Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதவி தேவை (Range Hood வாங்குவதற்கு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Toronto வில் வசிக்கும் யாழ்கள உறவுகளே, எனது வீட்டில் இருக்கும் Range Hood (300 CFM) சமையல் மணத்தை சரியாக வெளியே அகற்றுதில்லை. அதனால் ஒரு புதிய Range Hood வாங்கி பொருத்தலாம் என்று யோசித்தால் அதுக்கு நிறைய தெரிவுகள் உள்ளது. எது நல்லது என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

650 cfm இல் போட்டிருக்கிறோம்.. சும்மா இழுத்து எறிந்துவிடும்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

650 cfm இல் போட்டிருக்கிறோம்.. சும்மா இழுத்து எறிந்துவிடும்.. :lol:

 

நன்றி. என்ன brand என்று சொல்ல முடியுமா?

எதை பூட்டினாலும் மணத்தை முழுமையாக போக்கமுடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The gore and Queen சந்திப்புக்கு அருகாமையில் ஒரு கடை இருக்கிறது நம்மவா்கள் தான் அதிகம் அங்கு போகிறாா்கள். சென்று பாருங்கள் காசு கொடுத்தால் வாி செலுத்த தேவையில்லை. நல்ல விலையில் இருக்கு,

 

4520 Ebenezer Road, Unit 4
Brampton, ON L6P 2R2

 

இந்த முகவாி இருக்கும் கடைத் தொகுதிகளுக்குள் தான் இருக்கு. இது ICIC வங்கியின் முகவாி அதுக்கு அருகில் இருக்கும் கடைவாிசையில் நடுவில் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெத்தலிக்கருவாடு,சூடைமீன் பொரியல் மணத்தை இழுக்க மிசின் இன்னும் கண்டு பிடிக்கேல்லை... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலிக்கருவாடு,சூடைமீன் பொரியல் மணத்தை இழுக்க மிசின் இன்னும் கண்டு பிடிக்கேல்லை... :lol:  :D

 

525501_484850221577494_1037828808_n.jpg
 
சாம்பிராணி புகை போட்டால், எந்த மணத்தையும்.... இழுத்து எறிந்துவிடும்.
  • கருத்துக்கள உறவுகள்

 

525501_484850221577494_1037828808_n.jpg
 
சாம்பிராணி புகை போட்டால், எந்த மணத்தையும்.... இழுத்து எறிந்துவிடும்.

 

எல்லாம் முடிஞ்ச பிறகு... சாம்பிராணி மணத்தை எப்படி வெளியால அனுப்பிறது? :o

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் மேற்கூறிய கடைகளில் ஏதாவதை வாங்கினால் உங்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

 

கீழே நான் கூறுவது,கொஞ்சம் செலவாகும் ஆனால் காலாகாலத்துக்கும் நிண்டுபிடிக்கும்.

 

கனடாவில் நீங்கள் வாழும் பகுதியின் நகரசபையின் உணவுப்பொருட்களைத் தயாரித்து விற்கும் நிறுவனங்களுக்கான குசினிகளில் எப்படியான எண்ணைப்படிவுகலந்த காற்றினை வெளியேற்றும் கருவியை தெரிவுசெய்வது என ஒரு அட்டவணை அல்லது விளக்கம் இருக்கும் அவற்றில் சிறிய அளவிலான கிட்டத்தட்ட இருபது சதுர மீற்றர்களுக்கான காற்று வெளியேற்றும், தொழில்முறை குசினிகளில் பாவிக்கப்படும் கருவிகளது செயற்திறன் உங்களது குசினிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

 

இப்போது சந்தையில் சென்சர்கள் பொருத்தப்பட்ட கருவிகள் வந்தாலும் அவை கனகாலத்துக்கு நிண்டுபிடிக்காது.

 

தவிர சீனப்பொருட்களை நீங்கள் வாங்கினால் ஏமாற்றமடைவீர்கள் காரணம், இவற்றை இயக்க அதிக மின்சாரம் தேவை, சத்தம் மிகவும் அதிகம், வாங்குவது தமிழ்கடையாகவிருந்தால் வரிஏய்பின்பின்பான பொறுப்புக்கள் தட்டிக்கழிக்கப்படும் உங்களால் ஒண்டுமே செய்யமுடியாது.

 

மீண்டும் சொல்கிறேன் கொஞ்சம் செலவானது ஆனால் அதுவே உங்களது வீட்டின் பெறுமதியை அதிகரிக்கச்செய்யும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. என்ன brand என்று சொல்ல முடியுமா?

எங்களிடம் உள்ளது Atzeni என்கிற நிறுவனத்தின் தயாரிப்பு.

இரண்டு வருடங்களாகப் பாவிக்கிறோம். இன்னும் பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனாலும் ஒன்று. உயர் வேகத்தில் வேலை செய்யும்போது சிறிது அதிர்வு உள்ளது. மற்றும்படி பெரிய பிரச்சினைகள் இல்லை.

மற்றவர்கள் சொன்னதுபோல 100% இதன்மூலம் போக்கிக்கொள்ள முடியாது. ஆனாலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.

1) ஒவ்வொரு முறையும் இக்கருவியைப் பாவிக்க வேண்டும். :icon_idea:

2) திரைச்சீலைகள் இருந்தால் மணம் ஒட்டிக்கொள்ளும்.

3) சமைத்த உணவுகளை திறந்து வைக்கக்கூடாது.

4) துணியினால் ஆன இருக்கைகளில் மணம் ஒட்டிக்கொள்ளும்.

5) சமைத்து முடிந்ததும், வாசனை திரவியம் ஊற்றி மெழுகுதிரி ஏற்றி வைப்பது உதவும். :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆலோசனை வளங்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

 

வார இறுதியில் பிரம்டன் சென்று நிதர்சன் சொன்ன இடத்தில் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

ஏழுஞாயிறு சொன்னதை கூகுல் பண்ணிப்பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை.

இப்போது தமிழ் சிறியின் முறைதான் பின்பற்றுகிறேன்.

இசை சொன்ன Atzeni ஐ இதுவரை காணவில்லை.

தற்போது Sakura Brand உம் Pacific Brand உம் பார்த்திருக்கிறேன். 700 -750 CFM கிட்டத்தட்ட $500.00 - $800.00

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எந்த சாப்பாட்டு மணம் பிரச்சனை குடுக்குது எண்டு சொன்னியளெண்டால் மாற்று நடவடிக்கைகள் என்னாலை சொல்லேலும்...ஏனெண்டால் 25/30 வருசமாய் எரியல்பொரியலோடை நிண்டு மல்லுக்கட்டுறவன் எண்ட முறையிலை சொல்லுறன். :D
ஆனால் இப்பவும் சொல்லுறன் ஒட்டுமொத்த மணத்தையும் இழுத்தெறியுறதெண்டால் வலு கஷ்டம்  :(  :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எந்த சாப்பாட்டு மணம் பிரச்சனை குடுக்குது எண்டு சொன்னியளெண்டால் மாற்று நடவடிக்கைகள் என்னாலை சொல்லேலும்...ஏனெண்டால் 25/30 வருசமாய் எரியல்பொரியலோடை நிண்டு மல்லுக்கட்டுறவன் எண்ட முறையிலை சொல்லுறன். :D
ஆனால் இப்பவும் சொல்லுறன் ஒட்டுமொத்த மணத்தையும் இழுத்தெறியுறதெண்டால் வலு கஷ்டம்  :(  வெ

வேறஎன்ன எங்கட வெண்காயம் போட்டு தாளிக்காத சமயல் ஏதும் ருசியாக இருக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறஎன்ன எங்கட வெண்காயம் போட்டு தாளிக்காத சமயல் ஏதும் ருசியாக இருக்குமா?

 

 

தாளிக்காமல் சமைக்க பழகுங்கோ.....உடம்புக்கும் நல்லது....வீட்டுக்கும் நல்லது.....ஊரிலை எடுத்துக்கெல்லாம் தாளிக்கிறேல்லை...... :)
 
அவித்த வேகவைத்த உணவுகளை நல்ல சுவையாக சமைக்க முடியும். :icon_idea:

இந்த விலாசத்திலுள்ள கடையிலும் சென்று பாருங்கள் 401home Etobicoke Store (HWY401 & Martin Grove ) 24 Ronson Drive Unit 2,Etobicoke, Ontario,Canada M9W 1B4 TEL: (416) 883-2441, .................................... இது நிதர்சன் குறிப்பிட்ட கடை விலாசம் Rangehood 4525 Ebenezer Rd,unit 10 Brampton, ON L6P 2K8 TEL: (905) 794 1010

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தாளிக்காமல் சமைக்க பழகுங்கோ.....உடம்புக்கும் நல்லது....வீட்டுக்கும் நல்லது.....ஊரிலை எடுத்துக்கெல்லாம் தாளிக்கிறேல்லை...... :)
 
அவித்த வேகவைத்த உணவுகளை நல்ல சுவையாக சமைக்க முடியும். :icon_idea:

 

 

உப்பு, எண்ணை, கொழுப்பு எல்லாம் இல்லாமல் சாப்பிட்டால் சாப்பிட்ட மாதிரி இருக்காது. உடம்புக்கு கூடாதுதான். இந்த நாக்குக்கு அது விளங்குதில்லையே.

 

இந்த விலாசத்திலுள்ள கடையிலும் சென்று பாருங்கள் 401home Etobicoke Store (HWY401 & Martin Grove ) 24 Ronson Drive Unit 2,Etobicoke, Ontario,Canada M9W 1B4 TEL: (416) 883-2441, .................................... இது நிதர்சன் குறிப்பிட்ட கடை விலாசம் Rangehood 4525 Ebenezer Rd,unit 10 Brampton, ON L6P 2K8 TEL: (905) 794 1010

 

நன்றி காரணிகன், 401home இணையத்தில் பார்த்தேன். Warden & Steels இலும் அவர்களின் கடை இருக்குது.  அதிலும் பார்த்தேன். இன்னும் முடிவு எடுக்கவில்லை. 

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக ஒரு Sakura U2 Micro II Range Hood வாங்கி பொருத்திவிட்டேன்.

மிகவும் நன்றாக மணத்தை வெளியேற்றுகிறது.

வீட்டினுள் ஒரு மணமும் இல்லை.

பின் வீட்டுக்காறனை நினைக்கத்தான் பாவமாக இருக்கிறது.

 

ஆலோசனை கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.