Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு விவசாய அமைச்சின் இணைப்பு அலுவலகம் மாங்குளத்தில் திறந்துவைப்பு

Featured Replies

agri%20654s.jpg
 
வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் இணைப்பு அலுவலகம் மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாங்குளம் கண்டி வீதியில் முல்லை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் இயங்கிவரும் கட்டடத் தொகுதியில் இந்த இணைப்பு அலுவலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
 
வடக்கு மாகாண சபையின் அமைச்சுகளின் தலைமை அலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கி வருவதால் வன்னிப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொதுமக்கள் இதனைச் சுட்டிக்காட்டியதையடுத்தே விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தனது இணைப்பு அலுவலகம் ஒன்றை மாங்குளத்தில் திறந்துள்ளது.
 
அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் முதலாவது செயற்பாடாக நீர்ப்பாசனத் திணைக்களத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றிய 6 சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி அதற்கான நியமனக் கடிதங்கள் ஊழியர்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. மாங்குளம் இணைப்பு அலுவலகம் ஏனைய மாகாண அலுவலகங்களைப் போல சனி, ஞாயிறு தவிர்ந்த ஏனைய ஐந்து நாள்களும் இயங்கும் எனவும், இந்த அலுவலகத்தில் வாரத்தில் ஒருநாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பொதுமக்களை நேரில் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு, வடமாகாண சபையின் பிரதிப் பேரவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ. சண்முகானந்தன், வே.பிரேமகுமார், ந.சுதாகரன், ந.ஸ்ரீஸ்கந்தராஜா, அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
agri%20658s.jpg
 
agri%20657s.jpg
 
agri%20656s.jpg
 
agri%20655s.jpg
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

"மாங்குளம் எங்களது தலைநகராம்
வன்னிப் பெருநிலமே அதற்கரணாம்
ஓங்கிய முல்லை கடற்படைத் தளமாம்
உயர் திருகோணமலை துறைமுகமாம்"

"எல்லாமே பொய்யாய்க் கனவாய்ப் புனைகதையாய் போனதுவே"

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் இணைப்பு அலுவலகம் மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கண்டிவீதியில் முல்லை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் இயங்கிவரும் கட்டிடத் தொகுதியில் இந்த இணைப்பு அலுவலகத்தை நேற்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சுகளின் தலைமை அலுவலகங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கி வருவதால் வன்னிப்பெருநிலப்பரப்பைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதனைக் கருத்திற் கொண்டே விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தனது இணைப்பு அலுவலகம் ஒன்றை மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் முதலாவது செயற்பாடாக நீhப்பாசனத் திணைக்களத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றிய 6 சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி அதற்கான நியமனக் கடிதங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த இணைப்பு அலுவலகம் ஏனைய மாகாண அலுவலகங்களை போல சனி, ஞாயிறு தவிர்ந்த ஏனைய ஐந்து நாட்களும் இயங்கும் எனவும், இந்த அலுவலகத்தில் வாரத்தில் ஒருநாள் விவசாய அமைச்சர் பொதுமக்களை நேரில் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=307993417110810030#sthash.GYpQMA6O.dpuf

ஐங்கரநேசன் அவர்களின் முயற்சிகள் அனைத்திற்கும் நன்றியும் பாராட்டுக்களும். 

  • கருத்துக்கள உறவுகள்

கருமமே கண்ணாக உள்ள  ஐங்கரநேசன்  அவர்களுக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.