Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலை நிமிர்ந்து பார்க்காதவள்! (குறுங்கதை)

Featured Replies

அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று அவளைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள். இதில் அவளுக்கு பெருமையும் கூட.

அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றியும் பேசி பொழுது போக்குவார்கள்.

இதனால் அந்த நண்பியுடன் அவள் பேசுவதை அவளது பேற்றோர்கள் தடை செய்து விட்டார்கள். தமது மகளும் "கெட்டுப்" போய் விடுவாள் என்ற அச்சம் அவர்களுக்கு. இப்படி கட்டுப்பாடாக வளர்ந்த அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள்.

வந்தவன் அழகாக இருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவளுக்குப் பிடித்து விட்டது. அவளுடைய குடும்பம் அவனுடைய குடும்பத்துடன் வழமையான வார்த்தைகளையும் உணவுகளையும் பரிமாறிக் கொண்டது. தொடர்ந்து பேசி நல்ல நாள் பார்ப்போம் என்று சொல்லி அவர்கள் பிரிந்தார்கள். சில நாட்களில் உண்மையாகவே பிரிந்து விட்டார்கள். அவனுடைய குடும்பத்தின் பின்னணி பற்றி திடீரென வந்த ஒரு செய்தி அல்லது வதந்தி அவளுடைய தந்தையை யோசிக்க செய்தது. கடைசியில் அவன் வேண்டாம் என்று முடிவெடுக்கவும் வைத்தது.

அவளுடைய பெற்றோருக்கு அவள் ஓரே மகள் என்பதால் அவளுடைய திருமணத்தில் அவர்கள் மிகவும் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருந்தர்கள்.

அவளால் இப்பொழுது கவலைப்பட மட்டுமே முடிந்தது. இந்த சில நாட்களில் அவனை மனதுக்குள் அவள் பல முறை ரசித்திருக்கிறாள். அவனுடன் வாழ்வதை எண்ணிப் பார்த்திருக்கிறாள். அவனுடன் மாலை வேளைகளில் நதிக் கரையில் நடந்து போவதாக கனவு கண்டிருக்கிறாள். இன்னும் என்னென்னமோ கற்பனை செய்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் கற்பனைகள் வெறும் கற்பனைகள் ஆகி விட்டன.

ஆனால் இது அவளுக்கு முதற் தடவை அல்ல. இதற்கு முன்பும் நான்கு பேர் அவளை பெண் பார்த்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் ஒவ்வொரு விதத்தில் அழகாகவே இருந்தார்கள். புகைப்படம் பார்த்து அவளுக்கு பிடித்திருந்த பின்பே பெண் பார்க்கும் படலம் அரங்கேறுவதால், அவர்களையும் அவளுக்கு பிடித்தே இருந்தது. ஆனால் அவர்களுடன் அவள் நடத்திய கனவுலக வாழ்க்கையும் ஒவ்வொரு காரணங்களால் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இதில் ஒருவனுடன் எல்லாம் முற்றாகி தொலைபேசியில் அவனுடன் உரையாடுகின்ற அளவிற்கு வந்தது. ஆனால் அதுவும் சீதனப் பிரச்சனையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடக்கமால் போய் விட்டது.

தற்பொழுது வந்தவன் ஐந்தாவது. அதுவும் குடும்பப் பின்னணி சரியில்லை என்று நிறுத்தப்பட்டு விட்டது.

பின்பு மீண்டும் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன. அவளுக்கு பிடித்தவர்களை பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கும் பெற்றோருக்கும் பிடித்தவர்களை ஜாதகத்திற்கு பிடிக்கவில்லை. இப்படி புகைப்படங்களில் நிறையப் பேரை பார்த்து ஒருவாறு ஒன்று சரிவருகிறது. அவளை மீண்டும் பெண் பார்க்க வருகிறார்கள்.

இப்பொழுது வந்தவனும் அழகாக இருக்கிறான். வந்தவனை அவளுக்கு பிடித்திருக்கிறது. அவளின் அம்மா அவனிடமும் அவனின் பெற்றோரிடமும் பெருமையாகச் சொல்கிறாள். "எங்கள் மகளை நாங்கள் மிகவும் கட்டுப்பாடாக வளர்த்திருக்கிறோம், இதுவரை எங்கள் மகள் ஒரு ஆணைக் கூட தலை நிமிர்ந்து பார்த்தது இல்லை...." அம்மா சொல்லிக் கொண்டே போகிறாள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. ஆனால் முடிவில் ஒரு தெளிவைக் கொஞ்சம் இறுக்கியிருக்கலாம். ஒருத்தருடைய மனநிலையைத் தீர்மானிப்பது பற்றி முந்தி ஒரு கதை சொல்வார்கள்

"எள்பா" செய்கின்ற நேரத்தில் மருமகனுக்கு எள்பா பிடிக்காது என மாமியார் சொல்லி விடுவார். அதனால் அந்த நேரத்தில் அவர் சாப்பிடாமல் இருப்பார். இரவு நடுச்சாமத்தில் ஏதோ சத்தம் கேட்பதைக் கேட்டு பார்க்கப் போனால், மருமகன் உரலைப் போட்டு, தோண்டிக் கொண்டிருப்பார்.

அவ்வாறு தான் பலரின் நிலை. சொன்னதற்காக சிலவற்றைக் காப்பாற்ற வேண்டிக் கிடக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் கார் உங்கட கதை நல்லா போகுது இதை வாசிக்கும் போது உண்மைக்கதையின் சாடல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கதை அழகு சபேசன் சார்

  • தொடங்கியவர்

எதற்கு என்னை "சார்" போடுகிறீர்கள்?

நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தோம் என்பதற்கான குறியீடே இந்த "சார்".

என்னை மட்டும் அல்ல. வேறு யாரையும் "சார்" போடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே பழகிவிட்டது அதுதான்

ம்ம்ம்.................பார்ப்போம்

  • தொடங்கியவர்

உங்களிடம் ஒரு கேள்வி!

இக் கதையில் வருகின்ற அவளா அல்லது அவளின் நண்பியா உங்களின் பார்வையில் "நல்ல" பண்பாடு கொண்டவளாக தெரிகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் யாரை பண்பாடு உள்ளவள் என்று சொல்ல சபேசன் சார். நண்பியோ வாழும்முறை வாழ்வியலில் பண்பாடு தவறியவளாய் மற்றவளோ மனதால் பண்பாடு தவறியவளாய் காட்டியிருக்கிறிங்க. சமுகத்துக்கு முன்னால் பேசப்படுவது பண்புள்ள பெண்ணாக அவளைத்தான்.

நான் என்ன சொல்லவாறன் எண்டால் சபேசன் சார் சீதனம் சாத்திரம் பெண்பார்க்கும் படலம் பார்க்கும் சமூகத்தின் மீது என் வெறுப்பு.

நான் ஏதோ மனதில்பட்ட்தை சொல்லிட்டேன் பிடிக்காவிட்டடால் வேறு இடத்தில் தனிமனித தாக்குதல் பேரில் என்னை தாக்காதிங்க சார்.

உங்க கேள்விக்கு பதில் சொல்லிவிட்ட்ன்.

என்னுடைய கேள்வி இது உண்மைகதைதானே

  • தொடங்கியவர்

இது உண்மையாக பல இடங்களில் நடக்கின்ற, நடக்கக்கூடிய கதை. ஆனால் என்னுடைய கதை அல்ல.

16 வயதில் இருந்தே ஒருவனைக் காதலித்து அவனுடன் மட்டும் வாழுகின்ற அவளுடைய நண்பியை எப்படி வாழும்முறை வாழ்வியலில் பண்பாடு தவறியவள் என்று சொல்கிறீர்கள்?

  • தொடங்கியவர்

ஒரு சிறு விளக்கம். என்னுடைய கதை அல்ல என்றதும் வேறு யாரேன் எழுதிய கதை என்று அர்த்தம் எடுத்து விடாதீர்கள். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்து கதை அல்ல. ஆனால் நான் எழுதிய கதை.

  • கருத்துக்கள உறவுகள்

அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றியும் பேசி பொழுது போக்குவார்கள்.

இதனால்தான் அப்படி சொன்னன்.

இதில் யாரை பண்பாடு உள்ளவள் என்று சொல்ல சபேசன் சார். நண்பியோ வாழும்முறை வாழ்வியலில் பண்பாடு தவறியவளாய் மற்றவளோ மனதால் பண்பாடு தவறியவளாய் காட்டியிருக்கிறிங்க. சமுகத்துக்கு முன்னால் பேசப்படுவது பண்புள்ள பெண்ணாக அவளைத்தான்.

நான் என்ன சொல்லவாறன் எண்டால் சபேசன் சார் சீதனம் சாத்திரம் பெண்பார்க்கும் படலம் பார்க்கும் சமூகத்தின் மீது என் வெறுப்பு.

நான் ஏதோ மனதில்பட்ட்தை சொல்லிட்டேன் பிடிக்காவிட்டடால் வேறு இடத்தில் தனிமனித தாக்குதல் பேரில் என்னை தாக்காதிங்க சார்.

உங்க கேள்விக்கு பதில் சொல்லிவிட்ட்ன்.

என்னுடைய கேள்வி இது உண்மைகதைதானே

சபேசனின் கேள்வி பிழையானது என்று நான் நினைக்கிறேன், இங்கே 'பண்பாடு' என்பது ஒரு சமூகத்தின் பொதுப் போக்காகவே இருக்கிறது.ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறை தான் பண்பாடு எனப்படுகிறது.அந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைகுறைக்கு மாற்றீடாக வாழ்பவர்கள் பண்பாடற்றவர்களாகப் பேசப்படுகிறார்கள்.இங்கே இந்த பொதுப் போக்கு சரியானதா பிழையனதா என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்.இந்த பெண்களிருவர் மீதும் இந்த பண்பாடு என்பதைப் புகுத்தியது சமூகம் தான்.ஆகவே இந்த நடைமுறை 'பண்பாடதானதா' நியாயம் ஆனதா என்று தமிழ்ச் சமூகதைத் தான் கேட்க வேண்டும்.அந்தப்பெண்கள் பண்பாணவர்களா இல்லையா என்பதல்ல கேள்வி, தமிழ்ச் சமூகத்தின் இந்த நடைமுறை நியாயம் ஆனதா? இது சம்பந்தமான எமது பண்பாட்டு முறமை மாற்றம் அடைய வேண்டாமா? ஏனெனில் பண்பாடு என்பதே அந்த அந்த காலத்திற்கு ஏற்ப மாற்றம் கொள்வது.

கறுப்பி எங்க யாரு தனி நபர் தாக்குதல் செய்தது உங்களை ?

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி எங்க யாரு தனி நபர் தாக்குதல் செய்தது உங்களை ?

:cry:

:cry:

இல்லை களத்தில எல்லோரும் எழுதுகிறார்கள் தனி நபர் தாக்குதல் என்று யார் யாரை எங்கு என்ன எழுதினது என்று சொன்னால் தான் ,எது தனி நபர் தாக்குதல் என்று உணரலாம்.இல்லாமல் இப்படி பொதுவாக எழுதினால் யாருக்கு என்ன தெரியும்? நான் எழுதினது எதாவது அப்படி இருந்ததா என்று பார்க்கவும், நீங்க சொன்னாத் தானே தெரியும்,சில வேளை நல்ல நோக்கத்தில் சொல்வதுவும் தனி நபர் தாக்குதலா தெரியலாம், அது தான் கேட்டன் அதுக்கென்ன கவலை?.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அப்படி எழுதல. யார் எண்டு எழுதி எதற்கு இந்த பிரச்சனை எண்டு விட்டுட்டேன் ஆனா நான் உசாராயிட்டேன் தெரியுமா நாரதர் (சார் யை விட்டு விட்டேன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று சொல்கின்றேன் ஆனால் என்னை ஒரு கேள்வியும் கேட்க்காதீர்கள்..

அதிர்ஸ்டம் என்பது, ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது...

அதிர்ஸ்டம் என்பது, ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலி ஆக இருப்பது....

இதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன என்று நானே சொல்லுறன்... எங்கே கருத்துகள்....பார்க்கலாம்...

  • தொடங்கியவர்

நாரதர் சொல்வது சரி. அவர் தீர்ப்பையே கூறிவிட்டார்.

இப்படி ஒரு முரண்பாடான பண்பாட்டை வைத்துக் கொண்டு வேறு பண்பாட்டு முறைகளில் தமது துணையை அமைத்துக் கொள்பவர்களை து}ற்றுவது வேடிக்கை அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சொல்கின்றேன் ஆனால் என்னை ஒரு கேள்வியும் கேட்க்காதீர்கள்..

அதிர்ஸ்டம் என்பது, ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது...

அதிர்ஸ்டம் என்பது, ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலி ஆக இருப்பது....

இதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன என்று நானே சொல்லுறன்... எங்கே கருத்துகள்....பார்க்கலாம்...

அதிர்ஸ்டம் என்பது, ஒரு ஆண் மனைவியிடம் அடி வாங்காமல் இருப்பது. வேணுமென்றால் சின்னப்புவையும் ,முகத்தாரையும் கேட்டுப்பாருங்கள். சொல்லுவினம்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்கள் இணையதளம் www.webeelam.com அழகு

  • தொடங்கியவர்

நன்றி கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிர்ஸ்டம் என்பது, ஒரு ஆண் மனைவியிடம் அடி வாங்காமல் இருப்பது. வேணுமென்றால் சின்னப்புவையும் ,முகத்தாரையும் கேட்டுப்பாருங்கள். சொல்லுவினம்

என்ன கந்தப்பு நீங்கள்,உங்கட மைத்துனன் சின்னாவை உப்பிடிச்சொல்லி...........

சபேசன் உங்கள் கதையில் அந்த இரு பெண்களின் வாழ்க்கை முறையையும் அழகாக படம்பிடித்துக்காட்டி இருக்கிறியள். என்னைப் பொறுத்த வரையில் இரு பெண்களிலும் பிழை இல்லை அவர்கள் இருக்கிற சமூகம் அப்படி அங்கே நாரதர் சொன்ன மாதிரி 'பண்பாடு' என்பது ஒரு சமூகத்தின் பொதுப்போக்காகவே இருக்கிறது.ஆகவே அந்த சமுகத்தால் ஏற்றுகொள்ளப்பட்ட நடைமுறையைத்தான் பண்பாடாக கருதுகிறார்கள்.

இந்தக்கதையில் எங்கள் சமுகத்தால் ஒரு பெண் வேற நாட்டுக்கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் அவளை பண்பாடற்றாவளாக கருதுகிறார்கள். மற்ற பெண்ணை பண்பாடுள்ளவளாக கருதுகிறார்கள்., ஆனால் நாம் இவ்விரு பெண்களின் மனதைக்கொண்டு பார்த்தோமேயானால். மற்றைய நாட்டுக் கலாச்சாரத்தை பின்பற்றி வாழுபவள் ஒருவனை மனதில் கொண்டு வாழுகிறாள் மற்றப்பெண்?? ??????????? ஆக இங்கே இதில் எந்தப்பெண் பின்பற்றுவதை பண்பாடு என்பது? எங்கள் சமுகம் செய்வது சரியா பிழையா ??

வித்தியசமான சிந்தனையில் கதையினை எழுதியிருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்.

உங்கள் இணையத்தளமும் நிறைய விடயங்களை தாங்கி இருக்கின்றது.

இணையத்தள இணைப்பிற்கு நன்றிகள் கறுப்பி.

  • 4 weeks later...

இப்படி 5 தரம் காட்சி பொருளாகும் பெண்ணைவிட, வெளிநாட்டவன் என்றாலும் கட்டியவனுடன் வெளியே சுற்றும் பெண் தேவலை..இவள் பாவன்..

  • 7 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தெரிவில் வந்த சபேசனின் கதை இன்றைய யதார்த்தம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.