Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கு வைக்கப்படும் பூநகரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கு வைக்கப்படும் பூநகரி

இலங்கை நிலைமை குறித்து எதுவுமே தீர்மானிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியுள்ள போதிலும் புதிய, புதிய நிபந்தனைகள் மூலம் சண்டைக்கான முனைப்புகளே காட்டப்படுகிறது.

புலிகள் மிகவும் பலவீனமாகி விட்டார்களென்ற நினைப்பிலேயே அரசின் பல்வேறு செயற்பாடுகளும் அமைந்துள்ளதால் புதிய, புதிய நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் அரசு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளது நடவடிக்கைகளும், அவர்கள் பலவீனமடைந்துள்ளது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசுக்கும் இனவாதிகளுக்கும் ஏற்படுத்தி வருவதால் அவர்களும் புலிகளை சந்தர்ப்பம் பார்த்து மடக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அண்மைக் கால கடும் சமர்களின் மத்தியில் மீண்டுமொரு முறை பேச்சுகளுக்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. இரு தரப்பும் நிபந்தனையின்றிப் பேச ஆயத்தமாயிருப்பதாக இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தின் முடிவில் நோர்வே அனுசரணையாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை அரசுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னைய காலங்களில், புலிகளின் பலம் குறித்த அச்சத்தில் நிபந்தனையற்ற பேச்சுகளுக்குத் தயாராயிருந்த இலங்கை அரசு, தற்போது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமன்றி நோர்வே அனுசரணையாளர்களுக்கும் இணைத் தலைமை நாடுகளுக்கும் நிபந்தனைகளை விதித்து வருகிறது.

விடுதலைப் புலிகள் பெரிதும் பலவீனமடைந்து விட்டதாகக் கருதும் அரசும் இனவாதிகளும், மீண்டுமொரு பேச்சுவார்த்தையென்பது புலிகள் தங்களை மீண்டும் கட்டியெழுப்ப வழங்கப்படும் சந்தர்ப்பமென்றே கருதுகின்றன.

இதனாலேயே புலிகள் ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனைகளை முன் வைப்பதன் மூலம் அவர்களை சமாதானப் பேச்சுக்களுக்கு வராது செய்வதன் மூலம் மீண்டும் யுத்தத்தை நடத்தி புலிகளை மேலும் மேலும் பலவீனமாக்கி, இனப் பிரச்சினைக்கு தாங்கள் விரும்பும் தீர்வைத் திணித்து விடலாமென அரசு கருதுகிறது.

தற்போதைய நிலையில் புலிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பியுங்களென கூறுவோரையெல்லாம் கடும் சினத்துடன் பார்க்கும் இலங்கை அரசும் இனவாதிகளும், புலிகளுக்கெதிரான யுத்தத்திற்கு ஆதரவு வழங்குவோரையெல்லாம் அரவணைத்து வருகிறது.

போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையிலும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பணியில் ஈடுபடுகையிலும் இலங்கையில் கடும் சமர் நடைபெறுகிறது. தினமும் நடைபெறும் தாக்குதல்கள் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து கண்காணிப்புக் குழு வெளியிடும் அறிக்கைகள் அரசினதும் இனவாதிகளினதும் கடும் கண்டனத்துக்குள்ளாகிறது. இதனால் கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகளும் ஒரு பக்கச் சார்பாகி வருகிறது.

கடந்த இரு மாதங்களில் இரு நூறுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் கண் காணிப்புக் குழு தனது அறிக்கையில் இவற்றுக்கெல்லாம் இரு தரப்புமே காரணமெனப் பொதுப்படையாக கூறி தான் தப்பப் பார்க்கிறது.

நிழல் யுத்தம் தொடங்கி அது படுகொலைகளாக மாறி பின் நிஜப் போர் வெடித்த போதும் கண்காணிப்புக் குழு மௌனம் சாதித்தது. போர் நிறுத்த உடன்பாடு இன்று முற்று முழுதாக முடிவுக்கு வந்துள்ள நிலையிலும், இந்த நிலைமைக்கு காரணமானவர்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தாது கண்காணிப்புக் குழு மௌனம் சாதிக்கிறது.

யாழ். குடா நாட்டுக்கான தரை வழிப் பாதை மூடப்பட்டுள்ளது. இந்தத் தரை வழிப் பாதையை (ஏ9) திறக்க மறுக்கும் அரசு இதற்குப் பதிலாக பூநகரி-சங்குப்பிட்டி கடல் வழிப் பாதையை திறக்க முற்படுகிறது. ஆனால், புலிகள் இதற்கு சம்மதிக்கவில்லை.

`ஏ9' பாதையை திறப்பதன் மூலம் புலிகளுக்கு பெருமளவு வரி கிடைக்கும் என்பதால் அதனைத் தடுக்கும் நோக்கிலேயே அப்பாதையைத் திறக்க அரசும் படைத் தரப்பும் மறுத்து வருகின்றன. அத்துடன், அந்தப் பாதையை திறப்பதாயின் குடா நாட்டின் மீது மீண்டும் தாக்குதலை நடத்தமாட்டோமென்றும் `ஏ9' வீதியூடான பயணத்தின் போது வரி அறவிடப்படமாட்டாதெனவும் புலிகள் உத்தரவாதமளிக்க வேண்டுமென அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.

இதனைப் புலிகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களென்பதால் `ஏ9' பாதையை திறக்க வேண்டிய தேவையேற்படாதென அரசு கருதுகிறது. `ஏ9' பாதை மூடப்பட்ட போது திருகோணமலை துறைமுகம் புலிகளின் முற்றுகைக்குள்ளிருந்தது.

இதனால் `ஏ9' பாதையை மூடுவதாயின் குடா நாட்டின் கடல் வழி விநியோகப் பாதையை உடனடியாகத் திறக்கவேண்டிய அவசர தேவை அரசுக்கு ஏற்பட்டது. ஆனாலும், சம்பூரில் நிலைகொண்டிருந்த புலிகள் திருமலைத் துறைமுகத்தின் செயற்பாடுகளை முற்று முழுதாக முடக்கியிருந்ததால் திருமலைத் துறைமுகத்தை இந்த முற்றுகையிலிருந்து மீட்டு குடா நாட்டுக்கான கடல் வழி விநியோகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய அவசர நிலை அரசுக்கு ஏற்பட்டிருந்தது.

இதையடுத்தே `ஏ9' பாதையை மூடிய அரசு உடனடியாக சம்பூர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றி திருமலைத் துறைமுகம் மீதான புலிகளின் முற்றுகையை நீக்கி தற்போது திருமலைக்கும் யாழ்.குடாநாட்டுக்குமிடையிலா

எல்லாத்துக்குமான பதில் வெகு விரைவில் இருக்கு

எல்லாவற்றிற்கும் தமிழன் விடையளிக்கும் காலம் நெருங்கி வருகிறது.

புலிகள் இப்ப வேணுமெண்டு தான் ஒரு பலவீனமான தோற்றத்தைக் காட்டிக்கொண்டு நிக்கினமெண்டு நான் நினைக்கிறன். அப்பிடிச் செய்யிறதாலை என்ன இலாபமெண்டே கேக்கிறியள், சொல்றுறன் பொறுங்கோ. சர்வதேச அளவிலை தமிழற்ரை போராட்டத்துக்கு பெரிய முட்டுக்கட்டைகளையெல்லே போட்டுவைச்சிருக்கினம் ராசா. ஐரோப்பிய ஒன்றியத்தோடை சேர்ந்து அமெரிச்சன் உட்பட இணைத்தலைமை நாடுகளும் சரியான நெருக்குவாரத்தையெல்லே குடுக்கிறான்கள். எந்தச்சந்தர்ப்பத்திலையும், அது வாழ்வா சாவா எண்டொரு நிலைவந்தாக்கூட தமிழ் சனங்களின்ரை உரிமைகளை வெண்டெடுக்கிறதுக்கு ஆயுதப்போராட்டத்தை அங்கீகரிக்கப்போறதில்லையெண்

மாற்றுக்கருத்தாக இருந்தாலும் ஒரு நல்ல விசியம் போல கிடக்குது?

http://www.thenee.ca/artical/sub_31.htm

முணுமுணுக்கும் புலி ஆதரவாளர்களும் கிண்டலடிக்கும் புலியெதிப்பாளர்களும்!

தேசிய விடுதலைப்பேராட்டம் ஒன்று இப்படித்தான் இருக்கம் என்று எந்த ஒரு சமன்பாடும் கிடையாது. தேசியவிடுதலைப் போராட்டம் இப்படி இந்த இந்த விதிகளுக்கு ஏற்பதான் நடை பெற வேண்டும் என்பதற்கு இது ஒன்றும் விஞ்ஞானம் அல்ல. கடந்த சில மாதங்களாக சிறீ லங்கா இராணுவ நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதை அவதானித்த பலர் தாங்களும் இக்பால் அத்தாஸ் என்ற சிந்தனையுடன் இணையத் தளங்கள், வானொலிகள், தொலைக்கட்சிகள் என்று விளாசித் தள்ளுகிறார்கள். புலியாதரவாளர்களோ ம் இவங்கள் என்ன இப்படி இருக்கிறாங்கள் ஐந்து வருசமா என்ன செய்தவங்கள் என்று கேள்வி எழுப்ப புலி எதிர்ப்பாளர்களே புலிகள் முடிந்தார்கள் என்று அவர்களின் செத்த வீட்டுக்கு பாடை கட்ட வெளிக்கிட்டு விட்டார்கள். ஆனால் இவர்கள் இருவருமே ஏனோ யாதர்த்தமாக சிந்திக்காது தமது உணர்வுகளுக்கு மட்டுமே வடிவம் கொடுத்து சிந்திக்கிறார்கள்.

புலிஆதரவாளர்கள் பலர் வெளி நாடுகளுக்கு வந்த பின் புலிகளின் இராணுவ வெற்றிகளை கண்டு ஆதரவாளர்கள் ஆனவர்கள். இவர்கள் முன்பு விடுதலைப்போராட்டம் மீது அவ்வளவு நம்பிக்கையற்றவர்களாக இருந்தவர்கள். விடுதலைப்புலிகளின் வெற்றியே இவர்களுக்கு தமிழ் தேசியப்போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. புலிகள் பலம் மிக்கவர்கள் அவர்களை அழிக்க முடியாது என்று ஒரு நம்பிக்கையை கடந்த 5 வருடகாலத்தில் கட்டியவர்கள். இதற்கு அப்போதைய கள யதார்தமும் ஒரு காரணமாகிப்போனது. புலிகளின் இறுதி யுத்தத்தை ஆனையிறவு சமருடன் ஒப்பிட்டார்கள். தொடங்கினால் ஒரு மதத்திற்குள் எல்லாம் முடிந்து வி;டும். வடக்கு கிழக்கில் இருந்த இராணுவம் ஓடிவிடும் என்று அதீதமாக கற்பனை பண்ணினார்கள். அண்மையில் தொடங்கிய சண்டை இறுதி யுத்தம் என்று ஒரு பிரமையை புலம் பெயர் ஊடகங்கள் கொடுக்க அதை நம்பிய இந்த மக்கள் ஆரம்ப வெற்றியை கண்டு திகைத்து பின்னர் பின்வாங்கல்களுடன் புஸ்வானம் போல் ஆகி விட்டனர்.

அதனை தொடர்ந்து சிறீ லங்கா இராணுவத்தின் இரண்டு வெற்றிகள் இவர்களை இன்னமும் குளப்பத்தில் ஆழ்த்தி விட்டது. வெளி நாடுகளில் வாழும் பல தமிழ் மக்கள் இன்று மிகவும் குளம்பி;போயுள்ளனர். ஆனால் இவர்கள் ஏன் குளம்பியுள்ளனர் என்பதுதான் மிகவும் சந்தேகமாக உள்ளது. புலிகள் இதனைவிட பாரிய தோல்விகளை சந்தித்தே பல வெற்றிகளை சாதித்தவர்கள் என்பது வரலாறு. ஆனால் இன்று இவர்கள் குளம்பியமைக்கு வேறு ஒரு கரணமும் உள்ளது. வடக்க கிழக்கில் அண்மை காலமாக கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைகள் இந்த மக்களை நிச்சயமாக ஆழந்த சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்தியுள்ளது.

விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகளை எடுத்தப்பாரத்தால் நாம் பலவிதமான உதாரணங்களை காணலாம். வியட்நாம் போராட்டத்தில் 20 வருடகாலத்திற்கு மேல் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை வியட்கொங்குகள் இழந்தார்கள். பின்னர் மீண்டும் தமதாக்கினார்கள். நாம் புலிகள் மீது காதல் கொண்டவர்கள் கிடையாது. புலிகளை நாம் நேரடியாக விமர்சிக்க தவறியதும் கிடையாது. அனால் புலிகள் இன்று எடுத்தள்ள இந்த பொறுமை தான் நமது தேசிய விடுதலைப் போராட்டதின் ஒரு பெரும் மைற் கல்லாக இருக்கப்போகிறது. சாம்புரில் இருந்து புலிகள் என் பின்வாங்கினார்கள் என்பதற்கு விடை தெரிந்தவர்கள் புலிகளே. இந்த சாம்புரை விட்டு விலகி 3 நாட்களின் பின் தான் சிறீ லங்க அரசிற்கு புலிகள் பின்வாங்கி விட்டார்கள் என்று தெரிந்துள்ளது. கருணாவின் உளவுதான் சாம்புரில் புலிகளை வென்றது என்று மடத்தனமாக பேசும் புலியெதிரப்பளர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் மூன்று நாட்கள் புலிகள் இந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ளனர் என்ற நினைப்பில் விமானப்படையும் இராணுவ ஆட்லறி மற்றும் மல்றிபரலும் தமது குண்டுகளை அநியாயமாக விரயம் செய்தது. சாம்புரை விட்டகன்ற புலிகள் ஒரு கண்ணிவெடிகூட வைக்காது விலகியதன் மர்மம் என்ன?

புலிகளுக்மட்டுமே தெரிந்த விடைகள் நமக்க தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இராணுவ இரகசியம் வேறு அரசியல் உண்மைகள் வேறு. மிகவும் மடத்தனமான அறிவீனமாற்ற புலியெதிர்ப்பாளர்கள் புலிகள் ஏன் இவற்றை மறைக்கிறார்கள் என்று மக்களை குளப்புகிறார்கள். புலிகள் தான் இன்று தமிழ் பேசும் மக்களின் இராணுவம். அத்துடன் புலிகள் தான் இன்று தேசிய விடுதலைப் போராட்டத்தை தம் அகத்தே வைத்திருக்கிறரர்கள். கடந்த பத்து வருட காலத்தில் பாரிய விலை கொடுத்து இந்த போராட்டத்தை புதிய எல்லைக்கு கொண்டு சென்றுள்ளனர். விடை தெரியாத கேள்விகளுக்கு விடை காணுவதை விடுத்து கடந்த கால வரலாற்றின் அனுபவத்தை மனதில் வைத்து புலிகள் மீது நம்பக்கை வைப்பதே தற்போதைய புலம் பெயர் தமிழர்களின் தலையாய கடமை. புலிகள் தமது இலக்கை விட்டு தவறினால் அதை கேட்க நாம் என்றும் தயங்க கூடாது. ஆனால் சுடுகுது மடியைய் பிடி என்ற நிலையும் கூடாது. இறுதியுத்தம் என்பது ஒரு காலவரையற்ற ஒரு போராட்டம். ஆனால் மிகவும் உக்கரமான ஒரு போராட்டம.;. இந்த போராட்டம் வெடிக்க முன் நாம் நம்மை அரசியல் ரீதியாக தயார்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கான தயாரிப்புகளே இன்று நடைபெறுகிறது.

புலியெதிர்பு ஊடகங்களே நீங்கள் ஏன்தான் உங்கள் புதைகுழியை மிக வேகமாகத் தோண்டுகிறீர்களோ தெரியாது. நின்று நிதானித்து உங்கள் குழியை தோண்டுங்கள் அது தான் உங்களுக்கம நல்லது.

http://www.thenee.ca/artical/sub_31.htm

என்னது தேனே இப்ப மாறிவிட்டதோ வெறுமனே புலிகளை சாடும் இனையம் இப்படி நடுநிலமையாக செய்தி வெளியிட்டதுள்ளதே

ஈழவன் எழுதியது:

என்னது தேனே இப்ப மாறிவிட்டதோ வெறுமனே புலிகளை சாடும் இனையம் இப்படி நடுநிலமையாக செய்தி வெளியிட்டதுள்ளதே

என்ன நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?? இது நிஜத் தேனியின் முகமூடி அணிந்து பிழைக்கும் போலித் தேனி.

நிஜத் தேனி முகவரி: www.thenee.com

போலித் தேனி முகவரி: www.thenee.ca

தம்பி வசம்பு!

தேனி இணையத்தளம் இரண்டாக உடைந்து நீர் சொன்ன ஒன்று இலங்கை உளவாளிகளின் உதவியுடன் புலிகளுக்க எதிராக பரப்புரை நடாத்துகிறது. .ந்த இணையத் தளத்தில் இலங்கை இராணுவத்தின் தமிழ் மக்களின் மீதான படுகொலையை எங்காவது கண்டித்தள்ளதா என்று பாரும். இந்த தேனி என்ற இணையத்தளத்தை என்ன நோக்கத்தில் ஆரம்பித்தார்களே அவர்கள் இந்த மனச்சாட்சியற்ற வேலையை கண்டு மனம் வெதும்பி துரோக கும்பலுடன் நிற்காது தமது சொந்த காலில் ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்தள்ளனர். இதில் போலி தம்பி சொல்லும் தேனி டொட் கொம்மே. சிங்களவனுக்கு மட்டும் வக்காலத்து வாங்கும் இவர்கள் ஒரிஜினல் தமிராக இருக்கமாட்டார்கள். கிட்டத்தட்ட உம்மைப்போரல என்று கருதுமன் வைசி கிரு!

உமது கற்பனைக் கட்டுக்கதையே காட்டுகிறது நீர் யாரென்று. நிஜத் தேனி இணையத்தளம் நடத்துபவர் ஜேர்மனியில் இருக்கின்றார். இவர் தனியாகத்தான் நடத்துகின்றார் என்பதும் பலருக்குத் தெரியும். அப்படியிருக்க போலித் தேனி இணையத்தளம் நடத்துபவர் கனடாப்பதிவிலிருந்து புலம்புகின்றார். ஒன்று மட்டும் தெரியுது உம்மைப் போன்றவர்கள் கருத்துச் சொல்வதற்கும் மாற்றுக் கருத்து இணையத்தளத்தின் முகமூடி தேவைப்படுகின்றது. அதிலிருந்தே தெரிகின்றது உம்மைப் போன்றோரின் கருத்துக்களின் உண்மைத் தன்மை. :?: :roll: :?: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசுக்கு மிகப்பெரும் தலையிடியாக அமைந்த இரு கேந்திர முக்கித்துவமான நிலைகள், பூநகரியும் சம்பூரும். இதில் சம்பூர் திருமலைத் துறைமுகம், விமாப்படைதளம் என்பவற்றையும், பூநகரி பலாலியுட்பட யாழ்குடாநாடு முழுவதையும் ஆபத்துக்குள்ளாக்கிய இடங்கள்.

இதில் சம்பூர் கைவிட்டுப் போயிற்று. பூநகரி இன்னும் தமிழர் தரப்பிடம் இருக்கிறது.

இன்று சிறிலங்கா அரசாங்கம் கடந்தகால தந்திரங்கள் தொடர்பில் மிகமிகக் கவலைகொள்ளும் சம்பவங்கள் என்று பார்த்தால் இவ்விரண்டு நிலைகளையும் இழந்ததே.

முக்கிய விசயம் என்னவென்றால் இவை இரண்டுமே சண்டையில்லாமல் தமிழர் தரப்புக்குக் கிடைத்த இடங்கள்.

சிறிலங்கா அரசபடைகள் பூநகரியை விட்டும் சம்பூரை விட்டும் தாமாகவே விலகிச் சென்ற நிலையில் அவ்விடங்கள் தமிழர்களுக்குக் கிடைத்தன.

சிறிலங்கா அரசைப்பொறுத்தவரை யாழ்குடாநாடு மீதான புலிகளின் நடவடிக்கை பூநகரியை மையமாகக் கொண்டே நடத்தப்படுமென்று கணிக்கிறது. எல்லாரும் அப்படித்தான் கணிக்கிறார்கள். எனவே பூநகரிக்கான ஆபத்து ஆதிகம்தான்.

முன்பு ஆனையிறவும் பூநகரியும் படையினர் வசம் இருந்து யாழ்ப்பாணம் புலிகளிடம் இருந்தபோது புலிகள் பூநகரிப்பாதையைத் திறக்க வேண்டுமென்று முயற்சித்தார்கள்.

இப்போது அந்நிலைகள் அப்படியே கைமாறியுள்ளன. எனவே முன்பு புலிகள் விரும்பியதுபோல இப்போது இராணுவம் விரும்புகிறது பூநகரிப்பாதையைத் திறக்க.

பீ (BEE) இணையத்தை ஒருத்தந்தான் நடத்துறானா....?? பலரின் கருத்துக்கள் எண்டு வாறதெல்லாம் வெறும் பூச்சுத்தலா...??? அதுதான் சிந்தனை பஞ்சம் நல்லா தெரியுது.... :wink: :lol::lol:

சம்புர் முழுமையா இராணுவக் கட்டுப்பாடுக்குப் போகவில்லை கிழக்குப் பகுதிதான் இராணுவம் நிலை கொண்டிருக்கிறது மேற்கு மற்றும் ஈச்சலம்பற்று இறால்குடி போண்ற இடங்கள் புலிகளின் வசம்தான் ஆனால் இராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து அங்கு மக்கள் இல்லை அவர்கள் வாகரை பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள் நேற்றும் மாவிலாறு பகுதியில் தாக்குதலில் 2 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்......... ஆட்கள் இல்லாத இடங்'களை பிடித்து வைத்திருப்பது இருபகுதியினருக்கும் ஒரு பிரயோசனத்தையும் தராது................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் எழுதியது:

என்னது தேனே இப்ப மாறிவிட்டதோ வெறுமனே புலிகளை சாடும் இனையம் இப்படி நடுநிலமையாக செய்தி வெளியிட்டதுள்ளதே

என்ன நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?? இது நிஜத் தேனியின் முகமூடி அணிந்து பிழைக்கும் போலித் தேனி.

நிஜத் தேனி முகவரி: www.thenee.com

போலித் தேனி முகவரி: www.thenee.ca

அட குசும்பை றொம்பவே கோவபடுத்திவிட்டதா இந்த போலித்தேனீ தளம்

அப்ப உங்கட அசல்தளம் யாருக்காக கு--- களுவுதுங்கோ?

எச்சில் இலையில வயிறு வளர்க்கிறதுக்கு ஒரு சந்ததியே உருவாக்கீடிங்களா?

வயிற்றுப்பக்கமாய் இருக்கும் உணர்வு நரம்புகளைத் தவிர மீதி எல்லாம் உணர்வு செத்துவிட்டதா?

இல்லையென்றால் இப்படி அசிங்கப் பிழைப்புச் செய்ய எப்படி ஐயா உங்களால் முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமது கற்பனைக் கட்டுக்கதையே காட்டுகிறது நீர் யாரென்று. நிஜத் தேனி இணையத்தளம் நடத்துபவர் ஜேர்மனியில் இருக்கின்றார். இவர் தனியாகத்தான் நடத்துகின்றார் என்பதும் பலருக்குத் தெரியும். அப்படியிருக்க போலித் தேனி இணையத்தளம் நடத்துபவர் கனடாப்பதிவிலிருந்து புலம்புகின்றார். ஒன்று மட்டும் தெரியுது உம்மைப் போன்றவர்கள் கருத்துச் சொல்வதற்கும் மாற்றுக் கருத்து இணையத்தளத்தின் முகமூடி தேவைப்படுகின்றது. அதிலிருந்தே தெரிகின்றது உம்மைப் போன்றோரின் கருத்துக்களின் உண்மைத் தன்மை. :?: :roll: :?: :roll:

அப்பு குசும்பு! நீர் என்ன முகமூடி போட்டுக் கொண்டு என்னத்துக்கு குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறீரோ இந்த தளத்தில்.

அதேமாதிரித்தான் இதுவும் என்று விளக்கமாய்ச் சொல்லுமன்

தரைவளியால் யாழ்தேவி நடவடிக்கை மூலம் கிளாலி வரை கைப்பற்றிய இலங்கை படைகள் ஆனையிறவுக்கு திரும்பி போனது.... அதை புலிகளை வலிந்த சண்டைக்கு இழுத்து அழிப்பதுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கை எண்று காரணமும் சொன்னது.... பின்னர் யாழ்ப்பாணதை கைப்பற்றிய போதும் கிளாலி, முகமாலை, வரணி , நாகர் கோவில் பகுதிகளோடு தனது எல்லையை போட்டு ஆனையிறவு முகாமுக்கும் இந்த எல்லைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களை எல்லாம் சூனிய பிரதேசமாகத்தான் இராணுவத்தினர் கையாண்டனர்.... இங்குதான் யாழ்ப்பாணத்துக்குள் வரும் புலிகள் தங்குகிறார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.... அங்கு வசித்த மக்களின் அத்தியாவசியப்பெருட்கள் வாங்க கூட அண்றாடம்தான் இராணுவ பிரதேசத்துக்குள் வந்து வாங்கிப்போக வேண்டிய நிலையை இராணுவத்தினர் வைத்திருந்தனர்... புலிகளுக்கு அதை மக்கள் வழங்குகிறார்கள் எண்ற சந்தேகமாம்...! இந்த பிரதேசங்களால் இராணுவத்துக்கு இழப்புகள் இருந்தும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் அப்பிரதேசத்தை கொண்டு வராத்துக்கு முக்கிய காரணம் இராணுவத்தில் இருக்கும் ஆளணி பற்றாக்குறைதான்...! இங்கு படைகளை நிறுத்தினால், இராணுவத்தினரால் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த முடியாது படை பற்றாக்குறை வரும் என்பதனால்தான்.

பின்னர் புலிகளினாலான ஆனையிறவு அழிப்புக்கு பின்னர் அதே பழைய நிலைகளிலேயே இராணுவத்தினர் இருக்கிறார்கள்... அந்த நிலைகளில் இருந்து முன்னேற பலமுறை முயன்று தோற்றுப்போனார்கள்....! அமெரிக்க திட்டமிடல் தீச்சுவாலை எல்லாம் பொசுங்கிப்போனது... இண்றைய நிலையில் இருந்து இராணுவத்தினர் ஆட்லறியால்தாக்கினால் அது பரந்தனின் விழுவதே முடியாத காரியம்...! அப்படி கிளிநொச்சியை கலங்கடிக்க வேண்டுமானால் அவர்களுக்கு ஆனையிறவு வேண்டும்....! அதுதான் யாழ்ப்பாணத்துக்குள் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு புத்துயிரையும் குடுக்கும்....

ஆனால் அதனை செய்ய முடியாதவர்களால் பூநகரியை கைப்பற்ற முடியுமா...?? புலிகள் பூநகரியில் இருந்து ஆட்லறியால் பலாலிக்கு தாக்கு கிறார்கள் அதனைபிடிப்போம் எனலாம், பூநகரியை கைப்பற்ற வேணுமானால் கடல் கடந்து வரவேண்டும் அப்படி இராணுவத்தால் வரமுடியுமா....??? அப்படி வந்தாலும் அதற்கான வழங்கல்களை குடுக்க முடியுமா என்பது சந்தேகமே....! தரைகடந்து ஆனையிறவை பிடிக்க முடியாமல் திண்டாடும் நிலையில் கடல்கடந்து பூநகரி பிடிப்போம் என்பது, உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவை வெளியூரில் உடும்பு பிடிப்பன் என்பது போலத்தான்..

இண்றைய நிலையில் தனங்கிளப்பு, கொயிலாக்கண்டியில் கூட இராணுத்தினர் நிலைகளை அமைக்காமல் சாவகச்சேரி கச்சாய், நுணாவில் பகுதியிலேயே தொடர் காவலரண்களை அமைத்து இருக்கும் போது (ஆளனி பற்றாக்குறையால் என்பதுதான் உண்மை) பூநகரி பகுதிகளை நோக்கிய முனேற்றம் என்பது... முல்லைத்தீவு முகாமை தக்கவைக்க அளம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட இராணுவத்தினரின் நிலையைத்தான் குடுக்கும்....

அப்படியும் சிலர் மண்டை தீவு பகுதியால் கல்முனை பகுதிக்கு தொடர்புகளை ஏற்படுத்தி தரையிறக்கம் ஒண்றை இராணுவத்தினர் முன்னெடுக்கலாம். அது தெரிந்துதான் புலிகள் மண்டைதீவை தாக்கி போக்கு காட்டினார்கள் எண்று சிலர் சொல்லலாம்... சரி அப்படியே தரையிறக்கினாலும் பழைய பூநகரி முகாமை விட பெரிய முகாமாக ஏற்படுத்த வேணும்... அப்படி ஏற்படுத்த வேணுமானால் முன்னர் இருந்த 2000 பேர் போதாது அதையும் விட அதிகமான ஆளணி தேவை....!

அப்படியும் புலிகளால் பூநகரி விடப்பட்டால் இராணுவத்தின் தாக்குதல் பலம் குறைப்பதற்காகவே இருக்கும்.... அப்படிதான் சம்பூர் பகுதிகள் மட்டகளப்பு பகுதிகளில் இருந்த இராணுவத்தால் நிரப்ப பட்டு ,புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி தாக்கி வந்த விசேட அதிரடிப்படைகளிடம் அந்த பகுதிகளின் பாதுகாப்பு கொடுக்கபட்டு இருக்கிறது.... அதாவது விசேட அதிரடிப்படையின் திறண் இப்போ குறைக்கபட்டு இருக்கிறது என்பதுதான் உண்மை...!

அப்ப வ ம்பு சொன் அது இதா???

Amutha Kanagatharan

Moenchhaldenstr.107

Stuttgart, Germany, D-70191, Germany

RACE Name: thenee.com

Punycode Name: thenee.com

Unicode Name: thenee.com

Admin Contact

Amutha Kanagatharan (AK1488-ABC)

Jemini@t-online.de

Moenchhaldenstr.107

Stuttgart, Germany, D-70191, Germany

phone: +49 7112579923

ஏனாக்கும் இந்த விபரத்தை விட்டனீங்கள்.????

DNS server handling your query: localhost

DNS server's address: 127.0.0.1#53

Non-authoritative answer:

Name: thenee.com

IP Address: 192.67.198.49

thenee.com nameserver = ns1.webmailer.de.

thenee.com nameserver = ns2.webmailer.de

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.