Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரவதை ஆதாரங்களை உதாசீனம் செய்து பிரிட்டன் இலங்கை புகலிடக் கோரிக்கை யாளர்களை நாடுகடத்துகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரவதை சம்பவங்கள் தொடர்பிலான ஆதாரங்களை கருத்திற் கொள்ளாது பிரித்தானிய அரசாங்கம் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் புகலிடம் கோரும் இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா தொடர்ச்சியாக நாடு கடத்தி வருவதாக சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீது இலங்கை பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதற்கான திடமான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும், பிரித்தானியா தொடர்ச்சியாக புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

மூன்றில் இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

சித்திரவதைகள் தொடர்பில் மருத்துவ ரீதியான ஆதாரங்கள் காணப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போதிலும் தொடர்ச்சியாக சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று   வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உறவினர் நண்பர்களை பார்ப்பதற்காக இலங்கை செல்லும் போதும் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அதிகளவான சித்திரவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் சந்தேக நபர்களுக்கு எதிராக திட்டமிட்ட வழிகளில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் 65 வீதமான சம்பவங்கள் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பானவை எனவும் சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் அமைப்பின் மருத்துவ பிரிவு தலைவர் ஜுலியட் சோஹென் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய கடவுச் சீட்டுடைய இலங்கையர்கள் துன்புறுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111908/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்து அரசும் தப்பு செய்யவில்லை அதே நேரம் சிங்கள அரசும் தப்பு செய்யவில்லை. சகலதையும் மறந்து உல்லாசத்திற்கு செல்லும் எம்மவருக்கு புத்தி எங்கே போச்சு????

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் £500.00க்கு மற்ற பிளைற்கள் இருக்க £950.00குடுத்துஏர்லங்காவில்  சிங்களவனிட்டை மிதிபட்டுக்கொண்டு வந்து "ஊர் அந்த மாதிரி" இருக்கென்டு வெட்டி பந்தா ஆடுங்கள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக் கூடாது ஊர் அந்த மாரி.

சில பேருக்கு அதைப் போய் அனுபவிக்க குடுத்துவைக்கேல்ல என்ற கடுப்பு :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அரசும் தப்பு செய்யவில்லை அதே நேரம் சிங்கள அரசும் தப்பு செய்யவில்லை. சகலதையும் மறந்து உல்லாசத்திற்கு செல்லும் எம்மவருக்கு புத்தி எங்கே போச்சு????

 

அவர்கள் பயத்திலா வந்தவர்கள். அநேகர் நிலைமை சாட்டி.. பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். கொஞ்சம் காசும்.. பிரஜா உரிமையும் கிடைச்சா.. ஊருக்கு போய் அந்த நலிந்த மக்கள் முன் பந்தா காட்டாமல் இருந்தால்.. வந்து அசைலம் அடிச்சதுக்கு என்ன பயன்..???! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற நெடுக்கர்,

ஊருக்குப் போனா -

லண்டனோ தம்பி - "கள்ள மட்டைல இன்னும் பிடிபடேல்ல போல" எண்டு கொடுப்புக்க சிரிக்குது சனம்.

உங்கள மாதிரிதான், எங்கட ஊரில இருந்து மூளையை வித்து பஞ்சம் பிழைக்க வந்த ஒரு ஆள் - ஒக்ஸ்போர்டுக்க்கு கொலசிப்ல வந்து- முளையை தப்பான வழியில் விட்டு- கள்ள மட்டை புரோகிராமர் ஆகி - இப்ப ஆள் உள்ள.

அதோட ஊரில லண்டன் காரர் மானம் கப்பலேறீட்டு. இப்பெல்லாம் தெரியாத சனம் கேட்டா, நான் கொழும்பில் இருந்து வாறன் எண்டுதான் சொல்லுறது.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனே வெத்திலை துப்பலால நாறிக் கிடக்கேக்க.. ஊரில நாறாமல் இருப்பினமோ..! ஆனால் நாறியும்.. நாறாத நடிப்பு எம்மவருக்கு கைவந்த கலை. அதேபோல்.. ஊரார்.. பொம்பிளையளை கட்டி வைச்சு பிளேன் ஏத்திவிட.. தேடிறதும்.. உந்த நாத்தல்களைத் தான்..! :lol::D

இங்கிலாந்து அரசும் தப்பு செய்யவில்லை அதே நேரம் சிங்கள அரசும் தப்பு செய்யவில்லை. சகலதையும் மறந்து உல்லாசத்திற்கு செல்லும் எம்மவருக்கு புத்தி எங்கே போச்சு????

அதாவது பரவாயில்லை, ஆமிக்காரன் சும்மா தான் நிக்கிறான் , அவன் ஒண்டும் செய்ய மாட்டான்,ரொம்ப நல்லவன் எண்டு சொல்லுற வெங்காயங்களும் இருக்கீனம்...!!!!.
  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் ஊருக்கு போய் கண்ணால கண்டதை சொல்லுறவை எல்லாம் வெங்காயங்கள். ஊர் பக்கமே தலைவச்சும் படுக்காம, 80ம் 90ம் ஆண்டு நினப்பில வெளிநாட்டில இருந்து கதயளக்கிற ஆக்கள்தான் பச்சை மிளகாய்.

ராணுவம் ஒருத்தன் கூட இல்லாமல் பலாலிக்க போக வேணும் என்பது மெய்தான். அதுக்காக தினமும் 1000 பேரை கற்பழிக்கிறான் எண்டு கொயபல்ஸ் ரேஞ்சுக்கு பொய்பிரச்சாரம் நடக்குது என்பதும் உண்மையே.

சிலபேருக்கு தாங்கள் போக முடியேல்ல எண்ட கடுப்பில மற்ற ஆக்களும் போக கூடாது எண்டு ஒரு கெட்ட எண்ணம்.

முதல்ல இலங்கையில் இருந்து வரும் உணவுப் பொருட்களை, மரக்கறிகளை புறக்கணித்து காட்டுங்கள், பிறகு விவாதிக்கலாம் யார் வெங்காயம் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

முதல்ல இலங்கையில் இருந்து வரும் உணவுப் பொருட்களை, மரக்கறிகளை புறக்கணித்து காட்டுங்கள், பிறகு விவாதிக்கலாம் யார் வெங்காயம் எண்டு.

நாங்கள் புறக்கனிக்க முன்னம் ஜரோப்பிய யூனியனால் கடந்த வாரங்களில் அங்கீகரிக்கபட்ட அளவை விடகிருமிநாசினிகள் பாவிக்கபட்டிருக்கு என வந்த சாமானுகள் யூ ரேண் அடிச்சு ஏர்லங்காவிலேயோ கொண்டு போய் கொட்டுங்கோ குப்பையிலை என திருப்பிவிடபடுகின்றன. கனடாவுக்கு நடந்த சம்பவங்களை தெரியபடுத்தினால் அங்கேயும் இதே நிலைமைதான். <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.