Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்புக்கு கீழே செயலற்றிருந்த ஒருவர் மீண்டும் எழுந்து நடக்க முடிந்திருக்கும் செயல் "நிலவில் மனிதன் நடந்ததைவிட பெரிய மருத்துவ சாதனை"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக மார்புக்கு கீழே செயலற்றிருந்த ஒருவர் மீண்டும் எழுந்து நடக்க முடிந்திருக்கும் செயலானது மருத்துவ உலகின் மிகப்பெரிய அதிசயமாக வர்ணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் நாசித்துவாரத்தில் இருக்கும் செல்களை எடுத்து அவரது பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவடப்பகுதியில் செலுத்தி சிகிச்சையளித்ததன் மூலம் அவரது முதுகுத்தண்டுவடம் மீண்டும்

செயற்படத்துவங்கியிருக்கிறது. அதன் காரணமாக அவர் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு நாற்பது வயதான டெரிக் பிடிகா என்பவர் மீது மோசமான கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவரது முதுகுத்தண்டுவடத்தில் குறிபிட்ட ஒரு இடத்தில் இருந்த தண்டுவட நரம்புகள் பெருமளவு அறுந்துபோயின. அதன் விளைவாக அவரது உடலின் நெஞ்சுப்பகுதிக்கு கீழே செயலற்றுப்போனது.

அவரது அறுந்துபோன முதுகுத்தண்டுவட நரம்புகளை மீண்டும் உருவாக்குவதற்கு போலந்தில் இருக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்களும் லண்டனில் இருக்கும் விஞ்ஞானிகளும் சேர்ந்து புதிய சிகிச்சை முறையை உருவாக்கினார்கள்.

நாசியின்செல்கள் மனிதனை நடக்கவும் வைத்திருக்கின்றன

மனிதர்களின் நாசித்துவாரத்தின் இருபுறத்திலும் ஓஇசிஎஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ஒருவித பிரத்யேக செல்களை உற்பத்தி செய்யும் நுகர்வுச் செல்குருத்துத் தொகுதிகள் இருக்கும். இந்த குறிபிட்ட ஒஇசிஎஸ் செல்கள் தான் மனிதர்களின் வாசனை அறியும் செயலுக்கு காரணமானவை.

இந்த குறிப்பிட்ட ஒஇசிஎஸ் செல்கள் நாசித்துவாரப்பாதையை அமைக்கும் செல்களாக நாசித்துவாரமெங்கும் பாசிபோல படிந்திருக்கும். நாசித்துவாரத்தில் இருக்கும் நுண்ணிய நரம்பு நார்களை நாள்தோறும் புதுப்பிக்கும் வேலையை இந்த ஓஇசிஎஸ் செல்கள் தான் செய்கின்றன. எனவே இந்த நுகர்வுச்செல் குருத்துத் தொகுதிகள் தொடர்ந்து நரம்புச்செல்களை உற்பத்தி செய்யும் தன்மையை இயற்கையிலேயே கொண்டிருக்கின்றன.

இந்த சிகிச்சையின் முக்கிய படிநிலைகளின் விவரணை

இந்த சிகிச்சையின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்டவரின் நாசித்துவாரத்தின் இரு பக்கங்களிலும் இருக்கும் இரண்டு நுகர்ச்வுச்செல் குருத்துத் தொகுதிகளில் ஒன்றை மருத்துவர்கள் வெட்டி எடுத்து, அதைக்கொண்டு செயற்கை முறையில் சோதனைச்சாலையில் வைத்து ஒஇசிஎஸ் செல்களை மருத்துவ விஞ்ஞானிகள் வளர்த்தனர்.

இரண்டு வாரங்கள் கழித்து, இப்படி சோதனைச்சாவடியில் வைத்து வளர்த்த ஒஇசிஎஸ் செல்களை நுண்ணிய ஊசிமூலம் பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவடப்பகுதிக்குள் மருத்துவர்கள் செலுத்தினார்கள். முதுகுத்தண்டுவடத்தில் காயம்பட்ட இடத்திற்கு கீழேயும் மேலேயும் இப்படி ஊசி மூலம் ஓஇசிஎஸ் செல்கள் செலுத்தப்பட்டன. சுமார் நூறு முறை மிக நுண்ணிய ஊசிகள் மூலம் இந்த செல்கள் அங்கே பதியப்பட்டன.

இதன் அடுத்தகட்டமாக பாதிக்கப்பட்டவரின் கணுக்காலில் இருந்து நான்கு தொகுதி நரம்புத்திசுக்கள் எடுக்கப்பட்டு அவை முதுகுத்தண்டுவடத்தின் நரம்புத்தொகுதி அறுபட்டஇடத்தில் பதியப்பட்டது.

பதியம் முறையில் புதுப்பிக்கப்பட்ட முதுகுத்தண்டுவடம்

இதன் விளைவாக முதுகுத்தண்டுவடத்தின் அறுபட்டிருந்த நரம்புத்தொகுதி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உருவானதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அவர்களின் பார்வையில், சோதனைச்சாலையில் வளர்த்து முதுகுத்தண்டுவடத்தில் பதியப்பட்ட ஒஇசிஎஸ் செல்களும் கணுக்காலில் இருந்து எடுக்கப்பட்ட நரம்புத்தொகுதியும் இணைந்து செயற்பட்டதன் விளைவாக, கத்திக்குத்தில் அறுபட்டிருந்த முதுகுத்தண்டுவட நரம்பு மண்டலம் மீண்டும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு மூளையிலிருந்து அனுப்பப்படும் உத்தரவுகள் முதுகுத்தண்டு வடம் முழுமைக்கும் சென்று, பாதிக்கப்பட்டவரின் உடலின் எல்லா பகுதியும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் செயற்படச் செய்திருக்கிறது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து.

தனக்கு இது ஒரு மறுபிறவி என்கிறார் டெரிக் பிடிகா

தற்போது டெரிக் பிடிகாவால் கைத்தடி உதவியுடன் நடக்க முடிகிறது. தான் மீண்டும் நடக்க முடிந்திருக்கும் செயல் தனக்கு ஒரு மறுபிறவி எடுத்ததைப்போன்ற அனுபவம் என்கிறார் அவர்.

அவருக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவ நிபுணர் குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜியாப் ரெய்ஸ்மென் இந்த ஆய்வின் முடிவு தமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக சொல்கிறார். பாதிக்கப்பட்டவரால் மீண்டும் நடக்க முடிந்திருப்பது தன் பார்வையில் நிலவில் மனிதன் முதன்முதலில் காலடி தடம் பதித்ததைவிட சிறப்பான செயல் என்று கூறும் பேராசிரியர் ஜியாப், இது ஒரு மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்தார்.

இந்த வெற்றி அளித்திருக்கும் உற்சாகத்தில் இதன் அடுத்தகட்டமாக ட்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மேலும் பத்துபேருக்கு இதே மாதிரியான சிகிச்சையை அளிக்க துவங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் பலாபலன்கள், அவர்களுக்கு மட்டுமல்ல, உலக அளவில் முதுகுத்தண்டுவட பாதிப்பால் செயலிழிக்க நேரும் லட்சக்கணக்கானவர்களுக்கும் புதிய வாழ்க்கையை ஏற்படுத்தும் என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

http://www.bbc.co.uk/tamil/science/2014/10/141021_spinalcord

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமான செய்தி...எதிர் காலத்தில் இன்னும் நிறைய வசதி வாய்ப்புக்களோடு இவ்வாறன மருத்துவம் மேலும் வளரனும்...அண்மைய காலங்களில் தண்டு வடம் பாதிக்கபட்டவர்களது (நோய் தாக்கம்) இந்த மாதிரி  தான் இருக்கும் என்பது பற்றி மேலதிகமாக யாராச்சும் எழுத மாட்டார்களாக என்று நினைத்து நாழும் பொழுதும் கவலைப்பட்ட கணங்களும் உண்டு..ஏன் எனில் எல்லா மனிதர்களும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்..மேலும் முதுகு தண்டுவடம் பாதிக்கபட்டவர்களது நிலை பற்றி எழுத முடியாமைக்கு மனம் வருந்திறன்..ஆனால் இவ்வாறன மருத்துவங்களின் கண்டு பிடிப்புக்கு முன்னரே தன் முயற்சி என்ற ஒன்று இருக்குமாக இருந்தால் ஓரளவுக்காவது சுயமாக இயங்கலாம்.இயங்குகிறார்கள். :lol:

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கலமாற்று சிகிச்சை முறை மருத்துவ உலகில் பாரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இருந்தாலும்.. இந்த வெற்றி அதற்கு முக்கியமான ஒரு படிநிலையாக அமைந்துள்ளது.

_78392534_spinal_cord_624.gif

மூக்குப் பகுதியில் இருந்து எடுத்த கலங்களை முண்ணானில் செலுத்தி இந்த சாதனை மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மேலதிக.. விபரங்களை இங்கு காணலாம்...

http://www.bbc.co.uk/news/health-29645760

http://youtu.be/QhVctzQ8GgQ

நெடுக்கு இதைக் கொஞ்சம் இன்னும் விரிவாக எழுத முடியுமா? உடலின் இருந்து பெறப்படும் கலத்தில் இருந்தே இது செய்யப்படுவதால் எதிர்காலத்தில் செலவு குறைவான விதத்தில் இச் சிகிச்சை முறை விரிவடையுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நரம்புக்கலங்களின் மீளாக்கம் என்பது இதுவரை காலமும் சாத்தியமற்ற ஒன்று என்றே கருதப்பட்டு வந்தது. ஆனாலும்.. ஸ்ரெம்செல் தெரபி.. போன்ற வழிமுறைகளை மூலம் அதனை சாத்தியமாக்கலாம் என்ற கருத்து நிலவினாலும்.. அது இதுவரை ஆய்வு அளவில் தான் இருந்தது.

ஆனால்.. இது கொஞ்சம் மாறுதலாக மூக்குப் பகுதியில் உள்ள மண நுகர்ச்சியை உணர்ந்து அதனை மூளைக்கு அனுப்பும்.. கலங்களை (olfactory ensheathing cells (OECs) - specialist cells that form part of the sense of smell) வகுந்தெடுத்து அவற்றை வெளியில் சரியான ஊடகங்களில் வளர்த்து.. பாதிக்கப்பட்ட முண்ணானுக்குரிய பகுதியில் கவனமாகச்  செலுத்தி இந்த வெற்றியை சாத்தியமாக்கி உள்ளனர்.  இந்தக் கலங்களுக்கு உள்ள சிறப்பியல்பு என்னவென்றால்.. இவை பழுதடைந்தாலும் ஏனைய உடற்கலங்களைப் போல.. தம்மை புதுப்பித்துக் கொள்ளக் கூடியவை. இவற்றை முண்ணானில் செலுத்தி பாதிக்கப்பட்ட நரம்புக் கல நார்களை உருவாக்க.. அல்லது மீளிணைக்கச் செய்துள்ளனர்.

_78392534_spinal_cord_624.gif

இந்த வெற்றிக்கு இந்த கலமாற்றுச் சிகிச்சை மட்டுமன்றி அதனோடு இணைந்த பெளதீக உடற்பயிற்சிகளும் சேர்ந்து கைகொடுத்துள்ளது.

இருந்தாலும்.. இந்த வெற்றியின் பின்னால் உள்ள முழுமையான அறிவியல் இன்னும் சரியாக விளங்கப்பட வேண்டி உள்ளது. அப்படி விளங்கப்பட்டால் மட்டுமே.. நரம்புக்கலங்களை புதுப்பிக்க முடியாது என்ற மருத்துவ கருத்தியலில் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

எதுஎப்படியோ.. இந்தச் சிகிச்சை முறையின் வெற்றி எதிர்காலத்தில்.. பரலைசிஸ்..(paralysis)... ஸில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருத்துவ வளர்ச்சியில் ஒரு படிகல் முன்னேற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
தலைப்பை பார்த்துவிட்டு .........
ஜெகோவ வந்திட்டாராக்கும் என்று நினைத்தேன்.
 
இனி வேலைக்கும் போக தேவை இல்லை ........... அப்பாட என்று பேரு மூச்சு விட்டு கொண்டு. மவுசை கீழே இழுக்க செய்தி இப்படி இருக்கு.
 
ஜெகோவா திருச்சபைக்கு இந்த டாக்டரை அழைத்து சென்று. அல்லலுயா இவர்தான் என்று அறிமுகம் செய்ய வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

நரம்புக்கலங்களின் மீளாக்கம் என்பது இதுவரை காலமும் சாத்தியமற்ற ஒன்று என்றே கருதப்பட்டு வந்தது. ஆனாலும்.. ஸ்ரெம்செல் தெரபி.. போன்ற வழிமுறைகளை மூலம் அதனை சாத்தியமாக்கலாம் என்ற கருத்து நிலவினாலும்.. அது இதுவரை ஆய்வு அளவில் தான் இருந்தது.

ஆனால்.. இது கொஞ்சம் மாறுதலாக மூக்குப் பகுதியில் உள்ள மண நுகர்ச்சியை உணர்ந்து அதனை மூளைக்கு அனுப்பும்.. கலங்களை (olfactory ensheathing cells (OECs) - specialist cells that form part of the sense of smell) வகுந்தெடுத்து அவற்றை வெளியில் சரியான ஊடகங்களில் வளர்த்து.. பாதிக்கப்பட்ட முண்ணானுக்குரிய பகுதியில் கவனமாகச்  செலுத்தி இந்த வெற்றியை சாத்தியமாக்கி உள்ளனர்.  இந்தக் கலங்களுக்கு உள்ள சிறப்பியல்பு என்னவென்றால்.. இவை பழுதடைந்தாலும் ஏனைய உடற்கலங்களைப் போல.. தம்மை புதுப்பித்துக் கொள்ளக் கூடியவை. இவற்றை முண்ணானில் செலுத்தி பாதிக்கப்பட்ட நரம்புக் கல நார்களை உருவாக்க.. அல்லது மீளிணைக்கச் செய்துள்ளனர்.

_78392534_spinal_cord_624.gif

இந்த வெற்றிக்கு இந்த கலமாற்றுச் சிகிச்சை மட்டுமன்றி அதனோடு இணைந்த பெளதீக உடற்பயிற்சிகளும் சேர்ந்து கைகொடுத்துள்ளது.

இருந்தாலும்.. இந்த வெற்றியின் பின்னால் உள்ள முழுமையான அறிவியல் இன்னும் சரியாக விளங்கப்பட வேண்டி உள்ளது. அப்படி விளங்கப்பட்டால் மட்டுமே.. நரம்புக்கலங்களை புதுப்பிக்க முடியாது என்ற மருத்துவ கருத்தியலில் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

எதுஎப்படியோ.. இந்தச் சிகிச்சை முறையின் வெற்றி எதிர்காலத்தில்.. பரலைசிஸ்..(paralysis)... ஸில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது..! :icon_idea::)

பிறப்பிலயே கிப் இருக்க வேண்டிய இடத்திலிருந்து விலகி இருக்கும் பட்சத்தில், அவை கண்டு கொள்ளப்படாது வேறு ஒரு பகுதி வெட்டிக் கொத்தி நொந்தலப்பட்டு போய் (vertebrae) இருக்கும்  போது எப்படி இவ்வாறன வைத்திய முறைகள் ஒருவருக்கு ஒத்துளைக்கும் என்று நம்பிறீங்கள்..???

மேற்படி நபர் சாதாரண உடலமைப்போடு இருந்த வேளையில் கத்திக் குத்துக்கு இலக்காகி முண்ணான் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்.. நெஞ்சுக்கு கீழ் பகுதி செயலிழந்து வாழ்ந்தவர். அந்த வகையில்.. முண்ணானில் செய்யப்பட்ட சீர்திருத்தம்.. அவர் மீள பழைய நிலைக்கு திரும்ப உதவி இருக்கலாம்.

முண்ணான் பிரச்சனையோடு.. உடலின் பெளதீக உறுப்புக்களான.. என்புகளும்.. சேதப்பட்டு.. உடற் பெளதீக பொறிமுறைகள்.. ஒருவர் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை இருப்பின் அதனை.. எந்தளவுக்கு இந்த சீர்திருத்தப் பொறிமுறை மூலம் குணமாக்க முடியும் என்று தெரியவில்லை. காரணம்.. அதில் முண்ணான் பிரச்சனை மட்டுமல்ல.. எழுந்து நிற்பற்கான உடற் பெளதீக கட்டமைப்பு சரியாக.. பலமாக இருக்க வேண்டும். அதுவும் பிறப்பில் இருந்தே அப்படி இல்லாத ஒருவரிடத்தில்.. அதனை சீர்செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால் அவ்வாறான சந்தர்ப்பங்களில்.. பயோனிக் (Bionic body parts)  - உயர் உணர் திறன்..தொழில்நுட்ப வசதிகள் கொண்ட செயற்கை உறுப்புக்கள்.. அல்லது பாகங்கள்) உடற்பாகங்களுடன் கூடிய சிகிச்சை முறை உதவக் கூடும்.

இது அந்தந்த நோயாளிகள் கொண்டுள்ள.. நிலைமையின் சிக்கல் தன்மையைப் பொறுத்து வேறுபடலாம்.

நாங்கள் ஒரு நோயாளியை கண்காணித்து அவர் தொடர்பில் உள்ள குறைபாடுகளின் தன்மையை முழுமையாக விளங்கிக் கொள்ளாது விளக்கம் கொடுப்பது உண்மையில் தவறு ஆகும். அந்த வகையில்... மேற்படி விளக்கம்.. பொதுமைப்பாடான ஒன்றே தவிர.. குறிப்பிட்ட நோயாளியின் personal medical history சார்ந்து மருத்துவ முறைகளும்.. பொறிமுறைகளும் மாறும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லம்..!!  அதனால் எதுவுமே சாத்தியமில்லை என்று அச்சப்படத் தேவையில்லை. :):icon_idea:

அதனால் உங்கள் வைத்தியர்களோடு இவற்றை குறிப்பிட்டு ஒரு தகுந்த ஆலோசனை வைத்துக் கொண்டு தெளிவு பெறுவதும்.. தேவையான போது சிகிச்சைகள் பெற்றுக் கொள்வதுமே நல்லது. எதனையும் நாங்களாக சாத்தியமில்லை என்று தீர்மானித்து வாழாதிருக்கக் கூடாது. :icon_idea:

உங்களின் பொறுமையான விளக்கத்திற்கு மிக்க நன்றியண்ணா..இப்போதைய நிலையில அய்யோ மருத்துவமா,மருந்தா  அடுத்தவர்களுக்கு பாரமாக வாழாது நின்மதியாக போக விட்டால் போதும் என்ற அளவுக்கு வந்தாச்சு. :):icon_idea:

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.