Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி???

Featured Replies

  • தொடங்கியவர்

தூயவன் எழுதியது:

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால் அம்போ தான்!.

தலையின் மேற்பரப்பில் எண்ணெய்ப் பிடிப்பில்லாமல் வரண்டு போவதாலேயே மேற்த்தோல் காய்ந்து பொடுகாகின்றன. நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது ) அல்லது பாதிப்பில்லாத கிறீம் வகை ஏதாவது பாவித்து வந்தால் பொடுகுப் பிரைச்சினை குறையும். அடிக்கடி தோய்வதும் நல்லதல்ல. கிழமைக்கு ஒருதரம் அல்லது இரண்டு தரம் தோய்வது போதும். அப்போதும் அரைமணிநேரம் முன்பாக சூடாக்கிய எண்ணையை இளம் சூட்டுடன் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு பின் தோய்ந்தால் இன்னும் நல்லது.

இத்துடன் கறிவேப்பிலையும் சின்ன சீரகமும் சேர்த்தால் மிகவும் நல்லதாம்

  • Replies 157
  • Views 33.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஏன் வெந்தயம்? சின்ன வயசிலை எண்ணைக்குள் நற்சீரகம் போட்டு சூடாக்கி தந்த ஞாபகமா இருக்கு. சரியா ஞாபகம் இல்லை. :roll:

நற்சீரகமும் கறிவேப்பிலையும் சேர்க்கலாம்

  • தொடங்கியவர்

பேசாம சின்னாவை மாதிரி ஒரு டோப்பை போடுறது தானே

:lol:

எனக்கு பொடுகு இல்லைப்பா. நான் ரொம்ப சுத்தமாகதான் தலைமுடியை வைச்சிருக்கிறேன். தினமும் முழுகுவன்ல. அப்புறம் எப்படியாம் பொடுகு வரும்? :P :P முழுகுவதெனில் அலாதி பிரியம் :P :P :P :P :P :P :P

உங்களுக்க்கு முழுகுவது என்றா பிரியம் எனக்கொ முழுகுவது என்றாலே அலர்ஜி

8) 8)

எல்லோருக்கும் என் கையெழுத்தை பார்த்து என்ன சிரிப்பு ஆ? என் கையெழுத்து பார்த்து சிரிக்கிற நீங்க எல்லோரும் அங்கொடைக்கு போக கடவீர்கள். :cry:

அக்கா அங்கோடை என்றால் என்னவென்று எத்தனை தரம் கேட்டுவிட்டேன் ஒருத்தரும் சொல்லவிலையே

:?: :?: :?:

  • தொடங்கியவர்

அக்கா அங்கோடை என்றால் என்னவென்று எத்தனை தரம் கேட்டுவிட்டேன் ஒருத்தரும் சொல்லவிலையே

:?: :?: :?:

அங்கொடை என்பது விசர் ஆஸ்பத்திரி :lol: :wink: :lol:

அதுசரி தலைமுடிக்கு எண்ணெய்காய்ச்சி பூசினிர்களா?

SUNDHAL wrote:

head and shoulder சன்பூ பாவித்து பாருங்கள் பொடுகு தொல்லையே இருக்காது...

elakkiyan wrote:

head and shoulder மாதம் ஒருமுறை பாவிக்கலாம்

அதிகமாக பாவித்தால் முடி உதிரும் என்கிறார்கள்

இந்த சம்பூ பாவிப்பதால் தலைமயிர் விரைவில் நரைப்பதாகவே நான் அறிந்தேன்.

ஆனா உங்களுக்கு சாம்பூ பிரச்சனையாக இருக்காது ஏதுக்கும் பிறப்பு அத்தாட்ட்சி பத்திரத்தை எடுத்து பாருங்கள்

1930 என்று இருக்கா?

POLYTAR LIQUID என்ற சம்பூவை சுடுதண்ணியில் கலந்து தலை முழுக பொடுகு இல்லாமல் போகும். :P

POLYTAR LIQUID என்ற சம்பூவை சுடுதண்ணியில் கலந்து தலை முழுக பொடுகு இல்லாமல் போகும்.  :P

அதிலும் கொஞ்சம் கூடுலாக பாவித்தால் உள்ளுக்கு ஊறிப் போய் மூளையையும் பாதிக்குதாம்...........(வெண்ணிலா நீங்கள் அளவுக்கு அதிகமா பாவிக்கிற மாதிரி தெரியுது கொஞ்சம் குறைச்சுப் பாவியுங்கோ)

ஆனா உங்களுக்கு சாம்பூ பிரச்சனையாக இருக்காது ஏதுக்கும் பிறப்பு அத்தாட்ட்சி பத்திரத்தை எடுத்து பாருங்கள்

1930 என்று இருக்கா?

உமது ஆண்டிலேயே பிறந்திருப்பேனென்று ஒரு குத்துமதிப்பில் சொன்னீர். ஆனால் அதிலை சின்ன ஒரு பிழைதான். எனது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் 18 :P :lol:

அதிலும் கொஞ்சம் கூடுலாக பாவித்தால் உள்ளுக்கு ஊறிப் போய் மூளையையும் பாதிக்குதாம்...........(வெண்ணிலா நீங்கள் அளவுக்கு அதிகமா பாவிக்கிற மாதிரி தெரியுது கொஞ்சம் குறைச்சுப் பாவியுங்கோ)

அப்படின்னா நீங்க சொல்ல வாறது வெண்ணிலாக்கு ..................... :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :twisted: ஐ கில் யூ :evil: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போல்டு இஸ் கோல்டு அப்டீன்னு சும்மாவா சொன்னாங்க

போல்டு இஸ் கோல்டு அப்டீன்னு சும்மாவா சொன்னாங்க

இதை யார் சொன்னாங்க

:?: :?: :?:

மொட்டை கிடந்தா கிடந்திற்று போகுது..........அது என்ன சொட்டை?????..........................

மொட்டை கிடந்தா கிடந்திற்று போகுது..........அது என்ன சொட்டை?????..........................

மொ க்கு பதில் சொ வை போட்டால் சொட்டை

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதை யார் சொன்னாங்க

:?: :?: :?:

ஆ? கந்தப்பு சொன்னவராம்... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதைப்பற்றி ஆராய்ந்து முடிப்பதுக்குள் உங்கள் எல்லாருக்கும் மொட்டை வந்துடும் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ? கந்தப்பு சொன்னவராம்... :lol::lol:

கந்தப்புவ சீண்டாதீங்க சுண்டல், அவரு நெருப்பு மாதிரி, பொசுங்கிடுவீங்க

கந்தப்புவ சீண்டாதீங்க சுண்டல், அவரு நெருப்பு மாதிரி, பொசுங்கிடுவீங்க

கந்தப்பு நெருப்பு என்றால் சுண்டல் அதை அணைக்கும் தண்ணி விளங்கிச்சா சிலுக்கு

:wink: :wink:

நீங்கள் இதைப்பற்றி ஆராய்ந்து முடிப்பதுக்குள் உங்கள் எல்லாருக்கும் மொட்டை வந்துடும் :P

நீங்கள் இப்பவே அப்படி தானே தாத்தா

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எந்தப் பக்கத்தில் மருத்துவம் இருக்கிறது. பிளீஸ் சொல்லுங்கோ.

இதில் எந்தப் பக்கத்தில் மருத்துவம் இருக்கிறது. பிளீஸ் சொல்லுங்கோ.

:?: :?: :?: :?: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால், அம்போ தான்!.

தூயவன் நான் பாவிக்கிறது Neutrogena T-Gel Shampoo(http://www.ciao.co.uk/Neutrogena_T_Gel_Anti_Dandruff_Dermatological_Shampoo__5149055) . எனக்கு வேலை செய்யுது. வேணுமெண்டால் பாவிச்சுப்பாருங்கோ. கட்டாயமாக Therapeutic T/Gel® Conditioner (http://www.neutrogena.ca/en/product_details.asp?id=101) பாவியுங்கோ அல்லது triple_moisture (http://www.drugstore.com/qxp86554_333181_sespider/neutrogena/triple_moisture_daily_deep_conditioner.htm) பாவியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

"வாலிப வயதிலேயே சிலருக்கு வழுக்கை விழுந்துவிடும். இதனால் மிகவும் மனம் உடைந்து போவார்கள். தலையில் தொப்பியை அணிந்தபடி வெளியே செல்வார்கள். இதற்கு பரம்பரையும் ஒரு முக்கிய காரணம்!" என்று சொல்கிறார் பிரபல பிளாஸ்டிக் சர்ஜன் கிருஷ்ண ஹண்டே.

"வழுக்கை ஆண்களுக்கான பிரச்னை. தலையில் வழுக்கை விழுவதை 'மேல் பேட்டர்ன் பால்ட்னஸ்' என்று அழைக்கிறார்கள். ஆண்களின் உடலில் இயற்கையிலேயே குறிப்பிட்ட அளவில் செல்ஸ் ஹார்மோன்கள் இருக்கும். இதற்கு "ஆண்ட்ரோஜன்கள்" என்று பெயர். இயல்பான தலைமுடியோடு இருப்பவர்களுக்கும், வழுக்கைத் தலை உடையவர்களுக்கும் இந்த ஹார்மோனின் அளவில் எந்த மாற்றமும் இருக்காது. இருப்பினும் வழுக்கைத் தலை உடையவர்களுக்கு ஆண்ட்ரோஜனின் அளவு சற்று கூடுதலாக இருக்கும். சராசரி மனிதரிடம் இருக்கும் ஆண்ட்ரோஜன் அளவை வைத்து ஒருவரது வழுக்கையின் தன்மையை அறிய முடியும்.

ஷாம்பூ போடுவதால் வழுக்கை உண்டாகும் என்று நினைப்பது தவறு. அதே போல், ஹெல்மெட் அணிவதாலோ, தொப்பி போடுவதாலோ தலையில் முடி கொட்டி வழுக்கை ஏற்படும் என்ற பயமும் தேவையற்றது. சீப்புவைத்து தலையை அடிக்கடி சீவுவதாலும் இந்தப் பிரச்னை வராது. ஒரு ஆணின் தலையிலிருந்து ஒரு நாளைக்கு நூறு முதல் நூற்று ஐம்பது ரோமங்கள் வரை உதிரும். இருப்பினும், "ஆண்ட்ரோஜன்" உறுதியாக இருப்பதால் ரோமங்கள் மீண்டும் வளர்ந்துவிடும். சராசரியாக ஒரு ஆணின் தலையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரோமங்கள் இருக்கும் என்பது ஆச்சரியமான தகவல்.

முடி மாற்று சிகிச்சை : தலை முடி உதிர்ந்துவிட்ட பிறகு மீண்டும் முளைக்காதா என்ற ஆவல் வழுக்கைத் தலை உடையவர்களுக்கு உண்டு. இதற்கு முடி மாற்று சிகிச்சை நல்ல தீர்வு. முடி மாற்று சிகிச்சையும் கிட்டத்தட்ட ஒரு ஆபரேஷன் மாதிரிதான். தலையில் அடர்த்தியாக இருக்கும் இடங்களிலிருந்து ஆணிவேரோடு ரோமங்களைப் பிடுங்கி, வழுக்கை அல்லது ரோமம் இல்லாத பகுதிகளில் வைத்து ஒட்டுவார்கள்.(GRAFTING)

தலையின் மேல்புறத் தோலின் பின் பகுதியிலும், பக்கவாட்டிலும் இருக்கும் ரோமங்கள் மரபு ரீதியாகவே உருவானவை. எளிதில் உதிர்ந்து விழாது. ரோமங்களைப் பிடுங்கிய பிறகு, இடைவெளியை தைத்துவிட வேண்டும். இதனால் ஆபரேஷன் செய்த சுவடு தெரிய வாய்ப்பில்லை.

முன்பு ரோமங்களை கைகளால் பிடுங்கும் முறையை (PLUG STYLE) பயன்படுத்தி வந்தார்கள். இம்முறையில் பத்து முதல் பதினைந்து ரோமங்கள் வரை வெளியில் வந்துவிடும். (இன்னமும் இந்த முறையை சிலர் பிராக்டீஸ் செய்து வருவது என்பது வேறு விஷயம்!) இந்த ரோமங்களை "டால்ஸ் ஹேர்" அல்லது "கார்ண் ரோஸ்" என்று அழைப்பார்கள். ஆனால் ஒட்டு முறையில் செய்யும் போது, ரோமங்கள் எளிதில் வளரும்.

முடி மாற்று அறுவை சிகிச்சையை சாதாரண மயக்க நிலையிலேயே செய்யலாம். வலி இருக்காது. இருபது முதல் எழுபது வயது வரை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஒருவரது மருத்துவ ரெக்கார்டுகளைப் பார்த்து முடி மாற்று சிகிச்சை செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை டாக்டர் தீர்மானிப்பார். சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் ஆஸ்பத்திரியில் தங்க வேண்டிய அவசியமில்லை. சிகிச்சையின்போது மயக்க நிலையில் இல்லாமல், இயல்பாகவே இருக்கலாம். செய்யப்படும் சிகிச்சையைப் பார்க்க முடியும். சிகிச்சையின் தன்மையைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை செலவாகும். சிகிச்சை முடிந்தபின்னர், தலையில் தொப்பியை அணிந்தபடி வீட்டுக்குப் போய்விடலாம். நீங்கள் சொன்னாலன்றி, "கிராஃப்டிங்" செய்திருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. மூன்று நாட்கள் கழித்து தொப்பியைக் கழற்றிவிடலாம். ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிக்கலாம்.

முடி முளைப்பது எப்படி?

முடி மாற்று அறுவை சிகிச்சை மூலம் தலையின் மேற்பரப்பில் ஒட்டப்பட்ட ரோமங்கள் மிக நுண்ணியவை. ஒரு சில மில்லி மீட்டர் அளவே இருக்கும். மூன்று முதல் நான்கு வாரங்களில் அவை தானாகவே உதிர்ந்துவிடும். பின்னர் எட்டு முதல் பதினாறு வாரங்களுக்குள் புதிய ரோமங்கள் முளைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலானவர்களுக்கு மூன்று முதல் நான்கு மாதங்களில் ரோம வளர்ச்சி தெரியும். ஒரு மாதத்துக்கு கால் முதல் அரை இஞ்ச் வரை முடி வளரும். பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.

நமக்குத்தான் முடி வளர்கிறதே என்ற எண்ணத்தில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருந்துவிடக்கூடாது. அவ்வப்போது டாக்டரது ஆலோசனையைக் கேட்பது அவசியம்.

kumudam.com

அட போங்கடாப்புபுபுபுபுபு

அதாவது நமக்கு முடிடிடிடிடி நிறைய இருக்கு மண்டையில

8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)

ம் யாருக்கு முடி இல்லை யமுனாவுக்கா ரசிகைக்காாா சுண்டலுக்கா Prins க்கா சஐிக்கா சிலுக்குக்கா வைகோக்கா சுட்டிக்கா வம்பருக்காாாா?????

:P :P :P

ஓய் உங்கள் எல்லாருக்கும் ஒண்டு சொல்லுறன் கேளுங்கோ மண்டையில முடி இல்லாததுக்கு காரணம்ம்ம்ம்:::::::

அதாவது முடி எண்டைக்கு நினைக்கிதோ நான் ஒரு முட்டாள் இன் மண்டையில இருக்கிறன் எண்டு அன்று முடி அந்த முட்டாள் மண்டையை விட்டு போய் விடும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.