் நேரடியாக உதவி செய்வது மகிழ்வான விடையம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தோசமான செய்தி.கிராமத்திற்கு கிராமம் இப்படியான கருணையுள்ளம் கொண்டவர்கள்  முன்வரவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.