Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி. 
[Thursday 2014-08-21 09:00]
SUBRAMANIAN-SWAMY-150.jpg

இலங்கையின் உள்ளூர் விடயங்கள் தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்ளவோ, இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார். இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த நான்காவது பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று பிரதான உரை நிகழ்த்திய சுப்பிரமணியம் சுவாமி மேலும் உரையாற்றுகையில்,

  

இந்தியாவை பொறுத்த மட்டில் தேசிய மட்டத்திலான நலனை கருத்திற் கொண்டே தனது வெளிநாட்டு மற்றும் தேசிய கொள்கையை வகுக்குமே தவிர பிராந்திய அல்லது ஒரு தரப்பினரின் தேவையை கருத்திற் கொண்டல்ல என்று தெரிவித்த அவர், இலங்கையும் இதனை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள சிலரது அழுத்தங்கள் காரணமாகவே இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் அப்போது காணப்பட்டன என்றாலும் எப்போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கவும் இல்லை. ஒத்துழைக்கவும் இல்லை. இதனை இந்தியாவில் நடைபெற்ற சகல தேர்தல்களின் போதும் மக்கள் நிரூபித்து காண்பித்துள்ளனர்.

தற்பொழுது இந்தியாவில் பலமான அரசாங்கம் பதவியேற்றுள்ளது. எனவே எந்த அழுத்தங்களுக்கும் அடிபணிய தேவையில்லை. ஏனெனில் இலங்கை - இந்திய உறவு மிகவும் பழைமையானது. நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவே எதிர்பார்க்கிறது. எனவேதான் தனது பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு கொடுத்தார். இதன் மூலம் புதிய உறவின் ஆரம்பத்தை தற்பொழுது காணமுடிகிறது.

சிலருக்கு புரிந்துணர்வு இல்லாமையினாலேயே இலங்கை - இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டன. இந்திய மக்கள் சகல சந்தர்ப்பங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துள்ளனர். தமிழ் நாட்டிலுள்ள ஒரு சிறிய குழுவினர் மாத்திரமே பயங்கரவாதத்திற்கு ஒத்துழைக்கின்றனர். அது ஒரு பாரிய விடயமல்ல. எனவே தான் புலிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே ஆதரவழித்த சகலரையும் மக்கள் தோற்கடித்துள்ளனர். புலிகள் சிங்கள தலைவர்களைவிட அதிகமாக தமிழ் தலைவர்களையே கொலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினம் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் சந்தோசமடைகின்றேன். அவர் எனது நண்பராவார். புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிக்க தனது தாயான இந்திரா காந்தி ஆரம்பத்தில் மேற்கொண்ட தீர்மானம் வரலாற்று தவறாகும் என பல தடவைகள் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்று ஐ.நா. ஒரு போதும் கூறவில்லை. மாறாக பிரித்தானிவிலுள்ள புலிகள் சார்பு அரச சார்பற்ற நிறுவனங்களே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது என்றும் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறிவருகின்றனர். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சரியோ பிழையோ இந்த சம்பவத்தில் அதிகமான சிங்களவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இதனை இன அழிப்பு என கூற முடியாது. தமிழ் மக்களின் உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஏனெனில் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு தன்னுடன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண முதலமைச்சரை அழைத்த போது அதனை மறுத்த அவர் அவ்வாறு வருவது தான் தமிழ் சமூகத்திற்கு செய்கின்ற அநீதி என்று கூறியிருந்தார். மற்றும் சிலர் இராணுவத்திற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் அதே இராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதி அபேட்சகராக தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களித்தனர்.

அதிகாரம் தொடர்பில் பேசுகின்றனர். வடபகுதி மக்களுக்கு தேவையான சகல அதிகாரங்களையும் தான் வழங்கியுள்ளதாக இதற்கு முன்னர் மேற்கொண்ட பல விஜயங்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெளிவுபடுத்தினார். குறித்த மாகாணத்தில் தேர்தலை நடத்தினால் நாம் தோல்வி அடைவோம் என்று தெரிந்தும் அதிகாரத்தை பகிர வேண்டும் என்பதற்காக வடமாகாண தேர்தலை ஜனாதிபதி நடத்தி முடித்துள்ளார். அந்த தேர்தலின் மூலம் முதலமைச்சர் ஒருவரும் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். உலகில் எந்த ஒரு தலைவரும் செய்யாத வேலை இது வென்றும் அவர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=115354&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

932514616cartoon21082014.jpg

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினம் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் சந்தோசமடைகின்றேன். அவர் எனது நண்பராவார்

 

 

 

 
Crucial evidence linking Chandraswami to the Rajiv case went missing from Rao's PMO. Outlookinvestigates.
 
 
 

 

 

  • File containing intercepted messages from foreign intelligence agencies, said to be addressed to Chandraswami and Janata Party president Subramanian Swamy, destroyed by senior officials in the PMO.

  •  

     

     

    The crucial third category, say sources, contained wireless intercepts of messages from foreign intelligence agencies to Chandraswami and Subramanian Swamy. These were passed on by RAW to the Cabinet Secretariat. A RAW official confirmed to the Jain Commission that the transcripts had indeed been passed on by the intelligence agency.

    What did some of these missing files have? Intelligence sources say one file contained intercepted messages as well as details of the movements of Subramanian Swamy and Chandraswami on assassination day.

     

     

    Interestingly, in a statement before the commission, R. Velusami, the then president of the Tamil Nadu unit of the Janata Party, contended that Subramanian Swamy had checked into the Trident Hotel in Madras while Chandraswami was lodged at the Sindoori Hotel owned by Apollo Hospitals on May 21, the day Rajiv was assassinated. Both left for Bangalore by car through Sriperumbudur before reaching Delhi on a special flight.

     

     

     

    http://www.outlookindia.com/article/The-Deadly-Duo/204614

     

     

     

     

     

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்.... தனித்து நின்று போட்டியிட்டோ, கூட்டாகவோ.....
வெற்றி பெற பலம் அற்ற  ஒருவர், இந்தியா சார்பாக.... அறிக்கை விடுவது தான் வேடிக்கை.
இவரின் வெளிநாடு சம்பந்தமான அறிக்கைகளை..... மத்திய அரசும் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பது, இந்தியாவில் மட்டுமே நடக்கும்.

 

 

 

வைக்கல் பட்டடை நாய் என்கிறார் போல   :D

அப்படி என்றால் சு.சு இலங்கையை எப்படியும் காக்க என்னவென்றாலும் செய்வேன் என்று சபதம் எடுத்துள்ளார் என தெரிகிறது.. இந்தியா வரும் சம்பந்தர் ஐயாவிடம் இந்தியா= சு.சு =இலங்கை என்பதிலிருந்து இலங்கையை காப்பாற்றவேண்டும் என்று கட்டளை இடுமா? இப்போது அவசரமாக போவது தமிழர் நன்மைக்கே என்ற ஒரு நிழல் தோற்றம் தான்..எப்படி தமிழர்களை ஏமாற்றலாம், சிங்களத்தை காக்கலாம் என்பது தான் இன்றைய அரசியல்.. இன்னும் எத்தனையோ இருக்கு.. இலங்கை டெல்லி அரசியலில் சு.சு, சுவாமா போன்றவர்கள் மூலம் நிரந்தரமாக ஆழமாக கால் ஊன்றிவிட்டது. மோடி வந்தால் என்ன? எந்த கேடி வந்தால் என்ன? சு.சு வின் நரித்தந்திரம் தான் வேலை செய்யப்போகிறது.. இந்த நரிகளை எப்படி அமுக்கலாம் என்பது தான் தமிழர்களின் அறிவிற்கு வேலை..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினம் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் சந்தோசமடைகின்றேன்
இதையும் சிங்களவர்கள் நம்பினார்கள் என்றால்.....இந்தியாவின் செல்வாக்கில் சிறிலங்கா செல்வதை யாரலும் தடுக்க முடியாது

தமிழ் மக்களின் உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு தன்னுடன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண முதலமைச்சரை அழைத்த போது அதனை மறுத்த அவர் அவ்வாறு வருவது தான் தமிழ் சமூகத்திற்கு செய்கின்ற அநீதி என்று கூறியிருந்தார். மற்றும் சிலர் இராணுவத்திற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர்
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் எங்களுக்குத்தான் அதன் வலி புரியும்.....

இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

தனது தொழிலுக்கு பாதிப்பு வந்திடும் என்று பயப்புடுராப்ள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

 

 

இத்தனைக்கும் இவர் ஒரு இந்திய உத்தியோகபூர்வ பிரதிநிதியா?  :unsure:

இத்தனைக்கும் இவர் ஒரு இந்திய உத்தியோகபூர்வ பிரதிநிதியா?  :unsure:

 

எங்களுக்கு சார்பாக மூத்திர சந்திலிருந்து ஒரு முன்னுசாமி சொல்வதை உலகமே சொல்வது போல நாங்கள் build-up செய்வதில்லையா...அது மாதிரி சிங்களவனும் இந்த ஆளை தூக்கிபிடிக்கலாம்..

 

சூ.சாமி ஒரு மாமாப்பயல்...ஆகவே இலங்கையிலிருந்து regular payment வருவதற்காக எதுவும் செய்யலாம்......

 

வெளிநாடுகளில் பார்த்திருப்பீர்கள் பெரிய பதவிகளில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் ஒரு "consulting" ஆபீஸ் / "research" சென்ட்டர் நடத்துவது போல் இந்த ஆளும் செய்யலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு சார்பாக மூத்திர சந்திலிருந்து ஒரு முன்னுசாமி சொல்வதை உலகமே சொல்வது போல நாங்கள் build-up செய்வதில்லையா...அது மாதிரி சிங்களவனும் இந்த ஆளை தூக்கிபிடிக்கலாம்..

 

சூ.சாமி ஒரு மாமாப்பயல்...ஆகவே இலங்கையிலிருந்து regular payment வருவதற்காக எதுவும் செய்யலாம்......

 

வெளிநாடுகளில் பார்த்திருப்பீர்கள் பெரிய பதவிகளில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் ஒரு "consulting" ஆபீஸ் / "research" சென்ட்டர் நடத்துவது போல் இந்த ஆளும் செய்யலாம்...

 

எங்களுக்கு சார்பாக மூத்திர சந்திலிருந்து ஒரு முன்னுசாமி!!!
 
முன்னுசாமியெண்டு இப்ப ஆரை சொல்லவாறியள்?

 

எங்களுக்கு சார்பாக மூத்திர சந்திலிருந்து ஒரு முன்னுசாமி!!!
 
முன்னுசாமியெண்டு இப்ப ஆரை சொல்லவாறியள்?

 

 

from Hillary Clinton to any insignificant person like "Simon"

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

from Hillary Clinton to any insignificant person like "Simon"

 

 

இந்த குமாரசாமிக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எந்தப்பண்டாரம் உங்களுக்கு சொன்னது? 

இந்த குமாரசாமிக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எந்தப்பண்டாரம் உங்களுக்கு சொன்னது? 

 

தெரிந்திருக்கும் என்று தானே அப்படி எழுதினான்...

 

நான் மற்றவர்கள் "உறுதிப்படுத்தும் மட்டும்" அவர்களை குறைவாக மதிப்பிடுவதில்லை... :)

எப்போ யாழ் பயணம்..நல்ல பாணும் தேங்காய்சம்பலும் சாப்பிட்டுவிட்டு..சைக்கிளில் கோயில் குளம் என்று சென்று வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு...இங்கு படங்களை பிரசுரிக்கவும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.